Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 8

பிடித்தம் 8

கிருஷ்ணமூர்த்தி நண்பர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்கு செல்லும் வழியில் யோசித்துக் கொண்டே வந்த மாலினி சரியாக வீட்டின் உள்ளே வந்ததும் பிரகாசித்த முகத்துடன், “மூர்த்தி என்னை ஆயா வீட்டுக்கு கூட்டிட்டு போனது ACP சார் தானே?” என்றாள்.

 

கிருஷ்ணமூர்த்தி, “ஆமா” என்று கூற,



Advertisement

 

அவள் செல்ல முறைப்புடன், “என்னிடம் ஏன் சொல்லலை?” என்று வினவினாள்.

 

Advertisement

அவனோ அலட்டிக்கொள்ளாமல், “நீ என்னிடம் கேட்கலையே!” என்றான்.

Advertisement

 

“ஏன் கேட்டால் தான் சொல்லுவியா? அவர் என்னை கண்டு பிடிக்கச் சொன்னதை கேட்ட தானே!”

 

Advertisement

“அண்ணா உன்னை தானே கண்டுபிடிக்க சொன்னாங்க”

 

இப்பொழுது அவள் நிஜமாகவே அவனை முறைக்க அதை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.

 

ராஜசேகர், “எப்படி சிஸ்டர் வெற்றி சாரை மறந்தீங்க?”

 

மாலினி, “ACP வெற்றிவேல் என்ற பெயரும் அவர் செய்த உதவியும் நியாபகத்தில் தான் இருக்குது ஆனா அவர் முகம் தான் லைட்டா மறந்திருச்சு” என்று சிறிது அசடு வழிந்தாள்.

 

பிருந்தா, “அந்தாளு சொன்னது போல் வலி சரியானதும் கண்டு பிடிச்சிட்டியே!”

 

மாலினி சிறு முறைப்புடன், “அவர் ஒரு ACP.. மரியாதையுடன் பேசு”

 

“பார் டா!” என்று பிருந்தா கிண்டலாக கூற,

 

மாலினி அதிகமாக முறைத்தபடி, “தேவை இல்லாம ஓட்டாத.. எனக்கு கோபம் வரும்”

 

“வரட்டும் எனக்கென்ன?”

 

“அது உன்னை தான் பதம் பார்க்கும்”

 

“அப்படியா!!!”

 

[the_ad id=”6605″]

 

“ஜில்ஸ் (ஜில்லு, ஜில்ஸ் பிருந்தாவின் பட்டப் பெயர்கள்) வேணாம்.. அவர் ஒரு பொறுப்பான நல்ல அதிகாரி.. அவரை இப்படி பேசுறது சரி இல்லை”

 

“நான் எங்கே அவரை பேசினேன்? உன்னை தானே மா ஓட்டுறேன்”

 

“அதில் அவரை தானே பேசுற!”

 

“எனக்கு உன் லாஜிக் புரியலை.. இந்த அளவிற்கு அவருக்காக பரிந்து பேசினால் நான் வேற என்ன சொல்லுவேன்?”

 

“லூஸு.. இது நீ நினைப்பது போல் இல்லை.. எனக்கு அவர் மேல் மதிப்பும் மரியாதையும் இருக்குது.. அதனால் வந்த அக்கறை இது”

 

“பார்க்கலாம்.. பார்க்கலாம்”

 

“என்னடி பார்க்கலாம்?” என்று மாலினி சற்று கோபத்துடனே வினவினாள்.

 

“கிருஷ்ணாவுக்கு அப்பறம் நீ இந்தளவிற்கு பரிந்து பேசுறது இவருக்கு தான்”

 

“போடி லூசு” என்றுவிட்டு திரும்ப அங்கே இவர்கள் மட்டுமே இருந்தனர்.

 

பிருந்தா, “நீ என்னோட சண்டை போட ஆரம்பித்ததும் அவன்க கிளம்பிட்டான்க.. கிருஷ்ணாவை யாரோ கூப்பிட்டாங்கனு அவன் போனதும் இவன்களும் கிளம்பிட்டான்க”

 

கிருஷ்ணமூர்த்தியை தேடிய மாலினி அவன் வீட்டின் பின் புறத்தில் இருப்பதை பார்த்து அங்கே சென்றாள்.

 

பிருந்தா, “நமக்கு சோறு தான் முக்கியம்” என்று தனக்குத் தானே கூறியபடி கிருஷ்ணமூர்த்தியின் அன்னையை தேடிச் சென்றாள்.

 

“ஏலே சொக்கா! அங்க என்னடா பண்ணிட்டு இருக்கிறவ? உன்னை அம்மா அப்பவே மச்சான் வீட்டுக்கு போக சொல்லுச்சே! இன்னும் நீ கிளம்பலை? நீ இங்கே சுத்தீட்டி இருக்கிறதை பார்த்துச்சு ஆஞ்சுபுடும்.. ஓடுலே!” என்று வேலையாளை சிறு மிரட்டலுடன் ஏவிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி அருகே மாலினி சென்று நின்றாள்.

 

அந்த வேலையாள், “இல்ல (அண்)ணா………” என்று ஏதோ விளக்கம் சொல்ல வர,

 

கிருஷ்ணமூர்த்தி, “சாக்குபோக்கு சொல்லாம முதல்ல கிளம்புல” என்றதும் அந்த வேலையாள், “சரி (அண்)ணா” என்றுவிட்டு வேகமாக கிளம்பினான்.

 

அவன் அகன்றதும் கிருஷ்ணமூர்த்தி மாலினியை ‘என்ன?’ என்பது போல் பார்க்க,

 

அவள், “இங்கே வந்ததும் பக்கா கிராமத்தானா எப்படி மாறிடுற? பேச்சுயெல்லாம் டோட்டல்லா மாறிடுது!”

 

அவன் மென்னகையுடன், “இந்த மண்ணோட மகிமை அது” என்றவன், “ஆனா இப்பவும் உங்க கூடலாம் எப்போதும் போல் தானே பேசுறேன்”

 

“ஹ்ம்ம்.. எனக்கு உங்க ஊர் லாங்குவேஜ் பிடிச்சிருக்குது”

 

“ஹ்ம்ம்.. திருநெல்வேலி தமிழ் தனியா தெரியும்”

 

“எந்த ஊர் பாஷையும் தனியா தான் தெரியும்”

 

[the_ad id=”6605″]

 

“அது சரி தான்.. ஆனா எங்க ஊர் பாஷைக்கு தனி சிறப்பு உண்டு.. யாரையும் மரியாதை குறைவா பேசமாட்டோம்.. எல்லோரையும் ஒரு உறவு முறையில் தான் பேசுவோம்.. தெரியாதவங்களை கூட அண்ணாச்சி அத்தாச்சி அக்கா னு தான் கூப்பிட்டு பேசுவோம்.. கூடவே எங்க பேச்சில் கூட வீரம் வெளிப்படும்.. வீரம் விளைந்த பூமி இது”

 

“பார் டா! ஊர் பெருமையை பேசும் போது முகத்தில் தனி ஒளிவட்டம் தெரியுது”

 

“சரி நீ எதுக்கு வந்த? அதை சொல்லு”

 

“உன் மச்சான் வீடு எங்கே இருக்குது?”

 

“எந்த மச்சான்?”

 

“உனக்கு ஊரெல்லாம் மச்சான் இருக்காங்க தான்.. நான் கேட்கிறது நம்ம விஜி அக்காவை கல்யாணம் செய்துக்க போற மச்சானை”

 

“எதுக்கு?”

 

“நான் அங்கே போகணும்.. எனக்கு உடனே ACP சாரை பார்க்கணும்” என்றதும் சுற்றி பார்த்த கிருஷ்ணமூர்த்தி சிறு முறைப்புடன், “இது சென்னை……………….”

 

“இல்லை.. அதானே சொல்லப் போற! ரெண்டு நாளா இதை தானே டா சொல்லிட்டு இருக்கிற?”

 

“நீ தானே சொல்ல வைக்கிற!”

 

மாலினி முறைப்புடன், “இப்போ இதை சொல்றதுக்கு நான் என்ன டா பண்ணிட்டேன்?”

 

“இது கிராமம் பார்த்து பேசணும்……………”

 

மாலினி காதை தேய்த்தபடி, “இதை கேட்டு கேட்டு என் காதே தேஞ்சிடும் போல.. போனில் பேசும் போதெல்லாம் அருணாவோட (அவளின் தந்தை அருணாச்சலம்) பினிஷிங் டச் இது தான்”

 

அவன் கண்டிக்கும் குரலில், “அப்பாவை பெயர் சொல்லிக் கூப்பிடாதே”

 

“போடா புஸ்ஸி (அவளது அன்னை புஷ்பா) சப்ஸ்டியூட்”

 

“மாலினி” என்று கண்டிப்புடன் அழைக்க, அவளோ அங்கிருந்த துணி துவைக்கும் கல்லில் மீது அமர்ந்து காலை ஆட்டியபடி, “என்ன?” என்றாள்.

 

அவனின் தீர்க்கமான பார்வையில் மாலினி, “ரொம்ப பண்ணாத டா.. சுத்தி முத்தி பார்த்துட்டு தான் கேட்டேன்..” என்றவள் குரலை சற்று குறைத்து, “இப்போ என்னை அங்க கூட்டிட்டு போக முடியுமா முடியாதா?”

 

“முடியாது”

 

அவள் அவனை முறைக்க,

 

அவன், “மாலினி இது விளையாட்டு இல்லை.. சென்னை மாதிரி இங்கே யாருக்கு வந்த விருந்தோ னு இருக்க மாட்டாங்க.. அதுவும் அந்தி சாயுற நேரம் ஒரு பொண்ணு போனா கண்டிப்பா எல்லோரும் கவனிப்பாங்க..”

 

“தனியா போனா தானே! அதான் துணைக்கு உன்னை கூப்பிடுறேன்”

 

“எப்போ இருந்து நீ இப்படி ஆன?”

 

“என்ன?”

 

“உன் நிதானமும் சிந்திக்கும் திறனும் எங்கே போச்சு?”

 

அவள் அவனை முறைக்க, அவன், “நீயே யோசி”

 

சற்று யோசித்தவள், “ஓ! உன்னை பொண்ணு வீட்டு ஆளா தான் பார்ப்பாங்க.. ஸோ தேவை இல்லாத டென்ஷன் னு சொல்றியா!” என்றவள் ஒரு நொடி யோசித்து, “அப்போ ACP சாரை கோவிலுக்கு வரச் சொல்லு” என்றாள்.

 

“உனக்கு எதுக்கு இப்போ இவ்ளோ பிடிவாதம்?”

 

“பின்ன! அவர் என்னை கண்டுபிடிக்க சொல்லிட்டு போய்ட்டார்.. நான் கண்டுபிடிச்சதை உடனே சொல்ல வேணாமா? என் மெமரி பவரை ப்ரூவ் பண்ணனும்.. தென் அவர் எனக்கு எவ்ளோ பெரிய உதவி செய்திருக்கிறார்.. அவரை நான் மறந்துட்டேன் னு அவர் பீல் பண்ணக் கூடாதே.. நான் மறந்தது தப்பு தானே! அதுக்கு அவரிடம் சாரி சொல்லணும்..”

 

[the_ad id=”6605″]

 

“இதுக்கு போனில் பேசினா போதாதா?”

 

“எனக்கு நேரில் பார்த்து தான் பேசணும்”

 

“மாலினி!”

 

“மூர்த்தி நான் யோசிக்காம பேசலை.. எனக்கு அவரிடம் ஒன்னு கேட்கணும்” என்றாள்.

 

“என்ன கேட்கணும்?”

 

“அவர் ஏன் இந்த விளையாட்டை என்னிடம் விளையாடினார் னு கேட்கணும்” என்ற போது அவள் குரலில் தீவிரம் இருந்தது.

 

அவளது குரலில் தெரிந்த தீவிரத்தில் தனது தோழியின் சிந்திக்கும் திறன் மழுங்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டாலும் கிருஷ்ணமூர்த்தியின் மனதில் தோழியின் சிறு தடுமாற்றம் உறுத்தத் தான் செய்தது. பிருந்தா கிண்டல் செய்தது போல் இவன் மனதில் சந்தேகம் எழவில்லை ஆனால் எப்பொழுதும் எந்த விஷயமாக இருந்தாலும் நிதானமாக அலசி ஆராய்ந்து செயல்படும் மாலினி தற்போது வெற்றிவேலை சந்திப்பதில் அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்றே அவனுக்கு தோன்றியது. அதன் பொருட்டே இந்த உறுத்தல்.

 

நண்பனின் எண்ணத்தை புரிந்தது போல் அவள், “யானைக்கும் அடி சறுக்கும் னு சொல்றது இல்லையா! அது போல் ஏதோ ஒரு தடவ கொஞ்சம் யோசிக்காம கேட்டுட்டேன்.. விடேன் டா.. அவரை மறந்தது எனக்குள்ள ஒரு கில்ட்டி பீலிங்.. அதான் உடனே பார்த்து பேசணும் னு தோணிச்சு.. மத்தபடி என் வைத்துக்குள்ள  எந்த பட்டாம்பூச்சியும் பறக்கலை”

 

“உனக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற பீல் வந்துதுன்னு நான் சொன்னேனா?”

 

“அப்பறம் ஏன் என்னை தொண்டை தண்ணி வத்த பேச வைக்கிற?”

 

“விளக்கம் சொல்லு னு நான் கேட்டேனா?”

 

அவனது சட்டை பையில் இருந்து கைபேசியை எடுத்தவள், “மச்சான் நம்பரை எப்படி சேவ் பண்ணி வச்சிருக்கிற?”

 

கைபேசியை அவளிடமிருந்து பிடுங்கியவன் வெற்றிவேல் எண்ணை அழைத்தான்.

 

அழைப்பை எடுத்த வெற்றிவேல், “என்ன கிருஷ்ணா உன் பிரெண்ட் என்னை கண்டு பிடிச்சுட்டாங்களா? என் கிட்ட பேசணுமா?” என்றான்.

 

அதிர்ச்சியை தன்னுள் மறைத்தவன், “உங்களிடம் நேரில் பேசணுமாம்” என்றான்.

 

“இப்பவா?”

 

“ஆமா”

 

“இது சரி வருமா?” என்று வெற்றிவேல் தயங்க,

 

கிருஷ்ணமூர்த்தி மாலினியை முறைத்தபடி, “சொன்னா கேட்டால் தானே!” என்றான்.

 

வெற்றிவேல் மென்னகையுடன், “சரி கோவிலுக்கு கூட்டிட்டு வா” என்றான்.

 

இருவரின் எண்ண போக்கை வியந்தபடி, “சரி ணா” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

 

[the_ad id=”6605″]

 

—————————————————————————————————————————————————–

 

அன்று மாலை கிருபாகரனின் அழைப்பை ஏற்று மித்ராணியும் அவளது அன்னை கமலாவும் கிருபாகரன் வீட்டிற்கு வந்தபோது கிருபாகரனின் மனைவி மல்லிகா மென்னகையுடன் வரவேற்க,

 

“எப்படி டா இது நடந்தது? எப்படி?” என்று கிருபாகரன் தனது அலுவலக அறையில் கத்திக் கொண்டிருந்தார். புகழ்வேந்தன் ‘சிறந்த தொழிலதிபர்’ விருது பெற்ற விஷயம் அறிந்ததில் இருந்து இப்படி தான் குதித்துக் கொண்டிருக்கிறார்.

 

 

கிருபாகரன் பேசுவது தெளிவாக கேட்கவில்லை என்றாலும் அவரது குரல் வெளியே இருந்தவர்களை எட்டியது.

 

மல்லிகா இருவருக்கும் அருந்த பழச்சாறு கொடுத்தார்.

 

மித்ராணி, “உங்களுக்கு?” என்று கேட்க,

 

அவர் மென்னகையுடன், “இப்போ தான் டா குடிச்சேன்” என்றார்.

 

கமலா, “என்னாச்சு அண்ணி? அண்ணா ஏன் கோபமா இருக்காங்க?”

 

“தெரியலையே” என்றார் மெல்லிய குரலில்.

 

‘வார்த்தைக்கு வலிக்குமோ னு இப்படி அதிர்ந்து பேசாத அத்தை எப்படி தான் இந்த மாமாவை சமாளிக்கிறாங்களோ’ என்று எப்பொழுதும் போல் இன்றும் மனதினுள் நினைத்தவள் இன்று அதை அவரிடமே கேட்டாள்.

 

மித்ராணி, “பூ போன்ற நீங்க எப்படி அத்தை இந்த மாமாவை சமாளிக்கிறீங்க?”

 

மென்னகையை மட்டுமே அவர் பதிலாக தர, அவரது கண்களை உற்றுப் பார்த்த மித்ராணி ‘இவங்க சிரிப்பு மனதில் இருந்து வரலையோ?’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள். ஆனால் அதற்கு மேல் கேள்வி கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியானாள்.

 

கமலா எதிர்பார்ப்புடன், “அண்ணா என்ன விஷயம் பேசனும்னு வர சொன்னார் னு தெரியுமா அண்ணி?” என்று வினவினார்.

 

“என்னிடமும் சொல்லலை.. அவங்க மூணு பேரும் நீங்க வரதுக்கு கொஞ்ச முன்னாடி தான் வந்தாங்க.. ஏதோ போன் வரவும் ஆபீஸ் ரூம் போனாங்க.. இருங்க.. நான் போய் கூட்டிட்டு வரேன்” என்றபடி நகர பார்க்க,

 

கமலா, “அவசரம் இல்லை அண்ணி.. அவங்க வரட்டும்” என்றார்.

 

“நான் போய் பார்க்கிறேன்” என்றபடி எழுந்த மித்ராணி அன்னையின் அழைப்பை பொருட்படுத்தாமல் அலுவலக அறை நோக்கிச் சென்றாள்.

 

 

 

 

கிருபாகரன், “நீங்க ரெண்டு பேரும் என்னடா பண்ணிட்டு இருக்கிறீங்க? பாரு ஒரே வருஷத்தில் எப்படி வளர்ந்து நிக்கிறான்! எப்படி இப்படி பெருசா வளர்ந்தான்? அதை கவனிக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று அவர் திட்டிக் கொண்டே போக,

 

மனோஜ் அமைதியாக இருக்க, பிரசாத், “சும்மா எங்களை சொல்லாதீங்க.. இந்த முறை இந்த அவார்டை வாங்குவேன் னு போன அவார்ட் பங்க்ஷன்லேயே அவன் சொன்னான்.. அதில் இருந்தே அவனை கவனிக்கச் சொல்லி நானும் மனோவும் சொன்னோம், நீங்க தான் பொடி பையன் அது இது னு சொல்லி அலட்சியமா இருந்துட்டீங்க”

 

[the_ad id=”6605″]

 

கிருபாகரன் அவனை முறைக்க, பிரசாத், “என்னை முறைச்சு ஒன்னும் ஆகபோறதில்லை.. அவன் சொன்னான்.. சொன்னதை செஞ்சுட்டான்”

 

“என்ன டா அவனுக்கு குடை பிடிக்கிற?”

 

“நான் ஒன்னும் குடை பிடிக்கலை.. உண்மை நிலவரத்தை சொன்னேன்.. அவன் அவார்ட் வாங்கியதில் எனக்கும் ஆத்திரம் அவமானம் எல்லாம் இருக்குது தான் ஆனா உங்களவுக்கு அதிர்ச்சி பெருசா இல்லை.. அவன் தனி காட்டு ராஜாவா நினைத்ததை நடத்தி முடிக்கிறான்.. நீங்க எங்களை விடுறது இல்லை”

 

“என்ன டா வாய் நீழுது?”

 

“உண்மையை சொன்னா வாய் நீளுதா?”

 

“பிரசாத்” என்று தம்பியை அடக்கிய மனோஜ் தம்பியை தந்தையிடமிருந்து காக்கும் பொருட்டு பேச்சை மாத்தினான்.

 

மனோஜ், “அப்பா அவன் எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணியிருக்கிறான்.. அவனோட வளர்ச்சி இந்த ஒரு வருஷத்தில் வந்தது இல்லை.. முன்னாடியே பிளான் பண்ணி நம்ம கவனத்தை கவராத வகையில் வேற வேற பெயரில் சின்ன சின்னதா ஒவ்வொரு பீல்டிலும் கால் பதிச்சு இருந்திருக்கிறான்.. இப்போ நேரம் பார்த்து எல்லாத்தையும் ‘வேந்தன் குரூப் ஆஃப் கம்பனீஸ்’ னு இணைச்சிட்டான்.. அவன் நிறைய நல்ல காரியம் வேற பண்றான் பா.. அதையும் சேர்த்து தான் இந்த அவார்ட் கொடுத்து இருக்கணும்”

 

“இப்போ வந்து சொல்லு” என்று கிருபாகரன் எரிந்து விழ,

 

அப்பொழுது ஒப்புக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மித்ராணி, “என்ன மாமா ரொம்ப ஹாட்டா இருக்கிறீங்க? நான் ஒரு குட் நியூஸ் சொல்ல வந்தேன்”

 

அப்பொழுது தான் தங்கையையும் தங்கை மகளையும் வர சொன்னது நினைவிற்கு வர சட்டென்று முகத்தை இயல்பிற்கு கொண்டு வந்து புன்னகையுடன்,  “கன்க்ராட்ஸ் டா” என்றார்.

 

“அதானே உங்களுக்கு தெரியாம ஒரு விஷயம் இருக்குமா? என்ன அதை நீங்க எங்களிடம் சொல்ல மாட்டீங்க” என்று பொடி வைத்து பேசியவள் கிருபாகரன் முகத்தில் நொடி பொழுது வந்து போன மாற்றத்தை கவனிக்காதது போல் கவனித்தாள்.

 

கிருபாகரனின் முகத்தில் கவனமாக இருந்தவள் மனோஜ் முகத்தில் வந்து போன சிறு பதற்றத்தை கவனிக்கத் தவறினாள்.

 

கிருபாகரன் அவளது பேச்சை கண்டுகொள்ளாதது போல், “உன்னை நினைத்து பெருமையா இருக்குது டா.. வந்த முதல் வருஷத்திலேயே ‘பெஸ்ட் டிசைனர்’ அவார்ட் வாங்கிட்ட” என்று பேச்சை மாற்றினார்.

 

‘இன்னும் எத்தனை நாள் தப்பிக்கிறீங்க னு பார்க்கிறேன்’ என்று மனதினுள் நினைத்தவள் வெளியே புன்னகையுடன் “தேங்க்ஸ் மாமா” என்றாள்.

 

பிரசாத், “கன்க்ராட்ஸ் மித்து” என்றபடி புன்னகையுடன் கை நீட்ட,

 

அவளும் புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றபடி அவனுடன் கை குலுக்கினாள்.

 

அதன் பிறகே மனோஜ், “கன்க்ராட்ஸ் மித்து” என்றபடி கையை நீட்டினான்.

 

அவள் விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ் மனோ” என்றபடி மனோஜுடன் கை குலுக்கினாள்.

 

பிரசாத் மனதினுள் கோபத்துடன், ‘அதானே! என்னுடன் சிரித்து பேசினா உனக்கு பொறுக்காதே! இருடா எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தான்.. முதல்ல உன்னை என் மித்து கிட்ட இருந்து பிரிச்சிட்டா அப்பறம் நான் ஈஸியா அவளை நெருங்கிடுவேன்’ என்று கருவிக் கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

தந்தை எதைப் பற்றி பேசப் போகிறார் என்பதை அறிந்திருந்தாலும் அறியாதது போல் பிரசாத், “ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்களே பா! என்ன விஷயம்?” என்றான்.

 

கிருபாகரன் புன்னகையுடன், “எல்லாம் நல்ல விஷயம் தான்” என்றவர் மித்ராணியை பார்த்து, “கமலா வந்திருக்கிறாளா டா?”

 

“வந்திருக்காங்க மாமா”

 

“மனோ போய் அத்தையையும் அம்மாவையும் இங்கே கூட்டிட்டு வா” என்றார்.

 

“இங்கேயா?” என்று மித்ராணி வினவ,

 

அதே கேள்வி மனோஜ் மனதினுள்ளும் எழுந்தாலும் தந்தையிடம் அதை கேட்காமல், “சரி பா” என்று கூறி வெளியேறினான்.

 

கிருபாகரன், “அபிஷியல் விஷயம் இல்லை ஆனா முக்கியமான விஷயம் பேசணும்” என்றார்.

 

மனோஜ் கமலா மற்றும் மல்லிக்காவுடன் வந்தான்.

 

அனைவரும் அமர்ந்ததும், கிருபாகரன், “ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத் தான் உங்களை வரச் சொன்னேன்” என்றார்.

 

கமலா ஆவலாக, “என்ன விஷயம் ணா?” என்று வினவினார்.

 

“கொஞ்சம் பொறுமையா இரு கமலா” என்ற கிருபாகரன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “RR Solutions வீட்டு பொண்ணு ரோஷினிக்கும் நம்ம மனோவுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருக்கிறேன்” என்றதும் பிரசாத் தவிர மற்றவர்கள் அதிர்ந்தனர்.

 

மல்லிகா முகத்தில் அதிர்ச்சியை மீறி ஒரு கசந்த புன்னகை அரும்பியது. தன் மகனின் கல்யாணத்தை ஒரு மூன்றாம் ஆளிடம் சொல்வது போல் தன்னிடம் சொல்கிறாரே என்ற எண்ணம் தந்த கசந்த புன்னகை தான் அது.

 

‘இப்படி ஏமாற்றிட்டியே ணா!’ என்று அதிர்ச்சியும் ஏமாற்றமுமாக கமலா தமையனை பார்த்தார்.

 

மித்ராணி மனோஜை பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்ணசைவில் ‘நம்மை பற்றி பேசு’ என்று கூற அவனோ தவிப்புடன் பார்த்தான். அவள் கோபத்துடன் ‘இப்போ பேச போறியா இல்லையா?’ என்று மிரட்ட அவன் தவிப்புடன் பார்வையை தாழ்த்தினான்.

 

இதுவரை தந்தையை எதிர்த்து பேசியிராத மனோஜிற்கு இப்பொழுதும் எதிர்த்து பேச சட்டென்று நா எழவில்லை தான் ஆனால் ‘அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது? எப்படி தந்தையிடம் பேசுவது?’ என்று பெரிதும் மனதிற்குள் தவித்தான். தந்தையை எதிர்க்கவும் முடியாமல் காதலியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் மனதினுள் போராடத் தொடங்கினான்.

 

பிரசாத் தனது மகிழ்ச்சியை வெளியே சிறிதும் காட்டாமல் மனதினுள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க, பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது கிருபாகரனின் அடுத்த அறிவிப்பு.

 

கிருபாகரன், “அதே மாதிரி நம்ம பிரசாத்துக்கும் மித்துவுக்கும் கல்யாணம் செய்ய முடிவு பண்ணியிருக்கிறேன்” என்றார் மென்னகையுடன்.

 

கமலாவின் முகம் சட்டென்று மலர்ந்தது. அவரைப் பொறுத்தவரை தன் மகள் அண்ணன் வீட்டு மருமகளாகனும். அது மனோஜாக இருந்தாலும் பிரசாத்தாக இருந்தாலும் அவருக்கு மகிழ்ச்சியே.

 

பிரசாத் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க, மனோஜ் அதிர்ச்சியும் சோகமும் கலந்த தவிப்பின் உச்சத்தில் இருக்க, மித்ராணி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

—————————————————————————————————————————————————–

 

கோவிலுக்கு அருகே இருந்த மரத்தடியில் அழைப்பு வராத கைபேசியில் பேசுவது போல் பாசாங்கு செய்தபடி வெற்றிவேல் தன்னவளுக்காக காத்திருந்தான்.

 

அவன் வந்த ஐந்து நிமிடத்தில் கிருஷ்ணமூர்த்தியும் மாலினியும் கோவிலினுள் சென்றனர். இருவரும் இவனை பார்த்தனர் தான், ஆனால் நேராக கோவிலினுள் சென்றார்கள்.

 

வெற்றிவேல் கைபேசியை சட்டைப் பையினுள் போட்டுவிட்டு கோவிலினுள் சென்றான். மாலினி கண் மூடி வணங்கிக் கொண்டிருக்க அவளுக்கு எதிரே சென்று நின்ற வெற்றிவேல் தன்னவளை தரிசித்துவிட்டே சாமியை தர்சித்தான். கிருஷ்ணமூர்த்தி வெற்றிவேலை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சாமி கும்பிட்டு முடித்த பிறகு வெற்றிவேல், “ஹாய் கிருஷ்ணா” என்றான் அப்பொழுது தான் அவர்களை பார்ப்பது போல்.

 

கிருஷ்ணமூர்த்தியும், “ஹாய் வெற்றி ணா” என்றான்.

 

மாலினி, “ACP சார் ஆஸ்கார் அவார்ட் வாங்க ட்ரை பண்றது தெரியாம போச்சே!” என்றாள் மென்னகையுடன்.

 

வெற்றிவேலும் மென்னகையுடன், “முன்னாடியே தெரிந்து இருந்தால் என்ன செஞ்சிருப்ப?” என்று முதல் முறையாக அவளை ஒருமையில் பேசினான்.

 

“நான் என்ன செய்ய போறேன்” என்று அவள் தோள் குலுக்க,

 

வெற்றிவேல், “வேலை ஓகே.. என் பெயர் நியாபகம் இருக்குதா?”

 

“இருக்குது”

 

“ஹ்ம்ஹும்” என்றவன் ‘அப்படியா?’ என்பது போல் பார்த்து அவளை பார்வையால் சீண்டினான்.

 

அவள், “வெற்றிவேல்” என்றதும்,

 

அவன், “நீயே கண்டுபிடிச்சியா இல்லை கிருஷ்ணா சொன்னானா?” என்று இப்பொழுது வார்த்தையால் அவளை சீண்டினான்.

 

[the_ad id=”6605″]

 

அவள் சிலிர்த்துக் கொண்டு, “மூர்த்தி ஒன்னும் சொல்லலை” என்றாள்.

 

“மூர்த்தி!” என்று வெற்றிவேல் கேள்வியாக பார்க்க,

 

கிருஷ்ணமூர்த்தி, “என்னோட ஃபுல் நேம் கிருஷ்ணமூர்த்தி ணா” என்று கூற,

 

மாலினி, “கிருஷ்ணா ங்கிற பெயர் எனக்கு அலர்ஜி” என்றாள்.

 

“ஏன்?” என்று ஆரம்பித்த வெற்றிவேல், “ஓ! அந்த பையன் பெயர் கிருஷ்ணா தானே!” என்றான். (மாலினியை கடத்த முயற்சித்த மாணவன் பெயர் கிருஷ்ணன்) பிறகு தீவிரமான குரலில், “இது என்ன எண்ணம் மாலினி? ஒருவன் செய்த தப்பினால் அந்த பெயரையே வெறுப்பதா? இவன் உன்னோட க்ளோஸ் பிரெண்ட் தானே! இவன் பெயரை நீ வெறுப்பியா?”

 

“இவன் க்ளோஸ் பிரெண்ட் ஆகுறதுக்கு முன்னாடியே நான் அந்த பெயரை வெறுத்துட்டேன்.. சரி இதை விடுங்க.. நீங்க ஏன் என்னிடம் இப்படி விளையாடினீங்க?” என்று வினவினாள்.

 

‘என்ன விளையாடினேன்?’ என்று வினவாமல், “ஒருவேளை உன்னோட வருங்கால கணவர் பெயர் கிருஷ்ணாவா இருந்தால் என்ன செய்வ?” என்று வினவினான்.

 

அவள் அவனை முறைக்க அவன் புருவம் உயர்த்தினான்.

 

அவள், “தேவை இல்லாததை பேசாமல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் கறார் குரலில்.

 

ACPயுடன் பேசுகிறோம் என்ற பயமின்றி பேசும் அவளது நிமிர்வை ரசித்தவன், “சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான்.

 

“நான் தான் முதலில் கேட்டேன்”

 

“நீ பதிலை சொன்னதும் என் பதிலை சொல்றேன்”

 

அவள் யோசனையுடன் அவனை பார்க்க அவன் மென்னகையுடன், “சொல்லு” என்றான்.

 

மாலினி, “கண்டிப்பா அந்த பெயருக்காகவே அவனை ரிஜெக்ட் பண்ணிடுவேன்” என்றாள்.

 

வெற்றிவேல் கண்ணில் காதலுடன் இதழிலில் புன்னகையுடன், “உன் வருங்கால கணவர் பெயர் வெற்றிவேல் னு இருந்தால் ஓகே யா?” என்று வினவ, அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!