ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 6
பிடித்தம் 6
மாலையில் தென்னந் தோப்பில் நண்பர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
Advertisement
அப்பொழுது அங்கே வந்த கிருஷ்ணமூர்த்தி மாலினியிடம், “இளநீர் வேணுமா?” என்று கேட்க,
அவள் பதில் சொல்லும் முன் அவள் அருகே இருந்த பிருந்தா, “எனக்கும் வேணும்” என்றாள்.
Advertisement
Advertisement
“வாங்க” என்று அவன் அவர்கள் இருவரையும் சற்று தள்ளி அழைத்து செல்ல,
அங்கே சென்றதும் மாலினி, “இந்த மரம் உன் பிரெண்ட்டா?”
Advertisement
“இந்த தோப்பில் இருக்கும் எல்லா மரமும் எனக்கு பிரெண்ட் தான்.. இந்த மர இளநீர் எல்லாத்தையும் விட தித்திப்பா இருக்கும்” என்றவன் வேகமாக அந்த மரத்தின் மீது ஏறி இளநீரை பறித்து கீழே போட்டான்.
அவனது வேகத்தை பார்த்து பிருந்தா, “என் ஆளுக்கு குரங்கு னு பெயர் வச்சதுக்கு பதில் இவனுக்கு தான் வச்சிருக்கணும்” என்று கூற, அவளை மாலினி முறைத்தாள்.
பிருந்தா, ‘இவ ஒருத்தி! நண்பனை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது.. உடனே கண்ணகி அவதாரம் எடுத்திருவா’ என்று முணுமுணுக்க,
அதை கண்டுக்கொள்ளாத மாலினி நண்பனின் வேறுபட்ட பரிமாணத்தை ஆச்சரியத்துடனும் பிரம்மிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதிவேகமாக மரத்தில் சறுக்கிக் கொண்டு கீழே இறங்கிய கிருஷ்ணமூர்த்தி இளநீரை அருவாள் கொண்டு சீவத் தொடங்கினான்.
மாலினி, “எப்படி டா சர் சருன்னு மரத்து மேல ஏறி இறங்கின? எப்படி இப்படி அசால்ட்டா சீவுற?”
கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன் சீவிய இளநீரை அவளிடம் நீட்டினான்.
அவள், “ஸ்ட்ரா!” என்று கேட்க,
“இப்படியே குடி.. அதான் நல்லா இருக்கும்.. இளநீ குடித்த பீல் கொடுக்கும்” என்றான்.
[the_ad id=”6605″]
“இப்படியே குடிச்சா கொட்டிருமே!” என்று சிறு சிணுங்கலுடன் கூற, அவன் பார்த்த பார்வையில் அவள், “சரி இப்படியே குடிக்கிறேன்” என்றபடி குடிக்க ஆரம்பித்தாள்.
மற்றொரு சீவிய இளநீரை பிருந்தாவிடம் உறுஞ்சு குழாய் போட்டு கொடுத்தான்.
பிருந்தா, “எங்களுக்குலாம் இளநீ குடிக்கிற பீல் வேணாமா?”
கிருஷ்ணமூர்த்தி, “நான் சொன்னா அப்படியே கேட்டிற போற!”
பிருந்தா நாடியை தோள்பட்டையில் இடித்துவிட்டு இளநீரை உறுஞ்சு குழாய் உதவியுடன் குடிக்க ஆரம்பித்தாள்.
ஒரு வாய் குடித்ததும் பிருந்தா, “நிஜமாவே செம டேஸ்ட்” என்றாள்.
இருவரும் குடித்து முடித்ததும் ஆளுக்கு இன்னொரு இளநீரை கொடுத்தான்.
பிருந்தா உறிஞ்சு குழாயை எடுத்து கீழே போட்டுவிட்டு, “நாங்களும் இளநீ குடிக்கிற பீலோட குடிப்போம்ல” என்றபடி குடிக்க முயற்சித்து பாதி இளநீரை ஆடையில் கொட்டினாள்.
மாலினி, “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” என்று கூற பிருந்தா அசடு வழிந்தாள்.
“இப்போ புரியுது இளநீர் எல்லாம் எப்படி காலியாச்சுனு” என்று பிருந்தாவை பார்த்து கூறியபடி ஒருவன் வர,
[the_ad id=”6605″]
பிருந்தா, “டேய் குரங்கு வேணாம் என்னை சீண்டாத”
“உண்மை சில நேரம் கசக்கும்”
“இளநீ சில நேரம் மண்டையை உடைக்கும்” என்றபடி கையில் இருந்த இளநீர் கூடை அவன் மீது எரிய, அவன் லாவகமாக நகர, அவள் இன்னொரு இளநீர் கூடை கையில் எடுத்தாள்.
“ஜில்ஸ் பேச்சு பேச்சா இருக்கணும்” என்றபடி அவன் ஓட, இவள் அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.
மாலினியும் கிருஷ்ணமூர்த்தியும் இருவரையும் பார்த்து சிரித்தனர்.
கிருஷ்ணமூர்த்தி, “எங்க ஊர் எப்படி இருக்குது?”
“செம்மையா இருக்குது.. அதுவும் இந்த தோப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது”
“ஹ்ம்ம்.. இந்த தோப்பு எங்களோடது” என்றவன் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “இதுக்கு அடுத்து இருக்கிற அந்த தோப்பு சின்ன மாமாவோடது………….”
“சின்ன மாமா பொண்ணை கட்டிக்கிட்டா அதுவும் உன்னோடதுன்னு சொல்லு” என்று கூறி கண்சிமிட்ட,
அவனோ அதை கண்டுக்கொள்ளாமல் மறுபக்கம் கையை காட்டி, “இது பெரிய மாமாவோடது” என்றான்.
“அப்போ………….” என்று மாலினி ஆரம்பிக்க,
தலைக்கு மேல் கையை கொண்டு சென்று கும்பிட்டவன், “அம்மா தாயே! வேணாம்.. நீ என்ன சொல்ல போறன்னு தெரியும்” என்றான்.
“வீட்டில் இருக்கிற நண்டு சண்டுக்குயெல்லாம் என்னை பத்தி சொல்லி வச்சிருக்க.. ‘நீங்க தானே மாலினி’ னு கேட்டு ஒவ்வொருத்தரா வராங்க.. எனக்கு தான் யாரையும் தெரியலை.. சிரிக்காத டா.. எனக்கும் சொல்லி இருக்கலாமே!”
“நூறு பேர் ஒருத்தரை தெரிந்துக்கிறது ஈஸியா ஒருத்தர் நூறு பேரை தெரிந்துக்கிறது ஈஸியா?”
“அப்போ ஊர் முழுவதும் என் பெயரை தண்டோரா போட்டு வச்சிருக்க!”
அவன் தோள் குலுக்க, அவள் முறைத்தாள்.
————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————
அதே நேரத்தில் தன் நண்பனை கைபேசியில் அழைத்த வெற்றிவேல், “டேய் நல்லவனே! உன் ஊருக்குள்ள வந்துட்டேன்.. வீட்டுக்கு வர வழியை சொல்லு” என்றான்.
வெற்றிவேலின் நண்பன் உற்சாகத்துடன், “டேய் வெற்றி நிஜமாவே நீ வந்துட்டியா?”
“இல்லை.. பொழுது போகாம உன்னுடன் விளையாடிட்டு இருக்கிறேன்”
“நேத்து கூட வர முடியாதுன்னு சொன்னியே! அதான் என்னால் நம்ப முடியலை” என்று கூற,
வெற்றிவேல் மனதினுள், ‘அத்தை பொண்ணை தான் கட்டிக்க போறேன்னு மட்டும் சொன்னவன் நேத்து தானே அந்த அத்தை பொண்ணு கிருஷ்ணாவோட அக்கா னு சொன்ன!’ என்று கூறிக் கொண்டான்.
வெற்றிவேலின் நண்பன், “ஆமா நீ எந்த ட்ரேனில் வந்த?”
“நான் ட்ரேனில் வந்தேன்னு எப்போ சொன்னேன்?”
“என்ன டா சொல்ற?”
“காரில் வந்திருக்கிறேன் டா”
“நீயே ஓட்டிட்டா?”
“ஆமா”
“வெற்றி தானே பேசுறது இல்லை நான் கனவு எதுவும் கண்டுட்டு இருக்கிறேனா? ஆனா என் கனவில் என் விஜி வராம நீ ஏன் வர?”
“டேய்! இப்போ வழியை சொல்றியா இல்லை இப்படியே வண்டியை திருப்பி சென்னைக்கு போகட்டுமா?”
“கோச்சுக்காத மச்சி.. உனக்கு தான் லாங் டிரைவிங் பண்றது பிடிக்காதே! அதான் சந்தேகம் வந்திருச்சு.. நிஜமாவே இங்கே வந்திருக்கியா மச்சி? அதுவும் நீயே காரை டிரைவ் பண்ணிட்டு!”
“கல்யாண மாப்பிள்ளைனு பார்க்கிறேன்.. இல்லை எலும்பை எண்ணிடுவேன்”
“ஹீ.. ஹீ.. இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு”
“இம்சை வழியை சொல்லித்தொலை” என்றவன் வழியை கேட்டதும் அழைப்பை துண்டித்து வண்டியை கிளப்பினான்.
வண்டியை கிளப்பியவனின் மனம் மாலினியை சந்திக்கப்போகும் தருணத்தை ஆவலாக எதிர்நோக்கி பயணித்தது. ஆம் வெற்றிவேலின் இந்த பயணத்தின் முக்கிய காரணம் மாலினி தான். வேலை பழு காரணமாக நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வர முடியாது என்று கூறியிருந்தவன் முன்தினம் மணப்பெண் கிருஷ்ணமூர்த்தியின் அக்கா என்று தெரிந்ததும் மாலினியை சந்திப்பதற்காகவே கிளம்பி வந்திருக்கிறான். தனது நான்கு வருட காதலை தன்னவளிடம் சொல்லவே இந்த பயணம்.
கிருஷ்ணமூர்த்தி மூலமாக தான் மாலினி அவனுக்கு அறிமுகம். அறிமுகம் என்றால் அறிமுகமான அன்று அவன் அவளை பார்க்கவில்லை, அவளது தந்தையிடம் தான் பேசினான். மாலினி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவன் இவள் மீது ஒருதலையாக காதல் கொண்டு, அதை இவள் மறுத்தபோது அவன் கெஞ்ச, அவளது வகுப்பு மாணவன் ஒருவன் சண்டையிட என்று விஷயம் சேர்மேன் வரை என்று அந்த மாணவன் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு, கெட்ட உபதேசத்தில் அந்த இரண்டாம் ஆண்டு மாணவன் மாலினியை கடத்த முயற்சித்த போது கிருஷ்ணமூர்த்தி அவளை காப்பாற்றி ராஜசேகரின் உதவியுடன் அவளை அவள் தந்தையிடம் ஒப்படைத்ததோடு வெற்றிவேலின் உதவியுடன் அந்த மாணவனை மிரட்டினான். பெண் பிள்ளைகள் விஷயத்தில் பெண்ணின் பெயர் வெளியே வராது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவது வெற்றிவேல் எப்பொழுதும் செய்யும் விஷயம் தான் என்பதால் அதை பற்றி அவன் பெரிதாக சிந்திக்கவில்லை. அன்று மாலினியின் தந்தையிடம் பேசிவிட்டு கிளம்பி விட்டான்.
[the_ad id=”6605″]
இது நடந்து சில நாட்கள் கழித்து முதல் முறையாக மாலினியை தனது செல்லத் தங்கை யாழினியின் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கனா கலை நிகழ்ச்சியில் தான் பார்த்தான்.
அவனது மனம் அந்த நாளிற்கு பின்னோக்கி சென்றது…….
அன்று அவன் தங்கையின் கல்லூரியின் உள்ளே நுழையவும் அவனது கைபேசி அலறியது. அழைத்தது அவனது செல்லத் தங்கை தான்.
அவன் அழைப்பை எடுத்து ‘ஹலோ’ சொல்லும் முன் அவனது தங்கை, “டேய் அண்ணா! எங்க இருக்க? என்ன பண்ணிட்டு இருக்கிற? இந்த வருஷமும் என்னை ஏமாத்திட்ட தானே! இது தான் எனக்கு கடைசி வருஷம்.. கண்டிப்பா வரணும் னு சொன்னேனே……….”
நடுவில் பேச முயற்சித்து முடியாமல், “யாழ்” என்று சற்று அழுத்தமான குரலில் அழைத்தான்.
அவன் தங்கையோ கோபத்துடன், “என்ன யாழ்? என்ன சொல்லப் போற? முக்கியமான கேஸ்.. அவனை பிடிக்கணும் இவனை பிடிக்கணும்…………….”
“யாழ்.. நான் காலேஜ் வந்துட்டேன்” என்று அவன் இன்னும் அழுத்தத்துடன் கூற,
யாழினி மகிழ்ச்சியுடன், “டேய் அண்ணா! வந்துட்டியா?” என்றாள் நம்ப முடியாமல்.
இவன் மென்னகையுடன், “ஹ்ம்ம்.. உன் ப்ரோக்ராம் எப்போ?”
“அதான்டா நடந்துட்டு இருக்குது.. நீ வருவங்கிற நம்பிக்கையில் என் பிரெண்டிடம் கெஞ்சி கடைசியா பாட கேட்டு இருக்கிறேன்.. சீக்கிரம் வா”
“நம்பிக்கை இருக்கிறவ பேசினது போல் தெரியலையே!”
“அது அப்படி தான்.. கேள்வி கேட்காம வந்து சேரு”
“முதல்ல எங்க வரணும் னு சொல்லுங்க மேடம்” என்று அவன் சொன்ன போது “வான் வருவான் வருவான்” என்ற பாட்டு அவன் காதில் விழ, அந்த குரலில் ஈர்க்கப்பட்டவன் தங்கையின் பதிலை கேட்காமலேயே அழைப்பை துண்டித்து அந்த குரல் வந்த திசையை நோக்கி விரைந்தான்.
அந்த கலை நிகழ்ச்சியில் ‘சோலோ சாங்’ போட்டியில் கலந்துக் கொண்ட மாலினி ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இருந்து,
“வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா………..ன்
வான் வருவான் வான் வருவா……ன்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவா……….ன்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
…………………………………………………………………….” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
அரங்கத்தின் உள்ளே வந்த வெற்றிவேல் கண்கொட்டாமல் மாலினியை பார்த்துக் கொண்டிருந்தான். எந்த பெண்ணிடமும் சரியாத அவனது மனம் மாலினியை கண்ட நொடியில் தாளம் தப்பத் தொடங்கியது.
அவள் பாடி முடித்ததும் “VK காலேஜ் மாலினி பஸ்ட் CSEயை தொடர்ந்து பாட வருவது நம் கல்லூரியின் பைனல் CSEயை சேர்ந்த யாழினி” என்ற அறிவிப்பின் முன் பாதியை மட்டும் கேட்ட வெற்றிவேல், ‘ச.. என் முதல் ஈர்ப்பு ஒரு சின்ன பெண்ணின் மீதா!’ என்று நொந்துக் கொண்டான்.
இருவருக்கும் இருக்கும் ஏழு வயது வித்யாசத்தை மனதில் நிறுத்தி மனதை அடக்கியவன் தங்கையை தேடினான். அப்பொழுது யாழினி மேடையில் பாட தயாராக நின்றுக் கொண்டிருந்தாள்.
வெற்றிவேலின் கண்கள் அவனையும் மீறி அவ்வபோது மாலினி பக்கம் சென்றது. அப்படி அவன் பார்த்தக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் மாலினியிடம் பேசுவதை கண்டான். அதில் ஒருவனின் உடல் மொழியும் பார்வையும் சரியில்லை என்பதை கண்டுகொண்டவன் அந்த மாணவன் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை தங்கையின் கல்லூரி அடையாள அட்டை போன்று இருப்பதை கவனித்தான்.
அப்பொழுது சரியாக யாழினி பாடி முடித்து இவன் அருகே வரவும் இவன் மாலினி இருந்த பக்கம் சுட்டிக் காட்டி, “அந்த பசங்களை தெரியுமா?” என்று வினவினான்.
அவன் காட்டிய இடத்தை பார்த்த யாழினி, “ஹ்ம்ம்.. என் கிளாஸ் தான்.. ஒருத்தன் நல்லவன் இன்னொருத்தன் கொஞ்சம்……………….” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இவன் மாலினி இருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.
இவன் அங்கே சென்ற போது அந்த மாணவன், “என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்றபடி மாலினியை நெருங்க,
“கேட்காததும் கிடைக்கும்” என்று கூறியபடி மாலினி அருகே ஒருவன் வந்து நின்றான்.
யாழினியின் வகுப்பு மாணவன், “நீ யாரு? இவளோட பாய் பிரெண்ட்டா? ஆனா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மேடம் எந்த கொம்பனும் அவங்களை இம்ப்ரெஸ் பண்ணலை னு சொன்னாங்களே!”
மாலினிக்கு ஆதரவாக பேசியவன் கையை முறுக்கியபடி முன்னால் வர மாலினி, “செல்வா பிரச்சனை வேணாம்..” என்றாள்.
அந்த மாணவன், “அதான் மேடம் சொல்றாங்களே!” என்று நக்கலுடன் கூற,
“உன் கிட்ட கேட்டுட்டு நான் இங்கே வரலை.. வாயை மூடிட்டு இரு” என்று மாலினியிடம் எரிந்து விழுந்த மாலினியின் வகுப்பு தோழன் அந்த மாணவனை பார்த்து, “இப்போ உனக்கு என்ன டா தெரியனும்?” என்று எகிறினான்.
[the_ad id=”6605″]
அந்த மாணவனும், “என்ன டா ரொம்ப துள்ற! இது எங்க காலேஜ்.. ஒரு சவுண்ட் கொடுத்தா உன் நிலைமை அவ்ளோ தான்” என்று எகிறினான்.
மாலினி சிறு பதற்றத்துடன் மற்றவர்களை அழைக்க முயற்சிக்க கைபேசியிலோ சிக்னல் சிறிதும் இல்லை.
மாலினியின் வகுப்பு தோழன், “சவுண்ட் கொடுறா” என்று கூற, இருவரும் முட்டிக்கொள்ளும் நேரத்தில்,
“ரிலாக்ஸ் பாய்ஸ்” என்றபடி சிறு புன்னகையுடன் வெற்றிவேல் உள்ளே நுழைந்தான். மாலினி முகத்தில் தெரிந்த சிறு கலவரம் அவனை சட்டென்று உள்ளே நுழைய தூண்டியது.
விறைத்துக் கொண்டு நின்றிருந்த யாழினியின் வகுப்பு மாணவர்கள் இருவரின் நெஞ்சிலும் ஒரே நேரத்தில் கையை வைத்து சுலபமாக நகர்த்திவிட்டு மாலினியின் வகுப்பு தோழனை பார்த்து மெல்லிய புன்னகையுடன், “ஈஸி பாஸ்.. அவங்க ஏதோ விளையாட்டுக்கு அப்படி பேசிட்டாங்க” என்று கூறினான்.
பின் அந்த மாணவனை பார்த்தவன் தீர்க்கமான பார்வையுடன், “விளையாட்டு வினையாகும் கேள்விபட்டது இல்லை! நீ பேசியதிற்கு இந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேளு” என்றான்.
“நீ யாரு டா?” என்று மாலினியின் வகுப்பு தோழன் மற்றும் அந்த மாணவன் ஒன்றாக வினவினார்.
அந்த மாணவனை பார்த்து, “உன் கிளாஸ் மேட் யாழினியோட அண்ணன்” என்றதும் அந்த மாணவனின் உடல் மொழி அப்படியே மாறியது. வெற்றிவேல் காவல்த்துறை அதிகாரி என்பது யாழினியின் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் அவன் சட்டென்று பின் வாங்கினான்.
அவன் மாலினியை பவ்வயமாக நோக்கி, “சாரி சிஸ்டர்.. ஜஸ்ட் பார் ஃபன் அப்படி பேசினேன்” என்றுவிட்டு, மாலினிக்கு ஆதரவாக பேசியவனின் கையை குழுக்கி, “ரிலாக்ஸ் பாஸ்” என்று கூறிவிட்டு நண்பனை இழுத்துக் கொண்டு அகன்றான்.
அவர்கள் அகன்றதும் அந்த இடத்தைவிட்டு கிளம்பச் சொல்லி வெற்றிவேலின் மூளை கட்டளையிட்டது ஆனால் அவனது மனமோ மாலினியிடம் பேசத் தூண்டியது.
இறுதியில் மனமே வெல்ல, வெற்றிவேல் மென்னகையுடன் மாலினியை பார்த்து, “நல்ல பாடுனீங்க.. ஸ்வீட் வாய்ஸ்” என்றான்.
அவளும் மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
இப்பொழுது மூளையின் எச்சரிக்கை அதிகமாக இருக்கவும், “ஓகே கேரி ஆன்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.
அவன் மாலினியிடமிருந்து விலகி இருக்க நினைத்தாலும் அவனது தங்கை விடவில்லை.
அந்த போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தனர். மாலினி முதல் பரிசு பெற்றிருக்க யாழினி மூன்றாவது பரிசு பெற்றாள்.
பரிசை வாங்கிவிட்டு தங்கை தன்னிடம் வரவில்லையே என்று தேடியவனின் கண்ணில் தங்கை மாலினியுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. கால்கள் அங்கே செல்ல துடித்தாலும் கால்களையும் மனதையும் அடக்கிக் கொண்டு நின்றிருந்தவன் தங்கை வருவது போல் தெரியவில்லை என்றதும் அங்கே சென்றான்.
“யாழ்” என்று அழைத்தபடி தங்கை அருகே நின்றான்.
யாழினி அவனை அறிமுகம் செய்ய வாய் திறக்கும் முன் மாலினி அருகே நின்றுக் கொண்டிருந்த ராஜசேகர், “ஹாய் வெற்றி சார்! எப்படி இருக்கிறீங்க?” என்றான்.
அப்பொழுது தான் ராஜசேகரை பார்த்த வெற்றிவேல், “சேகர் ரைட்? கிருஷ்ணா பிரெண்ட்” என்றபடி கை குலுக்கினான்.
“எஸ் சார்.. பெயரை கூட ஞாபகம் வச்சு இருக்கிறீங்களே!” என்றான்.
வெற்றிவேல், “நான் நல்லா இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கிறீங்க? அந்த பசங்க அப்பறம் ஏதும் பிரச்சனை பண்ணலையே?”
“இல்லை சார்” என்றவன் மாலினி பக்கம் திரும்பி, “சிஸ்டர்.. சார் ACP வெற்றிவேல்.. அன்னைக்கு சீனியர் கிருஷ்ணனை மிரட்டியவர்” என்றதும்
ஒரு நொடி கண்களை ஆச்சரியம் மற்றும் சிறு மகிழ்ச்சியுடன் விரித்த மாலினி, வெற்றிவேல் பக்கம் திரும்பி புன்னகையுடன், “தன்க் யூ சார்” என்றாள்.
அரை நொடி புருவ சுளிப்புடன் பார்த்த வெற்றிவேல் பின் மென்னகையுடன், “ஓ நீங்க தானா அந்த பெண்.. அதான் உங்க பெயர் பெமிலியரா இருந்தது போல! தேங்க்ஸ்-யெல்லாம் வேணாம்.. அது என் டியூட்டி.. அப்பறம் அந்த பசங்க எதுவும் பிரச்சனை பண்ணலையே?”
“இல்லை.. அவன் இயல்பில் கெட்டவன் இல்லை.. ஸோ என்னிடம் சாரி சொல்லிட்டு ஏதும் ஹெல்ப் வேணும்னா கேட்க சொல்லிட்டு போய்ட்டான்.. அப்பறம்.. அது டியூட்டி என்றாலும் நீங்க அன்னைக்கு அன்-அஃபிஷியலா தானே உதவி செய்தீங்க.. ஸோ என் தேங்க்ஸ் ஏத்துக்கணும்”
அவன் அதே மென்னகையுடன், “ஓகே.. உங்கள் தேங்க்ஸ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்றான்.
மாலினி ராஜசேகரிடம், “கொஞ்ச நேரத்திற்கு முன் சண்டையை தடுத்ததும் சார் தான்” என்றாள்.
[the_ad id=”6605″]
ராஜசேகர், “ஓ.. தேங்க்ஸ் சார்” என்றான்.
வெற்றிவேல், “போதும்.. மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கிறீங்க” என்றான்.
அப்பொழுது யாழினி, “ஹலோ ஹலோ.. நானும் இங்கே தான் இருக்கிறேன்” என்றாள்.
ராஜசேகர், “நாங்க மட்டும் நீங்க பாரின் போயிருக்கிறதாவா சொன்னோம்?”
யாழினி முறைப்புடன், “நீ நான்-சின்க்-லேயே போயிட்டு இருக்கிற” என்றவள் கையை வெற்றிவேல் பக்கம் நீட்டி மாலினியை பார்த்து, “இந்த வளர்ந்து கெட்டவன் தான் என்னோட அண்ணன்” என்றாள்.
“என்னங்க? இப்படி பொசுக்குன்னு ACP சாரை கெட்டவன்னு சொல்லிட்டீங்க!” என்று கண்ணில் குறும்புடன் மாலினி கூற,
யாழினி சிறிது அசடு வழிந்தபடி, “அது ஒரு ப்ளோ-வில் வந்திருச்சு” என்றாள்.
மென்னகையுடன், “சார் உங்க அண்ணன் னு தெரியும்” என்ற மாலினி ராஜசேகரை சுட்டிக் காட்டி, “இவனை ஒருமையில் பேசுறீங்க என்னை மட்டும் மரியாதையா பேசுறீங்க!” என்றாள்.
யாழினி அரை நொடி தமையனை நோக்கிவிட்டு, “அதை விடுங்க.. இவ்ளோ நேரம் இவன் தங்கை னு தான் என்னுடன் பேசிட்டு இருந்தீங்களா?” என்று வினவினாள் எதிர்பார்ப்பு தந்த குறுகுறுப்புடன்.
மாலினி, “இல்லையே”
“அப்பறம்?”
“சார் தங்கை பெயர் யாழினினு தெரியும் ஆனால் அந்த யாழினி நீங்க தான் னு இப்போ தான் தெரியும்”
“புரியலையே”
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி உங்க கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் சின்னதா கலாட்டா பண்ணாங்க.. அப்போ சார் தான் வந்து அவங்களை தடுத்தார்”
“அது தெரியும்.. என்னிடம் அந்த பசங்க யாருன்னு கேட்டுட்டு தான் உங்க கிட்ட வந்தான்”
“அப்போ உங்க கிளாஸ்மேட்ஸ் அண்ட் என்னோட கிளாஸ்மேட் சாரை யாருன்னு கேட்டப்போ உங்க கிளாஸ்மேட்ஸ் கிட்ட ‘உங்க கிளாஸ்மேட் யாழினியோட அண்ணா’ னு சொன்னாங்க”
“ஓ” என்று யாழினி இழுக்க, ராஜசேகர், “விளக்கம் போதுமாங்க! இப்பவாது நாங்க கிளம்பலாமா?”
யாழினி அவனை முறைக்க, வெற்றிவேல், “நீங்க கிளம்புங்க சேகர்” என்றான்.
ராஜசேகர், “ஓகே சார்” என்றும்,
மாலினி, “பை சார்.. பை யாழினி” என்று கூறி கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும் வெற்றிவேல் தங்கையை கூர்பார்வையுடன் நோக்க அவளோ, “என்ன லுக்கு! இந்த பார்வை நான் தான் உன்னை பார்க்கணும்”
“ஏனோ?”
“நீ விடா கண்டன் டா”
“என்ன தான் சொல்ல வர?”
“இந்த மஞ்ச காட்டு மைனா உன் மனதை கொத்தலை?”
“ஏய்! என்ன பேச்சு இது?”
“நடிக்காத டா.. உன்னை எனக்கு தெரியாதா? மாலினி பாடினப்ப நீ உன்னை மறந்து பார்த்துட்டு இருந்த”
“அது அந்த பொண்ணு வாய்ஸ் அப்படி”
“ஓ! முன்னாடி என்னை பசங்க கிண்டல் பண்ணதா சொன்னப்ப.. காலேஜ் லைப்பில் இதெல்லாம் சகஜம்.. நீயே தைரியமா சமாளிக்கணும், வரம்பு மீறினா என்னிடம் சொல்லு னு சொன்னவன் இன்னைக்கு என்ன சார் பண்ணீங்க?”
“அந்த பையன் பார்வை சரியில்லை அதான் போனேன்”
“சரி நீ போகவும் தான் அவங்க காலேஜ் பையன் வந்துட்டானே! நீ திரும்பி வந்திருக்க வேண்டியது தானே! ஏன் சார் அழைப்பே இல்லாம தடையம் பதிச்சிட்டு வந்தீங்க?”
“அவன்க அடிதடியில் இறங்குவது போல் இருந்துது.. அதான் போனேன்.. நீ தேவை இல்லாம யோசிக்கிற!”
“யாரு நானா?”
“ஆமா”
“அப்போ உன் மனசில் எந்த நினைப்பும் இல்லை?”
“யாழ்”
“கேட்ட கேள்விக்கு பதில்”
“உன் கேள்வியே சரி இல்லை.. தப்பும் கூட”
“ஒரு பொண்ணு கிட்ட நீ இவ்ளோ நேரம் நின்னு பேசுறதை இன்னைக்கு தான் நான் பார்க்கிறேன் அதுவும் சின்ன ஸமைலோட”
“யாழ்…………..”
“சும்மா என் பெயரை ஏலம் விடாத.. அவங்க தேங்க்ஸ் சொன்ன விதமும் நீ அதை ஏத்துக்கொண்ட விதத்தையும் பார்த்தபோ எனக்கு காக்க காக்க படத்தில் ஜோ சூர்யா கிட்ட தேங்க்ஸ் சொன்ன ஸீன் தான் நியாபகம் வந்துச்சு.. நீயும் அன்புசெல்வன்.IPS கரெக்டருக்கு செட் ஆவ.. அவங்களும் ‘ஒரு ஊரில் அழகே உருவாய்’ பாட்டுக்கு வொர்த்தான ஆள் தான்.. உங்க ரெண்டு……………………..”
“ஏய்! அவ வயசென்ன என் வயசென்ன! இப்படி பேசுறதை நிறுத்து.. அண்ட் படத்தில் வரும் ஹீரோவுடன் என்னை கம்பேர் பண்ணாத” என்று அவன் கண்டிப்புடன் கூற,
அவளோ அவன் கடைசியாக கூறியதை கண்டுக்கொள்ளாமல், “உன்னை நீயே ஏமாற்றிக்காத டா” என்று சிறு ஆதங்கத்துடன் கூற,
ஆதுரத்துடன் தங்கை தோளை பற்றியவன், “அப்படியெல்லாம் இல்லை டா.. ஓகே.. ஒத்துக்கிறேன்.. எனக்கு அவளை பிடித்திருக்கிறது தான், ஆனா நீ நினைப்பது போல் இல்லை.. அவ இப்போ தான் பஸ்ட் இயர் பஸ்ட் செம் படிக்கிறா.. சின்ன பொண்ணு..”
“உனக்கும் அவளுக்கும் ஏழு வயசு தான் வித்யாசம்”
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு”
யாழினி முறைப்புடன், “இப்போ எதுக்கு இதை சொல்ற?”
“உனக்கு உன் அண்ணன் பெருசு.. இந்த வயசு வித்யாசம் பெருசில்லை ஆனா இந்த காலத்தில் இந்த வயசு வித்யாசம் அதிகம் தான்……………..”
[the_ad id=”6605″]
“நிஜமாவே ஏழு வயசு ஒன்னும் அவ்ளோ பெரிய வித்தியாசம் இல்லை.. காக்க காக்க ACP அன்புசெல்வனுக்கும் மாயாவுக்கும் ஆறு வயசு வித்யாசம்..உங்க ரெண்டு பேருக்கும் ஏழு வயசு வித்யாசம்.. கூட ஒன்னு தானே! அதுல ACP இந்த வயசு வித்யாசத்தை சொல்றப்ப மாயா அதான் ஜோ அதை பொருட்டாவே மதிக்க மாட்டா.. காதல் வந்த பிறகு வயசு விதயசமாவது ஒன்னாவது.. ஒன்னும் பிரச்சனை இல்லை………..”
“இப்போ தானே படத்தையும் வாழ்க்கையையும் கம்பேர் பண்ணாத னு சொன்னேன்.. அண்ட் உன்னோட இந்த சிந்தனையே தேவையில்லாதது.. ஏன்னா என் மனசில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.. ஸோ தேவையில்லாதை யோசிக்காம உன் வேலையை மட்டும் பாரு.. அம்மா கிட்ட எதையும் உளறி வைக்காத” என்று கறார் குரலில் கூறினான்.
அவள் பதில் கூறாமல் அவனையே பார்க்கவும் அவன், “என்ன?”
“என்ன?”
“உன் பார்வைக்கு என்ன அர்த்தம்?”
“ஏன் உனக்கு தெரியாதா?”
“அது தப்புன்னு தானே சொல்றேன்”
“உன்னை எனக்கு தெரியும்………………….”
“யாழ்”
“சரி விடு.. நான் எதுவும் சொல்லலை.. ஆனா ஒன்னு”
“என்ன?”
“இப்போ உன் மனசில் விழுந்த விதை மரமா.. இல்லை.. சின்ன செடியா முளைத்தா கூட நீயே மாலினியை விட மாட்ட.. அதனால் நான் அமைதியா இருந்து நடப்பதை பார்க்கிறேன்”
வெற்றிவேல் அதற்கு சிறு தோள் குலுக்கலை பதிலாக தந்தான்.
அவள், “உனக்கு மாலினியை முன்னாடியே தெரியுமா?”
“இப்போ தானே மாலினியை பற்றி பேச மாட்டன்னு சொன்ன?”
“மாலினியை உன்னுடன் ஜோடி சேர்த்து பேச மாட்டேன் னு தான் சொன்னேன்.. மாலினி பற்றி பேச மாட்டேன் னு சொல்லலை”
“..”
“என்ன லுக்? கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு”
“இன்னைக்கு தான் பஸ்ட் டைம் பார்க்கிறேன்.. சேகர் சொல்லி தான் மாலினிக்கு தான் நான் முன்னாடி ஹெல்ப் பண்ணேன் னு தெரியும்”
“ஓ.. என்ன ஹெல்ப் பண்ண?”
“வீட்டுக்கு போய் சொல்றேன்.. இங்கே வேண்டாம்” என்று அவன் கூற இப்பொழுது அவள் தோளை குலுக்கினாள்.
தங்கையிடம் ‘தன் மனதில் எதுவும் இல்லை’ என்று சாதித்தவன் அன்று இரவு தன் மனதை ஆராய்ந்த போது அது பிடித்ததிற்கு மேல் என்பதை உணர்ந்து கொண்டான் ஆனால் வயது வித்யாசத்தை மனதில் கொண்டு அந்த நினைப்பை கடந்து வர முயற்சித்து வெற்றியும் பெற்றான். ஆனால் அது தற்காலிகமான வெற்றி என்று சில நாட்களிலேயே உணர்ந்துக் கொண்டான். ஆம் வேலை பளுக்களுக்கு நடுவில் பனித்துளியை போல் மாலினியின் நினைவு அவனை குழுமை படுத்துகிறது.
[the_ad id=”6605″]
தன் மனம் அறிந்ததும் அவன் செய்த முதல் வேலை, தங்கை அறியாமல் தங்கை கல்லூரிக்கு சென்றது தான். அன்று நடந்த போட்டிகளில் பாட்டு போட்டியின் காணொளியை மட்டும் பெற்றுக் கொண்டான். அதில் யாழினியும் பங்குபெற்று வெற்றி பெற்றிருந்ததால் பிரின்சிபால் சந்தேகமின்றி அந்த காணொளியை இவனுக்கு கொடுத்தார்.
ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளது புகைப்படத்தையோ காணொளியையோ தனது கைபேசியில் வைத்துக்கொள்வது தவறு என்ற எண்ணத்திலும் அதுவும் தான் ஒரு பொறுப்பான காவல்த்துறை அதிகாரியாக இருந்துக் கொண்டு நிச்சயம் அப்படி செய்யக் கூடாது என்ற உறுதியுடன் இருக்கிறவன் அந்த கானொளியில் இருந்து மாலினி பாடியதை ஒலிதம்(audio) வடிவில் தனது கைபேசியில் ஏற்றிக் கொண்டான். வேலைப்பளு காரணமாக எந்த ஒரு நெருக்கடியான இறுக்கமான மனநிலையில் இருந்தாலும் மாலினியின் குரல் அவனுள் ஒரு அமைதியை கொடுக்கம். அதில் இருந்தே தனது காதலின் ஆழத்தை அறிந்துக் கொண்டவன் மாலினி படிப்பு முடியும் வரை அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்து அதை அப்படியே கடைபிடிக்கவும் செய்தான்.
‘ஒருவேளை அவள் வேறு யாரையும் காதலித்தால்?’ என்ற கேள்வி மனதினுள் எழ, ‘நான் ஒதுங்கிக் கொள்வேன்’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டவன், ‘அவள் எனக்குன்னு இருந்தால் எனக்கு கிடைப்பாள்.. அவள் எனக்கானவள் தான்’ என்றும் கூறிக் கொண்டான்.
அதன் பிறகு தள்ளி இருந்து பல நேரங்களில் அவளை பார்த்தவன் இன்று தான் அருகில் சென்று பார்க்கப் போகிறான்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
