Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 9.2

அதே நேரம் சந்தியா இன்றைக்கு முழுவதும் சூரியாவின் நடவடிக்கைகள் அனைத்தையும் அருகிருந்து கவனித்தவளின் மனதில் பழைய சலனத்தின் அலை மெதுவாக எழ உறக்கம் தொலைத்து வீட்டின் வராண்டாவில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

“இன்னைக்கு மார்ஸ்மாலோ அவங்க அம்மா முன்னாடி என்னை விட்டுக்குடுக்காம பேசுனது, அவங்க அப்பா கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சது, அவர் சொன்ன சில வார்த்தைகள் இதுல்லாம் சேர்ந்து என் மனசுல நான் மறக்க நினைச்ச நினைவுகளை மறுபடியும் நியாபகப்படுத்துது! நான் அவனை விட்டு விலகிப் போகணும்னு முயற்சி பண்ணிட்டிருக்கிற நேரத்துல அவனோட செய்கை எல்லாமே எனக்கு ஏன் வித்தியாசமா தோணுது?

 



Advertisement

இது எதுவுமே சரியில்லை. இதை நான் ஆரம்பத்துலயே சரியான கோணத்துல யோசிக்கலைனா மூனு வருசத்துக்கு முன்னாடி உடைஞ்சு போன மாதிரி இப்போவும் நான் தான் மனசு நொறுங்கி போய் நிக்கணும்…அவன் ஈஸியா நான் உன்னை ஃப்ரெண்டா தான் நினைச்சேனு சொல்லிட்டுப் போயிடுவான். இந்த தடவை அப்பிடி எதுவும் நடக்க நான் விடமாட்டேன். சூரியா என்னோட ஃப்ரெண்ட்…. ஃப்ரெண்ட் மட்டும் தான். தேவையில்லாம வேற எதையும் நான் யோசிக்க போறது இல்லை” என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டவள் சுமித்ரா அழைக்கவும் வீட்டினுள் சென்றாள்.

*******

[the_ad id=”6605″]

Advertisement

ஜே.கே.ஆர் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் கையெழுத்திடப் போகிற புரிந்துணர்வு ஒப்பந்தத்துகான வேலைகள் இருபுறமும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க சூரியாவும் சந்தியாவும் அந்த வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

Advertisement

 

சூரியா அந்த வேலை காரணமாக ஊண், உறக்கம் மறந்தான் என்றால் அவனது மற்றொரு செய்கை சந்தியாவுக்கு எரிச்சல் மூட்டியது. பெரிதாக ஒன்றும் இல்லை. வேலைக்கடுமையின் காரணமாகவும் அவனது பழக்கமே அது தான் என்பதாலும் அடிக்கடி அவன் காபி குடித்தது தான் அவளது எரிச்சலுக்கு காரணம். இந்த ஒப்பந்த வேலை காரணமாக அவள் பெரும்பான்மை நேரங்களை சூரியாவின் அலுவலக அறையிலேயே கழிக்க மணிக்கொரு முறை அவன் அருந்தும் காபியின் எண்ணிக்கை அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்தது.

 

Advertisement

“சூரியா இவ்ளோ காபி உடம்புக்கு நல்லது இல்லை” என்று மென்மையாக கூறிப் பார்த்தவள் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி அவனுக்கு காபி கொண்டு வரும் ஊழியரிடம் “அண்ணா! இந்த ரூம்குள்ள இனிமே நான் சொல்லாம காபி வரவே கூடாது” என்று கண்டிப்பாக கூறிவிட்டாள்.

 

ஆனால் சூரியா தான் அவனது நீண்டநாள் பழக்கத்தை விட இயலாமல் “பிரவுனி ஒரே ஒரு காபி பிளீஸ்” என்று கெஞ்சினால் தன் புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு “இந்த பாயிண்டை ஆட் பண்ணுனா மிஸ்டர் மார்க் ஓகே சொல்லுவாரானானு பாருங்க சார்” என்று பேச்சை மாற்றியவளிடம் அதற்கு மேல் விவாதிக்க அவனும் விரும்பவில்லை.

 

அவள் அவனது உடல்நலனில் அக்கறை காட்டினாள் என்றால் சூரியாவும் வேலையில் மூழ்கி சந்தியா அவளது படிப்பில் கவனம் செலுத்தாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். வேலை காரணமாக இருவரும் வீடு திரும்ப நேரமாகி விடுவதால் அவளால் வகுப்புக்கும் செல்ல இயலாத நிலை. எனவே அவளை அலுலகத்துக்கே புத்தகங்களை கொண்டு வரச் சொல்லிவிட்டவன் அவன் வேலையை கவனிக்கும் நேரத்தில் அவளைப் படிக்க சொல்லிவிடுவான்.

 

கம்பெனியின் ஆடிட்டர் எப்பொழுதுமே அலுவலகநேரம் முடிந்து நீண்டநேரம் கழித்து தான் வீடு திரும்புவது வழக்கம் என்பதால் அவரிடமே சந்தியாவின் சந்தேகங்களை கேட்டுக்கொள்ள சொன்னான். சந்தியாவும் வகுப்புக்கு சென்றால் வெறும் பவர்பாயிண்ட் பிரசண்டேசன் தான் கவனிக்கப் போகிறோம்; அதற்கு ஒரு அனுபவம் வாய்ந்த ஆடிட்டரிடம் தனது சந்தேகங்களைக் கேட்பது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணி அவனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டாள்.

 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாக அக்கறை, நேசத்தைக் காட்டிக் கொண்டாலும் இருவரும் சேர்ந்து வேலையைப் பகிர்ந்து கொண்டதால் ஒருவரின் நலனை மற்றொருவர் பார்த்துக் கொள்வது நண்பர்கள் என்ற முறையில் தமது கடமையே என்று தத்தம் செயல்களுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டனர்.

 

சந்தியா என்ன தான் வேலையில் மூழ்கினாலும் அது தனது படிப்பை பாதிக்க கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாள். வாரவிடுமுறையை இன்ஸ்டிட்டியூட்டின் நூலகத்திலேயே கழித்தாள் அவள். அப்படி தான் அந்த ஞாயிறும் இன்ஸ்டிட்டியூட்டுக்கு செல்ல தயாரானாள் அவள்.

 

“சுமிக்கா நான் இன்னைக்கு ஓல்ட் கொஸ்டீன் பேப்பர்ஸ் ஒர்க் அவுட் பண்ணி பார்க்க போறேன். சோ வீட்டுக்கு வர லேட் ஆகும். நீ மதியம் எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டிடு…நான் கிளம்பறேன்” என்றவாறு அணிந்திருந்த த்ரீ போர்த் டாப்பின் ஸ்லீவை இழுத்துவிட்டபடி பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டபடி கிளம்பினாள்.

 

ஸ்கூட்டியின் சாவியை கையில் சுழற்றியபடி வந்தவள் அப்போது தான் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த சூரியாவின் மீது மோதி தடுமாறிவிட்டு அவன் கையைப் பற்றியபடி கீழே விழாமல் சமாளித்து நின்றாள். சூரியா அவளை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தபடி “சண்டே அன்னைக்கு இவ்ளோ வேகமா மேடம் எங்கே கிளம்புறிங்க?” என்று கேட்க

[the_ad id=”6605″]

சந்தியா அவனது கையை விட்டவள் “உன் கேள்வியே தப்பு மார்ஸ்மாலோ. நான் வேகமா கிளம்பலை.. நீ தான்டா வேகமா வந்து என்னை இடிச்சிட்ட… நிலை உயரத்துக்கு வளர்ந்துருக்கல்ல, எதிர்ல ஒருத்தி வர்றது கூடவா உன் கண்ணுக்கு தெரியலை?” என்று கடுப்புடன் பதில் கேள்வி கேட்க

 

சூரியா கிண்டலாக “என்ன பண்ணுறது பிரவுனி, நான் நடக்குறப்போ என் எதிர்ல வர்றவங்க பார்த்து நேரா தான் நடக்கிறேன். பட் போற பாதையில வர்ற ஃபைவ் ஃபீட் எறும்புலாம் என் கண்ணுக்கு தெரியுறது இல்லை” என்று தன் உயரத்துக்கு அவள் எறும்பு போல என்று கேலி செய்ய சந்தியா கடுப்புடன் தனது பேக்கால் அவனது முதுகில் பொத் பொத்தென்று அடி மொத்தினாள்.

 

அந்த சத்தம் கேட்டு சுமித்ரா வரவே சந்தியா அடிப்பதை நிறுத்திவிட்டாள். சுமித்ரா சூரியாவிடம் “ஹாய் அண்ணா! இன்னைக்கும் எதாவது வேலை இருக்குதா?” என்றபடி அவனிடம் பேச ஆரம்பிக்க

 

சூரியா “இல்லை சுமி! கொஞ்சநாளா இந்த ஒர்க் டென்சன்ல எனக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் ஆன மாதிரி தோணுது. அதான் பிரவுனி கூட சேர்ந்து ஊரை சுத்துனா கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்னு நினைச்சு அவளை கூட்டிட்டு போக வந்தேன்” என்று கூற சுமித்ரா கேள்வியுடன் சந்தியாவை பார்க்க

 

அவளோ “ஹலோ! நீ ஃப்ரீயா இருக்கலாம். நான் இன்னைக்கு ரொம்ப பிஸி. எனக்காக என் ஃப்ரெண்ட் இன்ஸ்டிட்டியூட் லைப்ரரில வெயிட் பண்ணிட்டிருப்பா. நீ தனியா ஊரைச் சுத்திக்கோ மார்ஸ்மாலோ” என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு பேக்கை தோள்பட்டையிலிருந்து உடலின் குறுக்கே அணிந்து கொண்டவள் அங்கிருந்து நகர முயல சூரியா அந்த பேக்கின் வாரை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள சந்தியாவால் நகர முடியவில்லை. சுமித்ரா அதைப் பார்த்து பக்கென்று சிரித்துவிட்டாள்.

 

இழுத்து இழுத்து பார்த்தவள் அவளால் சிறிதும் நகர முடியாமல் போகவே அவன் புறம் திரும்பி “இம்பார்ட்டெண்ட் கொஸ்டீன்லாம் ஒர்க் அவுட் பண்ணி பார்க்கப் போறோம்டா. நெக்ஸ்ட் வீக் சுமிக்கா மேல சத்தியமா நம்ம ஜாலியா ஊர் சுத்துவோம்” என்று அவனை தாஜா செய்து வகுப்புக்குச் செல்ல முயன்றாள்.

 

ஆனால் சூரியா பிடிவாதமாக என்னுடன் வந்தால் தான் ஆயிற்று என்பது போல நின்றபடி “உன் பிராமிஸ் வச்சு ஊறுகா கூட போட முடியாது பிரவுனி. அடுத்த வாரமும் நீ எதாவது சாக்குபோக்கு சொல்லுவ. ஒழுங்கா என் கூட கிளம்பு. எனக்கும் உன் படிப்பு மேல அக்கறை இருக்கு பிரவுனி. ஆனா இப்பிடி ஓவரா படிச்சேனு வை, ஒரு நாள் உன்னோட மூளை உருகி காது வழியா வந்துடப் போகுது. மனுசங்க கொஞ்சம் ரிலாக்சாவும் இருக்கணும். சோ இப்போ நீ என் கூட வர்ற” என்று கூறி அவள் பேக் வாரை பிடித்தே இழுத்துச் செல்ல

 

சந்தியா பொம்மை போல நகர்ந்தவள் சடன் பிரேக் போட்டு நின்றபடி “ஐயா தெய்வமே! நான் வர்றேன். அதுக்குனு இப்பிடி திருவிழாவுல தேரை வடம்பிடிச்சு இழுத்துட்டுப் போற மாதிரி என்னை இழுத்துட்டுப் போகாதே” என்று கூறிவிட்டு அவளுக்காக இன்ஸ்டிட்டியூட் நூலகத்தில் காத்திருக்கும் தோழிக்கு போன் செய்தாள் அவள்.

 

அழைப்பை ஏற்றவளிடம் “ஹலோ ரெஜி! ஐ அம் சாரிடி என்னால இன்னைக்கு இன்ஸ்டிட்டியூட்டுக்கு வர முடியாது” என்று சந்தியா கூற

 

மறுமுனையில் அவள் என்ன கூறினாலோ சந்தியா கொஞ்சலாக “கோச்சிக்காதே ரெஜி…. சாரிடி! ஐ நோ, நீ எனக்காக சர்ச்சுக்கு கூட போகாம இன்ஸ்டிட்டியூட்டுக்கு வர்றேனு சொன்னடி. ஆனா திடீர்னு என் ஃப்ரெண்டுனு ஒரு ஆறடி துயரம் வந்து என்னை இழுத்துட்டுப் போகும்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று தோழியை சமாதானம் செய்தவாறே சூரியாவை முறைத்தபடி போனை வைத்தாள்.

[the_ad id=”6605″]

“பார்த்தியா, உன்னால என் ஃப்ரெண்டுக்கு குடுத்த பிராமிஸை என்னால காப்பாத்த முடியலை” என்று அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள

 

சூரியா “அவங்க ஃப்ரெண்டுனா அப்போ நான் யாரு?” என்று சட்டென்று கேட்டுவிட சந்தியா திகைத்துவிட்டாள். சூரியா அவள் பதில் கூறாமல் நிற்பதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டவன் “அது சரி! உனக்கு நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சதும் நான் முக்கியம் இல்லாம போயிட்டேன்” என்று விட்டேற்றியாக கூற சந்தியா மட்டுமன்றி சுமித்ராவும் என்னடா இவன் இப்படி பேசுகிறான் என்று நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

சந்தியா அவன் முகம் வாடுவதைக் கண்டு பொறுக்காதவளாய் “நீ எனக்கு முக்கியம் இல்லைனு யார் சொன்னாங்க மார்ஸ்மாலோ? நான் விளையாட்டுக்கு அப்பிடி சொன்னேன். என் லைஃப்ல எத்தனை ஃப்ரெண்ட்ஸ் வந்தாலும் உன்னோட இடத்தை யாருமே பிடிக்க முடியாது. ஏன்னா நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் இல்ல. நீ என்னோட……………” என்று ஆரம்பித்தவள் தனது பேச்சு போகும் திசையை அறிந்தவளாய் சட்டென்று நிறுத்த

 

சூரியா அவளது பேச்சால் கவரப்பட்டவனாக அவள் கண்ணை ஆழ்ந்து நோக்கி “நான் உன்னோடனு சொல்லிட்டு நிறுத்துனா என்ன அர்த்தம் பிரவுனி?” என்று விஷமத்துடன் கேட்க சந்தியா அவனது கண்ணில் விஷமத்தனத்தையும் தாண்டி ஏதோ ஒரு ஆர்வம் மின்னுவதை முதல் முறையாக கண்டாள்.

 

அது என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்தவளுக்கு அதற்கான விடை புலப்படவே இல்லை. நம் மனதுக்கு நெருங்கியவர்கள் பல நேரங்களில் தங்கள் மன உணர்வுகளை வாய் வார்த்தைகளாய் வெளிப்படுத்துவதில்லை. அவர்களின் மவுனமும், கண்களும் கூட நம் மீதான அவர்களின் நேசத்தை உணர்த்த வல்லவையே! இதைப் புரிந்து கொள்வதற்கான நேரம் இன்னும் சந்தியாவுக்கு வரவில்லை.

 

சாரல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!