Skip to content
Post Views: 1,252

ஒரு மாதம் சென்று இருந்தது மதியை மருத்துவமனையில் சேர்த்து…. வெளி காயங்கள் எல்லாம் மதிக்கு சரியாகி இருந்தது…. சுவாச குழாய் பாதிப்பு சரி செய்ய பட்டது…. ஆனால் எலும்புகள் கூட இன்னும் ஒரு மாதம் ஆகும் என மருத்துவர் கூறி விட்டார்…. அதனால் இன்னும் ஒரு மாதம் அவன் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்….
அந்த சிறைக்கு வேறு ஒரு சிறை காவலர் நியமிக்க பட்டார்…. அவர் ஜான் ஆவார்… முப்பத்தி ஐந்து வயது நேர்மையான அதிகாரி…. பத்து ஆண்டுகளாக சிறை காவலர் பணியை செய்து வருகிறார்…. அவர் கைதிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் நன்றாக படிக்கும் படிக்க ஆசை படும் ஒருவரை படிக்க வைத்து உள்ளார் …. நேர்மை பலருக்கு பிடிக்காதது… அதனால் வருடம் ஒரு முறை மாற்றல் வரும்… அது போல தான் இந்த முறை இந்த சிறைக்கு வந்து உள்ளார்..
Advertisement
இதுவரை பத்து சிறைக்கு சிறை காவலராக இருந்து உள்ளார்…. அங்கு இருக்கும் கைதிகளில் ஒருவரை தேர்ந்து எடுத்து படிக்க வைத்து உள்ளார்…. இது வரை பத்து பேர் தங்களுடைய பட்ட படிப்பை முடித்து உள்ளனர்….
இன்று அந்த சிறை காவலர் ஜான் மதியை பார்க்க மருத்துவமனை வந்துள்ளார்… அவர் மருத்துவர் ராஜிடம் மதியை பற்றி விசாரித்து விட்டு மதியை பார்க்க அவன் அறைக்கு சென்றார்…. அங்கு அவன் தூங்கி கொண்டு இருந்தான்…. அவனை கான்ஸ்டபிள் வேலு எழுப்ப சென்றார்…. இருக்கட்டும் வேலு எழுப்ப வேண்டாம் என்று தடுத்து விட்டு அங்கு இருக்கும் மற்றொரு கட்டிலில் உட்காந்தார்…. இவனோட கேஸ் என்னனு சொல்லுங்க கேட்கலாம் என்று கான்ஸ்டபிள் வேலுவிடம் கேட்டார் ஜான்…
சார் இவன் அவனோட காதலி கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருக்கான்… அந்த பொண்ணு அவன் கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணி இருக்கு… அந்த பொண்ணோட ப்ரண்ட்ஸ் அங்க வந்து இருகாங்க இவன் தப்பா நடக்க முயற்சி பண்ணிட்டு இருக்கும் போது…. அவங்க இவனை தடுக்க முயற்சி செய்யும் போது அந்த பொண்ணோட பிரண்டை கல்லு மேல தள்ளி விட்டு இருக்கான்… அந்த பொண்ணையும் கீழே தள்ளி இருக்கான் அந்த பொண்ணுக்கு பின் மண்டைல அடி அதுனால கோமாவுல இருக்கு… அந்த பொண்ணோட ப்ரண்ட் அந்த பையனும் கோமாவுக்கு போயிட்டான்…
Advertisement
இன்னொரு பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்யும் போது அங்க இருக்க பாரஸ்ட் ஆபீசர் அவனை பின்னாடி இருந்து அடிச்சி மயக்கம் அடைய வெச்சி இருக்காரு…. அதுக்கு அப்பறம் இவன் அரெஸ்ட் பண்ணி உள்ள வெச்சிட்டாங்க…. இவன் ஏற்கனவே அந்த பாரஸ்ட் ஆபீசர அடிச்சி இருக்கான்….. அதுனால தான் இதுக்கு முன்னாடி இருந்த ஜெயிலர் இவன இப்டி அடிச்சி இருக்காரு…. ஜெயிலருக்கு பாரஸ்ட் ஆபீசர் மச்சான் ஆகுறாரு…
Advertisement
சூப்பர் ஸ்டோரி…. ஆனா இவனோட லவர் பேரெண்ட்ஸ் இவன் மேல கேஸ் தரலயாம்…. இவன வார வாரம் அந்த பொண்ணோட அப்பா பார்க்க வருவாராம்…
அந்த பாரஸ்ட் ஆபீசர் காட்டுல இருக்குற மரத்த வெட்டி யாருக்கும் தெரியாம விக்கும் போது தான் இவன் போட்டு அடிச்சதா நான் கேள்வி பட்டேனே….இவன் லவரோட இன்னொரு பிரண்ட் அந்த பொண்ணும் பாரஸ்ட் ஆபீசர் தான் கம்பளைண்ட் பண்ணங்களாம் …. கேள்வி பட்டேனே… இவன் தப்பு செஞ்சா இவன் லவரோட பேரெண்ட்ஸ் தானு கம்பளைண்ட் தரணும் ஏன் தரல ???
சார் அத அவங்க தான் சொல்லணும் நான் எப்படி சொல்லுவேன்…. ஓகே நீங்க வெளிய போயிட்டு நான் கூப்புடும் போது வாங்க…. ஓகே சார் என கூறி கான்ஸ்டபிள் வேலு வெளியே சென்று விட்டார்..
Advertisement
மிஸ்டர் மதியழகன் நீங்க தூங்குற மாதிரி நடிச்சது போதும் எந்திரிங்க … நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டீங்கனு நினைக்குறேன்…. நீங்க சொல்லுங்க என்ன நடந்துடிச்சி…
சார் நான் என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க நான் ஏன் சார் சொல்லணும்… உண்மை ஒரு நாள் எல்லாருக்கும் தெரிய வரும்…. ஓகே உண்மை வெளிய வரும் போது வரட்டும் நீங்க ரெஸ்ட் எடுங்க அப்பறம் உங்க என்ஜினீயர் டிகிரியை இன்னும் கம்ப்ளீட் பண்ணல தானு அதை கம்ப்ளீட் பண்றிங்களா நான் ஹெல்ப் பண்றேன்….
எஸ் சார்…. என் ப்ராஜெக்ட் நான் கம்ப்ளீட் பண்ணிட்டேன்… பட் அந்த ப்ரொஜெக்ட யாரோ கண்டிப்பா யூஸ் பண்ணி இருப்பாங்க…. யாரோ என்ன சார் என்னோட பெஸ்ட் பிரண்டுன்னு நான் நெனச்சிட்டு இருக்க ஒருத்தனே அதை அவன் ப்ரொஜெக்ட்ன்னு சொல்லி மார்க் வாங்கி இருப்பான் சார்…. டோன்ட் ஒர்ரி அத நான் பாத்துக்குறேன் நீ எந்த காலேஜ் படிச்ச….
ஏ எஸ் காலேஜ் சார்…. உன் ப்ரோஜர்க்ட் பத்தி உனக்கு நியாபகம் இருக்கா??? சார் என்னோட உழைப்பு சார் ஒரு வரி கூட மறக்கல சார்… ஓகே டேக் ரெஸ்ட் ஒன் வீக்ல உன்னோட ஒரிஜினல் ப்ராஜெக்ட் உனக்கு கைக்கு வரும்…. அத யாரோ யூஸ் பண்ணி இருந்தா அவனுக்கு அதுக்கான தண்டனை கிடைக்கும்… தேங்க் யூ சார்… ஓகே மதி நான் கிளம்புறேன் என்று கூறி சென்று விட்டார்…
அவர் சென்றவுடன் மதி தன் வாழ்வில் நடந்த அணைத்து விசயத்தை நினைத்து பார்த்தான்…. இனிமேல் அந்த ஊருக்கே செல்ல கூடாது என தனக்குள் முடிவு எடுத்துக் கொண்டான்….
பசுமையூர்
மருத்துவர் அறிவுரையின் பேரில் மருதநாயகம் லட்சுமி அம்மாள் இருவரை தவிர வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை…
தேன்மொழி அவளை வழக்கம் போல் பார்க்க வந்தாள்…. ஆனால் இம்முறை நிலாவை பார்க்க அனுமதி இல்லை என்று அங்கு இருக்கும் தாதி பெண் சொல்லி விட்டார்…. அவள் தாம் தூம் என குதிக்க ஆரம்பித்து விட்டாள்…. தாதி பெண் கண்டுக் கொள்ளாமல் நிலா இருக்கும் அறையை மூடி விட்டார்…
இவள் லட்சுமி அம்மாவிடம் சொல்ல சென்றாள்…. அவரோ நானே தினமும் ரெண்டு தடவ தான் பாக்குறேன் வெளி ஆளுங்கள பாக்க விட கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க….
அப்ப நான் வெளி ஆளா ம்மா… அதற்கு அவர் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் மருதநாயகம் “ஆமா நீ வெளி ஆள் தான்…. பாப்பாவை பாக்க குளிச்சிட்டு தான் நாங்க போறோம் எதோ தொற்று ஏற்படுதாம்… அதுனால வெளி ஆளுங்க உள்ள வர கூடாதுனு சொல்லிட்டாங்க டாக்டர்….. அதுனால கொஞ்ச நாளைக்கு இங்க வர வேணாம் நான் சொல்லும் போது வா” என்று கூறி அவளை அனுப்பி வைத்து விட்டார்…
சே என்ன பாக்க கூட விடல.. பாக்கலனா பிரச்சனை ஆயிடுமே… என்ன பண்ணலாம் பாக்க விட மாட்டிங்குறாங்கனு வெளிய கூட சொல்ல முடியாதே நம்மாலே யாருக்கும் தெரியாம வரோம்… சரி இத போய் மாமா கிட்ட சொல்லலாம்…
என்ன ம்மா போய் அவளை பாத்துட்டு வந்துட்டியா என்று சின்னசாமி தேன்மொழியிடம் கேட்டார்… இல்ல மாமா போய் பாக்க முடியல… அவளுக்கு எதோ இன்பக்சன் ஆகுதாம்… அதுனால டாக்டர் அவளை பாக்க விட வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… அவங்களே தினமும் ரெண்டு தடவ தான் பாக்குறாங்களாம்… என்று தேன்மொழி சின்னசாமியிடம் கூறினாள்
சே இப்ப என்ன பண்ணலாம்… அந்த பொண்ணு கோமால இருந்து எழுந்துக்கவே கூடாது… இந்த பையன் பண்ணி வெச்ச வேலையில தப்பே பண்ணாத மதிய ஜெயிலுக்கு அனுப்பியாச்சு…. சாட்சி சொல்ல வேண்டிய பொண்ண கோமால இருந்து எழுந்துக்காம இத்தனை நாள் பாத்தாச்சு…. இனிமே பண்ண முடியாது போல…
இதுல வேற எவனோ அறிக்கை விட்டு இருக்காங்க மதி மேல தப்பு இல்லனு…. இனிமே என்ன நடக்க போகுதோ தெரியல… ஒரு மாசமா எவன் என்ன பண்ண போறாங்கன்னு தெரியாம பயந்தே இருந்தாச்சு…. இவன யாருக்கும் தெரியாத எடத்துல வைக்கணும் உண்மை தெரிஞ்சா கூட அவன் இங்க இல்லனு சொல்லி காப்பாத்திடலாம்….
சரி ம்மா நீ உள்ள போ உங்க அத்தையும் தேவாவும் அவனை பாக்க தோப்பு வீட்டுக்கு போயிட்டாங்க… சரி மாமா என்று கூறி தேன்மொழி உள்ளே சென்று விட்டாள்….
காட்டில் இருக்கும் பழைய இடிந்த வீடு
இப்ப ஐயாக்கு எப்படி இருக்கு ??? என்று அந்த எக்ஸ் (X) மனிதன் இன்னொருவரிடம் கேட்டான்…. அவன் நல்லா இருக்கான்…. நீ ஏன்டா இங்கயே இருக்க வீட்டுக்கு போறீயா இல்லையா….
தினமும் போயிட்டு தான் இருக்கேன்…. நீங்க எங்களுக்கு உதவி பண்ணுவிங்கனு நாங்க நினைக்கவே இல்ல அண்ணா வீட்டுலயே தப்பு பண்ணவங்க இருக்காங்க ஆனா எங்களுக்கு உதவி பண்றிங்க….
அவன் என் நண்பன் டா அதுக்கு மேல அவன் எனக்கு அண்ணன் நீ உதவி பண்ணல அது மாற்றி தான் நானும்…
அவனுக்கு எதிரா ஒரு தப்பு நடக்குதுன்னு முதல்லயே தெரிஞ்சி இருந்தா அவனை எப்பயோ காப்பத்தி இருக்கலாம் ஏன் டா அப்பயே சொல்லல …
நீங்க உதவி பண்ணுவிங்கனு நாங்க நினைக்கல அது தான் சொல்லல…. சரி ண்ணா இப்ப கிளம்புங்க…. அடுத்த வாரம் வாங்க….
டேய் பெரியம்மா எப்படி இருக்காங்க??? அப்டியே தான் இருக்காங்க எந்த முன்னேற்றமும் இல்ல அண்ணா…. பாத்துக்கோங்க நான் உதவி பண்றனு யாருக்கும் தெரியாதுல…. அப்பறம் அறிக்கை விட்டது நீ தான்னு மருதநாயகம் ஐயாக்கு தெரியாதுல…. தெரியாது ண்ணா…. சரி டா வரேன் என்று கூறி சென்று விட்டான் தேவா…. ( ஆம் சின்னசாமியின் மகன் தேன்மொழியின் கணவன் தேவா தான் )…
சின்னசாமியின் தோப்பு வீடு
வா தேவா… கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா என்று சித்ரா தன் பெரிய மகனிடம் கேட்டார்… போயிட்டு வந்துட்டேன் ம்மா இந்தாங்க விபூதி என்று தன் தாயிடம் நீட்டினான் தேவா… அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் என் மகன் நல்ல படியா எழுந்திரிக்கனும் என்று வேண்டி கொண்டு சித்ரா தன் இளைய மகன் சூர்யாவிற்கு வைத்தார்….
அவர் அவனுக்கு விபூதி வைக்கும் போது “அம்மா உண்மை தெரிஞ்சா நீ எப்படி ம்மா தாங்குவ நம்ம வீட்டுல இருக்குறவங்க மேல தப்பு இருக்குனு நீ ஒத்துப்பியா ம்மா” என்று தன்னக்குள் மருகிக் கொண்டு சூர்யாவின் முகத்தை வெற்று பார்வை பார்த்தான் தேவா…
கோமாவில் இருக்கும் நிலா தன் மன்னவனைக் காண்பாளா ??? உண்மையாக நடந்த குற்றம் என்ன ??? இனி வரும் பதிவில் …..
error: Content is protected !!