Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமன்னவனைக் கண்டாயோ

மன்னவனைக் கண்டாயோ 2



Advertisement

மருத்துவமனையில்

மதியழகனை மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருந்தனர்…. அவனுக்கு உள் காயம் அதிகம்…. வெளி காயத்தில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி இருந்தது….. இரண்டு நாள் உண்ணாமல் இருந்தது…. பாத்ரூம் செல்லாமல் இருந்தது.. என பல பிரச்சனைகள்…. அவனின் ரத்தம் அரிதான ரத்தம் வேறு… ரத்தம் கிடைக்கவே நீண்ட நேரம் ஆகி விட்டது….  ஆனாலும் ரத்தம் ஏற்ற முடியவில்லை… ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் பிறகு ரத்தம் ஏற்றி காயத்திற்கு மருந்து போட்டு… உள் காயத்திற்கு சிகிச்சை அளித்தனர்…  ஆனாலும் ரத்தம் ஏற்றும் போது திடீரென இதய துடிப்பு குறைந்து மீண்டும் சரி ஆனது…. சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது…உள்ளே பல எலும்புகள் ஒடிந்து இருந்தது…. சரியாக கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகும்….. சுவாச குழாய் சரி செய்ய வேண்டும்…

Advertisement

Advertisement

என்ன தான் குற்றவாளியாக இருந்தாலும் இப்படியா செய்வது என கோபபட்டு மருத்துவர் அங்கு இருக்கும் காவலர்களை வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்…

இவரு என்ன மிருகமா இப்டி போட்டு அடிச்சி இருக்கீங்க… மிருகத்தை கூட இப்டி போட்டு அடிக்க கூடாது… ஆனா நீங்க இவர இப்டி போட்டு அடிச்சி இருக்கீங்க…..

Advertisement

இது மட்டும் பிரஸ்ல லீக் ஆச்சி…. அவளோ தான்.. மனிதாபிமானமே இல்லையானு கிழிப்பாங்க….மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு  கூப்டுவாங்க.. பதில் சொல்லிக்கோங்க…

சார் இவன் என்ன உத்தமனா… கொலை முயற்சி… போக்சோ கேஸ் இருக்கு… கவர்மென்ட் அதிகாரிய அடிச்சி இருக்கான்… இவனை அடிச்சா தப்பே இல்லை….  இதுலாம் கம்மி தான்… நான் இருந்தா இன்னும் போட்டு அடிச்சி இருப்பேன்… நான்லாம் சைலன்டா உள்ளேயே முடிச்சி இருப்பேன்…

ஓகே தப்பு இல்லல.. கொலை கூட பண்ணுவிங்களா….இத நான் பிரஸ்ல சொல்லிடறேன்.. நீங்க பாத்துக்கோங்க…. அவரு சரியாக ரெண்டு மாசம் ஆகும்.. அது வரைக்கும் இங்க தான் இருக்கனும்…. நான் பிரஸ்ல சொல்லிடறேன் பாத்துக்கோங்க…. நீங்களே சமாளிங்க என்று கூறி மருத்துவர் சென்று விட்டார்…. பிரஸ்க்கும் தகவல் சொல்லி விட்டார்….

சிறிது நேரத்தில்… மொத்த பத்திரிகை துறையும் தீயாக எரிந்தது….

சிறையில் இருக்கும் குற்றவாளிக்கு பாதுகாப்பு இல்லையா??… தன் சொந்த வெறுப்பை, வன்மத்தை சிறை குற்றவாளியிடம் காட்டுகின்றனரா???…குற்றவாளியை அடித்த ஜெயிலர் தினேஷ்ற்கு தண்டனை என்ன????.. என்று போலீஸ்துறையை போட்டு கிழித்துக்கொண்டு இருந்தனர்…

மக்கள் தன் கருத்தை கூறிக்கொண்டு இருந்தனர்… ஒரு சிலர் மதியழகனுக்கு ஆதரவாக பேசினர்.. என்ன இருந்தாலும் அவனை இப்டி அடித்து இருக்க கூடாது… என்றும் ஒரு சிலர் இவனுக்கு இது தேவை தான் எத்தனை தப்பு பண்ணி இருக்கான் இவனுக்கு இது தேவ தான் என்று கூறிக்கொண்டு இருந்தனர்…..

பசுமையூர்….

அந்த பெரிய வீட்டில் உள்ள ஒரு அறையில் நிலா ம்மா.. சீக்கிரம் எந்திரி ம்மா… உன் மாமா அங்க ஜெயில கஷ்ட படுறான் ம்மா…. நீ சொல்லுவல என் மாமா சந்தோசமா இருக்கனும்னு… ஆனா நீயே உன் மாமாவை கஷ்ட படுத்துற…. எந்திரி தங்கம்…நீ எழுந்து உண்மைய சொன்ன தான் உன் மாமா வெளிய வருவான்…. எந்திரி தங்கம்… என்று இரண்டு வருடமாக கோமாவில் இருக்கும் தன் மகள் நிலவழகியிடம் கூறி கொண்டு இருந்தார் மருதநாயகம்…..

மருதநாயகம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்… பூர்விக ஊர் பசுமையூர் ஆகும்….. முதலில் தமிழ் ஆசிரியராக வேறு ஊரில் பணி புரிந்தார்….அடிக்கடி மாற்றல் ஆவதால் தன் குடும்பத்தினரை சொந்த ஊரிலே இருக்க செய்து விட்டு மாற்றல் ஆகும் ஊருக்கு தான் மட்டும் சென்றார்…

பத்து வருடம் முன்பு தான் தன் சொந்த ஊருக்கு தலைமையாசிரியாராக பதவி உயர்ந்து பணி மாற்றல் ஆகி வந்தார்….

தன் மகளுக்கு ஏற்பட்ட விபத்தினால் விருப்ப ஓய்வு பெற்று தற்போது பூர்விக சொத்தை பாத்து வருகிறார்…..

இவரின் சகதர்மிணி பெயர் லட்சுமி…தன் கணவர் பணியில் இருந்த போது தங்கள் நிலத்தை பார்த்து கொண்டார்… இவர்களுக்கு துணையாக மருதாநாயகத்தின் தாயார் ருக்குமணி இருந்தார்…..

அந்த ஊரில் மொத்தம் மூன்று பெரிய வீடு உள்ளது.. அதில் ஒன்று மருதநாயகம் வீடு… இன்னொரு வீடு அந்த ஊரின் தலைவர் சின்னசாமி வீடு….இன்னொரு வீடு இந்த இரண்டு வீட்டை விட பெரிய வீடு… ஆனால் அந்த வீடு பூட்ட பட்டு உள்ளது சில காலமாக….

அந்த பூட்ட பட்டு உள்ள வீடும் மருதநாயகம் வீடும் அருகே உள்ளது.. ஊர் தலைவரின் வீடு இரண்டு வீதி தள்ளி உள்ளது…..

ஊரு தலைவர் வீட்டில் அவர்.. அவரின் மனைவி சித்ரா அவரின் பெரிய மகன் தேவன்… தேவாவின் மனைவி தேன்மொழி.. அவரின் கடைசி மகன் சூர்யா உள்ளனர்…

இதில் நிலவழகியின் தோழி தேன்மொழி ஆவாள்…. சூர்யா தற்போது ஊரில் இல்லை…..

தேன்மொழி நிலவழகியின் வீட்டுக்கு வந்துயிருந்தாள்….. அவளை வரவேற்று விட்டு லட்சுமி அம்மா உள்ளே சென்று விட்டார்…

அவள் உள்ளே சென்ற போது மருதநாயகமும் வெளியே சென்று விட்டார்… அவள் தாங்கள் சிறு வயதில் செய்தவற்றை சொல்லிக்கொண்டு இருந்தாள்….கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டாள்…..ஆனால் அவள் சென்ற சிறிது நேரத்தில் நிலவழகியின் இதய துடிப்பு குறைந்து கொண்டு இருந்தது..

அந்த நேரம் உள்ளே வந்த லட்சுமி அம்மா அதை பார்த்து தன் கணவரை அழைத்தாள்….. அவர் அங்கு அருகில் இருக்கும் மருத்துவரை அழைத்தார்… மருத்துவர் தன்னால் ஆன முயற்சியை செய்து சரி செய்தார்….

மருத்துவர் மருதநாயகத்திடம் என்ன நடந்தது என்று கேட்டார்…. அவர் சொன்னவுடன் மருத்துவர் ஒன்றை மருதநாயகத்திடம்சொன்னார்… அவரும் அவர் சொன்ன மாதிரியே செய்ய ஒத்துக்கொண்டார்….. மருதநாயகம் லட்சுமி அம்மாவிடம் அதை பற்றி சொன்னார்…அவரும் அதை சரி என கேட்டுக் கொண்டார்…

மறுபடியும் மருதநாயகம் நிலாவின் அறைக்கு வந்தார்… நிலா ம்மா… நீ எந்திரிச்சி வந்துடு டா… அம்மா அப்பக்காக கூட வேணாம் டா… அங்க ஒருத்தன் உனக்காக தப்பே செய்யாம ஜெயில இருக்கான் டா…. அவனுக்காக வந்துரு தங்கம்…என்று கூறி சென்று விட்டார்….

வெளியேறும் போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது…. அழைப்பை ஏற்று சொல்லு செல்வா என பேசிக் கொண்டே வெளியே சென்றார்….

ஐயா…. உங்களுக்கு ஒன்னு அனுப்பி இருக்கேன் அத பாருங்க என கூறி வைத்து விட்டது எதிர் முனை…..

என்ன அது என பார்த்தார் மருதநாயகம்…..

அந்த செய்தியில்….. சீக்கிரம் உண்மை தெரியும் உங்களுக்கு… தீர விசாரிக்கனும்….. மதியழகன் மேல தப்பு இல்லனு எல்லாரும் விரைவில் தெரிஞ்சிப்பிங்க.. என்று ஒரு அறிக்கையை யாரோ பிரஸ்க்கு அனுப்பி இருந்தனர்…..

யாரு அனுப்பினது என மக்கள் யோசனையில் இருக்க… மருதநாயகமும் யோசனையில் ஆழ்ந்தார்…..

யாரு அனுப்பி இருப்பா?????

போலீஸ் அலுவலகம்..

சிறை ஆய்வாளரிடம் மீடியா தன் கேள்விகளை கேட்டுக்கொள்கிறேன் கொண்டு இருந்தனர்….

சார் இப்ப ஒரு குற்றவாளிய இப்டி போட்டு அடிச்சி இருக்கீங்க.. என்ன பதில் சொல்ல போறீங்க…???

உங்க தனிபட்ட வெறுப்பை வன்மத்தை காட்டி இருக்கீங்க…. அந்த ஜெயிலர என்ன பண்ண போறீங்க????

அந்த குற்றவாளி உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதுனு சொல்றாங்க…. அதுக்கு நீங்க என்ன சொல்றிங்க…???

இப்ப ஒரு அறிக்கை வெளிய விட்டு இருக்காங்கள அது யாரு விட்டு இருக்கா.. அத பத்தி என்ன நினைக்குறிங்க….????

என்று அடுக்கு அடுக்காக கேள்விகளை அடுக்கினர் பத்திரிகையாளர்கள்……

சிறை அதிகாரி பத்திரிகையாளர்களிடம் ஒரு ஒரு கேள்விக்காய் பதில் சொன்னார்….

ஜெயிலரை சஸ்பெண்ட் பண்ணிட்டோம்… டீபிரோமோட் பண்ணி இருக்கோம்… அப்புறம் அவரு உயிருக்கு ஆபத்து இல்லை…. ஆனா சரி ஆக ரெண்டு மாசம் ஆகும்….

அந்த அறிக்கை யாரு விட்டாங்க தெரியல…. சீக்கிரம் கண்டு பிடிக்குறோம்…

அப்டினா இந்த குற்றவாளி இங்க மருத்துவமனைல தான் இருப்பரா….

அது தெரியல… அது பத்தி முடிவு எடுக்கல… என்ன முடிவுனு பிறகு சொல்றோம் என்று கூறி சென்றுவிட்டார்…..

இதை பார்த்த அந்த எக்ஸ்(X) மனிதன்… எங்க ஐயாவ அடிச்சிட்டீங்களா…. அவரு மேல தப்பு இல்லைனு சில நாள்ல நிரூபிக்குறோம்…. அதுக்கு அப்பறம் தப்பு செஞ்சவங்களுக்கு இருக்கு என்று தனக்குள்ளே பேசிக்கொண்டது……

யாரு அந்த எக்ஸ் (X) ??????? இனிவரும் எபியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!