Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 9

தேவை… பாவை பார்வை – 9

தந்தைக்கு அழைத்துவிட்டு, அவர் எடுப்பதற்காக காத்திருக்க,

மறுமுனையில் அவர் எடுத்ததும், “சொல்லு தம்பி, அன்னைக்கு மருமகளை போயிட்டு பாத்துட்டு பேசிட்டு வந்துட்டேன்னு மட்டும் சொல்லிட்டு வச்சிட்ட… அதுக்கப்பறம் தகவல் ஏதும் சொல்லலையே?… வாணி என்ன சொல்லுச்சி?…” என்று அவர் விசாரிக்க,

“ஏன் ப்பா… அத்தை கிட்ட தான் தினமும் ஒரு வார்த்தை பேசிடுவீங்களே… உங்களுக்கு அத்தை ஒன்னும் சொல்லலையா?…” என்று இவன் தகப்பனுக்கு  பதிலளிக்காமல், கேள்வி கேட்க,



Advertisement

“என் தங்கச்சிகிட்ட நான் பேசுறது இருக்கட்டும்… நீ, நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே தம்பி…” என்று அவர் தன பிடியில் நிக்க,

“அவ என்கிட்ட பேச ரெடி ஆஹ் இல்லப்பா… நான் அவகிட்ட அடுத்த வாரம் கிளம்பி இருக்க சொல்லிருக்கேன் ப்பா…” என்று மெலிதான சத்தத்தில் சொல்ல,

“இதுக்கு தான் உன்னைய போயிட்டு பார்த்துட்டு வர சொன்னேன்னா ஈஸ்வரா…” என்று அதிருப்தியாக கேட்க,

Advertisement

அவனிடம் பதில் வராமல் போக,

Advertisement

“சொல்லு ஈஸ்வரா… இப்படி நான் கேட்டதுக்கு, பதில் பேசாம இருந்தா, என்னனு நான் எடுத்துக்குறது…” என்று தந்தை சற்று கடினமாக கேட்க,

இவனோ, “இப்ப என்ன சொல்லணும்னு சொல்லுறீங்க… நான் பொறுமையா பேசலாம்னு தான் போனேன்… ஆனா அங்க உங்க மருமக அப்படி என்னைய பேச விடல…” என்று சலிப்பாக சொல்ல,

“அதுக்காக நீ கிளம்பி இருக்க சொல்லிருக்க?… இதை நான் கொஞ்சங் கூட எதிர்பாக்கல தம்பி…” என்று சொல்ல,

Advertisement

“வேற என்ன பண்ணனும்னு எனக்கு தெரியல அப்பா… என்னை அவ பேசவே விடல… அதுனால தான் அப்படி சொல்லிட்டு வந்தேன்…” என்று இவனும் பதில் சொல்ல,

“அப்படி விருப்பம் இல்லாத பொண்ணை, கூட கூட்டிட்டு வந்து எப்படி வாழுவ… உன்கூட வாணி வாழ விருப்பம் தெரிவிச்சா, அப்பறம் பேசலாம் தம்பி… இல்லனா என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கலாம்…” என்று அவர் கண்டிப்போடு சொல்ல,

தன் தந்தை சொன்னதை கேட்டதும், ஒரு நிமிடம் ஆடி தான் போனான்.

பின்பு ஒரு முடிவுடன், “ப்பா… நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?… இப்படி பண்றதுக்கு தான் அவ்வளோ அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்களா?…” என்று இவன் கோவமாக கேட்க,

“எங்க அப்பாவோட கடைசி ஆசைன்னு, மறுக்க முடியாத நடந்தது தான் உங்க கல்யாணம்… அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்… நீங்க ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா, அதை விட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்…” என்று பேச,

“அப்பறம் எதுக்கு இப்படி பேசுறீங்க?…”

ஆனா, “அது நடக்குற மாறியே எனக்கு தெரியலையே… எங்க அப்பாவோட ஆசைன்னு சொல்லி, பிடிக்காத உங்களுக்கு கல்யாணம் பண்ணி தப்பு பண்ணிட்டோமேன்னு யோசிக்க வைக்கிறீங்க…” என்று அவர் ஆயாசமாக சொல்ல,

“ப்பா… இப்போ அப்படி நினைச்சி ஒன்னும் ஆகப்போறது இல்ல… என் வாழ்க்கைல கல்யாணம் ஒரு முறை தான், அது நடந்து முடிஞ்சிடுச்சி… அவ்வளோதான்…” என்று உறுதியாக தனது தந்தையிடம் சொல்ல,

“வாணிக்கு பிடிக்கலைன்னு சொல்லும் போது, நீ இப்படி சொல்லுறது…” என்று இழுத்து,

“உங்க வாழ்க்கை இதுல அடங்கி இருக்கு தம்பி… உனக்கு நான் சொல்லுறது புரியுதா?…” என்று சந்தானம் தவித்து சொல்ல,

“ப்பா… நீங்க சொல்லுறது புரியாம இல்ல… விடுங்க, நான் திரும்பியும் கொஞ்சம் சொதப்பிட்டேன்… நான் இனிமேல் அப்படி நடக்காம பாத்துக்குறேன்…” என்று அவருக்கு திருப்தி அளிக்கும் விதமாக பேச,

“தம்பி… இருந்தாலும்…”  என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறி இழுக்க,

“ப்பா… நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது… அவளுக்கு பிடிக்கலானாலும், எனக்கு இந்த கல்யாணம் மட்டும்தான்…” என்று அதற்க்கு பிறகு அவரை பேச விடாமல் வைத்து விட்டான்.

தான் அப்பாவிடம் பேசியதை யோசித்தவாறே, சிஸ்டெமில் கண்ணை மட்டும் வைத்து, ஒன்றும் செய்ய தோன்றாமல், அப்படியே அதனை பார்த்துக் கொண்டே இருக்க,

ஆனால் அவனின் மூளையோ, ஒருவேளை தந்தை சொல்வது போல மது தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டால், என்ற யோசனை ஒருபுறமும், அவளிடம் அடுத்து எப்படி பேசலாமென்று மூளை, மனசு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சிந்திக்க…

அப்போது “என்னடா பிரகதீஷ் பிஸி ஆஹ்…” என்று கேட்டுக் கொண்டே சிரிப்புடன் உள்ளே வந்தான் விமல்.

தன் யோசனையை விடுத்து அவனை பார்க்க,

அவனும், “என்னடா யோசனை…” என்று கேட்க,

“அது ஒன்னும் இல்ல… நீ சொல்லு, என்ன ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்க போல…” என்று வினவ,

“அவ்வளோ அப்பட்டமாவா தெரியுது?…” என்று களிப்புடன் கேட்க,

“நல்லா தெரியுது… தெரிஞ்சது நாலே தான் கேக்குறேன்…” என்று பிரகதீஷ் இலகுவாக சொல்ல,

“மது என்கிட்ட பேசிட்டாலே…” என்று பூரிப்புடன் சொல்ல,

“இதுக்கா இவ்வளோ சீன்?…” என்று சொல்லிவிட்டு அவனை கேள்வியாக பார்க்க,

“கண்டிப்பா… நாம பசங்க எல்லாம் ஈசி ஆஹ், ஒரு தடவை ஹாய் சொல்லி பேசுனா போதும்… அடுத்து பாக்கும் போது மச்சான்னு பேச ஆரம்பிச்சிடுவோம்… இப்போ உன் கூட நான் பிரெண்ட் ஆனேன்ல அப்படி…” என்று சொல்லி,

“இதுவே பொண்ணுகூட பிரெண்ட் ஆகுறதெல்லாம் அப்படி கஷ்டம் டா…” என்று அவன் தீவிரமாக பேச,

பிரகதீஷ் இடையில், “ஆஹான்… அப்பறம்…” என்று அவன் நக்கலாக சொல்ல,

“உனக்கென்னடா நக்கல் இதுல, நான் சொல்றது உண்மை டா…” என்று அவன் சீரியஸ் ஆக சொல்ல,

“எனக்கு அந்த உண்மையெல்லாம் வேணாம் இப்போ… நான் உங்க கூட பேச வந்த காரணமே மது உங்களோட இருந்ததுனால தான்…” என்று இவன் சொல்ல,

“இதையே எத்தனை முறை தான் சொல்லுவ…” என்று கடுப்புடன் சொல்ல,

“உண்மை தானே சொன்னேன்…” என்று இவன் பதில் சொல்ல,

“போதும்டா… என்னை கடுப்பாக்காதே…” என்று எச்சரிக்கை செய்ய,

“சரி பண்ணல… அப்பறம் என்ன சொன்னா உன் பெஸ்ட் பிரெண்ட்…” என்று பிரகதீஷ் கேக்க,

“உடனே சரின்னு சொல்லிட்டானேன்னு பாத்தேன்…” என்று சொல்லி,

“மது எப்படி பேசுனான்னு தெரிஞ்சிக்கணும் அப்படிதானே…” என்று அவனை பார்த்து கேட்க,

“என்னைய இப்போ நீ கடுப்பாக்காத… சொன்னா சொல்லு இல்லனா போடா…” என்றான் அவன் எரிச்சலாக,

“எதுக்குடா இப்போ கோவப்படுற…” என்று அவனை ஆராய்ச்சியாய் பார்க்க,

“சரி அவளை விடு… ரேகா கூட தான் பேசலன்னு சொன்ன… ரேகா பேசிட்டாளா?…” என்று பிரகதீஷ் மதுவை விடுத்து பேச்சினை மாற்ற,

“பிரகதீஷ் என்னடா?… ஏன் எரிச்சலாகுற?…”

“ஒன்னும் இல்ல விடு… நீ சொல்லு…”

“ரேக்ளா ஏன் ஆளுடா… அதுலாம் பேசுவா… பேசாம எங்க போவா…” என்று எளிதாக சொல்ல,

“என்னடா…ஆஆ சொல்லுற?…” என்று இவன் அதிர்ச்சியாகி அவனிடம் கேட்க,

“இப்படிலாம் ஷாக் ஆகாத… ஐ லவ் ரேகா…” என்று சிலாகிப்புடன் கூற,

“அவகிட்ட சொல்லிட்டியா?…” என்று இன்னும் நம்பாத பாவனையுடன் பிரகதீஷ் கேட்க,

“நம்புடா… உண்மையாவே நான் அவளை லவ் பண்றேன்டா…” என்று இவன் சொல்ல,

“நீ லவ் பண்ணுற?… ரேகா?…” என்று கேட்க,

“அவகிட்ட இன்னும் நேரடியா சொல்லலடா… பட் சும்மா பேசும் போதும் லேசுபாச சொல்லுவேன்… ஆனா அவளுக்கு தான் புரியவே மாட்டுது…” என்று புலம்பலாக சொல்ல,

“அப்போ, எப்போ நேரடியா சொல்லுவ?…” என்று இவன் எதிர்கேள்வி கேட்க,

“ஏன்டா… நீ எதுக்கு இப்போ இவ்வளோ கொஸ்டின் கேக்குற?…” என்று கடுப்பாக,

“ரேகா… நல்ல பொண்ணுடா… நீ அவளுக்கு செட் ஆகுவியான்னு, நான் பாக்கணும்ல…” என்று பதில் சொல்ல,

“என்னைய பாத்தா உனக்கு எப்படிடா தெரியுது?…” என்று விமல் எகிற,

“நீ அவளுக்கு கொஞ்சம் சுமார் தான்… ரேகா, ரொம்ப அப்பிராணி… ஆனா நீ….” என்று இழுத்து, விமலை மேலிருந்து கீழாக பார்க்க,

“போதும்… அன்னைக்கு நீ எங்க கூட ஜாயின் பண்ணிக்குறேன்னு சொல்லும் போதே உன்னைய கட் பண்ணிருக்கணும்…” இன்று விமல் காட்டமாக பேச,

“நீயும் இதையே தான் சொல்லுற…” என்று இம்முறை பிரகதீஷ் சொல்ல,

“ஆமா… மதுவுக்கும் உனக்கும் எதோ இருக்குன்னு தெரிஞ்சதுனால தான், உன்கூட பிரெண்ட் ஆகுனேன்… அதுனால தான் நீ மதுகிட்ட கேட்டுட்டு வர சொன்னதுக்கு, உன்கிட்ட எதுவும் கேக்காம ஹெல்ப் பண்ணுனது…” என்று விமல் இப்போது சொல்ல,

“அடேய் எவ்வளோ பொய் சொல்லுற… நான் முதல் நாள் வந்து உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கு அப்பறம், மறுநாள் நீயே தான் வந்து பேசுன… அதுக்கு அப்பறம் டைம் கிடைக்கும் போதுலாம், உனக்கும் மதுக்கு இடையில என்னனு நீ கேக்கவே இல்ல…” என்று இவன் விமலை பேச,

“ஆமா கேட்டேன்… என் பிரெண்டையே பாத்துட்டு இருந்தல்ல… அப்போ நான் அப்படி தான் கேப்பேன்…” என்று விமல் வசனம் பேச,

“அதே மாறித்தான் ரேகாவும் என்னோட பிரெண்ட்… அதான் நானும் உன்கிட்ட கொஸ்டின் கேட்டுட்டு இருக்கேன்…” என்று இவனும் விட்டேனா பார் என்பது போல் பேச,

“அப்போ நான் யாருடா உனக்கு…” என்று முறைக்க,

“நீ என் பிரெண்ட்ஷிப் வேணாம்ன்னு சொல்லிட்டு போனவன் தானே… ஆனா ரேகா, மதுக்காக வாங்கிட்டு வந்த காபியை நான் கேட்டதும், எனக்கு குடுத்தா… அப்போ நான் அவளுக்காக தான் பாப்பேன்…” என்று சொல்லி விமலை முறைக்க,

“ஹப்பா… உன்னோட முடியலடா… இப்போ நீ முடிவா என்னதான் சொல்லவர?…” என்று அவனிடம் வினவ,

“முதல்ல நீ ஏன் இன்னும் ரோககிட்ட உன் லவ்வை சொல்லலைன்னு சொல்லு… அப்பறம் எப்போ சொல்ல போறேன்னு சொல்லு…” என்று பிரகதீஷ் கேள்வியெழுப்ப,

“எங்க அண்ணனுக்கு இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு… எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் பண்ணுவாங்க… அதுனால கொஞ்சம் பொறுமையா சொல்லலாம்னு இருக்கேன்… போதுமா?…”

“நம்புற மாறி இல்லையே… அப்போ அதுக்குள்ள ரேகாக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்கன்னா?… என்ன பண்ணுவ?…”

“ஏன்டா இப்படி?… அவங்க அக்காக்கு இப்போதான் மாப்பிள்ளை பாக்குறாங்க… அதுனால இவளுக்கு பாக்கமாட்டாங்க…” என்று உறுதியாக சொல்ல,

“அது எப்படி நீ சொல்ல முடியும்… ஒருவேளை அண்ணா, தம்பி ரெண்டு பேருக்கு ரேகா சிஸ்டேர்ஸ் செட் ஆச்சுன்னா? என்ன பண்ணுவ?…” என்று சொல்லி,

“அதுமட்டும் இல்லாம, ரேகாக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா…” என்று வேறு அவனை பார்த்து கேட்க,

“ஆனாலும் உன் மூளை எப்படில்லாம் யோசிக்குது பாரேன்… எனக்கே பயமா இருக்குடா, நீ சொல்லுறது…” என்று பீதியாக சொல்ல,

“நீ என் பிரென்ஷிப்பே வேணாம்னு சொல்லியும், நான் உனக்காக இவ்வளோ யோசிச்சிருக்கேன் பாத்துக்கோ…” என்று இப்போது சொல்ல,

“டேய் போதும்டா ராசா… நான் இப்போ என்னடா பண்ணனும்…” என்று கொஞ்சம் பயந்து கேட்க,

“என்கிட்ட சொன்னதை, ரோககிட்ட சொல்லு… லவ் பண்றதை சொல்லாம, திரிஞ்சிட்டு இருக்கான்…” என்று திட்ட,

“சரிடா… அப்போ நான் போயிட்டு அவகிட்ட சொல்ல போறேன்…” என்று அவனின் கேபினிலிருந்து வெளியேறினான்.

இவனையெல்லாம் என்னனு நான் சொல்லுறது என்று பிரகதீஷ் வாய் விட்டு சொல்ல,

அவனின் மனசாட்சியோ, “மதுகிட்ட என்ன, எப்படி அடுத்து பேசப்போறன்னு, கொஞ்சம் எனக்கும் சொல்லுறது…” என்று அவனை கேட்டது.

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!