Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே அத்தியாயம் -1

அத்தியாயம் – 1

  “காலங்காத்தால அசந்து கொஞ்ச நேரம் நம்மள தூங்க விடுறாங்களா சுப்ரபாதம் பாடுறேன்னு பாடி நம்மள தூங்கவிடாமல் டிஸ்டர்ப் பண்றாங்கப்பா ” என்று கடவுளே நினைக்கும் அளவுக்கு அந்த விடிய காலை நேரம் பூஜை அறையில் அமர்ந்து தன்னை மறந்து சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தார் வாசுகி.

 ” கடவுளே இன்னைக்கு என் பையன் விக்ரமுக்கு இருபத்தி ஒன்பதாவது பிறந்தநாள் அவன் எப்பவும் சந்தோசமா இருக்கனும், முன்ன இருந்த மாதிரியே என் மேல அன்பா பாசமா இருக்கணும், எப்பவும் என்ன விட்டு பிரிஞ்சி போகாம என் கூடவே இருக்கனும் ” என்று கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார் வாசுகி.

தனது அறையில் இரவு முழுவதும் தூங்காமல் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டிருந்தான் விக்ரம், உடம்பு முழுவதும் தடித்தும் சிவந்தும் சில இடங்களில் இரத்தம் கசிந்துக் கொண்டு இருந்தது அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதை பற்றியோ நினைத்து தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தான்.



Advertisement

பின் கைகளில் இருந்த சாட்டையை தூங்கி எரிந்து விட்டு, சவரின் அடியில் போய் நின்றான் சூடான தண்ணீர் காயங்களின் மீது பட்டு அதீத எரிசலை அளித்தது அனைத்து வலிகளையும், எதைப் பற்றியோ நினைத்து பொறுத்துக் கொண்டு இறுகிய முகத்துடன் அலுவலகம் செல்வதற்காக தயாராகி கீழே வந்தான் வாசுகியின் தவப்புதல்வன் விக்ரம் ஆதித்தன். இந்த கதையின் நாயகன் (சில நேரங்களில் வில்லணும் கூட ),

விக்ரம் SK குரூப் ஆஃப் கம்பெனியின் சக்கரவர்த்தி.இளம்பெண்களின் கனவு நாயகன் . இவனை கண்டு ஜொள்ளு விட்டதா பெண்களே இல்லை ஆனால் விக்ரம் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டான். வேலை என்று வந்துவிட்டால் விக்ரம் ஹிட்லராக மாறி விடுவான். சிறிதாக தவறு செய்தால் கூட அவர்களுக்கு பெரிய அளவில் தண்டனை வழங்குவான்.

டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த விக்ரமின் தட்டில் அல்வாவை வைத்தார் வாசுகி,அடுத்த நொடி தட்டை தூக்கி வீசி அடித்தான் அது சுவற்றில் பட்டு சில்லு சில்லாக நொறுங்கி கீழே விழுந்தது.

Advertisement

வாசுகி கண்களில் கண்ணீர் வலிய தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தார். விக்ரம் அவரை திரும்பியும் பார்க்காமல் கோபத்துடன் காரில் ஏறி அவனுடைய ஆபீஸுக்கு சென்று விட்டான்.

Advertisement

கோபத்துடன் ஆபீசுக்குள் நுழையும் விக்ரமை சிரித்த முகமாக வரவேற்றான் ரகு. விக்ரமின் நெருங்கிய நண்பன், இவனை விட ரகு மூன்று வயது சிறியவன்.ரகுவின் அப்பா விக்ரமின் தாத்தாவிடம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார் அதன் மூலம் விக்ரம் ரகு இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்களாகி விட்டனர்.

“குட் மார்னிங் சார் “என்று ரகு கூற அவனை முறைத்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றான் விக்ரம்,ரகுவும் பின்னால் சென்றான்.

அறைக்குள் நுழைந்த ரகு விக்ரமை கட்டி அனைத்து “ஹாப்பி பர்த்டே டா மச்சான் “என்று வாழ்த்து கூறினான்.

Advertisement

அவனை விலகி தள்ளியவன் “இப்போ எனக்கு பொறந்த நாள் ஒன்னு தான் குறைசல், நானே செம கடுப்புல இருக்கேன் இங்க இருந்து ஓடிரு இல்ல மண்டைய ஒடச்சிருவேன் ” என்று மிரட்டினான் விக்ரம்.

“டென்ஷன் ஆகாத மச்சான், கொஞ்சம் அமைதியா வேலைய பாரு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, இந்த மீட்டிங் நல்ல படியா முடிஞ்சதுனா நமக்கு நூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் கிடைக்கும்டா ” என்றான் ரகு.

“அந்த வெண்ணையெல்லாம் எனக்கு தெரியும் நீ போடா இங்க இருந்து முதல்ல “என்று கோவமாக கத்தி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான் விக்ரம்.

மீட்டிங் நல்ல படியாக முடிந்து ப்ராஜெக்ட் இவர்களுக்கே கிடைத்தது. விக்ரம் மகிழ்ச்சியுடன் “ரகு ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் பப்புக்கு போறோம் ப்ராஜெக்ட் கிடைச்சாத கொண்டாடுறோம் “

“மச்சான் நான் பப்பு வரலடா , ஈவினிங் நான் ரிங்கு ஓட மேரேஜ் ரிசப்ஷனுக்கு போறேண்டா ” என்றான் ரகு.

“யாருக்கு ரிசப்ஷன்னு சொன்ன “

“நம்ம ரிங்குக்கு தான் மச்சான்”    என்று ரகு கூறியதும் விக்ரமுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை முகத்தில் காட்டாமல் மறைத்து விட்டான்.

” மச்சான் வர்மா குரூப் ஆப் கம்பெனி MD கூட உன்ன மேரேஜ்க்கு வந்து இன்வைட் பண்ணாருல, நீ கூட ஒரு மீட்டிங்காக மலேசியா போறேன் மேரேஜ்க்கு வர முடியாது ரிசப்ஷனுக்கு வர்றேன்னு சொன்னால, வர்மா சார் பையன் கல்யாணம் பன்னிருக்குறது நம்ம ரிங்குவ தாண்ட, நேத்து மும்பைல மேரேஜ் முடிஞ்சது இன்னைக்கு இங்க ரிசெப்ஷன் “.

ரகு கூறியதைக் கேட்டு விக்ரமுக்கு கோவமாக வந்தது, விக்ரமின் காதுகளில் “நீ இல்லாம எனக்கு எப்படிடா கல்யாணம் நடக்கும் ” என்று ரிங்கு கூறிய வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருந்தது.

” நீயும் ரிசப்ஷனுக்கு வறியா மச்சான்”

“நான் வரல ரகு, நீ மட்டும் போயிட்டு வாடா, அப்புறம் உன்னை யாருடா இன்வைட் பண்ணது “

” போன மாசம் ரிங்கு ஸ்ரேயா ரெண்டு பேரும் வந்து இன்வைட் பண்ணாங்க, அவங்க கூட ஸ்ரேயா ஹஸ்பண்ட் வினித் அப்புறம் அவங்களோட பையன் வீர் ஆதித், ரிங்கு ஹஸ்பண்ட் அஸ்வந்த் எல்லாரும் வந்தாங்க மச்சான்”.

” ஆதித் யாருடா “

” ஸ்ரேயா பையன் வீர்ஆதித், அவனுக்கு மூணு வயசு ஆகுதுடா, இந்த பேர அவனோட அத்தை வச்சாங்களாம், நல்ல இருக்குல “.

 ரகு கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம், எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.

 மாலை நேரத்தில் அந்த ஐந்து நட்சத்திர விடுதி வண்ண வண்ண மலர்களாலும் அலங்கார விளக்குகளாலும் ஜொலித்துக் கொண்டிருந்தது . நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் சூழ மேடையில் அழகு ஓவியங்களாக ஜொலித்துக் கொண்டிருந்தனர் அஸ்வந்த் மற்றும் ரியானா ( ரிங்கு )தம்பதிகள், அவர்களுக்கு அருகில் ஸ்ரேயா மற்றும் வினித் நின்றிருந்தனர்.

அடர் நீல நிறத்தில் கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் விக்ரம் ஆதித்தன், விக்ரம் வருவதை பார்த்து ரகு மட்டும் கல்லூரி நண்பர்கள் பட்டாளம் அவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர். ஆனால் மேடையில் இருந்த பெண்கள் இருவரும் விக்ரமின் வருகையை விரும்பவில்லை.

விக்ரம் மணமக்களுக்கு கிப்டை தந்து வாழ்த்து கூற, ரிங்கு கிப்ட் வாங்க மறுத்து விட்டாள், “ரியா அவரு எவ்ளோ பெரிய பிசினஸ்மேன் அவர இப்படி இன்சர்ட் பண்ணாத ப்ளீஸ் கிப்ட் வாங்கு ” என்று அஸ்வந்த் கூற விக்ரமை முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

 வர்மா விக்ரமை அழைத்து சென்று தனது தொழில்துறை நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு நண்பர்களின் கூச்சல் சத்தம் அந்த விடுதியை அதிர வைத்தது. அங்கு இருந்த விருந்தினர்கள் அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பொழுது பிங்க் கலர் மார்டன் டிரஸில் நீண்ட தலை முடியை விரித்துவிட்டு அழகு தேவதையாக வந்து கொண்டிருந்தால் ஷாம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சங்கமித்ரா ராணி.

ஷாமை பார்த்ததும் விக்ரமின் கண்கள் பலவிதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டியது. ஷாம் வருவதை பார்த்து ஆதித் “குயின் அத்து ” என்று கூப்பிடுக்கொண்டே ஓடி சென்று ஷாமை கட்டிக் கொண்டான்.

ஆதித்தை தூங்கிக் கொண்டு மேடைக்கு சென்ற ஷாம் மணமக்களை வாழ்த்திவிட்டு தன் ஆருயிர் தோழிகளுடன் சேர்ந்து வித விதமாக போட்டோஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது போட்டோக்ராபர் பெண்கள் மூவரையும் பார்த்து அவருடைய ஜோடிகளுடன் நிற்க சொல்ல. ஷாமின் முகம் சுருங்கி கண்கள் கலங்கி விட்டது. தோழிக்களுக்காக அதை மறைத்துக் கொண்டு சிரித்த முகமாக எனக்கு ஜோடி என் ஆதித் குட்டி இருக்கான்ல என்று கூறி போலியாக இருந்தால்.

ஷாமின் முக மாற்றத்தை பார்த்து மற்ற இருவரும் அவளை ஆறுதலா அனைத்துக் கொண்டனர்.இங்கு நடக்கும் அனைத்தையும் கண்கள் சிவக்க கோவமாக பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம் ஆதித்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!