Skip to content
Post Views: 7,127
மழை நொடிப்பொழுதில் சடசடவென கொட்ட ஆரம்பித்தது. கட்டிக்கொண்டு நின்றதில் வீட்டுக்குள் உடனே ஓட வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை இருவருக்கும். கோவர்த்தனின் முதுசு பாதி நனைந்த பிறகு தான் அவன் அசையவே செய்தான்.
வானிலாவின் ஒருபக்க உடல் காற்றோடு அடித்த மழையில் நனைந்துவிட்டிருக்க, அவனை தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே சென்றவன், பால்கனி கதவை இறுக சாற்றி ஸ்க்ரீனை இழுத்துவிட்டான். பேக்கெட்டில் இருந்த ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு, அவன் சட்டையை கழட்டிக்கொண்டே வானிலாவை பார்க்க, அவனையே பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.
Advertisement
மழையில் நனைந்து குளிர்ந்திருந்த அவன் உடலில் சட்டென உஷ்ணம் ஏறியது. சட்டை பட்டன்களை விடுவித்துக்கொண்டிருந்த அவன் விரல்களில் வேகம் குறைந்தது.
Advertisement
அவன் பார்வையின் வேறுபாடு அவள் கவனத்தில் விழ, சட்டென வேறு புறம் திரும்பினாள். அவன் முகத்தில் கவர்ச்சியான புன்னகை ஒன்று உருவாக மெல்ல அவளை நோக்கி வந்தபடி, “ட்ரெஸ் மாத்தலையா?” என்றான்.
Advertisement
“ம்ம்ம்? இட்ஸ் ஓகே! காஞ்சுடும்!” அவள் சொல்லும்போதே, அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஹீட்டரை நிறுத்திவிட்டான் அவன். அறையின் கதகதப்பு குறைய, குளிர ஆரம்பித்தது.
Advertisement
“கோ… ஹீட்டர் ஆன் பண்ணுங்க” அவள் சொன்னதை அவன் கேட்கவே இல்லை. சட்டையை கழட்டி பொறுமையாய் ஹேங்கரில் மாட்டியவன், அவள் அருகே சென்று அமர்ந்தான்.
அவள் எழுந்துக்கொள்ள பார்க்க, அவள் கையை பிடித்து அவன் லேசாக இழுத்ததும் தன்னைப்போல அவன் மேலே சரிந்தாள் வாணிலா. அவளுக்கு சற்றே தைரியம் தான், ஒன்றும் பண்ண மாட்டான் என்று. ஆனால், அவன் கரம் அவள் இடையில் ஒரு அழுத்தத்தோடு உரசி மெல்ல நகர, விழி விரித்தாள் அவனைப்பார்த்து.
“விடுங்க, நான் காஃபி கொண்டு வரேன்” அவன் விரல்களை அவள் விலக்கப்பார்க்க, இன்னும் அழுத்தமாய் தான் பற்றினான் அவளை. அவன் பார்வை வேறு போதையேறியதாய் தெரிய, உள்ளுக்குள் கிடுகிடுத்தது அவளுக்கு. தான் சற்று அதிகமாய் தான் சீன்டிவிட்டோமோ என்று வேறு பயம் வர, “விடுங்க, உங்க அம்மா இப்போ கால் பண்ணுவாங்க” என்றாள், அவனுக்கு பயம் காட்டும் பொருட்டு.
வெகு நிதானமாய் நக்கல் சிரிப்பொன்றை இதழ்களில் தவழ விட்டவன், அழுத்தமாய் அவள் இதழ்களில் புதைய, இருமடங்காய் விரிந்தது அவள் விழிகள். ஆழ்ந்து, ரசித்து, மிதவாதமாய் அவள் இதழ்களில் அவன் நடத்தும் தீவிரவாதத்தில், வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்டாள் வனிதை (நாகரீக மங்கை).
அவன் இதழ்களை விடுவித்தபோது, பெண்மைக்கே உண்டான பயம் பிடித்துக்கொள்ள, பிடிவாதமாய் அவனை விட்டு எழ முயன்றவளை ஒரே திருப்பலில் கட்டிலில் கிடத்தியவன், சட்டமாய் அவள் மேலே படர்ந்தான்.
ஸ்பெயின் நாட்டில் மழை பொழுதில் கூட வியர்வை அரும்பியது விறலிக்கு (பருவப்பெண்).
அவனது வெற்று மேனி அவள் மீது அழுந்த உரசுவதில் சிலிர்த்தது அவளுக்கு. அதோடு அவனுக்கே உண்டான வாசனையும் விழிகளை சொக்க வைக்க, உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடுபட்டாள். அன்று இயல்பாக அவனுடன் ஒன்றாக விரும்பியபோது இந்த பயம், தயக்கம் எல்லாம் எங்கே சென்றிருந்தது என்று அவளுக்கு விளங்கவில்லை. அவன் தன்னை சொல்லாமலே விளங்கிகொண்ட விந்தையில் தன்னை மறந்திருந்தாள் போல.
இப்போதும் அவனிடம் தன்னை இழக்கக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனாலும் தயக்கம். ஒரு ஆண், அவனே அன்னைக்கு கட்டுப்பட்டு இருக்கும்போது, தான் கண்டிக்க ஆளில்லாத நினைவில் எல்லை மீற நினைக்கிறோமோ என்று!!!
அவன் தன் ‘கணவன்’ என்பதெல்லாம் அவ்வப்போது மறந்துப்போகிறது.
அதை மறக்கவிடாமல் செய்யத்தான், மறவோன் (ஆண்) செய்கையில் இறங்கிவிட்டானோ என்னவோ!?
அவன் கண்களில் அதீத ரசனை கொட்டியது, அதோடு தளும்பாத தாபமும்! அவன் இதழ்கள் ஆடை மறைக்காத இடமெல்லாம் உரசி நகர, அவளுக்கு அடியில் சென்ற ஒரு கரமோ, அவள் உடையை நெகிழ்த்தப்பார்க்க, பதறி பிடித்தவள், “என்ன பண்ற கோ?” என்றாள் தவிப்பாய்.
அவள் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன், சிரிப்போடு கண்சிமிட்டி, “உனக்குள்ள என்னை தொலைச்சுட்டேன்… அதான் தேடப்போறேன்!” என்றான். அவன் வசீகரத்தில் வஞ்சினியின் விரல்களில் வலு, தன்னைப்போல குறைந்தது. அவளை பார்த்துக்கொண்டு அவள் தோள்பட்டையில் இருந்து உடையை அவன் கீழிறக்க, அதற்குமேல் அவனால் அவள் கண்களை மட்டும் பார்க்க முடியவில்லை. அவன் அவயங்கள் அத்தனையும் வெவ்வேறு வேலைகளில் மூழ்கி கிறங்கிப்போக தொடங்கின.
ஆரம்பத்தில் அவனிடம் இருந்த நிதானம், சற்று நேரத்திற்க்கெல்லாம் சுத்தமாய் இல்லாமல் போய்விட, அவளை படுத்த ஆரம்பித்தான். கோவர்த்தனிடம் இப்படியொரு அவதாரத்தை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அவன் கைப்பாவையாய் சிக்கிக்கொண்டு திண்டாடினாள்.
நடுவே மூன்று நான்கு முறை அவன் அலைபேசி அடித்து ஓய, அவள் கைகள் இரண்டையும் அவளது தலைக்கு மேல் தன் ஒற்றை கையால் சிறை செய்தபடி மும்மரமாய் இருந்தவனை மீண்டும் ஒரு முறை அலைபேசி கலைக்க, நான்கடி தொலைவில் இருந்ததை கடுப்போடு அவன் எட்டி எடுத்ததில், சார்ஜர் ஃப்ளங்கில் இருந்தே பிடுங்கிக்கொண்டு வந்து விழுந்தது.
எடுத்தது ‘அன்னை’ என்றதும், “வேலையா இருக்கேன்ம்மா… அப்புறம் பேசுறேன்” மறுபுறம் அவர் பதில் சொல்லக்கூட விடாமல், வைத்துவிட்டு, ‘பொத்’தென அவள் மீதே விழுந்தான்.
‘அம்மா…’ சன்னமாய் அலறியவள், “உனக்கு எதாவது பேய் பிடிச்சுருக்கா?” என்றாள் நம்ப முடியாமல்.
“ஆமா… இந்த மோகினியை பிடிச்சுருக்கு” என்றவன், அவள் கன்னங்களை அழுத்தி, குவிந்த இதழ்களில் குவிந்துவிட்டான். வெளியே இடி, மின்னல், மழை என வெளுத்து வாங்க, உள்ளேயும் அதற்கு சளைக்காமல் ஒரு போராட்டம் நடந்தது.
பிரயாணத்தின் பாதியிலேயே களைந்து துவண்டுவிட்டாள் அவள். அவளை அங்கேயே விடாமல், தன்னோடு இழுத்துக்கொண்டு முழு வழிக்கும் அவன் செல்ல, “வரூ… முடியல…” என்ற அவள் கெஞ்சல்கள் எல்லாம் அவனுக்கு கேட்டும் கேட்காமல் போனது.
வெளியே மழை அடித்து ஓய்ந்தது, உள்ளேயும் தான்!!!
“வரூ… பசிக்குது!” அவன் வியர்த்த நெஞ்சில் முகம் வைத்திருந்தவள் கேட்க, “வேலை செஞ்ச நானே சும்மா இருக்கேன், வேடிக்கை பார்த்த உனக்கு பசிக்குதா?” என்றான் கண்ணை மூடிக்கொண்டு.
தலையை நிமிர்த்தியவள், அவனை நெஞ்சிலேயே அடிக்க, சிரித்தபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன், “சாப்பிடலாம், இரு!” என்றான். மணி அப்போது தான் இரவு பத்தை நெருங்கியது.
“மேடம்க்கு இப்போவாது கல்யாணம் ஆகிடுச்சு, புருஷன் இருக்கான்னு நினைப்பு இருக்கா?” என்று கேட்டபடி அவள் விரலில் இருந்த மோதிரத்தில் அவன் இதழ் பதிக்க, “குடுத்த மோதிரத்தை திருப்பி கேட்க போறீங்களா?” என்றாள்.
நறுக்கென விரலில் கடித்தவன், “நம்ம வெட்டிங் ரிங் டி இது” என்றான்.
“ஓ… நீங்க அப்படி வரீங்களா?” என்றாள் சிரித்தபடி.
“திரும்ப வரவா?” அவன் சில்மிஷமாய் கேட்டவுடன், மெய்யாகவே வெளிறியவள், “வேண்டாம் வரூ… பசிக்குது” என்றாள்.
“சரி சரி… சாப்பிட்டு… ஒரு ரவுன்ட் வருவோம்” கண்ணடித்தவனை அடிக்கக்கூட முடியாமல், நாணம் வந்துதொலைக்க, “நான் போய் எதாவது செய்றேன்” என்று நெஞ்சோடு பிடித்துக்கொண்ட போர்வையோடு எழுந்தாள்.
கையால் தலையை தாங்கிக்கொண்டு ஒருக்களித்து படுத்துக்கொண்டு அவளை அவன் ஆசையாய் பார்க்க, கையில் உடையோடு தடுமாறியவள், “திரும்புங்க” என்றாள் சன்னமாய்.
ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் ஆடவன்…!
“ஆடையற்று என்னோடு அத்தனை ஆராய்ச்சி செய்த உனக்கு,
ஆடை மாற்றும்போது மட்டும் அங்கங்களை மறைக்க தோன்றுமோ!?”
அவன் கேட்டதில், வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.
“கூடல் பொழுதில் மட்டும் கூச்சம் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும் போல” கன்னத்தில் அதக்கிய சிரிப்போடு அவன் சொல்ல, “வரூ… நீங்க ரொம்ப மோசம்” என்றவள் தலையணையை தூக்கி அடித்தாள்.
அவன் சிரிப்பு அந்த அறையெங்கும் எதிரொலிக்க, பெண்ணவளின் நகக்கண் கூட நாணம் கொண்டு சிவந்தது. அதே நேரம் அவன் அலைபேசி ஒலிக்க, அவன் ‘அன்னை’ தான் அழைத்திருந்தார்.
அதை பார்த்தவள், “அடி வாங்க ரெடியா?” என்றாள் கிண்டலாய்.
அசால்ட்டாய் உதடு வளைத்தவன், “இதுக்காக ஒரு கட்டு என்ன? ஒன்பது கட்டு விளக்கமாறுல கூட அடி வாங்க ரெடி!” என்றதும், அவளுக்கு முகத்தை எங்கே கொண்டு வைப்பதேன்றே தெரியவில்லை.
“போலோ மாதா ஜி…” உற்சாகமாக அவன் ஆரம்பிக்க, “தூங்க முன்ன பேசிடலாம்ன்னு பார்த்தா, வேலை இருக்குன்னு படம் காட்டுறியாடா?” என கொஞ்ச ஆரம்பித்திருந்தார் அம்சவர்த்தினி.
அதெல்லாம் அவனுக்கு காதிலேயே ஏறவில்லை. சுகமான சந்தோசத்தில் மிதந்துக்கொண்டே தத்துப்பித்து என ஃபோனில் உளறிக்கொண்டிருந்தான்.
error: Content is protected !!