Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 12

நாட்கள் இயல்பாக செல்ல மீண்டும் தன் அரியர் தேர்வுகளில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தான் தமிழினியன்.

“டேய் எரும.. ஏதோ இந்த செம்லயே எல்லா பேப்பரையும் கிளியர் பண்றேன்.. கேம்பஸ்ல பிளேஸ் ஆகுறேன்னு வாய் பேசுன.. அப்பறம் படிக்காம வேடிக்கை பார்த்துட்டு இருக்க” புத்தகத்தை விரித்து வைத்து படிக்காமல் வேறு சிந்தனையில் இருந்த தமிழை எழில் திட்ட கடுப்பானவன் அவனுக்கு பதிலளிக்காமல், “இங்க ஓரே டிஸ்டர்பன்ஸா இருக்கு.. நான் வேற இடத்தில போய் படிக்கிறேன்” என்று புத்தகத்தை தூக்கிக் கொண்டு கேண்டீன் சென்றுவிட்டான்.



Advertisement

கேண்டீனில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக சென்று அமரந்தவனுக்கு படிப்பு ஏறவில்லை மாறாக பசி தான் வந்தது. முயன்று தன்னை கட்டுப்படுத்தி பாடத்தில் கவனத்தை செலுத்த நினைக்க ஒன்றும் புரியவில்லை. எப்படி புரியும்? முதல் செமஸ்டர் பேப்பரை ஐந்தாவது செமஸ்டரில் படித்தால் எப்படி புரியும்?

புத்தகத்தை திறந்து அமர்ந்திருந்தவன் எதிரே ஆள் நடமாட்டத்தில் நிமிர கையில் இரண்டு ஜூஸ் உடன் நின்றிருந்தாள் இன்னிசை.

Advertisement

Advertisement

அவளை கண்டதும் தமிழ் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவள் ஒரு ஜூஸை அவன் கையில் கொடுத்துவிட்டு, “பாரு டா பிரேக்ல கூட படிக்கிறீங்க.. வர வர உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லாம போயிட்டிருக்கு” என சிரிப்புடன் எதிரே அமர “பாத்தியா.. நீயும் கிண்டல் பண்ற..” என்று முகத்தை சுருக்கினான்.

“சும்மா சீனியர்..” புன்னகைத்தவள் “சரி சரி நீங்க படிங்க” என அவனை தொந்தரவு செய்யாமல் போனை நோண்ட, “மலர் எங்க?” என்றான்.

Advertisement

“அவ கட்லெட் வாங்க கவுன்டர்ல நின்னுட்டு இருக்கா” என பதிலளித்தவள் “நீங்க வெட்டி கதை பேசாம படிங்க சீனியர்..” என்று அவனை அதட்ட, “இவளுக்கு எங்க அப்பாவே பரவால போல” முனங்கியவன் “அட இரு மா.. ஜூஸ் குடிச்சிக்குறேன்” என அவள் குடுத்த ஜூஸை பருகினான்.

இவனை கண்காணிக்க கேண்டீன் வந்த எழில், “இது தான் நீ படிக்கிற லட்சணமா..?” என்று அவன் மிச்சம் வச்சிருந்த ஜூஸை பிடிங்கி குடிக்க கடுப்பாகிவிட்டான் தமிழ்.

தமிழ் எழிலை முறைக்க, “ரொம்ப முறைக்காத.. படி படிச்சு அரியர கிளியர் பண்ற வழிய பாரு.. மக்கு பையா” என்றவன் அவனை சட்டை செய்யாமல் இசையுடன் கதைபேச அது பொருக்காதவனோ “இப்படி ரெண்டு பேரும் பேசீட்டே இருந்தா நான் எப்படி படிக்கிறதாம்..?” என்று எரிச்சல்பட இருவரும் அமைதியாகிவிட்டனர்.

தமிழ் மீண்டும் பாடத்தில் கவனம் செலுத்தி படிக்க முயன்று ஒன்றும் புரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

“என்னாச்சு சீனியர்?” இசை கேட்க “ஒன்னுமே புரியல..” என்றான் சலிப்பாக.

“அதான் உங்க சார் சொல்லி தரேன்னு சொன்னார்ல அவர் கிட்ட கேட்கலாம்ல..”

“கேட்டேன் இசை.. ஆனா எனக்கு அவர அடிக்கடி போய் தொந்தரவு பண்ணி டவுட் கேட்க ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” அவன் சங்கடமாக கூற எழிலிடம் திரும்பியவள், “எழில் அண்ணா அப்போ நீங்க சொல்லி தர வேண்டியது தானே..” என்க

அவள் பேச்சில் பதறியவன், “இசை.. அது ஃபர்ஸ்ட் செமஸ்டர் பேப்பர்.. இப்போ அது ஒன்னுமே எனக்கு நியாபகம் இல்ல” என்றான்.

இசைக்கு தமிழை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“சீனியர் நீங்க வேணா வேற ஃபிரண்ட்ஸ் யாருகிட்டயாவது கேட்கலாம்ல?”

“ம்ச்.. இல்ல இசை இவன தவிர யாரும் அவ்ளோ கிளோஸ் இல்ல.. இந்த டாப்பர் பசங்க ரொம்ப சீன் போடுவாங்க.. மத்தவனுங்க நம்மல மாதிரி தான் எக்கச்சக்க அரியர் வச்சிருப்பானுங்க ..”

“அப்போ கேர்ள்ஸ் கிட்ட கேளுங்க..”

“ம்ச் நான் பசங்களே மதிக்க மாட்டானுங்கனு சொல்றேன் இதுல பொண்ணுங்க வேறையா..” எள்ளலாக கூறினான்.

“இல்ல சீனியர்.. நீங்க நல்லா யோசிச்சு பாருங்க.. யாராவது இருப்பாங்க.. படிக்கிறதுக்கு யாராவது ஹெல்ப் பண்ணாம இருப்பாங்களா?..” என்றவளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தான். அதுவே இதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என காட்ட, “ஏன் சீனியர் அவங்கெல்லாம் உங்கள கம்மியா நினைப்பாங்கனு யோசிக்கிறீங்களா.?” அவனை சரியாக கணித்து கேட்டாள் இன்னிசை.

அவள் புரிதலை நினைத்து வியந்தவன் அமைதியாய் இருக்க அதை வைத்தே அவன் மனதை அறிந்து கொண்டவள், “அப்போ நீங்க அவங்கெல்லாம் உங்கள குறைவா நினைப்பாங்கனு தான் அவங்க கிட்ட கேட்க கூச்சப்படுறீங்க.. தயக்கப்படுறீங்க.. கரெக்ட்டா..” என அவன் முகம் பார்க்க இம்முறை ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டினான்.

“சீனியர் இங்க எல்லாருக்கும் எல்லாமே தெரியும் எல்லாமே வரும்னு சொல்ல முடியாது.. அது தெரியனும்ங்கிற அவசியம் கூட இல்ல. அதே மாதிரி எல்லாரும் உங்கள குறைவா நினைக்க போறது இல்ல.. சோ நல்லா யோசிச்சு பாருங்க கண்டிப்பா அப்படி நினைக்காதவங்க யாராவது இருப்பாங்க..” இசை பேசி முடிக்க சரியாக பெல் அடிக்க இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்.

“நமக்கு தெரியாததை தெரிஞ்சுக்க நினைக்கிறது ஒன்னும் அவ்வளவு கூச்சப்பட வேண்டிய விஷயம் இல்ல சீனியர்.. சோ அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்காதிங்க” என்றவள் “பாய் எழில் அண்ணா..” என அவனிடமும் சொல்லிவிட்டு செல்ல இசையின் தெளிவான பேச்சை வியப்புடன் மனதில் மெச்சிக்கொண்டான் எழில். இதையே அவன் கூறியிருந்தால் காது கொடுத்து கூட கேட்டிருக்க மாட்டான் தமிழ்.

வகுப்பிற்கு வந்த தமிழுக்கு இசையின் வார்த்தைகளே மனதில் ஓட அவள் சொன்னது போல தயக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் காரியம் நடக்காது எனவே யாருடைய உதவியுடனாவது படிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் யாரிடம் கேட்பது என தெரியவில்லை.

வகுப்பில் ஒவ்வொருவராக செமினார் எடுக்க தமிழ் இந்த சிந்தனையில் இருந்தான். அடுத்ததாக கயல்விழி வந்து செமினார் எடுக்க, தமிழின் தலையில் பல்பு எரிந்தது. கயல்விழி அவன் கிளாஸ் டாப்பர். ஒரு வாயில்லா பூச்சி. பெரியதாக அவளுக்கு நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. அவளுண்டு அவள் வேலையுடன் என இருப்பாள்.

பேசாமல் கயல்வழியிடம் கேட்டால் என்ன?.. என யோசித்தவனுக்கு கயல்விழி தான் அவனுக்கு உதவ சரியான ஆள் என தோன்ற அவளிடம் உதவி கேட்கலாம் என முடிவெடுத்து விட்டான்.

கயல் செமினார் எடுப்பதை கவனித்தவனுக்கு ஏதோ ஓர் அளவிற்கு புரிவதை போல் இருந்தது. சரி அவளிடமே உதவி கேட்கலாம் என நினைத்தவன், “டேய் பேசாம கயல்விழி கிட்ட கேட்கலாமா?” என எழிலிடமும் கருத்து கேட்க அவனும் சரி என்றான்.

செமினார் முடிந்ததும் அவளிடத்தில் வந்து அமர்ந்த கயல் எதேச்சையாக திரும்ப தமிழ் அவளை கண்டு புன்னகைத்தான். பதிலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாதவள் பதட்டத்தில் தலை குனிந்து கொண்டாள்.

“என்ன டா இவ.. ஸ்மைல் பண்ணா கீழ குனிச்சிருக்கிறா” என்ற தமிழை கண்டு கிண்டலாக சிரித்த எழில், “டேய் நல்லா ஃப்ரெண்ட்லியா ஸ்மைல் பண்ணனும்.. நீ ஏதோ கந்துவட்டி காரன் மாதிரி பார்த்தா.. பாவம் அந்த பொண்ணு பயந்திருக்கும். இப்போ என்ன பார்த்து கத்துக்கோ” என கயலை கண்டு புன்னகைக்க அவன் பார்வையில் மேலும் பதட்டமானவள் சட்டென திரும்பிவிட்டாள் அதன் பிறகு இவர்களின் பக்கமே திரும்பவில்லை.

தமிழ் கேலியாக சிரிக்க கடுப்பாவன், “சரி.. சரி.. அதுக்கு இது சரியா போச்சு விடு” என அவன் வாயை அடைத்தான்.

வகுப்பு முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு புறப்பட கயல்விழி முதல் ஆளாக பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள். அவள் அவசரமா போவதை கண்ட தமிழ், “டேய்.. அவ போறா பாரு..” என்று எழிலையும் இழுத்துக் கொண்டு அவள் பின்னே ஓடினான்.

வேகமாக வந்தவர்கள் அவள் முன் வழி மறித்து நிற்க இருவரையும் கண்டு மிரண்டு போய் விழித்தாள் கயல். “எ..எதுக்கு வழியில நிக்கிறீங்க.. தள்ளுங்க ஹாஸ்டல்க்கு லேட் ஆச்சு” என திக்கித் திணறி கூறி அங்கிருந்து நகர முற்பட மீண்டும் வழி மறித்தவர்கள், “கயல்.. கயல்.. பிளீஸ் ஒரு நிமிஷம்..” என அவளை நிறுத்த “லேட் ஆகிரும்.. ஹாஸ்டல் கேட் பூட்டீருவாங்க” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதில் கடுப்பான எழில், “இத பாரு மா.. நாங்க என்ன உன்ன கடத்தீட்டா போகப் போறோம் இப்படி பயப்படுற.. சும்மா சொன்னதையே சொல்லாம அவன் என்ன சொல்ல வரான்னு கொஞ்சம் காது குடுத்து கேளு” என்றான் எரிச்சலாக.

அவன் சத்தத்தில் மேலும் அவள் பயப்பட, “டேய் கொஞ்சம் சும்மா இருடா.. அந்த பொண்ண இன்னும் பயமுறுத்தாத..” என எழிலை திட்டியவன், “சாரி கயல்.. அவன் அப்படி தான்..” என அவளை நிதானப்படுத்தினான்.

“என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு டைம் ஆச்சு..”

“கயல் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் பிளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லீறாத” கோரிக்கை வைக்க “நானா?..” என யோசனையுடன் பார்த்தாள்.

“ஆமா நீ தான்.. பிளீஸ் முடியாதுனு மட்டும் சொல்லாதா..”

“சரி என்ன ஹெல்ப்??..”

“அது..அது..” என இழுத்தவனுக்கு இவளும் தன்னை குறைவாக நினைப்பாளோ என்ற பயம், இருந்தாலும் அவள் அப்படியெல்லாம் நினைப்பவள் இல்லை என உள்ளம் உறைக்க, “உனக்கே தெரியும் எனக்கு நிறைய அரியர்ஸ் இருக்குனு.. எனக்கு அதெல்லாம் கிளியர் பண்ணனும்.. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா.. எனக்கு சொல்லி தர முடியுமா பிளீஸ்..” தயங்கி பின் கேட்டுவிட்டான்.

“ஓஓ.. இது தானா” ஆசுவாசம் அடைந்தவள், “ம்ம் கண்டிப்பா சொல்லி தரேன் இனியன்” உடனே ஒத்துக் கொண்டாள்.

புன்னகைத்தவன், “ரொம்ப தேங்க்ஸ் கயல்.. அப்போ நாளையில இருந்து படிக்க ஆரம்பிக்கலாமா?” என கேட்க சரி என தலையாட்டியவள், “லேட் ஆச்சு நான் போகட்டா..” என இழுத்தாள். தமிழ் சரியென தலையாட்டிதும் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் தமிழ் கயலின் உதவியுடன் படிக்க தொடங்கியிருந்தான். ஆரம்பத்தில் கயல் இருவருடனும் அவ்வளவாக ஒன்றவில்லை, முதல் ஒரு வாரம் அவன் கேட்பதை மட்டும் விளக்குவாள் முக்கியமான வினாக்களை சொல்லிக் கொடுப்பாள் அவ்வளவு தான் அதற்கு மேல் பேச்சுகள் இருக்காது.

ஒரு கட்டத்திற்கு மேல் தமிழுக்கு பாடங்கள் சலிப்பெடுக்க “பிளீஸ் நீ இப்படி உர்னு இருக்காத கயல்.. எனக்கு ஏதோ டியூஷன் டீச்சர் கிட்ட படிக்கிற ஃபீல் வருது” என கூற “அது நான் அப்படி தான் எனக்கு மிங்கிள் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும்.. போக போக சரி ஆகிருவேன்..” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல கயலும் இருவரிடமும் சகஜமாக பேசி பழக தொடங்கியிருந்தாள். தமிழும் எழிலும் அவளை பேச வைத்தனர். இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருடனும் கயலுக்கு நல்ல நட்பு மலர்ந்ததிருந்தது. எப்போதும் அவள் தனியே இருப்பதை பார்த்தவர்கள் முடிந்த அளவு அவளை தனியே விடமாட்டார்கள் எங்கே சென்றாலும் அவளையும் வற்புறுத்தி அழைத்து செல்வார்கள். இசை மலரிடம் கூட அவளை அறிமுகப் படுத்தி அவர்களுக்குள்ளும் நட்பு மலர செய்திருந்தனர்.

அன்று மூவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தனர். எழில் சமோசா சாப்பிட, கயல் தமிழுக்கு ஒரு முக்கியமான கேள்வியை கடந்த ஒரு மணி நேரமாக விளக்கிக் கொண்டிருந்தாள். பாவம் அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

வெறுத்து போனவள், “டேய் நீ எல்லாம் எப்படி தான் டுவெல்த் பாஸ் பண்ண?” என கடுப்பாக கேட்க “அது எனக்கே இப்போ வர பெரிய ஆச்சிரியம் தான்..” என்றவன் “என்ன பாஸ் பண்ணிவிட்ட புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்” என அவரை வாழ்த்தினான்.

படித்து படித்து சலித்து போய் மூவரும் கதையளக்க தொடங்கினர்.

உணவு இடைவேளையில் இசையும் மலரும் கேண்டீன் வர அவர்களுடன் இலவச இணைப்பாக ஒட்டிக் கொண்டே வந்தான் அரவிந்த். இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறான்.

அரவிந்தை கண்டதும் எரிச்சலான தமிழ் “டேய் இவன் ஏன்டா எப்போ பாரு ஏதோ ரப்பர் வைச்ச பென்சில் மாதிரி இவளுங்க பிண்ணாடியே சுத்தீட்டு இருக்கான்” எழிலிடம் கடுப்பாக கூற “நீ ஏன் டா இவ்ளோ காண்டு ஆகுற?..” சிரிப்புடன் கேட்டான் எழில். அவனுக்கு தமிழின் இந்த சிறுபிள்ளை தனமாக பொசசிவ்னஸ் நல்ல பொழுதுபோக்கு.

“ம்ச் தெரியல எனக்கு என்னமோ அவன் மூஞ்சிய பார்த்தாலே ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு..”

“சரி.. சரி.. பக்கத்துல வந்துட்டாங்க கொஞ்சம் வாய மூடு” என எழில் கிசுகிசுக்க தமிழ் ‌அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

அரவிந்த் தமிழுக்கும் இசைக்கும் நடுவே வந்து அமர்ந்தவன் நண்பர்கள் இருவரிடமும் சகஜமாக பேச எரிச்சலான தமிழ் வேறு வழியின்றி இசைக்காக அவனுடன் சகஜமாக பேச முயன்றான்.

கயல் மதிய உணவிற்கு ஹாஸ்டல் போக எழ அரவிந்த் அவசரமாக இசையிடம் ஏதோ ஜாடை காட்டினான்.

முதலில் மறுத்தவள் அவன் கெஞ்சலில் சற்று மனமிறங்கி, “கயல் அக்கா.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எங்களோட சாப்பிடுங்களேன்” என்று கூற மறுக்க முடியாமல் எழிலையும் தமிழையும் தயக்கமாக பார்த்தாள் கயல்விழி.

உன் விருப்பம் என்பது போல் இருவரும் அமைதியாய் இருக்க அவள் பார்வை புரிந்த மலர், “அதென்ன எல்லாமே உங்க ஃப்ரண்ட்ஸ கேட்டு தான் பண்ணுவீங்களோ..” என கேட்க “ஐயோ அப்படி எல்லாம் இல்ல..” உடனே மறுத்தாள்.

“அப்போ நீங்க இன்னிக்கு எங்க கூட தான் சாப்பிடனும்..” என்ற மலர் பிடிவாதமாய் கயலை அவளுடன் அமர்த்திக்கொள்ள வேறு வழியின்றி அவளும் ஒத்துக்கொண்டாள்.

மலர் இசையையும் அரவிந்த்தையும் கெத்தாக பார்க்க கண்களாலேயே அவளை மெச்சிக்கொண்டவன், “பார்த்து கத்துக்கோ” என இசையிடம் கிசுகிசுக்க கடுப்பானவள் “டேய் ஓவரா பேசுன.. நாளையிலிருந்து உன்ன கூட்டிட்டே வர மாட்டேன்” என மிரட்டவும் “அச்சச்சோ சாரி டி டென்ஷன் ஆகிட்டியா அண்ணா சும்மா சொன்னேன்”அவளை சமாதானம் செய்தான்.

இவர்கள் இருவரின் ரகசியப் பேச்சுகளில் கடுப்பான தமிழோ “இசை என்ன ஆர்டர் பண்ணறது?” என இருவரின் உரையாடலில் இடைபுகுந்தான். அவனுக்கே அவன் செயல் சற்று அல்பமாக தோன்றியது. என்ன செய்ய அரவிந்த் அவனை அந்த அளவு கடுப்பேற்றுகிறானே.

“சீனியர் நானும் மலரும் லன்ச் வச்சிருக்கோம். சோ நம்ம அளவா ஆர்டர் பண்ணீட்டு ஷேர் பண்ணிக்காலம்” என கூற சரியென்றவன் எழிலிடமும் உணவிருக்க மற்றவர்களுக்கு வேண்டியதை கேட்டு அளவாக ஆர்டர் செய்ய ஆறு பேரும் பகிர்ந்து உண்டனர்.

உணவின் நடுவே ஜூஸ் வாங்க எழுந்து சென்ற மலர் சற்று வித்தியாசமாக நடப்பதை கண்ட தமிழ், “என்னாச்சு மலர் கால்ல ஏதாவது அடிபட்டு இருக்கா?” என கேட்க இசையும் அரவிந்தும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இருவரையும் கடுமையான முறைத்தவள், “அதெல்லாம் இல்லை சீனியர்..” விளக்க “இருங்க சீனியர் நான் சொல்றேன்.. நான் சொல்றேன்.. ” என அவளை தடுத்த இசை “சீனியர் அவ புதுசா ஒரு ஹீல்ஸ் வாங்கியிருக்கா.. அத போட்டுட்டு நடக்க தெரியாம இப்படி நடந்துட்டு சுத்துரா..” என சிரிக்க எழில் அவளை கிண்டலாக பார்த்தான்.

எழிலின் கேலி பார்வையில் கடுப்பானவள் இசையை முறைத்துவிட்டு, “எல்லா எங்களுக்கு தெரியும்..” என வேகமாக நடக்க கால் இடறி விழ போய் அருகே இருந்த மேஜையை பிடித்து கீழே விழாமல் நின்றாள். அதை கண்டு அவர்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க மேலும் கடுப்பானவளோ “நீங்க யாரும் என்கிட்ட பேசாதீங்க போங்க..” என முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

ஜூஸ் வாங்கி கொண்டு நடந்து முடியாமல் நடந்து வந்தவள் கால் இடறி அவளெதிரே இருந்து எழிலின் வெள்ளை சட்டையில் மொத்த ஜூஸையும் கொட்டினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!