Skip to content
Post Views: 3,746
ரீங்காரமாய் என்னுள்ளே – 14 . 2
ஒரு பெரிய ஹோட்டலின் அவர்களுக்கென ரிசெர்வ் பண்ணிருந்த டேபிளில் அமர்ந்திருந்தனர் விஷ்ணுவும், மானசியும்.
“அத்தான்…” என அவள் ஆரம்பிக்க,
Advertisement
“சொல்லுங்க பெரிய மனுசி… என் பிரெண்ட் கூட பேசமாட்டேன்னு எல்லாம் சொன்னிங்களாம்…” என கிண்டலாக கேட்டான்.
மானசி, “அப்பறம் சூரி அத்தான் என்னைய யோசிக்கவே இல்லை தானே…”
“ஹ்ம்… நீங்க அப்படி சொல்ல வரீங்க…” என அவளை கேட்டவன்,
Advertisement
“அப்போ உங்க அம்மா மேல உங்களுக்கு பயம் இல்லையா?…” என்றான் அடுத்த கேள்வியாக,
Advertisement
மானசியோ சிறிதும் யோசிக்காமல், ” எங்க அம்மா எப்படியும் ஒகே தான் சொல்லியாகணும்…” என்றாள் திடமாக.
“வெல்… சூரி வரான்… என்னனு பேசிக்கோங்க…” என அவன் சொல்ல,
அவனின் போன் அடித்தது.
Advertisement
ஒரு நிமிஷம் மானு என்றவன், “ஒய்… சுண்டக்கா…” என கேசுவலாக சொல்ல,
எதிரில் அமர்ந்திருந்த மானசியோ, வாயில் காய் வைக்காத குறையாக பார்த்தாள். அவளுக்கு தெரிந்த விஷ்ணு, இப்படியெல்லாம் இலகுவாக யாரிடமும் பேச மாட்டான். அவன் இப்படி பேசுவதை பெவென பார்த்தவாறு இருந்தாள்.
“வந்துட்டேனா மேல வர மாட்டியா?… இதுக்கு ஒரு கால் பண்ணனுமா…” என அவன் பேச,
அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ,
“ஒகே…” என அதற்க்கு பதில் தந்து, போனை வைத்தான் விஷ்ணு.
“வேற ஏதும் சொல்லனுமா மானு…” என அவன் கேக்க,
மானசி, “ஒண்ணுமில்ல அத்தான்…”
அதற்குள் கொஞ்ச தூரத்தில் கண்ணாடி கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்தான் விஷ்ணு.
புதிதாக பார்ப்பதை போல் கொஞ்சம் வியந்து அந்த இடத்தை பார்ப்பதும், தான் எங்கே இருக்கேன் என அவளின் கண்ணில் இருந்த அலைப்புறுதலையும் கண்டவன், அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அந்த பெரிய அறையில் இவர்களை தவிர யாருமில்லை. காலியாக தான் இருந்தது. இவர்கள் அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்தனர்.
இவன் அமர்ந்திருப்பதை பார்த்த சிந்துவோ, ஒரு நிமிடம் அவளின் அகம் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை, அவளின் முகமும் பிரதிபலிக்க, அடுத்து அவளின் முகத்தை சாதாரணமாக மாற்றினாள்.
“ஒழுங்கா பணத்தை கொடுக்குறோம்… அப்படியே கிளம்புறோம்… அவங்க இவ்வளோ உனக்கு ஹெல்ப் பண்ணாதே பெருசு… அதை நியாபகம் வச்சிக்கோ…” என அவளின் அறிவு அறிவுரை செய்து அவளை நடக்க சொன்னது.
“ஒகே மானு… எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லுங்க… பை…” என அவளுக்கு சொல்லி சிரித்துக்கொண்டே விடை கொடுத்தான்.
அவனை நெருங்கிய சிந்துவின் காதுக்கு, இந்த வார்த்தை அச்சு பிசகாமல் விழுந்தது.
என்ன முயன்றும் ‘கல்யாணம்’ என்ற வார்த்தையை கேட்டவுடன், என்னவென்று கூட யோசிக்காமல், அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று விட்டாள் பேதை.
அங்கு வந்தவளை பார்த்த மானுவோ, ” இவங்க தான் அந்த சுண்டக்கவா…” என ஒரு நிமிடம் கவனித்து பார்த்தவள், “அத்தான்… நீங்க வீட்டுல வந்து பேசிட்டு, பெரியவங்க முடிவு தான்…” என அவனிற்கு பதில் சொன்னாள்.
பெண்ணவள் பதிலை கேட்ட சிந்துவுக்கு, ஒரு வித தள்ளாட்டம் உடலில் பிறக்க, மனதுக்குள் வலி எடுக்க, இதயமோ துடிப்பில்லாமல் துடித்தது.
அவளிடம் எந்த புள்ளியிலிருந்து பிடித்தம் வந்தது அவனின் மேல் என கேட்டாள், அது அவளே அறியாத ஒன்று. இந்த பிடித்தம் நிறைவேறாதது, நடக்காது எனும் நிதர்சனமாக தெரிந்த ஒன்று தான் இருந்தும், அதை அவனின் வாயால் சொல்ல கேட்கும் போது, அவளிடம் அப்பட்டமான அதிர்வு.
அவளை ஊன்றி கவனித்தபடி இருந்தவன், “வாங்க சிந்துஜா…” என்றான் அவளின் பெயரை அழுத்தமாக சொல்லி அழைத்தான் விஷ்ணு.
“முதல் முறையாக தன்னுடைய பெயரை சொல்லி அழைக்கிறான்…” என அப்போதும் மனது அதனை குறித்து சொல்ல, தடுமாற்றத்துடன் ,”சார்…” என அழைத்தாள்.
“எவ்வளோ நேரம் அப்படியே நின்னுட்டே இருக்க போறீங்க…” என அவன் மரியாதையாக கேக்க,
“இப்போ மட்டும் மரியாதை வார்த்தைக்கு வார்த்தை வருது…” என அவளின் மனது முறையிட்டது அவளிடம்.
“ஹாய்… உக்காருங்க சிந்து…” என அவளை அழைத்து உக்கார சொல்லி சேரை காமித்தாள் மானசி.
சிந்துவோ தன்னை நிதானப்படுத்தி மானசி காட்டிய சேரில் அமர்ந்தாள்.
“ஒகே மானு… பாக்கலாம்…” என சொன்னான் விஷ்ணு.
அங்கு அமர்ந்திருந்த சிந்துவை ஒரு பார்வை பார்த்தவள், அவனிடம் தலையை ஆட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
காதில் ரீங்காரமாய் அவனின் கல்யாணம் என்ற வார்த்தையே ஒலிக்க, அந்த இடத்தில அமரவே முடியாமல் அவளை துவள செய்தது மனது. எதையும் அறியாமல், சிந்துவோ அவளின் மனதோடு போராடி கொண்டிருந்தாள்.
மனதில் உருப்போட்டு வச்சிருந்த எல்லைகளெல்லாம், எல்லை கடக்க, அவளின் மனதே அவளிற்கு சதி செய்தது. கண்களின் கண்ணீர் வேறு இப்போவோ அப்பாவோ என விழுவதற்கு காத்திருக்க, முயன்று தன்னை கட்டுப்படுத்தி அதனை உள்ளிழுத்தாள்.
“இப்படியே இன்னும் எவ்வளோ நேரத்துக்கு கத்திரிக்கா மாறி நிலத்தையே பாத்துட்டு இருக்க போற?…” என்றான்.
அவனின் கேள்வியில் சட்டென்று பக்கத்தில் இருந்த பெண்ணை தான் பார்த்தாள் சிந்து… ஆனால் அந்த இடம் காலியாக இருக்க, இப்போது கேள்வியாக அவனை பார்த்தாள்.
விஷ்ணு, “என்னவாம் சுண்டக்காக்கு இப்போ?…” என கேக்க,
ஒண்ணுமில்லையென தலையை ஆட்டியவள், “தனது பேகிலிருந்து அவனுக்கு குடுக்க வென எடுத்து வந்திருந்த பணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“பணம் நான் கேக்கும் போது தானே கொடுக்கணும்னு சொன்னேன்…” என அவன் அழுத்தமாக கேக்க,
“சார் போதும்… இதுக்காக தானே என்னை வர சொன்னிங்க…” என இத்தனை நேரமிருந்த அழுத்தம் அவளை பேச வைக்க,
விஷ்ணு, “என்ன பாக்க வான்னு சொல்லனுமா அப்போ…”
விழிகளை பெரிதாக்கி பார்க்க சிந்து பார்க்க,
“இப்போ எதுக்கு கண்ணை இப்படி விளாங்கா போல விரிக்குற…” என அவன் கேக்க,
“சார் போதும்… இப்படி லாம் பேசாதீங்க இனிமே என்கிட்ட…” என அவள் இப்போது அழுத்தமாக சொல்ல,
விஷ்ணு, “எனக்கு எப்படி தோணுதோ அப்படி தான் பேச முடியும்…” என்றான் கூலாக,
“அதுக்கு இனிமே அவசியம் இல்ல… அது தான் உங்களுக்கு கல்யாணம் பேசிருக்காங்கள்ல… அவங்க கிட்ட அப்படி பேசுங்க…” என வெடித்தாள் மங்கை.
அவளை ஊன்றி பாத்தவன், “எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணுனா, உனக்கெதுக்கு கண்ணு வேற்குது?…” என கேள்வியாக வினவ,
அவனின் கேள்வியில் தலையை குனித்தவள், ஒரு நிமிட அமைதிக்கு பின், “சார் ப்ளீஸ்… எனக்கு உடம்பு சரியில்ல… நீங்க பணத்தை வாங்கிட்டீங்கன்னா… நான் கிளம்பிடுவேன்…” என்றாள் குரல் கம்ம,
“அப்போ ஹாஸ்பிடல் போலாம்…” என அவன் எழும்ப,
“சார்… சார்…” என பதறி, “அதுலாம் வேணாம் முன்னவே மாத்திரை போட்டுட்டு தான் வந்தேன்…” என்றாள்.
விஷ்ணு, “மாத்திரை போட்டாலும் ஹாஸ்பிடல் போயி பாக்கலாம்… ஒன்னும் பிரச்சனை இல்ல…”
இவனிடம் பேசும் தெம்பும் தன்னிடம் இல்லை என நினைத்தவள், ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டு தன்னை ஒருநிலை படுத்தியவள், “சார்… என் பிரெண்ட் ரூம்ல எனக்காக வெயிட் பண்ணுவா… நான் போகணும்…” என இப்போது கொஞ்சம் தணிந்து சொல்ல,
“போலீஸ்காரன் கிட்டயே பொய் சொல்லுற…” என விஷ்ணு விறைப்பாக கேக்க,
அவனின் பேச்சில் கொஞ்சம் பதறி தான் போனாள் சிந்து. ஏனென்றால் வித்யுவை பஸ் ஏற்றி விட்டு தான், இவள் இங்கு வந்ததே.
“என்னங்க பப்பாயா, பதறி போயி பாக்குறீங்க…” என ஏற்ற இறக்கத்துடன் வினவ,
அவனின் இந்த பேச்சினை ரசிப்பவள், இப்போது அவளின் சூழ்நிலை அவளிற்கு எதிராக இருக்க, “சார் எனக்கு ஹாஸ்டல் போனும்… நீங்க பணம் வாங்கிக்கோங்க…” என்றாள் திடமாக.
“வட்டியும் சேர்த்து தானே எடுத்து வந்திருக்க…” என அவன் அடுத்த குண்டை வீச,
“என்ன?…” என மிரண்டு போயி பார்த்தாள்.
“என்ன இப்போ…” என அவன் சற்று காட்டமாக கேக்க,
“சார்… ஏன் சார் இப்படி பண்ணுறீங்க…” என்றாள் தோய்ந்து போன குரலில்,
“என்ன பண்ணுறாங்க உன்னை… இப்படி தான் பிஹேவ் பண்ணுவாங்களா, ஒரு இடத்துக்கு வந்தா… இன்னும் வந்ததிலிருந்து ‘எப்படி இருக்கீங்க… ஏதாவது சப்புடலாமா?…’ இப்படி ஏதாவது கேட்டியா…” என அவளை பார்த்து கடிய,
இப்போது அவளும், “உங்களால தான் எல்லாம்… உங்களை யாரு என்கிட்ட சுண்டக்கா, கத்திரிக்கா, புடலங்கான்னு எல்லா காயையும் வச்சி பேச சொன்னது… அதுனால எனக்கு தெரியாமயே உங்களை பிடிச்சிட்டு… இப்போ நான் வரும் போது உங்களுக்கு கல்யாணம்ன்னு பேசுனா, அப்பறம் எப்படி நான் நார்மல் ஆஹ் இருக்கணும்னு எதிர்பாக்குறிங்க?… எனக்கு என் பிடித்தம் நடக்காதுனு உறுதியா தெரிஞ்சாலும்… என் மனசு கேக்கமாட்டுது… நான் என்ன பண்ணுறது…” என மனதில் உள்ளதையெல்லாம் வார்த்தையாய் சொல்ல,
தான் சொல்லியபிறகே, என்ன சொன்னோமேன்று அறிவு உணர்த்த, மிரட்சியாக அவனை பார்க்க,
தன் ரியாக்க்ஷன் எதுவும் வெளியில் காட்டாமல், கையில் கன்னத்தில் வைத்துக்கொண்டு அவளையே கண்சிமிட்டாமல் பார்த்தான் விஷ்ணு.
அவனின் முகத்தை பார்த்து ஒன்று கண்டுபிடிக்க முடியாமல் திணறியவள், பின்பு, “சார்…” என அழைக்க,
“என்ன ஆடர் பண்ணட்டும்னு கேட்டேன்…” என்றான் ஒன்றும் அறியாதவனாக,
அவனின் கேள்வியில் முழித்தவள், “இவங்க நான் சொன்னதை கேட்டாங்களா?… இல்லையா?…” என அவனின் முகத்தையே பார்க்க,
“என் மூஞ்சில இல்ல மெனு… இங்க இருக்கு பாரு…” என அவளிற்கு அவன் காட்ட,
“ஆஹ் சார்…” என அவள் சொல்ல,
விஷ்ணு, “என்ன ஒன்னும் வேண்டாமா?…”
அவளின் மண்டை வேகமாக வேணாமென்ற ரீதியில் ஆடியது.
“அப்பறம் எதுக்கு நாம இங்க வந்தோம்… சோ உனக்கும் சேர்த்து நானே சொல்லிட்டேன்…” என்றான் தோரணையாக,
“இது எப்போ நடந்தது…” என்றவாறு யோசித்தவள், “அப்போ நாம ஒன்னும் ஒளரலையா?…” என அவளுக்கு அவளே பேச,
“என்ன அவ்வை பாட்டியா?…” என அவன் கேக்க,
“இல்ல… இல்ல… ஒண்ணுமில்ல சார்…” என்றாள் அவசரமாக,
அவளின் பதிலை கேட்டு தோல் குலுக்கினான்.
அவனிடம் இதை எப்படி கேட்டு தெரிந்து கொள்வதென தெரியாமல் அவனின் முகத்தையே நொடிக்கொரு தரம் பார்த்தாள் பாவை.
அவளின் செயலின் வரவிருந்த சிரிப்பை மீசைக்கடியில் ஒலித்தவன், “இது செட்டாகாது…” என சடுதியில் முடிவெடுத்தவன்,
“போலாமா…” என கேட்டான் அவளிடம்,
“ஆஹ் சார்…” என அவள் பார்க்க,
“இங்க பால் இல்லையாம்… அதுனால நான் ஆடர் பண்ணுனா காப்பி வேணாம்ன்னு சொல்லிட்டேன்…” என்றான் சீரியஸ் ஆக,
“இது எப்போ…” என்றவாறு கேள்வியாய் பாக்க ,
“இப்படி பாத்தாலும்… காபி கிடைக்காது… அதுனால வா போலாம்…” என அவளை அழைத்து சென்றான்.
error: Content is protected !!