Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 20

KKEN-20

இங்கே விஜயன் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு அவரால் தனியாக சமாளிக்க முடியாது என்று தெரிந்து போனது. வித்யாவுக்கு வேண்டியது அனைத்தையும் ஒரு அன்னையாக, தந்தையாக நர்ஸாக, ஆயாவாக இருந்துச் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு எந்த அருவருப்பும் இல்லை போலும்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல திடீரென்று ஒரு நாள் வெற்றிக்கு அந்த சந்தேகம் வந்தது. அவளுக்கு இன்னும் இந்த மாதத்திற்கான தூரம் வரவில்லை. ம்ம்! மூன்று மாதங்கள்? இல்லை இல்லை தான் இங்கு வந்த நாளில் இருந்து கணக்கிட்டால் மூன்றையும் தாண்டி விடுகிறது. அவனுக்குத் தெரியும். மாதா  மாதம்  அவளுக்கு வேண்டியதை ஆர்கனிக் கடையில் இருந்து இவன்தான் வாங்கி வருவான். விஜயனிடம் சொல்லி மருத்துவரை வர வழைத்து பார்த்த போது வெற்றியின் சந்தேகம் உறுதியானது. ஆம்! அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். இப்போது அவள் இருக்கும் நிலையில் அபார்ஷன் செய்வது பெரிய பிரச்சனையாகி விடும் என்பதால் குழந்தையை கலைக்கவும் முடியவில்லை. அதில் வெற்றிக்கு உடன்பாடும் இல்லை. என்ன சொன்னாலும் அது அவளின் ரத்தமும் கலந்து உருவான உயிர். அதை எப்படி அழிக்க முடியும்?

அவளுக்கு கால் வீங்கும்  பொறுமையாக பிடித்து விடுவான். அடிக்கடி ட்ரிப்ஸ் ஏறுவதால் கை  வீங்கி விடும். அதையும் பிடித்து விடுவான். பார்த்து பார்த்து உணவு ஊட்டுவான் . அவள் வயிற்றில் வளர்ந்த  கண்மணியிடம் பேசுவான் பேசுவான். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பான். குழந்தை தூங்க வேண்டுமே? அதற்கும் நேரம் ஒதுக்குவான். அவள் எழுந்ததும் அன்னையின் வயிற்றில் எட்டி உதைத்து  தந்தையை அழைப்பாள் . அடிக்கடி கை  வைத்து பார்ப்பான். குழந்தையின் அசைவை பார்த்துக் கொள்வான். தங்கைக்கு அவன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் அவனுக்கு பெருமளவு விஷயம் தெரிந்திருந்தது. வித்யாவுக்கு கை  நிறையை வளையல் போட்டு பார்க்க வேண்டும் போல இருந்தது.



Advertisement

“வெற்றி! உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” விஜயன் சொன்னார்.

எப்படியோ வெற்றி திருமணத்திற்கு சம்மதித்து விட்டான். ஆனால்  அவளுக்கு சுய நினைவு இல்லாத போது  செய்யும்  திருமணம் செல்லுமா? தாலி கட்டினான். மனைவிக்கு சேர்த்து வைத்த காசில் இருந்து சின்னதாக ஒரு மோதிரம் வாங்கி போட்டான். அவள் கன்னத்தில் சந்தனம் பூசி இவன் மனம் குளிர்ந்தான். பிரசவ வலி வந்தது. அப்போது அவளுக்கு நினைவும் வந்தது.

“அம்மா!” வழியில் துடிச்சு விட்டாள் .

Advertisement

பனிக் குடம் உடைந்திருந்தது.  தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.

Advertisement

“என்னாச்சு? வித்யா? என்னம்மா? துடித்துக் கொண்டு ஓடி வந்தார் காயத்ரி.

“என்னங்க என்ன ஆச்சு நம்ம வித்யாவுக்கு?”

அதிர்ச்சியானவர் உடனடியாக அதே மருத்துவ மனையில் மனைவிக்கும் சிகிச்சை பார்த்தார்.  இப்போது வித்யா, அவள் குழந்தை மூவருமே நலம். இதற்கு காரணம் வெற்றி தான். அவனின் அன்பும், ஆதரவும் தான். அதிபன் என்ற ஒருவனால் அழிய இருந்த குடும்பம் ஓரளவு  மீண்டு வந்திருக்கிறது. விஜயன் வெற்றியின் கையை பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். “என்னோட குடும்பத்தை திருப்பி கொடுத்துடீங்க வெற்றி. உங்களுக்கு நான் எப்டி நன்றி சொல்லறதுன்னே தெரியல”

Advertisement

“இல்ல சார். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க”

குழந்தை நார்மல் டெலிவரியிலேயே பிறந்திருந்தது. (ரொம்ப பெரியதாக காயத்ரி  நடவடிக்கை பற்றி நான் விவரிக்க இயலவில்லை)

நாட்கள் வாரங்கள் ஆகி இதோ மூன்று மாந்தர்கள் ஆகி விட்டன. குழந்தைக்கு  பால் கொடுத்து முடித்தவள் கையில் இருந்து தோளில்  தட்ட வெற்றி வாங்கி கொண்டான்.

“ஒனக்கு கொஞ்சம் கூட அருவறுப்பாவே இல்லையா வெற்றி?”

பல மாதங்கள் களைத்து கோர்வையாக பேசி இருக்கிறாள் வித்யா.

“எதுக்கு மேடம்?”

“என்ன பார்த்து? இதோ இத  பார்த்து? இது ..இது? யாருடைய குழந்தையோ ?”

“இது என்  தங்கத்தோட குழந்தை”

குழந்தை ஏப்பம்  விடும்வரை தட்டிக் கொண்டிருந்தான்.

“அப்பாவை வர சொல்லுங்க வெற்றி” அவனை நாசுக்காக வெளியில் அனுப்பினாள் .அவனுக்கு வித்யாவின் அமைதி ஏதோ சொல்லியது.

“இன்னும் எத்தனை நாள் பா என்னோட புருஷன இந்த வீட்டுல வேலைக்காரனை வச்சுருக்க போறீங்க?”

“வித்யா?”

“அப்பா போதும் நிறுத்துங்க. உங்களோட சுய நலத்துக்காக அந்த அப்பாவியை  யூஸ்  பண்ணிகிட்டீங்க இல்ல?. இதுவே உங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது பணக்கார பையனா இருந்த இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வானாப்பா. எவனோ கொடுத்த குழந்தைக்கு இனிஷியல் கொடுத்து எனக்கு  தாலி கொடுத்து… பாவம் பா அவன். அவன் இனிமே இங்க இருக்க கூடாது. அவனுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ பண்ணுங்க. இனிமே அவன் ஏன் கண்ணுலையே முழிக்க கூடாது” அடுத்து வெற்றியை அழைத்து பேசினாள் .

“வேண்டாம் வெற்றி. நீங்க  இனிமே இங்க இருக்க வேணாம். எங்கயாவது போய் சந்தோசமா இருங்க”

“மேடம்”

“மேடம் மேடம்னு என்ன கொல்லாதடா . போதுண்டா எனக்கு நீ பண்ணது எல்லாமே போதும். இதுக்கு மேலயும் என்ன கடனாளி ஆக்காத . ப்ளீஸ்!”

“ஏன் மேடம் இப்டி பேசறீங்க? என்ன நான் ஆட்டோ ஓட்டறது புடிக்கலியா? வேற ஏதாவது தொழில் செய்யறேன். ப்ளீஸ்  என்ன வெளில மட்டும் போக சொல்லாதீங்க. நாம வேண்ணா  வேற ஒரு வீட்டுல இருக்கலாம். உங்கள பிரிஞ்சு மட்டும் போக சொல்லாதீங்க. தீர்மானமாக பேசினான்.

“ப்ளஸ் வெற்றி. புரிஞ்சுக்கோ. உனக்குன்னு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கோ. நான் ஒரு அசிங்கம். சாக்கடை. நான் வேண்டாண்டா”

“இதுக்கா என்ன தொரத்தி தொரத்தி லவ் பண்ணீங்க? லவ் னா  கட்டி புடிக்கறது முத்தம் கொடுக்கறது மட்டும்தானா? எவன் வந்து உன்ன என்ன பண்ணா என்ன? என்னோட உசுரு மேடம் நீங்க. நீங்க ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

“நீ இங்கே இருந்து போகலன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல வெற்றி. உன்னோட வாழ்க்கையை இப்டி சிதைச்சுட்டோமேங்கற குற்ற உணர்ச்சிலேயே கூட நான் செத்துடுவேன். ப்ளீஸ்  இனிமே நீ இங்க இருக்க கூடாது”

கை எடுத்து கும்பிட்டு கெஞ்சும் கண்மணியிடம் என்ன பேச முடியும்?

“சரிங்க மேடம்” கண்ணை துடைத்துக் கொண்டு உயிரை அங்கேயே விட்டு பதில் பேச தெரியாமல், போக இடமில்லாமல் சென்று விட்டான்.அவனுக்கு அவளை எதிர்த்து பேசத் தெரியாது.

“வெற்றி வெற்றி ! விஜயன் ஓடி வந்தார். நான் அவ கிட்ட பேசறேன். நீங்க இங்கையே இருங்க. பெற்றவர்கள் எத்தனையோ கெஞ்சியும் அவன் அங்கு இருக்கவுமில்லை. ஏதாவது தொழில் செய்து கொள்ளுங்கள் என்று செய்த பண உதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று இவன் இல்லை என்றல்  குடும்பம், தொழில் எதுவுமே இருந்திருக்காது. ஒன்றும் செய்ய இயலாதவர்களாக, கடன் காரர்களாய்  நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.

============================================================================

 அந்த வீட்டில் இருந்து அவளை அடுக்ககத்திற்கு வர சம்மதிக்க வைப்பதற்கே அவர்களுக்கு பெரும் பாடாகிவிட்டது. இதில் எதிர் வீட்டில் வெற்றி இருக்கிறான் என்று எப்படி சொல்வது? சொல்வதா வேணாடாமா ? நாமாக எதையும் பேச வேண்டாம் அவளாகவே தெரிந்து கொள்ளட்டும். அமைதியாகவே இருந்து விட்டார்கள். ஆனால் அன்று இரவில்  உதி குட்டி தூக்கத்தில் பா, பாப்பா என்று முனகிக்  கொண்டிருந்தாள். இது ஒன்றும் புதிதில்லை. பேச்சு வருவதற்கு முன்பே பா  பா  என்று தான் லேசாக ஆரம்பித்தாள். அவள் அப்படி சொல்லும் போதெல்லாம் இவளுக்கு அதிபனின்  நினைவு வந்து விடும். நல்லவன் என்று எத்தனை நம்பி இருந்தாள் . எங்கோ யாரோ அவனை சுட்டுக் கொன்று விட்டார்களாம். ஆனால்  இவளுக்கும் இவளை போல பல பெண்களுக்கும் நடந்த அக்கிரமங்கள் மறைந்து விடுமா? அவன் நினைப்பு வந்ததுமே மகளிடம் இருந்து ஒதுங்கி கொள்வாள். ஆனால்  உதி அப்பா என்று நம்பிக் கொண்டிருப்பது யாரை? வெறும் உயிர் வரக்  காரணமாக இருந்தவனையா? அல்லது தன்னையும் அன்னையையும் உயிராக இருந்து காத்தவனையா? வெற்றி தான் தன்னுடைய தந்தை  என்பதை புரிந்து கொண்ட சிறு குழந்தை விரைவிலேயே தன்  அன்னைக்கும் புரிய வைப்பாள்.

அப்புறம் வேற என்ன? கதை முடிந்து விடும்……..

சொன்னபடியே அடுத்த வாரம் வந்து பால் காய்ச்சினார்கள். வழக்கம்போலவே தான் வர முடியாது என்று முரண்டு பிடித்தாள்  வித்யா. பழைய வித்யா அடம்  பிடிப்பாள். மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள். சிணுங்குவாள். கெஞ்சுவாள் அதே சமயம் கொஞ்சுவாள். இந்த புது வித்யா, ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில ஒரு வார்த்தை பேசினாள் . மற்றவர்கள் எதையாவது அழுந்த கூறினால் வெறித்த பார்வையுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு முகத்தை கூட பார்க்க மாட்டாள். எத்தனை முயற்சி செய்தாலும் பெற்றவர்களால் அவளை மாற்றத்தான்  முடியவில்லை. அவள் தந்தையும் பெரும்பான்மையான கம்பனி ஷேரை   விற்று விட்டு தேவையானதை மட்டுமே வைத்துக் கொண்டு முழு நேரமும் அவளுடனேயே இருந்து பார்த்தார். ம்ம் ஒன்றும் நடக்கவில்லை. இதோ வழக்கம்போல பெரியவர்கள் மட்டுமே வந்து பால் காய்ச்சினார்கள். வெற்றியை அழைத்திருந்தார்கள்.  சாமி கும்பிட்டு பாலை பருகியவனுக்கு தன்னவளின் முகம் காண ஆசையாக இருந்தது. அவள் நிச்சயம் வந்திருக்க மாட்டாள் அவனுக்குத்தெரியும்.

வீடு  மாற்றிக் கொண்டு வந்தார்கள். இதோ அவளை கண்டு விட்டான். லிப்டில். இருவர் மட்டுமே.  வித்யா! ஆசையாக அழைத்தான். எந்த பதிலும் இல்லை. அதற்கு மேல் இவன் அழைக்கவில்லை. அமைதியாக சென்று விட்டான். அவன் மீண்டும் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாளோ ? இவள் ஷாப்பிங் ஏரியாவுக்கு  சென்றாள் .  அங்கேதான் பொட்டிக்  வைத்திருந்தாள்.  அவன் கார் பார்க்கிங் சென்றான். அவள் திரும்பி நின்று  அவன் வருவானா என்று ஆவலுடன் பார்த்திருந்தாள் . அவனை அதற்கு பிறகு பார்க்கவில்லை. காலையில் கிளம்பி சென்றவனுக்கு  நாள் முழுவதுமே வேலை சரியாக இருந்தது. இவனின் ஓனர் மகளுக்கு திருமணம் செய்து வீட்டோடு மாப்பிளையாக வைத்துக் கொண்டார். மாப்பிள்ளைக்கு இன்னும் தொழில் பழகவில்லை. புது மாப்பிள்ளை புது மனைவியுடன் காலம் கடத்திக் கொண்டிருந்தார். பெரியவருக்கு கஷ்டம் வேண்டாம் என்று வெற்றியே பெரும்பான்மையான வேலைகளை பார்த்துக் கொண்டான். நாள் முழுவதும் வேறு வேறு கிளைகளுக்குச் செல்வதும், அங்கே எப்படி போகிறது என்று விசாரிப்பதும் நேரம் ஓடியதே தெரியவில்லை. இரவில் வந்து குளித்தவன் அப்படியே உறங்கிப் போய் இருந்தான். வழக்கம் போலவே அவனுக்கு இரவில் விழிப்பு வந்தது. இது எப்போதும் நடப்பதுதான். அடுத்த சில மணி நேரங்கள் உறங்க மாட்டான். அவன் உறங்க அவள் வேண்டும்.இவனுக்கு அவள்  ஸ்பரிசம் வேணும். அவளை தொட்டுக் கொண்டு, கட்டிக் கொண்டு படுத்தால்  போதும் அடுத்த நிமிடம் உறங்கி  இருப்பான். அதுதான் நடக்காதே.  சரி நாமாவது நடப்போம். வீட்டிலேயே நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் பால்கனியில் நிடன்று வெறித்தவனுக்கு  தன்னவளின் முகம் வந்தது. இது அவள் அல்ல . வேறு யாரோ. மெலிந்து போய்  இருந்தாள் . கண்ணில் கரு வளையம் வந்திருந்தது. முகத்தில் சோகம் என்று சொல்ல முடியாது. ஆனால்  சிரிப்பு இல்லை.

நெஞ்சு முழுவதும் பெரிய பாரம் . இதற்கு மேல் பொறுக்க முடியாது. நேரே சென்று அவள் வீட்டு  காலிங் பெல் அழுத்தினான். அவள் தந்தைதான் கதவை திறந்தார். அவர்கள் வீட்டு  கதவை திறக்காமலேயே வந்திருப்பது யார்  என்று கேமரா மூலம் பார்த்து விட முடியும். வெற்றியை பார்த்தவருக்கு  பயம் இல்லை. ‘இப்ப எதுக்கு வந்திருக்கான்?’ யோசனை வந்தது.

“என்னப்பா இந்த நேரத்துல?”

“சாரி  சார் . நான் வித்யா மேடத்தை பார்க்கணும்”

“என்னாச்சு?”

“நான் அப்புறம் சொல்லறேன். ப்ளீஸ் அவங்கல பாக்கணும்”

அவள் அறைக்குச் சென்று லேசாக கதவை திறந்து பார்த்தார். தூங்கவில்லை. அமர்ந்திருந்தாள்.

“அவங்க தூங்க மாட்டாங்க. அவங்களுக்கு நைட்  டைம்  கிரேவிங் இருக்கு. நீங்க போய் தூங்குங்க. அவங்களுக்கு நான் ஏதாவது செஞ்சு குடுத்துக்கறேன்.

“ஆர் யூ  ஷியோர்”

“எஸ் சார்”

அவர் சென்றதும் சமையல் அறையில் தேடி பார்த்தான். நூடுல்ஸ் இருந்தது.

செய்து விட்டு அவளுக்கு பிடித்த படி லேசாக சாஸ் ஊற்றி சுட சுட நீட்டினான். மனைவி உண்பதையே கை கட்டி ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அன்பும் ஆசையுமே  இருந்தது. பின்னோடே எழுந்து வந்த காயத்ரியும் இதை பார்த்தாள் . அவர்களுக்கு நடுவில் அவள் தலையிட விரும்பவில்லை. பெற்றவள் தனக்கு தெரியாதது இவனுக்கு  தெரிந்திருக்கிறதே? இந்த நேரத்தில் எழுந்து வந்து அவளுக்காக பொறுமையாக வேலை செய்கிறானே?  கணவன் கை  கட்டி மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உண்டு முடித்ததும் கப்பை பார்த்தான். காலி ஆகி இருந்தது.

“ஏன் இதை மிச்சம் வச்சுருக்கீங்க?”

“உனக்காகத்தான்.  ஏன் என்னோட எச்சில் நீ எடுத்துக்க மாட்டியா?”

ஓட்டலில் அவள் மிச்சம் வைத்து கொடுத்த நூடுல்ஸ் நினைவுக்கு வந்து தொலைத்தது.

பெரு மூச்சு விட்டு நகர்ந்து கொண்டான். இப்போதும் பேசவில்லை.

அவள் வாய் துடைத்து முகம் தடவி தலை கோதி விட்டு சென்று விட்டான். இனி அவன் மறு  நாளும் வருவான். அதற்கு அடுத்த நாளும் வருவான். அவன் மகளுக்கு செய்து கொடுக்க ஏற்றபடி காயத்ரி ஏதாவது தயார் செய்து வைப்பாள். உருளை கிழங்கு மசாலா செய்து வைப்பாள். வந்து மசால் தோசை செய்து  கொடுப்பான். காய்கறி வதக்கல் வைத்திருப்பாள். பிரட்டில் வைத்துக் கொடுப்பான். இப்போதும் அவள் பேசவில்லை. அவள் முகம் பார்த்து அவனேதான்  புரிந்து கொள்ள வேண்டும்.  பெற்றவர்களுக்கே புரியாத பல விஷயங்கள் அவனுக்குப் புரிந்தது.

அவனிடம் நிறைய பேச வேண்டும் மனம் ஏங்கியது. வாய் மூடிக் கொண்டது. தோசை ஊற்றி சாம்பாரை சூடு படுத்திக் கொண்டு வந்தான்.  அவன் அமர ஏற்றபடி சற்று நகர்ந்து அமர்ந்தாள்.

 அவன் புரிந்து கொண்டான். அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

நான் என்ன பண்ணறேன். என்ன வேலைக்கு போறேன் தெரிஞ்சுக்க வேண்டாமா?

வேண்டும். அவள் தலை குனிந்து கொண்டதில் புரிந்து கொண்டான். தன்னுடைய சூப்பர் மார்க்கட் பற்றிய விவரங்களை சொன்னான்.புது முதலாளி பற்றிச் சொன்னான். தான் அவர்களிடம் வேலைக்குச்ச் சேர்நதது, தொழில் கற்றுக் கொண்டது எல்லாமே சொன்னான்.  கல்யாணம்?  கேக்க மாட்டியா?

தெரிந்து கொள்ள விரும்பாத விடைக்கு காத்திருந்தாள். ஆகிடுச்சு என்று சொல்லி விட்டால்?

அவன் வேறு ஒரு திருமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அவனை அவள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதே. ஆனால்  அதுவே அவன் வேறு ஒருத்திக்கு சொந்தம் ஆகி இருப்பான் என்று நினைக்க தைரியம் வரவில்லை .

தொடரு. ம்…………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!