Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை (எபிலாக்)

தேவை… பாவை பார்வை (எபிலாக்)

சில வருடங்களுக்குப் பிறகு,

ஞாயிறுக்கிழமை காலை  கிட்சேனுள் சமையலில் ஈடுபட்டிருந்த மதுவோ, குழந்தையின் அழுகை சத்தத்தில், “ஈஸ்வர்… அவனை தூக்கு…” என்று உள்ளிருந்து குரல் குடுக்க,

பதிலேதும் வராமல், மகனின் அழுகை சத்தம் இன்னும் வேகமா வரவே, “போச்சுடா… நானே போயிருக்கணும்…” என்று தானே சொல்லிக்கொண்டே  அடுப்பை அணைத்துவிட்டு சடுதியில் அறைக்கு செல்ல,



Advertisement

அங்கே இரண்டு வயது குழந்தையுடன் மல்லுக்கு நின்றான் தகப்பன்.

“டேய்… உங்க அம்மா தான் என்னைய தூக்க சொன்னா…”

“ஒழுங்கா வா… அது என்ன அம்மா வரணும்னு அழுற…”

Advertisement

“அதும் கண்ணுல தண்ணியே வரல… என்னமா நடிக்குற…”

Advertisement

அந்த வாண்டோ, “ம்ம்ம்… ம்ம்மா…” என்று எழாமல் அவனின் கையை தட்டி விட்டு, இன்னும் வேகமா அழுகையை கூட்ட,

அவனின் அழுகையில் “இளன்… இளா குட்டி…” என்று அழைத்துக்கொண்டு பெட்டின் அருகில் வந்தாள் மது.

பாய்ந்து சென்று, அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு, அவளுக்கு முத்தத்தை இரு கன்னத்திலும் பதித்து, தந்தையை பார்த்து மீண்டும் தாயிற்கு முத்தமிட்டான்.

Advertisement

தகப்பன் அவனை முறைக்க, மகனோ கண்டுகொள்ளவில்லை.

தாயும் பதிலுக்கு முத்தம் வைத்து, “எதுக்கு அழுதாங்க குட்டி…” என்று கேக்க,

“அப்பா தூக்கி…” என்று அதற்கு தெரிந்தது போல் பதில் சொல்ல,

“அம்மா, தங்கத்துக்கு மம்மம் செஞ்சிட்டு இருந்தேன்… அதுனால தான் அப்பா உன்னைய தூக்க வந்தாங்க…” என்று அவனுக்கு விளக்கம் கொடுக்க,

அவனோ, பதிலுக்கு வேகமாக “வேணாம்” என்று மண்டையை இடவலமாக ஆட்ட,

இதுங்க ரெண்டும் சேர்ந்தா, நம்ம இருக்கோம் இல்லையானு கூட தெரியாது என்று கடுப்பாக நினைத்துக் கொண்டே, இவர்கள் சம்பாஷணையை பார்த்து நின்ற பிரகதீஷ்ஷோ, மகனின் பதிலில், “போடா அம்மாக்கோண்டு, அப்பா வெள்ளாடலாம்ன்னு என்கிட்ட வா… உன்னை அப்பறம் பேசிக்குறேன்…” என்று அவனுக்கு பழிப்பு காமிக்க,

சிறுவனோ, தாயின் கழுத்தை மேலும் இறுக்கி கொண்டான்.

இளனிற்கு, தூங்கும் போதும், எழும் போதும், தாய் அருகில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நாள் இப்படி அழுகையுடன் தான் அவனுக்கு தொடங்கும்.

எப்படி அவனிற்கு எடுத்து சொன்னாலும், அவனிடம் அது எடுபடாது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவனே நார்மல் ஆகிடுவான். ஆனால், தகப்பனுக்கும் மகனுக்கும் இந்த விஷயத்தில் எப்போதும் வாக்கு வாதம் வலுக்கும்.

ஒருசில நேரம், பிரகதீஷ் மனைவியை பிடித்துவைத்து, வேண்டுமென்றே மகனை சீண்டுவான்.

பையன்கிட்ட போயி இப்படி பண்ணுற என்று மனைவி கேள்விகேட்டால், “அவனுக்கு தான் நீன்னு, அவன் ரொம்ப பண்ணுறான்… அவனை இப்படி கேக்குறியா நீ…” என்று பதிலுக்கு கேட்டு வைப்பான்.

அதற்கடுத்து பேசினால், ஏடாகூடமாக பதில் சொல்லுவான் கணவன் என்று தெரிந்து, அவளின் வாய் தானாகவே மூடிவிடும்.

மகனில் செயலில், “ஆமாம்டா… இன்னும் நல்லா அவளை பிடிச்சுக்கோ…”

“இப்படி நீயே பிடிச்சிட்டு இருந்தேனா, அப்பறம் உனக்கு எப்படி நான், பேபி ரெடி பண்ணி தர்றது…”

அவனின் பேச்சை கேட்ட மதுவோ, மகனுக்கு முன்பு ஒன்றும் அவனை கடிய முடியாமல், எக்கச்சக்கமாக முறைத்து வைத்தாள்.

வாக்குவாதமோ, சண்டையோ, திட்டோ எதுவும் மகனின் முன்னிலையில் நடைபெறாது.

அவளின் முறைப்பை பார்த்து, “என்னடி பொண்டாட்டி முறைப்பு?…” என்று ஒரு மார்க்கமாக கேட்க,

அவளின் முறைப்புக்கு, மன்னவன் என்ன பண்ணுவான் என்று தெரிந்தும்

அவள் பதிலளிக்காமல், முறைப்புடனே, “ஈஸ்வர்… என்ன பேசுற பையனுக்கு முன்ன…” என்று லேசாக கடிய,

அவளின் முறைப்பையும், கேள்வியையும் பொருட்படுத்தாமல், “இளா குட்டிக்கு பார்பி பேபி வேணுமா, வேணாமா?…” என்று மகனிடம் கேள்வியெழுப்ப,

குட்டியோ, பார்பி என்றவுடன் தந்தையிடம் வேகமா தாவ,

அவனை தூக்கிக்கொண்டு, “ம்… சொல்லுங்க…”

“வேணும்… வேணும்…” என்று பலமாக மண்டையை ஆட்டி சொல்ல,

“ஒகே… ரெடி பண்ணலாம்…”

“அப்போ நீ மட்டும் அம்மாகூட ஓட்டிட்டு அலையக்கூடாது… அப்பாவும் அம்மாகூட …” என்று என்னவோ சொல்ல வர,

“ஈஸ்வர்…” என்று பல்லைக்கடித்தாள் மது.

“ஈஸ்வர் தான்… உன்னோட ஈஸ்வர் தான்…” என்று இலகுவாக சொல்லி கண்ணடித்து,

“உனக்கு பார்பி வந்தா… அம்மா வந்து அப்பாக்கு தான்…” என்று அவன் மகனிடம் டீல் பேச,

இவர்கள் பேச்சு போகும் திக்கை அறிந்து, “இளன்… அம்மா உனக்கு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் ஹால்ல… என்னனு பாருங்க…” என்று சொல்லி அவனை அனுப்ப,

சிறுவனோ, சப்ரைஸ் என்று சொல்லி கொண்டே தந்தையிடமிருந்து குதித்திறங்கி ஹாலிற்கு ஓடினான்.

கணவனின் அருகில் வந்து, “அறிவே இல்ல ஈஸ்வர்… குழந்தை முன்னாடி, நீ என்ன பேசுற பாரு…” என்று முறைப்புடன் கேட்க,

“இந்த முறைப்புக்கெல்லாம், நைட் பதில் தரேன்…” என்று உல்லாசமாக சொல்லிவிட்டு,

“என்னத்த பேசுனேன்… உண்மையை தானே சொல்லுறேன்…”

“அவன் தான் பார்பி வேணும்னு கேட்டான்…”

மது, “அதுக்கு…”

“ஆமா… அவனுக்கு ஒரு உண்மையான பார்பி ரெடி பண்ணிகுடுத்தா… அவன் அதை வச்சிப்பான்… நான் உன்னை வச்சிப்பேன்…” என்று அவளை அணைத்து பிடிக்க,

அவனின் வாயில் அடித்து, “எவ்வளோ வாய் பேசுற… வச்சிப்பேன்னு சொல்லுற…” என்று இன்னும் அடிக்க,

பின்ன என்னடி பண்ண நான்… அவன் வரவர அம்மான்னு உன் முந்தானையை புடிச்சிட்டு சுத்துறான்… நீயும் அவன் பின்னாடி தான் போற…”

“அப்போ நான் என்ன பண்ணுறது… நான் பாவமில்லையா சொல்லு…” என்று கேட்டுக்கொண்டே அவளின் கழுத்தில் வாசம் பிடிக்க,

“ஈஸ்வர் காலைலயே என்ன பண்ணுற…” என்று அவளின் குரல் காற்றாகி வர,

“அம்ம்மா…” என்று சரியாய் இளன் உள்ளே வந்தான்.

“வந்துட்டான்டா… அம்மா நொம்மான்னு…” என்று கடுப்பாக சொல்லிக்கொண்டே,

உள்ளே வந்த மகனை தூக்கி, “உங்க அம்மா இங்க தான் இருக்கா…” என்று சொல்லி அவனை தூக்கிப்போட்டு பிடிக்க, மகனோ அவனின் விளையாட்டில் குலுங்கி சிரித்தான்.

இவர்களின் விளையாட்டை கொஞ்ச நேரம் ரசித்து பார்த்துவிட்டு, தன் வேளையில் ஈடுபாட்டாள் மதுரவாணி.

—-

மதிய உணவு முடிந்து, மகனை தூங்க வைத்துவிட்டு, ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த கணவனிற்கு அருகில் சென்று அமர,

அவனோ வாகாக அவளில் மடியில் படுத்துக்கொண்டு, “என்ன உன் தவப்புதல்வன் தூங்கிட்டானா?… பார்பி ரெடி பண்ணலாமா?…”

“அடிவாங்க போற ஈஸ்வர்… கொஞ்சம் அமைதியா இரு…”

“வரவர அவன்கூட நீ மல்லுக்கு நின்னுட்டு இருக்க…”

“போடி… நீ அவனுக்கே தான் பேசுற…” என்று முறுக்கினான்.

சிறிது நேரம் அவர்களின் சின்ன செல்ல ஊடல்களுடன் கழிய, “சரி… ஒரு பாட்டு படலாமே…”

“ஒன்னும் வேணாம் சாமி… நீ எதையாவது பாட சொல்லி, அது அடுத்து என்ன ஆகும்னு எனக்கு நல்லாவே தெரியும்…” என அவள் உஷாராக சொல்ல,

“உஷாரு…”

“அதே அதே…”

“பொண்டாட்டி…” என்று கொஞ்சலாக அவனின் குரல் வர,

“ம்ம்…”

“பொண்டாட்டி…” என இம்முறை கிறக்கமாக ஒலிக்க

அவன் எங்கு வருகிறான் என்று புரிந்து, பேச்சை மாற்றும் விதமாக,

“நீ ரொம்ப பொண்டாட்டி தாசன் ஆகிட்டியாம்…” என்று அவள் சொல்ல,

அவனும் அலட்டிக்கொள்ளாமல், “பொண்டாட்டி இருந்தா, அப்படி தானே இருக்கணும்…” என்று பதில் தந்துவிட்டு,

“இப்போ இது ரொம்ப முக்கியமாடி… அவன் தூங்குற நேரம் தான், நான் உங்கிட்ட இருக்க முடியுது…” என்று கடிந்து, அவளின் முகத்தை பற்றி இழுக்க,

அவள் சுதாரிப்பதற்குள் அவளின் இதழை தன் இதழோடு பொருத்தினான்.

சிறிது நேரம் சென்று, இதழ் பிரிய, அவனின் வாயில் அடித்தாள்.

அவன் மறுபடியும், “இப்படி அடிக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல…” என்று சொல்லிக்கொண்டே அவளை இழுக்க,

அவனிடம் மாட்டாமல், கழுத்தை பின்னுக்கு இழுக்க, அப்படியும் விடாது, முத்தமிட்ட பிறகே ஓய்ந்தான்.

“எப்படி…” என்று கண்ணடித்து கேட்க வேறு செய்ய,

அவள் செல்லமாக அடித்தாள்.

“என்னடி… நானே சண்டே தான் வீட்டுல இருக்கேன்…”

“அதுவும் இவன் இல்லாம உன்னைய எங்கயாவது தனியா பிடிக்க முடியுதா…”

“அப்போவும் இப்படி நீ பண்ணலாமா சொல்லு…” என்று அவளிடமே நியாயம் கேக்க,

அவனின் பேச்சில், வாயில் கைவைக்காத குறையாக பார்க்க,

“ஆமா, இவ்வளோ நாள் வரைக்கும் ஒன்னு எங்க அம்மா இருப்பாங்க இல்லனா அத்தை யாராவது மாத்தி மாத்தி இருந்துட்டே இருந்தாங்க…”

“இப்போதான் என்னவோ மனசு வந்து, ஒரு மாசம் செண்டு வரேன்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிருக்காங்க…”

“அவங்களுக்கே கூட என் நிலைமை புரியுது, உனக்கு புரியாத மாறி நடிக்குற பாத்தியா…” என்று இன்னும் பேச செய்ய,

பட்பட்டென்று அடி வைத்தாள் அவனிற்கு.

“எவ்வளோ பொய் பேசுற ஈஸ்வர்… அவ்வா…”

“நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது பாரு…”

“நான் என்ன பண்ணுனேன்னு எங்க சொல்லு பாக்கும்…” என்று அவன் குறும்பு பார்வையுடன் கேக்க,

அங்கே வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

“போச்சுடா… இந்த ஒரு நாள் கூட பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்ண விடமாட்டாங்க போல…”

“இன்னைக்கு பாட்டு கிளாஸ் லீவு தானே?…” என்று அவளிடம் கேட்க,

குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டு நிற்க போறேன் என்று கணவனிடம் சொல்ல, அவனின் விருப்பமின்மையை தெரிவிக்க, ஆனாலும் குழந்தை வளர்ந்த பிறகு பார்த்துக்கொள்ளாமலாம் மென்று அவள் தீர்மானத்துடன் வேலைக்கு பேப்பர் போட்டுவிட்டாள்.

பின்பு பிரகதீஷ் அவளுக்கென்று யோசித்து, அமைத்துக்கொடுத்தது தான் இந்த பாட்டு கிளாஸ்.

மது சின்ன வயதில் பாட்டு கிளாஸ் சென்று முறையாக கற்றுக்கொண்டவள். அவளுக்கு பிடித்ததும் கூட, அதனால் கணவன் சொல்லிய யோசனை பிடித்துவிட, வீட்டிலேயே மாலை ஒரு எட்டு குழந்தைகளுக்கு பாட்டு கற்று கொடுக்கிறாள்.

“இன்னைக்கு சண்டே லீவு தான்…” என்று மனைவி பதிலளித்துக் கொண்டே சென்று கதவை திறக்க, அங்கே விமல் மற்றும் ரேகா வந்திருந்தனர்.

அவர்களை பார்த்தவுடன், சந்தோசமாக “வாங்க வாங்க…” என்று மது வரவேற்க,

“வந்தோம் வந்தோம்…” என்று உள்ளே வந்தான் விமல்.

பின்பு தோழியுடன் நலனை விசாரித்துவிட்டு பெண்கள் இருவரும் பின்னே வந்தனர்.

“வாடா நல்லவனே… எங்க இந்த பக்கம்…”

“உனக்கு சொன்னேன்லடா… என் மாமியார் வீட்டுக்கு வந்தா, இங்க வந்துட்டு போறேன்னு… அப்பறம் என்ன கேள்வி கேக்குற…”

“ரொம்ப சூடா இருக்க மாறி இருக்கு… என்ன விஷயம்?…”

“எல்லாம் என் மாமனார் தான்… எப்பவும் போல கடுப்பு…” என்று சலிப்பாக சொன்னான் விமல்.

ரேகாவை விமலிற்கு கொடுக்க, ரேகாவின் தந்தை ஒத்துக்கொள்ளவே இல்லை. இரண்டு வருடம் போராடி இப்போ நான்கு மாதத்திற்கு முன்பு தான், இவர்களுக்கு திருமணம் நடந்தது.

“சரி விடுடா… இதுலாம் இருக்குறது தானே…” என்று பிரகதீஷ் கொஞ்சம் சத்தமாக சொல்ல,

இவன் எதுக்கு இப்போ இப்படி பேசுறான் என்ற ரீதியில் விமல் அவனை ஏறிட,

“அப்பறம் ரேகா… வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க…” என்று விமலிடம் பேசாமல், ரேகாவிடம் கேக்க,

“நல்லா இருகாங்க லீட்… இந்த விம் தான் இன்னும் மாப்பிளை முறுக்கு காமிச்சிட்டு இருக்கான்…” என்று அவனை பார்த்து கடுப்பாக பிரகதீஷ்க்கு பதிலளித்தாள்.

“என்ன ரேகா நீ… அதுக்கு அவனை அப்படியே வா விடுவ…”

பிரகதீஷின் பேச்சில், பீதியாகி “அடேய்… நல்லவனே…” என்று இடையில் வர,

அவன் சட்டை செய்யாமல், “பொண்ணோட அப்பாவெல்லாம் அப்படி தான் இருப்பாங்க… அதுக்காக இவன் உங்க அப்பா கிட்ட பேசலைனா… நாலு தட்டு தட்ட வேணாமா நீ…”

“நீ ரொம்ப தான் அவனுக்காக பாக்குற… நீ இப்படி இருக்குறதுனால தான் அவன் இன்னும் முறுக்கிட்டு திரியுறான்…” என்று மேலும் பேச வர,

அதற்குள் பாய்ந்து வந்து அவனின் கையை பிடித்துக்கொண்டு, “அய்யா… ராசா… ஏற்கனவே இங்க அப்படி தான் போய்ட்டு இருக்கு…”

“நீங்க இன்னும் ஏத்திவிட்டு, கும்மி அடிச்சிடாதீங்க… தெய்வமே…”

பிரகதீஷ் விடாமல், “ரேகா இங்க பாரு… உனக்கு முன்னாலே இவன் உன்னைய என்ன பேசுறானு…” என்று போட்டுக்கொடுக்க,

ரேகாவோ அவனை கோவமாக பார்க்க,

மனைவியை பார்க்காமல் பார்த்து, தன்னை காப்பாற்றுமாறு நண்பியை பாவமாக பார்த்தான் விமல்.

“அங்க என்னடா மதுவை பாக்குற… நான் அவளை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சி இருந்தப்போ, நீ போட்டு குடுத்த தானே…”

இதை கேட்டவுடன், “அடேய்… நான் தெரியாம எதோ ஒரு தடவை தான்டா பண்ணுனேன்…”

“ஆனா நீ… ஒவ்வொரு தடவையும் எனக்கு இதை சொல்லி காமிச்சே, ஆப்படிக்குறடா எரும…” என்று சொல்லிக்கொண்டே அவனின் மேல் பாய்ந்தான்.

அதற்கடுத்து அவர்களின் நேரம் கலாட்டாக்களுடன் சென்றது.

அன்றைய பொழுதின் முடிவில், மகனை கட்டிலின் ஒரு மூலையில் படுக்க வைத்து விட்டு, மனைவியை அள்ளிக்கொண்டு ஹாலில் போட்டு வைத்திருந்த குட்டி பெட்டில் அவளைவிட்டு, அவளின் மாடி சாய்ந்தான்.

“எதுக்கு இங்க ஈஸ்வர்…” அவனின் தலையை கோதிக்கொண்டே கேட்க,

“இப்போ நாம மட்டும் தானே… அதான் இங்க பிரீ ஆஹ்…” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையில் முத்தம் வைக்க,

“கேடி… எல்லாம் பிளான் தான் அப்போ…”

“அப்பறம் பார்பி வேணுமே… என் பையனுக்கு…”

“சரியான கேடி ஈஸ்வர்…”

“ப்ளீஸ் ஈஸ்வர் சொல்லு…” என்று இப்போது அவளை வளைக்க,

“கொஞ்சம் பேசிட்டு இருக்கலாமே… ப்ளீஸ்…” என்று அவனுக்கு இணங்கிக்கொண்டே சொல்ல,

“நோ நோ…நோ வ்வே… இது பார்பி ரெடி பண்ணுற நேரம் மட்டும் தான்…”

“நான் உன்கிட்ட நைட் சாப்பிடும் போதே சொல்லிட்டேன் தானே…”

“நான் ஒத்துக்கமாட்டேன்…”

“இந்த ப்ளீஸ் எனக்கு வேணாம்… ப்ளீஸ் ஈஸ்வர் மட்டும் தான்…” என்று அவளை தன்னில் மேல் போட்டுகொண்டு, அவளின் மூக்கை கடிக்க,

“ஹே… வலிக்குது…”

“முறைச்சல்ல… அப்போ பனிஷ்மென்ட் தரனும்ல…”

செல்ல சண்டை அங்கு அரங்கேற,

“சயன நேரம்… மன்மத ராகம்…” என்று அவன் பாடிக்கொண்டே, அவளின் இசை மீட்ட,

அவனின் செயலில் எப்போதும் போல் மயங்கி, “ஈஸ்வர் ப்ளீஸ்… ” என்று சொல்லி அவனுள் புதைய,

“நானே தான் டி… எங்க இன்னொரு முறை சொல்லு…” என்று கிறக்கமாக அவனின் குரல் ஒலிக்க,

அதில் இன்னும் அவனை இறுக்கி க்கொண்டு, “ப்ளீஸ் ஈஸ்வர்…” என்று அவனை பார்த்து காதலாகி சொல்ல,

அந்த பார்வையில் கட்டுண்டு விழுந்து, அவன் அவளின் வசமாகினான்.

இதே போல், இவர்கள் இருவரும் அவர்களுக்குண்டான காதலுடன் கூடிய  பார்வையோடு என்றுமே ஒன்றி வாழ்வார்கள்.

முற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!