Skip to content
Post Views: 2,367
அத்தியாயம் 2:
நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு அவளை கண்டு கொண்டவன் இதழ்கள் புன்னகையில் தானாக விரிந்தது.
அவள் தன்னிலை மறந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு இன்னும் அவன் புன்னகை அதிகமானது.
அவளுக்கு எதிர்புறத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்த ரிஷி ” கமான் மொழி நாம இருக்கிற இடம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் ரசிச்சு பார்க்கலாம்.. ஆனா அதுக்கான இடம் இது கிடையாது.. நீ இப்ப கூட ஓகேன்னு சொன்னா உன்னை யாருமே இல்லாத தேசத்துக்கு அழைச்சிட்டு போயி உன் முன்னாடியே 24 மணி நேரமும் இருக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன்.. ” என்றவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெல்லிய குரலில் முணுமுணுக்க, அவன் சொன்னதை கேட்டதும் விதிர்விதிர்த்துப் போனாள் தேன்மொழி.
தன்னையே மறந்து அவனை அப்படி பார்த்ததற்காக தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக் கொண்டவள் அவனை பாராமல் தலை குனிந்தபடி நாற்காலியில் அமர்ந்தாள்.
அவளையே பார்வையால் வருடியபடி ரசித்துக்கொண்டிருந்த ரிஷி அவள் தன்னை பார்க்க கூட பிடிக்காமல் தலையை தாழ்த்திக் கொண்டிருப்பதாக நினைத்து மனதில் வேதனை கொண்டான்.
அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ” எப்படி இருக்க தேனு? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? ” என்று பிரிவின் ஏக்கமாக கேட்க, அவனது அந்த ஏக்கமான குரல் அவள் அடிமனது வரை சென்று தாக்கியது.
கண்களில் கண்ணீர் கோர்க்க, அதை அவனிடம் காட்ட விரும்பாதவள் இமை தட்டி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.
கரங்கள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று இறுக்கமாக பிடித்தபடி இதற்கு மேல் இங்கேயே அமர்ந்திருந்தால் மனதில் இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தகர்ந்து அவனை அணைத்து தன் மனதில் உள்ள கதறல்கள் அனைத்தையும் சொல்லிவிடுவோமோ? என்ற பயத்தில் வந்த வேலையை முடித்த உடனே சென்றுவிடலாம் என்று மனதில் உள்ளதை மனப்பாடம் போல் அவனிடம் ஒப்பபித்தாள்.
” இங்க பாருங்க சார்.. என்கிட்ட தேவையில்லாம பேச வேண்டாம்! நான் சரஸ்வதி அம்மா அனாதை ஆசிரமத்தில் இருந்து வரேன்.. அவங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்ததால என்னை அனுப்பி வச்சாங்க..” என்றவள் இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல் பேசா மடந்தையாகி போனாள்.
அவள் பேசுவதை எல்லாம் இதழ்களில் சின்ன குறுநகையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரிஷி ” போகலாம் என்ன அவசரம்? எப்பவுமே என்னை விட்டுட்டு போறதுல்லையே ஏன் குறியா இருக்க தேனு!” என்றவன் குரலில் எல்லை இல்லாத வருத்தம் பிரதிபலிக்க, அந்தக் குரல் தேன்மொழியையும் தாக்கி வேதனையை பெரிதாக்கியது.
எந்த சூழ்நிலையிலும் அவன் வாழ்க்கையில் திரும்ப வரமாட்டேன் என்று அவன் மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியம் அவளுக்கு நினைவு வந்து போக, அவன் பால் சாய்ந்த மனதை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
உயிருக்கு உயிராக காதலித்த ஒருவன் அதுவும் அவனும் தன்னை உயிருக்கு உயிராக காதலிக்க, அவனுடன் சேர்ந்து ஒவ்வொரு நொடியும் அணு அணுவாக ரசித்து வாழ வேண்டும் என்று பெண்ணாக அவளுக்குள் மலையளவு ஆசை இருந்தாலும் அதையெல்லாம் மனதோடு மட்டுமே வைத்துக் கொண்டு வெளியில் சொல்ல முடியாமல் தவித்துப் போனவள் தன் தலைவிதி மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எப்போதும் போல் தன் தலைவிதியை நொந்து கொண்டு மீண்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் வந்த விஷயத்திலேயே குறியாக இருந்தாள்.
” இங்க பாருங்க சார்.. தேவையில்லாத பேச்சு எல்லாம் என்கிட்ட வேண்டாம் சில விஷயங்கள் முடிஞ்சு போச்சு அது முடிஞ்சு போனதாக இருக்கட்டும்.. சில விஷயங்களை நான் மறக்கணும்னு நினைக்கிறேன்.. ஆசிரமத்தில் இருக்க பசங்களுக்கு எல்லாம் மத்தியானம் சமைக்கணும்.. அவங்க எல்லாரும் என்னை காணாமல் தேடுவாங்க என்னால இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது.. நீங்க எதுக்காக இங்கு வந்தீர்களோ அதை செஞ்சா எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்.. ” என்றவளை கண்களில் வலியுடன் பார்த்தான் ரிஷி.
கவனமாக அவன் பார்வையை தவிக்கும் பொருட்டு அவனை பார்க்காமல் தேன்மொழி அவளுக்கு முன்பாக இருந்த கண்ணாடி கோப்பையை பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் வாய் ஒன்று பேசினாலும் எப்போதும் போல் அவள் கண்களே அவள் மனதை அவனிடம் பிரதிபலிக்க, அவளை இதற்கு மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பேச்சை திசை திருப்பினான்.
” ஓகே மேடம்.. நீங்க சொன்னது போல நம்ம தேவையில்லாத விஷயத்தை பேச வேண்டாம்..ஆனா அதுக்கு முன்னாடி என்னோட கெஸ்டுக்கு ஒரு சின்ன காபி.. இதுக்கு நீங்க மறுப்பு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன் மேடம்.. ” என்றவன் அவள் பதிலுக்காக காத்திருக்காமல் பேரரை அழைத்து ஆர்டர் கொடுத்தான்.
தன்னிடம் அத்தனை நேரம் உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தவன் ஒரே வார்த்தையில் மேடம் என்று அழைக்க அவனிடமிருந்து அன்னியமாகிப் போன உணர்வு அவளுக்கு.
தான் அவனை அந்நியமாக்கி ” சார்” என்று அழைத்த பொழுது அவனுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும் என்று மனதுக்குள்ளையே நினைத்துக் கொண்டவளுக்கு கடந்த காலத்தில் காலம் கொடுத்த வலியை விட இந்த வலி பெரிதாக இல்லை.
அவனுடன் சிறிது நேரம் இருக்க அவள் மனமும் விரும்ப, அவன் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள்.
அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தது அவனுக்கு வசதியாகி போக நன்றாக அவளை பார்வையால் வருடினான்.
தன் வாழ்வில் மட்டும் அந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவளோடு சேர்ந்து சந்தோஷமாக அல்லவா இருந்திருப்பான்?
இதுவரை வாழாத ஒரு வாழ்க்கையை அவளுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அனைத்தும் கானல் நீராகத்தான் மாறிப்போனது.
அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அனைத்தும் கானல் நீராகத்தான் போனது.
இதனைத் தான் சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணை தலைவியின் பிரிவு துயரை குறிப்பிடுகிறது.
E
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து,
விரும்பிக் காதலர்களாக வாழ்கின்றனர். பின்னர் திருமணம் செய்து
கொள்கின்றனர். ஆனால் இவ்விரு வகையான வாழ்க்கையிலும்
பிரிவு என்பது இயல்பாக உள்ள ஒன்று. காதல்
வாழ்க்கையில் காதலர்களின் ஒரு நாள் சந்திப்பிற்குப்பின்
மறுநாள் சந்திப்பது வரையிலும் சிறு பிரிவு ஏற்படுகிறது. திருமண
வாழ்க்கையில் வெளியூர் செல்லும் பொழுது நெடுநாள் பிரிவு
ஏற்படுகிறது. இப்பிரிவுகளால் மிகவும் பாதிக்கப்படுபவள் தலைவியே.
2.7.1 தலைவியின் பிரிவுத் துன்பம்
காதல் வாழ்வாகிய களவு ஒழுக்கத்தில், நாள்தோறும் சந்தித்து
மகிழ்ந்தார்கள் காதலர்கள். சிறிது காலம் தாழ்த்தி வந்தால் கூட,
தலைவனுக்கு என்ன ஆனதோ? அவன் வருகின்ற வழியில்
தொல்லை தரும் விலங்கினங்கள் உண்டே; அவற்றால்
தலைவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சுவாள்
தலைவி. எனவே, தனது ஐயங்களையெல்லாம், தன் தோழியிடம்
கூறுவாள். தோழி ஆறுதல் கூறுவாள். ஆனால் இப்பொழுது
பலநாள் தன்னைவிட்டு, தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான்.
ஒருநாள், ஒருசில மணிநேரம் காலம் தாழ்த்தி வருவதையே
பொறுத்துக் கொள்ள இயலாத தலைவிக்கு, இப்பொழுது நிகழ
இருக்கும் பிரிவை நினைக்கும் பொழுது மனம் மிகவும்
வேதனைப்படுகிறது. அந்த வேதனையை அவன் மீது வரும் கோபம்
போல் வெளிப்படுத்துகிறாள் தலைவி.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை

(குறள்: 1151)
என்று கூறுகிறாள். தலைவன், பொருள், கல்வி, அரசுக்கு உதவி
எனும் பல காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிடும். இதனைத்
தலைவி அறிவாள். இருப்பினும் தலைவனது பிரிவால் எந்த
அளவுக்கு அவள் பாதிக்கப்படுவாள் என்பதனை அவள் தன் கூற்று
மூலம் வெளிப்படுத்துகிறாள். பிரிவினால் ஏற்படும் தலைவியின்
உள் உணர்வுகளையெல்லாம் ஒன்று திரட்டி, இரண்டே வரிகளில்
மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.
உன்னைப் பிரிந்து என்னால் ஒரு கணம் கூட உயிரோடு இருக்க
முடியாது. உன் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
எனவே, நீ, உன் பணிமேற் சென்று மீண்டும் இங்கு வரும் வரையில்
நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் பிரிவுத் துன்பத்தினால்
நான் இறந்து விடுவேன். ஆகவே, மீண்டும் வரும் பொழுது இங்கு
யார் உயிரோடு இருப்பார்களோ, அவர்களிடமே உம் வரவைப்
பற்றிச் சொல்லுங்கள் என்று குறிப்பிடுகிறாள்.
பிரிவுத் துன்பத்தையும், பிரிவினால் வாடும் தலைவியின் மன
வேதனைகளையும் இதைவிடச் சிறப்பாகச் சொல்ல இயலுமா?
தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவன், ‘நான்
சீக்கிரம் வந்து விடுவேன் கவலைப்படாதே’ என்று வாக்குறுதி
கொடுக்கிறான். பிரிந்து செல்லும் எல்லோரும் சீக்கிரம் வருவேன்
எனக் கூறுவது இயல்புதானே! தலைவன் இதற்கு விதிவிலக்கா?
தலைவனின் இந்தச் சொல் திறமையை நன்கு அறிவாள் தலைவி.
எனவே, நீங்கள் சீக்கிரம் வருவேன் என்று சொல்வதெல்லாம்
பொய். நான் நம்பமாட்டேன். உங்களை நான் நன்கு அறிவேன்.
நீங்கள் உங்கள் பணியை முடிக்காமல் திரும்பி உடனே
வரமாட்டீர்கள். எனவே, விரைவாக வருவேன் என்பதை நான்
நம்புவதற்குத் தயாராக இல்லை. அதை இன்னொருவரிடம்
சொல்லுங்கள் என்னிடம் சொல்லாதீர்கள் என்ற தன்மையைில்
‘மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை’ என்று நயமாகக்
கூறுகிறாள் தலைவி.
எப்படி இதில் தலைவி தன் தலைவனை பிரியக்கூடாது என்று நினைத்தாளோ அதேபோலத்தான் தேன் மொழியும் ஒரு நிமிடம் கூட தன்னவனை பிரிய கூடாது என்று ஒரு காலத்தில் நினைத்தாள்.
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் தான் இருக்குமா என்ன?
அவன் அவளை ரசித்துப் பார்த்தபடி இருக்க அவள் தன் கடந்த காலத்தை நினைத்து தனக்குள்ளேயே மறுகிப் போனாள்.
இருவரையும் கலைப்பது போல் அவர்கள் கேட்ட காபி வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அதை முழுமையாக அருந்தி முடித்தார்கள்.
” ஓகே மேடம் எனக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்குனதுக்கு ரொம்ப நன்றி.. ” என்ற ரிஷி கையோடு கொண்டு வந்திருந்த செக் புக்கை எடுத்தவன் அதில் தொகையை குறிப்பிடாமல் கையெழுத்து மட்டும் போட்டு அவளிடம் நீட்ட, அதை வாங்காமல் அவனை தயக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
அவளது தயக்கம் எதற்காக என்பதை சரியாக புரிந்து கொண்ட ரிஷி வலியுடன் கூடிய புன்னகையுடன் “என்னுடையது எல்லாமே எப்போதும் உனக்கு சொந்தம் தான்..” என்றவனை உணர்வில்லாமல் பார்த்தவள் ” சாரி சார் எனக்கு உங்க மேலையே உரிமை கிடையாது அப்புறம் எப்படி உங்களை சார்ந்தது எனக்கு சேரும்.. நீங்களே அதுல ஒரு தொகையை போட்டுக் கொடுங்க.. ” என ரிஷி அவள் சொன்னதிலிருந்த உண்மையைச் சுட, எதுவும் சொல்லாமல் தேன்மொழி சொன்னது போலவே ஒரு தொகையை தோராயமாக எழுதிய அவளிடம் நீட்ட எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் தேன்மொழி.
” ரொம்ப நன்றிங்க சார்.. இந்த தொகை எங்க ஆசிரமத்தில் இருக்க குழந்தைகளுக்கு நிச்சயம் உதவும்.. உங்கள மாதிரி பெரிய ஆளுங்களோட தயவுல தான் இன்னைக்கு என்ன மாதிரி பல அனாதை பெண்களும் குழந்தைகளும் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.. உங்க உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.. உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு நாள் எங்க ஆசிரமத்துக்கு வாங்க.. ” என்றவள் இறுதியாக ஒரு முறை அவன் முகத்தை தனக்குள் பதுக்கி வைத்துக் கொண்டவள் அதன் பிறகு அவன் யாரோ என்பது போல் கடந்து சென்றாள்.
அவள் விட்டு தூரம் செல்ல செல்ல ரிஷியின் இதயம் அவள் பின்னாடியே சென்றது.
‘ என்னை விட்டுப் போகாதடி.. அய்யோ இந்த வலிய என்னால தாங்கவே முடியல தேன்மொழி.. தேனு என்னோட தேன்.. எதுக்காக என் வாழ்க்கையில வந்த? எதை பற்றியும் கவலைப்படாம சந்தோசமா சுற்றி திரிந்த என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு விட்டுட்டு போறியே தேனு.. தேனு என்ன மன்னிச்சிடுடி இன்னைக்கு நீ அனுபவிக்கிற அத்தனை துயருக்கும் காரணம் நான் மட்டும் தான்..’ என்று மனதுக்குள்ளயே சொல்லிக் கொண்டவன் எப்போதும் போல் மனதுக்குள்ளேயே வெடித்து அழுதான்.
அவனை விட்டுவிட்டு வெளியில் வந்த தேன்மொழிக்கு தன்நிலை சொல்லவே இயலவில்லை.
காதலித்துப்பார் வாழ்க்கை அழகாக தெரியும்..
அந்த காதலை தியாகம் செய்து பார் அதில் உள்ள வேதனை வாழ்க்கை முழுக்க ஈட்டியாய் இதயத்தை தொலைத்து மனதில் உள்ள சந்தோஷம் அத்தனையும் அழித்துவிடும்.. என்று எங்கோ படித்தது அவளுக்கு நினைவு வந்து போனது.
‘ எதுக்காக நம்ம வாழ்க்கையில அந்த கடவுள் இப்படி பண்ணாருங்க? எப்படி சந்தோசமா வாழ வேண்டிய வாழ்க்கை இன்னிக்கு நீங்க யாரோ நான் யாரோன்னு பிரிச்சு வச்சு இப்படி விளையாடுதே? என்னால சத்தியமா முடியல.. நீங்க சந்தோசமா இருப்பீங்கன்னு தானே உங்கள விட்டு பிரிஞ்சு போனேன்.. ஆனா உங்க கண்ணுல அந்த வலியையும் வேதனையும் பார்க்கும் போது என்னோட தியாகத்துக்கு அர்த்தமே இல்லாம போயிடும் போல இருக்கு..’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் வெளியிலேயே கண்ணீர் உகுத்துக் கொண்டாள்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் இது மட்டுமே!!
ஆண் அழுதால் அவனை கோழை என்றும் பேடி என்றும் உலகம் தூற்றும்.
அதுவே ஒரு பெண் அழுதால் அவளுக்காக இரக்கப்படும்.
உலகங்களில் விசித்திரமான விஷயங்கள் இன்னும் பல இருக்கத்தான் செய்கின்றன.
” சூட்டிங் டைம் ஆச்சு சார்!” என்ற பணியாள் குரலில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ரிஷி வெளியில் வந்தான்.
அவருக்கு பதில் சொல்லாமல் ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுக்க, வந்தவரும் அதை புரிந்து கொண்டு சென்றுவிட்டார்.
அன்று நடக்கவிருக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ தன் மனதில் உள்ள காதலை ஹீரோயினிடம் உருகி உருகி சொல்ல வேண்டும்.. முதலில் அவன் பேசுவதை கேட்டு மறுக்கும் ஹீரோயின் அடுத்து ஹீரோ பேசுவதை கேட்டு அவன் பால் காதலில் விழ வேண்டும் என்று ஸ்கிரிப்ட் தயார் செய்யப்பட்டிருந்தது.
நடிப்பில் ஊறிப் போன ரிஷிக்கு அது பெரிய விஷயமாக இல்லை.
படப்பிடிப்புக் கூடத்தில் இருந்து அனைவரும் அமைதியாகப் போக, அவர்களது நடிப்பை கேமரா தனக்குள் உள்வாங்க ஆரம்பித்தது.
எதிரில் இருக்கும் ஹீரோயின் ரிஷி கண்களுக்கு அவனது தேன்மொழியாக மட்டும் தெரிந்தாள்.
அவனுடைய அதிர்ஷ்டம் அந்தக் கதையில் நடிக்கும் நாயகியின் பெயரும் தேவயானி என்று இருக்க அதை செல்லமாக ஹீரோ சுருக்கி தேன் என்று அழைக்கும் படி இருந்தது.
கண்களுக்கு முன்னால் இருந்த ஹீரோயின் தேன்மொழியாக அவனுக்கு தெரிய தன் மனதில் உள்ள காதல் மொத்தத்தையும் தன் கண்களில் தேக்கி அவளிடம் சென்றவன் அவளது இரு கைகளையும் மென்மையாக பிடித்துக் கொண்டான்.
” எதுக்காக? எதுக்காக என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் இப்படி என்னை ஒவ்வொரு தடவையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்க தேனு.. உன்னை ஆரம்பத்தில் பார்க்கும்போது எனக்கு சுத்தமா பிடிக்கல தான் ஆனா இப்போ நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. அந்தளவுக்கு நீ என் உயிரோட ஒன்னா கலந்துட்ட.. என்ன இந்தளவுக்கு எதுவுமே தொந்தரவு பண்ணது கிடையாது.. நான் எது ஆசைப்பட்டாலும் அது எனக்கு கண்டிப்பாக கிடைச்சே ஆகணும்.. ஆனா உன்னோட விஷயத்துல என்னால அப்படி இருக்க முடியாது.. என்ன காரணம்னு உனக்கு தெரியுமா? ஏன்னா பிகாஸ் ஐ லவ் யூ.. காதல் உன் மனசுல இருந்து ஆத்மார்த்தமா வரணும்..நானா உன்னை வலுக்கட்டாயமா பிடிச்சுகிட்டு வந்து உன் கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சா அந்த வாழ்க்கை உனக்கும் பிடிக்காது எனக்கும் இனிக்காது.. ப்ளீஸ் என் காதல புரிஞ்சுக்க.. ஒத்துக்கிறேன் அன்னைக்கு என் வாழ்க்கையில் இருந்து உன்னை விலகி போக சொன்னது நான்தான்.. இன்னைக்கு உன்னை என் வாழ்க்கையில் மறுபடியும் இணைக்கணும்னு ஆசைப்படுவதும் நான் தான்..” என்றவன் குரல் உடைந்து போய் ஒலிக்க, எதிரில் நின்ற ஹீரோயின் அவன் கைகளை உதறித் தள்ளினாள்.
சிறு அந்த சிறு உதாசினத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாத ரிஷி அது தன்னுடைய தேன்மொழி தான் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.
” என்ன மன்னிச்சிடுடி உன் கால்ல விழுந்து வேணும்னாலும் கேட்கிறேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சுக்கோ.. உன்ன விட்டா எனக்கு இந்த உலகத்தில் யார் இருக்கா? நீயும் இல்லாமல் போனால் நான் என்ன பண்றது.. எனக்கு நீ வேணும் உன்னோட அன்பு வேணும் இந்த உலகத்தை உதறித் தள்ளிட்டு உன் கூட வரணும்னு ஆசையா இருக்குது.. ஆனா என்னால முடியாதே! நான் பட்ட நன்றி கடனுக்காக என்னால அப்படி வர முடியாது.. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா அதுல கண்டிப்பா எனக்கு எந்த உறவுகளும் இருக்கக் கூடாது.. நீ மட்டும் எனக்கு போதும் நீ நான் அப்படின்னு வாழ்ற ஒரு வாழ்க்கை மட்டும் எனக்கு போதும்.. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டி.. ” என்றவன் கண்கள் கலங்கி போக தன் கைகள் சிவக்கும் வண்ணம் தரையில் வேகமாக அடித்தான்.
அத்தோடு அந்த ஷார்ட் முடிய அனைவரும் அவன் நடிப்பை அது முழுக்க முழுக்க நடிப்புதான் என நினைத்துக் கொண்டு எப்போதும் போல் பாராட்டி கைகளை தட்ட, அதை ஒரு சின்ன புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ரிஷி மனதுக்கு மட்டுமே தெரியும் அது நடிப்பு அல்ல உண்மை என்று..
ஒரு கசப்பான புன்னகையை சிந்தியப்படி அடுத்த ஷாட்டுக்கு நடிக்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!