Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 20 Final

தேவை… பாவை பார்வை – 20 Final

பிரகதீஷ் லண்டன் சேர்ந்து சென்ற அன்று,

“நான் வந்துட்டேன் மது…”

“சரி… நீ பாரு…”



Advertisement

“எங்கயாச்சும் ஒரு பீலிங்ஸ் வருதா… கொஞ்சமும் அலட்டாம இருக்கா பாரு… வீம்புக்காரி…” என்று மனதில் அவளை கடிந்துக் கொண்டே,

“அப்பறம்…”

“அப்பறமென்ன… நீ உன் வேலையைப்பாரு… “

Advertisement

“சரி… நீ பாரு… நான் கொஞ்ச நேரம் படுக்க போறேன்…” என்று வைத்துவிட்டான்.

Advertisement

அதற்கடுத்து வந்த சில நாட்கள், அவளிடம் ஒன்றும் வம்பு வளர்க்காமல், அவளிடம் பாடலும் பாட சொல்லாமல், அவளின் நலனை மட்டும் விசாரித்து விட்டு வைத்து விடுவான்.

முதலில் அவனின் வேலை பளு என்று நினைத்து அதை கடந்து வந்தவள், அன்றைய நாளும், அவன் எப்போதும் போல பேசிவிட்டு போனை வைக்க போக,

மதுவோ, அவனிடம் எப்படி கேட்பதென்று தெரியாமல், கொஞ்சமாக தயங்கி, “ஈஸ்வர்…” என்று அவனை அழைக்க,

Advertisement

அவளின் தயக்கம் புரிந்தாலும், என்னவென்று கேட்காமல், “என்ன மது…” என்று சாதாரணமாக அவன் அவளிடம் கேக்க,

அதில் கொஞ்சம் நங்கை கடுப்பாகி, “சும்மா கூப்பிட்டேன்… வேற ஒன்னும் இல்ல…”

“அப்படியா சரி… நான் வைக்கிறேன்…” என்று அலட்டிக்காமல் சொல்ல,

அவனின் இந்த பதிலில், மேலும் கடுப்பாகி, அவளே போனை வைத்துவிட்டாள்.

அவள் வைத்தவுடன், “ஹ்ம் மேடம்க்கு இப்போதான், எதோ புரியுது போல… பாக்கும் அவளே என்னதான் பண்ணுறான்னு…” என்று சிரித்துக்கொண்டே அவனின் வேலையை தொடர்ந்தான்.

இங்கு மதுவிற்கு அவனை பற்றிய சிந்தனையே… தன்னால் சமாளிக்க முடிமென்று இருந்தவள், இப்போது அவன் இல்லாது, தன்னுடைய இந்த நிலை, அவளுக்கு தெளிவாக உணர்த்தியது, அவளவன் தன்னுள் நீங்காமல் நிறைந்துள்ளான் என்பது.

இந்த குறுகிய நாட்களில், அவன் தன்னில் நீக்கமற நிறைந்துவிட்டான் என்று அவளின் மனம் மொழிய, மங்கைக்கு இந்த மாற்றம், ஒருவிதமான புத்துணர்ச்சியை கொடுத்தது.

மனம் முழுக்க என்னவென்று சொல்லமுடியாமல் புதிதாய் ஒரு உணர்வு… அவன் இருந்தபொழுது, அவனுடன் பேசியது, வம்பிழுத்தது, வாயடித்தது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர, அதையெல்லாம் நினைத்து நினைத்து, பாவையவள் தன் உள்ளம் நிறைத்தவனை, நினைத்துக் கொண்டே, அவளின் விழிகளை சுழல விட, அவ்வீட்டின் எல்லா இடங்களிலும் அவனே நிறைந்திருந்தான்.

அவனை நினைத்துக்கொண்டே, அன்றைய பொழுதை ஓட்ட, அடுத்தடுத்த நாட்கள், வஞ்சியவள் கொஞ்சமென்ன, நிறைய தவித்து தான் போனாள். அவளின் அகம் எந்நேரமும் அவனையே நினைக்க சொல்ல, வேலையில் கவனம் வைக்கமுடியாமல், அவளின் அன்றாட வாழ்க்கை, மெல்ல அவளுக்கு ஆட்டம் காட்டியது.

இதற்கெல்லாம் ஏணி வைத்ததது போல், அவளவன் அன்று அவளிற்கு அழைக்காமல் இன்னும் ஆட்டம் காமிக்க, மங்கையின் மனமோ ஒருபக்கம் அவனிடம் பேசமுடியாமல் தவிப்பு என்ற உணர்வு ஆட்கொள்ள, மறுபக்கமோ தன்னிடம் அவன் பேசாமல் இருப்பது அவளை இன்னுமின்னும் தகிக்க வைத்தது.

ஒரு வழியாக அன்றைய நாளின் முடிவில் அவளை அழைக்க,

அவள் போனை எடுத்தவுடன், “இப்போதான் உனக்கு போன் பண்ண நேரமிருக்கா… இப்பொமட்டும் எதுக்கு எனக்கு கால் பண்ண…” என்று அவனை பேசவிடாமல், இவள் அவனை தாளிக்க,

“மது… ஒரு நிமிஷம்…” என்று அவன் இடையீட,

அவனை பேசவிடாது, “பொண்டாட்டியை விட்டுட்டு போனோமே, அவ தனியா இருக்காளே… உனக்கு எங்காவது கவலை இருக்கா…”

“நீ தான் ஆபீஸ் போனா, பொண்டாட்டியை மறக்குற ஆளாச்சே… உங்கிட்ட போயி நான் கேட்டுட்டு இருக்கேன் பாரு…”

இவ்வளவு நேரமிருந்த தவிப்பு, ஆதங்கம், மனஉணர்வு அனைத்தையும் கொட்டி இன்னும்  பேசப்பேச, பிரகதீஷின் உள்ளமோ, தன்னவளுடைய இந்த தேடலில், ஆனந்த குதியாட்டம் போட்டது.

 அந்த பக்கம் சத்தம் இல்லாமல் போகவும், தன் பேச்சில் உள்ள காரத்தை குறைத்து, “ஈஸ்வர்…” என்றழைக்க,

“ஹப்பா… இப்போவது இருக்கேனான்னு பாத்தியே…”

“இரு… வீடியோ கால் வரேன்…” என்று உல்லாசத்தோடு சொல்லி போனை கட் செய்தான்.

அவன் வீடியோ காலில் வர, அதை அட்டென்ட் செய்துவிட்டு,

“இப்போ எதுக்கு நீ வீடியோ கால் வந்த… நான் கோவமா இருக்கேன் உன் மேல…”

அவன் ஒன்றும் சொல்லாமல், ஒரு வித எதிர்பார்ப்புடன் அவளையே பார்க்க,

அவனின் இந்த பார்வை, பாவையை குறுகுறுக்க செய்ய,

“பச்… இப்போ எதுக்கு இப்படி பாக்குற…” என்று அவன் பார்வையை சந்திக்காமல் இவள் கேட்க,

“என்ன இப்போ… நீயும் என்னை அப்படி பாக்கலாம்…” என்று இலகுவாக அவன் பேச,

அவனின் இந்த பேச்சில், தன்னை அவன் கண்டுகொண்டான் என தெளிவாக உணர்த்த, அதையுணர்ந்த மங்கையோ, மன்னவனின் முகத்தை பார்க்கமுடியாமல், புதிதாய் பூத்த வெட்கங்களுடன் பார்வையை தழைக்க,

“அடியேய்… இப்படிலாம் பண்ணாதடி… நான் ரொம்ப பாவம்…” என்று சொல்லி, அவளின் அந்த வெக்கத்தை ரசித்து பார்த்து, தன்னுள் நிரப்பிக்கொண்டே, போனில் தெரியும் அவளின் முகத்தை ரசனையாய், அவனின் விழிகளோடு விரலும் அதை சொல்லவேன்னா உணர்வோடு ஸ்பரிசிக்க வேண்டி, பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் அவனின் விரல்கள், மென்மையாய் அவளின் பிம்பத்தை வருடினான்.

அவனின் இந்த செயல்கள், பாவையை பேச்சின்றி, பொருளின்றி, ஒரு மோகன ராகத்தை மீட்ட, மேலும் மேலும் அதில் சிக்குண்டாள்.

நங்கையின் இந்த நிலையை பார்த்ததும், அவனின் மனமோ பெருவுகைக் கொண்டது. இதைத்தானே, அவளிடம் அவன் எதிர்பார்த்தது… பெண் தன்னை தேடி, அதை அவள் உணர்ந்து, இப்படி அவனிடம், அவனிற்கான மொழியறியா  பார்வையையுடன் கூடிய தனக்கென பிரத்யேகமான நேசங்களுடன். அதை பெற்றுவிட்டதில் கணவன் கொஞ்சம் தன்னை கர்வமாகவே உணர்ந்தான்.

அதில் இன்னுமின்னும் அவளின் மேல் காதல் ஊற்றாய் பெருகியது.

அவனின் இந்த மௌனம், வஞ்சியை மேலும் சோதிக்க, அவளாகவே “ஏன் எனக்கு இன்னைக்கு புல்லா கால் பண்ணவே இல்ல… நான் போட்டாலும் எடுக்கல…”

அவனோ பூரிப்புடன், “இந்த மாமனை அவ்வளோ தேடுனியாடி பொண்டாட்டி…”

இதுக்கெல்லாம் சேர்த்து, நான் அங்க வந்ததும் மொத்தமா கவனிச்சிக்குறேன் என்றான் உல்லாசத்துடன்.

அவளுக்கே அவளின் மாற்றம் முற்றிலும் விந்தையே… இவனை இந்த அளவிற்கு தேடக்கூடும் என்று அவளும் நினைக்கவில்லை.

இனி அவனுடன் தான் என்ற பிறகு கூட, அவளிடம் இப்படி ஒரு பிடித்தம் அவன்மீது ஏற்படக்கூடும் என்று எண்ணவில்லை. ஆனால் அவனுடன் இருந்துவிட்டு,இப்போது அவனில்லாமல் தன்னால் இருக்கமுடியும் என்று தோன்றக்கூடவில்லை. அவளே அவனாகிப்போனாள், இந்த பிரிவில் அதை உணர்ந்துகொண்டாள் பாவை.

அவளின் எண்ணங்களுடன், காதலாய் அவனை பார்க்க,

“மது… கொல்லுறடி…” என்று காதலாய் சொல்ல,

அவளின் அகமுன், முகமும் அவனின் காதலை உள்வாங்கி அவனிற்கு இணையாக பிரதிபலித்தது.

அதற்கடுத்து வந்த நாட்கள், இருவருக்கும் இதமாக, சின்ன சின்ன சேட்டைகளுடன், நிறைய நிறைய காதலுடன் கழிந்தது.

இதற்கிடையில் மது, “நீ எப்போ வருவ?… போயி ஒரு மாசம் ஆக போது தானே?…”

“அய்யயோ கேட்டுட்டாளே…” என்ற மைண்ட்வாய்ஸ் அவனின் உள்ளே அலற,

அவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதாய் பார்த்து, “உன்னை தான் கேக்குறேன் ஈஸ்வர்…” என்று கொஞ்சம் கோவமாக கேட்க,

“ரைட்டு… மலையேறிட்டா  மங்கம்மா மதுரவாணி…” என்று நினைத்துக்கொண்டே,

“இன்னும் ரெண்டு மாசம் எக்ஸ்டெண்ட் ஆகியிருக்கு மது…” என்று அவளை பார்த்து சொல்ல,

அவனை முறைத்துவிட்டு, வீடியோ கால்லை கட் செய்தாள்.

“நல்லாதானேடா போய்ட்டு இருந்தது… எனக்குன்னே வருவாங்க போல…” என்று திட்டிக்கொண்டே,

அவளிற்கு மறுபடியும் போட, அங்கு மதுவோ கோவத்தில் அவனின் கால் அனைத்தையும் கட் பண்ணினாள்.

ஒரு சிலபல நேரம் சமாதானத்திற்கு பிறகு, ஒருவழியாக அவளை மலையிறக்கி வீடியோ கால் வரேன் என்று அவன் சொல்ல,

“நீ வீடியோ கால் வந்தா, நான் பேச மாட்டேன்… எக்ஸ்டெண்ட் பண்ணுனதை என்கிட்ட சொல்லல தானே, நான் கேட்டு நீ என்கிட்ட சொல்லுற…”

“அப்போ உனக்கு என்னைய பாக்கணும்னு தோணவே இல்லல… நான் தான் உன்னைய எப்போ பாக்கலாம்னு தவிச்சிட்டு இருக்கேன்…” என்று இன்னும் பேச,

“மது… என்னடி… உனக்கே நீ பேசுறது அடுக்குதா…”

“வேலைடி…”

“எல்லாம் அடுக்கும்… இனிமே உன்கிட்ட எப்போ வரேன்னு கேக்கவே மாட்டேன்…”

“நீ இன்னும் எவ்வளவு நாளு வேணும்னாலும், உன் வேலையையே கட்டிட்டு அழு…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

அதன்பிறகு, ஆடியோ காலில் மட்டுமே. அவளிடம் கெஞ்சாத குறையாக கேட்டும் அவளின் முகத்தை காட்ட மறுத்துவிட்டாள்.

அதற்கடுத்து அவனின் வேலையை துரிதப்படுத்தி, அவளிற்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்று, அவளின் முகம் காட்டும் பாவனையை பார்க்கவேண்டி ஆவலாக, காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான்.

கதவை திறந்து, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உள்ளே செல்ல, அவனுக்கு சப்பென்று ஆனது.

“மாமன் பொண்ணே உன் முகத்தை பாத்தே நாளாச்சே…. உன் மச்சான் தானே உன் முகத்தை பாக்காம ஏங்கிருக்கேனே…” என்று பாடிக்கொண்டே அவளின் முன் வந்து நிற்க,

“ம்க்கும்… பாட்டை ஒழுங்கா பாடு…” என்று சொல்லி முகத்தை காட்டாமல் திரும்பி நிற்க,

“பொண்டாட்டி… மூஞ்சியையே காமிக்க மாட்டுறா… இதுல பாட்டுல உள்ளதுபோல, நான் உன் மச்சத்தையெல்லாம் எப்போ பாக்குறது… அப்படியே காட்டிட்டாலும்…”

“ச்சீ… பேச்சை பாரு…” என்று திரும்பி தன் கைக்கொண்டு அவனின் வாயை பொத்தினாள்.

“அடியேய்… பொண்டாட்டி, இப்படி பொத்தலாமா… பெரிய கொலைக்குத்தம் பண்ணிருக்க நீ…” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையை சடுதியில் அவளின் இதழோடு இதழ் சேர்ந்தான்.

மங்கையின் ஒத்துழைப்பில், மன்னவன் அவளின் மேல் இன்னும் பித்தாக, ஆடவனின் கைகள், பாவையை அளவெடுக்கும் வேலை செய்ய, அவனின் விரல்களின் மாயத்தில் மங்கையும் மயங்கி நிற்க, அப்போது தான் கண்டுகொண்டான், மங்கை சேலையில் இருந்ததை.

மனைவியை இன்னுமின்னும் இறுக்கி அணைத்துப்பிடித்தவன், அவளின் காதருகில், “மது கொல்லுறடி… சேலையெல்லாம் கட்டி அசத்துற…”

அவளும் அவனின் பிடியிலேயே, “உனக்கு தான் சேலை கட்டுனா பிடிக்குமே…”

“ம்ம்… உனக்கு இந்த விமல் சொல்லிட்டானா? … அந்த எட்டப்பனுக்கு இருக்கு… ரேகாவை விட்டு வச்சி செய்ய சொல்லுறேன்…”

“உன்னோட எக்ஸ்ப்ரெஷனை பாக்குறதுக்காக, நான் உனக்கே சொல்லாம வந்தா, இவன் உங்கிட்ட சொல்லி, என்னை கடுப்பேத்திட்டான்…”

மது, “ஹா ஹா… எப்படி உனக்கு ஷாக் குடுத்தேனா…”

“இது ஷாக்கை விட மேல டி… சும்மா கும்முன்னு சேலையெல்லாம் கட்டிக்கிட்டு, மயக்குறடி…”

“சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு…” என்று அவளின் வாசத்தை பிடித்துக்கொண்டே பாட,

“யப்பா… போதை ஏத்துற டி…” என்று மேலும் அவளில் கிறங்க,

அவனின் இந்த செய்கையில், பெண்ணவள் நெளிய,

அவனோ மயக்கத்ததுடன், அவள் இதழை மீண்டும் தீண்ட, இப்போது அவனின் அலைபேசி அழைத்தது.

“எவன்டா இந்த கரடி…” என்று திட்டிக்கொண்டே போனை எடுக்க, அதில் அழைத்தது அவனின்  தந்தை.

“சொல்லுங்க ப்பா…” என்று அவன் பேச ஆரம்பிக்க,

அவனிடமிருந்து நழுவி செல்ல, விடாது இறுக்கி கொண்டே தந்தையுடன் பேசினான்.

போனை வைத்ததும், “அந்த கனிமொழிக்கு நிச்சயம் பண்றங்களாம்…” என்று சொல்லி அவளை பார்க்க,

“நல்ல விஷயம் தான்… எதுக்கு என்னைய இப்படி பாக்குற…”

அவளின் இந்த கேள்வியில், மனது அவளிடம் வம்பு பண்ண சொன்னாலும், அவனின் அறிவோ, வாயை அடக்க சொன்னது. அறிவிற்கு செவி சாய்த்து தன் எண்ணத்தை விட்டு,

“மனோகர் மாமா போன் பண்ணி, நம்மளை இன்வைட் பண்ணுறேன்னு சொன்னாங்களாம்…”

“சரி… போய்ட்டு வரலாம்…” என்று முடித்தாள்.

“எனக்காக சொல்ல வேணாம் மது… உனக்கு இஷ்டமில்லன்னா, நாம போக வேணாம்…”

“ச்சச்ச… அப்படிலாம் ஒன்னும் இல்ல ப்பா… அந்த பொண்ணுக்கும் ஒரு நல்ல  வாழ்க்கை அமைஞ்சா, எனக்கு ஹாப்பி தான்.”

“நீ இப்படி எனக்காக பாக்குறது, எனக்கு இன்னும் உன்னை பிடிக்க வைக்குற…”

“இந்த மாமனுக்கு எப்பவும் அப்படி தான் டி… என்னை உன் முந்தானில, முடிஞ்சி வச்சிருக்க…” என்று புடையில் இருந்த அவளிடம் சில்மிஷம் செய்ய,

“ஈஸ்வர் ப்ளீஸ்…” என்று அவனின் அழும்பலில் சொல்ல,

“அதே ப்ளீஸ் டி நானும்…” என்று அவன் மேலும் இழைய,

ஒருவழியாக, அவனின் செயலை தடுத்து, “நாம பேசிட்டு இருந்தோம்… ஊருக்கு போறதை பத்தி…” என சொல்ல,

“பச்… என்னடி நீ…” என்று சலித்து,

“உனக்கு ஒகேன்னு சொல்லுற… பட் அங்க போனா, லீலா வீட்டுக்கு போகணும்… அவ இப்போ கொஞ்சம் அடங்கி தான் இருக்கா… ஏன்னா, அவளுக்கு வேலை செய்யுறதுக்கு மட்டும் தான் நாழி இருக்குனு, அப்பா சொன்னாங்க…”

“இருந்தாலும், உன்னைய பாத்தா, எப்படி நடந்துப்பான்னு தெரியல… அதுக்கு தான் சொல்லுறேன்…”

“விடு ஈஸ்வர்… எல்லாத்தையும் பாத்து தானே ஆகணும்… இப்போ நீ இருக்கியே எனக்கு…”

“பாருடா… பொண்டாட்டி பேச்சல்லாம் தூள் கிளப்புது…” என்று சிரிப்புடன் சொல்லி,

“இருந்தாலும் நீ யோசிச்சி சொல்லு…”

“போய்ட்டு வரலாம் ஈஸ்வர்… எனக்கொன்னும் பிரச்சனை இல்ல…”

“அப்போ சரி… போய்ட்டு வரலாம்…”

“சரி விடு என்னைய… நமக்கு குடிக்க எதுவாது எடுத்து வரேன்…”

“அதுலாம் அப்பறம் குடிச்சிக்கலாம்…”

“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நோ பேச்சு…” என்று சொல்லிக்கொண்டே அவளை ரூமிற்க்கு தள்ளிக்கொண்டு சென்றான்.

அவளின் வெக்கங்களையெல்லாம் கொள்ளையடித்து, கொஞ்சல்களும், மிஞ்சல்களும் இசைக்க, மோகமும், தாபமும் தாளமிட, இருவருக்கும் இன்றியமையாத, இனிமை சேர்த்த முதல் கூடல்.

“மாமன் காதல், எப்படி இருந்ததுன்னு கொஞ்சம் அம்மணி சொல்லுறது…” என்று தன் மேல் படுத்திருக்கும் அங்கையிடம் கேட்க,

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, ” நான் எப்படி உன்னோட வாழப்போறேன்னு, ரொம்ப யோசிச்சேன்… இப்போ ஐயம் இன்கம்ப்ளீட் வித்அவுட் யு…” என்று சொல்லி அவனின் நெஞ்சில் முத்தம் வைத்தாள்.

அவளின் பேச்சில், கணவனின் அகமும், முகமும் மலர, “கொஞ்சம் என் நினைப்பு வரணும்ன்னு யோசிச்சி தான், உன்னை கொஞ்சம் கண்டுக்காத மாறி இருந்தேன்… அப்பறம் அன்னைக்கு புல்லா கால் பண்ணாம, லேட்டா கூப்பிட்டது எல்லாம்…”

“ஆனா நீ இவ்வளவு தேடுவன்னு சாத்தியமா நான் நினைக்கலைடி…” என்று சொல்லி, சிலபல முத்தங்களை வாரிக்குடுத்து மகிழ்ந்தான்

“இந்த பிரிவாலை தான், கண்டிப்பா என்னில் உன்னை உணர்ந்தேன்…  நீ இப்படி பண்ணுனதால தான், நான் இன்னுமின்னும் உங்கிட்ட நெருங்கினேன்னு கூட சொல்லலாம்… அதுனால நான் ஹாப்பி தான்…|”

“நீ மட்டும் திரும்பி என்னை தேடி வரலைனா, கண்டிப்பா இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்காது…” என்று அவள் ஆத்மார்த்தமாக சொல்லி அவனை காதலுடன் பார்க்க,

“அதே தான்டி எனக்கும்… இந்த பாவையோட பார்வை இப்படி என்னை பார்த்துட்டே இருக்கனும் எப்போதும்…” என்று சொல்லி அவளின் கண்ணில் மென்மையாக முத்தம் வைத்தான்.

இவனின் உறவே வேண்டாமென்று வீம்பாக இருந்தவள், மன்னவனின் காட்டாயத்தில் மீண்டும் உறவாகி, காதலாகி, அவனே வாழ்க்கையாகி, பாவையின் நெஞ்சத்தில் நீங்காது இடம்பிடித்தான் பிரகதீஸ்வரன்.

சுபம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!