Skip to content
Post Views: 3,996
தென்றல்- 1
மாலை நேர தென்றல் காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் சிட்டாய் பறந்து கொண்டிருக்க, தன்னுடைய கைப்பையினுள் அனைத்தும் சரியாய் எடுத்து வைத்கக் கொண்டிருந்தாள் இளந்தென்றல். அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை.
என்ன இளா கிளம்பியாச்சா உடன் பணிபுரியும் ஆசிரியை பவித்ரா கேட்டபடி உள்ளே வர
Advertisement
ஆமா பவி
எத்தனை நாள் லீவ் சொல்லியிருக்க
எதுக்கு?
Advertisement
எதுக்கா மலர் அக்கா வளைகாப்புக்கு
Advertisement
நான் போகல அப்புறம் எதுக்கு லீவு
என்ன உளர்ற இளா, மலர் அக்கா என்னையே அவ்வளவு தூரம் கூப்டிருக்காங்க.
உன்னோட பெஸ்ட் பிரண்ட் பத்தாததுக்கு உன் தாய்மாமாவோட மூத்த மருமகள், அப்புறம் உனக்கு
Advertisement
போதும் லிஸ்ட் நீளுது
இல்ல உன்ன ரொம்ப எதிர்பார்பாங்க தானடி.
ம்ம். ஆனா நாம் ஆசைப்பட்டா மட்டும் போதுமா பவி எனக்கு அங்க போகவே இஷ்டம் இல்ல
உங்க அம்மா என்ன சொன்னாங்க.
கண்டிப்பா போயே ஆகனும்னு சொன்னாங்க நான் லீவு இல்ல பெர்மிஷன் கிடைக்காது னு சொல்லிட்டேன்.
அடிப்பாவி
இளந்தென்றல் மேம் உங்கள பிரின்ஸ்பல் சார் கூப்டாங்க பியூன் கூறிவிட்டு செல்ல
இந்த நேரத்தில என்ன எதுக்கு இளா குழம்பி கேள்வியாய் நோக்க
உதட்டை பிதுக்கி தோளை குலுக்கினாள் பவி தனக்கு தெரியாது என்பதாய்.
சரி இரு பாத்திட்டு வந்திடுறேன்.
மே ஐ கம்மின் சார் பிரின்சிபல் அறை கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே செல்ல,
உள்ளே அமர்ந்திருத்த அன்னபூரணியை கண்டு பல்லை கடித்தாள் இளா இந்த அம்மாவ ,
வாங்க இளந்தென்றல் உங்களுக்கு இரண்டு நாள் லீவு வேணும்னு உங்க அம்மா கேட்டு வந்திருக்காங்க ஏதோ பேமிலி பங்க்ஷனாமே.
அவரிடம் எதையும் காண்பிக்க இயலாமல் புன்னகையுடன் ஆமா சார். ஆனா பசங்களுக்கு மாடல் எக்ஜாம் வருதேன்னு நான் தான் லீவு போடலனு சொல்லிட்டேன் அதான் தாயை பார்த்த படி கூற.
நோ பிராப்ளம் இளந்தென்றல், நீங்க வேலைக்கு ஜாயின் பண்ணினதிலிருந்து இந்த 10 மன்த்ல ஒரு 2,3 டேஸ் மட்டும் தான் லீவு போட்டிருக்கீங்க.
சோ நோ வொரீ அபௌட் தட். நிர்மலா மிஸ் வெச்சு மேனேஜ் பண்ணிக்கலாம். நீங்க உங்க போர்சன் எல்லாம் கவர் பண்ணியாச்சு தான.
எஸ் சார்
அப்ப ஓகே நீங்க கண்டிப்பா 2 டேஸ் லீவு எடுத்துக்கலாம் இளந்தென்றல்.
போங்க போய் நல்லா பங்ஷன் அட்டன் பண்ணிட்டு நீங்களும் கொஞ்சம் ரெபிரஷ் பண்ணிக்கோங்க.
நல்லா எனர்ஜிடிக்கா வந்து கிளாஸ் எடுக்கலாம். நம்மளுக்கும் சின்ன சின்ன சேஞ்சஸ் வேணும் இல்லை யா மா
ஓகே சார் அப்ப நான் இரண்டு நாள் லீவு எடுத்துக்கிறேன்.
ஓகே சார் தேங்ஸ் அப்ப நானும் கிளம்புறேன்
ஓகே பூரணி மேடம் பாக்கலாம்
நீ எதுக்கு மா இங்க வந்த நான் என்ன ஸ்கூல் பொண்ணா லீவு கேட்க அம்மாவ கூட்டிட்டு வர எல்லாரும் சிரிப்பாங்க.
என்னடி இது வம்பா இருக்கு. நீ தான் லீவு இல்ல பெர்மிஷன் இல்லனு சொன்ன, சரி நாம போய் கேட்டு பாக்கலாம்னு வந்தேன்.
இளாவின் பார்வையில் பூரணி அமைதியாகி விட
ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு எப்படி வந்த
அப்பா கூட
எதே?
ம்ம்… மண்டையை ஆட்டினார் பூரணி
அவரெங்க?
அதோ
அவர் கைகாட்டிய திசையில் கரஸ்பாண்டன்ட் மருதாசலத்டன் பேசிக்கொண்டே வந்தார் விஸ்வநாதன்.
எப்படி இருக்க இளா மா
நல்லா இருக்கேன் சார்
பாருடா உன் பொண்ணு பிடிவாதமா இங்க தான் வேலை பார்ப்பேன்னு சொல்லி சேர்ந்தவுடனே நான் அவ அங்கிள்ங்கிறது எல்லாம் மறந்து போச்சு அப்படிதான இளா.
சார் இது ஸ்கூல் இங்க உங்களோட மரியாதை ரொம்பவே முக்கியம், வீட்ல கண்டிப்பா நான் உங்க பெட் இளாகுட்டி தான் ஓகே
சரிதான் அந்த அளவுக்கு வளர்ந்துட்டீங்க ம்ம்
சரி விசு நான் கிளம்பறேன்.பங்ஷன்ல மீட் பண்ணலாம் கிளம்புறேன் பூரணி மா
சரிண்ணா
நாங்களும் கிளம்புறோம் நாளைக்கு பாக்கலாம்.
அவர் விடைபெற்று சென்றவுடன் என்னப்பா இதெல்லாம்
அம்மாடி இது எல்லாம் உங்கம்மாவோட இன்ஸ்ட்ரக்சன் அதை பாலோ பண்றது மட்டும் தான் நம்மோட வேலை.
அம்மாவை முறைக்க
சரிசரி நீ வீட்டுக்கு போய் பாசமா பாப்பயாம் இப்ப கிளம்பு.
எங்க
எங்கயா ?
பங்ஷனுக்கு
அம்மா விளையாடாத நான் வரல.
இளா ஆஆஆ
அம்மா பிளீஸ் அங்க எப்பிடி மா
இங்க பாரு இளாமா அங்க என்ன வேணா நடந்திருக்கட்டும். ஆனா நாளைக்கு மலருக்கு எவ்வளவு முக்கியமான நாள். எத்தனை வருசத்துக்கு அப்பறம் கன்சீவ் ஆயிருக்கா, புள்ளதாச்சிபுள்ள ஆசயை கண்டிப்பா நிறைவேத்தனும்,
வேற எதுக்கும் உன்ன நான் கம்பல் பண்ணல. அவங்க வீட்டுக்கு கூட போகல கோயில்லதான பங்ஷன். போறோம், பங்ஷன் பாக்குறோம், மலருக்கு கிஃப்ட் பண்ணிட்டு கிளம்புறோம் ஓகேவா
ம் .. மலர் அக்காக்காக என்றால் அரை மனதுடன்
ம்ம்,ஆமா மலர்க்காக
சரி என் திங்ஸ் எல்லாம் வீட்ல இருக்கு வண்டிய நிறுத்திட்டு திங்ஸ் எடுத்துட்டு கிளம்பலாம்
உன்னுதெல்லாம் நான் எடுத்துட்டு வந்துட்டேன் இப்பிடியே கிளம்புவோம்.
தன் தாயை ஒரு பார்வை பார்க்க
அதுக்கில்லடி நீ வீட்டுக்கு போய் மனசு மாறிட்டா அதான் ஒரு சேப்டிக்கு
அம்மாஆஆஆ பல்லை கடிக்க
நான் பவிகிட்ட சொல்லிட்டு வந்திடுறேன் என ஒடிவிட்டார்
அப்பாவை பார்க்க
விடுறாம்மா எப்பவாவது நம்ம இந்த நாளை கடந்து தான் ஆகனும். அது இப்பனு நினைச்சுக்குவோம். நம்ள மீறி எதுவும் நடக்காது.
அப்படியப்பா அர்த்தமாய் கேட்க
நம்புவோம் என அவர் கூறிய விதத்தில் இளாவும் புன்னகைக்க
ம் என் பொண்ணு எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும். ……………………………
பவி நீயும் சீக்கிரம் வந்திடு நான் வெயிட் பண்ணுவேன்
ம். Ok இளா,
அன்னபூரணி, இளந்தென்றல், விஸ்வநாதன் அனைவரும் காரில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணம்
சோலைப் பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்………
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்………
error: Content is protected !!