Skip to content
Post Views: 3,474
அத்தியாயம் 8
பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருக்க, ரசிகாவிற்கு அழைப்பு வந்தது. அவள் ஆதியை பார்த்தாள்.
“யாரு ரசி? பேசு” என்று மெல்லினா சொல்ல, ஆதியை பார்த்துக் கொண்டே போனை எடுத்தாள் ரசிகா.
“ஹாய் மௌனி” என்று வெளியே சத்தம் கேட்டது. திரிவேஷூம் அகரனும் பைக்கில் வந்தனர்.
Advertisement
த்ரீ..இது..ஹேய் எப்படிடா? என்று புன்னகையுடன் “உன்னோட சூப்பர் மாடல் பைக்கை வாங்கிட்டியா? சூப்பர்டா” என்று ரசிகா மகிழ்வுடன் பேச, ஆதி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“நீயும் வா. செம்மையா இருக்கும்” என்று த்ரீ ரசிகாவை அழைத்தான். “சும்மா இருடா” என்று அகரன் சொல்லிக் கொண்டே ஆதியை பார்த்தான். ஆதி கோபமாக இருக்கான் என்று மட்டும் தெளிவாக தெரிந்தது.
“இன்னொரு நாள் பார்த்துக்கலாம். லிது, நிதுவை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போகணும்” என்றாள் ரசிகா.
Advertisement
“நோ பிராபளம் மௌனி, ஸ்கூலுக்கு தான நானும் வாரேன்” என்று த்ரீயும் சொல்ல, போனை பறிதத லிது..அங்கிள் ரசி உங்களுடன் எங்கும் வர மாட்டா என்றாள்.
Advertisement
எதுக்கும்மா? நான் எவ்வளவு குட் பாய் தெரியுமா? அவன் கேட்க, ரசிகா புன்னகையை மறைத்து அமர்ந்திருந்தாள்.
“குட் பாய் மாதிரி உங்களை பார்த்தால் தெரியலை. போனை வையுங்க” என்று அவள் சொல்ல, பாப்பா உன்னோட ரசி என்னோட பெஸ்ட்டி. நாங்க பேசக்கூடாதா?
“பேசலாம். ஆனால் ரசி எங்கும் வர மாட்டா” என்று லிது கூற, உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா? நீ படிக்கிற ஸ்கூல்ல “என்னோட கெர்ல் ப்ரெண்டு இருக்கா” என்றான்.
Advertisement
இப்பொழுது ரசிகா போனை வாங்கி, த்ரீ நிஜமா தான் சொல்றியா? எனக் கேட்டாள்.
“மௌனி, உன்னிடம் நான் முதல்ல சொல்லணும்ன்னு உன்னோட வீட்டுக்கு போனேன்” என்று அவன் பேச்சை நிறுத்த, ரசிகா அவர்களை பார்த்தாள்.
ஏய், பார்த்துடா என்று அகரன் சத்தமிட, எல்லாரும் அவர்களை காரிலிருந்து வெளியே பைக்கில் வந்து கொண்டிருந்தவர்களை பார்த்தனர். எதிரே வந்த காரில் லேசாக பைக்கை உரச, திரிவேஷ் தன் பாதையை மாற்றி பைக்கை திருப்பி பாதுகாப்பாக நின்றான்.
“சார், காரை நிறுத்துங்க” என்று ரசிகா ஆதி தோளில் கை வைத்தாள். அவன் காரை நிறுத்திய நிமிடம் வேகமாக ரசிகா, மெல்லினா கீழே இறங்கினர்.
“அகரா, அவன் குறி வைத்தது போல் இருந்ததுடா” என்று திரிவேஷ் சொல்ல, ரசிகா திட்டிக் கொண்டே அவர்களிடம் வந்தாள்.
லூசு..லூசு..இதுலயுமா விளையாடுவ? ரசிகா திரிவேஷை அடிக்க, ஆதி தன் குழந்தைகளுடன் அவர்களிடம் வந்தான்.
சார்,..என்று பைக்கிலிருந்து திரிவேஷ் இறங்கியவாறு கத்தினான். ஆதி திரும்ப, அகரன் ஆதியை தன் பக்கம் இழுத்தான். ஆதி காரை மற்றொரு கார் பள்ளத்தில் தள்ளியது. தன் குழந்தைகளுடனும் அகரனுடனும் ஆதி கீழே விழுந்தான்.
“அண்ணா” என்று மெல்லினா ஆதியிடம் வந்தாள். ரசிகாவும் அவர்களிடம் வந்து, “சார் ஒன்றுமில்லைல்ல..லிது, நிது” என ஆதியிடமிருந்து பிள்ளைகளை வாங்கி அணைத்துக் கொண்டாள்.
விபத்தை ஏற்படுத்திய கார் பின் திரிவேஷ் ஓட, “போகாதடா” என்று அகரன் கத்திக் கொண்டே எழுந்தான்.
முதலில் எழுந்த ஆதி, திரிவேஷ் பைக்கை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி பைக்கை விரட்டினான். இப்ப எதுவும் செய்ய வேண்டாம். வா என்று திரிவேஷ் முன் பைக்கை நிறுத்தி நின்றான் ஆதிரேயன்.
திரிவேஷ் மனநிலை மாற, “பாஸ் சூப்பர். அப்படியே நில்லுங்க” என்று ஆதியுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் தலையில் ஓர் அடியை போட்ட அகரன், நாங்க பதறி போய் வந்தால் இருவரும் போஸ்ஸா குடுக்குறீங்க? என்று அகரன் ஆதியையும் சேர்த்து திட்டினான்.
என்னடா சொன்ன?
அப்புறம் என்ன பாஸ்? நாங்க பயந்து போயிருக்க. இங்க போட்டோஸ் எடுத்துட்டு இருக்கீங்க?
“இவனை எங்கிருந்து பிடிச்சீங்க? கோபத்தில் இருந்தவன் சட்டென புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டான்” என்று ஆதிரேயன் கேட்டான்.
பாஸ், இவனோட நேட்டிவ் திருச்சி. வளர்ந்தது சென்னை. இப்ப வொர்க்கிற்காக இங்கே வந்திருக்கான் என்று அகரன் திரிவேஷை பற்றி கூறினான்.
பாப்ஸ், உங்களுக்கு ஸ்கூல் கட்டா? என்று திரிவேஷ் கேட்க, ரசிகா கோபமாக, “இங்க என்ன நடக்குது? நீ என்ன செஞ்சிட்டு இருக்க? எதற்கெடுத்தாலும் உனக்கு விளையாட்டா டா?” என்று திரிவேஷை திட்டிக் கொண்டே குழந்தைகளின் புத்தகப்பையை வைத்து அடித்தாள்.
ருச்சி, அவனை விடு. அவனை பற்றி தான் உனக்கு தெரியும்ல்ல? என்று ரசிகாவை அகரன் தடுத்தான்.
சும்மா, விளையாடுறேன்னு சொல்லாத மௌனி. நீ சீரியசா இருந்து என்ன தான் பார்த்த? ஏதாவது மாறுச்சா? என்று பட்டென திரிவேஷ் கேட்டான். ரசிகா அமைதியாக நகர்ந்து நின்றாள்.
த்ரீ, என்ன பேசுற? சும்மா இரு. உங்கள வச்சிட்டு நான் எப்படி தான் சமாளிப்பதோ? என்று தலையில் அடித்த அகரன், நீ கிளம்புடா என்றான்.
“நான் என்னோட ஆளை பார்க்க போறேன். நீங்க என்னமும் செய்யுங்க” என்றான் திரிவேஷ்.
அண்ணா, என்னோட கிளாஸ் இன்னும் பத்து நிமிசத்தில் ஆரம்பமாகி விடும். நான் இப்ப எப்படி ஸ்கூலுக்கு போவேன்? மெல்லினா கேட்க, எல்லாரும் திரிவேஷை பார்த்தனர்.
ஹே பாப்ஸ், நான் உன்னை ஸ்கூலில் டிராப் பண்றேன். எனக்கு மௌனி ஒன்று தரணுமே? என்று திரிவேஷ் கேட்க, தரணுமா? என்று மெல்லினா ரசிகாவை பார்த்தாள்.
“தந்து தொலையிறேன்” என்று அவளது பர்ஸை தேடினாள். அவள் எடுத்து வரவில்லை. உச்சுக் கொட்டிக் கொண்டே அகரனிடமிருந்து அவன் பாக்கெட்டில் உரிமையுடன் கையை விட்டாள்.
ரசி, என்ன பண்ற? எனக்கு நேரமாகுது. மெல்லி கொஞ்சம் வெயிட் பண்ணும்மா என்று அகரனை பார்த்தாள். அவன் “இல்லை” என்று கையசைத்தான். ஆதிரேயன் ரசிகாவையும் அகரனையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடமும் பணம் இல்லை என்றது கொஞ்சமும் யோசிக்காது ஆதியிடம் வந்து கையை நீட்டினாள்.
என்ன? ஆதி கேட்டான்.
“பத்து ரூபாய் குடுங்க சார்” என்று கேட்டாள்.
வாட்? பத்து ரூபாயா? என்று மெல்லினாவும் ஆதியும் திரிவேஷை பார்த்தனர்.
சார், கேவலமா பார்க்காதீங்க. அது எங்க ப்ரெண்ட்ஷிப்பின் ஆரம்பம் என்று திரிவேஷ் சொல்ல, “சார் இருந்தா சீக்கிரம் தாங்க” என்று ரசிகா கேட்டாள்.
என்னோட தங்கையை இவனுடன் நான் அனுப்பணுமா? ஆதி கேட்க, திரிவேஷ் சிரித்தான்.
அகரனை உங்களுக்கு தெரியும்ல்ல சார். அவனும் உடன் போகட்டும் என்ற ரசிகா இருக்கா? இல்லையா? என்று ஆதியிடம் கேட்டாள். அவனிடம் கார்டு மட்டுமே இருந்தது.
ரொம்ப கஷ்டப்படாத. அதுக்கு பதில் வேற ஒன்று செய் என்ற திரிவேஷ்,” உன் கழுத்தில் இருக்கும் தாலியை இந்த பள்ளத்தில் தூக்கி போட்டு விடு” என்றான். ரசிகா அதிர்ந்து நின்றாள்.
உன்னால முடியாதுல. எனக்கு அவன் யாருன்னு தெரியாது. ஆனால் அவனை எனக்கு பிடிக்கவில்லை. உன் கழுத்தில் இருப்பதும் எனக்கு பிடிக்கல. அவன் என் கண்ணில் படாமல் பார்த்துக்கோ. பட்டான் நீ கழற்றும் முன் அதை பிடுங்க வேண்டி வரும். எல்லாரும் அதை பிடுங்கும் முன் நீயே தூக்கிப் போட்டிரு..
“பாப்ஸ் நீ வா” என்று திரிவேஷ் மெல்லினாவை அழைக்க, எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.
அண்ணா..மெல்லினா அழைக்க, ஆதி ரசிகாவை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள்.
“அழுறத நிறுத்திட்டு அவன் சொன்னதை செய்யப் பாரு ருச்சி” என்று அகரன் திரிவேஷ் அருகே வந்தான்.
“பத்திரமா கூட்டிட்டு போங்க” என்று மெல்லினாவை திரிவேஷூடன் செல்ல ஆதி அனுமதிக்க, மெல்லினா அவன் தோளில் கை போட்டு ஏறினாள். அகரன் அவள் பின் அமர்ந்தான்.
வேகமா போகாதீங்க. “இப்பொழுது தான் முதல் முறை பைக்கில் ஏறி இருக்கா” என்று ஆதி சொல்ல,
பாஸ் நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு இப்பொழுது கார் வந்திடும். நீங்களும் சீக்கிரம் வந்துருங்க என்று அகரன் சொல்ல, திரிவேஷ் பைக்கை விரட்டினாள்.
“வாவ், பைக் ரைடு சூப்பரா இருக்கு. இவ்வளவு ஜாலியா இருக்குமா?” என்று கண்ணை மூடி சந்தோசமா மெல்லினா கேட்க, ம்ம்..என்று இருவரும் பதிலளித்தனர்.
என்னாச்சு? இருவரும் அமைதியா இருக்கீங்க? என்று கண்ணை திறந்து திரும்பி அகரனை பார்த்து விட்டு திரிவேஷை பார்த்தாள். அகரன் ஏதோ யோசனையில் இருந்தான். திரிவேஷ் ரசிகாவை நினைத்து மனக்கலக்கத்தில் இருந்தான்.
ஸ்கூல் வந்து விட மூவரும் இறங்கினர். தேங்க்ஸ் த்ரீ, அகரா என்றாள் மெல்லினா.
ஏய், நில்லு..நீ சின்னப் பொண்ணு. எங்க எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடுற? திரிவேஷ் கேட்டான்.
“எனக்கு இந்த முறையெல்லாம் தெரியாது. நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் பேசுவேன்” என்று அவளது புத்தகப்பையை தோளில் போட்டு உள்ளே செல்ல, அவளை நிறுத்திய அகரன்..
“இந்தா” என்று சாக்லெட் ஒன்றை கையில் கொடுத்து, “உனக்கு டென்சனா இருந்தா சாப்பிடு” என்றான்.
“தேங்க்ஸ் அகரா” என்று அவள் நகர, அவளது வகுப்பாசிரியை சுரேகா மெல்லினாவிடம் வர, அவள் விழித்துக் கொண்டு நின்றாள். ஆனால் அவர் மெல்லினாவை கடந்து திரிவேஷிடம் ஓடிச் சென்று அவனை அணைத்தார்.
உள்ளே செல்லாமல் மெல்லினா வாயை திறந்து கொண்டு இருவரையும் பார்த்தாள்.
“ஹேய், நீ வகுப்புக்கு போ” என்று அகரன் அவளை ஸ்கூலுக்குள் இழுத்து சென்றான். அவள் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.
இங்க பாரு. எதுக்கு அவங்களை இப்படி பாக்குற? நீ தான் நிறைய ஜோடிகளை பார்த்திருப்பேல்ல?
அவங்க என்னோட மிஸ். அவங்க இப்ப கிளாஸ்ல்ல இல்லாமல்..த்ரீய லவ் பண்றாங்கல்லா? அவள் ஆச்சர்யமாக கேட்டாள்.
உங்க மிஸ் லவ் பண்ணக்கூடாதா? அகரன் கேட்டான்.
அகரா, அதுக்கில்லை. அவங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆன மாதிரி எல்லாரும் பேசுறாங்க?
அப்படியா? அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைன்னு த்ரீ ஏதோ சொன்னான். பிரச்சனை அவனுக்குமா? என்று அகரனும் மெல்லினாவும் ஒன்றாக திரும்பி இருவரையும் பார்த்தனர். திரிவேஷூம் சுரேகாவும் கண்ணீருடன் இருந்தனர்.
அகரன் மெல்லினாவை அங்கேயே விட்டு நகர, மெல்லினா ஓடிச் சென்று அகரன் கையை பிடித்து, இப்ப அவங்களுக்கு இடையில போகாத அகரா. அவங்க பேசணும் என்றாள்.
அகரன் அவள் பிடித்திருந்த கையை பார்க்க, அவள் எடுத்து விட்டு சுரேகாவை பார்த்தாள். திரிவேஷூம் சுரேகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
திரிவேஷ் கோபமாக இப்பொழுது எப்படி திருமணம் செய்வது? இப்பொழுது தான் என்னோட கரியரில் காலடி எடுத்து வைத்திருக்கேன். “ஒரு வருடம் மட்டும் காத்திரு” என்றான்.
எப்படி காத்திருப்பது? உனக்காக ஏற்கனவே ஒரு வருடம் காத்திருந்தேன். ஆனால் இப்ப என்னால் முடியாது. நீ இங்கே இருப்பது தெரிந்தால் ஒரு வாரம் கழித்து நடக்கவிருக்கும் திருமணத்தை நாளையே முடிச்சிருவாங்க. எவனோ ஒருவனுடன் நான் எப்படி வாழ்வது? என்னால் உன்னை மறக்க முடியாதுடா என்று சுரேகா அழுதாள்.
“சுரே, இங்க பாரு” என்று அவளை நிமிர்த்தி, நான் உங்க வீட்ல வந்து பேசுறேன். புரிஞ்சுக்கோம்மா. இப்ப நாம திருமணம் செய்தாலும் நம்மால் சந்தோசமாக வாழ முடியாது. நான் ஒரு வருடமாவது உழைத்தால் தான் நாம் முன்னேறவும் முடியும். நாம சந்தோசமாகவும் வாழலாம் என்றான்.
இல்ல திரிவ், என்னால இதுக்கு மேல ஒருநாள் கூட உனக்காக காத்திருக்க முடியாது. இப்பவே என்னை கூட்டிட்டு போ என்று சுரேகா பிடிவாதம் செய்தாள். அவன் கோபத்தில் அவளை அடித்து விட்டு, உன்னால காத்திருக்க முடியாதுன்னா “போடி அவனையே திருமணம் பண்ணிட்டு குடும்பம் நடத்து” என்று கத்தினான்.
சுரேகா அவனை அடித்து விட்டு அழுது கொண்டே ஓடினாள். அகரனும் மெல்லினாவும், மற்ற சில ஆசிரியை ஆசிரியர்களும் இருவரையும் திகைத்து பார்த்தனர்.
சுரேகா, அந்த பக்கம் போகாத. பள்ளம் இருக்கு என்று ஒரு ஆசிரியை கத்த, தன் கோபம் தணிந்து அவளை பார்த்த திரிவேஷூம் அவன் பின் ஓட, “மேம் போகாதீங்க” என்று மெல்லினாவும் சுரேகா சென்ற பாதையில் ஓடினாள்.
“ஏம்மா, நில்லு நீ எதுக்கு போற?” என்று அகரனும் அவள் பின் ஓடினான். சுரேகா பள்ளைத்தில் விழ, முதலில் அவளை வந்து பிடித்தாள் மெல்லினா.
“மேம், மேல வாங்க” என்று மெல்லினா சத்தமிட, ஆதியும் ரசிகாவும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்து இறங்கினர்.
மேலே வர முயன்ற சுரேகாவுடன் மெல்லினாவும் விழ, திரிவேஷ் மெல்லினா கையை பிடித்து தூக்கினான். அகரன் வந்தவுடன் மெல்லினாவை திட்டிக் கொண்டு நின்றான்.
“டேய், முதல்ல தூக்குடா” என்று திரிவேஷ் கத்த, மெல்லினா அழுதாள். அகரனும் மற்றவர்களும் உதவ, யாருக்கும் ஏதும் ஆகாமல் மேலே வந்தனர். விசயத்தை அறிந்து அங்கே வந்த ஆதியும் ரசிகா அவ்விடம் விரைந்தனர்.
திரிவேஷ் சுரேகாவை திட்டிக் கொண்டிருந்தான். மெல்லினா அகரனிடம், “நான் எவ்வளவு பயத்தில் தொங்கிக்கிட்டு இருக்கேன். உதவு செய்யாமல் திட்டுறடா..”என்று அகரனது கையில் அடித்துக் கொண்டே அழுதாள்.
இதை பார்த்த ஆதிரேயன், அகரன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மெல்லினா அழுகை நின்றது. சுரேகாவும் திரிவேஷூம் இருவரையும் பார்த்தனர்.
சார்..என்று ரசிகாவும் குழந்தைகளை தூக்கிக் கொண்டே அகரனிடம் வந்தான். மெல்லினா ஆதியை பார்த்து, அண்ணா இவனை எதுக்கு அடிச்ச? என்று கத்தினாள். அகரன் கன்னத்தில் கை வைத்து ஆதியையும் மற்றவர்களையும் பார்த்தான்.
உன்னை பார்த்துக்கிறேன்னு இவன் தான சொன்னான்? என்று ஆதி கேட்க, “அதுக்காக இப்படியா அடிப்ப? என் மேல தான் தவறு. எல்லாரும் வேடிக்கை பார்க்கும் போது நான் முன் வந்ததால் பிரச்சனை” என்று மெல்லினா அழுதாள். கன்னத்திலிருந்த கையை எடுத்துக் கொண்டே அகரன் மெல்லினாவை பார்த்தான்.
எதுக்கு இப்ப அழுற? ரசிகா கேட்க, ரசி அன்று இதே மாதிரி தான் மித்திரன் அவசரத்தால் என்னோட ப்ரெண்ட்ஸ் யாருமே என்னுடன் இல்லை. இப்ப நான் அவசரப்பட்டதால் தான அண்ணன் அகரனை அடிச்சிட்டான் என்று மெல்லினா மேலும் அழுதாள்.
இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மெல்லி ரசிகா சொல்ல, மெல்லினா அவளை அணைத்து மேலும் அழுதாள். இவள் எதுக்கு அழுகிறாள்? என்று யாருக்கும் மட்டுப்படவில்லை.
“சாரி சார், நானாவது கவனித்திருக்கணும்” என்றான் திரிவேஷ்.
“இல்ல சார், என்னால் தான் எல்லாம்” என்று சுரேகாவும் அழுதாள். திரிவேஷ் அவளை முறைக்க, அதை பார்த்த மெல்லினா,
என்னோட மேம்மை எதுக்குடா முறைக்கிற? எவ்வளவு ஈசியா பேசுற?
மேம், நீங்க உங்க வீட்டுக்கே போங்க. உங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளை இவனை விட நல்லா சம்பளம் வாங்குவான். உங்களை நல்லா பார்த்துப்பான். “வாங்க நாம கிளாசுக்கு போகலாம்” என்று சொல்லிய மெல்லினா திரிவேஷை பார்த்து, “இனி என்னோட மேம் பின்னாடி வந்த போலீஸ் கம்பிளைண்ட் கொடுத்திருவேன்” என்று மிரட்டினாள்.
சுரேகாவும் அவனை பார்த்து, “உன்னால முடியாதுல்ல. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அவள் உள்ளே செல்ல, திரிவேஷ் வருத்தமுடன் சுரேகாவை பார்த்துக் கொண்டே நின்றான். மெல்லினாவும் உள்ளே சென்றாள். ரசிகாவிற்கும் ஆதிக்கும் நடக்கும் ஏதும் புரியாமல் நின்றனர்.
அகரன் கோபமாக திரிவேஷிடம் வந்து அவனை அறைந்தான். “உன் நிலையை யோசிப்பது போல் அந்த பொண்ணு நிலையையும் யோசிடா” என்று கோபமாக சத்தமிட்டான்.
“என்னடா நடக்குது? ஒண்ணுமே புரியல” ரசிகா கேட்க, அகரன் நடந்ததை சொன்னான்.
எதுவுமே இல்லாமல் எப்படிடா அவளை திருமணம் செய்றது? உனக்கு தெரியாதாடா அகரா? நானே இன்வெஸ்டர் கிடைக்காமல் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். இந்த நிலையில் திருமணம் எப்படி செய்வது? அவள் பக்கமே இருக்க நேரமிருக்காது. என்னுடன் அவளும் கஷ்டப்படுணுமேடா? திரிவேஷ் கேட்க,
நீ அந்த பொண்ணு வீட்ல பேசி பார்க்கலாம்ல்லடா? ரசிகா கேட்டாள்.
“என் நிலை தெரிந்து எவன் தன் பிள்ளையை எனக்கு மணமுடித்து தர ஒத்துப்பான்” என்று திரிவேஷ் கேட்க, அகரனும் ரசிகாவும் பேச முடியாமல் நின்றனர்.
லிது, நிது அவர்களை பார்த்துக் கொண்டே நிற்க, அவர்களின் ஆசிரியர் வந்து அவர்களை அழைத்தார்.
“ரசி, நீ இங்கேயே இருக்கணும். வீட்டுக்கு போகக்கூடாது” என்று நிது சொல்ல, அவர்கள் கவனம் பிள்ளைகள் மீது படிந்தது.
நிது குட்டி, பாட்டி வீட்ல இருக்காங்க. அவங்கள பார்த்துக்கணும்ல்ல. நான் போயிட்டு சீக்கிரம் வருவேன். வரும் போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரவா? ரசிகா கேட்க, எனக்கு ஸ்ட்ராபெர்ரி என்று லிது சொல்ல, எனக்கு வெண்ணிலா என்றாள் நிது.
“என்னோட சமத்து குட்டிகள்” என்று இருவருக்கும் முத்தம் கொடுத்த ரசிகா ஆதியை பார்த்து கண்ணை காட்டினாள். அவன் அவர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களுடன் பேசி முத்தம் கொடுக்க, இருவரும் தன் தந்தையை ஆசையுடன் கட்டிக் கொண்டு முத்தமிட்டு ஆசிரியையுடன் சென்றனர்.
ஆதி திரிவேஷிடம் வந்து, “வாங்க வெளிய போய் பேசலாம்” என்று அழைத்தான். மூவரும் அவனுடன் சென்றனர்.
இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்க? ஆதிரேயன் திரிவேஷிடம் கேட்டான்.
சார், இங்க இருக்கும் நிலத்தில் பருத்தி சாகுபடிக்கு ஆட்கள் வைத்து தயார் செய்தேன். இப்ப காட்டன் இருக்கு. ஆனால் அதை விற்பனைக்கு எந்த கம்பெனியும் எடுக்க மாட்டேங்கிறாங்க. அதனால் நானே அதுக்கு கம்பெனி ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். அதற்கு பணமும் இல்லை. கம்பெனியே தொடங்காமல் எங்கே இன்ஸ்வெஸ்டர் கிடைப்பாங்க? என புலம்பினான் திரிவேஷ்.
எந்த இடத்தில் சாகுபடி போட்ட? என ஆதிரேயன் கேட்க, திரிவேஷ் விளக்கினான்.
சரி, அப்ப இன்வெஸ்ட் பண்ணா. பிராபிளம் சால்வா? ஆதிரேயன் கேட்க, சார் என்று திரிவேஷ் தயங்கினான்.
நீ காட்டனாக எடுப்பதை நூலாக்கி விற்பனை செய்யலாமே? அது போக வாய்ப்புள்ளது என்றான் ஆதிரேயன்.
ஆட்கள் வேண்டும் .மிஷின் வேண்டும். அதற்கெல்லாம் பணம் வேண்டும். அது இருந்தால் நூல் என்ன ஆடைகளையே தயாரிக்கலாம் என்றான் திரிவேஷ்.
“காட்டன் தொழிற்சாலை” ஆரம்பி. நான் உன்னோட காட்டனை பார்த்துட்டு இன்வெஸ்ட் பண்றேன் என்றான் ஆதிரேயன்.
பாஸ், ஆனால் ஆட்கள்? அகரன் கேட்டான்.
அவன் தொழிற்சாலையை மேட்டுப்பாளையத்திலே ஆரம்பிக்கட்டும். அங்க தான சாகுபடி நடக்குது?
ஆமா சார், ஆனால் முதல்ல காட்டனை சுத்தப்படுத்த, அது இதுவென அதற்கும் மிஷினெல்லாம் வேண்டும். பருத்தி சாகுபடி நல்ல படியா நடக்குது. என்னால எடுக்க முடியலை. யோசிக்காமல் கை வைத்து விட்டேனோ? என சிந்தனையா இருக்கு என வருத்தப்பட்டான்.
எடுத்ததை பின் வாங்காதே? இப்ப இருக்கும் ஆட்களை தொழிற்சாலை அமைத்து அதில் அவர்களை வேலைக்கு எடுத்துக்கோ. பருத்தியை பிரித்து எடுக்கும் மிஷின் இருக்கு. அதை பயன் படுத்தலாம். கிடைக்கும் பஞ்சை அப்படியே விடாமல் நூலாக்கலாமே?
சார், அது அவ்வளவு சாதாரண விசயமல்ல. நிறைய செயல்கள் நடக்கணும். அனைத்துக்கும் மிஷின் வேண்டும். பெரிய அளவிலான நிறைய மிஷின்கள் தேவைப்படும். என்னால அதெல்லாம் வாங்க முடியாது. ஆனால் சார் தரமான பஞ்சை தயாரிக்கும் சில மிஷின்கள் வாங்க முடியும் என்றான்.
எதையும் அரைகுறையாக ஆரம்பிக்காத. தேவையான எல்லாவற்றையும் வாங்கு என்ற ஆதிரேயன் யோசனையுடன், நான் ஒன்று சொன்னால் தவறாக எடுக்க மாட்டாயே? என திரிவேஷிடம் கேட்டான்.
“பாஸ், வேண்டாம்” என்றான் அகரன்.
“நான் உன்னிடம் கேட்கலை அகரா. நீ அமைதியா இரு” என்று ஆதிரேயன் திரிவேஷை பார்த்தான்.
என்னடா? என்று ரசிகா அகரனை சுரண்ட, ஷ்..சும்மா இரு ருச்சி என்றான் அகரன்.
ரசிகாவை பார்த்து விட்டு, சொல்லுங்க சார். நான் எதுவும் எடுத்துக்கலை என்றான் திரிவேஷ்.
நாம பார்ட்னர்ஷிப் பண்ணிக்கலாமா? ஆதிரேயன் கேட்க, நாமலா? என்று திரிவேஷ் கேட்டான்.
ஆமா, உனக்கு பணம் மட்டும் தான பிரச்சனை? என்னிடம் தொழிற்சாலைக்கான இடம் ஒன்று உள்ளது. நீ காட்டன் உற்பத்தியையும், அதற்கான நடப்பு அனைத்தையும் பக்கமிருந்து பார்த்துக்கோ. எனக்கு பணம் பெரிதில்லை. ஆரம்பித்தால் நாம தான் முன்னாடி இருக்கணும். தரமானதாக இருக்கணும். யாரும் நம்ம பிராடெக்ட்டை குறை சொல்லும் அளவு வச்சிக்க கூடாது. நீ இதுல சீரியசா இருந்தா பண்ணலாம் என்றான் ஆதிரேயன்.
ரசிகாவும் அகரனும் திரிவேஷை பார்த்தனர்.
நீ எதுக்குடா வேண்டாம்ன்னு சொன்ன? ஆதிரேயன் அகரனை கேட்க, இவனுக்கு ஊர் சுத்தவே நேரம் பத்தாது என்றான் அகரன்.
ஓய், நீ என் நண்பன் தானாடா அகரா? என்ற திரிவேஷ், அவனது பருத்தி ஃபாப்மிங்கை அவனது போனில் காட்டினான்.
த்ரீ, இது எல்லாமே உன்னுடையதா? ரசிகா ஆச்சர்யமாக கேட்டாள்.
நான் ஊர் சுத்துறேன்னு தெரிஞ்சதுல்ல. என்ன செய்றேன்னு கேட்டியாடா? என்று திரிவேஷ் அகரனிடம் கேட்டான்.
“சாரிடா” அகரன் சொல்ல, “விடுடா” என்று திரிவேஷ் அவனை அணைத்தான்.
இப்ப தான் முதல் சாகுபடி ஆரம்பித்து இருக்கோம். என்னை யாருக்கும் தெரியாது என்பதால் யாரும் கண்டுக்க கூட மாட்டேங்கிறாங்க. ஆனால் ஐநூறு ஏக்கரில் பயிரிட்டு வளர்த்து இருக்கோம்.
ஐநூறு ஏக்கரா? ரசிகா கேட்க, ஆமா அம்மா, அப்பா அவங்க சொத்து எல்லாத்தையும் விற்று தான் அப்பா உதவியுடன் தான் வாங்கினேன். இதுக்கு மேல் அவங்கள தொந்தரவு செய்ய விருப்பமில்லை. இப்ப வீடும், அப்பாவின் ஒரு கம்பெனியும் தான் இருக்கு மௌனி என்றான் வருத்தமாக.
ஐநூறு ஏக்கர் பருத்தியை எப்படி ஆட்களை வைத்து கலெக்ட் செய்யுற? ஆதிரேயன் கேட்க, நான் என்ன சார் செய்றது? சுரே கால் பண்ணி அழுதா. அதான் இப்ப ஸ்கூலுக்கு வந்தேன். இல்லை நானும் அங்கே தான் சென்றிருப்பேன் என்றான் திரிவேஷ்.
நம்பிக்கையான ஆட்கள் இருக்காங்களா? ஆதிரேயன் கேட்க, நாங்க படித்தவுடன் நிலம் வாங்கிட்டோம் சார். இதை பற்றி நான் அறிந்து கொள்ள பல தொழிற்சாலைகளையும், ஃபார்மையும் பார்த்து வந்தேன். இரு மாதங்களுக்கு முன் தான் ஆரம்பித்தேன். நானும் ஒரு மாதம் அவர்களுடன் சேர்ந்தே வேலையை ஆரம்பித்தேன்.
இப்ப பருத்தி வளர்ந்து பிரிக்க ஆரம்பிச்சிட்டோம். அதை வைத்து தான் இரு நாட்களாக எல்லாரிடமும் விற்பனைக்காக அலைந்து திரிந்தேன். அதற்குள் சுரேகா வீட்டில் வேற கல்யாணத்தை இப்பவே முடிக்கணும்ன்னு பாக்குறாங்க. அவளும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா என்றான்.
ஓ.கே நாம கிளம்பலாமா? ஆதிரேயன் கேட்க, எங்க சார்? ரசிகா கேட்டான்.
அவனோட முதல் பிரச்சனை, அந்த பொண்ணோட திருமணம் தான? அவங்களுக்கு இவன் செய்வது தெரியணும்ல்ல? ஒரு வருசம் அவங்கள வெயிட் பண்ண வைக்கணும். பேசலாம். அதுக்கு முன் நான் கேட்டதற்கு பதில்? என்று ஆதிரேயன் கேட்க,
“உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா. நாம பார்ட்னர்ஸ் ஆகிக்கலாம்” என்றான் திரிவேஷ்.
ஓ.கே. ஆனால் உன்னோட ஃபார்ம், ஆட்களை நான் பார்க்கணும். அதை முடிச்சிட்டு நம்ம தொழிற்சாலைக்கான இடம், தேவையான மிஷின்ஸ் எல்லாமே தெரிஞ்சுக்கணும். என்ன விளக்கம் தர தயாரா இருக்கிறாயா? ஆதிரேயன் கேட்க, கண்ணீருடன் திரிவேஷ் ஆதிரேயனை அணைத்தான்.
இங்கேயே நின்னுகிட்டு இருந்தால் எப்படி? நீங்க இங்கேயே இருங்க என்று ஆதிரேயன் பிரின்சிபிலை பார்த்து பேசி விட்டு சுரேகாவை அழைத்து வந்தான். அவள் புரியாமல் அவனுடன் வந்தாள்.
இவளை ஆதிரேயன் அழைத்து வருவான் என வெளியே இருந்த மூவரும் எதிர்பார்க்கவில்லை. சுரே என்று திரிவேஷ் அவளிடம் வர, சார் எதுக்கு என்னை வெளிய அழைச்சிட்டு வந்தீங்க? அவள் ஆதிரேயனிடம் கேட்டாள்.
உன்னோட மேரேஜை தடுக்க வேண்டாமாம்மா? ஆதிரேயன் கேட்க, “வேண்டாம் சார் நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சுரேகா சொல்ல,
எனக்கு நேரம் வேணும்ன்னு தான கேட்டேன். அதுக்கு வேற ஒருவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற? திரிவேஷ் கேட்க, சுரேகா கோபமாக அவனிடம் வந்து, அவனை அடித்துக் கொண்டு இப்படியா டா சொன்ன? நீ எவனையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்ல்ல. நான் அவனையே பண்ணிக்கிறேன் என்றாள்.
கோபத்துல்ல ஏதோ பேசிட்டேன். அதுக்காக யாரை ஒருவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்வியா? என திரிவேஷூம் கோபித்துக் கொண்டான்.
நீ மட்டும் அப்படி பேசலாமா? என்று அழுது கொண்டே சுரேகா திரிவேஷை அணைத்தாள்.
சரி விடு. அவனை ஓட ஓட விரட்டலாமா? திரிவேஷ் கேட்க, “சுயர்” என்று புன்னகைத்தாள் சுரேகா.
அவனை விரட்டுவது இருக்கட்டும். முதல்ல உன்னோட அம்மா, அப்பா ஒத்துக்கணுமே? என்று ஆதிரேயன் சுரேகாவை பார்த்தான்.
“ஆமா சார், அவங்க ஒத்துக்க மாட்டாங்க” என்றாள் வருத்தமாக.
திரிவேஷ், உங்க வீட்ல எப்படி? உன்னோட காதலை ஏத்துப்பாங்களா? ஆதிரேயன் கேட்டான்.
எங்க அம்மா, அப்பாவுக்கு நான் காதலிக்கும் பொண்ணு இவ தான்ன்னு தெரியும். நேரில் அவங்க பார்த்ததில்லை . அவங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லை. சுரேவ அவங்களுக்கு பிடிச்சிருக்கு என்றான்.
எப்படிடா? என்னிடம் நீ சொல்லவேயில்லை? சுரேகா கேட்டாள்.
அதை அப்புறம் பேசிக்கோங்க. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. வாங்க கிளம்பலாம் ஆதிரேயன் அழைத்தான்.
எங்க சார் போகணும்? நானுமா? என்று சுரேகா கேட்டுக் கொண்டே ரசிகாவையும் அகரனையும் பார்த்தாள்.
நீ ரசிகா தான? என்று சுரேகா கேட்க, நான் தான் என்று ரசிகா திரிவேஷை பார்த்தாள். ஆமா இன்னொரு பொண்ணு..அவ..என்று யோசித்து பருவதி எங்க? எனக் கேட்டாள்.
ஆமா, பரு எங்கடா? நீங்க மட்டும் சுத்திட்டு இருக்கீங்க? ரசிகா கேட்க, அவள பத்தி பேசாத மௌனி. அவளுக்கு திமிரு கூடி போச்சு.
சண்டை போட்டீங்களாடா? என்னடா பிரச்சனை? சலிப்பாக ரசிகா கேட்க, திரிவேஷ் அகரனை பார்த்தான்.
ருச்சி, அவ என்ன செஞ்சா நமக்கென்ன. அவள விடு. நாம த்ரீய பத்தி யோசிப்போம் என்றான்.
என்ன வேண்டாதவளை பத்தி பேசுற மாதிரி பேசுறீங்க? ரசிகா கோபமாக கேட்டான். ஏதோ சொல்ல வந்த திரிவேஷை தடுத்த அகரன், அவள பற்றி பேசுறதா இருந்தா நான் இப்பவே கிளம்புறேன் என்றான்.
அகரா, நீயுமா சண்ட போட்ட? ரசிகா கேட்க, ருச்சி உன்னிடம் எப்படி சொல்வது? என்று தவித்தான் அகரன்.
என்னடா? ரசிகா மேலும் கேட்க, “மௌனி அவ முழுசா மாறிட்டா. அவள் சரியில்லை. நீ அவளை விட்டு விலகியே இரு” என்றான் திரிவேஷ்.
என்னடா விளையாடுறீங்களா? எத்தனை வருட நட்பு? இப்படி சாதாரணமா பேசாதன்னு சொல்றீங்க? ரசிகா கோபமானாள்.
உன்னிடம் எப்படி சொல்றது மௌனி? என்னால முடியாதே? என இருவரும் மனதினுள் சிந்தனையுடன் இருக்க, “டேய் பதில் சொல்லுங்கடா” என்று இருவர் கையையும் பிடித்து உலுக்கினாள் ரசிகா.
ஹேய் ரசிகா, ஸ்கூல் முன்னாடி இருக்க? இங்க எப்ப வந்த? இவனுகளோட தான் இருக்கியா? என்று ஆதி சார் உங்களுக்கு ரசிகாவை தெரியுமா? நாங்க ஒரே காலேஜ் தான் என்று ஒருவன் ரசிகா அருகே வந்தான்.
அகரனும் திரிவேஷூம் விழித்து அவனுக்கு முன் ரசிகாவை மறைத்து நின்றனர்.
“ராம், நீ இங்க என்ன பண்ற?” என்று அவர்களை நகர்த்த, அகரனும் திரிவேஷூம் அவனை பார்க்க விடவில்லை.
“டேய், வழிய விடுங்கடா. பேசணும்” என்று இருவரையும் திட்டிக் கொண்டே அவர்களை நகர்த்தினான். இவர்களது செய்கையை பார்த்த ஆதிக்கு, “இவர்கள் ரசிகாவை அவனுடன் பேச விடாமல் தடுக்கிறார்கள். ஏதோ காரணம் இருக்கு” என்று புரிந்து கொண்டான்.
ராம்,” ரசி இங்க தான் இருப்பா. நீங்க எப்ப வேண்டுமானாலும் பேசாலாம். இப்ப எங்களுக்கு வேலை இருக்கு” என்று வந்த வழியே ராமை ஆதி அனுப்பி வைத்தான்.
பேச வந்தவனை கூட பேச விடாமல் செஞ்சுட்டீங்களே? ரசிகா கோபமாக, பரு என்ன செஞ்சான்னு சொல்லுங்கடா? என்று சத்தமிட்டாள்.
“விடுன்னு சொல்றோம்ல்ல. சும்மா இருக்க மாட்டாயா?” திரிவேஷ் கத்தினான்.
ஏன்டா, என்னிடம் சொல்றதில் என்னடா? ரசிகா கேட்க, உனக்கு என்ன இப்ப சொல்லணுமா? அவளுக்கு உன்னை பிடிக்காதாம். சும்மா தான் ப்ரெண்டுன்னு சொன்னாலாம் என்று அகரனும் சத்தமிட்டான்.
ரசிகா கண்கலங்க, இதுக்கு தான் நாங்க சொல்லலை. உன்னையாவது பிடிக்கலைன்னு நிறுத்திட்டா. இந்த பருத்தி பஞ்சு விற்பனைக்காக பருவோட அப்பாவிடம் பேச தான் போனேன். ஆனால் அவள் என்னை பிச்சைக்காரன்னு சொல்லி ஆளை விட்டு அவள் வீட்டிலிருந்து வெளிய தள்ளிட்டா. எனக்கு இதுக்கு முன் இப்படி அவமானம் நடந்ததேயில்லை என்று திரிவேஷ் அழுதான்.
“த்ரீ, உன்னை வெளிய தள்ளீட்டாலா? இதை என்னிடம் நீ சொல்லவேயில்லை” அகரன் கோபமாக, ரசிகா கண்ணீருடன் தன் நண்பர்களை அணைத்துக் கொண்டாள்.
“சாரிடா, நீங்க சொல்லும் போதே புரிஞ்சி இருந்திருக்கணும். நான் உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்” என்று ரசிகா அழுதாள்.
உனக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு உன்னை நீயே குற்றம் சாட்டிக்கிற? திரிவேஷ் சினமுடன் ரசிகாவிடம் கேட்க, “த்ரீ நிஜமாகவே பருவா பண்ணா?” என்று ரசிகா கேட்க, “நம்பாத..இன்னும் அவளை நம்பி முட்டாளாய் இரு” என்று கத்தினான் திரிவேஷ்.
உங்களுடன் வந்த போது அந்த பொண்ணு ரசியிடம் நல்லா தானே பேசினா? ஆதிரேயன் கேட்டான்.
ருச்சிக்கு இது தெரியக்கூடாதுன்னு தான் பருவிடம் பேசி அழைத்து வந்தோம். சும்மா கேட்க தான் வந்தாள் அவள் என்றான் அகரன்.
ஓ..நீ உங்க ஊர்ல இருந்து இந்த பொண்ணை நம்பி ஊட்டிக்கு வந்திருக்க? என்று ஆதிரேயன் ரசிகாவை முறைத்துக் கொண்டு கேட்டான். ரசிகாவிற்கு மேலும் கண்ணீர் பெருகியது.
“சாரிடா, இதெல்லாம் தெரியாமல் உன்னோட பிரச்சனையை அறிந்து கொள்ளாமல் நானும் கோபப்பட்டுட்டேன். மன்னிச்சிருடா” என்று சுரேகா கண்ணீருடன் திரிவேஷை அணைத்தாள்.
கண்ணை துடைத்த அனைவரும் அவளை பார்க்க, ஏதோ அவளுக்கு நடந்தது போல் அழ, போச்சுடா இன்னொரு ருச்சியா? என்று அகரன் கேட்க, “சுரே நிறுத்து. எனக்கு இப்படி அழுதால் பிடிக்காது” என்று ரசிகாவை திரிவேஷ் முறைத்தான்.
“சார், முதல்ல நம்ம வேலையை பார்த்துட்டு வருவோமா? என்னால் இப்ப இவளோட பெற்றோரிடம் ஏதும் பேச முடியாது” என்றான் திரிவேஷ்.
ருச்சி, இன்னொரு விசயம் பரு நம்முடன் படிக்கும் போதே யாரையோ காதலித்து இருக்கிறாள். ஆனால் அவனுக்கு வேற பொண்ணுடன் திருமணம் முடிஞ்சிருச்சாம். ஆனால் இப்ப கூட அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவளோட பெற்றோரிடம் சண்டை போடுறாளாம்.
என்ன? கல்யாணம் ஆன பின் எப்படி? இப்ப அந்த பொண்ணு அவருடன் இல்லையாம் என்று அகரன் சொல்ல, “அவ என்ன செஞ்சா நமக்கென்ன? இப்ப தான் மௌனிக்கும் தெரிஞ்சிடுச்சுல்ல. இனி அந்த பருவதிய பற்றி யாரும் பேசக்கூடாது” என்று கோபமாக திரிவேஷ் பேசினான்.
“ஆமா ருச்சி, நாங்க இல்லாமல் நீ அவளுடன் பேசவே கூடாது. அவ சாதாரணமா இல்லை. ரொம்ப டேஞ்சரா இருக்கா” என்று அகரன் சொன்னான்.
“போகலாம்” என்று சுரேகா பேச்சை மாற்ற, சார் உங்க அம்மா? ரசிகா கேட்க, “இன்று ஒரு நாள் சீதாம்மா பார்த்துப்பாங்க” என்ற ஆதிரேயன் ரசிகாவை பார்த்துக் கொண்டே நின்றான்.
என்ன பண்றாரு? இவனுக கண்டுபிடிச்சிடுவானுகளே? ரசிகா பதட்டமாக கார் அருகே விரைந்தாள். ஆதிரேயனை தட்டிய அகரன், பாஸ் நம்ம வொர்க்..
“நம்ம நியூ வொர்க்கிற்காக தான போகப் போறோம்” என்று ஆதிரேயன் திரிவேஷ் தோளில் கையை போட்டான். சுரேகா இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“வரலையா சுரே? நம்ம ஃபார்மை பார்க்க போகலாம்” என்றான்.
நம்ம ஃபார்ம்மா? சுரேகா கேட்க, ஆதிரேயன் அவனை பார்த்து, இதை இந்த பொண்ணிடம் கூடவா நீ சொல்லலை? என்று கேட்டான்.
“ஜெயித்த பின் சொல்லலாம். நான் கஷ்டப்படுவது அவளுக்கு தெரிய வேண்டாம்ன்னு நினைச்சேன்” என்று திரிவேஷ் சொல்ல, என்னது கஷ்டம்? சுரேகா அவனிடம் வந்தாள்.
“சுரே, வா நீயே புரிஞ்சுப்ப” என்று திரிவேஷ் சொல்ல, அவன் ஏதோ செய்கிறான்னு இப்ப தான் அவளுக்கு புரிந்தது. அப்ப நீ சும்மா இல்லையா? விவசாயமா செய்யுற? சுரேகா கேட்க, “வந்து பாரு” என்றான்.
ஆதிரேயன் சுரேகாவிடம் விசயத்தை சொல்ல, “அவள் கோபமாக இதை முன்னாடியே சொல்லி இருந்தால் திருமணம் வரை போக விட்டிருக்க மாட்டேன்டா” என்று அவள் சொல்ல, “வா முதல்ல பாரு. நான் ஆதி சாருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் போட போறேன்” என்றான் திரிவேஷ்.
“அப்ப இனி பிரச்சனை இருக்காது. அதுக்காக பேசாம விட்றாதடா” என்று அவள் சொல்ல, ஆதிரேயன் காரில் ஆதி, அகரன், ரசிகா ஏறினர். திரிவேஷூம் சுரேகாவும் பைக்கில் சென்றனர்.
error: Content is protected !!