Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே – 16

ரீங்காரமாய் என்னுள்ளே – 16

போனை ப்ளூடூத்தில் கனெக்ட் செய்து, அவனின் மகிழுந்தை இயக்கியபடி, “பிக் அப் சுண்டக்கா…” என அவள் எடுப்பதற்காக காத்திருந்தான் காவல் காரன் விஷ்ணு.

மறுமுனையில் அட்டென்ட் செய்த சிந்து சமத்தாக, “சொல்லுங்க…” என்றாள்.

அவளின் சொல்லுங்க என்ற அழைப்பில் சிரிப்பு வர பார்க்க, “சொல்லுங்க அப்பறம்?…” என கேள்வியாக கேக்க,



Advertisement

“அப்பறம் என்ன?…” என கேட்டாள் மெதுவாக,

“இப்படி இருந்தாயெல்லாம் ஒன்னும் கதைக்காகாது…” என்றான் அவளிடம்,

அவனின் அதிரடியான செயலில் அதிர்ந்து இருந்தவள், அன்று இரவு முழுவதும் அவனே ஆட்சி செய்ய, யோசனை கூட அந்த பக்கம் தள்ளி நின்றுகொண்டது.

Advertisement

எந்த புள்ளியில் அவன் தன்னில் இந்தளவிற்கு இசைத்து ரீங்காரமாய் புகுந்தான் என்பதே புரியாத புதிராய் இருக்க, இதில் அவன் முக்கியமான இடத்திற்கு அழைத்து போகிறேன் என்று சொன்னது இன்னமும் பேரதிர்ச்சி தான்.

Advertisement

சொல்லிக்கொள்ளும் படி இருவரும் அப்படி ஒன்றும் மனம் விட்டு பேசவில்லை… இதில் அவருக்கு என்னை எப்படி பிடித்தது என கேட்கும் ஆவல் பிறந்தாலும், தன்னால் கேட்க முடியுமா என்பதன்று, அவர் தன்னுடைய இஷ்டத்தை சொல்வாரா வென தான் மனது நினைத்தது. இதெல்லாம் தற்போது ஒன்றபின் ஒன்றாக நியாபகம் வர, அவனிற்கு பதில் சொல்லாமல் காதில் போனை வைத்துக்கொண்டே யோசனையில் இருக்க,

“ஒய் சைலன்ட் ஸ்ட்ராபெர்ரி…” என அவளை அழைக்க,

அவனின் இப்படியான அழைப்பை எப்போதும் போல கேட்டு மலைத்தவள், எப்படித்தான் இப்படி இவங்களுக்கு பேச வருதுன்னு தெரியல என்று மனதில் நினைத்தவள், “ஹான்… சொல்லுங்க…” என்றாள்.

Advertisement

” நான் தான் சொல்லிட்டேனே… உன்னோடு தான் என் வாழ்க்கைன்னு… இன்னும் எத்தனை முறை சொல்லணும்…” என வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி அவன் கேக்க,

அவனின் இந்த பேச்சு, மங்கைக்கு இதமாக இருக்க, இருந்தும் “அவ்வா எப்படில்லாம் சொல்லுறாங்க பாரு” என அவனை கடியவும் செய்து, “உங்களுக்கு… எப்படி… என்னை…” என வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு அவள் மனதில் உள்ளதை கேட்க வர,

அதை புரிந்துகொண்ட காவல் கள்வனோ, ” ரெடி ஆகிட்டியா?… வெளில வா… நான் இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்…” என்றான்.

அவள் கேக்க வந்ததை விட்டுவிட்டு, சிந்துவும் சிரத்தையாக, “அப்போ நான் கீழே வரேன்…” என்றாள்.

“வந்து தானே ஆகணும்…” என்றவன்,

“நம்மோட லைப்ல இந்த சண்டை, சமாதானம் வராது போலயே… அப்போ…” என இலகுவாக கேட்டான் விஷ்ணு.

“எதற்கு சம்மந்தமே இல்லாம சொல்லுறாங்க” என நினைத்தவள், “எதுக்கு இப்படி சொல்லுறீங்க?…” என சிந்துவும் கேள்வியுடன் ஒன்றிப்போய் கேட்க,

“இல்லையா பின்ன… ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் சொல்லிருக்கேன்… எங்க போறோம்ன்னு இது வரைக்கும் கேக்கவே இல்ல…” என்றவன்,

அப்பறம் “இப்போவும் நான் ஒரு மணி நேரம் கிட்ட லேட்டா வரேன்… ஏன் லேட் அப்படின்னு கேட்டு ஒரு வாய் சண்டையும் வரல… அப்போ நான் சொன்னது கரெக்ட் தானே…” என அவளிடம் வாயாட,

சிந்து, “எப்படில்லாம் யோசிக்குறீங்க நீங்க…” என அதிர்ந்து கேக்க,

“நீ எப்படியும் யோசிக்க போறது இல்லனு தெரியுது இதுல இருந்து…” என சொன்னவன்,

“அப்போ உனக்கும் சேர்த்து நான் தான் எல்லாத்தையும் பாக்கணும்…” என்றான் அமர்த்தலாக.

“ஆஹ்…” என அவள் வாய் பிளக்க,

“சரி சரி… இனி நேரே பார்த்தே பேசலாம்…” என சொல்லி போனை வைத்தவன், காரை பார்க் செய்து அவள் வருவதை பார்த்தவாறு இருந்தான்.

“ஒய் பச்ச பெப்பர்… இதென்ன பச்ச கலருக்கு காப்பி ரைட் எடுத்து வச்சிருக்கியா… எப்போதும் பச்ச கலருலயே சுத்துற…” என அவள் காரில் அமர்ந்ததும் கேக்க,

கண்கள் விரித்து ஆச்சரிய முக பாவத்தோடு அவள் அவனை பார்க்க,

“என்ன லுக்கு… கேட்டதுக்கு பதில் சொல்லாம…” என அவன் கேக்க,

“இவ்வளோ நோட் பண்ணிருக்கீங்க?…” என இவள் வாய் திறந்து கேக்க,

“ஓஹ் நோட் எடுத்து எழுதி வைக்கணுமா?…” என அறியாத பாணியில் அவன் கேட்க,

“நான் ஒன்னும் பேசல…” என சொல்லி பின் வாங்கினாள்.

விஷ்ணு, “அப்போ என்னோட வாய் மட்டும் பேசி நல்லா வலிக்கணும்ன்னு சொல்லுற…”

சிந்து, “இப்படி பேசுனா… அப்பறம் நான் எங்க இருந்து பேசுறது…”

விஷ்ணு, “அப்போ என்னைய எப்படி பேச விடாம வைக்குறதுன்னு, நீ தான் கத்துக்கணும்…” என்றான் விஷமமாக,

அது புரியாத பாவையோ, “அப்படி என்னால முடியும்ன்னு தோணவே இல்ல…” என்றாள் பட்டென்று.

அவளில் பேச்சில் அட்டகாசமாக அவன் சிரிக்க,

முதல் முறை அவனின் சிரிப்பதை பார்த்தவளின் கண்கள் கொஞ்சம் ரசனையாக மாறி, மனது அதனை படம் பிடித்தது.

“என்ன சைட் அடிச்சி முடிச்சாச்சா…” என அவன் கண்கள் அப்பட்டமாக சிரிப்பை காமித்து கேட்க,

அவனின் குரலில் தெளிந்தவள், “ஹான்… என்ன?… இல்ல…” என உளறினாள்.

“உனக்கு தான் எல்லா ரைட்ஸும் இருக்கே இப்போ… அதுனால கூச்சப்படாம சைட் அடிக்கலாம்…” என்றான்.

அவனின் இந்த வெளிப்படையான பேச்சில், அவளின் முகத்தை எங்கே கொண்டு வைப்பதென்று தெரியாமல், “ப்ளீஸ்…” என்றாள்.

விஷ்ணு, “முன்னாடி தான் மரியாதைக்காக சார் ன்னு கூப்பிட்டீங்க… இப்போ உங்க வருங்கால புருஷன் வேற, எப்படி கூப்பிடனும் தெரியலையா?… வான்டெட் ஆஹ் கூப்பிடமா தப்பிக்கிறீயா?…”

அவன் சொன்னது முற்றிலும் உண்மையே… விஷ்ணு என சட்டென்று உரிமையாக அழைக்க அவளுக்கு சற்று கூச்சமாக இருக்க, அதனாலே வேறு எப்படியும் அழைக்காது கவனமாக அதனை தவிர்த்தாள். இப்போது நேரடியாக அவன் கேக்க, என்ன சொல்வதென தெரியாமல் முழித்து கொண்டு அவனை பார்க்க,

“என்ன மாங்காய் திருடுனவ போல முழிச்சா… ஆச்சா…” என கேட்டவன்,

“சீக்கரம் எப்படி என்னை கூப்பிட போறேன்னு சொல்லுடி சுண்டக்கா…” என உரிமையாக கேட்டான் உடமைப்பட போறவன்.

இதனை நேரம் முழித்தவள், அவனின் சுண்டக்காவில், “நீங்க என்னை ஒழுங்கா சிந்துன்னு கூப்பிடுங்க… நானும் உங்களை அதுக்கப்பறம் எப்படி கூப்பிடுறதுன்னு சொல்லுறேன்…” என்றாள் முறுக்கியவளாக,

“ஓஹோ…” என இழுத்தவன், “நீ சுண்டக்கா சைஸ்ல தானே இருக்க… உன் பெயரை விட இந்த பேரு தான் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு…” என அவளை ஒரு முறை முழுதாக கண்களால் அளந்து சொன்னனான்.

அவனின் பார்வையின் மாற்றத்தில் தானாகவே ஒரு வெக்கம் பிறக்க, ” நான் சிந்து தான்…” என்றாள் முடிவாக.

“ஆமா எலி பொந்து தான்… போயி உள்ள பூந்துக்க…” என்றான் அசராமல்,

“உங்களை எனக்கு எப்படி டீல் பண்றதுனே சத்தியமா தெரியல போலீஸ் ஆஃபீஸ்ர் …” என ஒத்துக்கொண்டு சொல்ல,

“உனக்கு தெரியாததை எல்லாம் சொல்லி தர தான் இனிமே நான் இருக்கேனே… அதுனால நீ இனிமே கவலை படவேணாம்…” என அவளிடம் கண்ணடித்து சொன்னான் காவல் காரன்.

சிந்து, “என்ன?…”

“என்ன என்ன தான்…” என்றவன்,

“எப்படியும் நீ கார்ல ஏறுனதும் மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு இல்ல மூணு கேள்வி கேட்ருப்பியா?…” என்றவன்,

“அதுக்கு நான் உடனே பதில் சொல்லிருந்தா… அதோட முடிஞ்சது… அடுத்து எப்படி பேச்சை வளக்குறது… இப்படி தான்… இப்போ புரிஞ்சிதா இந்த இஞ்சிக்கு?…” என்று சொல்ல,

அவனின் பேச்சில் அசட்டு சிரிப்பு சிந்துவின் முகத்தில்.

“இப்போ எங்க போறோம்…” என அவள் கேக்க,

விஷ்ணு, “இப்போ நீ கேக்குறதுக்கு நான் பதில் சொல்லனுமா?…”

“ஹான்… நீங்களே சொல்லுவீங்கன்னு நினைச்சி தான் நானா எதும் கேக்கல…” என அவனிடம் சொன்னவள், அவன் சொல்லுவானா என்பது போல் பார்த்தாள் பாவை.

“இப்படி என்னையே நீ நினைச்சிட்டு இருந்தா… நான் என்ன பண்ணுறது சொல்லு…” என கேட்டான்.

“ஹான்…” என அவள் வியந்து பார்க்க,

“இன்னும் எத்தனை டைப் வச்சிருக்க… இப்படி என்னை பாக்குறதுக்கு…” என நமுட்டு சிரிப்புடன் கேக்க,

“நான் பாக்கவே இல்ல…” என ஜன்னலின் புறம் திரும்பினாள்.

“அந்த விண்டோல கூட என்னோட பிம்பம் தெரியும்… டிஸ்டர்பன்ஸ் இல்லாம சைட் அடிக்கலாம்ன்னு திரும்பிட்ட… அப்படி தானே…” என்றான்.

சிந்து, “நீங்க ரொம்ப பேசுறீங்க…”

“இப்போ என்ன வாய மூடிட்டு வாங்கன்னு நேரா சொல்லாம இப்படி சொல்லுறியா நீ…” என அவன் கேக்க,

அவனின் சொல்லில் பதறி, “இல்ல… இல்ல…” என வேகமாக அவனை பார்த்து சொல்ல,

அவனோ அலட்டிக்கொள்ளாமல், “நீ சொன்னாலும் தப்பில்ல… அப்படி தான் நான்… உனக்கு பழகிடும்…” என்றான்.

“ஆ…” என அவள் பார்க்க,

அவளை பார்த்தவன் பின்பு, “என்ன இண்டெர்வியூக்கு ரெடி ஆகிட்டியா?…” என கேட்டான்.

“என்ன இண்டெர்வியூ ஆஹ் …” என அவள் பீதியாய் கேக்க,

விஷ்ணு, “பின்ன ஒரு மோஸ்ட் டெமாண்டபிள் எலிஜிபிள் பேச்சிலரருக்கு லைஃப் பார்ட்னர் ஆஹ் வர போற… அப்போ அதுக்கு இண்டெர்வியூ வைக்கணும்ல…” என கூலாக சொல்ல,

“ஹான்…” என அதிர்ந்து பார்த்தாள்.

“கொஸ்டின் எல்லாம் நான் லீக் பண்ண முடியாது… எப்படியும் நல்லா படியா கேக்குற கேள்விக்கு அன்செர் பண்ணிடு… நான் வேற உன்னைய தான் என் வாழ்க்கைக்கு முடிவு பண்ணிட்டேன்…” என தீவிர பாவனையில் சொன்னான்.

அவன் மட்டுமே அவளின் மண்டையில் இருக்க, வேறெல்லாம் எங்கிருந்து அவளுக்கு தோன்றி அதை பற்றி யோசிப்பது.

ஒரு காம்பௌண்டிற்குள் கார் சென்றதை பார்த்தபடியே, “என்ன கேள்வி… யாரு… கேப்பாங்க?…” என பயந்து அவள் கேக்க,

“இப்போ எங்க வந்திருக்கோம்ன்னு நீ நினைக்கிற?…” என அவளிடம் கேட்டுக்கொண்டே காரை அவனின் வீட்டின் முன்பு பார்க் செய்தவன்,

“பொண்ணு பக்க தானே உன்னை கூட்டிட்டு போறேன்…” என முழுதாக சொல்லி முடித்தான்.

விழி விரித்து, “என்ன…” என அவள் பதட்டமாக கேட்டாள் சிந்து.

“என்னோடு வா என் வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” என பாட்டு பாடிக்கொண்டே அவளின் பக்கம் சென்று கதவை திறந்தவன்,

“இப்படி பாடி கூட்டிட்டு போலாம் தான்… ஆனா என்னை தான் உனக்கு முன்னவே பிடிச்சிடுச்சே…” என அவளிடம் சொல்லி கண்சிமிட்டியவன்,

“போலாமா…” என கேட்டு அவனின் வலது கையை நீட்டினான், அவள் இறங்குவதற்காக,

அவனின் அதிவேக அதிரடியான செயலில் மன்னவனை பிரமிப்பாக பார்த்தவாறே அவனின் சொல்லுக்கு பொம்மையாக மாறி அவனின் கை மீது தன் கையை வைத்தாள் அவனின் சுண்டக்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!