Skip to content
Post Views: 2,758
அத்தியாயம் 25
ஹாய், ஷெஃப் அக்கா, உணவு நல்லா இருக்கு. ஆனால் சிக்கன், மட்டன் செய்து தாங்க? என்று பேச்சிலர் ஒருவன் கேட்க, அதான் வாரத்திற்கு இருநாள் செய்து தானே தாரேன்.
Advertisement
ஒருநாள் அதிகமாக செய்யலாம்ல்ல?
ஓ.கே, அந்த ஒருநாளுக்கு தனியா பே பண்ணுவியா?
Advertisement
Advertisement
என்னக்கா, தம்பிகளுக்காக இதுகூட செய்ய மாட்டீங்களா?
நோ..பணம் தா. செய்து தாரேன்.
Advertisement
என்னக்கா, உங்க ஆளிடமில்லாத பணமா நான் கொடுக்கப் போகிறேன்?
அதிகமா பேசாதடா ரசிகா சொல்ல, “இந்தாங்க அழுறத நிறுத்திட்டு இதை வச்சுக்கோங்க” என்று ஒரு கவரை கொடுத்தான். உங்க விபு தான் நீங்க வருத்தமா இருக்கிறதா சொன்னான்.
என்னதுடா?
“எஞ்சாய் அக்கா” என்று சத்தமிட்டுக் கொண்டே அவன் பைக்கை விரட்டினான்.
ரசிகாவை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதி, அவள் உள்ளே செல்லவும் காரிடம் வந்தான். அவன் காரில் ஏற, அவன் சீட்டில் இருக்கும் கவரை எடுத்து பார்த்தான். அதில் மாலை திரையரங்கிற்கு செல்லும் டிக்கெட் இருந்தது.
மாமா, இது உங்களுக்காக. எத்தனை நாள் திருட்டுத்தனமாக அத்தையை பார்க்க வருவீங்க? எதேச்சையாக சந்திப்பது போல் நீங்க போங்க. அத்தையும் வருவாங்க. இருவருக்கும் பக்கத்து சீட் தான் என்று விபுதன் இருவருக்கும் படம் பார்க்க நுழைவு சீட்டை வாங்கி இருந்தான். அந்த பையன் ரசிகாவிடம் கொடுத்ததும் இதே டிக்கெட் தான்.
வருவாலா? என்று சிந்தனையுடன் ஆதி காரை செலுத்தினான். ரசிகா சமைத்துக் கொடுக்கும் பசங்க எல்லாரும் ஓரிடத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்தனர்.
ஏய், ஆதி சார் காருடா? என்று ஒருவன் பைக்கை எடுத்து ஆதி கார் முன் நிறுத்த, ஆதியும் பிரேக்கை அழுத்தினான்.
“ஆல் தி பெஸ்ட் சார்”. ரசிகா அக்கா ஏதாவது திட்டுன்னா ஒரு காதுல வாங்கி மறுகாதில் விட்டுருங்க. போகாம இருந்திருறாதீங்க. உங்களுக்காகவும் அக்காவுக்காகவும் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினோம் என்றான் இடையே வந்தவன்.
மற்றவன் ஆதி கார் கதவை தட்டி, சார் “சூப்பர் ஹிட் லவ் மூவி”. போயிட்டு வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க? என்றான். ஆதி புன்னகைத்து “தேங்க்ஸ்” என்றான்.
சார், இந்த மூவியால தான் என்னோட ப்ரெண்டு ஒருவனோட காதல் வெற்றியடைந்தது. உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்றான் வேறொருவன்.
“தேங்க்யூ சோ மச்” என்று ஆதி சொல்ல, எல்லாரும் கிளம்பினார்கள். கிரியிடம் பேசி விட்டு டென்சனோடு காரை நிறுத்தி இருந்த துகிலன் இதை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஆதிக்கு கால் பண்ண, அதே நேரம் ரசிகாவிடமிருந்து ஆதிக்கும் போன் வந்தது. இருவர் போனையும் ஒரே நேரத்தில் எடுத்தான். ஆதிக்கு ரசிகா போன் செய்ததில் ஒரே சந்தோசம். இதில் அவன் தம்பி துகிலன் கால் அட்டென்ட் செய்ததை மறந்து விட்டான்.
ரசி, சொல்லு? மகிழ்வுடன் ஆதி கேட்க, ஆதி, நம்ம டீல் மாறுவது போல் இருக்கு? என்று ரசிகா கேட்டாள்.
என்ன ரசி?
ஆதி, முதல்ல உங்க தம்பி எனக்கு டிவோர்ஸ் தரட்டும். அப்புறம் வாழ்க்கையை நல்லபடியாக நல்லவனாக மாறி அவன் தொடங்கணும். அப்ப தான் நான் உங்களிடம் பேசுவேன். உங்களுக்கும் விபு டிக்கெட் அனுப்பினான் தானே? ரசிகா கேட்க,
ஆமா ரசி, துகி கண்டிப்பா உன்னை டிவோர்ஸ் செய்வான். ஆனால் அடுத்து அவன் வாழ்க்கையை அம்மா, அப்பா பார்த்துப்பாங்க. அதையும் நம்மையும் சம்பந்தபடுத்த வேண்டாமே? ஆதி கேட்டான்.
எப்படி ஆதி? என் கல்யாணம் உங்க தம்பியோட நடந்துருக்கு. வெறும் காகிதத்தாலும் தாலியாலும் எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது. தாலி இப்ப என் கழுத்தில் இல்லை என்றாலும் என்னை பற்றி எல்லாருக்கும் தெரியும். உங்க தம்பி தான் காரணம்ன்னு தான் தெரியாது. அது வெளிய வர வேண்டாம்ன்னு நினைக்கிறேன் ஆதி.
தாலி, டிவோர்ஸ் எல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்காக, நான் நம்ம வீட்டுக்கு வரணும்ன்னா உங்க தம்பி பக்கத்துல வேற பொண்ணு இருக்கணும். அவளை அவன் நன்றாக பார்த்துக்கணும். அப்ப கூட நம்ம வீட்டுக்கு விருந்தாளியாக தான் வந்துட்டு போவேன். அவன் அந்த பொண்ணை நன்றாக பார்த்துக் கொள்கிறான்னு எனக்கு தெரியும் போது பழையவாறு நம்ம வீட்டுக்கு வாரேன். இதற்கு முன் இலக்கியா விசயம் போல் நம்ம வீட்ல எதுவும் தப்பா நடக்கக்கூடாது.
ரசி, துகிக்கு பணம் கொடுத்து அனுப்பிடலாமா?
என்ன பேசுறீங்க ஆதி? அவன் உங்க தம்பி. உங்களுக்குள்ள ஆகலைன்னா நீங்க இருவரும் தான் சரி செய்யணும். என்னால எந்த குடும்பமும் கலையக் கூடாது. துகி நம்ம வீட்ல தான் இருக்கணும். அவனுக்கு அம்மா, அப்பா வேண்டாமா? அவங்களோட அஜாக்ரதையால் தான் அவன் இப்படி போயிருக்கான். துகி சொன்னது சரி தான். அவன் நினைத்திருந்தால் கல்யாணம் செய்த அன்றே என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவன் என்னை தொட கூட இல்லை.
அவனுக்கு, “அவன் நினைத்த எதுவுமே நடக்கலை. அவன் இலக்கியாவுடன் தவறான உறவில் இருந்தாலும் இலக்கியா உங்களை திருமணம் செய்த அன்றே அவன் காதலை இழந்து விட்டான். அவள் தான் அவனை பயன்படுத்தி இருக்கா. நீங்க தொடவிட மாட்டேங்கிறீங்கன்னு கோபம் அவளுக்கு. அதை அவனிடம் சொன்னால் அவன் உங்களிடம் சண்டை போட்டிருக்கான். விசயம் தெரியாமல் அவன் உங்களை அடித்தான்ல்ல? அதே கோபத்தில் தான் எல்லாம் ஆரம்பித்தது.
ஆமா ரசி, அப்ப இது தான் காரணமா? ஆதி கேட்டான்.
ஆமா, அவன் அம்மாவும் உங்க பக்கம் சாய ஆரம்பிச்சிட்டாங்க. அவனோட காதலியும் உங்க பக்கம் இருந்தாள். உங்க அப்பாவும் அவனுடன் நேரம் செலவலிக்கலை. யாருமில்லாமல் இருந்ததாக உணர்ந்து தான் தவறான பாதைக்கு சென்றிருக்கான். என்னை பார்த்து திருமணம் செய்திருக்கான். ஆனால் நானும் இப்ப உங்களை காதலிப்பதால் நம்மை விட அவன் தான் கஷ்டத்தில் இருப்பான்.
எனக்கு அவனை பற்றி தெரியாததால் நானும் அவனை இத்தனை நாளாக தவறாக புரிந்து கொண்டேன். உங்க மேல இருந்த சின்ன கோபம் பலவாக உயர்ந்திருக்கு. இதனால் தான் அவனின் தவறான போக்கு.
ரசி, அவன் உன்னை பிடிக்கும்ன்னு சொன்னான்? நீ அவரை உன் கல்லூரியில் பார்த்திருக்கிறாயா?
தெரிந்திருந்தால் நான் எப்படி திருமண செய்திருப்பேன்? என்னை விடுங்க ஆதி. முதல்ல குடும்பத்துல்ல எல்லாரும் ஒத்துமையா இருங்க என்று ரசி சொல்லிக் கொண்டே அதிர்ந்து நின்றாள்.
துகிலன் மூச்சிறைக்க அழுதுகொண்டு ரசிகாவை அணைத்திருந்தான்.
டேய், என்ன பண்ற? ரசிகா அவனை தள்ளி விட்டாள்.
ரசிகா, என்னை சரியா நீ மட்டும் தான் புரிந்து வச்சுருக்க? என்று துகிலன் அவள் கையை பிடித்தான்.
ஆதி, அவனுக்கு எப்படி நாம பேசியது கேட்டது? உனக்கு எப்படி நான் இங்கே இருப்பது தெரியும்? என்று இருவரிடமும் கேள்வி எழுப்பினாள்.
ஆதி போனை பார்த்து, உன்னுடன் பேசும் ஆர்வத்தில் அவன் அழைப்பை கவனிக்கவில்லை.
என்ன ஆதி? “டேய் நீ கிளம்பு” ரசிகா துகிலனிடம் சத்தமிட்டாள்.
துகி, நீ எப்படி இங்க வந்த? ஆதி கேட்க, உனக்கு தேவையில்லை. சாரி என்று ரசிகாவிடமிருந்து வெளியே சென்றான்.
அடேய், உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் எங்க வீட்டுப் பொண்ணு வாழ்க்கையையே கெடுத்துட்டு இப்ப கட்டி வேற பிடிக்குற? என்று காய் நறுக்கும் கத்தியுடன் கிரியின் மனைவி வந்தாள்.
அண்ணி, “அவனை விடுங்க” ரசிகா அவரை தடுத்தாள்.
“சாரி ரசிகா” என்று அவன் வெளியேறினான். ஆதி அவன் வருவான் பேசலாம் என காத்து இருந்தான். ஆனால் வெகுநேரமாகியும் அவன் வரவில்லை. ஆதி காரை எடுக்க ரசிகா பேசியது அவனை உலுக்கியது.
என்னால் தான் துகி தவறான வழிக்கு சென்றானோ? அவனிடமிருந்து தான் தான் எல்லாவற்றையும் பறித்து விட்டானோ? என்று எண்ணியவனால் காரை செலுத்த முடியாமல் நிறுத்தினான். அவன் பின் நின்ற காரை ஆதி கவனிக்கவில்லை. அதில் ஆதியை கவனித்தவாறு அமர்ந்திருந்தான் துகிலன்.
ஆதியை தாண்டி சென்ற இளைஞன் ஒருவனிடம் பணம் கொடுத்து ஆதி ஏதோ சொல்ல, அவன் டிரிங்ஸ் வாங்கி கொடுத்து விட்டு சென்றான். ஆதி வேகமாக காரை எடுத்தான்.
வீட்டிற்கு சென்ற ஆதி கவருடன் மேலே சென்றான். சவிதா அறையில் இருந்தார்.
இவன் என்ன வாங்கினான்? பணம் வேற கொடுத்தானே? என்று துகிலன் அவனறைக்கே சென்றான். ஆனால் ஆதி வாங்கியது என்னவாக இருக்கும்? என்று மனதில் ஓடிக் கொண்டிருக்க பார்க்கலாமே? என்று தான் ஆதி அறைக்கு வந்தான்.
ஆதி போதையில் இருந்தான்.
குடிச்சிருக்கியா? நீயா? என்று துகிலன் ஆதியிடம் வந்தான். அவ்வறை முழுவதும் ஆல்கஹால் வாடை நிரம்பி இருந்தது.
நானோ? உன் ப்ரெண்ஸ் குடிச்சாலே திட்டுவ? எதுக்குடா குடிச்ச? ஆதி சட்டையை பிடித்தான் துகிலன். இவர்கள் சத்தம் கேட்டு சவிதா மேலே வந்தான். சீதாவின் மூலம் ஆதி கவருடன் வந்தது, அவன் பின் துகிலன் வந்ததை அறிந்து கொண்ட பிரபாகரனும் அகரனும் வந்தனர்.
சொல்லுடா? கோபமாக துகிலன் கத்தினான்.
துகி, என்னால தான் நீ இப்படி ஆகிட்டியாடா? உன்னோட தவறான பழக்கத்திற்கு நான் தான் காரணமா? உன்னுடைய துரோகம் என்னால தானா? என்று போதையுடன் துகிலனை பார்த்து கேட்டான் ஆதி.
துகிலன் அமைதியாக இருந்தான். ஆதி, என்ன செய்ற? இது என்ன பழக்கம்? பிரபாகரன் சத்தமிட்டார்.
ஷ்..அப்பா..அவனை பதில் சொல்ல சொல்லுங்க. துகி நல்லவனாம். நம்ம யாரும் அவனை கவனிக்காமல் விட்டு அவனை கெடுத்துட்டோமாம். ரசி என்னை திட்டுனாப்பா. துகி, கல்யாணம் செய்து ஒரு பொண்ணோட வாழ்ந்தா தான் என்னுடன் பேசுவாளாம் என்று அழுதான்.
“மச்சான்” என்று அகரன் ஆதியிடம் வர, அகரா.. ரசி என்னையும் அவளையும் கஷ்டப்படுத்துறாடா. என்னால அவளை பார்க்க முடியல. அவளாலும் தான் என்று அவன் பார்த்ததை கூறினான் ஆதி.
ருச்சி, சொல்றதும் சரி தான். இவன் உங்க தம்பியா மட்டும் இருந்தா இப்பவே உங்களிடம் ஓடி வந்திருப்பா. ஆனால் அவ கழுத்துல இவன் கட்டிய தாலியை ஒரு வாரம் முன் வரை சுமந்திருக்கா. சும்மாவே எல்லாருக்கும் நல்லது நினைக்கும் ருச்சி. இவன் வாழ்க்கையை எப்படி அந்தரத்தில் தொங்க விடுவாள்? “எல்லாமே உங்க தம்பி கைல தான் இருக்கு” என்று அகரன் துகிலனை பார்த்தான்.
துகி, என்னோட எல்லாத்தையும் எடுத்துக்கோ. எனக்கு ரசி மட்டும் போதும். அவளை பார்க்காமல் பேசாமல் இருக்கவே முடியலை. செத்திடலாம் போல இருக்குடா என்று துகிலனை அணைத்து ஆதி புலம்பிக் கொண்டே அழுதான். எல்லாரும் கண்ணீருடன் நின்றனர்.
அகரா, நீ போ..நம்ம பிராபர்ட்டீஸ் எல்லாமே அப்பாவோட போய் எடுத்துட்டு வா. இந்த வீட்டையும் சேர்த்து நான் துகிக்கே கொடுத்திடுறேன். ஆனால் அவன் கல்யாணம் பண்ணிக்கணும். அப்ப தான் ரசி என்னுடன் பேசவாது செய்வா. போ..அகரா..போ என்றான் ஆதி.
“ஓ.கே பாஸ்” என்று அகரன் எழுந்தான்.
கண்ணீருடன் ஆதியை பார்த்த துகிலன் அகரனை பார்த்து, “எங்கேயும் போகாத” என்று நிறுத்தி விட்டு, எனக்கு ரசிகாவை பிடிக்கும். பள்ளி படிக்கும் போதிலிருந்தே பிடிக்கும். ஆனால் என்னோட காதல் இலக்கியா தான். உன்னால எதுவும் நடக்கலை. ரசிகா சொன்னது போல் நான் தான் காரணம்.
என் காதலை நான் யாருக்கும் விட்டு கொடுத்திருக்கக் கூடாது. அவளுக்காக பணம் சம்பாதித்து இருந்திருந்தால் இலக்கியா உன் பக்கம் வந்திருக்க மாட்டா. எதுவும் நடக்காமலே இருந்திருக்கும். என் மீது தான் தவறு. இலக்கியா இல்லை என்பதால் என் அடுத்த பிடித்தமாக ரசிகாவை ஏற்றுக் கொண்டேன். ஆனால் நீங்க இருவரும் இந்த அளவிற்கு காதலிப்பீங்கன்னு நான் நினைக்கலை. சாரி அண்ணா..உன்னையும் நான் சிறுவயதிலே வெறுத்து தான் இருந்திருக்கேன். அதுக்கும் என்னை மன்னிச்சிரு. எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால்..ரசி என்று நிறுத்தி பிரபாகரனை பார்த்தான்.
பின் ஏதும் சொல்லாமல் அவனறைக்கு சென்றான். சவிதா அவன் பின்னே செல்ல, ஆதியை குளியலறைக்கு அழைத்து சென்று அவனை தெளிவு படுத்த முயன்று கொண்டிருந்தனர் பிரபாகரனும் அகரனும்.
சற்று நேரத்தில் ஆதி தெளிவாக எழுந்து அவன் ஆடையை மாற்ற, மற்றவர்கள் வெளியே வந்தனர்.
துகி, “போகாத” என்று சவிதா அழுது கொண்டே துகிலனின் பின்னே சென்றார். சத்தம் கேட்டு வந்து எல்லாரும் கூடினர்.
துகி நில்லு, எங்க போற? ஆதி கோபமாக சத்தமிட்டு கொண்டே கீழே ஓடி வந்தான்.
நான் போறேன். என்னால தான் பிரச்சனை.
ரசி, என்ன சொன்னா? நீயும் கேட்டுக் கொண்டு தான இருந்தாய்? ஆதி கேட்க, “நான் போறேன்” என்றான் மறுபடியும் துகிலன்.
நம்ம யாரும் குடும்பமாக சந்தோசமாக இருந்ததில்லை. ரசி இருக்கும் போது தான் நம்ம எல்லாரும் சந்தோசமாக இருந்தோம். அதே போல் நாங்க எல்லாரும் உன்னுடன் மகிழ்ச்சியாக இருக்கணுன்னு நினைக்கிறோம் என்று ஆதி சொல்ல, ரசிகா சொன்னதற்காக பேசாத துகிலன் சொல்ல,
அவளுக்காக இல்லை துகி. சிறுவயதிலிருந்தே நாம சேர்ந்து விளையாடியதும் இல்லை. நீ என்னை காயப்படுத்தியது தான் அதிகம். உன்னுடன் பேச என்ன செய்யவதென்று தெரியாமல் ஏதாவது செய்து உன் வெறுப்பை தான் சம்பாதித்து இருக்கேன். இப்ப நான் தெளிவாக இருக்கேன். என்னோட எல்லாமே உனக்கு தான். ஆனால் “எனக்கு என் தம்பியாக துகிலனும் மனைவியாக ரசிகாவும் வேணும்” என்றான் ஆதிரேயன்.
துகிலன் ஆதியையும் அவன் அம்மா, அப்பாவையும் பார்த்தான்.
என்னை மன்னிச்சிருப்பா. என் மீதும் தவறு இருக்கு. ஆதி அம்மாவுக்காக ஏங்கி இருக்கான் என்றே அவனுடனே நேரத்தை செலவழித்து உன்னை கவனிக்காமல் விட்டுட்டேன். ஆனால் என் பிள்ளைகள் மூவருக்குமே அப்பாவாக சரியாக நடந்து கொள்வேன் என்று உறுதியளித்தார். சவிதாவும் கெஞ்சுவது போல் அவனை பார்த்தார்.
துகிலன் அகரனை பார்த்தான். முதலில் அகரனுக்கு துகிலன் மேலுள்ள கோபம் மறைந்திருக்க, அவனும் இப்பொழுது ஆதியிடம் துகிலனுக்கு சாதகமாக தானே பேசினான் என்று சிந்தித்து ஆதியை பார்த்து துகிலன் அவன் முன் வந்து நின்றான்.
என்ன சொல்லப் போகிறானோ? என்று ஆதி அவனுக்கு தம்பி, ரசி இருவரும் கிடைப்பார்களா? மனம் அடித்துக் கொண்டது.
ஆதிரேயன் முன் வந்த துகிலன் அவனையே பார்த்துக் கொண்டு, சாரிடா அண்ணா உன்னை வெகு வருடங்கள் காத்திருக்க வைத்து விட்டேன் என்று துகிலன் ஆதியை அணைத்தான். ஆதி கண்ணில் நிற்காமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
அண்ணா, இப்போதைக்கு ரசியிடமோ யாரிடமோ இந்த விசயத்தை சொல்ல வேண்டாம். மெல்லியிடமும் சொல்ல வேண்டாம். ஒரு வாரம் காத்திரு. நான் நம்ம காலேஜ் பழைய மாணவ, மாணவியர் விழாவிற்கு சென்று வருகிறேன். அப்புறம் பார்த்துக் கொள்ளாலாம் என்றான் துகிலன்.
ஆமா, பாஸ் உங்களுக்கும் வந்திருக்கும். ருச்சியும் காலேஜூக்கு போகப் போறா? அவள் நம்ம காலேஜ்ல்ல தான் வொர்க் பண்ணா? அவளுடைய சான்றிதழ் அனைத்தையும் வாங்கணும்ன்னு சொன்னா? நீங்க வருவீங்களா? என்று அகரன் அவனாகவே கேட்டுக் கொண்டு, பாஸ் அன்று நம்ம எஸ்டேட்ல்ல மீட்டிங்கும். அந்த வெளிநாட்டுக்காரனுடன் அவன் நாட்டிற்கு சென்று அங்கே நடக்கும் விற்பனையை கண்காணிக்க செல்லணுமே? என்று ஆதியை பார்த்தான்.
நீயும் காலேஜூக்கு வருவியா?
என்ன கேட்டுட்டீங்க? நான் இல்லாமலா? நான், திரீ, ரசி மூவரும் சேர்ந்து தான் கிளம்புகிறோம் என்றான் ஆதி.
ஓ..சேர்ந்து தான் போறீங்கன்னா? எங்களுடன் சேர்ந்து கொள்ளலாமே? துகிலன் கேட்க, அது வந்து..வேண்டாமே? எங்களுக்கு வேலையே சரியா போகுது. நாங்க பேச கூட நேரமில்லை. ப்ரெண்ட்ஸா சேர்ந்து எஞ்சாய் என்று அகரன் ஆதியை பார்த்தான்.
சரி, இரு நாட்கள் விடுப்பு வேணுமா? ஆதி கேட்க, அகரன் தலையை ஆட்டினான். பாஸ் எதற்கும் ஒருநாள் அதிகமாக கொடுத்தால் மத்த ப்ரெண்ட்ஸையும் பார்த்துட்டு வருவோம் என்றான்.
சரி, நானும் வரணும். நீ எப்படியாவது ஃபாரினருடன் பேசி இன்னொரு நாள் செல்ல ஏற்பாடு செய். எனக்கு அந்த ஒரு நாள் போதும். மறுநாள் கூட அவரிடம் பேசுகிறேன்.
என்னது? மறுநாளேவா? நோ..நோ..நாம நல்லா ஊர் சுத்தணும். சோ..ஆதிக்கும் மூன்று நாள் விடுப்பு வேணும் துகிலன் சொல்ல, ஆதி அவன் அப்பாவை பார்த்தான்.
மூன்று நாள் தானே? நான் பார்த்துக்கிறேன். ஆனால் மீட்டிங்கை தள்ளிப் போடாதப்பா. வீடியோவிலாவது பேசி விடு என்றார் பிரபாகரன்.
“நாங்க வர்றது ரசிகாவிற்கு தெரியக் கூடாது” என்றான் துகிலன்.
எதுக்கு? சவிதா கேட்க, அப்புறம் அவ வர மாட்டா.
ஆமா மச்சான். அவ வர மாட்டா. நீங்க சீக்ரெட்டா வாங்க. நாங்க முன்னாடியே கிளம்பிடுவோம் என்றான் அகரன்.
வா, அண்ணா என்று துகிலன் ஆதியை அவனறைக்கு அழைத்துச் சென்றான்.
கல்லூரி பழைய மாணவ, மாணவியர் விழாவும் வந்தது. காலையிலே சென்னையிலுள்ள கல்லூரிக்கு வந்தனர் அகரன், திரிவேஷ், ரசிகா.
ரசிகா அவள் இக்கல்லூரிலிருந்து வெளியே எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் வாங்க அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தாள்.
அகரனும் திரிவேஷூம் ஜாலியா சுற்றிக் கொண்டிருந்தனர். ரசிகா அவள் வேலையை முடித்து வர மதியமானது. சாப்பிட்டு விட்டு ரசிகா அமர்ந்தாள். அவளருகே வந்து அமர்ந்தார் ஆர்த்தி.
மேம், சாப்பிட்டீங்களா? ரசிகா விசாரித்தாள்.
ம்ம்..விழாவை கிராண்டா நடத்தணும். பெரிய ஆளுங்களெல்லாம் வருவாங்கலாம். அதனால இரவு விருந்துக்கு பரிமாற உன் பெயரையும் சேர்த்திருக்காங்க என்றார் ஆர்த்தி.
ஓ.கே மேம். நான் போய் எதில் போட்டிருக்காங்கன்னு பார்த்துட்டு வாரேன் என்றாள் ரசிகா.
ரசிகா, உன்னோட பெயர் விருந்தாளிகளுக்கு பரிமாறுவதில் உள்ளது. கார்த்திக் சாரும் அதில் தான் இருக்கார்.
மேம், நீங்க? ரசிகா கேட்க, நான் மேடை நிகழ்ச்சியில் இருக்கேன். இப்ப நான் கிளம்பணும். உனக்கு விருப்பமில்லைன்னா சொல்லு. நான் மேம்கிட்ட பேசுகிறேன் என்றார் அவர்.
இல்ல மேம். இன்று மட்டும் தானே! பார்த்துக்கலாம் என்றாள் ரசிகா.
சரிம்மா, எனக்கு வேலை இருக்கு. நம்ம காலேஜ் பசங்க பேரண்ட்ஸூம் வாராங்க. அவங்களுக்கு பரிமாற ஆட்கள் போட்டிருக்காங்க.
என்ன? பசங்களுமா வாராங்க?
ஆமா, ஆனால் எல்லாரும் இல்லை. பழைய ஸ்டெண்ட்ஸோட பசங்களும் வருவாங்க. அப்புறம் கார்த்திக் சார், உங்க பிராஜெக்ட்டுக்காக பசங்களுக்கு ஸ்பெசல் பர்மிசன் கேட்டிருக்காரு.
இதோ சார் வந்துட்டார். நான் கிளம்புகிறேன் என்று ரசிகாவை வருத்தமுடன் பார்த்துக் கொண்டே கிளம்பினார் ஆர்த்தி மேம்.
சார்..என்று ரசிகா எழுந்தாள்.
உட்காருங்க ரசிகா மேம், உங்களுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையாகும்ன்னு நாங்க யாருமே நினைக்கலை. உதவியாவது நீங்க கேட்டிருக்கலாம்? கார்த்திக் சார் கேட்டார்.
இல்ல சார், நான் இங்கிருப்பது சரியாக இருக்கும்ன்னு தோணல. அதான் கிளம்பிட்டேன்.
சரி, ஆதி சார் எப்படி இருக்கார்? அவர் கேட்க, ரசிகா அமைதியானாள்.
என்னாச்சு? வேறெதுவும் பிரச்சனையா?
அதெல்லாம் இல்லை சார். எங்களிடம் கொஞ்சம் புரிதல் இல்லை என்றாள் ரசிகா.
ஓ..அப்படியா? உங்களை பார்த்தால் அப்படி தோணலையே? பேசியே நாளாகி இருக்குமோ?
“இல்ல சார்” என்று பசங்க பிராஜெக்ட் முடிந்ததா?
எனக்கே சந்தேகம் இருக்கு. உங்க கெல்ப் வேணும்? ஒரு வாரம் இங்கே இருக்க முடியுமா? கார்த்திக் சார் கேட்டார்.
ஒரு வாரம் முடியாது சார். நான் போகணும். மூன்று நாட்கள் இருப்பேன் என்றாள்.
நியூஸில் எனக்கான அதிர்ச்சி? ஆதியை உன்னுடன் பார்த்தது தான் என்றார் கார்த்திக்.
ஆதியா? அவள் கேட்க, அகரனும் திரிவேஷூம் அவரிடம் சொல்லாதீங்க என்று கையை ஆட்டிக் காட்டினர். அவரும் புரிந்து அவளை பார்த்தார்.
ரசிகா இருவரையும் பார்த்து, என்னடா நல்லா சுத்திட்டு வந்துட்டீங்களா? ஆட்கள் வர ஆரம்பித்தனர்.
சார், போகலாமா? ரசிகா கேட்க, எங்க போகப் போற? வாங்க சார்..எல்லாரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துப்போம் என்று அவர்கள் ஒவ்வோர் இடமாக சென்று புகைப்படம் எடுத்தனர்.
அதே நேரம் அவர்களை கடந்து ஆதியின் கார் சென்றது. யாரும் அவனை பார்க்கவில்லை. ஆதி நால்வரையும் முக்கியமாக அவனோட ரசி சிரிப்பதை ரசித்து பார்த்துக் கொண்டே சென்றான். கார்களும் ஆட்டோக்களும் வந்து வந்து செல்ல, இவர்களும் அவனை கவனிக்க தவறினர்.
ஆதியின் நண்பர்கள் ஆதியை பார்த்து அணைத்துக் கொண்டு, சாரிடா ஆதி உன் வாழ்க்கை மட்டும் ஏன் தான் இப்படி அமைந்ததோ? ஒருவன் சொல்ல,
என்னடா அமைந்தது? நல்லா தானே இருக்கு. நம்ம பிளாக் குயின் நம்ம ஆதியோட குயின் ஆகப் போறால்ல விஷ்வா சொல்ல, “ப்ளாக் குயினா?” ஆதி கேட்டான்.
இதுக்கு தான் ப்ரெண்ட்ஸோட பார்ட்டிக்கு வரணும்ன்னு சொல்றது? விக்ரம் சொல்ல, அவளை உனக்கு படிக்கும் போது தெரியாதுல்ல நீ பார்ட்டிக்கு வந்தா தெரிந்திருக்கும்.
பார்ட்டிக்கு ரசி வருவாளா?
இல்லை, அவ வர மாட்டா. அவளோட ப்ரெண்ட்ஸ் வருவாங்க. உன்னோட தம்பிக்கு அவ மேல கண்ணு இருந்தது. அதான் அவ கூடவே ஒரு பொண்ணு சுத்துவாளே? அவகிட்ட கேட்டுக்கிட்டே இருப்பான். அந்த பொண்ணுக்கு உன் தம்பி மேல கண்ணு. இலக்கியா கூட அவளோட பேசுவாடா. அங்க வச்சி ரசிகாவை பற்றி பேசி பேசி..அவளுக்கு “ப்ளாக் குயின்” நேம் வச்சதே உன்னோட பொண்டாட்டி இலக்கியா தான்.
இப்ப தான் தெரியுது? எதுக்காக அந்த நிமலா..சாரி சாரி பருவதி ரசிகாவை பற்றி பேசினாள் என்று?
பருவதிக்கு ரசிகாவை பிடிக்காதாம். பெயர் கிடைத்த பின் அவள் பெயரையும் அவளையும் டேமேஜ் பண்ணி கல்லூரியிலிருந்து வெளியே அனுப்ப தான் உன் தம்பியையும் இலக்கியாவையும் பயன்படுத்தி இருக்கா. ஆனால் அவங்க இருவருக்கும் ரசிகாவை பிடித்தது பருவதிக்கு பிடிக்கலை. இருவரையும் பிரிக்க நினைத்து உன் தம்பி மனதில் நஞ்சை விதைத்து, இலக்கியாவை தவறானவளாக ரசிகாவிற்கு காட்டி இருக்கா. சரியான கேப்மாரிடா அந்த பருவதி. ஆதி அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தான்.
கவலைப்படாதடா. நீ அவளை அழைச்சிட்டு வரலையாடா? விக்ரம் கேட்க, இல்லடா. நாங்க பேசிக்கிறதில்லை.
ஏன்? பிரச்சனையா இல்லை உனக்கு பிடிக்கலையா?
இருவருக்கும் பிடிக்காமல் இல்லை. இப்ப நான் சொல்லலை. அப்புறம் சொல்றேன் ஆதி சொன்னான்.
சீக்ரெட்டா டா? இல்லை ரசிகாவை கல்யாணம் செய்தவனை சந்தித்தாயா? ஆலவன் கேட்டான்.
ம்ம்.பார்த்தேன். என்னால அவனுடன் சண்டை போடவும் முடியலை. ரசியை அவனிடம் விட்டுக் கொடுக்கவும் முடியலை. குழப்பமான மனநிலையில் தான் இருக்கேன். நடப்பதை பார்க்கலாம். அதை விடுங்க என்றான் ஆதி.
யோசனையுடன் பார்த்து விட்டு ஆதி நண்பர்கள் மற்ற விசயத்தை பேசிக் கொண்டிருந்தனர். அந்நேரம் துகிலனும் காரிலிருந்து அவன் நண்பர்களுடன் இறங்கினான். ஆதியும் துகிலனும் பேசாதது போல் காட்டிக் கொண்டனர்.
எப்படா பாரின்ல்ல இருந்து வந்த? ஒருவன் கேட்க, அதான் வந்துட்டேன்ல்ல. அப்புறம் என்ன கேள்வி?
டேய் மச்சான், தாருண்யா இப்ப பிரக்டென்ட்டா இருக்காலாம் என்று ஒருவன் சொல்ல, யாரை சொல்ற கவின்? துகிலன் கேட்டான்.
தாருடா? உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தாலே துகி அவதான். பாவம்டா அவ மிடில்கிளாஸ்ல்ல. கல்யாணம் ஆகாமல் பிரக்னெட் ஆனதால் அவளோட வீட்டுல இருந்தே அவளை பத்திட்டாங்கடா. இப்ப ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. இதோ இவன் தான் கெல்ப் பண்ணிட்டு இருக்கான் என்று அவன் அர்னவை கை காட்டினான். அவனோ கோபமாக துகிலனை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
ம்ம்..அப்படியா? என்று துகிலனின் குரல் தாழ்ந்தது.
ரசிகா மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தாள். எல்லாமே அப்படியே இருக்குல்ல என்று ஆதியின் நண்பர்கள் அவர்களின் பெயர் பொறித்த மரத்தை பார்த்துக் கொண்டே வந்தனர்.
மரத்தின் மறைவிலிருந்து இவர்கள் எதிரிலே வந்து ஒருவனை இடித்து பின்னே பார்த்துக் கொண்டே, சாரி சாரி..எனக்கு ஒரே ஒரு கெல்ப் பண்ணுங்க என்று ஆதியை இடித்து அவன் பின்னே மறைந்து நின்றாள். ஆதியின் நண்பர்கள் திகைத்தும் புன்னகையுடனும் பார்த்தனர். ஆதி ஏதும் பேசாமல் நின்றான். ஆனால் ரசிகா ஆதியையும் அவன் நண்பர்களையும் பார்க்கவேயில்லை.
ஹே, ப்ளாக் காஃபி எங்க? என்று ஆதி முன் வந்து ஒருவன் நின்றான்.
அய்யய்யோ..பார்த்துட்டானோ? என்று கண்ணை மூடிக் கொண்டு ஆதியின் சட்டையை இறுக பற்றினாள்.
மேம், எவ்வளவு நேரம் “ஹைடு அன்டு சிக்” விளையாடுவீங்க? போதும். சரியான ஆள் பின்னே தான் ஒளிஞ்சிருக்கீங்க? சந்தீப் சொல்ல, என்னது? என்று அவளை சுற்றி நின்று கொண்டிருந்த ஆதியின் நண்பர்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தாள்.
ஹாய் சார், ஐ அம் சந்தீப். இப்ப நான் என்னோட மேம்மை அழைச்சிட்டு போகணும். மேம் வாங்க, என்னோட அம்மாவுக்கும் பிளாக் காஃபி போட்டு குடுங்க. அவங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்றான்.
ரசிகா, ஆதியை பார்த்து பேச்சில்லாமல் நின்றாள். மேம் வாங்க என்று சந்தீப் அவள் கையை பிடித்து இழுக்க, இருடா…என்ற ரசிகா ஆதி..பிரின்சிபில் மேம் அறை அங்க இருக்கு. நீங்க அங்க இல்லாம இங்க என்ன பண்றீங்க? சிந்தனையுடன் கேட்டாள்.
சரியா போச்சு, இவனுக்கும் உன்னை தெரியாமல் இருந்திருக்கு. இவன் இங்கே தான் படித்தான். உனக்கு சீனியர்ன்னு கூட தெரியாம இருந்திருக்க? விக்ரம் கேட்டான்.
சீனியரா? நீங்க இங்க தான் படிச்சீங்களா? அவள் கேட்க, ஆதி பதில் கூற வந்தான். அதற்கு கார்த்திக் சார் வந்தார்.
ரசிகா மேம், சீக்கிரம் வாங்க. ஒருமணி நேரத்தில் விழா ஆரம்பித்து விடும். நம்ம பசங்க கேண்டின்ல்ல வெயிட் பண்றாங்க என்று கத்திக் கொண்டே அவர்களிடம் வந்தார்.
கார்த்திக் சார், நீங்க அப்ப பேச வந்தது. ஆதியை உங்களுக்கும் தெரியுமா? ரசிகா கேட்க, “நான் ஆதியோட சீனியர்” என்று ஆதியை பார்த்து புன்னகைத்தான்.
சார், மேம் உங்க கூட வர மாட்டாங்க. வாங்க மேம் போகலாம் சந்தீப் ரசிகா கையை இழுக்க, டேய் போயிடு. இல்லை இன்டர்னல் மார்க் உனக்கு கிடையாது. எங்க பிராஜெக்ட்டை அவங்க பார்க்கணும் என்றார் அவர். ரசிகா போன் அழைக்க அதை எடுத்து, ஓ.கே மேம் என்று இருவரையும் மாறி மாறி பார்த்து மெதுவாக நகர்ந்தாள்.
மேம்..சந்தீப் அழைக்க, என்னோட பர்ஸனல் வொர்க் ஒன்று விட்டு போச்சு என்று பின் நகர்ந்து கொண்டே, பத்தே நிமிடத்தில் கேண்டியனில் மீட் பண்ணலாம். சார் நீங்க பசங்களை கூட்டிட்டு வாங்க. சந்தீப் நான் மீட்டிங் முடிந்த பின் அம்மாவை பார்க்கிறேன் என்று அகரனை அழைத்துக் கொண்டே ஆதியை பார்த்தாள். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சீக்கிரம் வாடா..அவள் அழைத்துக் கொண்டே வேகமாக நடந்தாள். திரிவேஷ் பைக்கில் வந்தான்.
அவனை எங்கடா?
அவன் பிஸீயா கேம் விளையாண்டுகிட்டு இருக்கான். கேம் விளையாடுற வயசா இது?
விடு மௌனி. அவன் இங்க தான விளையாட முடியும்? ஊட்டி சென்று விட்டால் இயந்திரமாக வேலை செய்யணும் என்றான். அவள் புன்னகைத்துக் கொண்டே அவனுடன் பைக்கில் ஏறி ஆதியை பார்த்துக் கொண்டு மறைந்தாள்.
எல்லாரும் ஆதியை பார்த்தனர்.
ஆதி, அவ பேச மாட்டான்னு சொன்ன? ஆனால் நீ தான் பேசாம இருந்த? அவ பேச தான செய்தாள்.
பதட்டத்தில் பேசி இருப்பாள்.
வாட்? அதுக்குள்ள பிரேக் அப்பா? சந்தீப் கேட்க, “சும்மா இரு. அவங்க விசயத்தை அவங்க பார்த்துப்பாங்க” என்று கார்த்திக் சார் நகர்ந்தார்.
ஆதியிடம் வந்த சந்தீப், சார் இது என்னோட நம்பர். மேம்மிடம் பேச உதவி வேணும்ன்னா அழையுங்கள். நான் உதவுகிறேன் என்று அவன் சென்றான். ஆதி புன்னகையுடன் தன் நண்பர்களை பார்த்தான்.
தாருண்யாவை பற்றி துகிலன் நண்பன் பேசியதிலிருந்தே துகிலன் மிகவும் அமைதியாக இருந்தான். பின் வேகமாக நகர்ந்து போனை எடுத்து பேசினான்.
என்னது? இங்கேயா? என்று எல்லாரும் இருங்க. “நான் வாரேன்” என்று துகிலன் கிளம்பினான். நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாராவது பொண்ணா இருக்கும்? அதான் இப்படி ஓடுகிறான் என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அர்னவ் மட்டும் செல்லும் துகிலனை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஆதி வா, நாம கேண்டின் போகலாம் என்று ஆதியை அவன் நண்பர்கள் அழைத்து சென்றனர். அங்கே தான் அகரன் கல்லூரி பசங்களுடன் போட்டியிட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆதி, அங்க பாரு என்று அகரனை கை காட்டினான் அவன் நண்பன் சரத். அகரனுடன் பெண்களும் பசங்களும் இருந்தனர். சீனியர்.. சீனியர்.. அவர்கள் கத்த மறுபக்கம் ஜூனியர்..ஜூனியர்..என்று கத்தினர். விளையாட்டு மும்பரத்தில் ஆதியை அகரன் பார்க்கவேயில்லை.
சற்று நேரத்தில் ஒரே சத்தம்,..சீனியர் ட்ரீட் வேணும். அண்ணா எங்களுக்கும் என்று அகரனை மொய்த்தனர்.
“வழிய விடுங்கடா” என்று ஒரு பொண்ணு, “கங்கிராட்ஸ் அகரா” நாம டேட்டிங் போகலாமா? என்று அவள் கேட்க, என்னது? அகரன் கேட்டுக் கொண்டே அவளை விலக்கினான்.
“மச்சான் நீ செத்தடா” திரிவேஷ் குரல் கேட்க அகரன் அனைவரையும் விலக்கி அவனை பார்த்தான். ஆதி அவன் நண்பர்களுடனும் அவர்களருகே மெல்லினாவும் சினமுடன் இருப்பதை பார்த்து, “போம்மா” என்று அகரன் அவளை தள்ளி விட்டு அவர்களிடம் வந்தான்.
மெல்லி, இது ஜஸ்ட் கேம் தான்.
எது கட்டிப்பிடி கேமா? மெல்லினா கோபமாக கேட்டாள்.
இல்லம்மா அந்த பொண்ணு தான். ஏய், சொல்லு? என்று அகரன் அவளை பார்த்தான்.
என்னையா தள்ளி விட்ட? இப்ப பாரு..என்று அகரா, இப்ப தான நைட் கிளப் போகலாம்ன்னு சொன்ன?
நானா? டேய் பசங்களா? அகரன் அழைக்க, ஏய் என்ன உலறுற? இப்ப தான எங்களை விலக்கி விட்டு அண்ணாகிட்ட வந்த? ஒருவன் சத்தமிட்டான்.
திரிவேஷூடம் வந்த ரசிகா மெல்லினா அருகே வந்து அகரனை முறைத்து பார்த்தாள்.
ருச்சி, “நான் இல்லை” அகரன் சொல்ல, ஹேய் மேம் வந்துட்டாங்கடா என்று அகரனுடன் இருந்தவன் சொல்ல, ஐந்தாறு பசங்க அவளிடம் வந்து நடந்ததை சொன்னார்கள்.
“நான் நம்பமாட்டேன்” என்று ஆதி அருகே கோபமாக அமர்ந்தாள் மெல்லினா.
“நீ நம்பவேண்டாம். நான் உனக்காக தான் விளையாடினேன்” என்று அகரன் அவன் தோற்கடித்த பையனை பார்த்தான்.
“நான் இப்பவே வாங்கி தாரேன் சீனியர்” என்று அவன் ஓடிச் சென்று ஒரு டெட்டியை வாங்கி வந்தான்.
அகரா, சின்னப்பொண்ணையா காதலிக்கிற? அதுக்கு ரசிகாவே பரவாயில்லை அந்த பொண்ணு சொல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதி, என்ன சொன்னீங்க? என்று கேட்டான்.
ஏய், “அவ என்னோட அக்காவாகிட்டா” என்றான் அகரன்.
அந்த பொண்ணு சிரித்துக் கொண்டு, அப்ப இந்த பொண்ணு உன்னோட தங்கச்சியா? என்று நக்கலாக கேட்டாள்.
என்னது? என்று கோபமாக அவளிடம் மெல்லினா வந்தாள்.
ஜீனியர் அகரனிடம் டெட்டியை கொடுக்க, அதை வாங்கிய அந்த பொண்ணு, “சின்னப் பொண்ணுக்கு இதான் சரியா இருக்கும்” என்று மெல்லினா கையில் கொடுத்தாள். மெல்லினா கோபமாக அதை தூக்கி எறிய வந்தாள். ரசிகா மெல்லினா கையை பிடித்து, “அகரா எனக்கும் வேணும்” என்றாள்.
ரசி, சின்ன பிள்ளை மாதிரி டெட்டி பொம்மைய கேட்டுக்கிட்டு இருக்க?
ஜோ, சின்னப் பொண்ணுகளுக்கு தான் டெட்டி பிடிக்கும் நினைக்காத. பொதுவாகவே பொண்ணுங்க எல்லாருக்கும் பிடிக்கும். உன்னோட அறையில் ஒரு பொம்மை கூட இல்லையா? ரசிகா கேட்க, அது உறவினர் வாங்கி தந்தது.
வாங்கியது அவராக இருந்தாலும் அதனை பாதுகாப்பாக வச்சிக்கிறது யாரு? ரசிகா கேட்க, கார்த்திக் அங்கே வந்தார்.
“மேம்” என்று அவர் ரசிகாவை அழைத்து கொண்டு அருகே வந்தார்.
இதுக்கு மேல யாரிடம் பேசினாலும் பார்த்து பேசு. உன் பக்கமே திரும்பி விடும் என்று மெல்லினாவை பார்த்து, “அவ சொல்றான்னு அகரன் உனக்கு முதலாவதாக கொடுப்பதை தூக்கி எறிய போயிட்ட? உன்னோட காதல் அவ்வளவு தானா மெல்லி?” என்று ரசிகா கேட்டு விட்டு, கார்த்திக் கையில் இருந்த பைல்ஸை வாங்கி ஆதியிடமிருந்து இரண்டு மேஜை தள்ளி அமர்ந்தாள். கார்த்திக் சாரும், அங்கிருந்த பசங்க பொண்ணுங்களுமாய் ஆறு பேர் வந்து அவளுடன் அமர்ந்தனர்.
error: Content is protected !!