Skip to content
Post Views: 7,168
அத்தியாயம் 3
“பாப்பா எழுந்துட்டாங்கல்லாம்மா? பார்த்துட்டு வந்தியா?” என்று சீதா ரசிகாவிடம் கேட்க, இல்லம்மா பால் கொண்டு போகணும். அதான் அடுப்புல வச்சிருக்கேன். என்னம்மா திடீர்ன்னு கேக்குறீங்க?
சன்டே வாக இருந்தாலும் இந்த நேரத்திற்கு ஆதி தம்பி தேனீருக்காக அழைச்சிடுவாங்க. ஆனால் இன்று எந்த சத்தமும் வரலை. அதான் பாப்பாவை பற்றி கேட்டேன்.
சார், வெளிய வந்த மாதிரி இல்லம்மா. அதனால பாப்பாக்கள் அவங்களுடன் இருக்க மாட்டாங்க என்றாள் ரசிகா.
Advertisement
அம்மா, பாப்பாக்கள் அறைக்கும் தம்பி அறைக்கும் இடையே ஓர் கதவு உள்ளேயே அமைக்கப்பட்டு இருக்கு. அவர் நினைத்த நேரம் சென்று பார்ப்பார். எப்போதும் தம்பி அழைக்கும் நேரம் கடந்து விட்டது.
“தம்பி, அறையில தான் பசங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றார் சீதா.
நான் எப்படி பிள்ளைகளுக்கு பால் கொடுப்பது? ரசிகா கேட்க, தம்பி அறைக்கதவை தட்டும்மா. திறந்ததும் உள்ள போய் கொடும்மா. அப்படியே தம்பிக்கும் தேனீரை கொடுத்துட்டு வாம்மா என்றார்.
Advertisement
அம்மா, நான் இங்கே சமையலை பார்த்துக்கிறேன். நீங்க கொடுத்துட்டு வர்றீங்களா? ரசிகா கேட்க, பாப்பா உன்னை தானம்மா தேடுவாங்க. நீ குடுத்துட்டு வந்துரு. தம்பி பிள்ளைகள பார்த்துப்பார் என்றார்.
Advertisement
முதலில் பிள்ளைகள் அறைக்கு சென்று பார்த்தாள். அவர்கள் இல்லை என்றதும் ஆதிரேயனின் அறைக்கதவை தட்டினாள்.
அவன் கதவை திறந்தான். ரசிகாவை பார்த்ததும் லிதுவும் நிதுவும் ஓடி வந்து அவளது காலை கட்டிக் கொண்டனர். ரசிகா கையில் இருந்த ட்ரே ஆட்டம் கண்டது.
“ஹே, பார்த்து என்று ட்ரேயை பிடிக்கிறேன்” என்று அவள் பிடித்திருந்த கையில் அவன் கை பட்டு விட, ரசிகா ட்ரேயை கீழே விட்டாள்.
Advertisement
பிள்ளைகள் மேல் பட்டு விடுமோ? என்று கையை விடவும் லிது நிதுவை தன்னுள் அணைத்துக் கொண்டாள் ரசிகா. கீழே விழாமல் இருப்பதால் அவள் நிமிர்ந்து பார்த்தாள். ஆதிரேயன் கையில் ட்ரேயை வைத்துக் கொண்டு அவளை பார்த்தான்.
லிது நிதுவை விலக்கி விட்டு, நீங்க சமத்தா பால் குடிங்க. நான் உங்களுக்கு சாப்பாடு தயார் செய்ய போகிறேன் என்று எழுந்தாள்.
ரசி நில்லு. “வா நிது” என்று லிது நிது கையை பிடித்துக் கொண்டு நாங்களும் உன்னுடன் வாரோம் என்றாள்.
லிது, நான் சமையல் செய்ய போகணும். நீங்க அப்பாவுடன் விளையாடுங்கள். வேலை முடிந்ததும் நாம குளிச்சிட்டு விளையாடலாம். “ஓ.கே” என்று ரசிகா புன்னகைக்க, இருவரும் கையை கட்டிக் கொண்டு எதிராக அமர்ந்தனர்.
“எப்படியும் நீ ட்ரே எடுக்க வரணும்ல்ல. பத்து நிமிடம் தானே! வாங்கிட்டு போ. வந்து உட்காரு” என்று அவன் அமரச் சொல்ல, “இருக்கட்டும் சார்” என்று அவன் கையில் வைத்திருந்ததை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, பிள்ளைகளை அமர வைத்து பாலை நீட்டினாள்.
ரசி, நாங்க உன்னோட மடியில தான் அமர்ந்து கொள்வோம் என்று நிது சொல்ல, வேறு வழியில்லாமல் அமர்ந்து அவனை பார்க்க, அவனும் தேனீரை எடுத்துக் கொண்டு கால் மீது கால் போட்டு அமர்ந்து இவர்களை கவனித்துக் கொண்டே தேனீரை பருகினான்.
அவனுள் ரசிகா பற்றி ஒரு சந்தேகம். அவன் பேட்டியில் சொல்லி விட்டு வந்த சற்று நேரத்தில் அவன் சொன்னது போல் ஒரு பொண்ணு அடிபட்டு வந்தது. அவளும் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறேன் என்றதும் பேட்டியை பார்த்து தனக்கு வலை விரிக்கிறாளோ? என்று நினைத்தான்.
ஆனால் அவள் வாழ்க்கையில் நடந்ததை கேட்டும் பிள்ளைகளை அவள் திருத்தி பார்த்துக் கொள்ளும் விதத்தில் நாம் தான் தவறாக புரிந்து கொண்டோம் என்று நினைத்தான்.
பாலை குடித்த பிள்ளைகள் விளையாடணும் என்றனர். ரசி, ஒரே ஒரு விளையாட்டு ப்ளீஸ் என்றாள் நிது.
கிச்சு கிச்சு விளையாடலாமா? என்று லிது கேட்க, ஓகே பருப்பு கடஞ்சி கடஞ்சி காக்காக்கு ஊத்து..என சொல்லிக் கொண்டே இது அப்பாவுக்கு என்று நிது விரலை உருவி ஆதிக்கு கொடுப்பது போல் செய்ய, அவள் கையில் சிகரெட் சுட்ட வடு இருந்ததை பார்த்து, உனக்கு காயம் இன்னும் ஆறவில்லை என்றால் ஓய்வெடுக்கலாமே? அவன் கேட்டான்.
அவனை பார்த்து விளையாண்டு கொண்டே, இப்ப பரவாயில்லை சார். டாக்டர் சார் கொடுத்த மருந்தால் இப்ப ஓ.கே தான் என்று சொல்லி விட்டு லிதுவிற்கு கிச்சு கிச்சு மூட்ட, நிது எழுந்து ஓடினாள்.
ஹே, ஓடினால் விட்டுருவோமா? லிது வா..என்று ரசிகா அவளுடன் நிதுவை பிடிக்க ஓடினர். அறையில் ஒரே சிரிப்பு சத்தம் எல்லாரும் ஆதி அறையை பார்த்தனர்.
நிது நான் உன்னை பிடிச்சிட்டேன் என்று லிது நிதுவை பிடிக்க, கண்ணாடியால் செய்யப்பட்ட புத்தகம் அடுக்கி இருந்த அலமாரியில் முட்ட சென்ற நிதுவை பார்த்து, ரசிகா அவள் முட்ட வந்த இடத்தில் இருந்த கண்ணாடியில் அழுந்த கையை வைத்தாள். கண்ணாடி உடைந்து அவளுடைய அதே கையில் அங்கங்கு குத்தியது. அவள் கொடுத்த அழுத்ததில் அலமாரி அவர்கள் மேல் விழ வந்தது. பிள்ளைகள் பயந்து கத்த அப்பொழுது போல் இருவரையும் ரசிகா தன்னுள் கட்டிக் கொண்டாள்.
அலமாரி விழவில்லை. ரசிகா நிமிர்ந்து பார்க்க, தன் இரு கைகளாலும் அலமாரியை பிடித்துக் கொண்டு நின்றான் ஆதி. அது மரத்தாலானதால் அவனுக்கு அடிபடவில்லை. உள்ளிருந்த புத்தகங்கள் அவள் மீது விழ, கைகளை திருப்பி அவனும் திரும்பி, மூவர் முன்னும் வந்து பிடித்துக் கொண்டு நின்றான். லிதுவும் நிதுவும் ஆதியை பார்த்தனர்.
ஒரு நிமிடம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரசிகா, பிள்ளைகளை தூக்கிக் கொண்டு நகர்ந்தாள். அவன் அதை பின்னே தள்ளி நிறுத்தி அவன் நகர்ந்து நிற்க புத்தகங்கள் அனைத்தும் கொட்டியது.
குட்டீஸ் கொடுத்த சத்தத்தில் மூவரும் மேலே வந்தனர். நகர்ந்த ஆதி ரசிகாவிடம் சென்று அவள் கையை இழுத்து உள்ளங்கையை பார்த்து, குத்தியிருந்த கண்ணாடி சில்லுகளை அவன் எடுக்க, புருவத்தை சுருக்கிக் கொண்டு இதழ்களை வாயில் மடித்துக் கொண்டு ஷ்..ஷ்..என்று சத்தம் கொடுத்தாள்.
ஆதி அவளை பார்த்து விட்டு, ஊதி ஊதி மெதுவாக எடுத்தான். அவளுக்கு வலியில் அப்பொழுது ஏதும் தெரியவில்லை. அவள் கையை அவன் விட்டு கட்டு போட அவன் வைத்திருந்த முதலுதவி பெட்டியில் இருந்ததை எடுத்து அவளிடம் வந்தான். அவள் கண்ணீருடன் இருக்க, லிதுவும் நிதுவும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் பஞ்சை மருந்தில் நனைத்து காயத்தில் வைக்க அவளுக்கு எறிந்தது. அவள் அழுது கொண்டே அவனிடமிருந்து கையை உருவினாள். அவள் அழுவதை பார்த்து லிதுவும் நிதுவும் அழுதனர்.
“அமைதியா இருக்கீங்களா?” என்று அமைதியாக குழந்தைகளிடம் கேட்டான். அவர்கள் வாயில் கை வைத்தனர்.
மெல்லினா அறைக்குள் செல்ல, அவள் கையை பிடித்த பிரபாகரன் “இரு” என்றார்.
ஆதி அவளை முறைத்துக் கொண்டே கட்டிட்டான். அவள் கண்ணீரை துடைக்க,” ஆர் யூ மேடு?” என்று கத்திக் கொண்டே கையை ஓங்கினான். ரசிகா பயந்து கண்ணை மூடினாள்.
ஆதி..என்று பிரபாகரன் சத்தமிட்டார். தன் அப்பாவை பார்த்து அமைதியானான். தன் பிள்ளைகளையும் ரசிகாவையும் பார்த்து விட்டு சட்டையை எடுத்து கண்ணாடியை போட்டுக் கொண்டு அவன் வெளியே சென்றான். போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் பிரபாகரன்.
அவர் முன் வந்த ரசிகா, சாரி சார் என்று கண்கலங்கினாள். இரு நாட்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம்மா. நல்லா ஓய்வெடு. எல்லா காயமும் குணமாகட்டும். அப்புறம் பிள்ளைகளை பார்த்துக்கோ.
“மெல்லினா தமிழுக்கு போன் செய்து வரச் சொல்லு” என்றும் முனியா, “இடத்தை சுத்தம் செய்” என்றும் கட்டளையிட்டும் சென்றார்.
மெல்லினா ரசிகாவை ஒருவாறு பார்க்க, அவளோ வலியில் கையில் ஊதிக் கொண்டிருந்தாள். லிதுவும் நிதுவும் ரசிகாவை பார்த்துக் கொண்டே நின்றனர்.
ரொம்ப வலிக்குதா ரசி? லிது கேட்க, கொஞ்சமா தான் என்று கண்ணீரை துடைத்து விட்டு, அவளை தூக்க, வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்ம்மா என்று சீதாம்மா சொன்னார்.
அம்மா, நான்..
சார் சொன்னார்ல்ல. அறைக்கு போம்மா. ஓய்வெடுத்துக்கோ என்று அவரும் முகம் மாறி சரியாக கூட பேசாமல், ரசிக்கு அடிபட்டிருக்குல்ல பாட்டிகிட்ட வர்றீங்களா? என்று அவர்களிடம் பேசிக் கொண்டே குழந்தைகளை தூக்கிச் சென்றார்.
நான் ஏதும் தப்பு செய்துட்டேனா? என்று ரசிகா யோசனையுடன் சீதாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மெல்லினா ரசிகாவிடம் வந்து, அவளது கையையும் அவளையும் பார்த்தாள்.
என்ன? ரசிகா கேட்க, ஒன்றுமில்லை. ரொம்ப பெயினா இருக்கா? என்று அவள் கை வைத்து உடைந்த இடத்தை பார்த்தாள். உடைந்த கண்ணாடி துண்டுகள் கூர்மையாக இருந்தது.
ஆமா என்று தலையசைத்தாள் ரசிகா.
அந்த கண்ணாடியில் கை வைக்கும் போது உடைந்தால் கை கிழித்து விடுமோன்னு பயமா இல்லையா? மெல்லினா கேட்டாள்.
பயமா தான் இருந்தது. நிது தலை கண்ணாடியில் பட்டிருந்தால், அய்யோ..என்ன ஆகி இருக்கும்? ரசிகா பேச, அவளை பார்த்து உறைந்து நின்றாள் மெல்லினா.
நிதுவுக்காக உங்களுக்கு அடிப்பட்டாலும் பரவாயில்லைன்னு தான் செய்தீங்களா? மெல்லினா கேட்க, எனக்கு அந்நேரம் நிதுவுக்கு ஏதும் ஆகிடக்கூடாதுன்னு தான் தோணுச்சு.
உங்களுக்கு நிது அவ்வளவு முக்கியமா? மெல்லினா கேட்க, சற்றும் யோசிக்காது லிது, நிது இருவரும் எனக்கு ரொம்ப முக்கியம் தான். இப்ப அவங்க என்னோட பொறுப்புல தான இருக்காங்க?
அதனால் உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா?
பரவாயில்லை. சின்னப்பொண்ணும்மா அவங்க. அவளால கண்ணாடி துண்டு சிறியதாக கீறினாலே தாங்க முடியாது. தலையில் அடிப்பட்டிருந்தால்..என்று கண்கலங்கிய ரசிகா. அவள் கஷ்டப்படுவதை பார்ப்பதை விட இது எவ்வளவோ நல்லது. மெல்லினா ரசிகாவை அணைத்தாள்.
வெளியே சென்ற ஆதியால் கேட்டை தாண்ட முடியவில்லை. ரசிகாவின் காயமே முன் வந்து கொண்டிருந்தது. நானா அவளுக்கு மருந்து போட்டு விட்டேன்? ஊதி விட்டேன். நான் என்ன தான் செய்கிறேன்? என்று கோபமாக தனியே நின்று பேசிக் கொண்டிருந்தேன்.
பிரபாகரன் தன் மகனிடம் ஏதோ பேசி அவனை உள்ளே அழைத்து சென்றார். மெல்லினாவும் ரசிகாவும் பேசுவதை இருவரும் கேட்டனர்.
“டேய் ஆதி, உன்னை சும்மா விட மாட்டேன்டா” என்று கத்தினான் “டி குரூப் சக்தி”.
எதுக்கு இப்ப கத்திட்டு இருக்க? அவனுடன் போட்டி போடுவதை விட்டு உன் கவனத்தை நம்ம தொழிற்சாலை, எஸ்டேட்டை கவனிக்க பாரு என்று அவன் அப்பா ராஜபாண்டி சொன்னார்.
அந்நேரம் ஓடி வந்த ஒருவன், பாஸ் நமக்கு அந்த ஆதியை பழிவாங்க ஒரு நல்ல விசயம் கிடச்சிருக்கு என்றான் திலிப்.
“வெளிய போடா” ராஜபாண்டி அவனை திட்ட, அப்பா நான் அம்மாவை அழைக்கணுமா? நீங்க கிளம்புங்க என்று சக்தி சொல்ல, சொன்னா கேட்க மாட்ட. ஏதாவது செய் என்று அவர் சென்றுவிட்டார்.
என்னடா விசயம் சொல்லு? ஆர்வமாக சக்தி கேட்க, சார் ஆதி வீட்ல அவன் குழந்தைகளை பார்த்துக்க ஒரு பொண்ணு வந்திருக்காளாம். கருப்பழகியாம். அவள் கழுத்தில் தாலி கூட இருக்காம். அவள் இன்று ஆதி குழந்தைக்காக அவள் கையை இரத்தமாக்கிக் கொண்டாளாம். ஆதியும் அந்த பொண்ணை பார்க்கும் விதம் வித்தியாசமா இருக்காம்.
என்னது கருப்பழகியா? தாலியா? என்று பயங்கரமாக சிரித்தான் சக்தி.
அவனுக்கு பிடிக்க வேற செய்யுதா? இது போதுமே எனக்கு. நல்லா அவனையும் அந்த பொண்ணையும் கவனிங்க. நான் அந்த பொண்ணை பார்க்கணுமே?
இப்ப முடியாது பாஸ். ஆனால் பார்க்க முடியுதான்னு பார்க்கலாம் என்றான் அவன்.
பள்ளியிலிருந்தே என்னிடம் ஆட்டம் காட்டுறான். நல்லா சிக்கினான் டா என்று சக்தி புன்னகையுடன் சென்றான்.
இரண்டு நாட்கள் அமைதியாக கழிந்தது. ரசிகாவும் வெளியே வரலை. பாப்பாக்கள், மெல்லினா, சீதாம்மா, வேலை செய்பவர்கள், பிரபாகரன் என அனைவரும் ரசிகாவை அடிக்கடி சென்று பார்த்தனர். அவள் அறையை கடந்து செல்லும் போது ஓர் நிமிடம் நின்று சாத்தி வைத்திருந்த கதவை பார்த்துக் கொண்டு அவனறைக்கு சென்று வந்தான் ஆதிரேயன். அவனது செயல்களை கண்டும் காணாதது போல் அனைவரும் இருந்தனர்.
பையன் அவனாக தேர்ந்தெடுத்து விடுவானோ? என்று தமிழரசனுக்கு ஒரே சந்தோசம். வீட்டில் நடந்த அனைத்தையும் பிரபாகரன் தமிழரசரிடம் சொல்லி இருப்பார்.
பிரபாகரனுக்கும் ரசிகாவை பிடிக்கும். ஆனால் அவள் திருமணமானவள். கணவன் திருந்தி வந்தால் சென்று விடுவாள் என்றும் தன் மகன் அவளை திருமணம் செய்து கொண்டால் தெரிந்தவர் தெரியாதவர் அனைவரும் தன் மகனை பற்றி தவறாக பேசுவார்களோ? கேலி செய்வார்களோ? என்ற பயம். ஆனால் ஆதிரேயன் விருப்பத்தை தடுக்கவும் அவருக்கு மனம் வரவில்லை.
பிடிக்காத பொண்ணை கட்டிக் கொண்டு அவன் பட்டது போதும். இனி திருமணமென்றால் அவன் விரும்பி செய்யணும் என்று எண்ணினார்.
அவளுக்கு அனைத்தும் குணமாக ரசிகா வெளியே வந்தாள். தமிழரசன் அவளை பார்த்து, அம்மா ஏதாவது ஸ்வீட் எடுத்து வாம்மா என்றார். அவரும் அவளை பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்ததால் இருவரும் நன்றாக பேசி இருப்பர்.
எதுக்குப்பா ஸ்வீட்? அவள் கேட்க, அப்பாவா? என்று ஆதிரேயன் இருவரையும் பார்த்தான்.
என்னமோ தெரியலை. சாப்பிடணும் போல இருக்கும்மா.
ஓ.கேப்பா. இப்பவே எடுத்துட்டு வாரேன் என்று மகிழ்ச்சியுடன் ஓர் துள்ளலுடன் அவள் செல்ல, அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரேயன்.
என்ன மாப்பிள்ள? அந்த பையன் தொந்தரவு கொடுக்கிறானோ? என்று தமிழரசன் ஆதியிடம் சக்தியை பற்றி கேட்டார்.
அவன் சின்னப்பிள்ளை தனமா இருக்கான் மாமா.
அப்படி சாதாரணமா எடுத்துக்காதீங்க? எதுக்கும் கவனமாக இருங்க என்று அவர்கள் சக்தியை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
ரசிகா அவள் செய்த பால்கோவாவை எல்லாருக்கும் கொடுத்தாள்.
“நாங்க கேட்கவேயில்லை” என்று மெல்லினா சொல்ல, அப்பாவுக்கு மட்டும் எப்படி செய்து தருவது? எல்லாரும் அவர் சாப்பிடுவதை பார்த்தால் அவருக்கு வயிறு வலிக்குமே? என்று அவரை பார்த்தாள்.
ஓ..அப்ப இந்த பால்கோவாவில் அவர் மீதுள்ள பாசத்தால் செஞ்சிருக்க? எங்க மேல உனக்கு பாசமேயில்லை. நீ ரொம்ப மோசம் என்றாள் மெல்லினா.
ஓய், அதை நீ சொல்றியா? நீ தான என்னை திட்டிக்கிட்ட இருப்ப? இப்ப என்ன என்னிடம் பாசத்தை எதிர்பார்க்குற? என்று மெல்லினா அருகே வந்து ரசிகா அமர, லிதுவும் நிதுவும் அவள் மடியில் அமர்ந்தனர்.
நாம அப்புறம் ஆர்கியூ பண்ணலாம். எல்லாரும் சாப்பிடுங்க என்று அவள் குழந்தைகளுக்கும் எடுத்து வைத்தாள்.
லிது அதை சாப்பிட்டு விட்டு, ரசி இது உன்னை போல் ஸ்வீட்டா இருக்கு என்று ரசிகா கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஓ..அப்படியா? ரசிகா புன்னகையுடன் கேட்க, நிதுவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, எனக்கு இன்னும் வேண்டும் என்றாள்.
நிதும்மா, எல்லாமே சாப்பிடலாம். எதுவாக இருந்தாலும் சாப்பிட என்று அளவு உள்ளது. அதை தாண்டி செல்லக்கூடாது என்று ரசிகா விளக்கமளித்தாள்.
போ ரசி. தர மாட்டேன்னு சொல்லீட்டேல்ல நிது கையை கட்டிக் கொண்டு திரும்பி நின்றாள்.
உனக்கு தினமும் ஸ்வீட் புது புதுசா செய்து தாரேன். ஆனால் கொஞ்சமாக தான் தருவேன்.
புதுசாவா?
ம்ம்..எனக்கு எல்லா ஸ்வீட்டும் செய்யத் தெரியும் என்றாள்.
எல்லாமேவா?
ம்ம்..
பாதாம் அல்வா.
செய்வேனே?
கேசரி?
ம்ம்..
பால்பேடா, காஜூ கட்லி, பாதுஷா, பாசந்தி..என மெல்லினா அடுக்க, நான் செய்திடுவேன். நீ இத்தனையும் சாப்பிடுவாயா? ரசிகா கேட்க, எல்லாத்தையும் எப்படி? முடியாதுப்பா..
உனக்கு எப்படிம்மா எல்லாமே செய்யத் தெரியும்? பிரபாகரன் கேட்க, சார் அண்ணா, ஸ்வீட் ஸ்டால் வச்சிருந்தான். அதனால பழக்கம் என்றாள்.
ஆதிரேயன் எழுந்து சாப்பிட அமர்ந்தான்.
“சீதாம்மா, எங்களுக்கு எடுத்து வைம்மா” என்ற தமிழரசன் “வாங்க எல்லாரும்” என்று அழைத்தார்,
ரசிம்மா, நீ பசங்களுக்கு கொடுக்கணும்ல்லம்மா? முதலிலே நான் கொடுத்துட்டேன் என்றான் ஆதிரேயன்.
மாப்பிள்ள பிள்ளைகளுக்கு நீங்களா கொடுத்தீங்க? தமிழரசன் ஆச்சரியமாக கேட்க, ஏன் மாமா என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கக் கூடாதா? என்று கேட்டுக் கொண்டே ரசிகாவை பார்த்தான்.
தாத்தா, அப்பா தான் இட்லி ஊட்டி விட்டார் என்றாள் நிது.
“சரி, நீங்க விளையாடுங்க” என்று ரசிகாவை பார்த்து, நீயும் உட்காரும்மா சாப்பிடலாம் என்றார்.
நான் அப்புறம் சாப்பிடுகிறேன்ப்பா என்றாள்.
என்னடா பிரபா? அமைதியா இருக்க? தமிழரசன் கேட்க, உட்கார்ந்து சாப்பிடும்மா. சாப்பிட்டு முதல்ல சவியோட பேசும்மா என்றார் அவர்.
ஆதிரேயன் அனைவரையும் பார்த்தான். எல்லாரும் அவளுடன் நெருக்கமாக பேசுறது போல் இருக்கே? என்று சிந்தித்தான். அவளும் அமர்ந்து சாப்பிட்டாள்.
“அம்மா, நில்லுடா” என்று ரசிகாவை நிறுத்திய தமிழரசன், மாப்பிள்ள நீங்க எங்கள கோவில்ல விடுறீங்களா? என்று கேட்டார்.
கோவிலுக்கா? என்று ஆதிரேயன் ரசிகாவை பார்த்தான்.
“அப்பா, நீங்க போயிட்டு வாங்க” என்றாள் ரசிகா.
இல்லம்மா, குட்டிப்பிள்ளைகளுக்கு காது குத்திய பின் ஒரு முறை கூட யாருமே கோவிலுக்கு போகலை. அதான் குடும்பமாக போகலாம்ன்னு தோன்றியது.
அப்பா எல்லாரும் குடும்பமா போறீங்க? போயிட்டு வாங்க. எனக்கு நேரமிருக்கும் போது நான் சென்று கொள்கிறேன்.
என்னம்மா இப்படி சொல்ற? என்னோட பொண்ணா என்னுடன் வர மாட்டாயாம்மா? அவர் கேட்க, நான் எப்படி வர்றது? அவள் கேட்க, நீயும் எங்களுள் ஒருத்தி தான்ம்மா என்று தமிழரசன் சொல்லிக் கொண்டே ஆதிரேயனையும் பிரபாகரனையும் பார்த்தாள்.
ஆமாம்மா, நீயும் வா என்று பட்டும் படாமலும் அழைத்தார் பிரபாகரன்.
நம்ம டாக்டர் சார், இந்த அளவு யாருக்காகவும் பேசியதில்லை தாயி. நீ போயிட்டு வா. பெரிய அம்மாவை நான் பார்த்துக்கிறேன் என்றார் சீதா.
அக்கா, நான் எப்படி? ரசிகா மேலும் தயங்க, இவங்க செய்யும் அனைத்தையும் புரிந்து கொண்ட மெல்லினா, அதான் வரலைன்னு சொல்றாங்கல்ல. .விடுங்களேன் என்று தன் அண்ணனை பார்த்தாள். அவன் தன் பொண்ணுங்களை பார்க்க இருவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
மாமா, நானும் வாரேன். ஆனால் ஒரு மணி நேரம் தான் என்று கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டு, எனக்கு நிறைய வேலை இருக்கு. வர்றவங்க சீக்கிரம் வாங்க என்று ஆதிரேயன் எழுந்து செல்ல, தமிழரசன் புன்னகைத்தார்.
புள்ளைங்கல்ல விட்டுட்டு போக முடியாது. அவங்கள கூட்டுட்டி போய் உன்னை கேட்டால் நாங்க என்ன செய்வது? என்று தமிழரசன் ரசிகாவிடம் கேட்டார்.
அப்பா, முதல்ல வீட்ல சாமி கும்பிடணும் என்று ரசிகா மெல்லினாவை பார்க்க, நமக்கு வேலை சொல்லிடுவாளே? என்று ஓட இருந்த மெல்லினாவிடம்,
உன்னோட அம்மாவுக்கு உடல் சரியில்லைன்னா. பூஜை அறையை இப்படி தான் போட்டு வைப்பாயா? ரசிகா கேட்க,
ரசிம்மா, நாங்களே எல்லாத்தையும் தயார் செய்து தந்தாலும் சின்னம்மா அந்த அறைப்பக்கம் போகவே மாட்டாங்க என்று சீதா சொல்ல, வாய்க்குள் முணங்கிக் கொண்டே மெல்லினா நின்றாள்.
அப்பா, பத்து நிமிடம் தர்றீங்களா? ரசிகா கேட்க, அவர் வந்து கொண்டிருந்த ஆதிரேயனை பார்த்தார். சரிம்மா நீ எடுத்துக்கோ என்றார் பிரபாகரன்.
பூஜை அறை நன்றாக தான் இருந்தது. ஆனால் பூக்கள் போடாமல் சுத்தமாக இருந்தது. அம்மா..என்று ரசிகா அழைக்க, இரும்மா இப்ப வந்திடுறேன் என்று தோட்டத்திற்கு அவர் செல்ல, மெல்லினா நீ தான் உன் அம்மா இடத்திலிருந்து செய்யணும் என்றாள்.
என்னது நானா?
இந்த வீட்டுக்கு சொந்தக்காரின்னு சொன்னா மட்டும் போதாது. செயல்ல காட்டணும் என்றாள் ரசிகா.
இன்று நீங்க செய்வீங்களாம். நாளையிலிருந்து நான் செய்வேனாம் என்றாள் மெல்லினா.
நானா? நான் எப்படிம்மா உன் வீட்டில் செய்வது? நீ தான் செய்யணும். அதுவும் இப்பொழுதே. நீ என்ன செய்ற? என்று அவளுக்கு வேலை கொடுத்து விட்டு ரசிகாவும் தோட்டத்து பக்கம் சென்றாள்.
ஆண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, மெல்லினா புலம்பிக் கொண்டே செய்தாள்.
மாமா, நேரமாகுது என்று ஆதிரேயன் சொல்ல, சார் இன்னும் ஐந்தே நிமிடம் தான் என்று ஓடி வந்த ரசிகா அவனிடம் சொல்லி விட்டு, இந்தாம்மா இதை சாமிக்கு போடு என்றாள்.
இதை எப்படி போடணும்? என்று ஓர் ரோஜாவை எடுத்து சாமிபடத்தில் மெல்லினா வைக்க நிற்க மாட்டேன் என்றது.
“அய்யோ, நிற்கவே மாட்டேங்குது” என்று முகத்தை சுளித்தாள் மெல்லினா.
ஓய், எதுக்கு முகம் சுளிக்கிற? உனக்கு ஆடை எடுக்கும் போதும், ஹர் ஸ்டைல் செய்யும் போதும் நேரம் எடுத்து தான செய்வ? அது போல் பொறுமையா செய்யணும் என்றாள் ரசிகா.
சரி, ஆனால் ஒரு முறை செய்து காட்டலாமே? என்றாள். ரசிகா உதவ, இருவரும் செய்து கொண்டிருந்தனர். நாளையிலிருந்து பூக்களை மாலையாக்கி தருவேன். நீ தான் எல்லாமே செய்யணும். புரியுதா? ரசிகா கேட்க, இதை எப்படி கத்துக்கிட்டீங்க? அவள் கேட்க, சிலமணி நேரம் அமைதியாகி விட்டு அண்ணிய பார்த்து கத்துகிட்டேன் என்றாள்.
கிளம்பலாமா? ஆதிரேயன் கேட்க, இருடா போகலாம். வெகு நாட்களுக்கு பின் இன்று தான் ஏதோ மகாலட்சுமியே வீட்டிற்கு வந்தது போல் இருக்கு பிரபாகரன் கூறினார்.
என்ன சொன்னீங்க? ஆதி கேட்க, தாமரை மலரில் வீற்றிருக்கும் அந்த மகாலட்சுமியை சொன்னேன் என்று எழுந்து பூஜை அறைக்கு சென்றார். மற்றவர்களும் பின்னே சென்றனர். ரசிகா வெளியே வந்து அவர்களுடன் நின்று கொண்டாள்.
ரசிகா சொன்னது போல் ஆராத்தி காட்டி பிரசாதத்தை எடுத்து வந்தாள் மெல்லினா. அனைவரும் ஆராத்தியை தொட்டு கும்பிட்டு விட்டு விபூதி, குங்குமம் இட்டுக் கொண்டனர். ஆதி வைத்து விட்டு செல்ல, ரசிகா விபூதியை எடுத்துக் கொண்டு குங்குமத்தை வெறித்தாள். எல்லாரும் அவளை பார்க்க, ரசிம்மா உன்னோட முடிவை எடுத்திட்டியா? என்று தமிழரசன் கேட்டார்.
எல்லாரும் அவரை அதிர்ந்து பார்க்க, அவரை பார்த்த ரசிகா, எனக்கு தெரியலை என்று சொல்லிக் கொண்டே குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி பொட்டின் கீழே அழகாக வைத்துக் கொண்டு, கையை நெற்றிக்கு மேலே கொண்டு செல்ல, மெல்லினா திரும்புகிறேன் என்று அவளை இடித்தாள். அவள் கையிலிருந்த குங்குமம் கீழே விழுந்தது.
அப்பாடா என்று இருந்தது மற்றவர்களுக்கு. பிரபாகரனுக்கும் மனதினுள் ரசிகா வைக்கக் கூடாதுன்னு நினைத்தார். ஆனால் சீதா அவர்களை பார்த்துக் கொண்டு மெல்லினாவிடம் குங்குமம் கேட்டு, அவர் ரசிகாவின் தலையில் வைத்து விட்டார்.
ரசிம்மா, உனக்கு அவனை பிடிக்காது என்றாலும் உன் கழுத்தில் அவன் கட்டிய தாலி இருக்கும் வரை நீ குங்குமம் அவனுக்காக இட்டு தான் ஆகணும். இல்லை அவனுக்கு ஏதாவது நடந்து விடும். நமக்கு எதற்கு அந்த பாவம்? என்று ஆண்களை பார்த்தார். அவள் கண்ணீரை துடைத்து விட்டு நகர்ந்தாள். எல்லாரும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.
ரசிகாவிற்கு ஆதிரேயன் தான் பார்த்துக் கொள்ளும் லிது, நிதுவின் அப்பா மட்டுமே. ஆனால் அவனுக்கு தான் அவளது குங்குமத்தை பார்க்க வலிப்பது போல் இருந்தது.
கோவிலை அடைந்ததும் எல்லாரும் இறங்கி மாலையை வாங்கிக் கொண்டு செல்ல, ஆதி யோசனையுடனே ரசிகாவுடன் சேர்ந்து செல்ல, அனைவரும் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர்.
எதிரே வருபவரை பார்த்து இவர்கள் குடும்பம் முறைத்துக் கொண்டே சென்றனர். சக்தியின் அம்மா சாவித்ரியும், அப்பா ராஜபாண்டியும் இவர்களை புன்னகையுடன் பார்த்தனர்.
ரசிகா அருகே வந்த சாவித்ரி, உன்னோட பேரு என்ன? என்று கேட்டார். அவள் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டே வந்ததால் இவர்களது முறைப்பை கவனிக்கவில்லை.
ரசிகா புன்னகையுடன் அவர்களை பார்த்து பெயரை சொல்ல ந்தாள். ஆனால் அதற்குள் ஆதி அவர்களிடம், “வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போங்க” என்றான்.
“நான் இப்ப என்ன கேட்டுட்டானாம்?” என்று சாவித்ரி திரும்பிக் கொண்டு சென்றார்.
ஏய், ரசி அவங்களிடம் எதுக்கு பேசுற? மெல்லினா சத்தமிட, அவங்க பெரியவங்க. என்னோட பேர் தான கேட்டாங்க? அதான்..
அதெல்லாம் நீ யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஆதி சொல்ல, ரசிகா புரியாமல் விழித்துக் கொண்டு அவனை பார்த்தாள்.
வழிபாடு முடிந்து பிரசாதம் கொடுக்க, குங்குமத்தை வாங்க ரசிகா கையை நீட்டினாள். அவளை வாங்க விடக் கூடாது. வைக்க விடக் கூடாது என்று ஆதி இடையே கையை விட்டான். முதலில் ரசிகா விட்டு விட்டாள்.
மீண்டும் அவள் கையை நீட்ட, ஆதி அவள் கையின் மேலே அவன் கையை நீட்டினான். அவள் அவனை பார்க்க, அவள் நீட்ட அவன் நீட்ட, எல்லாரும் அவர்களை பார்த்தனர். அவர்களுக்கு தெரிந்த பூசாரியான அவர் ஆதியின் செய்கையில் பிரபாகரனை பார்த்தார்.
அவர் கண்ணசைக்க, குங்குமத்தை அவர் உள்ளே எடுத்து சென்றார். ஆதி கையை நீட்டிக் கொண்டே நிற்க, அவன் கையிலிருந்து குங்குமத்தை எடுத்து விட்டு ஓடினாள் ரசிகா.
ஹே, அது என்னிது. கொடுத்துட்டு போ. நீ வைக்காத என்று அவனும் அவள் பின்னே ஓடினான். பிரகாரத்திற்கு வந்து ஓரிடத்தில் அமர்ந்து அவள் நெற்றியில் மட்டும் வைக்க, கொடு என்று அவள் கையிலிருந்து பிடுங்கினான்.
நான் வச்சுட்டேனே? என்றாள் ரசிகா.
இல்லையே? என்று அவன் பிடுங்கியதை கீழே போட்டான்.
“சார், குங்குமத்தை கீழ போடக்கூடாது” என்றாள்.
எல்லாரும் ஆதியின் வேடிக்கையான செயல்களை ரசித்தும் அவன் மனதில் ரசிகா வந்து விட்டாள் என்று புரிந்தும் கொண்டனர்.
அப்பா, என்ன பண்ணுறீங்க? என்று பசங்களும் அவர்களும் ஓடி வந்தனர். அவன் தன் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு ரசிகா அருகே அமர்ந்தான்.
பிரபாகரன், தமிழரசன் இருவர் கண்ணிலிருந்தும் வந்த ஆனந்ததுளிகள், தன் மகன் திருமணத்திற்கு பின் ஒரு நாள் கூட குடும்பத்துடன் இருந்ததில்லை என்று வருந்தினர்.
இலக்கியாம்மா? நீ பார்க்கிறியா? உன்னோட புருசனுக்கு என்ன தேவைன்னு உனக்கு இப்ப புரியுதா? அவரிடம் வீண்வாதம், அதிகாரம், ஏமாற்றம், துரோகம் எல்லாத்தையும் திணித்து அவர் வாழ்க்கையை கெடுத்துக்கிட்ட. மாப்பிள்ளைக்கு தேவையான பாசம், காதலை தவிர்த்து விட்டு வேதனை அளித்து சென்று விட்டாயம்மா. நீ கொடுத்த மொத்த வேதனையையும் தீர்க்க தான் ரசிகா வந்திருக்காள் என்று கண்கலங்கினார் தமிழரசன்.
அனைவரையும் ஆதி வீட்டில் விட்டு அவன் வேலையை கவனிக்க சென்றான். என்றும் இல்லா புத்துணர்வை ஆதியிடம் இடம் கண்ட அகரன், சார் நல்ல மூடுல இருக்கீங்க? என்று கேட்டான்.
ஆதிரேயன் பதிலளிக்காமல் புன்னகைத்தான்.
நான் எத்தனை முறை சிரிக்க சொல்லி கேட்டிருப்பேன். செய்யவே மாட்டீங்க? இப்ப எப்படி சிரிச்சீங்க? யார் சார் சிரிக்க வைத்தது? அவன் கேட்க, அதற்கும் பதில் புன்னகையை கொடுத்தான் ஆதி.
ஓ.ஹோ..அப்ப உங்க சிரிப்புக்கு காரணம் ஒரு பொண்ணு தான? யார் சார் அந்த பொண்ணு? அவன் கேட்க, அவன் புன்னகையுடன் “வேலைய பாருடா” என்று அவன் கேபினுக்கு சென்றான்.
சற்று நேரத்தில் ரசிகா போனிற்கு வந்த வீடியோவை பார்த்து பதறி, சீதாம்மாவிடம் அதை காட்டினார். அவரும் பதட்டமாக பார்த்து, இரும்மா..அய்யாவுக்கு போன் செய்யலாம் என்று பிரபாகாரனிற்கு அழைப்பு விடுத்தார்.
அவரும் கம்பெனிக்கு சென்றிருக்க, போனை அணைத்து வைத்திருந்தார். சீதாம்மா ரசிகாவிடம் சொல்ல, அவள் தமிழரசனை அழைத்தாள்.
அவர் பேச, அவரிடம் சொல்லி விசயத்தை அனுப்பினாள்.
அம்மா, நான் அந்த கிளப்புக்கு போய் பார்க்கிறேன். நீ ஆதியை அழைச்சிட்டு வாம்மா என்றார்.
அப்பா, அவர் நம்பர் என்னிடம் இல்லையே?
இரும்மா, நான் கால் பண்றேன் என்று அவர் அவனை அழைக்க அவன் எடுக்கவில்லை.
இப்ப என்னப்பா செய்றது? புள்ளைகள சீதாவை பார்த்துக்க சொல்லீட்டு உனக்கு சிரமம் இல்லைன்னா நீ ஆதி ஆபிஸிற்கு சென்று அவனை அழைச்சிட்டு வாம்மா. வெளிய ஓர் கார் இருக்கும். ஆள் அனுப்புறேன். நீ சீக்கிரம் தயாராகும்மா என்றார்.
சரிப்பா, நான் இப்பொழுதே தயாராக தான் இருக்கேன் என்றாள். ஐந்தே நிமிடத்தில் நம்ம டிரைவர் வந்திருவான். பார்த்து போயிடுவேல்லம்மா என்று தமிழரசன் கேட்க, நான் என்ன சின்னப்பிள்ளையாப்பா? சீக்கிரம் போய் பாருங்க என்று போனை வைத்து விட்டு லிது, நிதுவிடம் பேசி அவர்களை சீதாவிடம் விட்டு சென்றாள் ரசிகா.
ரசிகா ஆதிரேயனின் சாக்லெட் தொழிற்சாலையை பார்த்தாள். உள்ளே சென்று வரவேற்பரையில் இருந்த பொண்ணிடம், ஆதி சாரை பார்க்கணும். “இட்ஸ் எமர்ஜன்சி” என்றாள்.
அவளை அங்கிருந்த அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.
ஹலோ, உங்களிடம் தான் கேட்கிறேன். “ஐ வான்ட் டூ சீ வித் யுவர் பாஸ்” என்றாள் பதட்டமாக.
சாரி மேம், அவர் மீட்டிங்கில் இருக்கார். அவரை உங்களால் சந்திக்க முடியாது என்றாள் அந்த பெண்.
வெரி இம்பார்டன்ட். உங்க பாஸ்ஸோட முக்கியமான விசயம். அவரோட உதவியாளர் யாராவது இருந்தா சொல்லுங்க? என்று ரசிகா கேட்க, அந்த பொண்ணு அகரனை அழைத்து விசயத்தை சொன்னாள்.
வாரேன் அவன் வரவும் ஆதிரேயன் மீட்டிங் முடிந்து வரவும் சரியாக இருந்தது. ரசிகாவை அகரன் பார்க்க, இருவரையும் பார்த்தவாறு, “இவள் இங்கே என்ன செய்கிறாள்?” என்று ரசிகாவை பார்த்துக் கொண்டே வந்தான்.
ஹேய், ருச்சி என்று ரசிகாவிடம் ஓடி வந்தான் அகரன்.
ஹேய், அகரா நீயும் இங்கே தான் இருக்கிறாயா? என்று மகிழ்ச்சியுடன் இருவரும் கைகளை இடித்து அவர்கள் சைனை போட்டுக் கொண்டிருந்தனர்.
அகரன் ரசிகா கையை பிடித்து, வாட் எ சர்பிரைஸ்? நீ இங்க எப்படி வந்த? என்று கேட்க, நான்..என்று தயங்கினாலும் அதை விடு. நீ ஆதி சார்கிட்ட தான் வொர்க் பண்றியா? அவள் கேட்க, ஆதி சாரா? அவரை உனக்கு தெரியுமா? என்று கேட்டான்.
“அகரா, ரொம்ப முக்கியமான விசயம் அவரை இப்பொழுதே பார்க்கணும்” என்று ரசிகா அவன் கை மேல் கையை வைக்க, ஆதி கோபமாக இருவர் முன்னும் வந்து, என்ன செய்றீங்க? சத்தமிட்டான்.
“சாரி சார்” என்று அகரன் அவள் கையை விடுவித்துக் கொண்டு அவள் தாலியை பார்த்து அதிர்ந்து, மீண்டும் ரசிகா முன் வந்து, “ருச்சி, நீ கல்யாணம் பண்ணிட்டியா?” என்று அவன் முகம் மாறியது.
“அகரா, நாம அப்புறம் பேசலாம். சார், ரொம்ப முக்கியமான விசயம் வாங்க” என்று ரசிகா ஆதி கையை பிடிக்க, எல்லாரும் அவளை அதிர்ந்து பார்த்தனர். அகரன் உடைந்து கண்ணீருடன் ரசிகாவையும் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
சார், வாங்க என்று ஆதியை வந்த வெளியே இழுத்து சென்று கொண்டிருந்தாள் ரசிகா. அவன் அகரனையும் அவளையும் பார்த்துக் கொண்டே அவள் இழுத்த திசைக்கு ஏதும் சொல்லாமல் செல்ல, அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அம்மு..அகரன் அழைக்க, ஆதி கையை விட்டு அகரனை பார்த்தாள் ரசிகா. ஆதி அதிர்ந்து இருவரையும் பார்த்தான். அகரன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் முகம் மாற்றத்தை பார்த்த ரசிகா மனதினுள் இவன் என்னை காதலித்தானா? அம்முவா? அது இவனா? என்று கண்ணீருடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அகரன் கண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, அவனது வுல்லன் கோர்ட்டை கழற்றி ரசிகாவின் தோளில் போட்டு விட்டு, இது நம்ம ஊர் இல்ல. வெளிய வரும் போது கனமான ஆடையை போட்டுட்டு வா. உனக்கு தான் இந்த கிளைமேட்டே சேராதே என்றான்.
அகரா, அது நீ தானா? என்று ரசிகா கேட்க, அவன் தலைகவிழ்ந்து கொண்டே “ஆம்” என்று தலையசைத்தான்.
ஏன்டா, அப்பவே சொல்லி இருக்கலாம்ல்ல. இது கூட விளையாட்டா உனக்கு? “எல்லாமே முடிஞ்சு போச்சு” என்று அகரனை இழுத்து அணைத்து அழுதாள். அவனும் அவளை அணைத்தான். ஆதி கோபமாக கையை முறுக்கிக் கொண்டு, ரசி என்று கத்தினான்.
அகரன் அவனை பற்றி எல்லாவற்றையும் ஆதியிடம் சொல்லி இருப்பான். அவனுக்கு அம்முவான ரசிகா மீதான காதல். அது வேற ஆதியை கோபத்திற்குள்ளாக்கியது.
அனைவரும் பயந்து அவரவர் வேலையை பார்க்க, அகரன் கண்ணீருடன் இருந்தாலும் ஆதியின் கோபம் அவனை சிந்திக்க வைத்தது.
எல்லாரும் இருக்கும் போது அகரனிடம் இவ்வாறு நடந்து கொண்டதால் ஆதி கோபப்படுகிறான் என்று நினைத்து “சாரி சார்” நான் வந்த வேலையை விட்டு.. என்று,
அகரனை பார்த்து “நாம பேசணும்”. ஆனால் இப்ப வேண்டாம் என்று ரசிகா முன்னே வெளியே கண்ணீருடன் ஓடினாள்.
error: Content is protected !!