Skip to content
Post Views: 3,506
ரீங்காரமாய் என்னுள்ளே – 11
இரவு மணி ஒன்பதரையை நெருங்க, அவனின் வாகனத்தில் வந்து வீட்டில் இறங்கினான் விஷ்ணு.
“வீட்டுக்கு போகலாம்னு சொன்னா மட்டும் வண்டியை அடிசிபிடிச்சு ஓட்டிட்டு வந்துறீங்க, குமாரண்ணா… அவ்வளோ ஆர்வம் வீட்டுக்கு போறதுக்கு… ” என இறங்கி நின்று அவன் கேக்க,
“இல்லிங்களே தம்பி…” என அவர் அவசரமாய் சொல்ல,
Advertisement
“அப்படியா… அப்போ பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்க்கு வேண்டிய விடுங்க… ஒரு ரவுண்டு பாத்துட்டு அப்பறம் பொறுமையா திரும்பி வருவோம்… அதான் நீங்க இன்னும் கடமையிலே இருக்கீங்க போலயே…” என விஷ்ணு தீவிரமாக அவரை பார்த்து சொல்லி, வண்டியின் கதவை திறந்து ஏறி அமர்ந்தான்.
“அது தம்பி…” என அவர் மேற்கொண்டு என்ன சொல்வது என தெரியாமல் முழிக்க,
“என்ன முழிக்குறிங்க குமாரண்ணா…” என அவன் கேக்க,
Advertisement
“வீட்டுக்கு வந்துட்டோமே தம்பி…” என அவர் இழுத்து சொல்ல,
Advertisement
“அதுனால என்ன குமாரண்ணா… நீங்க தான் கடமை கண்ணாயிரம் ஆச்சே…” என அவன் சொல்ல,
அவனின் பேச்சிற்கு பதில் சொல்ல முடியாமல் திராணி இன்றி பார்த்தார் குமார்.
“அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… நான் கேட்டதுக்கு இல்லன்னு சொன்னிங்க…” என அவன் தோரணையாக கேக்க,
Advertisement
“தம்பி…” என சொல்லி பாவமாக பார்த்தார்.
“இன்னைக்கு இதோட போதும்னு விடுறேன்… பாக்க வேற ரொம்ப பாவமா இருக்கீங்க…” என்றவன்,
“இன்னொரு தடவை இப்படி இல்லிங்களே தம்பின்னு சமாளிங்க… அன்னைக்கு நீங்க எப்படி சாமிக்குறீங்கன்னு பாக்குறேன்…” என அவரிடம் விடைபெற்று உள்ளே வந்தான் விஷ்ணு.
– – – – –
ஹாலில் அமர்ந்து செய்தி பார்த்து கொண்டிருந்த முதிர்ந்த நண்பர்களை பார்த்துக்கொண்டே உள்ள வர,
அவனை பாராமல் தொலைக்காட்சியில் கவனமாய் கண்ணை வைத்திருந்த நாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேணுவை பார்க்க,
“வா விஷ்ணு…” என்று சொன்ன வேணு, “விசா ம்மா… விஷ்ணு வந்தாச்சு பாரு… அவனுக்கும் சேர்த்து தோசை போட்டுடு…” என கிட்சேன் நோக்கி வேகமாக குரல் கொடுத்தார்.
“இப்போ உங்களை யாரு… இவ்வளோ வேகமா சொல்ல சொன்னா… எனக்கு வேணும்னா நான் சொல்லிக்க மாட்டேனா…” என அவன் வேணுவை கேக்க,
வேணுவோ பாவமாக நண்பனை பார்க்க, “உனக்கு இது தேவையா…” என்பது போல் இப்போது பார்த்து வைத்தார் நாதன்.
“கேட்டது நானு… அங்க என்ன பார்வை…” என அவன் விடாமல் கேக்க,
“போடா… நீ என்னை ரொம்ப படுத்துற…” என வேணு அவனிடமே புகார் சொல்ல,
“இப்போ என்ன படுத்துனாங்க உங்களைய… என்ன வாலிபம் திரும்புதுன்னு நினப்பா மனசுல…” என கேக்க,
நாதன் பேச்சை திசை திரும்புவதாக எண்ணி, “மாத்திரை போட்டியா வேணு…” என கேட்க,
“ஓஹ்… அப்போ மாத்திரை இன்னும் போடல…” என அவரிடம் கேட்டு. “இது தான் நீங்க உங்க பிரெண்டை பாக்குறதா…” என நாதனையும் விடாமல் கேக்க,
நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,
“போதும் பாத்தது… அதான் மணி ஆயிடுச்சுல… போயி நேர நேரத்தோட தூங்குங்க… வயசான காலத்துல இத்தனை மணி வரைக்கும் இப்போ டீவி ரொம்ப முக்கியம்…” என சொல்லி ரிமோட்டை எடுத்து டீவியை அணைத்தான்.
“விசா… உன் புள்ளை எங்களை டீவி கூட பாக்க விட மாட்டுறான்…” என நாதன் தோசை எடுத்து வந்து சூரி தட்டில் வைத்த மனைவியிடம் சொல்ல,
விஷ்ணு, “என்கிட்ட பேசுங்க… எதுக்கு இப்போ சின்ன குழந்தை போல அம்மா கிட்ட கம்ப்லைன் பண்ணுறீங்க…”
இதையெல்லாம் படம் பார்ப்பது போல சின்சியராக பார்த்துக்கொண்டே தோசையை உள்ளே தள்ளி கொண்டிருந்தான் சூரி.
“டேய்… இங்க என்ன நடக்குது நீ நல்லா சாப்டுட்டு இருக்க…” என முறைத்து கொண்டே வேணு மகனை கேட்டார்.
“அதை அவன்கிட்டயே கேளுங்க… நீங்க ரெண்டு பெரும் தானே கூட்டணி வச்சிருப்பிங்க…” என மனைவி, கணவரை தாக்கி சொல்ல,
சூரியோ, “செம பாயிண்ட் மம்மி…” என அவருக்கு ஹை- ஃபை குடுத்தான்.
“இதுக்கு மேல நம்ம பேசுனா எடுபடும்னு சொல்லுற…” என வேணு நண்பனின் காதில் மெதுவாக சொல்ல,
“டெபாசிட் காலி… கிளம்புங்க காத்து வரட்டும்…” என சத்தமாக சொன்னான் சூரி.
நாதன் சூர்யாவை முறைத்து, “டேடின்னு வரும் போது பாத்துக்குறேன்டா உன்னைய…” என சொல்லி, நண்பனுடன் சேர்த்து நடையை கட்டினார் நாதன் அவ்விடத்திருந்து.
பின்னோடு வந்த விஷ்ணுவை பார்த்த நாதனோ, “என்னடா…” என கேக்க,
விஷ்ணு, “நீங்க மாத்திரை ஒழுங்கா எடுத்து தரீங்களானு பாக்க வந்தேன்…” என்றான்.
“இவன் ரொம்ப பண்ணுறாண்டா… இவங்க அம்மாவையே மிஞ்சிட்டான்…” என அவரின் மைண்ட் வாய்ஸ் சொல்ல, “பேச்சு மட்டும் தான்… வெளில போயிட்டு வரவன், ரெப்பிரேஷ் ஆகாம நிக்குறான்…” என மெதுவாக முனகினார்.
அதை காதில் வாங்கிய விஷ்ணு, “பேசுறவங்களுக்கு தெரியும், என்ன…எப்போ பண்ணனும்னு…” என அவரிடம் சொன்னவன்,
“இதுக்கு உங்களை அப்பறம் பேசிக்குறேன்…” என முறைப்பைப்பாக சொல்லி, இருவருக்கும் பொதுவாக குட் நைட் சொல்லிவிட்டு வெளியே வந்தவன், அவனின் அறைக்கு மாடியேற,
“என்னடா சாப்புடுல…” என சூரி போகும் அவனை பார்த்து கேக்க,
“எனக்கும் சேர்த்து நீயே சாப்பிட்டு, உடம்ப தேத்திக்கோ… அப்போ தான் மான் குட்டி கிட்ட அடிவாங்க சரி ஆஹ் இருக்கும்…” என விஷ்ணு சொல்ல,
“மம்மி… இவனை பாருங்க…” என சூரி குற்றம் சாட்ட,
“நானும் இதுக்கு உனக்காக பேசுவேன்னு வேற நினைக்குறியா நீ…” என விசா கடிய,
“சாரி மம்மி…” என சரணடைந்தான் சூரி.
விஷ்ணு, “உங்க பாசமழையை ஓவர் ஆஹ் பொழிஞ்சி விடாதீங்க… அப்பறம் வீட்டுல கப்பல் தான் விடணும்…” என சொல்லி மேலேற,
“விஷ்ணு… சாப்பாடு…” என அன்னை கேக்க,
“வேணாம்னு தானே மேல ஏறுறேன்…” என இடக்காக பதில் சொல்ல,
“நீ தான் கேக்க சொல்லிருக்கல்ல… அது தான் பொறுப்பா கேட்டேன்…” என அன்னை சொன்னார் பவ்யமாக,
அன்னையை விட்டு, “நீ இதுக்கு ஏதாவது சொல்லணுமே…” என விஷ்ணு சூரியை கேக்க,
“நான் சாப்பிடும் போது பேசுறது இல்ல…” என வாயில் தோசையை வைத்துக்கொண்டே ஜகா வாங்கினான் சூரி.
“ஏன்டா விஷ்ணு… இருந்தாலும் நீ எங்களை விட, உங்க அப்பாவையும், எங்க அண்ணனையும் ரொம்ப படுத்துற டா…” என்று அன்னை அவனை பார்த்து சொல்ல,
“அப்போ இவன் நம்மளை கொஞ்ச படுத்துறானு சொல்லுறிங்களா மம்மி…” என சூரி இடையில் வர,
விஷ்ணு, ” இப்போ தோசை தொண்டையில் சிக்க போது பாரேன்…” என்றவன்,
தாயிடம், “உங்க சுவாமி இருக்கும் போது… இப்படி பேசிருந்தா அப்படியே உச்சி குளிர்த்திருப்பாரு…” என கௌண்ட்டர் குடுத்து, “அப்பறம் உங்க அண்ணன் உங்களுக்கு பஜனை பண்ணிருப்பாரு…” என கிண்டலடிக்க,
“போடா… நீ சொன்னாலும் சொல்லனாலும் அவங்களுக்கு என்னை தெரியும்டா…” என்றார் அன்னை கெத்தாக,
“போதும்… வாய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு, தூங்குற வேலைய பாருங்க…” என கூறிவிட்டு அறைக்கு சென்றான் விஷ்ணு.
அறைக்குள் வந்த விஷ்ணு, தன் அலைபேசியை எடுத்து பார்க்க, அதில் இரண்டு வாட்ஸப் மெசேஜ் வந்திருக்க, “என்ன இவ, இந்த நேரத்துக்கு மெசேஜ் அனுப்பிருக்கா…” என சிந்தித்து கொண்டே அதை ஓபன் செய்து பார்க்க,
“இன்னும் பிஸி ஆஹ்…” என கேட்டு வந்திருந்தது திரும்ப அவளிடமிருந்து.
“இவ எதுக்கு இத்தனை முறை பிஸி ஆஹ்ன்னு கேட்டு அனுப்பிருக்கா…” என அதை பார்த்து கொண்டே நிற்க,
மீண்டும், “சார்?…” என கேள்வி குறியோடு அனுப்பியிருந்தாள் சிந்து.
“என்ன இவ, நம்ம ஆன்லைன்ல இருக்குறத பாத்துட்டு அனுப்புற மாறி இருக்கு…” என யோசித்துக்கொண்டே, கைகள் தானாக அவள் அனுப்பிய மெசஜை ஸ்க்ரோல் செய்து பார்த்தது.
போனை சார்ஜரில் போட்டுவிட்டு, தன்னை சுத்தம் செய்துவிட்டு வந்து, அவளுக்கு அழைத்தான் விஷ்ணு.
அவள் எடுத்தவுடன், “என்னங்க மிஸ். கோங்குரா… போன்ல என்னோட பேரை வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்கீங்க போல?…” என அவன் பேச்சை தொடங்க,
“சார்…” என சிந்து அவள் பேச்சை தொடங்க,
“அதே மோர் தான்… என்னவாம் இப்போ, எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க…” என கேட்டான் விஷ்ணு.
“ஹான்… இல்ல… இல்ல அப்படி இல்ல…” என அவள் பதறி சொல்ல,
“அப்போ ஒகே… பை…” என சொல்லி அவன் அழைப்பை துண்டிக்க போக,
அவன் துண்டிப்பதற்குள், “ஆமா… ஆமா… வெயிட் பண்ணுனேன்…” என்றாள் அவசரமாக,
வாய்க்குள் ஒரு மெல்லிய கீற்றாக புன்னைகை செய்து, ” எதுக்காக கத்திரிக்கா எனக்காக காத்திருந்த?…” என அவன் கேக்க,
அவனின் பேச்சை கேட்டு ரசிக்க இருந்த மனதை அடக்கி, “ஆஹ்… அது…” என அவள் இழுக்க,
“இப்போ காரமிளகாய் எதுக்கு காரணமே இல்லாம இழுக்குது…” என அடுத்து கேக்க,
“சார்… நீங்க இப்படி பேசாதீங்க… எனக்கு பதில் பேச வர மாட்டுது…” என்றாள் கொஞ்சம் சிணுங்கியவளாக, அவளின் மனதோ “இப்படி பேசி தான் நம்மளை கவுங்குறாங்க இவங்க…” என கொஞ்சலாக அவனை வசை பாட,
“எனக்கு தெரிஞ்ச போல தான் பேச முடியும்… உனக்காக நான் எதுக்கு மாத்தி பேசணும்…” என அவன் எதிர்கேள்வி கேக்க,
“இப்படி தான் எல்லார்கிட்டயும் காய்கறி பேரு சொல்லி பேசுவீங்களா…” என கேட்க நினைத்த மனதை, அறிவு மடக்கி, “நீ என்ன கேக்க வந்த, இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு பாரு…” என கேள்வி கேக்க,
தலையை உலுக்கி தன்னை நிதானித்தாள் பாவை.
“ஒய்… சுண்டக்கா… இருக்கியா?” என அவன் அழைக்க,
“ஆ… சார்… எனக்கொரு வேலை வேணும்… நீங்க எனக்கு எப்படியும் ஹெல்ப் பண்ணுவீங்கன்னு தான் பேச நினச்சேன்…” என பட்டென்று கேட்டுவிட்டாள், தான் இதற்கு தான் அழைக்க நினைத்தேன் என்று சொல்வது போல்.
அவளின் சொல்லில் நிதானித்த விஷ்ணு, “நானே ஒரு சாதாரண அரசாங்க ஊழியன்… என்கிட்ட வேல வேணும்ன்னு கேக்குற நீ…” என அவன் கேக்க,
“அது இல்ல சார்… நீங்க ரெஃபர் பண்ணுனா போதும்…” என அவள் தயங்கி சொல்ல,
“நான் ஒரு லஞ்சமே வாங்காத போலீஸ்காரன்… நீ என்னை சிபாரிசு பண்ண சொல்லுற…” என அவன் அழுத்தமாக கேக்க,
“சார் போதும்… நான் ரெஃபரன்ஸ் தான் குடுக்க சொன்னேன்… உங்கள வேலையே வாங்கி தர சொல்லல…” என அவளும் உஷ்ணமாக சொல்ல,
“எல்லாம் ஒன்னு தான்…” என்றவன், “ஏன் இப்போ நீ பாக்குற வேளைக்கு என்ன?…” என அவன் பாயிண்ட்டாக வினவ,
அந்த பக்கம் மௌனம் சாதித்தாள் சிந்து.
ஒரு சில நாட்களாக, அவள் பள்ளியின் தாளாளரின் மகன் ரூபனின் பார்வை, தன் மேல் அனாவசியமா படுகிறது என்று எப்படி இவனிடம் சொல்வது என அவள் தயங்கி அமைதி காக்க,
“இப்போ என்னனு சொல்லுறியா… இல்லையா?…” என்று விஷ்ணு வார்த்தையில் அனல் காட்டி கேக்க,
“அது… அது… எங்க கரெஸ்பாண்டண்ட் பையனோட பார்வை சரியில்ல… இப்போ கொஞ்ச நாளா வேணும்னே எல்லாத்துக்கும் என்னை கூப்பிட்டு இருக்காரு… எனக்கு அனீஸி ஆஹ் இருக்கு, அவரு பேசுறது எல்லாம்… டபுள் மீனிங் ஆஹ் வேற இருக்கு…” என அவனின் குரலுக்கு படபடவென்று ஒப்பித்தாள் சிந்து.
அவளின் பேச்சை கேட்ட விஷ்ணுவோ, பல்லைக்கடித்தபடி, “அந்த ப்ரோக்கலி மண்டையன் அப்படி பேசுறான்னு… கேட்டுட்டு அப்படியே நிப்பியா… நாலு அறை அறைய வேண்டியது தானே…” என உறுமலாக சொல்ல,
“இல்ல… எப்படி அப்படி பண்ண முடியும்… அவங்க ஸ்கூல் அது…” என தயங்கி சொல்ல,
“இவளை…” என மனதில் கொதித்தவன், “என்கிட்ட மட்டும் நல்ல வாய் கிழிய வாழக்கா போல பேசு…” என அவளை திட்ட,
“ப்ளீஸ் சார்… என்னை நீ இப்படி பாக்கறியா, டபுள் மீனிங்ல பேசுறியான்னு நானே எப்படி கேக்குறது சொல்லுங்க…” என அவள் கேக்க,
“இவளையெல்லாம் வச்சிக்கிட்டு என்னதான் பண்ணுறது…” என நினைத்து அமைதி காக்க,
சிந்து, “சார்… பேசுங்க…”
அவன் பேசாமல் அமைதி மன்னாராய் இருக்க,
“இதை எனக்கு எப்படி ஹாண்டில் பண்ணானும் தெரில சார்… இப்போ இதுபோலவெல்லாம் நிறைய நடக்குது… தினமும் கேள்விப்படுறோம் தான்… இல்லனு நான் மறுக்கலை… அப்படி நடக்குறதை பார்த்துட்டு, நம்மளோட கருத்தை சுதந்திரமா சொல்லுறோம்… ஆனா நமக்குன்னு நடக்கும் போது, அதை தைரியமா எதிர்வினை ஆற்ற முடிய மாட்டுது…” என்றவள்,
“ஆனா இதை எதிர்த்து வெளில சொல்லவங்களுக்கு, எதோ வகையிலும் அவங்க வீட்டுல துணை இருப்பாங்க… எனக்கு அப்படி யாரும் இருக்க மாட்டாங்க… ஏன்னா என் வீட்டுலைலயே, என்னை நம்ப மாட்டாங்கன்னுன்றது தான் கசப்பான உண்மை…” என தழுதழுதவளாய் அவள் சொல்லி,
அவளின் அந்த பேச்சு, இவனின் மனதில் என்னவோ பாராங்கல்லை போன்று அழுத்தியது.
“அப்படியே நான் ஏதாச்சும் பண்ணாலும், பிரயோஜனம் இருக்குமான்னு கூட தெரியல… ஏன்னா அவங்க பணம் படைத்தவங்க… அவங்களுக்கான உலகம் தான் இது…” என நிதர்சனமான உண்மையை சொன்னாள்.
அவளின் பேச்சில் இருந்த உண்மை புரிந்தது… போலீஸ்காரனாய் இருந்து நிறைய பார்த்துரிக்கிறான், அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் கையை கட்டிக்கொண்டு நின்ற தருணமும் இருந்திருக்குறது, அதனை ஆதரிக்க முடியாமல் கோவம் கொண்டு, மேலதிகாரிகளுக்கு தெரியாமல் செய்த சிறப்பான சம்பவங்களும் உண்டு. அதை நடைமுறை படுத்த எண்ணியவனாய்,
“க்கும்… இப்போ அந்த பொருக்கி தான் நிர்வாகம் பன்றானா?…” என குரலை செறுமியபடி கேக்க,
“இப்போ ஒரு மாசமா தான்…” என அவள் பதில் சொல்ல,
“அதுக்கு முன்னாடி இப்படிலாம் ஏதாவது இஸ்யூ வந்திருக்கா… ஐ மீன் இப்படி வேற உன்கூட ஒர்க் பண்ற கலிக், இப்படி யாராவது தப்ப நடந்துருக்காங்களா?… உங்கிட்ட மட்டும் இல்ல… வேற ஸ்டாப் கிட்டயும் சேர்த்து தான் கேக்குறேன்…” என அவன் விசாரணையை தொடங்க,
“இல்ல இல்ல… அது மாறியெல்லாம் இதுவரைக்கும் எதுவும் நடந்தது இல்ல… எங்க கரெஸ்பாண்டண்ட் அவருக்கு உடம்பு முடியாம இருக்கு… அதுனால அவங்க பையன் இப்போ தான் பொறுப்பேத்துருக்கான்…” என சொன்னாள்.
விஷ்ணு, “கல்யாணம் ஆகிட்டா அவனுக்கு…”
சிந்து, “இன்னுமில்லன்னு தான் நினைக்கிறேன்…”
“ஏதும் கால் பண்ணி, தொந்தரவெல்லாம் பண்ணுறானா?…” என அவன் கேக்க,
சிந்து, “இல்ல…”
விஷ்ணு, “நீ இப்போ என்கிட்ட பேசுறதை, உன்கூட இருக்குற பிரெண்ட்க்கு கேக்காதா?…”
சிந்து, “இல்ல… யாருமில்ல ரூம்ல… என் பிரெண்டோட அம்மா கீழ விழுந்துட்டாங்க… அதுனால அவ ஊருக்கு போயி ஒரு வரமாச்சு…”
” சரிடி இஞ்சிமரப்பா… வேலையை முடிச்சிட்டு தூங்க வந்தவனை, நீ பேசி என் தூக்கத்த கெடுத்துட்ட…” என்றான் சாவகாசமாக,
“எதே… சார்…” என அதிர்ச்சியாக சொல்ல,
“ஆமா… மணி எத்தனை இப்போ… கொத்தவரங்காய் போல குரலை ஏத்தி பேசுற நீ…” என்று அவன் நக்கலாக சொல்ல,
“சார்… நீங்க ரொம்ப வெஜிடபிள்ஸ் சாப்பிடுவீங்களா…” என அவள் வாயை கண்ட்ரோலின்றி கேட்க,
“ஏன்… நீ சமைச்சி தர போறியா…” என அவன் இடக்காக கேக்க,
“ஆஹ்…” என பதில் சொல்ல முடியாமல் வாயில் கையை வைத்தாள்.
“வாயை பொளந்துட்டு இருக்காம… போயி தூங்குற வழியை பாரு…” என்று சொல்லி போனை வைத்தான்.
“சார்… சார்…” என சொல்லியது காற்றில் தான் கலந்தது.
“எல்லாம் கேட்டாங்க… என்ன கடைசில ஒன்னும் சொல்லாம வச்சிட்டாங்க… இப்போ என்ன பண்ணனும் நான்…” என புலம்பியவள், “எப்படியும் அந்த வீராப்பு போலீஸ் சொல்லுவார்…” என அவனின் மேல் நம்பிக்கை கொண்டு, கண்ணை மூடி தூங்க முயன்றாள்.
இங்குஅவளின் நம்பிக்கையை பெற்ற மெத்தையில் படுத்திருந்த விஷ்ணுவோ, “சுண்டக்கா வோட பேச்சுல தான் முதல்ல மாற்றம் வந்துச்சி, இப்போ அவள்டயும் மாற்றம் வந்துருச்சி…” என அவளை மெல்லிய புன்னகையோடு உறங்கினான்.
இவளிடம் விசாரணையை முடித்த காவல் அதிகாரியோ, அடுத்த வாரத்தில் அந்த ரூபனுக்கு அதிரடியான தரமான சம்பவத்தை நிழத்தியிருந்தான்.
error: Content is protected !!