Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இமை மூடும் விழியும் நீ

இமை மூடும் விழியும் நீ -அறிமுகம்

ஹாய் டியர்ஸ்!
நான் ரிஷா.பலருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் ஒரு சிறிய அறிமுகம். நான் இந்த தளத்திற்கு புதிது.ஆனால் எழுத்திற்கு அல்ல.இதுவரை பத்து கதைகள் எழுதியுள்ளேன்.கடந்த இரண்டு வருடங்களாக எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.இப்பொழுது இந்த போட்டியின் மூலம் எழுத்தாளராக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

இதே போல இன்னும் ரெண்டு லைன் எழுதினா கட்டுரை எழுதுற ஃபீல் வந்துடும்.அதுனால பேச்சு வழக்குக்கே வந்துடுவோம்.

நவ் ஸ்டோரி இன்ட்ரோ

“இமை மூடும் விழியும் நீ” இது தான் கதை பெயர்.



Advertisement

காதல் – எங்கே எப்போ யாருக்கு யார் மேல் வரும்னு சொல்ல முடியாது.அதே போல ஒருமுறை மட்டும் தான் வந்தே தீரும்னும் சொல்ல முடியாது.

காதல் ஒரு மாயைன்னு சரியா தான் சொல்லி இருக்காங்க.ரொம்ப அறுக்காம பாய்ன்ட்டுக்கு வந்துடுறேன்.

இதுவரைக்கும் யாரும் சொல்லாத காதலை நான் சொல்ல போறது இல்ல.ஆனா நான் சொல்ல இல்ல கொடுக்க போற காதல் கதை நிச்சயம் படிக்கும் உங்களுக்கு ஒரு நிறைவை கொடுக்கும்.

Advertisement

நிச்சயம் ஒரு ஃபீல் குட் கதை தான்.நம்பி படிக்கலாம்.எனக்கும் டீசருக்கும் ஆகாது.அதனால் நேரா முதல் அத்தியாயத்துடன் உங்களை வரும் திங்கள்
அன்று சந்திக்கிறேன்.

Advertisement

என்னுடன் விழியவளும் இமையவனும் விரைவில் உங்களை சந்திப்பார்கள்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!