Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதமாய் ஒரு காதல்

இதமாய் ஒரு காதல் -05

அத்தியாயம் 5:

” ஏய் தேன்மொழி இந்த வாட்டி உன்ன விட அதிக மார்க் எடுத்து காலேஜ் டாப்பரா நான் வரலைன்னா என் பேரு காவியா கிடையாதுடி.. உன்னை விட அதிக மார்க் எடுக்க என்னால முடியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?” என்று கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த காவியா தேன்மொழியை பிடிக்காமல் எப்போது போல் அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்க, அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தான் படித்துக் கொண்டிருந்தில் கவனத்தை செலுத்தினாள் தேன்மொழி.

தன்னை கொஞ்சமும் மதிக்காமல் படித்துக் கொண்டிருந்த தேன்மொழியை கண்டு காவியாவின் கோபம் அதிகமாக அவள் கையில் இருந்த நோட்சை பிடுங்கியவள் அதை இரண்டாக கிழித்து அவள் முகத்திலேயே தூக்கி எறிந்து விட்டு ஒரு வன்மமான புன்னகையுடன் வெளியேறினாள்.

” காவியா நில்லு.. ” என்று அவளை கோபமாக அழைத்தாள் சிந்தியா.



Advertisement

அவள் அழைத்ததும் என்னவென்று திரும்பி கூட பார்க்காமல் அகங்காரமாக காவியா வெளியில் சென்று விட, கோபமாக அவளை பின்தொடர போன சிந்தியாவை தடுத்து நிறுத்தினாள் தேன்மொழி.

” இப்ப எதுக்குடி நீ என்னை தடுத்து நிறுத்துற! உன் நோட்சை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கிழிச்சு போட்டுட்டு போறா அவளை தடுத்து நிறுத்தாம வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கியா? ” என்று தேன்மொழியிடம் கோபமாக கேட்க, அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தாள் தேன்மொழி.

” அவளைப் பற்றி தான் நமக்கு தெரியுமே தியா.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கோபப்பட்டு கிட்ட சொல்லு? கண்டிப்பா அவ ஒரு நாள் என்ன பத்தி புரிஞ்சுக்குவா.. அவளை விட நான் மார்க் அதிகமா எடுக்கிறேன்னு அவளுக்கு ஒரு கோபம் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி எல்லாத்துலயும் அவளுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கணும்னு நினைக்கிறாள்.. பரவால்ல விட்டுட்டு போ எனக்கு இந்த மாதிரி கூட பொறந்த ஒரு தங்கச்சி இருந்து இருந்தா அவ இந்த மாதிரி செய்யும் போது நான் பொறுத்துப் போக மாட்டேன்னா அதே மாதிரி தான் இப்போவும் நான் பொறுமையாக போகிறேன்.. ” என்றவளை என்ன செய்தால் தகும் என்பது போல் கோபமாக பார்த்தாள் தியா.

Advertisement

ஆம். சிந்தியா, தேன்மொழி, காவியா மூவருமே ஒரே கல்லூரியில் படித்தவர்கள் தான்.

Advertisement

ஆரம்பத்தில் காவியாவும் இவர்கள் இருவருடன் நட்புடன் தான் இருந்தாள்.

ஆனால் இவர்களது நட்பு பிடிக்காத ஒரு சில ஆட்களின் பேச்சைக் கேட்டு காவியா முழுவதுமாக மாறிப்போனவள் தேன்மொழியை வெறுக்க ஆரம்பித்தாள்.

அதன் விளைவு இன்று வரை வந்து விளைந்து நிற்கிறது.

Advertisement

” உன்னை என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல தேன்மொழி.. எது எதுக்கு நம்ம பொறுமையா போகணுமோ அதுக்கு தான் பொறுமையா போகணும்.. இப்படி எல்லாத்துக்கும் நீ பொறுமையா போய்கிட்டு இருந்தா அவ உன் தலையில ஏறிய ஆட ஆரம்பிச்சுடுவா எனக்கு இது சுத்தமா பிடிக்கல பாத்துக்கோ.. ” என்ற தியாவின் பேச்சை அன்றே தேன்மொழி சற்றே கேட்டிருக்கலாம்.

யாரையும் எப்பொழுதும் காயப்படுத்தி பார்க்காத குணமுடைய தேன்மொழிக்கு காவியாவின் செயல் எல்லாம் சிறு குழந்தையின் செயல் போன்று தெரிய அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டாள்.

ஒரு வேலை அவளது அந்த குணமே தன்னுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்து விடும் என்று தெரிந்திருந்தால் சற்றே காவியாவை கடுமையாக கண்டித்து திருத்தியிருப்பாளோ என்னவோ?

விதி வழியது!!

” அம்மா.. ” என்று அழைத்துக் கொண்டு வந்த தேன்மொழியை புன்னகையுடன் பார்த்தார் சரஸ்வதி.

அவளுடன் சேர்த்து ” சரஸ்வதி அம்மா எப்ப வந்தீங்க? ” என்று கட்டிப்பிடித்துக் கொண்டாள் தியா.( சிந்தியா இனி தியா என்று அழைக்கப்படுவாள்)

” நான் இப்பதான் வந்தேன் வாண்டு குட்டி நீ எப்படி இருக்க?” என்று அவளை புன்னகையுடன் அணைத்துக் கொண்டார் சரஸ்வதி.

” நீ மட்டும் தனியா ஏன்டா நிக்கிற கண்ணு! உனக்கு இந்த லட்சுமி பெரியம்மாவை பிடிக்காதா? ” என்றார் சரஸ்வதி பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது தோழி லட்சுமி.

சரஸ்வதி லட்சுமி பக்கத்து இருவரும் வீட்டுக்காரர்கள்.

என்னதான் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தாலும் இருவருக்கும் ஒரு சிநேகிதம் இருக்க, இருவரும் நாளடைவில் தோழியாக மாறிப்போய் அவர்களது பிள்ளைகளுக்கும் அம்மாவாகிப்போனார்கள்.

தனி ஆளாக இருந்த சரஸ்வதி தேன்மொழியை தத்தெடுத்து வளர்க்க, லட்சுமி கணவர் ஒரு விபத்தில் இறந்து போக அவரது சொந்தம் அவரை மொத்தமாக கைவிட்டு விட, அதில் சொந்தப்பந்தங்கள் மீது கோபமாக இருந்த லட்சுமி தன்னுடைய மகள் தியாவை அழைத்துக் கொண்டு சரஸ்வதி இருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் குடி வந்தவர் சரஸ்வதியின் அன்பான குணத்திலும் தன் மகளைப் போன்றே இருக்கும் தேன்மொழியையும் அவருக்கு மிகவும் பிடித்து போக, அவர்கள் இருவர் மட்டுமே தனது சொந்தம் என்று அவர்களோடு தான், தன் மகள் என்று வாழ்க்கையை இணைத்துக் கொண்டார்.

அத்தோடு பார்த்திபன் தியாவின் தூரத்து சொந்தக்காரன் தான்.

இப்படியாக இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்க, அதை கெடுக்கும் வேலையை செவ்வனே ஆரம்பித்தாள் காவியா.

” அண்ணா இந்த டிரஸ்ல நான் பார்க்க எப்படி இருக்கேன்? ” என்று புதிதாக வாங்கிய உடையை அப்படியும் இப்படியுமாக திருப்பி காவியா ரிஷியிடம் சந்தேகமாக கேட்க, அவளை அப்படியும் இப்படியுமாக பார்த்த ரிஷி கைகளை குவித்து சூப்பர் என்று காட்டினான்.

” என்னோட தங்கைக்கு எது போட்டாலும் பார்க்க சூப்பரா தான் இருக்கும்.. ஷி ஸ் ஆல்வேஸ் ஏஞ்சல்..” என்ற அண்ணனை சந்தோஷமாக பார்த்த காவியா லேசாக அணைத்துவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று நன்றாக ஒப்பனை செய்து கொண்டு மீண்டும் அண்ணனிடம் வந்தாள்.

” இங்க பாருங்கண்ணா.. நீங்க அதாவது தி கிரேட் பேமஸ் ரிஷி சக்கரவர்த்தி என்னோட அண்ணன்ன்னு என்னோட காலேஜ்ல படிக்கிற என்னுடைய பிரண்ட்ஸ் அண்ட் ஸ்டூடண்ட்ஸ் டீச்சர் இவங்க யாருக்கும் தெரியாது.. நான் உங்களோட தங்கச்சி தான்னு இன்னைக்கு காலேஜ்ல அனவுன்ஸ் பண்ணனும்னு ஆசைப்படுறேன்..”

” ஏண்டா.. இதுக்கு முன்னாடி உன்கிட்ட பல தடவை இது பத்தி நான் கேட்கும் போதெல்லாம் வேணாம்னு சொன்ன.. “

” ஆமா அண்ணா இந்த ஃபங்ஷனுக்குத்தான் நான் இத்தனை நாளா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு காலேஜ்ல கல்ச்சுரல்.. இன்னிக்கு எல்லாருக்கும் நான் ஸர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. எனக்கு காலேஜ்ல புடிக்காத ஒருத்தி இருக்கிறா ஆனா அவளை எல்லாருக்கும் பிடிக்கும் இப்ப மட்டும் நீங்கதான் என்னோட அண்ணன்னு நான் எல்லார்கிட்டயும் சொன்னா எல்லாரும் என்ன ரொம்ப ஹானஸ்ட்டா பாப்பாங்க.. எனக்கு அதுதான் வேணும் இன்னைக்கு மறக்காம ஈவினிங் நீங்க வந்துடனும்.. ” என்றவள் அவனின் பதிலுக்காக காத்திருக்காமல் கல்லூரிக்கு கிளம்பினாள்.

எப்போதும் தங்கையின் ஆசையை நிறைவேற்றியே பழக்கப்பட்ட ரிஷிசக்கரவர்த்திக்கு இந்த முறையும் அவள் ஆசையை மறுக்க தோன்றவில்லை.

அதே நேரம் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்த ரிஷி ஷூட்டிங் கிளம்ப, அவனை தடுத்து நிறுத்தினார் அவரது அன்னை பரிமளம்.

” தம்பி சாப்பிடாம கூட எங்க போற? “

” மா.. உங்க கிட்ட நான் எத்தனை தடவை சொல்றது? நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது பெரிய பையன் என்னை தம்பின்னு கூப்பிடாதீங்க.. எனக்கு வெளியில ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு.. அவங்களுக்கு மட்டும் நீங்க என்ன அப்படி கூப்பிடுறது தெரிஞ்சிச்சுனா எனக்கு ஷேமா போயிடும்.. ” என்று அவன் விளையாட்டாக சொல்ல அதற்கே கண்கலங்கிவிட்டார் அவர்.

அவர் கண்கள் கலங்கியதும் ஒரு சின்ன எரிச்சலோடு ரிஷி அவரது பக்கத்தில் சென்றான்.

” இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? இப்படி கண்ண கசக்கிட்டு நிக்கிறீங்க எனக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க ஆட்களை கண்டாலே சுத்தமா பிடிக்காது மாம்.. இப்ப என்ன உங்களுக்கு நான் சாப்பிடணும் அவ்வளவுதானே இரிடேட் பண்ணாதீங்க எடுத்து வைங்க சாப்பிடுறேன்.. ” என்றவன் வேண்டா வெறுப்பாக அவர் எடுத்து வைத்த உணவை சாப்பிட்டுவிட்டு அவரிடம் சொல்லாமல் கிளம்பினான்.

தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் செல்லும் மகனை வேதனையுடன் பரிமளம் பார்க்க அவரது தோளை தொட்டு திருப்பினார் அவரது கணவர் ரங்கராஜன்.

” விடுமா பிள்ளைகளை வளர்க்கும் போதே கண்டிச்சு வளர்க்கணும்.. நான் உன்கிட்ட பல தடவை சொல்லியும் நீ கேட்கல.. இப்ப நீ பெத்த ரெண்டு பிள்ளைகளும் உன்னை மதிக்க மாட்டேங்குதுன்னு அழுதுகிட்டு இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லை.. பிள்ளைங்கள வளக்கும் போதே ஒழுங்கா வளர்க்கணும்.. ” என்றதும் பரிமளம் கணவர் சொல்வது போல் பிள்ளைகளுக்கு அதிக அளவு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து விட்டோமோ!! என்று மனதுக்குள் நினைத்தபடி கணவருக்கு சாப்பாடு எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

” ஹலோ ரிஷி சார்.. வாங்க உங்களுக்காக தான் இவ்வளவு நேரமா வெயிட் பண்ணினோம்..” என்று டைரக்டரே ஓடி வந்து அவனை வரவேற்க, கர்வமாக அதை நினைத்தபடி காற்கதவை திறந்து கொண்டு இறங்கினான் ரிஷி சக்கரவர்த்தி.

” சார் நீங்க நடிச்ச ரெண்டு படம் ரொம்ப பெரிய அளவுல ஹிட் அடிச்சிருச்சு.. அதேபோல நான் எடுத்திருக்க இந்த படமும் நல்லா ஓடணும் சார்.. ” என்ற டைரக்டரை முறைத்து பார்த்தான் ரிஷி.

” ஹலோ சார் நான் நடிச்ச ரெண்டு படமும் நல்லா ஓடுனதுனால இந்த படம் ஊத்திக்கணும்னு சொல்றீங்களா? என்கிட்ட இப்படி எல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு யார் பெர்மிஷன் கொடுத்தா? நான் நடிக்கிற படம் எல்லாமே ஹிட் மட்டும்தான் அடிக்கும்.. உங்களுக்கு அது சந்தேகமா இருந்தா இப்பவே இந்த படத்தில் இருந்து நான் விலகிக்கிறேன்.. ” என்றதும் பதறிவிட்டார் அந்த இயக்குனர்.

” சார் அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்.. நான் ஏதோ தெரியாமல் சொல்லிட்டேன் இந்த விஷயம் மட்டும் ப்ரொடியூசர் காதுக்கு போச்சுன்னா எனக்கு பெரிய பிரச்சனை ஆயிடும்.. இந்த படம் தான் சார் என்னோட லைஃப் தெரியாமல் பேசிட்டேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. ” என்றதும் ஏதோ அவரை பெரிய மனது பண்ணி மன்னிப்பது போல் மன்னித்து விட்டான் ரிஷி.

அந்த இயக்குனருக்கு தான் ஏன் வாயை கொடுத்தோம் என்று ஆகிவிட்டது.

அன்று படப்பிடிப்பு முடிந்ததும் காவியா வைத்த கோரிக்கைப் படி கல்லூரிக்கு கிளம்பினான்.

” காவியா இன்னைக்கு நீ பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கடி.. ” என்று அவள் விலை உயர்ந்த உடையையும் அவளது மேக்கப்பையும் பார்த்து அவளது தோழிகள் பொறாமை பட்டப்படி சொல்ல, அதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட கருதாமல் தன்னை நினைத்து தானே பெருமை பட்டப்படி கர்வமாக கல்லூரியை வலம் வந்து கொண்டிருந்தாள் காவியா.

அவள் கர்வத்தை இன்னும் தூண்டி விடும்படி மாணவர்கள் அவளையே வைத்த கண் வாங்காமல் அவள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க, வானத்தில் பறக்காத குறை தான் அவளுக்கு.

கல்லூரியை சுற்றி வந்து கொண்டிருந்தவளின் காதில் அமிலமாக வந்து விழுந்தது அங்கிருந்த மாணவிகளின் வார்த்தைகள்.

” அங்க பாருங்கடி தேன்மொழியை பாக்குறதுக்கு அப்படியே தேவதை மாதிரி எவ்வளவு அழகா இருக்கா.. நாம எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு அழகா வந்து இருந்தா இவ எதுவுமே போடாம சாதாரண உடையில் எவ்வளவு அழகா இருக்கா.. இவளை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பொறாமையா இருக்குதுடி.. ” என்ற வார்த்தைகள் காவியா காதுக்குள் பழுக்க காய்ச்சிய கம்பியை விட்டது போலிருக்க, எரிச்சலோடு அவர்கள் பேசிய பக்கம் திரும்பி பார்த்தாள்.

பார்த்தவள் கண்கள் அப்படியே தேன்மொழி மீது நிலை குத்தி நின்றன.

அந்த மாணவிகள் பேசிக்கொண்டது போலவே கிளிப் பச்சை நிற தாவணியில் இடுப்பு வரை தொங்கிய முடியை தளர பின்னி தலையில் மல்லிகை பூச்சரம் தொடுத்து நெற்றியில் பொட்டும் அதற்கு மேல் சிறிய குங்குமம் மட்டும் என்று வைத்து பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தாள் தேன்மொழி.

தான் அத்தனை தூரம் பார்த்து பார்த்து அலங்காரம் செய்தும். தன்னைவிட அவள் அழகாக இருப்பதை நினைத்து காவியாவின் கோபம் அவள் மீது பன்மடங்காக பெருகியது.

அன்று கல்ச்சுரல்ஸ் களைகட்ட, மாணவர்கள் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும்?

அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள்.

காவியா மனமெல்லாம் தேன்மொழி மீது வெறுப்பை கக்கிக் கொண்டிருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் தன்னுடைய அண்ணன் இங்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்க போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தாள்.

தேன்மொழிக்கு நடனத்தில் அலாதி விருப்பம் என்பதால் நடனம் ஆடுவதில் அவள் பெயரை கொடுத்திருக்க, டான்ஸ் ப்ரோக்ராமும் ஆரம்பமாகியது.

டான்ஸ் ப்ரோக்ராம் கலை கட்ட மாணவர்கள் அனைவரும் விசிலடித்தபடி அவர்களும் கீழே நின்று ஆடிக் கொண்டிருக்க, தேன்மொழியின் முறையும் வந்து சேர்ந்தது.

உன்னில் என்னை நானும் கண்டேனே.. என்ற பாடலுக்கு நளினமாக அவள் நடனம் ஆடிக் கொண்டிருக்க, மாணவர்கள் மொத்த பார்வையும் அவள் மீது மட்டும்தான்.

அதனை நேரமும் குத்து பாடலாக மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஆடிக் கொண்டிருக்க, தேன்மொழி மட்டும் அவளுக்கு மிகவும் பிடித்த இந்த பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்க, அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத விதமாக என்ட்ரி கொடுத்தான் ரிஷி சக்கரவர்த்தி.

உள்ளே வந்தவனை யாரும் கவனிக்காமல் தேன்மொழி மீது கவனத்தைப் பதித்திருக்க, அதை கண்டு அவமானமாக உணர்ந்தான்.

தன்னை பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்க, இந்த கல்லூரி மாணவர்கள் யாவரும் தான் வந்ததை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அப்படி என்னதான் பார்க்கிறார்கள் என்பதை கண்டவன் தேன்மொழியில் நடந்ததை கண்டு அவன் ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு தான் போனான்.

அத்தனை அழகாக அவள் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.

மற்றவர்களின் கவனம் தன் மீது திரும்ப வேண்டும் என்று நினைத்தவன் உடனடியாக மேடைக்கு ஏறினான்.

என்னதான் இருந்தாலும் காவியாவின் அண்ணன் அல்லவா?

அவளைப் போலவே அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும் என்று தங்கைக்கு தப்பாத அண்ணனாக நினைத்தவன் இதனால் ஒரு பெண் பாதிக்கப்படுவாள் என்று சிறிதும் நினைக்காமல் மேலே ஏறி ஆடிக்கொண்டிருந்தவள் பக்கத்தில் சென்றவன் அவளோடு இணைந்து நடனமாட ஆரம்பிக்க, மாணவர்கள் யாவருக்குமே அவனது அந்த வருகை பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துப் போனது.

அவனுடைய இரண்டு படங்கள் பெரிய அளவில் நல்ல பெயர் வாங்கி இருந்ததால், இப்பொழுது மார்க்கெட்டில் முன்னிலையில் இருந்தவனை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்?

அதுவும் நம் மக்கள் நடிகனை தெய்வம் போல் கொண்டாடப்படும் போது சொல்லவா வேண்டும்?

ஆடிக் கொண்டிருந்த தேன்மொழி தனக்கு மிகவும் பிடித்த நடிகரான ரிஷி சக்கரவர்த்தியை கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து நிற்க, அத்தனை நேரம் அவள் ஆடிக் கொண்டிருந்ததை கண்டு மற்ற மாணவர்கள் திகைத்து நிற்க இவ்வளோ தன்னை கண்டு திகைத்து நிற்பதை கண்டு தன்னை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான் ரிஷி.

அவள் ஆடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தவள் கைகளை பிடித்து தன்னோடு சேர்த்து ஆட ஆரம்பித்தான்.

உதடுகளில் உயிரினை தரவா

விழி இரண்டில் கனவென வரவா

இரவுக்கென விரகமும் உறவா

அனுதினம் உருக்கவா

மாயம் செய்யும் பார்வையில் விழவா

எனை இழந்து மறுபடி எழவா

வார்த்தைகளில் உதிர்வது மதுவா

அமுதமும் பருகவா

என்ற வரிகள் வரும் பொழுது அவளது இடையை பிடித்து அணைத்தப் படி ஆடிக்கொண்டிருந்தவன் பார்வை அவள் விழிகளோடு கலக்க, அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றில் தன் மனதை அவளிடம் தொலைத்தவன் தன்னையும் அறியாமல் அவள் நெற்றியில் முத்தமும் வைத்து விட்டான்.

அவன் செயலில் தேன்மொழி விதிர்விதிர்த்துப் போய் நிற்க, மற்ற மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி விசிலடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

மாணவர்களோடு சேர்த்து அங்கிருந்த ஆசிரியர்களும் ரிஷிச்செய்த செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மிகப்பெரிய நடிகன் அவன் நடிப்பு என்று இப்படி செய்து விட்டான் போல் என்று நினைத்துக் கொண்டிருக்க ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு சிலரை தவிர வேறு யாரும் யோசிக்கவில்லை.

அந்த ஒரு சிலரும் மிகப்பெரிய நடிகன் அவன் அவனிடம் கேள்வி கேட்டு தேவையில்லாத வம்பை வாங்கிக் கொள்ள விரும்பாமல் அமைதியாகி போனார்கள்.

ரிஷி செய்த செயலில் தேன்மொழிக்கு உலகமே இருண்டது போலிருந்தது.

இதுவரைக்கும் யார் என்ன செய்தாலும் யார் என்ன சொன்னாலும் அமைதியாக சென்று விடும் பெண்ணவளுக்கு ரிஷியின் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் போக, அழுகை கோபமாக மாற அவன் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தவள் ஒற்றை கையை அவன் முன்பாக நீட்டி எச்சரிக்கை செய்துவிட்டு எதுவும் பேச முடியாமல் வெடித்த பெரிய கேவலுடன் அங்கிருந்து ஓட, அந்த இடமே சலசலப்பு அடங்கி அமைதியாகிப் போனது.

அவள் செயலில் அவமானமாக உணர்ந்த ரிஷி கண்கள் முழுவதும் ஓடும் அவள் மீது வன்மமாக விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!