Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 8.1

சந்தியா வந்த மாயமோ என்னவோ சூரியாவுக்கு அன்றைக்கு இரவே காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிட்டது. ஆரியா கூட கிண்டலாக “நார்மல் ஃபீவர்னா டாக்டர் கிட்ட போனா கியூர் ஆகும். ஆனா உன்னோட ஃபீவர் தியா வந்ததுக்கு அப்புறமா கியூர் ஆகியிருக்குனா, உனக்கு வந்தது ஆர்டினரி ஃபீவரா இல்ல…..” என்று இழுக்க

 

சூரியா அவனது டிசர்ட்டின் காலரை பிடித்து “என்னடா இல்லனு இழுக்கிற?” என்று மிரட்ட

 



Advertisement

ஆரியா கழுத்து நெறிபட்டதை போல் நடித்தபடி “டேய் கொலைகாரப் பாவி! சாதா காய்ச்சலா இல்ல வைரஸ் காய்ச்சலானு சொல்ல வந்தேன்டா..கழுத்தை நெறிக்காதே தெய்வமே..நான் உன்னை மாதிரி ஜிம்பாடி இல்லை” என்று சமாளிக்க

 

சூரியா அவன் கழுத்து காலரை விட்டபடி “உன் மூளை ஏன்டா இப்பிடி கண்டபடி யோசிக்குது? எனக்கு ஃபீவர்னு தெரிஞ்சதும் ஒரு ஃப்ரெண்டா பிரவுனி தயங்காம வந்து என்னோட மனநிலையை புரிஞ்சுகிட்டு ஹெல்ப் பண்ணுனா. அதை வேற அர்த்தத்துல எடுத்துக்காதே..ஓகேவா” என்று கூறிவிட்டு அவன் முதுகில் சற்று பலமாக ஒரு அடி போட

Advertisement

 

Advertisement

ஆரியா முதுகைப் பிடித்துக் கொண்டே “ஓகேடா! நம்பலைனு சொன்னா நீ மறுபடியும் செல்லமா அடிப்ப..ஆனா ஒன்னுடா அண்ணா, உன்னை மாதிரி ஒரு டியூப் லைட்டை நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லை” என்று கூறியவன் சூரியா அடுத்த அடி போடுவதற்குள் அவனது அறையை நோக்கி சிட்டாய் பறந்தான்.

 

சூரியா அவன் ஓடுவதைக் கண்டு நகைத்தவன் சோஃபாவில் சொகுசாக சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவனது மனம் இன்றைய நிகழ்வுகளை அசை போடத் துவங்கியது. சந்தியா இங்கே வருவாள் என்று அவன் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. அவள் வந்தது, தன்னுடன் துணையாக இருந்து பேசி சிரித்தது எல்லாமே ஒரு அழகிய கனவு போல இருந்தது அவனுக்கு.

Advertisement

[the_ad id=”6605″]

 

அதே இனிய மனநிலையுடன் உறங்கச் சென்றவன் மறுநாள் உற்சாகமாக அலுவலகம் சென்றான். அங்கே சந்தியா அவன் முகம் தெளிவாக இருப்பதைக் கண்டதும் காய்ச்சல் சரியாகி விட்டது என்று புரிந்துகொண்டாள். எனவே தான் பேச நினைத்த முக்கியமான விஷயத்தை அவன் கேட்ட கோப்பு ஒன்றை கொடுப்பதற்காக வருகையில் அவனிடம் எப்படி கேட்பது என்று புரியாமல் கைகளை பிசைந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

 

சூரியாவோ வழக்கமாக அவள் வந்த வேலை முடிந்து விட்டதென்றால் இப்படி நின்று கொண்டிருக்கும் பழக்கம் அவளுக்கு இல்லாததால் கைக்கடிகாரத்தை முன்னும் பின்னுமாக திருகிக் கொண்டிருந்தவளிடம் “என்னாச்சு பிரவுனி? என் கிட்ட எதுவும் கேக்கணுமா?” என்று வினவியவனிடம் ஆமென்று தலையாட்டினாள் அவள்.

 

“என்ன விஷயம்?”

 

“எனக்கு ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட்ல கேப்பிட்டல் ஸ்ட்ரக்சர் டிசிசன்ஸ் புரியவே இல்ல. கிளாஸ்ல வெறும் பவர்பாயிண்ட் பிரசன்டேசன் தான் குடுத்தாங்க. எனக்கு அது சுத்தமா புரியலை. நீ ஈவ்னிங் வீட்டுக்கு போனதும் ஃப்ரீயாயிட்டா எனக்கு கொஞ்சம் போன்ல அது என்னனு புரியுற மாதிரி எக்ஸ்பிளெயின் பண்ணுவியா?” என்று அவள் தயங்கி தயங்கி கேட்க

 

சூரியா “கண்டிப்பா பண்ணுறேன். ஆனா அந்த வாட்ச் பாவம். அதை விட்டுடேன்” என்று கூற அவள் நாக்கை கடித்தபடி கைக்கடிகாரத்தை திருகுவதை நிறுத்தினாள்.

 

சூரியா அதைக் கண்டு கேலியாக “இதுக்கு தான் நான் சொன்னேன், ஒழுங்கா நவம்பருக்கு ஃபோர் பேப்பர்ஸ் மட்டும் கிளியர் பண்ணு; நெக்ஸ்ட் ஃபோர் பேப்பர்ஸ் மே மாசம் பார்த்துக்கலாம்னு..நீங்க தானே முடிச்சா ஐ.பி.சி.சியை ஒரே அட்டெம்ப்ட்ல முடிப்பேனு அடம் பிடிச்சிங்க. இப்போ பாருங்க கேப்பிட்டல் ஸ்ட்ரக்சர் சிம்பிளான விஷயம். அதுவே உங்களுக்கு புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு” என்று கூறி சந்தியாவை சீண்டி விட

அவள் சட்டென்று பொங்கியவளாய் “உன்னால எக்ஸ்பிளெயின் பண்ண முடியலைனா சொல்லிடுடா. அதை விட்டுட்டு என்னை கலாய்க்காதே” என்று சொல்லி உதட்டை சுழிக்க

 

சூரியா “ஏதோ உன் நல்லதுக்கு தான் சொன்னேன் பிரவுனி. ஓவர் படிப்பு உடம்புக்கு ஆகாது” என்று கூற சந்தியா பதில் கூறாமல் தலையை சிலுப்பிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

 

அவள் சென்ற பின்னர் தனக்கு தானே சிரித்துக் கொண்டவன் மறக்காமல் அன்று இரவு அவளுக்கு பாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை விளக்கிவிட்டு தான் உறங்கச் சென்றான்.

 

அவனது விளக்கத்தை கேட்டபடி சந்தியா ஒரு கையில் போனும் மற்றொரு கையில் புத்தகமுமாய் இருப்பதை கண்ட சுமித்ரா “சந்து! ஒன்னு போனை பாரு, இல்லைனா புக்கை பாரு; அது என்ன ரெண்டையும் வச்சிட்டு முழிக்கிற?” என்று கேட்டுவிட்டு அவள் கையிலிருக்கும் போனை பிடுங்க

 

[the_ad id=”6605″]

 

சந்தியா மலர்ந்த முகத்துடன் “சுமிக்கா எனக்கு பாடத்துல ஒரு டவுட் இருந்துச்சா, அதான் மார்ஸ்மாலோ கிட்ட போன்ல கேட்டேன். அவன் எக்ஸ்பிளெயின் பண்ணதுக்கு அப்புறம் தான் அந்த டாபிக் எனக்கு கிளியர் ஆச்சு” என்று கூற

 

சுமித்ரா கேலியாக “நீ ஒழுங்கா நாலு பேப்பர் மட்டும் எழுதலாம்லா! மொத்தமா எட்டையும் எழுதுறேனு சொல்லிட்டு இப்போ மண்டையை போட்டு உடைச்சிட்டிருக்க” என்று கூற

 

சந்தியா “நீயுமா சுமிக்கா? என்னால எட்டையும் கிளியர் பண்ண முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என் இப்போ நான் நாலு பேப்பர் மட்டும் இந்த டேர்ம்ல கிளியர் பண்ணலாம்னு நினைச்சு படிச்சா நான் ஃப்ரீயா இருக்கிற டைம்ல என்னோட மைண்ட் தேவையில்லாம யோசிக்குது.

 

அதான் ஒரேயடியா எட்டையும் எழுதலாம்னு டிசைட் பண்ணிட்டேன். இப்போ பாரு, நான் இருபத்து நாலு மணி நேரமும் இதை பத்தியே யோசிச்சிட்டிருக்கதால மத்த விஷயங்கள் எதையும் யோசிக்க எனக்கு டைமே கிடைக்கிறது இல்ல” என்று சொன்னவளை வாஞ்சையுடன் பார்த்தாள் சுமித்ரா.

 

“உன்னால எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணமுடியும் சந்து. பட் இப்போ டைம் லெவன் தேர்ட்டி ஆகுது பாரு. டெய்லி நீ தூங்கவே ஒரு மணியை தாண்டுது. உன் மூஞ்சியை கண்ணாடியில பாரு.. (pacifictiregroup.com) கண்ணை சுத்தி கருவளையம் விழ ஆரம்பிச்சிடுச்சு. சோ இவ்ளோ நேரம் கண் முழிக்கிறதை விட்டுட்டு ஏர்லி மார்னிங் எழுந்து படி” என்று அவளை கையோடு அழைத்துச் சென்றாள்.

 

*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!