Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை – Epilogue

“கீர்த்தி சாப்பிட்டதும் படுக்காத கொஞ்ச நேரம் நட” என்ற திலோவை பார்த்தவள் “ப்ளீஸ் அண்ணி… என் செல்லப் பிரெண்ட்ல ரொம்ப டயர்டா இருக்கு” என்றாள் கண்கள் சொருக.

“முடியாது நீயே ஒரு டாக்டர் அதை மறந்துட்டியா அப்படியே படுத்தா ராத்திரி உனக்குத்தான் கஷ்டம் வா” என்று அவள் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

கீர்த்தியின் வளைகாப்பு இரு தினங்களுக்கு முன்புதான் நடந்திருந்தது அவளை வீட்டிற்கு அழைத்துவந்திருந்தனர், ‘முக்கியமான வேலை வந்துவிடுகிறேன்’ என்று கூறி சென்றவன் இரு நாட்களாக வரவில்லை, குன்னூரில் இருக்கிறான்.

திருமணத்திற்கு பிறகு தனியாகக் கிளினிக் தொடங்கவில்லை திலோத்தமா, மாமனாருடன் சேர்ந்து பார்த்துக்கொண்டாள் இப்பொழுது முத்துப்பாண்டி அதிகம் பார்ப்பதில்லை மருமகளிடம் கொடுத்துவிட்டு மகனுக்கு உதவியாகக் கொஞ்சம் பிசினெஸ் பார்த்துக்கொள்கிறார்.



Advertisement

வெளியில் செல்லும் மகளையும் மருமகளையும் ஆதுரமாகப் பார்த்திருந்தார் வெண்மதி, மகனுக்குத் திருமணம் என்ற ஒன்று நடக்குமா என்ற கவலையில் இருந்தவருக்கு மகனின் மனம் விரும்பியவளே மனைவியாக வந்ததும் இந்த ஒன்றரை வருடத்தில் அவள் இந்த வீட்டின் அனைத்துமாகி போனதையும் எண்ணி பார்த்திருந்தார்.

கீர்த்தியும் திலோத்தமாவும் மெதுவாகக் கதைகள் பேசிக்கொண்டே சிறிது நேரம் நடந்தனர் “அண்ணி ப்ளீஸ் டயர்டா இருக்கு” என்று மீண்டும் கீர்த்தி சொல்ல “சரி வா” என்று அவளை அவளின் அறைக்கு அழைத்துவந்து விட்டாள்.

“குட் நைட் கீர்த்தி” என்றவள் விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வந்தாள், படுத்தவுடன் உறங்கிவிட்டாள் கீர்த்தனா, கிச்சனுக்குள் வந்த திலோத்தமா “அத்தை நீங்கப் போய்ப் படுங்க நான் செய்றேன்” என்க.

Advertisement

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எல்லாம் முடிஞ்சுது நீ பொய் ரெஸ்ட் எடு” என்ற வெண்மதி “ஏன் திலோ சேனா போன் போட்டானா” என்க.

Advertisement

“இல்ல அத்த” என்றாள்.

“ஹ்ம்ம்… சரி நீ போடா மத்த எல்லாத்தயும் காலைல பாத்துக்கலாம்” என்றவர் மகளின் அறைக்குச் சென்றார், தங்கள் அறைக்குள் நுழைந்த திலோவிற்கு கணவன் நினைவே, கீர்த்தியின் வளைகாப்பு முடிந்த அன்று அவசர வேலை என்று சென்றவன் இன்னும் வரவில்லை.

பலமுறை அழைத்துப் பார்த்துவிட்டாள், அழைப்பு சென்றபோதும் அவன் எடுக்கவில்லை.

Advertisement

மறுநாள் காலைப் பூபதி பாண்டியன் கால்களுக்குத் தைலம் தடவிக்கொண்டிருந்தாள் திலோத்தமா “மார்னிங் தாத்தா மார்னிங் அண்ணி” என்று பெரிய வயிற்றை பிடித்துக்கொண்டு மெல்ல அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள்.

“மார்னிங் கீர்த்தி” என்றார்கள் இருவரும் “பொண்ணுங்களால ஏத்துக்க முடியற அளவுக்கு ஆண்களால் இன்னொரு குடும்பத்தை ஏத்துக்க முடியறதில்லை” என்றவரை இரு பெண்களும் ஆச்சர்யமாகப் பார்க்க.

“உண்மைதான் பொண்ணுங்களா இப்போ கீர்த்தி புருஷனை எடுத்துக்கோ சொந்தம்தான் ஆனாலும் இங்க வந்து தங்கும்போது அவன் வீட்ல இருக்குற மாதிரி இருக்க முடியறதில்லை, ஆனா இந்தப் பெண்பிள்ளைகளை பாத்தீங்களா புருஷன் வீட்டில இருக்குற மரம் கெடில இருந்து ஆடு மாடு கோழி நாய் பூனை மனுஷங்கன்னு எல்லாத்தயும் தன்னோட சொந்தமா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க”.

“எங்க போறாங்களோ அந்த இடத்தையும் மனுஷங்களையும் நேசிக்க ஆரம்பிச்சுடுவாங், ஆனா பாரு எங்களால ஒரு நாளைக்கு மேல பொண்டாட்டி வீட்ல கூட இருக்க முடியாது” என்றார் மெல்லிய சிறப்போடு பேத்திகளும் அவரைப் பார்த்துச் சிரித்தனர்.

“எங்க போனான் உன் புருஷன் போய் ரெண்டு நாள் ஆகுது ஒரு போனும் பண்ணல, இந்த அரசியல்வாதிங்க கூடச் சேராதான்னா கேக்குறானா இந்தத் தடவ வந்ததும் அவனை வீட்டிலேயே புடிச்சு கட்டிப்போடு” என்றார்.

முன்பெல்லாம் பூபதி பாண்டியன் அதிகம் பேசமாட்டார் திலோ வந்தபிறகு அவரிடம் பெரிதாக உற்சாகம் வந்திருக்கிறது, இங்கே யாரும் அவரைக் கவனிக்காமலில்லை மிகவும் நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள்.

என்ன சேனா அதிகம் வீட்டிலே இருக்க மாட்டான், முத்துப்பாண்டி தன்னுடைய கிளினிக்கில் இருப்பார், கீர்த்தியும் ஹாஸ்டெல்… மனிதர் தனிமையை உணர்ந்தார் திலோ வந்தபிறகு பெரிய மாற்றம்.

முதல் நான்கு மாதங்கள் வீட்டில் சும்மா என்ன செய்ய என்று யோசித்தவள் பாதி நேரத்தைப் பூபதி பாண்டியனுடன் பேசுவதிலும் கேரம் செஸ் என்று விலையுடுவதிலும் கழித்தாள், அப்படியே தாத்தாவும் பேத்தியும் பிரெண்ட்ஸ் என்று ஆகிவிட்டார்கள்.

பொதுவான நாட்டு நடப்புகள் அனைத்தையும் பேசிக்கொண்டிருந்தனர் பேச்சு இங்கிருந்தாலும் திலோவின் சிந்தனையில் பூபதிபாண்டியன் சொன்ன “அரசியல்வாதிகள்” வார்த்தை நின்றுவிட்டது முன்பும் இதுபோல் அரசியல்வாதியின் பின்னே சென்றுதானே ஒரு தவறை செய்தான், இப்பொழுது என்ன என்ற பதட்டம் வந்தது.

கணவன்மீது முழுதான நம்பிக்கை உள்ளது திலோவிற்கு அவள்மீது அவன் கொண்டிருக்கும் நேசத்தை தினம் தினம் உணர்கிறாளே, சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி அனைத்திலும் அவள் முகம் பார்த்து நடந்துகொள்கிறான் காமம் என்பதை கடந்து அவனின் ஒவ்வொரு செயலும் அவளை அனுதினமும் காதலில் திளைக்க வைக்கிறதே.

என்றாலும் எங்கோ ஒரு சிறிய முள் தைத்த உணர்வு இரவுணவிற்கு அனைவரும் அமர்ந்திருக்க “இரண்டு இட்லிகள் போதும்” என்றாள் கீர்த்தி.

“ஏண்டா” என்ற வெண்மதியை பார்த்த திலோ “அத்த அவ என்னவேணுமோ அதே சாப்பிடட்டும் ராத்திரி அதிகம் சாப்பிட்டு அவளால முடியல வேணும்னா கொஞ்சம் பால் வெச்சுக்கலாம்” என்றாள்.

“அதுவும் சரிதான்” என்ற வெண்மதி அனைவருக்கும் உணவு எடுத்து வைத்தார், வாயிலில் கணவனின் வண்டி சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து ஓடினாள் திலோ, அனைவரும் அவளைப் பார்த்துச் சிரிக்க அதெல்லாம் தெரிந்தாலும் வேகநடையில் வராண்டாவை அடைந்தாள்.

படிகள் ஏறியவன் மனைவியைப் பார்த்ததும் தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் “வாய்யா சாப்பிடு” என்றார் வெண்மதி.

“ஏன் சேனா போய் ரெண்டுநாள் ஆகுதே ஒரு போன் போட்டுச் சொன்னா என்ன அவளை ஏண்டா கஷ்டப்படுத்துற” என்ற தாத்தாவைப் பார்த்துச் சிரித்தவன் “சரிங்க எசமான்” என்றுவிட்டு “மா குளிச்சுட்டுவரேன்” என்று மேலே சென்றான்.

கணவனுடன் மேலே செல்லப் பரபரத்த மனதை அடக்கி அமர்ந்திருந்தாள் திலோ, குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தவன் அறையை நோட்டம்விட்டான் மனைவி அங்கில்லை, சேனா வீட்டில் இருந்தால் அவன் பின்னே சுற்றிக்கொண்டிருப்பாள் இப்பொழுது இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறான் இத்தனை நேரம் பாத்ரூம் வாசலிலே காத்திருந்திருப்பாள் அறைக்கே அவள் வரவில்லை என்பதே அவள் கோபத்தின் அளவை சொல்லியது.

கீழே இறங்கிவந்தவன் மனைவியின் அருகில் அமர்ந்துகொண்டான், கணவனுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள் ஆனால் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“கீர்த்தி எல்லாம் ஓகே தான எப்போ செக்அப் போகணும்” என்ற அண்ணனைத் திரும்பிப் பார்த்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்லன்னா நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்க நானும் அண்ணியும் போயிட்டு வந்துடுறோம்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்றவன் குடும்பத்தாரிடம் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தான், உண்டுமுடிந்த அனைவரும் உறங்கச் சென்றுவிட தாத்தாவை அவரின் அறைக்குக் கொண்டுசென்றுவிட்டான் அதன்பிறகு தங்கையின் அறைக்குச் சென்று பார்க்க வெண்மதியும் கீர்த்தியும் நல்ல உறக்கத்தில் இருந்தனர், அனைத்தையும் பார்த்துவிட்டுத் தங்களின் அறைக்குச் சென்றான்.

கட்டிலில் அமர்ந்திருந்த திலோத்தமா கணவனை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை அவனை நிமிர்ந்து பார்த்து அப்படியே அமர்ந்திருக்க அவள் அருகில் வந்தவன் “சாரிடா கொஞ்சம் வேலை நிறைய டென்ஷென் அதான் போன் பண்ணல” என்றபோதும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

ஆழ்ந்து மூச்செடுத்தவன் “திலோமா மினிஸ்டர் ராஜப்பனுக்கு ஒரு பிரசச்னை” என்றவன் கொஞ்சம் தயங்கி “பொண்ணு விஷயம்” என்க அவள் கண்களில் அனல் பறந்தது.

“இது அப்படியில்ல கொஞ்ச வருஷமாவே அந்த லேடி அவர்கூட இருந்துச்சு, அவரோட பொண்ணுக்கு இப்போ கல்யாணம் முடிவான நேரம் பணம் சொத்து கேட்டுப் பிரச்சனை, அவங்க கேக்குற எல்லாத்தயும் குடுக்கணும் இல்லனா பொண்ணுக்கு சம்மந்தம் பண்ணின வீட்டுக்கு எல்லா விஷயமும் போயிடும்னு மிரட்டல்”.

“மொத்தமா தட்டி தூக்கலாம்னு அவர் எண்ணம், ஆனா அது ரிஸ்க் தனக்கு ஏதாவது ஆச்சுன்னா ஆன்லைன்ல வீடியோ எல்லாம் வரமாதிரி செஞ்சு வெச்சுருக்கா, அந்தப் பிரச்சனையைத் தீர்க்கத்தான் ரெண்டுநாள் ஆச்சு” என்றவனை அவள் முறைத்தபடியே இருக்க.

“நிச்சயமா போயிருக்க மாட்டேன் அவர் நமக்குப் பிசினஸ்ல  ஹெல்ப் செஞ்சிருக்கார், அதோடா அவர் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி இதனால அந்தப் பொண்ணு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது அதுனாலதான் போனேன்” என்க அப்பொழுதும் அமைதியே அவளிடம்.

“ப்ளீஸ் திலோ உன் வாசம் இல்லாம ரெண்டுநாள் ரொம்ப கஷ்டம்டி” என்றவன் அவள் வாசத்தை நுகரத்தொடங்க அவனைத் தள்ளிவிட்டவள் “நான் இன்னும் கோவமாதான் இருக்கேன்” என்று கட்டிலில் ஏறிப் படுத்தாள்.

சிறிது நேரம் அவளைப் பார்த்திருந்தவன் அருகில் நெருங்கி இறுக்கமாக அவளை அணைத்துக்கொண்டான் திலோத்தமா திரும்பி முறைக்க “ஒண்ணுமே பன்னலடி ப்ளீஸ், ஐ நீட் அடலீஸ்ட் எ ஹக், இனிமே யார் கேட்டாலும் போகமாட்டேன் உன் மேல சத்யம்” என்றான் இன்னும் கொஞ்சம் நெருங்கி.

இரண்டு நாட்களாகத் தன்னிடம் அவன் பேசவில்லை என்ற கோபம் மட்டுமே அதோடு இது போன்ற விஷயங்களில் அவன் இனிமேல் ஈடுபடாமல் இருக்க வேண்டும் அதற்காகக் கோபத்தை இழுத்து பிடித்தாள்.

மறுநாள் கீர்த்தனாவுடன் மருத்துவமனை சென்று வந்தாள் விவரங்களைச் சரியாகக் கேட்டுக்கொண்டாள் நாட்கள் சாதாரணமாகக் கடந்து சென்றது மாதத்தில் இரண்டு முறை கீர்த்தியின் கணவன் வந்துவிடுவான் அந்த நாட்களில் வீடு கூடுதல் சந்தோஷத்தைப் பூசிக்கொள்ளும்.

கீர்த்தியை பிரசவத்திற்கு சேர்த்திருந்ததனர் அவளுடைய அத்தை மாமா அனைவரும் வந்திருந்தனர் குழந்தையை எடுத்துவந்து கொடுக்கக் கீர்த்தியின் மாமியார் வாங்கிக்கொண்டார், ஆன் குழந்தை பிறந்திருந்தது “ராஜா பிறந்திருக்கன்” என்று வெண்மதி கூற அனைவர் முகத்திலும் சந்தோஷத்தின் சாயல்.

குழந்தைக்கு இரண்டு மாதம் முடிந்திருந்ததது காலை வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவனின் பின்னையே சுற்றியவள் ஒரு கட்டத்தில் கட்டிலில் அமர்ந்துகொண்டு “மிஸ்டர் புருஷன்” என்க.

அவளைத் திரும்பிப் பார்த்தவன் ரசனையான புன்னகையோடு அவளை நெருங்கினான் “தூக்கு” என்று அவன் புறம் கையை உயர்த்தியவளை அப்படியே பூபோல அள்ளிக்கொள்ள “அங்குப் போ இங்குப் போ அதை எடு இதை எடு” என்று வேலை வாங்கினாள்.

“என்னடி” என்று அவளோடு கட்டிலில் சரிய “இனிமே இப்படித்தான் நான் சொல்ற எல்லாத்தயும் செய்யணும்” என்றவளை பார்த்தவன் “மேடம் சொல்லி எதைச் செய்யாம இருந்திருக்கேன்” என்றான் அவளோடு இழைந்துகொண்டு. “இனிமே இது வேணும் இது வேண்டாம்னு இங்க மட்டுமில்ல இங்கேயிருந்தும் ஆடர் வரும்” என்றவள் அவன் கரங்களை எடுத்துத் தன் வயிற்றில் பதித்துக்கொண்டாள்.

“திலோமா” என்றவன் ஆர்ப்பரிக்கும் மனதோடு அவளை நோக்க “ஹ்ம்ம்…” என்றவள் விழிகள் நிறைந்தது.

“ஏய்” என்று அவள் கண்ணீரை துடைத்தவன் “எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… எதுக்குடி அழற நான் நல்ல அப்பாவா இருப்பேன் திலோ” என்றான் மெல்ல சிரித்துக்கொண்டே.

“ரொம்ப நல்ல அப்பாவா இருப்பீங்க எனக்குத் தெரியும்”  என்றவள் அவன் முகத்தைக் கரங்களில் தாங்கி அழுத்தமான முத்தம் பதித்தாள் இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு கிடந்தனர் அந்தக் காலைப் பொழுதில்.

மங்காவை இங்கேயே அழைத்துவந்துவிட்டான் சேனா திலோ கருத்தரித்ததும், கீர்த்தியும் குழந்தையும் இருக்க எத்தனை ஆட்கள் இருந்தாலும் போதவில்லை, குடும்பத்தில் அனைவருக்கும் அத்தனை சந்தோஷம் மகளைப் போலவே அவளைத் தாங்கினர்.

கீர்த்தியின் மாமியார் ஐந்தாம் மாதமே மருமகளை அனுப்ப சொல்லிவிட்டார், அன்று வீட்டிற்கு வந்திருந்தவர் “அண்ணி கீர்த்தியையும் குழந்தையையும் நாங்களே பாத்துக்குறோம் நீங்கத் திலோவை பாருங்க பாவம் புள்ள அம்மா பாசம் கிடைக்காம வளந்தது, இப்போவும் பொண்ணு கர்பமா இருக்கேன்னு அவங்க வந்து பாக்குறாங்களா என் மருமகளை நான் நல்லா பாத்துக்குறேன் நீங்க உங்க மருமகளை பாருங்க” என்றவரின் கூற்றில் வெண்மதியின் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது.

அவர் மகளைப் பார்க்க “அத்தை சொல்றது சரித்தானமா நீங்க அண்ணியை பாருங்க ஆறு மாசம் இங்கதான் இருந்தேன் அண்ணியும் என்னை எவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாங்க பிரசவம் நெருங்கும்போதும் நான் வந்துடுறேன்” என்றாள்.

சொன்னதுபோலவே டெலிவரிக்கு பத்து நாட்கள் முன்பே வந்துவிட்டாள், கதிரின் மனைவி இலக்கியாவும் எப்பொழுதும் உதவிக்கு இருந்தாள் அனைவரின் அன்பிலும் மூழ்கிக்கிடந்தாள் திலோத்தமா, எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாத மன நிம்மதியான கர்ப்பகாலம் அவளுக்கு.

அழகான பெண் குழந்தையைப் பெற்றேடுக்க “வீட்டுக்கு மஹாலக்ஷ்மி பிறந்திருக்காங்க” என்று ஆசையாக வாங்கிக்கொண்டார் வெண்மதி.

ஐந்து வருடங்கள் கடந்திருந்தது இராண்டாம் குழந்தைக்குத் திருப்பதி போய் மொட்டைப் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது சேனாவின் குடும்பம்.

பூபதி பாண்டியனால் யாத்திரை செய்ய முடியாத காரணத்தால் வீட்டிலே இருந்தார், மங்காவும் இலக்கியாவும் உடனிருந்தனர் பார்த்துக்கொள்ள.

கதிர் வண்டியோட்டிக் கொண்டிருக்க பின்னில் திரும்பிப் பார்த்தான் சேனா பின்னால் இருந்த இருக்கையில் கால் நீட்டி அமர்ந்து உறங்கும் பேத்தியை மடியில் கிடத்தி நல்ல உறக்கத்தில் இருந்தார் முத்துப்பாண்டி.

அதற்க்கு முன்னில் இருந்த இருக்கையில் வெண்மதியும் திலோவும் அமர்ந்திருந்தனர் மகனை மடியில் கிடத்தியிருந்தாள் திலோ “நான் வெச்சுக்குறேன்” என்று நீட்டிய கணவனிடம் “வேண்டாம்” என்று தலை அசைத்தவள் முகத்தில் நிறைவான புன்னகை.

இதுபோல் ஒரு பயணத்தில் தான் அவன்மீதான நேசத்தை பகிர்ந்துகொண்டாள்,  துயரம் கண்ணீர் பிரிவு அனைத்தையும் கடந்து இன்று மனம் விரும்பியவனுடன் முத்தாக இரு பிள்ளைகளும்.

“கதிர் நான் ஓட்டுறேன்” என்ற சேனாவின் கூற்றில் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினான் கதிர், இடம் மாற வெளியில் இறங்கியவன் மனைவிக்கும் அன்னைக்கும் நடுவில் சீட்டில் மகனைப் படுக்க வைத்து இதற்கும் முன்னில் இருக்கும் சீட்டிற்கும் தடுப்பு போல ஒன்றை வைத்தான் பிள்ளை உருண்டு விழாமல் இருக்க.

“தூங்குடா  டயர்டா இருக்க” என்றான் திலோவிடம் கணவனைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் விழிகளை அழகாகத் தழுகிக்கொண்டது உறக்கம்.

“தங்கச்சி உங்க வாழ்க்கைல வந்ததுதான் உங்களோட பெரிய அதிர்ஷடமே” என்றான் கதிர், ஆமோத்திப்பாகச் சிரித்தவனின் முகத்தில் அவள் காதலில் திளைக்கும் பெருமிதமும் கர்வமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!