Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே – 14.1

ரீங்காரமாய் என்னுள்ளே – 14.1

“டேய் சூரிண்ணா… எழுந்திரு…” என இம்முறை அவனின் தோலில் அடித்து எழுப்பினாள், வைஷு.

“ஆஹ்… மம்மி… வலிக்குதே…” என எழுந்தமர்ந்தான் சூரி.

“நீயெல்லாம் ஒரு அண்ணன்னா… தங்கச்சி வீட்டுக்கு வந்திருக்கேன்… பாஞ்சி எழுந்து வந்து விசாரிக்காம, போனா போகுதேன்னு நானே வந்து உன்னைய அடிச்சி எழுப்பி கூட எழுந்திரிக்காம பப்பரக்கான்னு தூங்கிட்டு இருக்க…” என அவனை வசை பாட,



Advertisement

“உன் தொல்லை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன்… வந்ததும் அடிச்சி எழுப்பிட்டு, இதுல கேள்வி வேற கேக்குற…” என தூக்கம் கலைந்த கடுப்பில் பேசினான் சூரி.

“இன்னும் ஒரு வாரம் இப்படி தான்… வா வா… உனக்கு நிறைய சுடச் சுட செய்தியெல்லாம் வச்சிருக்கேன்…” என தங்கை ஆசைகாட்டி சொல்ல,

“இந்த ஜீவ் எப்படி உன்னை வச்சி மேய்க்குறான்னு கொஞ்சம் சொல்லேன்…” என அவளிடம் வினவினான் சூரி.

Advertisement

” இங்க பாரு சூரிண்ணா… உனக்கு அப்பறம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்… போ…” என அவனிடம் முறுக்கிக்கொள்ள,

Advertisement

“உப்பு பெறாத விசயத்தை சொல்லுறதுக்கு, தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிருக்க… சரி சரி… என்னனு சொல்லு…” என அவன் சலிப்பாக சொல்ல,

வைஷு, ” நீ போயி ஒழுங்கா பிரெஷ் அப் ஆகிட்டு கீழ வா… அப்போ தான்…”

“எதே… அதுலாம் முடியாது… இன்னைக்கு சண்டே… 10 மணிக்கிட்ட எழுந்தா தான்… அந்த நாளுக்கே மரியாதை…” என அவன் திரும்பி படுத்துக்கொண்டே சொல்ல,

Advertisement

” இங்க பாரேன்… நீ ரொம்ப பண்ணுற… மணி இப்போ ஒன்பதாக போது… ஒழுங்கா எழுந்து வரலன்னு வையேன்… அப்பறம் உனக்கு இன்னைக்கு நல்லியும் இல்ல பாயாவும் இல்ல…” என அவனை வெறுப்பேற்றி விட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

“இவ வேணும்னே என்னை எழுப்புவதற்காக சொல்லிட்டு போற போல இருக்கே… இந்த மம்மி இன்னைக்கு கார்த்திகை, மார்கழின்னு ஏதாவது சொல்லட்டும்… அப்பறம் இருக்கு இந்த குட்டி சாத்தானுக்கு…” என அவளை திட்டிக்கொண்டே எழுந்து தன்னை ரெப்பிரேஷ் பண்ண சென்றான் சூரி.

——–

“அடடே… வைஷு கண்ணு… எப்ப வந்தீங்க…” என வாயெல்லாம் பல்லாக கேட்டபடி வந்தான் சூரி.

“ஏதாவது சொல்லிட போறேன்… ஓடிப்போயிடு…” என வைஷு அவனை முறைத்து சொல்ல,

” என்னடா என் அன்பு தங்கச்சி… அண்ணன் மேல என்ன கோவம்…” என அவளின் தாடையை பற்றி பிடித்து கொஞ்சி கொண்டே கேக்க,

“உங்க பாசத்தை பாத்து எனக்கு அப்படியே புல்லறிடிச்சிட்டு…” என அங்கே வந்தார் விசாலாட்சி.

சூரி, “என்ன மம்மி நீங்க… எங்களை பாத்து நீங்களே இப்படி சொல்லலாமா…” என்றவன்,

“இந்நேரம் நீங்க எங்களுக்கு திருஷ்டி எடுத்திருக்க வேணாமா…” என பொறுப்பாக கேக்க,

“ஆஹ்… அதேதான்டா அண்ணா…” என அவனுக்கு சப்போர்ட் செய்தாள் தங்கை.

” சரி போதும்… சாப்பிடலாமா… உனக்கு பிடிச்ச நான் வெஜ் தான்… இல்ல இங்கயே உக்காந்து உங்க பாச பயிரை வளக்க போறிங்களா?…” என அன்னை கேக்க,

“நாம அங்க சாப்டுட்டே பாச பயிரை வளத்துக்கலாம்… வா டா அண்ணா…” என சொல்லி எழுந்தாள் வைஷு.

“மம்மி… எங்க வீட்டுல மத்த உறுப்பினர்களின் நடமாட்டத்தையே காணும்…” என சூரி விசாரிக்க,

“ரெண்டு அப்பாவும் ஒரு மேரேஜ்க்கு போயிருக்காங்க… அப்பறம் அண்ணாக்கு  முக்கியமான வேலையாம்…” என முந்திக்கொண்டு சொன்னாள் வைஷு.

“அவனுக்கு என்னைக்கு தான் முக்கியமா வேலை இல்ல…” என தலையசைத்து  சொல்லியவன், “இந்த டாடிஸ் வரவர சண்டே கூட வீட்டுல இருக்கமா ஊர் சுத்த போய்டுதுங்க…” என பெருமூச்சினை விட்டு சொன்னவன், “நீ ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க…” என வைஷுவை கேக்க,

ஒரு பள்ளியின் பெயரை சொன்ன விசாலாட்சி, “அந்த ஸ்கூல் ஓனர், பையனுக்கு கல்யாணம்டா… அதுனால தான் போயிருக்காங்க…” என விவரம் சொன்னவர், “நானும் அந்திக்கு, ரிசெப்ஷன்க்கு போறேன்…” என்றார்.

“அது தான் சொன்னிங்கள்ல… மறந்துட்டேன்…” என சொன்னான் சூரி.

“அவங்க எல்லாம் அவசரமா கிளம்பிட்டீங்க… அதான் நாம இப்படி கதை பேசிட்டே சாப்புடலாம்னு தான்…” என்றவள், “என்ன ண்ணா… மானு மட்டும் தான் ஞாபகத்துல இருக்கு போல…” என கிண்டலாக கேக்க,

“அட போ… வைஷு…” என சலித்த சூரி, “நீ எப்போ வந்த…” என அவளிடம் கேக்க,

“ஜீவ் வந்து காத்தால ஏழு மணிக்கெல்லாம் விட்டுட்டு போயாச்சு…” என பதில் தந்து விட்டு, ” என்னவாம்… ரொம்ப சலிச்சி சொல்லுற… என்ன சொல்லுறா மானு…” என கேட்டாள் வைஷு.

சூரி, “பேசுனா தானே என்ன சொல்லுறான்னு சொல்லுறதுக்கு…”

விசாலாட்சி, ” என்னடா… நீ தான் பொண்ணு கூடவெல்லாம் நல்லா கடலை போடுவியே…” என கேக்க,

“ஹா ஹா…” என வைஷு சிரிக்க,

“மம்மி…” என பல்லை கடித்தான் சூரி.

விசாலாட்சி, “என்னடா…”

“என்ன நொன்னடா… இப்படி மானுக்கு முன்னாடி சொல்லுங்க… நல்ல மொத்துவா…” என்றான் கடுப்பாக.

வாயை பொத்தி சிரித்துக்கொண்டே, “இல்லனா மானுக்கு தெரியாதா ண்ணா…” என வைஷு கேக்க,

“உண்மையை தானேடா சொல்லுறேன்…” என்றார் விசாலாட்சி.

இருவரையும் ஒருசேர முறைத்தவன், ” நான் என்ன வேணும்னே பொண்ணுங்க கிட்ட பேசுற போல பண்ணுறீங்க, ரெண்டு பேரும்… எல்லாம் அந்த நல்லவன் விஷ்ணுவை சொல்லணும்… அவன் கிட்ட எந்த பொண்ணும் பேசாது… என்ட பேசுறதை பாத்து பொறாமை பட்டு… கடைசில எனக்கு இப்படி ஒரு பேரு கிடைச்சிருக்கு…” என பல்லை கடித்தபடி சொன்னான் சூரி.

விசாலாட்சி, “அப்படியா சூரி… நீ அவ்வளோ நல்லவனா நீயி…” என அதிசயித்து கேக்க,

“இப்படி தான் உங்க புள்ளையை, நல்லா டேமேஜ் பண்ணனும்…” என்றான் முறைப்பாக.

“சரி… சரி… இதுலாம் இப்போ முக்கியமில்லை… மானுட்ட ஏன் நீ பேசலன்னு சொல்லு ண்ணா…” என்றால் வைஷு.

“நான் பேசுலேன்னு உங்கிட்ட சொன்னேனா…” என அவளிடம் மீண்டும் கடிய,

“என்னோமோ ஒன்னு… என்னன்னு தான் சொல்லேன்டா…” என இப்போ கேட்டார் விசாலாட்சி.

“அட ஏன் மம்மி நீங்க வேற… அவகிட்ட பேசலாம்னு கால் பண்ணுனேன்… எடுத்தவ என்ன சொன்னா தெரியுமா?…” என கேட்டு இருவரையும் பார்க்க,

“அட சொல்லுடா… ரொம்ப இழுக்குற…” என சலிப்பாக விசாலாட்சி சொல்ல,

“நம்ம கல்யாணம் பெரியவங்க பாத்து பண்ணுனதாவே இருக்கட்டும்… நீங்க எனக்கு இப்படி கால் பண்ணி பேசணும்ன்னு அவசியம் இல்லன்னு சொல்லிட்டா…” என்றான் சோகமாக.

“ஹா ஹா ஹா… பங்கம் பண்ணிட்டா அண்ணா உன்னைய…” என வைஷு விழுந்து சிரிக்க,

“ஆனாலும்டா மவனே… நல்லா வேணும்டா உனக்கு…” என விசாலாட்சியும் சிரித்தபடி சொன்னார்.

“போதும்… இதுக்கு தான் நான் சொல்லவே இல்ல…” என முறுக்கினான் சூரி.

“அதான் இப்போ சொல்லிட்டல்ல ண்ணா… விடு… விடு… அரசியல்ல இதுலாம் சாதாரணம் ப்பா…” என வைஷு கிண்டலடிக்க,

“அந்த நல்லவன் சொன்னா கேப்பான்னு நினைச்சி, அவன்கிட்ட நானும் அவகூட பேசணும்… ஹெல்ப் பண்ணுனு சொல்லிட்டே இருக்கேன்… போலீஸ் காரன் ரொம்ப சீன் போடுறான்…” என்றான் இன்னும் கடுப்பாக,

“சரி விடு… நான் வந்துட்டேன்ல… ஜமாய்ச்சிடலாம்…” என வைஷு உற்சாகமாக சொல்ல,

“வைஷு ஏதாவது ஏடாகூட பண்ணாம ஒழுங்கா இரு…” என மகளிடம் சொன்ன அன்னை, “டேய் உனக்கும் தான்…” என மகனிடமும் சொன்னார்.

இருவரும் ஒருசேர “ஏன்?…” என கேட்க,

“இன்னும் நாம மானசி வீட்டுல முறையாய் பேசல… அவங்க அப்பாக்கு மட்டும் தான் தெரியும்… அதுனால கொஞ்சம் அடங்கி இருங்க…” என்றார் எச்சரிக்கையாக விசாலாட்சி.

“இப்போ பேசுனா தான் ம்மா ஒரு கிக் இருக்கும்…” என வைஷு இடையீட,

விசாலாட்சி, “இந்த கிறுக்குத்தனம் தான் வேணாம்னு சொல்லுறேன்…” என அவளை கடிந்தவர், “உங்க அத்தைக்கு இன்னும் தெரியாது… அவங்ககிட்ட எல்லாம் பேசுறதுக்கு, உங்க அண்ணன் தான் லாய்க்கு… அடுத்த மாசம் பேசுறதுக்கு நாள் பாத்துருக்கு… அதுனால அடக்கி வாசி…” என முடித்தார்.

“ம்ம்… சரி ம்மா…” என சொன்னாள் வைஷு ஒப்புதலாக.

இதுவரை அவர்களின் பேச்சினை கேட்டபடி இருந்த சூரி, “எனக்கு செய்தி சொல்லுறேன்னு சொல்லி எழுப்பி விட்டல… அதை இப்போவாது சொல்லு…” என கேட்டான்.

“இப்படி சொல்லி தான் அவனை எழுப்பிட்டு வந்தியா?…” என அன்னை கேள்வி கேக்க,

“ஆமா…” என மண்டையை ஆட்டினாள் வைஷு.

“என்னனு சொல்லு வைஷு முதல்ல…” என சூரி கேக்க,

” விஷ்ணு அண்ணாவை ஒரு பொண்ணு ரொம்ப பைத்தியமா லவ் பண்ணுது…” என ஏற்ற இறக்கத்துடன் சொல்ல,

“வைஷு… என்ன இது…” என விசாலாட்சி அதட்ட,

“நீங்க போங்க ம்மா… நான் அன்னைக்கே அண்ணன்கிட்ட சொல்லலாம்னு சொன்னேன்… நீங்க தான் என்னவோ சொல்லி என் வாயை அடச்சிங்க…” என கடுப்படித்தவள்.

“இப்போ பாருங்க, அந்த லிட்டில் பிரின்சஸ் அவங்க அப்பாவை வச்சி, காய மூவ் பண்ண போகுது… என்ன பண்ண போறீங்க இப்போ…” என வெடித்தாள் வைஷு.

“என்ன வைஷு… அமைதியாகு…” என்றான் சூரி.

“பின்ன என்ன ண்ணா… அந்த லிட்டில் பிரின்சஸ் வேற யாருமில்லை… ஜீவோட தங்கச்சி சஞ்சனா தான்…” என போட்டுடைத்தாள் வைஷு.

“என்ன மம்மி சொல்லுறா இவ…” என சூரி அன்னையிடம் கேக்க,

“விஷ்ணுவை மீறி எதுவும் நடக்காது சூரி… பாத்துக்கலாம்…” என்றார் நம்பிக்கையாக.

“என்ன மம்மி இப்படி சொல்லுறீங்க…” என வைஷு அதிருப்தியாக கேக்க,

” மம்மி சரியாதான் சொல்லறாங்க வைஷு… விஷ்ணு மீறி என்ன ஆகும்னு சொல்லுற…” என சூரியும் சொல்ல,

“என்னமோ போங்க… இதை அண்ணாகிட்டவே சொல்லிடலாம் என்ன கேட்டா…” என வைஷு சொல்ல,

” உனக்கு எப்படி தெரியும் வைஷு…” என சூரி யோசனையாய் கேக்க,

” அண்ணா… ஒரு நாள் அவளோட ரூமுக்கு அவளை கூப்பிட போனேன் ண்ணா… அப்போ நான் உள்ள வர்றதை பாத்துட்டு, என்னைய அங்கையே இருங்கன்னு சொல்லிட்டு அவளே வந்தா ண்ணா… அப்போ கூட, நான் பிரைவசின்னு நினைச்சிட்டு விட்டுட்டேன்… அப்பறம் மறுநாள் ஒருக்களிச்சு சாத்திருஞ்சி, அப்போ நான் அவ ரூம் கிராஸ் பண்ணும் போது தான் பாத்தேன்… அண்ணாவோட போட்டோவை ரூம் முழுக்க வச்சிருக்கா… அதை பாத்துட்டு தான் அம்மாக்கு கால் பண்ணி சொன்னேன்…” என்றாள் விரிவாக,

“மம்மி…” என சூரி அன்னையை பார்க்க,

“எனக்கு இதுல அவசரப்பட்டு ஏதும் பண்ண வேணாம்னு பாக்குறேன் சூரி… என்ன தான் இவளோடது லவ் மேரேஜ் ஆஹ் இருந்தாலும், வைஷுவை நாம பாக்கணும் தானே…” என்றார் அன்னையாக,

“கரெக்ட் தான் மம்மி நீங்க சொல்லுறதும்…” என அவரிடம் சொன்னவன், “இது ஜீவ் கிட்ட சொன்னியா?…” என வைஷுவிடம் கேட்டான்.

” அம்மா தான்… நீயா எதையும் ஆரம்பிக்காத… நடக்கும் போது பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க… ஆனா ஜீவ்க்கு தெரிஞ்சா, அவ தொலைஞ்சா…” என சொல்லி முடித்தாள் வைஷு.

வைஷு, “ஆனா அண்ணா… அவ ரொம்ப அடமண்ட் அண்ணா… ஆட்டியுட் ஜாஸ்தி… ஜீவ்ன்னா கொஞ்சம் பயம்… அதுனால தான் அவங்க அப்பாவை விட்டு… நம்ம அப்பாகிட்ட பேச சொல்லிருக்கா…” என சேர்த்து சொன்னாள்.

“என்னவோ இருந்துட்டு போகட்டும்… உங்க அண்ணனை பத்தி உனக்கு தெரியாதா… இது ஏதாவது தெரிஞ்சா… அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது… அது தான் அமைதியா இருக்கேன்…” என அன்னை பதில் சொன்னார்.

“அதுக்குள்ள அந்த லூசு, ஏதாவது லூசு மாறி பண்ணாம இருந்தா சரி தான்…” என முடித்தாள் வைஷு.

“என்ன மாநாடு போய்ட்டு இருக்கு…” என வந்தார் நாதன், பின்னால் வேணு.

“வாங்க… நீங்களும் வந்து கலந்துக்கலாம்…” என வைஷு அவர்களை வரவேற்க,

“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதா…” என விசாலாட்சி அவர்களை பார்த்து கேக்க,

“என்ன நல்லா கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு வந்திருக்கீங்க… இதுக்காக தானே போனீங்க…” என சூரி இருவரையும் பார்த்து கேக்க,

இப்படி அவர்கள் பேசியதை விடுத்து, தந்தை மார்களுடன் சேர்ந்து அவர்கள் சென்ற கல்யாணத்தை பற்றி பேசி, அடுத்தது என மற்ற பேச்சிற்கு தாவி, பேச்சில் மூழ்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!