Skip to content
Post Views: 849

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
மிஸஸ் மிஸ்ஸிங் – 4
அங்கே குருதி கொப்பளிக்க காரில் உள்ள கம்பி மார்பை அழுத்திய நிலையில், காரின் முன் கண்ணாடி நொறுங்கி, கண்ணாடி சில்லிகள் ஆங்காங்கு முகத்திலும் கழுத்திலும் பதம் பார்த்துப் பாதி ஜீவனோடு மூர்ச்சையாகிக் கிடக்கிறான் அவன்.
நம் யுகபாரதி.
அவனைக் கண்ட நொடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தான் ஹரி.
அருகில் இருந்த நரேஷும் முழித்த விழி முழித்தபடி விழித்துக்கொண்டு இருக்கிறான்.
“பாஸ் இது நம்ம சேஷா தான!? நீங்க வந்ததும் அந்தப் பயலும் கீழ பூமிக்கு வந்துட்டான்னா என்ன?”
“அதுதான் டா எனக்கும் புரியல. இது நம்ம சேஷா தானா இல்லை வேற யாரும் அவனைப் போல இருக்கானா?”
என்று பாவம் அந்தக் கடவுளுக்கே குழப்பம் வந்துவிட்டது.
அதாகப்பட்டது என்னவென்றால்.. சேஷா என்று அவர்கள் குறிப்பிடுவது சேஷ நாகத்தை தான். எந்தப் பிறவி எடுத்தாலும் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் விஷ்ணு பகவானை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்று தான் இந்த சேஷ நாகம்.
விஷ்ணு பகவான் எந்நேரமும் பள்ளிகொண்டு இருப்பாரே ஓர் அஞ்சு தலை நாகத்தின் மேல். அதேதான். அவரேதான்.
ராமாவதாரதின் பொழுது லட்சுமணன் ஆகவும், கிருஷ்ணவதாரதின் பொழுது பலராமனாகவும் உடனேயே இருந்தவர் சேஷ நாகர். அப்படியானவர் இங்கும் வந்துவிட்டார் போலும்.
குடுகுடுவென்று யுகபாரதியின் அருகில் சென்று நரேஷ், நொறுங்கி இருக்கும் கார் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு, “எப்பா சேஷா. இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவர் ஆஹ் இல்லையா? அவர்தான் அவரு பொண்டாட்டியைத் தேடி வராரு. நீ எதுக்கு லூசு மாதிரி அவரு கூடவே வந்திருக்க. மத்த பிறவில கூட ஓகேன்னு சொல்லலாம். அப்பல்லாம் அவரு உலகத்துக்கு எதையோ சொல்ல வந்துருப்பாரு, நீ கூட வந்து ஹெல்ப் பண்ண, லவ்வுக்கு கூடவா ஹெல்ப் பண்ணுவ?” என்று ரத்தம் கொட்டியதால் பாதி மூர்ச்சையாகி கண் சொருகி இமைகள் முடியும் மூடாமலும் இருந்த யுகபாரதியிடம் கேட்கிறான்.
அதை அடுத்து வேகமாக அருகில் வந்த ஹரியும் நரேஷின் மண்டையில் நங்கென்று கொட்டிவைத்து,”ஏ இடியட்! சாகக்கெடக்குறவன் கிட்டப் பைத்தியம் மாதிரி ஒளறிக்கிட்டு இருக்க. அவனுக்கு இப்போ ஒன்னுமே புரியாது முக்கா பைத்தியமே”
“அவ்வ்வ்… சாரி பாஸ், ஒரு ஆர்வத்துல அவன் அரைவேக்காடா கெடக்குறத கூட உணராம உளறிக்கிட்டு இருக்கேன்”
“மொதல்ல ஆம்புலன்ஸ் கூப்பிடனும்”
“ஆமா பாஸ்”
“நம்மகிட்ட இந்த காலத்தோட எந்த காட்ஜெட்ஸ்ஸும் இல்ல வேற”
“ஆமா பாஸ்”
“நான் அந்த கார தொறக்க முடியுதான்னு பாக்குறேன்”
“ஓகே பாஸ்”
“நீ அங்க நிக்குறவன் எவன்கிட்டயாச்சும் போன் அஹ் புடிங்கி ஆம்புலன்ஸ்க்கு போன் போடு.”
“டன் பாஸ்” என்று மூச்சுக்கு முந்நூறு பாஸ் போட்டு மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டு நின்றவன் மண்டையில் மீண்டும் ஒரு கொட்டு வைத்து அனுப்பினான் ஹரி.
இங்கு ஹரி முன்பே சில்லி சில்லாக நொறுங்கி இருந்த கதவு கண்ணாடி வழியே யுகாவை தட்டி நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறான்.
பாதி விழி திறக்க முயன்றாலும் யுகாவால் முழுமைக்கும் ஹரிக்கு மறுமொழி கூற முடியவில்லை போலத் தான் தெரிகிறது.
லேசாய் முனகல் சத்தம் மட்டும் ஓயாமல் கேட்கிறது.
“இ..இல.. க்கியா “, என்று அவன் உளறிக்கொண்டிருக்கையில் அவனது உடல் வலித்ததோ இல்லை உள்ளம் தான் வழித்ததோ, கடைக்கண்ணில் ஈரம் மட்டும் கசிந்த வண்ணம்.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவனை எப்படியோ காரை விட்டு வெளியேற்றி ஒரு பிரபலத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
ஹரியும் நரேஷும் சாதாரண மனிதர்கள் போலவே அலையோ அலை என்று அலைந்து அல்லோலகள பட்டார்கள் என்பது இங்குக் குறிப்பிட தக்கது.
மருத்துவமனையில் யுகாவின் பொருட்களை எல்லாம் ஒரு பையில் போட்டு வெளியே பாவமாக உட்கார்ந்திருந்த ஹரியிடம் கொடுக்கிறார்கள்.
ஆனாலும் ஆனால், இந்த நரேஷ் யுகாவின் உடமைகளில் இருந்த பணத்தை வைத்தே ஹாஸ்பிடல் பில் கட்டி இருக்கக் கூடாது.
“பாஸ், பஸ்ட் டேவே ஆக்சிடேன்ட் பாத்துட்டோம். அதுவும் நம்ம சேஷா மாதிரி இருக்குறவனுக்கு. என்ன பாஸ் இதெல்லாம். நல்ல சகுனமில்லன்னு நினைக்குறேன்”
“என்னடா சகுனம் குசலம்னு பேசிகிட்டு இருக்க? எல்லாம் மனசுதான் காரணம். அதெல்லாம் நல்லபடியாவே நடக்கும், நீ பேசாம இரு. என் வாழ்க்கையிலேயே விளையாட பாக்காத தங்கமே!”
“என்ன பாஸ் நீங்க! இங்க அவனவன் உங்க பேர் வச்சுக்கிட்டு தான், சகுனம்ங்குறான்…
சாங்கியம்ங்கிறான்….
சடங்குங்கறான்…
சாம்பிரதாயம்ங்குறான்… “
“நிறுத்து எதுக்கு இந்த இழுவை. இப்போ என்ன சொல்ல வர?”
“அதான் பாஸ், இங்க எல்லாமே உங்க பேர வச்சுக்கிட்டு தான் பண்றானுங்க, நீங்க என்னனா மனசு தான் காரணம்ன்னு சிம்பிள் அஹ் முடிச்சுட்டீங்க!?”
“ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம் இருக்குறது உண்மை. சடங்கு சம்பர்த்தாயம்னு அவங்க என் பேர சொல்லி செஞ்சாலும் அது எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு நல்ல பயன் தர விஷயம் முன்ன இருந்துது. ஆனா இப்போ இருக்குறவங்க அதையெல்லாம் உல்ட்டா பண்ணி வச்சுருக்காங்க”
“ஷப்ப்பா.. இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?”
“அடேய், நான் என் லவ் ஸ்டோரி எழுத தான் வந்துருக்கேன். இதெல்லாம் கேட்டு மூட் மாத்தாத.
“பரவால்ல சொல்லுங்க, தப்பில்லை” என்ற நரேஷை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
“உதாரணத்துக்கு சொல்லனும்னா… வீட்டுக்கு முன்னாடி சாணி மொழுவுறாங்கல்ல”
“ஆமா”
“அதை எதுக்காக செய்யுறாங்க?”
“எதுக்காக”
“மடசாம்பிராணி, அது கிருமி நாசினி. இதெல்லாம் 7ஆம் அறிவு படம் வந்ததுக்கு அப்றம் குழந்தை கூட சொல்லும்”
“செரி நீங்க மேட்டருக்கு வாங்க”
“அதான். ஆனா அதை கிருமி நாசினியா உபயோக படுத்தாம, இப்போ கிளீன் அஹ் நீட் அஹ் மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்சு வைக்குதுங்க இப்போ இருக்குற மார்டன் மக்கள். இதுக்கும் என் பேர தான் சொல்லுவாங்க. என்ன பண்ண சொல்ற?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே யுகா கண் முழித்துவிட்டதாக நர்ஸ் வந்து கூற அவனைக் காண உள்ளே சென்றார்கள்.
நரேஷ் ,”பாஸ் இது நம்ம சேஷா தான் பாஸ் கன்பார்ம் ஆஹ்”
“சரி டா, பொறுமையா இரு. என்னனு பாப்போம். அவன் சேஷாவா இருந்தா நம்மள அவனுக்கு தெரியும் தானே. அவனையே பேசவிட்டு பாப்போம். நீயா போய் எதுவும் ஒளறி கொட்டாத”
“பாஸ், இங்க பூமிக்கு வந்ததுல இருந்து நீங்க என்ன ரொம்ப திட்டுறீங்க பாஸ். நான் பாவம் இல்லையா” என்று நரேஷ் கூறியதற்கு ஒரு பார்வை மட்டும் தான் ஹரியிடமிருந்து.
யுகாவிற்கு தோள்பட்டையிலும், முன் மார்பு பகுதி சதையிலும் கண்ணாடி கிழித்த காயங்களில் சிலபல தையல்களைப் போட்டு மேலே கட்டுப் போட்டு ஒட்டியிருந்தார்கள்.
யுகா இப்பொழுது நன்றாகவே நினைவு திரும்பி விழித்திருந்தான். வலி தாளாமல் புருவங்கள் மட்டும் முடிச்சிட்டபடி இருந்தது. உள்ளே நுழையும் ஹரியையும், நரேஷையும் பார்த்தவன் ஆச்சர்யமாய் கண்களை அகல விரித்தான்.
“இவன் என்ன பாஸ், நம்மள பாத்து ஷாக் ஆகுறான். அப்போ நம்ம சேஷா குட்டி தான். அய் ஜாலி ஜாலி. எனக்கொரு கம்பெனி கெடச்சுருச்சு” என்று ஹரியின் செவியில் உற்சாகமாய் கிசுகிசுத்துவிட்டுத் துள்ளலாக யுகாவின் அருகில் சென்றவன், அவன் தோளோடு கட்டி,
“ஐய் சேஷா குட்டி, செம்ம டா. நீயும் வந்துட்ட. நல்லவேளை அந்த மனுஷன் வைப்போடா ரொமான்ஸ் பண்றப்ப நான் சும்மா விட்டத்தை பாத்துகிட்டு நிக்கணும் நெனச்சேன். நல்லவேளை நீ கூட தொணையா வந்துட்ட… நான் முன்னாடி நீ கார்ல இருந்தப்போ கேட்ட கேள்வியெல்லாம் மனசுல வசிக்காத. ஓகேவா” என்று யுகாவை ஒரு உலுக்கு உலுக்க, பாவம் அவன் காயம் தந்த வலியிலும், நரேஷ் அவனை செய்த பலியிலும் அரண்டுவிட்டான்.
‘நானா உன்ன வரச்சொன்னேன். நீயா தான டா நானும் வரேன்னு, கூடவே வந்த. இதுல என் வைப் கூட ரொமான்ஸ் பண்றத பாக்க சொல்லி நான் கேட்டேனா டா உன்ன’ என்று மனதில் நினைத்துக்கொண்ட ஹரி ,
“நரேஷ், அவங்களுக்கு வலிக்கும் டா. விடு மொதல்ல. ஸ்டிச்சஸ் போட்ருப்பாங்க. இப்டி போட்டு குழுக்குற!” என்று கூறிக்கொண்டே நரேஷை யுகாவிடம் இருந்து பிரித்தவன்,
“ஆர் யூ ஓகே மிஸ்டர்….”, என்று ஹரி நிறுத்த,
“யுகபாரதி” என்று இவன் முடித்துவைத்தான். வலியின் முனகலில் முகத்தைச் சுருக்கிக்கொண்டே.
“எஸ் மிஸ்டர் யுகபாரதி. ஹவ் ஆர் யூ டூயிங்? பீலிங் குட்?”
“எங்க சார் நல்லா பீல் பண்ண விட்டாரு அவரு” என்று யுகா தையலிட்ட பகுதியை தாங்கியவாறு கூற, அவன் தன்னை யுகபாரதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டதிலேயே இவனுக்குத் தன்னைப்பற்றிய நினைவு இல்லையா இல்லை, இவன் சேஷாவே இல்லையா என்ற குழப்பம் வந்து நரேஷுக்கும் ஒட்டிக்கொண்டது.
“சாரிங்க, நீங்கி பொழச்சுட்டீங்கன்னு ஒரு சந்தோஷத்துல, சரியா தப்பா சந்தோசப்பட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்று மழுப்புகிறான் நரேஷ்.
“அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மிஸ்டர் யுகபாரதி”, என்று இடை புகுந்தான் ஹரி.
“தட்ஸ் ஓகே. நோ ப்ரோப்லேம். அண்ட் தேங்க்யூ வெரி மச். நீங்கதான் என்ன காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்ததா நர்ஸ் சொன்னாங்க. ஐ ஷுட் பி வெரி தேங்க்புல் டு யூ மிஸ்டர்….!!??”
“ஹரிதாஸ்”
“தேங்க்ஸ் மிஸ்டர் ஹரிதாஸ்”
பரஸ்பரம் புன்னகைகள் பரிமாறப்பட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் போலீசார் வந்து அவர்களின் வழக்கமான விசாரணையை முடித்துவிட்டுச் செல்லவும் தான் யுகபாரதி ஒரு செல்வந்தனின் மகன் எனவும், ஒரு தனியார் கம்பெனியை நிர்வகிக்கிறான் என்றும் தெரியவந்தது.
இங்கே யுகபாரதியாக இருப்பது சேஷாவா இல்லையா என்பது தான் ஆக சிறந்த குழப்பமாக இருந்தது அவர்களுக்கு. அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அதை அப்படியே விட்டுவிட்டு, அடுத்தகட்டச் சிந்தனைக்குள் தாவி இருந்தான் ஹரி.
நரேஷ் மனதுக்குள்ளும் அதே குழப்பம் இருந்தாலும், சூழல் புரிந்து சற்றே அமைதி காத்தான்.
ஹரி, “ஓகே மிஸ்டர் பாரதி, நீங்கள் ரெஸ்ட் எடுங்க நாங்களும் கெளம்புறோம்” என்றவன் சற்றே யோசனையுடன், “உங்க பேமிலில இருந்து யாரும் வரலையா?” என்று கேட்டான்.
“இல்ல ஹரி, என் வைப்க்கு இன்னும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைன்னு நெனைக்கறேன். அப்பா அம்மா எல்லாம் அமெரிக்கால என் அக்கா கூட இருக்காங்க. சொ என் வைப் அண்ட் நான் மட்டும் தான் இங்க இருக்கோம். கால் பண்ணனும் இனிமேல் தான். என் திங்ஸ் எங்க வச்சிருக்காங்க தெரியல. கேட்டு வாங்கணும்”
“ஓஹ், சாரி. நாங்களே முன்னாடி இதை செய்துருக்கணும். வெரி சாரி மிஸ்டர் பாரதி. நாங்க உங்க வைப்க்கு இன்போர்ம் பண்ணிடறோம்.அவங்க வந்ததுக்கு அப்பரமா நாங்க கெளம்புரோம். டோன்ட் ஒர்ரி”
“தேங்க்ஸ் ஹரி. நீங்கள் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. உங்களுக்கு ஏதாச்சும் செய்யனும் தோணுது. உங்களுக்கு ஏதாச்சும் தேவைப்பட்டா, தாராளமா என்ன வந்து பாருங்க. யுகா கன்ஸ்டரக்க்ஷன்ஸ்”
அவன் அப்படிக் கூறியதும் இவன் நிச்சயம் உதவிக்கு ஆவான் என்று உள்ளுக்குள் நினைத்தவனாக, “தேங்க்ஸ் மிஸ்டர் பாரதி” என்றான் ஹரி.
பாரதியின் தொடர்பு விபரங்களை வாங்கிக்கொண்டார்கள். அப்படியே பாரதியின் மனைவிக்கும் தகவல் கூறி ஆயிற்று.
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே பதற்றத்துடன் அடித்துப் பிடித்து ஓடி வருகிறாள் இலக்கியா. யுகபாரதியின் மனைவி இலக்கியா.
அகத்தின் அழகை அப்படியே எடுத்துக்காட்டும் முக அமைப்பை வரமாகப் பெற்றிருந்தாளோ என்னவோ, முகத்தில் தேஜஸ் மின்னுகிறது. மென்மையும், பெண்மையும் கலந்து செய்தவளாக நின்றிருந்தாள் இலக்கியா.
பொதுவாக அவளைப் பார்ப்பவர்களுக்கு இயல்பாகவே ஒரு புன்னகை வந்து உதடுகளில் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒரு பெண்.
லேசாய் கண்கள் பனித்துக் கிடந்தது, நேர்த்தியாய் அணிந்திருந்த மஞ்சள் நிற சல்வார், அரைகுறையாய் வாரிய தலை என்று அங்கு வந்திருந்தவள், நேராய் பாரதியை தேடித்தான் வருகிறாள்.
உள்ளே மெல்லிய முனகலோடு இன்னும் அவன் சாய்வாய் அமர்ந்திருந்தான். அவள் மெல்ல உள்ளே நுழைந்ததும், அவன் முனகல் சத்தம் அத்தோடு கரைந்து விட்டது. உண்மையில் வலி குறைந்து அந்தச் சத்தம் கரைந்ததா… இல்லை இவளைக் கண்டு குறைந்ததா என்பதை நான் அறியேன்.
அவள் எதுவும் பேசவில்லை, அமைதியாய் அவன் பக்கம் சென்று காயமாகி இருந்த இடங்களைப் பார்த்தாள். லேசாய் கண்கள் கலங்கத்தான் செய்தது. ஆனாலும் சராசரி மனைவி போலவெல்லாம் அழுது கரையவில்லை அவள்.
அவள் இயல்பிலேயே திடமான பெண். தைரியம் கொட்டிக் கிடந்தது அவளிடத்தில்.
அவள் பாரதிக்கு தைரியம் கூறினாள், “ஒன்னும் பெரிய அடி இல்லையாங்க… டாக்டர்ட்ட பேசிட்டு தான் வரேன். ஒரு ஒன் வீக் கிட்ட ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க. அப்றம் கொஞ்சம் பெயின்க்கு மட்டும் இன்னும் டூ வீக்ஸ் டேப்லெட் எடுத்துக்கணுமாம். அவ்ளோதான். யூ ஆர் ஆள்ரைட்” என்று அவனது தலை முடியை கோதி நெற்றியில் இதழையும் பதித்து மீட்டிருந்தாள்.
சிறிதாய் செருமிக்கொண்டே உள்ளே மீண்டும் நுழைந்தார்கள் ஹரியும் நரேஷும். நித்தம் திருவடி தொழுகும் பெருமாள் தான், தன் முன்னே திருவுருவாமாய் நிற்கிறார் என்று உணர முடியாத முழு நேரப் பக்தையான இலக்கியாவுக்கு, அவர்களைக் கண்டு சொல்ல இயலாத ஒரு பரவசம் மனதிற்குள். அதை இன்னதென வகுத்துவிடவும் முடியாது.
மனதிற்குள் அழுத்திக்கொண்டு இருந்த பாரம் இடம் தெரியாமல் தொலைந்தது போல் பட்டென மனம் மத்தாப்பூவாய் மாறியதை மட்டும் அவள் உணர்ந்துகொண்டாள். அது நிச்சயம் இவர்கள் நல்லவர்கள் தான் என்று பார்த்த மாத்திரத்திலேயே நம்பத் தூண்டியது.
இது எல்லாம் அவள் மனதில் ஒரு நொடிக்குள் நிகழ்ந்து முடிந்து இருந்தது.
ஹரியாய் உலாவும் பரந்தாமன் அந்தப் பக்தையின் முகம் பார்த்துச் சிரித்தார். அதில் அவள் என்ன நினைத்தாளோ, அவர்களை அறிமுகம் இல்லாமலேயே நண்பர்களாய் ஏற்கத் துணிந்தது அவள் மனம்.
“நீங்க தான் இவர் வைப் ஆஹ்?” என்று அவளை அறிய முற்படும் பொருட்டு கேள்வியாய் கேட்டான் ஹரி.
“எஸ், ஐம் இலக்கியா. யுகபாரதி வைப்”
இந்த அறிமுகப்படலம் எல்லாம் முடிவுற்றதும் மீண்டும் செய்வது அறியாது தெருவிற்கே வந்தார்கள் நம் பரந்தாமனும் அவரது பக்க பலமும்.
பசி என்னும் கொடிய நோய் அவர்களையும் பீடித்தது பாவம்.
“பாஸ், இப்போ இவ்ளோ பெரிய அப்பாடகர்ஸ் நாமளே சோத்துக்கு வழி இல்லாம நிக்கிறோம். கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கு. இதை பத்தி நீங்க என்ன நெனைக்குறிங்க பாஸ்? “
“மூடிட்டு வாடா…!”
“அப்படியே ஆகட்டும் பாஸ்!”
லட்சுமி தேவியை எங்கே தேடுவது என்று ஒன்றும் புரிபடாமல், திக்கு திசை தெரியாமல் அலைகிறார்கள். சந்துகள் பொந்துகள் என ஒன்றையும் விடவில்லை. இதில் இன்னொரு கவலை என்னவென்றால், லட்சுமி தேவியார் பார்க்க எப்படி இருப்பார் என்று வேறு தெரியவில்லை.
ஊன் உறக்கம் இல்லாமல் ஊர் சுற்றுகிறார்கள். அப்படி எல்லாம் கூற மாட்டேன். நன்றாக உண்டு உறங்கித்தான் சுற்றுகிறார்கள்.
விரலைச் சொடுக்கப் பல வகைக் காய் கனிகள் கண்முன் படையலிட்டது போல் பந்தி விரிக்கப்பட்டது.
நரேஷ் கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு,
“இந்தக் கருமத்தை அப்பவே செஞ்சுருக்கலாம். ஏதோ தெரு தெருவா அலையவிட்டு நம்மள வேடிக்கை பாக்குறாரு. எல்லாம் என் நேரம்!” என்று புலம்பித் தீர்க்க,
“உன்ன யாரு என்கூட வந்து கஷ்டப்பட சொன்னது. நானா கூப்பிட்டேன். ஆடு தான பிரியாணி அண்டாக்குள்ள வந்து உக்காறுற மாதிரி, நீயா வந்து தலைய கொடுத்த…!” என்று விகடம் வந்து போனது நம் பரந்தாமனுக்கு.
“பாஸ். இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு என்னைய ஆடு ரேஞ்க்கு பீல் பண்றிங்க”
“அதை ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு!”
அடுத்த சில மணி நேரங்களிலேயே திக்கு திசை தெரியாமல் சுற்றும் நிலை மாறி, தெருத் தெருவாய் சுற்றும் நிலை வரும் என்று பாவம் அவர்களும் அறிந்திருக்கவில்லை.
சும்மாவா சொன்னாங்க?
காதல் இருக்கும் பயத்தினில் தான்,
கடவுள் பூமிக்கு வருவதில்லை.
மீறி அவன் பூமி வந்தால்,
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே!
பூமிக்கு வந்தாச்சு…
அப்போ இனிமேல் அலையுறது தான் பாக்கி போல..
பிரிவோம் சந்திப்போம்
error: Content is protected !!