Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 5

அத்தியாயம் – 5

ராணி சபையை ஆரம்பிக்குமாறு கூற முதல் பிரச்சனையாக காதல் பிரச்சினை ஒன்று வந்தது.

“ராணி என் பேரு சனம், உங்க ஊரை சேர்ந்து நரேஷ் என் கூட காலேஜ்ல ஒண்ணா தான் படிச்சான், நாங்க ரெண்டு பேரும் மூணு வருஷமா லவ் பண்றோம், ரெண்டு பேரும் சேர்ந்து பார்க் பீச் தியேட்டர்னு எல்லா இடத்துக்கும் போயிருக்கும், ரெண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கும்(என்றாள் தலைகுனிந்து), இப்போ அவங்க அம்மா அவனுக்கு வேற பொண்ணு பார்த்து இருக்காங்கன்னு சொல்லி என்ன விட்டு பிரிஞ்சுட்டான்” என்றாள் அந்த பெண்.

 



Advertisement

“நரேஷ் நீ என்ன சொல்லுற இந்த பொண்ணு சொல்லுறதுலாம் உண்மையா”என்றார் ராணி சிறு கண்டிப்புடன்.

 

“இல்லை ராணி இந்த பொண்ணு யாருனே எனக்கு தெரியாது” என்று பொய் கூறினான் நரேஷ்.

Advertisement

 

Advertisement

“ராணி இவன் பொய் சொல்லுறான் நானும் இவனும் லவ் பண்ணப்போ எடுத்த போட்டோஸ் வீடியோ இதுல இருக்கு” என்று போனை காட்டினாள்.

 

“நம்பாதீங்க ராணி இவ சொல்லுறது எல்லாமே பொய்” என்றான் நரேஷ். நடக்கும் அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் ராணி ஜான்சி.

Advertisement

 

“ராணி இதை பாருங்க இதுல இவரோட குழந்தைக்கு நான் அம்மா ஆக போறதா டாக்டர் குடுத்த ரிப்போர்ட் இருக்கு” என்றாள் சனம்.

 

நரேஷ் “ராணி அது பொய்” என்று சொல்ல வர, “நிறுத்துடா” என்று கூறிய ராணி, “சுதாகர்” என்று அழைக்க அந்த காவலன் கையில் ஒரு பெரிய தட்டைக் கொண்டு வந்தான் அதில் வால், துப்பாக்கி, சாட்டை, கத்தி போன்றவை இருந்தது.

 

ராணி குற்றவாளி செய்யும் குற்றத்திற்கு ஏற்ப அதிலிருந்து தண்டனை அளிப்பர்.ராணியிடம் பொய் கூறினாள் உயிரை கூட எடுத்து விடுவார் என்று பயந்த நரேஷின் தாய் “ராணி என் மகன் செய்த தப்புக்கு அவன் உயிரை எடுத்துறாதிங்க ராணி” என்று அவர் காலை பிடித்து கெஞ்சினார் நரேஷின் தாய்.

 

ராணி கையில் சாட்டையை எடுத்தவர். அதை நரேஷின் தாயிடம் குடுத்து “உன் மகனுக்கு உன் கையால் ஆயிரம் சவுக்கடிகளை கொடு”என்றார்.

 

“உன் மகன் செய்த தப்பிற்கு அவன் உயிரை எடுக்க தான் நினைத்தேன் ஆனால் அவள் வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்து தான் இத்துடன் விட்டுவிட்டேன் மேலும் உன் மகன் இப்படி ஒரு தப்பு செய்தது உன் கவனக் குறைவால் தான் அதனால் தான் உன் கையாள் உன் மகனுக்கு தண்டனை வழங்க கூறினேன்” என்றார் ராணி.

 

ராணி அந்த தாயிடம் அடிக்க ஆரம்பிக்குமாறு கூற அந்த தாயும் அடிக்க ஆரம்பித்தார். மகன் வழியில் துடிப்பதை பார்த்து தாயும் கண்ணீர் வடித்தார்.

 

“ஒரு பையன் உன்ன காதலிக்குறதா சொன்ன அந்த பையன் உண்மையா உன்ன லவ் பண்ணுறானா இல்லையா,அவன் நல்லவனா இல்லையா, கடைசி வரை உன்ன விட்டுடு போகாம இருப்பானா இப்படி எதை பத்தியுமே யோசிக்காம அவன் சொன்ன காதல் வார்த்தைகளை நம்பி உன்ன நீ அவனுக்கு முழுசா குடுத்துட்டு இப்படி நிக்குறியே” என்று ராணி அந்த பெண்ணை பார்த்துக் கேட்க.அதை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிற்கு ராணி அவளை கேட்பது போல் இருந்தது.

 

“இன்னும் எத்தனை காலத்துக்கு தான் பெண்கள் இப்படி காதல் வார்த்தைகளை நம்பி ஏமாறப் போறீங்க, நீங்கயெல்லாம் படிச்சும் முட்டாள்களா தான் இருக்கீங்க, உங்கள ஏமாத்திட்டு அவங்க புது வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு போயிருவாங்க, ஆன பொண்ணுக நீங்க தான் பழசை மறக்கவும் முடியாம, புது வாழ்க்கைய அமைச்சிக்கவும் முடியாம கஷ்டப்படுவீங்க” என்று மித்ராவை ஓர பார்வையால் பார்த்துக் கொண்டே கூறினார்.

 

அதை போல் ராஜமாதாவும் ஷாமை தான் பார்த்துக் கொண்டிருந்தார், ஷாம் அவர்களை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவமானத்தில் கூனிக்குறுகி போய் அமர்ந்து இருந்தாள் .

 

“காதலிக்குறது தப்புக் கிடையாது நீங்க லவ் பண்ணுற பையன் நம்பிக்கை ஆனவனானு முதல்ல தெரிஞ்சிக்கோங்க” என்று அறிவுரை கூறினார் பின் நரேஷிடம் அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார்.

 

பின் பொதுமக்கள் சிலர் அவரது குறைகளைக் ராணியிடம் கூற அனைத்திற்கும் திர்வினை அழைத்தார். இறுதியாக அந்நகரத்தில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி நிரம்பி விட்டதாகவும் அதை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் மக்கள் கேட்க , ராணி உடனே அண்ணன் ராஜராஜனை அழைத்து மனித கழிவு அகற்றும் மெஷின்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி தருமாறு கூறினார் அவரும் உடனே வாங்கி தருவதாக கூறினார்.

 

இறுதியாக பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து எல்லையில் அமைத்துள்ள பாதுகாப்பை பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டார். ஏனெனில் மணிகர்ணிகாபுரியை அடைய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாக முயற்சி செய்துக் கொண்டிருக் கிறார்கள் கலிங்கப்புரியை சேர்ந்த ராஜவம்சத்தினர்.

 

கலிங்கப்புரி தீயப்பழக்களின் உறைவிடம், இங்குள்ள பெண்களை அடிமைகளை போல் தான் ஆண்கள் நடத்தினர். இந்த நகரத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் கட்டுப்பாடும் இல்லாததால் இந்திய அரசாங்கம் இந்த ஊரை தன் வசப் படுத்திக் கொண்டது.கலிங்கபுரியின் தற்போதைய ராஜா வீரசிம்மன் பெயரளவில் மட்டுமே ராஜாவாக உள்ளார்.

 

வீரசிம்மன் அவரது மகன் மகேந்திரசிம்மன் இருவரும் மணிகர்ணிகாபுரியை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். பலமுறை முயன்றும் அவர்களால் மணிகர்ணிகாபுரியும் ராணியும் அங்குள்ள மக்களையும் எதையும் செய்ய முடியவில்லை .

 

ராணிகளே இல்லை என்றால் அந்த ஊரையும் மக்களையும் சுலபமாக கைப்பற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் அதன்படி சங்கமித்ராவை மணந்து அவளை தன் அடிமையாக மாற்ற வேண்டும் இல்லையென்றால் அவளை கொன்று விட வேண்டும் என மகேந்திரசிம்மன் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.

 

சபை முடிவு பெற்றதும் அங்கிருந்த அனைவரும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர், பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ராஜமாதா சங்கமித்ராவின் பதவி ஏற்பு பற்றிப் பேசினார். ஜான்சி ராணி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஜோசியரை வரவைத்து நல்ல நாள் பார்த்து பதவியேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தலாம் என்று ஜான்சி கூறினார்.

 

“சங்கமித்ரா ராணி பதவி ஏற்பதற்கு முன் அவளுடைய திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும்” என்று ராஜமாதா ஜான்சியிடம் கூறினார்.

 

“அம்மா நீங்க சொல்றதும் சரிதாம்மா, கூடிய சீக்கிரமே மித்ராக்கு கல்யாணம் பண்ணி ஆகணும்” என்றார் ஜான்சி.

 

திருமணம் என்ற பேச்சு எடுத்தவுடன் மித்ராவின் முகம் அப்படியே மாறிவிட்டது “கிராணி எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு நான் ரூம்ல போய் கொஞ்சம் தூங்க போறேன்”  என்று கூறிவிட்டு சங்கமித்ரா அங்கிருந்து சென்று விட்டாள்.

 

ராஜமாதா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சங்கமித்ரா இவ்வாறு கூறிவிட்டு சென்றது சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இதை இப்படியே விடக்கூடாது எப்படியாவது சங்கமித்ராவிற்கு திருமணம் செய்து ஆக வேண்டும் என்று ராஜமாதா முடிவெடுத்து விட்டார்.

 

இதுதான் சரியான நேரம் இப்பொழுதே லீமீங்குவை பற்றி அனைவரிடமும் கூறி விடலாம் என்று நினைத்து, அனைவரிடமும் லீமிங்கு பற்றியும் அவர் சங்கமித்ராவை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதைப் பற்றியும் கூறினாள் ஸ்ரேயா.

 

ஜப்பனீஸ் பையன் என்றவுடன் “அது எப்படி ஸ்ரேயா நம்ம குடும்பத்துக்கும் அந்த பையனுக்கும் ஒத்து வரும், அவன் பழக்கவழக்கங்கள் கலாச்சார எல்லாம் வேறயா இருக்கும், நம்ம குடும்ப பழக்க வழக்கத்துக்கு ஒத்து வருமா, அதுவும் இல்லாம கல்யாணம் ஆனப்புறம் மித்ரா டோக்கியோலயே இருந்திருவாளே என் பொண்ண பிரிஞ்சு என்னால இருக்க முடியாது இந்த அஞ்சு வருஷமே நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், இனிமேலும் அவள பிரிஞ்சு என்னால இருக்க முடியாது” என்று கூறி கண் கலங்கினார் சகுந்தலா.

 

சகுந்தலா கூறியதைப் பற்றியும் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர். பின் ஸ்ரேயா “முதல்ல அவர ஒரு விருந்தினரா வர வச்சு அவர்கிட்ட பேசுவோம் , உங்க எல்லாருக்கும் அவர புடிச்சிருந்தா அதுக்கு அப்புறம் மத்தத பத்தி யோசிக்கலாம்” என்றாள்.

 

வினித்தும் லீமிங்குவை பற்றி தான் அறிந்த தகவல் அனைத்தையும் கூறினான். “நம்ம பொண்ணுக்கு இங்க பக்கத்துலயே எதாவது நல்ல மாப்பிள்ளையா பார்க்க கூடாதா, அவ்வளவு தூரம் போய் தான் மாப்பிள்ளை பார்க்கணுமா” என்றார் சோபனா.

 

“ஆன்ட்டி ஷாம் இப்போ இருக்கிற மனநிலையில யாரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்ட, அதுவுமில்லாம லீமிங்குவ பத்தி ஷாமுக்கு நல்லா தெரியும் அவன் மேல ஷாமுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு அதுனால தான் நான் சொல்லுறேன்” என்றாள் ஸ்ரேயா.

 

குடும்பத்தினர் அனைவரும் மித்ராவின் திருமணத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை கூறிக் கொண்டே இருந்தனர். இறுதியாக ஜான்சி “முதல்ல லீமிக்குவ வர வச்சி பேசு பார்ப்போம் அப்புறம் மத்தத பத்தி யோசிக்கலாம்” என்றார்.

 

ஸ்ரேயா லீமிங்குவை தொடர்புக் கொண்டு விருந்தினராக தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள். முதலில் தயங்கிய அவன் மித்ராவை காண வேண்டும் என்ற ஆசையில் வர சம்மதித்தான். பின் இங்க வேலை அதிகமாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து வருவதாக கூறினான்.

 

இங்கு விக்ரம் அறையை விட்டு வெளியே வராததால் மிகவும் கவலையாக அமர்ந்து இருந்தார் வாசுகி அப்பொழுது அங்கு வந்த தன் அண்ணன் சீனிவாசனை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார். பின் விக்ரமின் நிலையை பற்றி கூறினார். சீனிவாசணும் சென்று கதவை தட்டி பார்த்தார் அப்பொழுதும் கதவு திறக்க படவில்லை.

 

இறுதியாக சீனிவாசனின் மனைவி சுதா சென்று கதவை தட்டினர். “சுதா அண்ணி, நான் அண்ணா போய் கதவை தட்டியே விக்ரம் கதவை திறக்கல நீங்க கூப்புட்டா திறந்திரப் போறான்” என்று ஒரு மாதிரி குரலில் கூறினார் வாசுகி.

 

மீண்டும் சுதா கதவை தட்ட அப்பொழுது கதவு திறந்தது. சுதா அறையின் உள்ளே செல்வதை பார்த்து வாசுகி பின்னால் செல்ல அவர் உள்ளே வரும் முன் விக்ரம் கதவை பூட்டிவிட்டான்.

 

“விக்ரம் என்னபா இதெல்லாம்,என் விக்ரம் இப்படியெல்லாம் நடந்துக்கிற என்ன ஆச்சு உனக்கு” என்று ரூமை சுற்றி பார்த்துக் கொண்டே கேட்டார்.

 

விக்ரம் சுதா மடியில் தலைவைத்து படுத்து அழ ஆரம்பித்தான், சுதா “விக்ரம் என்னடா ஆச்சு உனக்கு என் இப்படி அழுகுற ப்ளீஸ் சொல்லுடா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

 

“இந்த வீடியோவ பாருங்க அத்தை” என்று கூறி ஷாம் குடித்து விட்டு அழும் வீடியோவை காட்டினான்.
அதை பார்த்து சுதாவிற்கும் மிகவும் கவலையாக இருந்தது.

 

“எல்லாம் என்னால தான் அத்தை, எப்படி இருந்த பொண்ணு என்னால இப்படி ஆகிட்டாளே, நான் மட்டும் அவகிட்ட பழகாம இருந்து இருந்தா அவ நல்ல இருந்திருப்பா அத்தை” என்று கூறி கையை சுவற்றில் ஓங்கி ஓங்கி குத்திக் கொண்டான்.

 

ஷாம் விக்ரம் இருவரும் கஷ்ட படுவதைப் பார்த்த சுதா “விக்ரம் உன்னோட அம்மா ஓட பிடிவாதத்தால அவங்க வாழ்க்கை அழிஞ்சு போச்சி, இப்போ உன்னோட வாழ்க்கையையும் அவங்க பிடிவாதத்தால அழிஞ்சி போகிறக் கூடாது விக்ரம்” என்றார்.

 

“என்ன அத்தை சொல்லுறீங்க நீங்க” என்றான் விக்ரம்.

 

சுதா வாசுகியை பற்றியும் அவளது கணவரை பற்றியும் அவர்கள் எவ்வாறு பிரிந்தனர் என்பதை பற்றியும் கூற கூற விக்ரமின் முகம் இறுக ஆரம்பித்தது. சுதா அனைத்தையும் கூறி முடித்து விட்டு கடைசியாக “இது உன்னோட வாழ்க்கை விக்ரம் இதுல உனக்கு எது வேணும் வேண்டாம்னு நீதான் முடிவு பண்ணனும், உன் வாழ்க்கை உன் கையில தான் இருக்கு, இப்படியே இருக்கமா ரூம் விட்டு வெளிய வா” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!