Skip to content
Post Views: 2,418
ரீங்காரமாய் என்னுள்ளே – 13
தன்னை போல் இயல்பாக பாத்து நாள் கடந்திருந்தது அந்த பள்ளியில் அவள் சேர்ந்து… பள்ளியின் லாஸ்ட் பெல் அடிக்க, அவளின் அன்றைய கடைசி வகுப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த சமயம்,
“சிந்து மிஸ்…” என ஒரு குரல் ஒலிக்க,
Advertisement
குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தாள் சிந்துஜா.
“உங்களை வசந்தா மிஸ் வர சொன்னாங்க…” என அந்த குரலின் சொந்தக்காரர் சொல்ல,
“ஒகே மிஸ்…” என அவருக்கு சொல்லிக்கொண்டு, வசந்தா மிஸ்ஸை பார்க்க சென்றாள் சிந்து.
Advertisement
தந்தை இன்று செக் அப் சென்றிருந்ததால், பள்ளி முடியும் சமயம் ஒரு விசிட் அடிக்க இன்று பள்ளிக்கு வந்திருந்தான் சூரி.
Advertisement
பெல் அடித்த சத்தத்தில் மணியை பார்த்துக்கொண்டே தந்தையான கரெஸ்பாண்டண்ட் வேணுவின் அறையிலிருந்து வெளியே வந்தான் சூரி.
ஸ்கூல் பஸ் ஏற்றும் இடத்திற்கு சென்று ஒரு முறை வளம் வந்தவன், மாணவர்கள் செல்வதை வாயிலின் ஒரு ஓரத்திலிருந்து கவனித்து பார்த்துக்கொண்டு நின்றிந்தருந்தான்.
அவன் அப்படி நின்றதை பார்த்த சிந்துவோ, ஆச்சரியமாக அவனருகில் சென்று, “அண்ணா… எப்படி இருக்கீங்க…” என அவள் வினவ,
Advertisement
மாணவர்களை கவனித்து கொண்டிருந்தவன், அண்ணா என்ற அழைப்பில் அவனின் அருகில் திரும்பி பார்க்க, அவனும் ஆச்சரியத்துடன், “ஆஹ் சிந்து… நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்க தங்கச்சி… இங்க?…” என அவன் கேள்வியாக கேக்க,
“நல்லா இருக்கேன் அண்ணா… இங்க தான் இப்போ வேலை செய்யுறேன்… சேர்ந்து ஒரு வாரம் ஆகுது ண்ணா…” என அவள் தகவலை தந்தாள்.
“ஓஹ் அப்படியா…” என அதே ஆச்சரியத்துடன் வினவ, அங்கே பல கண்கள் இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டே செல்ல, அதை கவனித்தவன், “நாளைக்கு எப்படியும், உங்கிட்ட இங்க உள்ள ஸ்டாப்ஸ் கேப்பாங்க… என்கிட்ட பேசுனதை…” என்றவன், “அப்படி கேட்டா, என்னோட அண்ணா… சொந்தம்ன்னு சொல்லிடு… சரி ஆஹ்?…” என அவன் கேக்க,
அவனை குழப்பமாக பார்த்த சிந்துவோ, “ஏன் அண்ணா… நீங்க இந்த ஸ்கூல்ல…” என கேக்க வர,
சூரியின் போன் அடிக்க, அதனை எடுத்துக்கொண்டே, “ஒகே… தங்கச்சி… அப்பறம் பாக்கலாம்…” என சொல்லிவிட்டு, போன் பேச தள்ளிச் சென்றான்.
அது அவனின் ஸ்கூல் தான் என அறியாத பேதையோ, “இந்த அண்ணா வோட பையன் இல்ல பொண்ணு இந்த ஸ்கூல்ல படிக்குறாங்க போல… அடுத்த முறை யாருனு கேட்டுதெரிஞ்சிக்கணும்…” என மனதில் நினைத்துக்கொண்டு தன் விடுதிக்கு செல்வதற்க்காக பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்றாள்.
– – – – –
ஒரு வழியாக விடுதிற்கு வந்து சேர்ந்து தன்னை சுத்தம் செய்துகொண்டு, அவளுடைய கட்டிலில் அமர, வித்யுவின் ஞாபகம் தானாய் வந்தது.
இந்த பத்து நாட்களாக இது இவளின் வாடிக்கை ஆகியிருந்தது. பள்ளியை விட்டு வந்தவுடன், அவளிற்கு கால் செய்வது.
போனை எடுத்து வித்யுவிற்கு டயல் செய்துகொண்டு, மறுமுனை எடுப்பதற்காக காத்திருக்க,
“சொல்லுங்க அம்மணி… ஸ்கூல் முடிஞ்சி வந்தாச்சா?…” என அந்த பக்கம் வித்யு கேக்க,
“ஆமா வித்யு… நீ?…” என்றாள்.
“ஹ்ம்… வந்தாச்சு… வந்தாச்சு…” என கடுப்பாக சொன்னாள்.
“என்ன ஆச்சு வித்யு…” என சிந்து அக்கறையாக கேக்க,
வித்யு, “போடி… இப்போ இருக்குற கரசோட பையன் ரொம்ப பண்ணுறான்…” என்றாள் எரிச்சலாக,
“நீ என்ன பண்ணுன…” என தோழியை அறிந்தவளாக கேக்க,
வித்யு, “இங்க பாரு… நீ அந்த ப்ரசன்னாக்கு சப்போர்ட் பண்ணாத சொல்லிட்டேன்…”
“நான் எங்க சப்போர்ட் பண்ணுனேன்… நீ என்ன பண்ணுணன்னுதான் கேட்டேன்…”
வித்யு, “இதுலயே தெரியலையா…”
சிந்து, “சரி… என்னனு முதல்ல சொல்லு…”
“நான் பர்மிஷன் இல்லாம ஒரு வாரம் எக்ஸ்ட்ரா லீவு போட்டேன்னு என்னை, நான் திரும்ப ஸ்கூலுக்கு வந்தனைக்கு என்னை திட்டுனானா… அப்போவே அவனை எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேன்ல…” என்றவள்,
” அப்பறம் எனக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் போட்டு, சிலபஸ் முடிச்சி தர சொன்னான்… அது கூட ஒகேன்னு ஒத்துக்குறேன்…” என சொல்லி, சிறிது நேர இடைவெளி விட்டு, “இப்போ பசங்க ஆன்வல் டேக்கு நான் செலக்ட் பண்ணுன, சாங்கை மாத்த சொல்லிட்டான்…” என்று கோவமாக சொல்லிவிட்டு, “இன்னொரு குரூப் பசங்களுக்கு டான்ஸ் கத்து தந்ததுளையும், வேற ஸ்டெப்ஸ் மாத்தணும்னு கரெக்ஷன் சொல்லுறான்…” என அவனை பற்றி புகார் படித்தாள் வித்யு.
” இப்போ புது மேனேஜ்மென்ட்ல வித்யு… அதுனால அவங்க எல்லாம் கொஞ்சம் கவனமா பாத்து தானே பண்ணனும்… அதுக்காக கூட இருக்கலாம்…” என சிந்து தன் எண்ணத்தை பகிர,
“இதை தான் சொல்லுறேன்… நீ அவனுக்காக தான் பேசுவன்னு…” என நண்பியை திட்ட,
“அது அப்படி இல்ல வித்யு…” என சிந்து சொல்லவர,
“நீ ஒன்னும் சொல்லாத போ… அவனுக்கு இருக்கு… அவன் வேணும்னே பண்ணுற போல தான் இருக்கு… அவனை பாத்துக்குறேன்…” என சூளுரைத்தாள் வித்யு.
“எதாவது வாய் துடுக்கா பேசி மாட்டாத வித்யு…” என அறிவுறுத்தினாள் சிந்து.
வித்யு, “பாத்துக்கலாம் விடு…” என்றவள்,
“அப்பறம் காக்கி சட்டை மச்சான் என்ன சொல்லுறாரு?… இன்னைக்கு எங்கயாவது பாத்தியா?…” என சிறிது;கொண்டே கேக்க,
தோழியின் கிண்டலில் மனம் லயித்தாலும், பேச்சில் அதை சிறிதும் காமிக்காமல், “நீ அடங்கவே மாட்டியா வித்யு… தினமும் இதே கேள்வி கேள்வி தான் கேக்குற…” என சிந்து அவளிடம் கேக்க,
வித்யு, “இப்படி கேக்க கேக்க தான் இஷ்டம் வருமாம்… இஷ்டம் வந்தா தான் பிடித்தம் வரும்… அதுக்கு தான் கேக்குறது…” என வாயடிக்க,
“என்னமோ சொல்லு…” என அந்த பேச்சினை முடிக்க பார்க்க,
“உண்மையை சொல்லு சிந்து… உனக்கு அந்த போலீஸ் அண்ணாவை பிடிக்கும் தானே…” என விடாமல் வித்யு இன்றும் அதே கேள்வியை கேக்க,
வித்யு இந்த கேள்வியை கேட்டாலே, பேச்சை மாற்றிவிடும் சிந்து, இப்போது சிறிது நிமிடம் அமைதி காத்து, “பிடிக்காது…” என்ற வார்த்தையை சொல்ல பிடிக்காமல், ” ஆசைப்படுறது எல்லாமே கிடைக்குறது இல்ல… அது மாறி தான் இதுவும்… அதனால ஆசை படாத வரைக்கும் நல்லது…” என அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வது போல, தோழியிடம் சொன்னாள்.
வித்யு, “என்னத்துக்கு இந்த தத்துவம் இப்போ…”
“பச்… என்ன வித்யு… விடேன்… வேற சொல்லு…” என்று சிந்து இப்போது வித்யுவிடம் கேக்க,
“என்னத்தை விட சொல்லுற… தினமும் நானும் கேக்குறேன்… வேற எதையாவது சொல்லி மழுப்புவ… இன்னைக்கு என்ன தத்துவம் சொல்லுற… ஆசை, தோசைன்னு…” என்று வித்யு கடுப்படிக்க,
“ஆஹ்… அதே தான்…” என்ற சிந்து, “ஆச… தோச… அப்பள வட…” என சொல்லி சிரித்தாள்.
வித்யு, “அப்படியே பேச்சை மாத்தாதே… சொல்லிட்டேன்…”
சிந்து, “சரி…”
“என்ன சரி… அந்த அண்ணாகிட்ட சொன்னியா?… நீ இங்க தங்கி இருக்கன்னு?…” என அடுத்து கேள்வி கேட்டாள் வித்யு.
“என்ன வித்யு நீ… உங்கிட்ட நான் சொன்னேன் தானே… இங்க ஜாயின் பண்ணுனதுக்கு அப்பறம் கால் பண்ணுனேன்… ஒகேன்னு மட்டும் சொல்லிட்டு வச்சிட்டாங்க ன்னு… அதுக்கப்பறம் நானும் பேசல… அப்பறம் எதுக்கு திரும்பி திரும்பி கேக்குற?…” என கொஞ்சம் கோவமாக பதில் சொன்னாள் சிந்து.
“ஆஹ்… ஆமா… சொன்னல்ல… மறந்துட்டேன்…” என மழுப்பினாள் வித்யு.
“ம்ம்…” என்று சொன்னாள் சிந்து.
“நான் இந்த வீக் உன்னைய பாக்குறதுக்கு வரேன்… சப்ரைஸ் ஆஹ் வரலாம்னு நினச்சேன்… பட் என் வாய், அதுவே ஒளறிட்டு…” என சிரிப்பாக வித்யு சொல்ல,
“ஹா ஹா… சரி… பாக்கலாம்…” என்று சொன்ன சிந்து, அடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.
– – – — –
ஹாலில் அமர்ந்து டீயை ஒரு சிப் அருந்தி, மசாலா அவல் பொரியை வாய்க்குள் ஒரு பக்கம் வைத்துக்கொண்டே, “ம்… செம்ம டேஸ்ட் மம்மி… மொறு மொறுன்னு க்ரிஸ்பி…” என்றான் சூரி.
விசாலாட்சி, “ரெட் ரைஸ்ல பண்ணணுனா அவல்டா… நல்லா இருக்குல்ல…” என அவரும் டேஸ்ட் செய்துகொண்டே சொன்னார்.
“ம்ம்…” என சாப்பிட்டுக்கொண்டே கூறியவன், “வைஷுக்கு தான் ரொம்ப பிடிக்கும்…” என சேர்த்து சொன்னான் சூரி.
விசாலாட்சி, “சொல்ல மறந்துட்டேன் பாரு… நாளைக்கு வரேன்னு சொன்னாடா…” என்றார் தகவலாக,
“என்ன மம்மி திடீர்ன்னு… அவளோட ஜீவ் விட்டுட்டு எப்படி வரா?…” என சிரித்தவாறே கேக்க,
விசாலாட்சியும் சிரித்துக்கொண்டே, “சஞ்சீவ்… எதோ அவங்க கம்பெனி விஷயமா ஒரு வாரம் வெளில போறாங்களாம்… அதான் மேடம்க்கு நம்ம ஞாபகம் வருது…” என சொன்னார்.
சூரி, “அதானே பாத்தேன்…”
“என்னத்த பாத்த?…” என கேட்டுக்கொண்டே வந்தான் விஷ்ணு.
சூரி, “என்னடா நீ போலீசுன்னா… இப்படி விசாரணையோட தான் வரணுமா?…”
“உனக்கு அப்படி தோணுச்சுனா… அப்படி தான்…” என சொல்லி தோலை குலுக்கினான்.
“போடா… இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல…” என்ற சூரி,
“என்னடா போலீசு… மாறுவேஷத்துல வர… எங்க உன்னோட போலீஸ் உடுப்பு…” என கிண்டலாக கேட்டான்.
“அதான் மறுவேஷத்துல இருக்கேன்னு சொல்லுறியே… அப்பறம் எதுக்குடா கேக்குற…” என்றான் விஷ்ணு.
சூரி, “மம்மி… இவனை பாருங்க…” என புகார் சொல்ல,
“ஆரம்பிச்சிட்டீங்களா…” என அன்னை அவர்கள் இருவரையும் பார்த்து சளித்தார்.
“ஏண்டா மம்மி பாய்… எதுக்கெடுத்தாலும் என்ன மம்மி… கல்யாணம் ஆகப் போது…” என அவனை கடிந்தவன்,
“இதுலாம் நீங்க சொல்லி தர்றது இல்லையா… அப்பறம் நாளைக்கு மருமக வந்து உங்களை தான் கேள்வி கேப்பா…” என விடாமல் அன்னையையும் வாரினான்.
“ம்க்கும்…” என முகத்தை சுளித்தான் சூரி.
“என்னடா… மூஞ்சியை மூணார் வரைக்கும் திருப்புற?…” என அதட்டலாக கேக்க,
சூரி, “பின்ன என்னடா… மானு என்கிட்ட பேசவே மாட்டுறா…” என்றான் கோவமாக,
விஷ்ணு, “எதுக்கு இப்போ உங்கிட்ட பேசணும்…”
“மம்மி… இவனை பாருங்க…” என்றான் சூரி.
அதுவரையில் யோசனையில் இருந்த விசாலாட்சியோ, சூரியை பார்த்தார்.
“என்னவாம் இப்போ உங்க மம்மிக்கு… மூளையெல்லாம் யூஸ் பண்ணுறாங்க போல…” என அன்னையிடம் பார்வை வைத்துக்கொண்டே சூரியிடம் வினவ,
சூரி, “அடேய்… உன்னையெல்லாம் எங்க மம்மி என்னனு தான் பெத்தாங்கன்னு தெரியலைடா…” என்றவன்,
“மம்மி… என்ன அமைதியா இருக்கீங்க… இவனுக்கு நீங்க தான் சரி… பேசுங்க அவனை…” என சொன்னான்.
இன்று காலையிலும் மீண்டும் மகள் சொன்ன விஷயத்தையும், அடுத்து மகளின் மாமனார், கணவரிடம் கோடிட்டு காட்டிய பேச்சை அசை போட்டவராய் இருந்த விசாலாட்சி, தற்போது மகனிடம் பேசிவிட முடிவெடுத்து, “ஆமாடா சூரி… ஒரு பெரிய யோசனை…” என சாதரணமாக சொன்னார்.
“என்னனு சொல்லுங்க மம்மி… இவனை பத்தியா?…” என கேட்டான் சூரி.
“ஆமாடா… உனக்கு பொண்ணு ஒகே ஆகிட்டு… அடுத்து இவனுக்கு என்னனு யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றார் அவனிடம்.
“அதை அவன்கிட்டயே கேளுங்க…” என நண்பனை கைகாட்டினான் சூரி.
அன்னையின் செயல்களை அவதானித்து கொண்டிருந்த விஷ்ணு, அன்னையை கேள்வியாக பார்க்க,
“விஷ்ணு உன்னை நம்ம சொந்தக்காரங்க சிலர், அவங்க பொண்ணுக்கு மாப்பிளை ஆகணும்னு ஆசைப்படுறாங்கடா…” என சொல்லிவிட்டு அவனை பார்த்தார் அன்னை.
” அழகான பையன்… எலிஜிபிள் பேச்சிலர்… அப்படி இருந்த கேக்க தான் செய்வாங்க… இதுல என்ன யோசனை…” என விஷ்ணு தோரணையாக கேக்க,
சூரி நண்பனின் பேச்சில் வாயில் கையை வைத்தானென்றால், விசாலாட்சியோ “இவனிடம் கேட்டதற்கு கேக்காமலே இருந்திருக்கலாம்…” என மனதில் நினைத்து மகனை முறைத்தார்.
அதனை கண்டுகொள்ளாமல், ” ஹாஸ்பிடல் செக் அப்ல என்ன சொன்னாங்க…” என விஷ்ணு கேக்க,
“எல்லாம் ஒகே தான்… டையர்டு ஆஹ் இருக்குனு படுத்துருக்காங்க…” என பதில் சொன்னான் சூரி.
“ஒகே…” என சொல்லி அவனின் ரூமிற்க்கு செல்ல எழுந்தான் விஷ்ணு.
அப்போது தான் ஞாபகம் வந்தவனாக, “டேய் விஷ்ணு… சிந்து உனக்கு ஞாபகம் இருக்குல்ல… நம்ம ஸ்கூல் தான் ஜாயின் பண்ணிருக்காடா… நான் பாத்தேன் இன்னைக்கு, அப்பாக்கு பதில் நான் தானே இன்னைக்கு ஸ்கூலுக்கு போனேன்… அப்போ…” என விளக்கமாக சொல்ல,
“எனக்கு தெரியும்…” என பதில் சொல்லிக்கொண்டே சென்றான்.
“என்னா…” என இவன் அதிர்ந்து அவன் சென்ற வழியை பார்க்க,
அன்னையோ, “யாருடா சிந்து…” என கேட்டார்.
“சிந்துவா…” என அன்னையிடம் கேட்டவன், அன்றைக்கு நடந்ததை விவரித்தான் சூரி.
“எப்படிடா சூரி உனக்கு இப்படி ஒரு அறிவு…” என அவனுக்கு த்ரிஷ்டி சுத்தி கேக்க,
சூரி, “போங்க மம்மி… படத்துல லாம் இப்படி தானே செய்வாங்க… அதான் நானும் பண்ணுனேன்…” என்றான் முறுக்கியவனாக.
அவனை பார்த்து பல்லை கடித்தவர், சற்று முன்னர் எனக்கு தெரியும் என சொல்லி சென்ற மகனை பற்றி யோசித்தவர், இதை கணவனிடம் சொல்வதற்காக அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
சூரி, “நான் போயி அவன்கிட்ட, மானு கிட்ட பேசுறதுக்கு ஹெல்ப் கேட்டுட்டு வரேன்…” என விசாலாட்சியிடம் சொல்லி, மேல விஷ்ணுவின் அறைக்கு சென்றவன், அவன் போனை பார்த்துக்கொண்டிருக்க,
“டேய்… எனக்கு மானுக்கிட்ட பேசுறதுக்கு ஹெல்ப் பண்ணுடா…” என கேக்க,
“கிளம்பு… எனக்கு இப்போ முக்கியமாக போன் பேச போறேன்…” என போனை பார்த்துக்கொண்டே சொல்ல,
“சரி… நான் அப்பறம் வரேன்…” என வெளியே செல்ல,
“கதவை சாத்திட்டு போடா…” என குரல் கொடுத்தான் விஷ்ணு.
“பண்ணுறேன்… பண்ணித்தொலையுறேன்…” என சொல்லி, நண்பன் சொன்னதை செய்துவிட்டு வெளியேறினான்.
——-
விஷ்ணு போனை டயல் செய்து அவனின் சுண்டக்கா எடுப்பதற்காக காத்திருக்க,
அந்த புறம் அவள் எடுத்ததும்,
“ஒய்… சுண்டக்கா… எங்க ஆளையே காணும்…” என அவன் கேக்க,
“ஆஹ்… இல்ல சார்…” என அவள் பதில் சொல்ல,
விஷ்ணு, “என்ன நொள்ள சார்… அப்பறம் எதுக்கு பாவக்காய் மாறி பதுங்கிருக்கிங்க…”
“சார்…” என அவள் இழுக்க,
“என்ன பதில் சொல்லு…” என அவன் கறாராக கேக்க,
“அது… நீங்க தான் அன்னைக்கு இங்க ஜாயின் பண்ணிட்டேன்னு சொல்லும் போது, ஒகேன்னு சொல்லிட்டு வச்சிட்டீங்க…” என்றாள் புகாராக காவல் காரனிடமே.
தலையை ஒரு கைகளால் கோதிக்கொண்டே, “ஓஹ்… நான் அன்னைக்கு வேலைன்னு வச்சிட்டேன்… அதுனால நீ அடுத்து பேசல… அப்படி தானே…” என விஷ்ணு அதட்டலாக கேட்டான்.
“தான் எதற்காக பேச வேண்டும்…” என யோசிக்காத பாவையோ, “இல்ல… நீங்க பிஸி ஆஹ் இருப்பீங்கன்னு…” என மெதுவாக சொல்ல,
விஷ்ணு, “நீ அடுத்து பேசுனாதானே தெரியும்… அதெப்படி, நீயே நினச்சிபியா?…”
இவனின் கேள்வியில் கண்ணை கட்ட, “சார்… சாப்பிட்டீங்களா?…” என்றாள் பேச்சை மாற்றி.
அவள் பேச்சை மாற்றுவது புரிந்து நமுட்டு சிரிப்புடன், “ஏன்?… இங்க ஜாயின் பண்ணுனதுக்கு ட்ரீட் வைக்க போறியா எனக்கு?…” என்றான் இடக்காக,
“எப்படி கேட்டாலும் மடக்கி பேசும் இவரை, என்ன தான் பண்றதுன்னு தெரியலையே…” என அவளின் மனது புலம்ப, ” ட்ரீட் கொடுக்குறேன் சார்…” என்றாள் பவ்யமாக,
விஷ்ணு, “ஓஹ்… எல்லாமே நான் இப்படி கேட்டாதான் கிடைக்குமா…” என்றான் பொருள் பொதிந்த கேள்வியுடன்.
இதை தவறாக நினைத்த அவாளின் மூளையோ சடுதியில், “சார்… நீங்க தானே உங்க பணத்தை, நேரா குடுக்க சொல்லி சொன்னிங்க…” என்ற பதிலை சொல்ல,
அவளின் பதிலில் பல்லை கடித்த விஷ்ணுவோ, “நான் சொல்லியும் நீயா எந்த ஸ்டேப்பும் எடுத்து, என்னைய பார்த்து கொடுக்குறது போல தெரியலையே…” என கேட்டான் அழுத்தமாக,
அந்த பக்கம் அமைதி நிலவ,
“என்ன சுருங்கி போன சுரக்கா போல மூஞ்சியை வச்சிருக்கியா?…” என கடுப்பாக கேக்க,
“ஆ…” என என்ன சொல்வதென தெரியாமல் முழித்தாள் சிந்து.
“என்ன… இப்போ என்ன சொல்லுறதுன்னு முழிக்குறியா?…” என அவன் சரியாக கேக்க,
“ஆமா…” என சொல்லியவள், பின்பு தலையில் தட்டி கொண்டு, “இல்ல… இல்ல…” என அவசரமாக மாற்றி சொன்னாள்.
அவளின் பதிலில் வாய் வரை வந்த சிரிப்பை அடக்கியவன், “போலீஸ்காரன் கிட்டயே பொய் சொல்லுற…” என்றான் மிரட்டலாக,
“சார்…” என பதறி சொல்ல,
“என்ன கேட்டாலும் சார் மட்டும் தான் வருது…” என சொல்லி சலித்தவன், “நீ தான் என்னைய பாத்து காசு கொடுக்க முயற்சி எடுக்கல… அதுனால இந்த வாரம் இந்த பிளேஸ்க்கு வா…” என அவளிடம் ஒரு இடத்தை சொல்லியவன், “ஒகே…” என அவளிடம் பதிலையும் பெற்றுக்கொண்டு போனை வைத்தான்.
error: Content is protected !!