Skip to content
Post Views: 3,220
அத்தியாயம் 11
ரசிகா அகரனை பார்க்க சென்றாள். ஆதியும் மெல்லினாவும் அவளுடன் வந்தனர்.
அகரா, ரசிகா அழைக்க, அகரன் ஏதும் பேசாமல் அவளை பார்த்தான்.
என்னாச்சுடா? அண்ணா திட்டுனாங்களா? அவள் கேட்க, அவன் கண்ணீருடன் அவளை பார்த்தான். அருகே வந்த ரசிகா, “நீ என்ன சின்னப்பையனா அழுறடா?” என்று கேட்டாள்.
Advertisement
வந்தவர் ஒரு வார்த்தை கூட வலிக்குதான்னு கேட்க கூட இல்லை ருச்சி. அதான் கஷ்டமா இருக்கு என்று அழுதான்.
எப்போதும் நடப்பது தான? அதுக்காக அண்ணாவுக்கு உன் மீது பாசமில்லாமல் இல்லைடா. அண்ணி திட்டுவாங்க தெரிஞ்சு தானே அவங்கள மீறி உன்னை பார்க்க வந்திருக்காங்க. உன் மேல இருக்கும் பாசத்தை கோபமா காட்டுறாங்க என்றாள்.
ரசிகா கையை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்ட அகரன், சோர்வாக ஆதியையும் மெல்லினாவையும் பார்த்தான்.
Advertisement
“உனக்கு ஒன்றுமே இல்லைடா. எத்தனை முறை கீழ விழுந்து மண்டை உடைஞ்சது. அது போல தான். நீ பயப்படாம இரு” என்று ரசிகாவால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது. அகரன் கையை விட்டு கண்ணீருடன் நகர்ந்தாள்.
Advertisement
ருச்சி, அகரன் அழைத்தான். கண்ணை துடைத்து விட்டு அவனை பார்த்தாள்.
எனக்கு ஒன்றுமில்லைன்னு நல்லா தெரியும். ஆனால் உனக்கென்ன? அவன் கேட்க, ஆதியும் மெல்லினாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அகரன் ஆதியை பார்த்து, “பாஸ் ருச்சி கழுத்தை தொட்டு பாருங்க” என்றான். ஆதி அருகே வர, “எனக்கு ஒன்றுமில்லை” என்று பதட்டமாக விலகினாள் ரசிகா. ஆதி நின்று விட்டான்.
Advertisement
மெல்லினா அவள் கழுத்தை தொட்டு பார்த்து, ரசி இவ்வளவு காய்ச்சலா இருக்கு? நீ சாதாரணமா இருக்க? என்று கேட்டாள். ஆதி அருகே வர, அவள் விலகினாள்.
“உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன் ரசி” என்று ஆதியும் தொட்டு பார்த்தான்.
பாஸ், அவளுக்கு பயம் அதிகமானால் காய்ச்சலும் மயக்கமும் வரும். அவ ரொம்ப சென்சிட்டிவ் என்றான் அகரன்.
ஆதி தமிழரசனை வர வைத்தான். அவரும் ரசிகாவை பார்த்து, “என்னம்மா திடீர்ன்னு இப்படி அதிகமா இருக்கு?” என்று ஊசியை எடுத்தார். எல்லாரையும் பார்த்த ரசிகா வேகமாக ஆதியின் பின் வந்து நின்று, சார் எனக்கு ஊசி வேண்டாம்.
அம்மா, அன்று போனால் போகுதுன்னு விட்டு மாத்திரையை வைத்து உன் காய்ச்சலை குணமாக்கினேன். “பழகிக்கோ” என்று ஆதியிடம் வந்தார்.
“அப்பா வேணாம்” என்று ஆதி கையை பிடித்த ரசிகா, சார் வேண்டாம். எனக்கு மாத்திரையிலே சரியாகி விடும் என்றாள்.
அதெல்லாம் முடியாது. இன்று உனக்கு நான் ஊசி போடாமல் விட மாட்டேன் என்று தமிழரசன் ரசிகா கையை பிடித்து இழுத்தார்.
“அப்பா, நம்ம டீலுக்கு ஒத்துக்கிட்டேன்னா இந்த ஊசியை நீங்க எனக்கு போடக் கூடாது” என்றாள் ரசிகா.
டீலா? மெல்லினா கேட்க, தமிழரசன் பட்டென கையை விட்டு, நிஜமா தான் சொல்றியாம்மா? என்று கேட்டார். ரசிகா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ஆம்” என்று தலையசைத்தாள்.
மாமா, என்ன டீல்? ஆதிரேயன் கேட்டான். அவன் கையை விட்டு ரசிகா நகர்ந்து நின்றாள்.
இருங்க மாப்பிள்ள என்றவர் இப்பவே சைன் பண்ண முடியுமா? அவர் கேட்க, இல்லப்பா நீங்க கொடுத்த பைல் என்னிடம் தான் இருக்கு. ஏற்கனவே சைன் பண்ணிட்டேன் என்று ரசிகா சொல்ல, தமிழரசன் மகிழ்வுடன் நிஜமாக சைன் பண்ணீட்டியாம்மா? என்று கேட்டார்.
ஆமாப்பா என்ற அவள், இது மட்டும் வேண்டாமே? என்று அவர் கையிலிருந்து ஊசியை கை காட்டினாள்.
அவர் புன்னகையுடன், அப்பாவி பொண்ணுன்னு உன்னை நினைத்தால் கேடிப் பொண்ணு தான் போல. இப்படி பிளாக்மெயில் பண்ற? அவர் கேட்க, “முதல்ல அதை கீழ வையுங்க” என்றாள் அவள்.
சரிம்மா, நீ ஓய்வெடு. இப்ப நர்ஸ் வருவாங்க. மருந்து தருவாங்க வாங்கிக்கோ என்று மகிழ்ச்சியில் விசிலடித்துக் கொண்டே அவர் செல்ல, “ஹப்பாடா” என்று ரசிகா அமர்ந்தாள். மாமா..சொல்லீட்டு போங்க. வேகமாக திரும்பி ஆதியை பார்த்து புன்னகைத்து அவர் ஓர் ஸ்டெப் போட்டு ஆடினார்.
எல்லாரும் சிரிக்க, ஆதியும் மெல்லினாவும் ஆச்சர்யமாக அவரை பார்த்தனர்.
மாமா, என்ன பண்றீங்க? ஆதி கேட்க, “டான்ஸ் மாப்பிள்ளை” என்றார்.
என்ன டீல்? முதல்ல சொல்லுங்க என்று அவரையும் ரசிகாவையும் பார்த்தான்.
விவாகரத்து பைல்ல ரசி சைன் பண்ணீட்டாளே? என்று அவர் பாடலாக பாடிக் கொண்டே ஆட, மெல்லினா வியந்தாலும் அவர் ஆடுவதை பார்த்து சிரித்துக் கொண்டு, அங்கிள் இருங்க. நானும் வாரேன் என்று அவளும் அவருடன் சென்று ஆடினாள். ஆதியும் அகரனும் வியந்து ரசிகாவை பார்த்தனர்
எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பாக்குறீங்க? அவங்களோட எஞ்சாய் பண்ண மாட்டீங்களா? அகரா நான் அவன் மூஞ்சிலேயே விழிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அவனை நினைத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு.
அன்று நாம எல்லாரும் ஊர் சுற்றி பார்த்து வந்த பின் காய்ச்சலில் இருந்த போது தான் தமிழப்பா என்னிடம் இதை பற்றி கேட்டு, அவரே தயார் செய்து வைத்திருந்தார். எனக்கு முதலில் மனம் வரலை. ஆனால் அவனை பார்க்கணுன்னு நினைச்சாலே பயமா இருக்கு. இரு நாட்களுக்கு முன்னே சைன் பண்ணிட்டேன் என்று அவள் சொல்லவும் ஆதிரேயன் முகம் பிரகாசமானது.
அகரன் அவனை பார்த்துக் கொண்டே, ரொம்ப நல்ல விசயம் சொல்லி இருக்க ருச்சி. த்ரீ வந்தவுடன் சொல்லு. அவனும் சந்தோசப்படுவான் என்றான் அகரன்.
அகரா, நீ ஓய்வெடு. எதையும் யோசிக்காத என்று ரசிகா அகரனருகே அமர்ந்தாள். அகரன் ஆடிக் கொண்டிருக்கும் தமிழரசனையும் மெல்லினாவையும் பார்த்து புன்னகையுடன் இருந்தாலும் மனதினுள் நீங்க நினைக்கிறது நடப்பது முடியாத காரியம் என நினைத்துக் கொண்டு ஆதியை பார்த்தான். அவன் ரசிகாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நர்ஸ் தமிழரசனை பார்த்து, டாக்டர் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல? “டான்ஸ் சூப்பர் சார்” என்றார். அவர் புன்னகையுடன் ரசிகாவிடம் வந்தார்.
ஆதி ரசியை பிடி என்று தமிழரசன் சொல்ல, “அப்பா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க?” என்று அகரனை சுற்றி சுற்றி ஓடி வந்தாள். ஆதி ஒரு பக்கமும் நர்ஸ் ஒரு பக்கமும் அவளை பிடிக்க வர, ரசிகா மயங்கினாள்.
ரசி என்று ஆதி அவளை பிடித்து அவளை தூக்கி படுக்கையில் கிடத்தினான். முதல்ல ஊசியை போடும்மா. அப்புறம் அவளை முழிக்க வைக்கலாம் என்றார் தமிழரசன். அனைவரும் விலகிக் கொள்ள திரையை போட்டு நர்ஸ் ரசிகாவிற்கு ஊசியை போட்டு விட்டார்.
மாமா, வேண்டுமென்றே அவளை ஓட விட்டீங்களா? ஆதி கேட்க, அதனால தான மயக்கமாவா? அப்ப தான ஊசி போட முடியும் என்றார் அவர்.
அதுக்கு இப்படியா செய்வீங்க? அகரன் கேட்க, அப்புறம் எப்படிப்பா உன்னோட தோழிக்கு ஊசி போடுவது? அவளை கஷ்டப்படுத்தி போடுவதை விட, இது பரவாயில்லைல்ல என்றார் அவர்.
“அண்ணா, உன்னோட மாமா ரொம்ப மூளைக்காரர் தான்” என்றாள் மெல்லினா.
ம்ம்.ரொம்ப என்று ஆதி கிண்டலாக கூறினான். பின் ரசிகாவை விழிக்க வைத்தனர். எழுந்த அவளுக்கு எதுவுமே புரியலை. அப்பா..வலிக்குது என்று இறங்கினாள். தமிழரசன் புன்னகைத்தார்.
எதுக்கு சிரிக்கிறீங்க? ரசிகா கேட்க, “ரசி அவர் உனக்கு ஊசி போட்டு விட்டார்” என்று மெல்லினா சொல்லவும் சின்ன பிள்ளை போல் அழ ஆரம்பித்தாள் ரசிகா. ஆதி வாயடைத்து அவளை பார்த்து ரசித்தான். மெல்லினா அவளை பார்த்து சிரித்தாள். அகரன் அவளை சமாதானப்படுத்த, உள்ளே வந்தான் திரிவேஷ்.
மௌனி, எதுக்கு அழுற? அவன் அவளிடம் வந்தான்.
அவர் எனக்கு ஊசி போட்டுட்டார் டா. நான் வேண்டாம்ன்னு சைன் பண்ணியதை தாரேன்னு சொன்னேன் தெரியுமா? என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
யாருப்பா அது, எங்க மௌனிக்கு ஊசி போட்டது? இரு மௌனி பெரிய ஊசியா அவருக்கு போடலாம் என்று திரிவேஷூம் கலாட்டாவுடன் பேசினான். அனைவரும் சிரித்தனர்.
“நான் கிளம்புறேன்ப்பா” என்று தமிழரசன் நர்ஸூடன் வெளியேறினான்.
ரசி, உனக்கு ஊசின்னா அவ்வளவு பயமா? ஆதி கேட்டான். கண்ணை துடைத்த ரசிகா, அம்மா இறந்த பின் நான் இதுவரை ஊசியே போட்டதில்லை. காய்ச்சல் வந்தால் மாத்திரை தான். அதனால் தான் ஊசின்னா பயப்படுவேன். மத்த படி எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று ரசிகா சொல்ல, திரிவேஷ் சிரித்தான்.
ஏய், ஏன்டா சிரிக்கிற? நான் எதுக்கும் பயப்பட மாட்டேன் என்றாள் ரசிகா.
சார், பல்லிக்கு பயப்படுவா. அதுமட்டுமல்ல என்று அவன் ஏதோ சொல்ல வந்தான். ரசிகா அவன் வாயில் கை வைத்து, “சொல்லாதடா” என்று அவனை தடுத்தாள்.
சரி த்ரீ, நீ எதுவும் சொல்ல வேண்டாம். அவளை விட சொல்லு என்று ஆதிரேயன் கோபமாக வெளியேறினான்.
போச்சு அண்ணா, கோவிச்சுக்கிட்டான் என்று மெல்லினா சொல்ல, போ சாரிடம் பேசிட்டு வா என்றான் திரிவேஷ்.
பேசணுமா? நான் என்ன செய்தேன்? நான் போக மாட்டேன் என்றாள் ரசிகா.
அகரா, மௌனி உன்னோட பாஸ்ஸிடம் பேச பயப்படுறா டா என்றான் திரிவேஷ்.
நான் எதுக்கு பயப்படணும்? எதுக்கு கோபப்பட்டார்ன்னு கேட்டுட்டு வாரேன் என்று ரசிகா வெளியே சென்றாள். திரிவேஷூம் மெல்லினாவும் கையில் அடித்துக் கொண்டு “சக்சஸ்” என்றனர்.
சாரிடா த்ரீ, கங்கிராட்ஸ் உன்னிடம் நான் சொல்லவேயில்லை என்ற மெல்லினா. அப்புறம் லவ் பண்ணி பெற்றோரும் அந்த பொண்ணும் ஒத்துக்கிட்டா பிஸி ஆகிடுவாங்களாமே? நீயும் அப்படி தானா? மெல்லினா கேட்க, ஆமா நாங்க எவ்வளவு நேரம் பேசணும்? நேரமே இருக்காது தெரியுமா? திரிவேஷ் சொல்ல.
என்ன பேசுவீங்க? மெல்லினா கேட்க, “த்ரீ..சும்மா இரு” என்று அகரன் சத்தம் கொடுத்தான்.
அகரா, உனக்கு தான் உடம்பு சரியில்லைல்ல. சமத்தா தூங்கு என்று மெல்லினா சொல்லி விட்டு, த்ரீ வா வா.. இங்க உட்காரு. என்னோட ப்ரெண்ட்ஸூம் பேசுறத பார்த்திருக்கேன். ஆனால் என்ன பேசுவாங்கன்னே தெரியாது. நீ சொல்லு என்று ஆர்வமாக கேட்டாள்.
“மெல்லி, நீ வெளிய போ” என்று அகரன் சொல்ல, உன்னை ஓய்வெடுக்க தான் சொன்னாங்க. சும்மா இரு. என்னன்னு கேட்க விடுறானா பாரு” என்று மெல்லினா கன்னத்தில் கையை வைத்து, த்ரீ சொல்லுடா என்றாள்.
என்னடா சொல்லவா? அகரனிடம் த்ரீ கேட்டான்.
அவனே லவ் பெயிலியர். அவனிடம் என்ன கேக்குற? மெல்லினா கேட்க, ஹேய் அவன் தான் என்னோட லவ் குரு. நீ என்ன சொல்லீட்ட? ரசிகா ப்ரெண்டுன்னு தான் அவன் காதலை சொல்லாமலே விட்டுட்டான். இல்ல..என்று த்ரீ சொல்ல, நிறுத்துடா என்றான் அகரன்.
அகரா, அப்படியா? சரி நீ சொல்லு. என்ன பேசுவாங்க? என்று அகரனிடம் ஓடி வந்து அவனது படுக்கையில் ஏறி அமர்ந்தாள்.
மெல்லினா வேண்டாம். கீழ இறங்கு அகரன் சொல்ல, அவள் கேட்பதாக இல்லை. சொல்லு அகரா லவ் பண்றவங்க நிறைய பேரை பார்த்திருக்கேன். ஆனால் என்ன பேசுவாங்கன்னே தெரியாது. அவங்களா சிரிப்பாங்க. முறைச்சுப்பாங்க. ப்ளீஸ் சொல்லேன்.
அது ரகசியமா? சரி என் காதிலாவது சொல்லுடா என்று அவனருகே மெல்லிகா வந்தாள். திரிவேஷ் இருவரையும் பார்த்து சிரித்தான்.
எனக்கு ரொம்ப பெயினா இருக்கு. கீழ இறங்கு. நான் ஓய்வெடுக்கணும் என்றான் அவன்.
என்னிடம் சொல்லி விட்டு, “நீ ஓய்வெடு” என்று மெல்லினா அவள் காதை அவன் இதழருகே கொண்டு வந்தாள்.
“சொல்லுடா” என்று அவன் பக்கம் திரும்ப, இருவரும் நெருக்கமாக, அவனது மீசை அவள் இதழில் உரச, அகரன் கோபமாக, நகர்ந்து போறீயா? என்று சத்தம் கொடுத்தார். இருவரது நெருக்கத்தில் அதிர்ந்திருந்த மெல்லினா அவன் கொடுத்த சத்தத்தில் பயந்து விலகி அகரன் படுக்கையிலிருந்து கீழே விழுந்து அழுதாள்.
ஏய், அகரன் சத்தமிட, திரிவேஷ் அவளிடம் ஓடி வந்தான்.
மெல்லினா காலை பிடித்து அழுது கொண்டே, அவன் என்னை பயமுறுத்திட்டான் த்ரீ..என்று அவனை பார்த்து மேலும் அழுதாள்.
ஏன்டா பாப்ஸ்ஸை பயமுறுத்தின? திரிவேஷ் அகரனிடம் கேட்டுக் கொண்டு, மெல்லினாவை தூக்கி விட, “ஆ..வலிக்குதுடா எழவே முடியல” என்று அகரனை முறைத்தாள்.
“சாரி, நீ கீழ விழுவன்னு நான் நினைக்கலை” என்று அகரன் சொல்ல, உன்னோட சாரிய நீயே வச்சுக்கோ. த்ரீ..என்னை வெளிய கூட்டிட்டு போறீயா? இவன் ஓய்வெடுக்கட்டும்.
“இனி என்னிடம் நீ கத்துன, நான் யாருன்னு காட்டி விடுவேன்” என்று அகரனிடம் சொல்ல, அகரன் புன்னகைத்தான்.
“ஏன்டா சிரிக்கிற? இப்ப மட்டும் என்னால நடக்க முடிந்தால் நீ காலி” என்றாள் மெல்லினா.
“நானா காலி?” என அகரன் புன்னகைத்தான். திரிவேஷூம் அவளை பார்த்து புன்னகைத்தான்.
என்னால நிக்க முடியல. எதுக்கு பல்ல காட்டுற? தூக்குடா என்று மெல்லினா சொல்ல, “ஹே..என்னோட சுரோ பார்த்தா செத்தேன்” என்றான் த்ரீ.
“இப்ப நீ என்னை தூக்கலைன்னா என் அண்ணாவிடம் நீ காலியாகிடுவ” என்று திரிவேஷை மிரட்டினாள்.
“சரி, என் முதுகில் ஏறிக்கோ” என்று திரிவேஷ் மெல்லினாவை உப்பு மூட்டை ஏற்றி வெளியே தூக்கி வந்து இறக்கி அமர வைத்தான்.
அகரனது படுக்கையில் மெல்லினாவின் பாசியால் கோர்க்கப்பட்ட வெளிர் நிற பிரேஸ்லெட் இருந்தது. அதை எடுத்த அகரன் புன்னகையுடன் அதனை அவன் கையில் வைத்துக் கொண்டே கண்ணை மூடி படுத்தான்.
ஆதிரேயனின் கோபத்தை சரி செய்ய, அவன் பின் வந்த ரசிகா தமிழரசன் அறைக்கு வெளியே நின்றாள். உள்ளே ஆதி போனில் போலீஸூடன் பேசிக் கொண்டிருந்தான். மித்திரன் வெளியே எங்கும் செல்லாமல் விசாகாவுடனும் அவள் தங்கையுடனும் இருந்தான். பாப்பா அவன் தோளில் தூங்கிக் கொண்டிருந்தாள். விழித்த விசாகா இருவரையும் கண்ணீருடன் பார்த்தாள்.
போனை வைத்த ஆதிரேயன் வெளியே நின்ற ரசிகாவை அறைக்குள் இழுத்து தாழிட்டு, அவளை அவனருகே இழுத்து உரிமையாக அவளது இடையில் கையிட்டு அவளை நெருங்க இழுத்தான்.
சார், ரசிகா பதட்டமாக, என்ன ஒட்டு கேட்டுக்கிட்டு இருக்க? ஆதி கேட்டான்.
நான் இல்லை சார். நீங்க கோபமா வந்ததாக உங்களிடம் பேச வந்தேன். என்னை விடுங்க சார் என்று அவன் கையை நகர்த்தினாள். ஆனால் அவளால் நகர்த்த முடியவில்லை.
நான் ரொம்ப கோபமா இருக்கேன். என்னோட கோபத்தை குறைக்க தான வந்த? குறை என்று மேலும் அவளை இறுக்கினான்.
சார், என்னை விடுங்க. நான் பேச தான் வந்தேன்.
சரி, பேசு என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். அவள் பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளும் விடாமல் அவன் கண்ணை பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றாள். ஆதி அவன் இறுக்கத்தை தளர்த்தினான்.
தமிழரசன் அவர் அறைக்கதவை திறந்து இருவரையும் பார்த்து மகிழ்வுடன் நின்றார். இருவரும் விலகி நிற்க, நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் வாரேன் என்று அவர் சொல்ல, அப்பா நில்லுங்க, நான் இவரிடம் பேச தான் வந்தேன்.
“நான் அப்புறம் பேசிக்கிறேன்” என்று ரசிகா சொல்லி நகர, அவள் கையை பிடித்து ஆதிரேயன் இழுத்தான். ரசிகா அவன் மார்பில் முட்டி நின்றாள். தமிழரசன் புன்னகையுடன் வெளியே சென்றார்.
“சார், அப்பா தப்பா எடுத்துக்கப் போறார்” என்றார் ரசிகா. ஆதி பதில் கூறாமல் புன்னகையுடன் ரசிகாவை பார்த்துக் கொண்டே அவள் ஆதியின் மார்பில் வைத்திருந்த கை மீது இவனும் கை வைத்தார். அவள் பயத்த பார்வையுடன் கையை எடுத்தாள்.
சார்..என்று அவனை நெருங்கிய ரசிகா அவன் மார்பில் சாய்ந்து ஆதியை அணைத்து நின்றாள். ஆதிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
பின் தான் உணர்ந்தவன் அவளை நிமிர்த்த, அவள் மயங்கிய சாய்ந்திருப்பது தெரிந்தது.
மாமா..என்று ஆதி சத்தமிட்டான். தமிழரசன் அறைக்கு வெளியே தான் இருந்தார். ஆதி அழைக்கவும் வேகமாக உள்ளே வந்தார்.
ஆதி ரசிகாவை தூக்கி அவர் அறை படுக்கையில் படுக்க வைத்தான். தமிழரசன் உள்ளே வந்து, அவளை பார்த்து விட்டு ஆதியிடம், ஒன்றுமில்லை மாப்பிள்ள. காய்ச்சலால் தான் என்று அவர் சொல்லி விட்டு, பிள்ள ஓய்வெடுக்கட்டும் . அப்புறம் பேசிக்கோங்க என்று ரசிகாவை விழிக்க வைத்தார் தமிழரசன்.
அவள் விழித்து ஆதியை பார்த்து எழுந்தாள்.
அம்மா, படுத்துக்கோடா. நீ ஓய்வெடு. நாங்க கிளம்புறோம் என்று தமிழரசன் வெளியேறினார். ஆதி ரசிகாவை பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு போன் வந்தது. அதை பார்த்து போனை காதில் வைத்து அவளை பார்த்துக் கொண்டே வெளியேறினான்.
ரசிகா திரும்பி படுக்க, அங்கிருந்த ஒரு பொண்ணின் புகைப்படத்தை பார்த்து திகைத்து எழுந்தாள்.
வேகமாக வெளியே வந்தாள். ஆதியும் தமிழரசனும் அங்கு இல்லை. நேராக அகரன் அறைக்கு செல்ல, வெளியே மெல்லினாவும் திரிவேஷூம் இருந்தனர்.
“த்ரீ, இங்க வாயேன்” என்று அவன் கையை பிடித்து தமிழரசன் அறைக்கு இழுத்து சென்று புகைப்படத்தை காட்டினாள் ரசிகா.
இப்ப இவளிடம் என்னத்த சொல்றது? என த்ரீ விழித்தான்.
“இலக்கியா, உனக்கு நினைவிருக்காடா. நம்ம ஜூனியர் பொண்ணு” என்றாள் ரசிகா.
ம்ம்..இவளோட புகைப்படம் எதுக்கு அப்பாவோட அறையில இருக்கு? ரசிகா கேட்க, “அவர் பொண்ணு புகைப்படம் அவர் அறையில தான இருக்கும்” என்றான் த்ரீ.
இலக்கியா இவர் பொண்ணா? அப்ப, ஆதி சார் வொய்ப் இவளா? கேட்டாள் ரசிகா.
ஆமா ரசி. ஆதி சார் படித்தவுடனே அவள் படித்து கூட முடிக்கலை. பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொண்டாள் என்று பெருமூச்செடுத்து விட்டு, அவளை விடு என்று ரசிகாவை தொட்டு பார்த்து நீ ஓய்வெடுக்கலாம்ல்ல. சாரிடம் பேசினாயா? சமாதானம் ஆனாரா? என்று கேட்டான்.
ம்ம்..இவள் யாரையோ காதலித்தால்ல? என்று ரசிகா கேட்க, யாராவது வரப் போறாங்க. நாம போகலாம் த்ரீ சொல்ல, யாரும் வர மாட்டாங்க. என்னை இங்க ஓய்வெடுக்க சொல்லிட்டு அப்பாவும் சாரும் இப்ப தான் வெளிய போனாங்க என்றாள்.
மெல்லினா நொண்டிக் கொண்டே உள்ளே வந்தாள். என்ன பண்றீங்க? அவள் கேட்க, ரசிகா இலக்கியா புகைப்படத்தை பார்த்தாள்.
அவ அண்ணாவோட வொய்ஃப். அண்ணா வீட்ல எங்க அம்மாவால நிறைய கஷ்டப்பட்டான். அமைதியாக தான் இருப்பான். ஆனால் அவன் கல்லூரியில் அவன் நண்பர்களுடன் சந்தோசமாக இருந்தான். நன்றாக படிக்கவும் செய்வான். காலேஜ்ல்ல எஞ்சாய் பண்ணவும் செய்தான். இலக்கியாவை எங்க எல்லாருக்கும் முன்னமே தெரியும். அண்ணாவுக்கு பெருசா பொண்ணுங்க மேல விருப்பம் இல்லை. அவனுக்கு இயற்கையை ரசிப்பது ரொம்ப பிடிக்கும். அதனால மாதம் ஒரு முறை கண்டிப்பாக எங்காவது டிரிப்புக்கு நண்பர்களுடன் செல்வான்.
அவன் படிப்பு முடியவும் பாரின் செல்லணும். அங்கே பிசினஸ் பண்ணனும்ன்னு ரொம்ப ஆசையா இருந்தான். ஆனால் இவளால் அவன் வாழ்க்கை மொத்தமும் போச்சு.
என்னோட சின்ன அண்ணனை தான் காதலித்து இருந்திருக்காள். இது யாருக்கும் தெரியாது. ஆனால் ஆதி அண்ணாவை பணத்துக்காக திருமணம் செய்தாள். சின்ன அண்ணா ஆதி அண்ணா போல் இருக்க மாட்டான்.
வால்த்தனமும், பொண்ணுங்க பின்னாலும் நண்பர்கள் பின்னும் சுற்றி திரிவான். படிப்பு ஆவேரேஜா தான் படிப்பான். அம்மாவை வைத்து பணம் வாங்கிப்பான். அப்பாவும் அவனை மாற்ற ரொம்ப முயன்றார்கள். எல்லாம் அம்மா தான் செல்லம் கொடுத்து அவனை கெடுத்துட்டாங்க.
ரசி உனக்கு தெரியுமே? அம்மாவால் ஆதி அண்ணா பட்ட கஷ்டம். அவன் உண்மையான அம்மாவை இழந்து தான் ரொம்ப கஷ்டப்பட்டான். எங்க அம்மா, அப்பாவை மடக்கி இலக்கியா அண்ணாவை கல்யாணம் செய்து கொண்டாள். அண்ணாவும் அப்பாவிடம் எவ்வளவு பேசினான் தெரியுமா? அவரும் அம்மா பேச்சை கேட்டுக் கொண்டும், தமிழ் அங்கிள் அவரோட ப்ரெண்டுன்னு சந்தோசத்துல இருக்க, அண்ணா மறுத்ததால் அவனை அவர் அடித்து விட்டார்.
அண்ணா வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டான். அவள் நடவடிக்கை மாறியது. அண்ணாவிடமும் அம்மாவிடம் பணம் கேட்டு தொல்லை செய்தாள். இதை கவனித்த தமிழ் அங்கிள் இலக்கியாவை அடித்து விட்டார். யாரும் அவளுக்கு சாதகமாக இல்லை. ஆனால் எங்க சின்ன அண்ணன் அவளுக்கு ஆறுதலாக பேச, இருவரும் சேர்ந்து பணம் வாங்க நினைத்தனர். சின்ன அண்ணாவும் இவளும் ஏற்கனவே காதலித்து இருந்தனர். அவர்களின் தனிமையான நேரம் அவர்களை தவறு செய்ய வைத்தது. யாருக்கும் தெரியாமல் நடந்து வந்தது. ஒருநாள் ஆதி அண்ணா நேரிலே பார்த்துட்டான்.
அதிலிருந்து அவளை அண்ணா அவன் அறைக்குள் கூட விடலை. அவள் கர்ப்பமா இருக்கான்னு சொன்னாலும் அவன் அவளை முற்றிலும் தவிர்த்தான். இதை நினைத்து தமிழப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அப்பொழுது கூட அவளுக்கு அவள் அப்பா மீது கொஞ்சம் கூட பாசமில்லாமல் இருந்தாள். ஆனால் ஆதி அண்ணா அவன் வேலையை விட்டு அவரை இரு நாட்கள் உடனிருந்து பார்த்துக் கொண்டான். அவருக்கு சும்மாவே ஆதி அண்ணா மீது பிரியம் அதிகம். இதில் அவன் செய்கையில் தன் பொண்ணை மாற்றி அண்ணாவுடன் வாழ வைக்கணும் என்று நினைத்தார்.
பாவம் அவர் பேசியதை அண்ணா கண்டுகொள்ளவேயில்லை. நாட்கள் சென்றது. மீண்டும் ஒரு நாளும் இருவரும் ஒன்றாக இருப்பதை எல்லாரும் பார்த்தனர்.
தமிழ் அங்கிள் முடிவெடுத்தவராய் அவளை அவர் வீட்டுக்கே இழுத்துட்டு போயிட்டார். அண்ணாவுக்கு குழந்தை பிறக்கும் தேதி கூட தெரியாது. அதனால் தான் அவன் பாரின் விசயமா போனான். இப்படி சாவான்னு யாருமே நினைக்கலை.
குழந்தைகளை அண்ணாவும் பார்த்துக் கொண்டான். சீதாம்மா தான் லிது, நிதுவை வளர்த்தாங்க. அவங்களுக்கு அவங்க அம்மாவை பற்றிய எதுவும் தெரியாது. அம்மா சாமிக்கிட்ட இருக்காங்கன்னு தான் சொல்லி வச்சிருக்கோம்.
“அம்மா” என்று பிள்ளைகள் கேட்டாலே ஆதி அண்ணா கோபப்படுவாங்க. அதனால் பசங்களும் கேட்க மாட்டாங்க. என்ன இருந்தாலும் அம்மா இல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டம் ரசி. “பாவம் பசங்க” என்று ரசிகாவை பார்த்துக் கொண்டே மெல்லினா கூறினாள்.
ரசி, அண்ணாவுக்கு எந்த பொண்ணு மேலயும் விருப்பம் இருந்ததேயில்லை. ஏன் இலக்கியா மேல் கூட இருந்ததில்லை.
ஏன் ரசி, உனக்கு அண்ணாவை பிடிக்கலையா? அவன் விரும்பும் ஒரே பொண்ணு நீ தான். நீ அண்ணாவை கல்யாணம் பண்ணிகிட்டா எங்க எல்லாருடனே இருப்பேல்ல. லிது, நிது கூட உன்னை தவிர யாருடனும் ஒட்டமாட்டான்னு நினைக்கிறேன்.
லிது, நிது பிறந்த பின் அண்ணாவுக்காக அப்பாவும், தமிழ் அங்கிளும் நிறைய பொண்ணு பார்த்துட்டாங்க. ஆனால் அவன் பார்க்க கூட வந்ததில்லை. அண்ணா மனசுக்கும் அவன் வாழ்க்கைக்கும் ஏத்த பொண்ணா உன்னால மட்டும் தான் இருக்க முடியும்.
“மெல்லி, நீங்க நினைக்கிற மாதிரி என்னால முடியாது” என்று ரசிகா அழுதாள்.
மௌனி அழாத, ஏற்கனவே உடம்பு சரியில்லை. இதில் அழுதா காய்ச்சல் அதிகமாகிடும் திரிவேஷ் சொல்ல, எங்க எல்லாருக்கும், அம்மாவுக்கும் நீ எங்களுடன் இருக்கணும்ன்னு தான் விருப்பம். “எங்களுக்காக விட அண்ணாவுக்காகவும் லிது நிதுக்காகவும் கொஞ்சம் யோசித்து பாரு ரசி” என்று கண்கலங்க மெல்லினா நொண்டிக் கொண்டே வெளியே சென்றாள்.
அகரன் அறைக்கு வந்தாள் மெல்லினா. அவன் தூங்கிக் கொண்டிருந்தான். ஆதி கஷ்டப்பட்டது மெல்லினா மனதில் ஓடிக் கொண்டிருக்க, கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். சத்தம் கேட்டு அகரன் விழித்தான்.
மெல்லி, எதுக்கு அழுற? அகரன் கேட்க, ஆதியும் உள்ளே வந்தான்.
ஆதியை பார்த்தவுடன் மெல்லினா எழுந்து நொண்டிக் கொண்டே ஆதியை அணைத்து அழுதாள்.
ஏய், எதுக்கு அழுற? ஆதி கேட்க, சாரிண்ணா என்று மெல்லினா மேலும் அழுதாள். திரிவேஷ் அங்கே வந்து அவர்களை பார்த்தான்.
“சார், பாப்ஸ் கீழ விழுந்துட்டா. அதான் அழுறா” என்று திரிவேஷ் சொல்ல, மெல்லினா அவனை பார்க்க, அகரனும் சிந்தனையுடன் மூவரையும் பார்த்தான்.
கீழ விழுந்துட்டாளா? என்று ஆதி மெல்லினாவை பார்த்தான். அவளது காலில் மருந்து போட்டிருப்பதை பார்த்து, “ரசி மாமா அறையில தான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. நீயும் அவளுடன் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று ஆதி சொல்ல, இல்ல நான் இங்கேயே இருக்கேன்.
அண்ணா, விசாவும் மித்திரனும் இரு நாட்கள் தான் இங்க இருப்பாங்க. அவங்க பாதுகாப்புக்கு ஏதாவது செய்யலாமா? மெல்லினா கேட்க, நான் ஏற்கனவே பேசிட்டேன்ம்மா. மித்திரனுக்கு பதில் இந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன். அவனை தலையிட வேண்டாம்ன்னு சொல்லீட்டேன். அவனும் ஏற்றுக் கொண்டான்.
“சார், இது ரொம்ப ரிஸ்க்கா இருக்கும்” அகரன் சொல்ல, அகரா நீ ஓய்வெடு. எந்த அளவு ஓய்வெடுக்கிறியோ அந்த அளவு வேகமாக குணமாகும். பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என்றான் ஆதிரேயன்.
இல்ல சார்..
அகரா, நீ கண்ணை மூடி படு. டேய் அவனை விட்டு நீ நகராத. அவன் நல்லா தூங்கணும். “சப்ப மூக்கி, நீ வா” ஆதிரேயன் மெல்லினாவை அழைத்தான்.
அண்ணா, எல்லார் முன்னாடியும் இப்படி அழைக்காத மெல்லினா சொல்ல, சார் உங்க தங்கச்சி மூக்கு தான் சப்பையா இருக்கு. ஆனால் மூளை ரொம்ப சார்ப். என்ன பேசணுமோ நச்சுன்னு பேசுறா என்று கையை மடித்து அவளிடம் திரிவேஷ் நீட்ட, அவளும் கையை மடித்து அவன் கையை இடித்து விட்டு,
“ஆமா அண்ணா, சிலர் பார்க்க எந்த குறையும் சொல்ல முடியாமல் இருப்பாங்க. ஆனால் மூளையே இருக்காது” என்று மெல்லினா அகரனை பார்த்தாள்.
அகரனையா சொல்ற? ஆதி கேட்க, “ஆமா அண்ணா, நான் கேட்கிற சின்ன கேள்விக்கு கூட அவனால் பதில் சொல்ல முடியல்ல” என்றாள் மெல்லினா.
“ஏய், நீ என்ன கேட்டணுன்னு உன்னோட அண்ணாகிட்ட சொல்லு? திரிவேஷ் சொல்ல, “சார் மெல்லினாவை அழைச்சிட்டு போங்க. நீங்க சொன்ன மாதிரி நான் ஓய்வெடுக்கணும்” என்றான் அகரன்.
சார், அவகிட்ட கேளுங்க திரிவேஷ் சொல்ல, த்ரீ சும்மா இரு. சார் அதெல்லாம் ஒன்றுமில்லை. ருச்சி நல்லா இருக்கால்ல?
“ம்ம்..அவள் ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கா” என்ற ஆதிரேயன் அகரனையும் மெல்லினாவையும் பார்க்க, அவள் ஆதி கையை பிடித்துக் கொண்டு அகரனை பார்த்துக் கொண்டே சென்றாள்.
அகரா, சாரிடம் சொல்லி இருக்கலாம்ல்ல. அவர் உன்னை தப்பா நினைச்சுக்க போறார்.
இருக்கட்டும்டா. மெல்லினா எல்லாரிடமும் எல்லாம் இப்படி பேச மாட்டா. திமிறா தான் பேசுவா. அதனால யாரும் அவளிடம் அதிகமா பேச மாட்டாங்க. நம்மகிட்ட தான் நல்லா பேசுறா. விடுடா என்றான் அகரன். திரிவேஷை சுரேகா போனில் அழைக்க, அவன் அவளிடம் பேசிக் கொண்டே அமர்ந்தான். அகரன் கண்ணை மூடி படுத்தான்.
ரசிகா ஆதியை பற்றி யோசித்தாள். இந்த இலக்கியா இவ்வளவு மோசமா இருப்பான்னு நான் நினைக்கலை. ச்சே..சார் பாவம் என்று எண்ணியவளுக்கு, மெல்லினா கூறியது யோசிக்க வைத்தது.
ஆதி சாரை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? அவங்க வீட்ல எல்லாரும் ஒத்துகிட்டாங்களா? அவங்களால எப்படி என்னை ஏற்றுக் கொள்ள முடிந்தது? சாதாரண வீட்டுக் குடும்பத்திலே என்னை பற்றி குறையா சொல்லுவாங்க. ஆனால் இவங்க வசதியானவங்க. எத்தனை பெரிய மனுசங்களை பார்க்க வேண்டி வரும். அவர் அருகே நான் இருந்தால் அவர் மரியாதை என்னாவது? என்று யோசித்தாள்.
ஆதி சாரை பிடிக்காமல் போகுமா? எனக்கு உங்களை பிடிக்கும் சார். ஆனால் நான் தனியா அவமானப்படும் போதே ரொம்ப கஷ்டப்படுவேன். என்னால நீங்களும் கஷ்டப்பட வேண்டி வருமே?
“என்னால் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனால் சார் உங்களுக்கு வேற பொண்ணு கிடைக்கும் வரை உங்களை நல்லா பார்த்துக்க முயற்சி செய்கிறேன் சார்” என்று அவளுக்கு அவளாக பேசிக் கொண்டு சற்று நேரத்தில் தூங்கினாள்.
மெல்லினாவும் ஆதியும் உள்ளே வந்தனர். ரசிகா தூங்குவதை பார்த்து, அண்ணா இவங்களை பார்த்தா சின்னப் பொண்ணு மாதிரி இருக்காங்கல்ல? மெல்லினா கேட்க, ஆதிரேயன் புன்னகைத்தான்.
மெல்லினாவை தூக்கி அவளருகே அமர வைத்தான் ஆதிரேயன். அண்ணா கொஞ்ச நேரம் நீ பக்கத்துல இருக்கிறாயா? மெல்லினா கேட்க, ரொம்ப வலிக்குதாடா? ஆதி கேட்டான்.
இல்லண்ணா, நீ கவலைப்படாத. ரசியை நம்மை விட்டு போக விட மாட்டேன் என்றாள் மெல்லினா. அவள் தலையை தடவி விட்டு, நீ எதுவும் செய்ய வேண்டாம். எனக்கென்று அவளென்றால் யாராலும் மாத்த முடியாது என்றான் ஆதி.
மெல்லினா புன்னகையுடன் ரசிகா அருகே படுத்துக் கொண்டாள். ரசிகா அசந்து தூங்கினாள். ஆதி இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றான்.
மீண்டும் அவன் போன் அழைக்க, ஓ.கே சார். அவனுக்கு மேல யார் இருக்கான்னு விசாரிங்க. அவன் பெயர் கூட ஆல்பர்ட்டுன்னு சொன்ன மாதிரி இருந்தது. அவனையும் பிடித்து சேர்த்து விசாரிங்க ஆதி சொன்னான்.
கருணாகரனையும் ஆல்பர்ட்டையும் போலீஸார் பிடித்தனர். அவர்களை விசாரிக்கும் முன் அமைச்சர், மந்திரி அனைவரும் அவர்களை ரிலீஸ் செய்ய சொல்லி அவர்களுக்கு ஒரே தொந்தரவு செய்தனர். போலீஸாரும் அவர்களை விட்டுட்டு ஆதியை அழைத்து விசயத்தை சொன்னார்கள்.
“சரிங்க சார், நான் சொல்லும் போது நீங்க அரெஸ்ட் பண்ணுங்க. அவங்களால் வெளிய வரவே முடியாது” என்று இரவு அகரன் அறையிலிருந்து பேசிக் கொண்டிருந்தான் ஆதிரேயன்.
சார், என்ன பண்ண போறீங்க? அகரன் கேட்டான்.
“துரைய மீட் பண்ண போரேன்” என்றான் ஆதிரேயன். சார் ரௌடிகள் சவகாசம் வேண்டாமே? அகரன் கேட்க, இப்ப வேற வழியே இல்லை. அவனிடம் தான் பேசணும் என்ற ஆதிக்கு ரசிகா அழைத்தாள்.
ரசி, ஆதிரேயன் அழைக்க, அப்பா எப்ப தான் வருவீங்க? நீங்க எங்களோட விளையாட வர மாட்டீங்களா? லிது கேட்டாள்.
“விளையாடலாமே? நாளை மட்டும் தான் பின் அகரன் அங்கிளையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுறேன்” என்றான் ஆதிரேயன்.
சார், நான் பார்த்துக்கிறேன். உங்க வீட்டுக்கு நான் எப்படி சார் வர்றது? அகரன் தயங்கினான்.
“அதெல்லாம் வரலாம். இப்ப தூங்கு” என்ற ஆதி வெளியேற, திரிவேஷ் விழித்து இவர்களை பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.
அடுத்த இரு நாட்களில் ஆதிரேயன் வீட்டிற்கு அகரனை அழைத்து வந்தனர் தமிழரசனும் ஆதிரேயனும்.
அகரனை பார்த்தது ரசிகா அவனிடம் ஓடி வந்து அகரா, வா..என்று அழைத்தாள்.
தமிழரசனும் ஆதியும் அவனை அழைத்து வர, லிதுவும் நிதுவும் “அப்பா” என்று ஆதியிடம் வந்தனர்.
“சார், நீங்க பசங்கள பாருங்க” என்று ரசிகா அகரன் கையை அவள் தோளில் போட்டுக் கொண்டாள். அப்பொழுது “ஹே மச்சி, உன்னோட பொருளை பேக் பண்ணிட்டு வந்துட்டேன்” என்று திரிவேஷ் உள்ளே வந்தான்.
மெல்லினா அவனை பார்த்து, “நீயும் இங்கேயே ஸ்டே பண்றீயா? செம்ம ஃபன்னா போகும். இங்க எல்லாரும் போரீங்” என்றாள் மெல்லினா.
“மெல்லி, நீ ஸ்கூலுக்கு கிளம்பு” ரசிகா சொல்ல, அகரன் மெல்லினாவை பார்த்து விட்டு, “உன்னோட வீடு மாதிரி என்னை கூட்டிட்டு போற?” அகரன் ரசிகாவிடம் கேட்டான்.
இல்லடா. உனக்கு சாரை தெரியும்ல்ல. அதான் என்றாள் அகரனிடம். இருவரும் பேசுவதை பார்த்த தமிழரசன் தொண்டையை செருமினார். இருவரும் அவரை பார்க்க, அவர் ஆதிரேயனிடம் கண்ணை காட்டினார். அவன் இருவரையும் முறைத்து பார்த்தான்.
“இவர் தான சார் என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார். முறைப்பிலே வரவேற்கிறார்” அகரன் கேட்க, “தம்பி நம்ம ரசி கையை எடுக்கும் வரை மாப்பிள்ள இப்படி தான் இருப்பார்” என்றார் தமிழரசன்.
அப்பா, அகரன் என்னோட ப்ரெண்டு. என்னால அவனை விட முடியாது என்று ரசிகா சொல்ல, நீ நினைக்கலாம்மா, ஆனால் பாஸ் முறைப்பிலே நான் எறிந்து விடுவேன். என்னை நான் தான் பார்த்துக்கணும். எனக்கு யார் இருக்கா? அகரன் வருத்தமாக கூறிக் கொண்டே ரசிகா கையை எடுத்து விட்டான்.
“நான் இருக்கேன்ப்பா. இனி நான் இங்க தான் உன் அறையிலே தங்கப் போறேன்” என்று தமிழரசன் சொன்னாலும் ஒரு பக்கமாக அகரனை பிடிக்க முடியவில்லை. இருவரும் தடுமாற மெல்லினா ஓடி வந்து அகரனின் கையை அவள் தோளில் போட்டுக் கொண்டு, இந்த நிலைமையில உனக்கு ரோசம் முக்கியமா போச்சா? என்று அகரனை திட்டி விட்டு, தமிழரசனை பார்த்து,
“மாமா, உங்களால முடியாதுன்னா. உதவிக்கு கூப்பிடணும் இவனை தாங்குறேன்னு இருவருமே இப்ப விழுந்து வாரி இருப்பீங்க” என்றாள்.
பாப்பா, என்னடா சொன்ன? தமிழரசன் கேட்க, நான் என்ன சொன்னேன்? ஒன்றுமில்லை என்று முறைத்து புன்னகைத்தாள் மெல்லினா.
அகரன் இருவரையும் புரியாமல் பார்க்க, “சீதாம்மா சக்கரை எடுத்து வந்து என்னோட மருமக வாய்ல்ல போடு” என்று தமிழரசன் சந்தோசத்தில் அகரனை விட்டுட்டார்.
மெல்லினாவும் அகரனும் கீழே விழும் முன் ஆதி ஒரு பக்கமும் திரிவேஷ் ஒரு பக்கமும் வந்து அவர்களை பிடித்தனர்.
பார்க்க தான் மெலிந்த மாதிரி இருக்கான். செம்ம வெயிட்டா இருக்கான் மெல்லினா சொல்ல, அகரன் அவளை முறைத்தான். நான் ஒன்றும் தப்பா சொல்லலை என்றாள் அவள்.
error: Content is protected !!