Skip to content
Post Views: 1,943
தென்றல் -2
பச்சை பசேல் என எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளித்தது பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர்ங்கிற கிராமம். கிராமம்னும் சொல்ல முடியாது வளர்ந்து வரும் சின்ன நகரம்.
ஊர்ல ரொம்ப பெரிய வீடு ஆறுச்சாமி ஐயாவோடது. பழைய காலத்து வீடு ஆனா உள்ளுக்குள்ள இன்னிக்கு உண்டான மார்டன் டிரென்ட்ஸ் எல்லாம் இருக்கும். அவங்க குடும்பம் தான் வழி வழியா அந்த ஊர்ல பெரிய தலைக்கட்டு. அதாவது அந்த ஊருக்கு என்ன வேணும்னாலும், ஊர்ல இருக்கிறவங்களுக்கு என்ன வேணும்னாலும் இவங்க குடும்பம் தான் முன்னாடி நிக்கும். ஆறுச்சாமி ஐயா இறந்து ஒரு வருஷம் ஆச்சு. அவரோட பையன் செந்தில்நாதன் விவசாயம் தான் எல்லாமே னு வாழ்ற மனுஷன்.
அப்ப ஊருக்கு வேணுங்கறத யார் செய்வானு யோசிக்கிறீங்களா வேற யாரு அவர் பேரன் தான்
Advertisement
ஏய்யா செந்திலு வாசற்திண்ணையில் அமர்ந்து கொண்டு தோப்புக்கு செல்லவிருந்த தன் மகனை அழைத்தார் கோமதி.
சொல்லு ம்மா
எய்யா விஷேச நிலவரம் எல்லாம் என்ன
Advertisement
அதான் பெரியவன் பார்த்துக்கிறானே
Advertisement
அதுக்காக நீ அப்பிடியே விட்டுடுவியா நீ தான் பாத்து முன்ன நின்னு சொல்லனும்.
அதுக்கு தான் பார்வதி கூட இருக்காலே
உம் பொஞ்சாதி தான உருப்பட்டுடும்.
Advertisement
ஏம்மா
என்னய்யா உனக்கு தெரியாதா உன் பொஞ்சாதி வவுசு எந்த பிரச்சனைய எப்ப இழுத்து விடுவாளோ.
பார்த்துக்கலாம் சின்னவன் இருக்கானே
ம்க்கும், அவன் வாழ்க்கையே அவனுக்கு காபாத்திக்க தெரியல.
ஆமா… இது உன் குடும்பம் அதாவது உனக்கு நினைப்பிருக்கா இல்ல அதுக்கும் வேற யாராவது இருக்காங்கன்னுவியா
ஆமா பெரிய என் குடும்பம் என் பேச்சு எதுவுமே கேட்காத குடும்பம் அவங்க அவங்க வாழ்க்கைய அவங்களே பாத்துக்குவாங்க நான் எதுக்கு அப்பானு என் ஐய்யா முடிவுக்கே இங்க மரியாதை இல்லை எனக்கா மரியாதை தர போறாங்க அங்கு வந்து கொண்டிருந்த தன் இளைய மகனை பார்த்துக் கொண்டே கூறி விட்டு நான் தோப்புக்கு போயிட்டு வரேன் மா என்ற படியே நகர்ந்தார்.
என்ன அப்பத்தா என் பேச்சு அடிபடுது என்றபடியே வந்தான் தமிழ் குமரன்
ஐய்யா ராசா அப்படியே உன் தாத்தானாட்டம் இருக்கிற அப்பு
அவ்வளவு வயசா ஆச்சு எனக்கு
அடேய் கிறுக்கு பயலே உன் தாத்தன் கட்டையில போறவரை அப்பிடியே சிங்கமா சுத்தி வருவாரு உன்னையும் அப்படி தான் சிங்கக்குட்டி னு சொன்னேன்.
இல்லையே நான் வரும் போது என்னபத்தி வேற என்னவோ சொல்லிட்டு இருந்தியே
சிங்கம் செல நேரம் தூங்கறது இல்லியா அத சொன்னேன்.
உனக்கு வர வர குசும்பு அதிகமாயிடுச்சு இரு பாத்துக்கிறேன்
ராசா குமரா , உன் அத்தைக்கு சொன்னீங்களா
அருள் சொல்லிட்டான் அப்பத்தா, மலர் அண்ணியும் சொல்லியிருக்காங்க வருவாங்கனு நினைக்கிறேன்.
குமரா சாப்ட வாய்யா,
இதோ வர்றேன்மா
நீ சாப்படியா அப்பத்தா..
ம். ஆச்சுய்யா நீ போய் சாப்பிடு
உள்ளே வரவேற்பறையில் மலர் அமர்ந்திருக்க அண்ணி சாப்டீங்களா
ம் ஆச்சு தம்பி
அருள் எங்க
உள்ளே
டைனிங் டேபிளில் அமர்ந்து அருள் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நீயும் வாடா சாப்பிடலாம்.
ம்ம். அம்மா எனக்கு தோசை
இந்தா எடுதிட்டு வர்றேன்
ஆமா ஏதாவது வேலை இருக்கா இல்ல எல்லாம் முடிஞ்சதா.
என்ன வேலை கோயில்ல வளைகாப்பு அங்க மண்டபத்திலயே எல்லாருக்கும் சாப்பாடு, போகும் போது குடுக்க தாம்பூல பை அவ்வளவு தான என்றபடி தோசையுடன் வந்தார் பார்வதி
தட்டில் சட்னியுடன் தோசை வைத்து மகனின் புறம் நீட்ட
நல்ல மண்டபமா புடிச்சி செஞ்சிருக்கலாம் அருள் கூற
ஏன் உன் பொண்டாட்டி சீதனமா, வண்டி நிறைய கொண்டு வந்து இறக்கி இருக்காளா? அதிலிருந்து எடுத்து செய்ய வளைகாப்பே பொண்ணு வீட்லதான் செய்யனும் அதுவே இங்க நாம தான் செய்யுறோம் தெரியுமில்ல
தாயின் இந்த பேச்சு மகன்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை
இங்க பாரு குமரா
சொல்லுங்க சித்தி
மலரின் குரல் டைனிங் டேபிளை அடைய அனைவரின் கவனமும் அவளிடம்.
வந்துட்டீங்களா ?
ஹோட்டலா இங்க இவ்ளோ பெரிய வீடு அதுவும் உங்களது இருக்கும் போது நீங்க ஏன் வெளியில தங்கனும்
இளா வந்திருக்காளா என கேட்க
எதிர் தரப்பு பதிலை கேட்க காதை கூர்மையாக்கினான் தமிழ்குமரன்
அப்படியா
இது என்ன ரியாக்க்ஷன் என்றிருந்தது அவனுக்கு
சரி சித்தி ம் காலையில பாக்கலாம்.
டங் டங் என பாத்திரம் உருட்டும் ஓசை அடுப்படியில் கேட்க. எதற்கும் அசரவில்லை மலர்
நான் தான் அவங்களுக்கு சொல்ல கூடாதுன்னு சொன்னேனே பார்வதி கோபத்துடன் மகனிடம் பாய
ஏன் சொல்ல கூடாது அவங்க என்னோட கெஸ்ட் வளைகாப்பு எனக்கு தான நடக்குது. நான் எனக்கு வேண்டியவங்களையும் கூப்பிடுவேன்
உன் வளைகாப்பு உங்க அப்பா வீட்ல இருந்து ஒன்னும் நடத்தல நாங்க நடத்துறது. நாங்க சொல்றத தான் நீ கேட்கணும்
அப்ப நிறுத்திடுங்க எனக்கு இந்த விசேஷம் வேண்டாம்.
ஆத்தா மலரு இப்டி அச்சாணியமா பேசாதம்மா அப்பத்தா கூறிக்கொண்டே உள்ளே வர
இல்ல அம்மாச்சி அதான் சொல்றாங்களே அவங்க நடத்துறதுனு செஞ்சுக்கட்டும் அவங்களே
அதான நான் பார்த்து கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்த பொண்ணா இருந்தா இப்படி நடந்துப்பாளா
காதல் கன்றாவினு எல்லாம் நான் பெத்தத சொல்லணும்
அவங்க இந்த விசேஷத்திற்கு வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை அப்பத்தா தன் மகளை வரக்கூடாது என்கிறாலே என்ற ஆதங்கத்துடன் வினவ
அத்த அதான் அவங்களுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு ஆகிருச்சே
நீ மட்டும் தான் அப்டி சொல்லற என்ன பண்றது நான் பாத்து கல்யாணம் பண்ணி கூட்டியிட்டு வந்தவ தான் நீ
என் மகன் வாழ்க்கை மட்டுமில்ல இப்ப எம்மகளை இந்த வீட்டு வாசப்படி கூட மிதிக்க விடாம பண்ணிட்ட நீயெல்லாம் ஒரு பொம்பளையா.
இங்க பாருங்க அத்த
அடடா, இந்த வீட்டுக்கு வந்தாலே ஒரே போர்களமா தான் இருக்கு
ஏம்மா அவங்க கோயிலுக்கு தான வர்றாங்க விடேன் அருள்குமரன் கடிய
வயித்து புள்ளக்காரி கோபபடாதத்தா. குழந்தைக்கு ஆகாது, நீ போய் ரெஸ்ட் எடு
சரி அம்மாச்சி,
பார்வதியை பார்த்து முகத்தை திருப்பி விட்டு இருவரும் நகர
பர்வதி உள்ளுக்குள் பொருமினாள்.
அவ்வளவு சொல்லியும் வர்றீங்களா வாங்க வாங்க அதுவும் நல்லதுக்கு தான் நீ என்ன எண்ணத்தோட வர்றேன்னு தெரியும் பூரணி நாளைக்கு அந்த எண்ணத்தையே மொத்தமா அழிச்சுடுறேன்…..
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்………. மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்………….
error: Content is protected !!