Skip to content
Post Views: 8,942
அத்தியாயம் 5:
மது திரும்பியவுடன் பிரபஞ்சனும் கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.
பிரபஞ்சனை பார்த்து தலையை திருப்பிக்கொண்ட மது, ஹேரியிடம் “போதும் ஹேரி சிரிச்சது. ஏற்கனவே எல்லா பொண்ணுங்களும் உன்னைத்தான் அடிக்கடி திரும்பி பார்த்திட்டு இருந்தாங்க. இப்ப நீ சத்தம் போட்டு சிரிச்சதும், இதுதான் சாக்குன்னு எல்லாரும் நல்லா திரும்பி உன்ன சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க”, என்றாள்.
மது அவ்வாறு கூறியதும் , ஹேரி மதுவின் கண்களையே பார்த்து ஆழ்ந்த குரலில், “எல்லோரும் என்னை பாக்கிறது எனக்கு தெரியும் ஹனி , ஆனா நீ என்ன பாக்க மாட்டியா” என்று அமைதியாக கேட்டான்.
Advertisement
ஒரு நிமிடம் மது அவன் நீல கண்களில் கட்டுண்டு, அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவர் மற்றவர் கண்களில் ஆழ்ந்திருந்தனர்.
அப்பொழுது டீனா வந்து மதுவிடம் வேறு உணவு வேண்டுமா என்று கேட்டதும் தான் இருவரும் கலைந்தனர்.
Advertisement
மது டீனாவிடம் பில் கேட்டு அனுப்பிவிட்டு , மது ஸ்டெடி, ஸ்டெடி. இந்த நீல கண்ணன், அவன் கண்ண வச்சி உன்ன மயக்க பாக்குறான். முடிஞ்ச அளவு இவன்ட இருந்து சீக்கிரம் எஸ்கேப் ஆகிடு என்று யோசித்து கொண்டே, அவனை பார்த்தால் அவனும் எதோ யோசித்து கொண்டிருந்தான்.
Advertisement
அதனால் மது அவனை பார்த்து, “ஹேரி என்ன யோசனை, எனக்கு நேரமாகிடுச்சி, சீக்கிரம் உன்னோட டேட்டிங் கதையை முடி” என்று கேட்டாள் .
அதற்கு ஹேரியும் “அவ்ளோதான் மடு, லிவிங் டுகெதர்ல இருப்பவங்க சில பேர் பேமிலி வேணுன்னு நினைச்சாங்கன்னா கல்யாணம் செய்து குழந்தையும் பெத்துப்பாங்க, சில பேர் அவங்களோட இணை, அவங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிட்டுனா பிரேக் அப் செய்துட்டு வேற இணை தேடுவாங்க” என்றாள்.
“அவ்ளோதான் இல்லையா ஹேரி , அப்படின்னா உங்க செக்ஸுவல் லைஃப்க்கு ஒரு கம்பெனியன் தேடறீங்க. அதான உங்க டேட்டிங்” என்று சாதரணமாக கேட்டாள் மது.
Advertisement
ஆச்சரியமாக அவளை பார்த்தான் ஹேரி . இவ்வளவு நேரம் பார்த்த சுட்டி பெண்ணாக இல்லாமல், இந்த கேள்வியில் வேறு மாதிரி தோற்றமளித்தாள் மது.
“அப்படியில்ல மடு, செக்ஸ் மட்டும்தான் வேணுனா, டெய்லி ஒரு ப்ரோஸ்ட்டிட்டியுடிடம் செல்லலாமே மடு. உன்னை தேடி வரவேண்டிய அவசியமில்லை அல்லவா. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்க போய்தான டேட்டிங் கேட்டேன்”
“அந்த பிடித்தம் எவ்ளோ அளவு என்பதும், அது எவ்ளோ நாள் நீடிக்கும் என்பதில் தான் பிரச்சனையே”
“அதைத்தான் நாங்க பழகி பாத்து முடிவெடுப்போம்”
“எங்களுக்கு பல பேரோட பழகி பாக்கிறதெல்லாம் ஒழுக்கமில்லாத செயல் ஹேரி, அப்புறம் ஒருத்தரோட வாழ்ந்துட்டு ஈஸியா பிரிஞ்சிபோய் இன்னொருத்தர தேர்ந்தெடுக்கிறது எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது”
“இல்லையே நா இங்க சிலபேர் இண்டியன்ஸ் டேட்டிங் போறத பாத்துருக்கனே”
“இருக்கலாம் இங்கேயே பிறந்து வளந்தவங்க , எண்ணப்போக்குல மாற்றம் உள்ளவங்க போகலாம். என்னாலலாம் முடியாது ஹேரி. எங்கம்மா தமிழ் டீச்சர். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்னு என்னை வளத்தவங்க”
“அப்ப உன்னோட இணையை நீ எப்படி தேர்ந்தெடுப்ப”
“அது எங்க அப்பா, அம்மா தான் செலக்ட் பண்ணுவாங்க”
“உனக்கு பிடிச்சவர உன்னோட பேரன்ட்ஸ்க்கு எப்படி தெரியும்”
“இவ்ளோ நாள் என்ன வளத்தவங்களுக்கு தெரியாதா, எனக்கு எப்படி பிடிக்கும், யாரை பிடிக்கும்னு. அப்புறம் என்னோட சம்மதத்தோடு, எனக்கும் மாப்பிளையை பிடிச்சாதான் டிசைட் பண்ணுவாங்க”
“உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பிடிக்கும் மடு”
“எனக்கு கருப்பா, நல்ல அடர்த்தியான மீசையோட , ஷார்ப் கண்களோட நம்ம ரமணிச்சந்திரன் அம்மா நாவல்ல வர ஹீரோ மாதிரி இருக்கணும்”
சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்த ஹேரி “அவன் உன்ன நல்லா பார்த்துக்குவானா ஹனி” என்றான்.
இவன் ரொம்ப டீப்பா போறானோ என்று அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் மது.
“ஹே இரு, இரு. என்ன ஹனினு கூப்பிட்ற என்னை”
“உனக்குதான் நான் உன்ன மடுனு கூப்பிடறது பிடிக்கலையே , அதான் உன் பேர் மீனிங் வச்சு கூப்பிடுறேன். அதை விடு ஹனி, உங்க வீட்ல பாக்கிற மாப்பிள்ளயோட நீ கடைசிவரை சந்தோசமா இருப்பியா”
“அதைப்பத்தி உனக்கென்ன கவலை ஹேரி . நீ உனக்கான அடுத்த டேட்டிங் ஆளை செலக்ட் பண்றது பத்தி கவலைபடு. இப்ப ஆளை விடு” என்று வீட்டுக்கு கிளம்ப தயாராகினாள் மது.
ஆனால் ஹேரிக்கு கிளம்ப மனதே இல்லை. அந்த நேரம் சரியாக பார்த்திபன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
பார்த்திபன் அந்த ரெஸ்டாரண்டில் செஃப்பாக இருக்கிறான். உள்ளே வந்தவன் நேராக மதுவையும் ஹேரியையும் பார்த்துக்கொண்டே, அவர்களிடம் தான் வந்தான்.
மதுவுக்கு, பார்த்தியை பார்த்ததும் முகம் மலர்ந்து விட்டது.
“அண்ணா , என்னாச்சி இன்னைக்கு லேட் ?” என்று கேட்டாள் .
“சிட்டி வரைக்கும் போயிருந்தேன் மது , அதான் லேட்டாயிடுச்சி” என்றவன் ஹேரியை கேள்வியாக பார்த்தான்.
மதுவும் ஹேரிக்கு பார்த்தியை அறிமுகப்படுத்தி வைத்தாள் “ஹேரி இது என் அண்ணா பார்த்திபன் , எங்கள் ஊர்தான்”
ஹேரியும் பார்த்தியிடம் “ஹாய் பார்ட்டிபன், ஐயம் ஹேரி ரிச்சர்ட் ” என்று அறிமுகமாகி கொண்டான்.
பார்த்தியும் ஹேரியிடம் “ஹாய் ஹேரி , ஏதாவது சாப்பிட்டீர்களா” என்று கேட்டான்.
சற்று யோசித்த ஹேரியும் “இன்னும் இல்லை, எனக்கு இப்பொழுதுதான் பசிக்கிறது. மது நான் உங்கள் உணவை சாப்பிட்டதில்லை. எனக்கு சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்ய உதவி செய்கிறாயா” என்று கேட்டான்.
வீட்டுக்கு கிளம்புனா இவன் விட மாற்றானே, நம்மள விட கூடாதுன்னுதான் இவன் பசிக்குதுனு சொல்றானோ என்று அவனை சந்தேகமாக பார்த்தாள் மது.
ச்ச ச்ச இருக்காது , பாத்தா பச்சை மண்ணா இருக்கான். நம்ம ஊரு ஆளுங்க மாதிரி பிளான் பண்றதெல்லாம் இவனுக்கு வராது. பாவம் உண்மையிலேயே பசிச்சிருக்கும் .
பார்த்தி அண்ணாட்ட வேற இவன யாருனு சொல்றது. உண்மைய சொன்னா கண்டிப்பா திட்டுவாங்க. சில பல உண்மைகளை மறச்சிட வேண்டியது தான் என்று நினைத்து கொண்டே மது ஹேரியிடம் ஓகே சொல்லிவிட்டு திரும்பவும் அமர்ந்து கொண்டாள் .
பார்த்தியும் நான் வெயிட்ரசை அனுப்பி வைக்கிறேன் என்று மதுவை ஒரு பார்வை பார்த்து விட்டு கிட்சனுக்கு சென்று விட்டான்.
ஐயையோ இந்த அண்ணா வேற ஒரு மார்க்கமா பாத்துட்டு போறாங்களே, என்னன்ன கேள்வி கேக்க போறாங்களோ தெரியலையே என்று மது சிந்தித்து கொண்டிருந்தாள்.
பிறகு ஹேரியை பார்த்து, “எங்க ஊர் சாப்பாடெல்லாம் ரொம்ப காரமா இருக்கும் , உனக்கு ஒத்துக்குமா , இதுக்கு முன்னாடி ஏதாவது சாப்ட்ருக்கியா” என்றாள்.
“உங்க புட் நா சாப்பிட்டதில்லை, ஆனா நா நல்லா காரம் சாப்பிடுவேன் ஹனி, எண்ணெய் மட்டும் கம்மியான உணவா சொல்லு” என்றவுடன் மதுவும் யோசித்து பார்த்துவிட்டு இட்லியே சொல்லிடுவோம் முடிவு செய்து, டீனாவை கூப்பிட்டு இட்லியே ஆர்டர் செய்தாள்.
அச்சமயம் ஹேரிக்கு போன் கால் வந்ததால் அவன் மதுவிடம் அனுமதி கேட்டுவிட்டு பேச ஆரம்பித்தான்.
சரி நாமும் அம்மாவிடம் பேசி விடுவோம் என்று ஹேரியிடம் மொபைலை காட்டி சொல்லிவிட்டு உணவகத்தின் வாயிலுக்கு வந்து பேச ஆரம்பித்தாள்.
போனை எடுத்ததும் “நா எப்ப கால் பண்ணா கட் பண்ணிட்டு இப்ப கால் பண்ற மது. இவ்ளோ நேரம் என்ன பண்ணின. உனக்கு ஆபீஸ் டைம் முடிஞ்சுதானே நா கால் பண்ணினேன். வீட்டுக்கு போய்ட்டியா. ஏன் வீடியோ கால் பண்ணல” என்று பொரிய ஆரம்பித்துவிட்டார் மீனாட்சி.
ஸ்ஸப்பா இப்பவே கண்ணா கட்டுதே என்று நினைத்த மது “தாயே மீனாட்சி. மொதல்ல மூச்சை விடு. தம் கட்டி பேசி ஏதாவது ஆகிட போகுது” என்றாள்.
“என்னடி உனக்கு எகத்தாளமா இருக்கா? அவ்ளோதூரம் பொம்பள பிள்ளையை அனுப்பிவச்சிட்டு கவலைப்பட்டுட்டு இருக்கது எனக்குதான தெரியும்”
“அம்மா ட்ரைன்ல இருந்தேன், கூட்டமா இருந்தது. அதான் பேச முடியல. இப்ப பார்த்தி அண்ணா ரெஸ்டாரண்ட்ல தான் பசிச்சுதுனு சாப்டுட்டு உன்னட்ட பேசிட்ருக்கேன் போதுமா”
“சரிடா, நீ கால் எடுக்கல, திரும்பவும் போன் பண்ண இவ்ளோ நேரமான உடனே அம்மாவுக்கு பயமா இருந்தது மது. பார்த்தி பக்கத்துல இருக்கானா”
“சாரிம்மா, நான்தான் திரும்ப கால் பண்ண மறந்துட்டேன் . பயப்படாதம்மானு எவ்ளோ தடவை உனக்கு சொல்றது. இங்க ஒரு பயமும் இல்ல. நா சேப்டியாதான இருக்கேன்”
“நீ ஈஸியா சொல்ற மது, எப்படா நீ ஊருக்கு வருவன்னு இருக்கு எனக்கு . ஜனனி இருந்தப்பயாவது கொஞ்சம் பயமில்லாம இருந்தேன். ஏதோ பார்த்தி அங்க இருக்கதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதல்”
“சரிம்மா நா வீட்டுக்கு போய்ட்டு வீடியோ கால் பேசறேன். பார்த்தி அண்ணா கிச்சன்ல இருக்காங்க. நா நாளைக்கு பேச சொல்றேன் அவங்கள. இப்ப வைக்கட்டுமா”
“சரிடா வச்சிரு. சீக்கிரம் வீட்டுக்கு போ” என்று போனை வைத்துவிட்டார் மீனாட்சி.
இங்கு மதுவுக்குதான் வருத்தமாக இருந்தது. எல்லாம் இந்த ஹேரியால வந்தது இவன, என்று புலம்பிக்கொண்டே ரெஸ்டாரண்ட் உள்ளே போனாள். அங்கு போனால் ஹேரி முகமெல்லாம் சிவந்து கண்ணீர் வழிய பலமாக இருமிக்கொண்டிருந்தான். பக்கத்தில் டீனா கையை பிசைந்து நின்று கொண்டிருந்தாள்.
வேகமாக ஹேரிக்கு அருகில் சென்ற மது அவன் சாப்பிட்ட பிளேட்டை பார்த்து நடந்ததை யூகித்து கொண்டாள் . டீனாவிடம் ஒரு கப் தயிர் கொண்டுவர கூறினாள். அவளும் அவசரமாக எடுத்து வந்து கொடுத்ததும் ஹேரியிடம் கொடுத்து தயிரை சாப்பிட சொன்னாள். அவனும் அவசரமாக சாப்பிட்டான். நான்கு ஸ்பூன் தயிர் சாப்பிட்ட பிறகுதான் இயல்புக்கே திரும்பினான்.
மது “இப்ப ஓகேவா ஹேரி ” என்றாள்.
டிஸ்யூவில் முகத்தை துடைத்துக்கொண்டே “நொவ் ஓகே மடு” என்றான்.
பிறகுதான் மது டேபிளை கவனித்தாள். இட்லியுடன் தொட்டுக்கொள்ள சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி மூன்றும் இருந்தது.
ஆனால் ஹேரி மற்றதை விட்டுவிட்டு நல்ல கலராக இருந்த கார சட்னியை முதலில் சாப்பிட்டுருக்கிறான். மதுவிற்கு ஒரே சிரிப்பு தாங்க முடியவில்லை. சிரமப்பட்டு அடக்கி கொண்டாள்.
டீனாவை அழைத்து, கொஞ்சம் கிட்சனில் இருந்து நல்லெண்ணையும், நெய்யும் கொண்டுவருமாறு கூறினாள்.
இரண்டும் வந்தவுடன் அவளே சாம்பாரில் நெய்யையும், நல்லெண்ணெய்யை காரச்சட்னியிலும் தாராளமாக கலந்து அவனுக்கு பரிமாறினாள்.
“இப்ப சாப்பிடு ஹேரி, ஆனா கொஞ்சமா தொட்டுக்கொள்” என்றாள்.
ஹேரியும் பயந்துகொண்டே முதலில் சாம்பாரை தொட்டு சாப்பிட்டு பார்த்தான்.
பிறகு மதுவை நிமிர்ந்து பார்த்து கட்டை விரலை காட்டினான்.
“இட்ஸ் வெரி டெலீசியஸ் ஹனி” என்றான்.
மது காரச்சட்னியை சுட்டிக்காட்டினாள் சாப்பிடுமாறு.
ஹேரி பயந்துபோய் தலையாட்டினான் “வேண்டாம் மடு” என்று.
“என்ன ஹேரி , நான்லாம் இந்த சட்னியை அப்படியே சாப்பிடுவேன் இட்லியில்லாமல். எங்க ஊரு கார சட்னிக்கே பயந்தா எப்படி. அப்புறம் எப்படி எங்க ஊரு பொண்ணுங்களோட டேட்டிங் போவ”
என்று கூறிய மதுவை நிமிர்ந்து ஆழமாக பார்த்த ஹேரி , பிறகு கார சட்னியை மட்டுமே வைத்து இரண்டு இட்லியையும் வேகமாக சாப்பிட்டான்.
மதுதான் பதறிப்போனாள் “ஹே வேண்டாம், கொஞ்சமா சாப்பிடு, அப்புறம் வயிறு வலிக்க ஆரம்பிச்சிடும்” என்று சொல்ல சொல்ல கேட்காமல் முழுவதும் சாப்பிட்டுவிட்டு,
“இப்பொழுது என்னோடு டேட்டிங் வருவியா ஹனி” என்று கேட்டான்.
டேய், காரச்சட்னிக்கெல்லாமா நா டேட்டிங் வரமுடியும். ஐயோ மது எல்லாரும் சொல்ற மாதிரி, உன் வாய்தான் உனக்கு எதிரி என்று நொந்துபோய் அவனை பார்த்தாள்.
ஆர்வமாக அவள் முகத்தையே பார்த்தவனை பார்த்து , “முதல்ல இந்த தயிர சாப்பிடு” என்று மிச்சமிருந்த தயிர் பௌலை எடுத்து கொடுத்தாள் .
அவனும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டான். பிறகு மதுவின் முகத்தை பார்த்து “நீ சொன்ன ஹீரோ மாதிரி நா இல்லனு தான் என்னோட டேட்டிங் வர மாட்றியா ஹனி, நா வேண்ணா மீசை வளர்க்கவா” என்று கேட்டான்.
டேய் இப்பவே நீ ஹாலிவுட் ஹீரோ கணக்கா தான் இருக்க என்று நினைத்துக்கொண்ட மது, “நீ சின்னபிள்ளத்தனமா நடந்துக்கற ஹேரி , நீ எப்படி இருந்தாலும், என்ன பண்ணினாலும் உங்க டேட்டிங் கான்செப்ட் எனக்கு ஒத்து வராது”
“அதான் ஏன் மடு. நீங்க திருமணம்னு லைசென்ஸ் வாங்கிட்டு செக்ஸ் வச்சிக்கிறிங்க . அப்புறம் கல்யாணம் முடிஞ்சிட்டு , அப்டின்ற கட்டாயத்துக்காக காலம் முழுவதும் பொய்யா வாழறீங்க. இதான உங்க வெட்டிங் கான்செப்ட்”
“அப்படியில்ல ஹேரி . செக்ஸ்காக மட்டும் நாங்க மேரேஜ் பண்ணிக்கிறது இல்ல. அவங்கவங்க இணையோட காதல், காமம், கடமை, உரிமை, இன்பம், துன்பம் எல்லாத்துலயும் பங்கெடுக்கணும்னு முடிவு பண்ணிதான் நாங்க கல்யாணம் செஞ்சுக்கறோம். அந்த கமிட்மெண்ட காப்பாத்தணும்னுதான் கடைசிவரை ஒண்ணா வாழறாங்க, அது கட்டாயத்துனாலயும் இருக்கலாம். ஆனா அதுல ஒரு கொள்கையோடு வாழறோம். இன்னும் நிறைய பேர் காதலோடவும் வாழறாங்க” என்ற மது தொடர்ந்தாள்.
“உண்மைதான் செக்ஸ் வச்சுக்க லைசென்ஸ் வாங்குறோம் . எதுக்கு? நாங்க குடும்பமா, ஒரு சமூகமா வாழறோம் . அந்த குடும்பத்துக்கிட்ட சமூகத்துகிட்ட, நாங்க இன்னையிலிருந்து கணவன் மனைவி, நாங்க சேர்ந்து எங்க சுக, தூக்கத்துல இணைஞ்சி வாழ போறோம், அப்படினு அறிவிச்சிட்டு அவங்க சம்மதத்தோட வாழறோம். இதனால ரெஸ்பான்சிபிலிட்டி வருது, மரியாதையும் கிடைக்குது. அதனாலதான் இன்னைக்கும் எங்க ஊர் கலாச்சாரம் நிலைச்சிருக்குது.
ஆனா நா இதை சொல்றது எதுக்குன்னா எங்க கல்ச்சர் தான் பெருசு, உங்க கல்ச்சர் தப்பு அப்டின்னு ஆர்கியூ பண்றதுக்காக இல்ல. எங்க கல்ச்சர் வேற, உங்க கல்ச்சர் வேற அப்டினு உன்னட்ட புரிய வைக்கத்தான். அதனால உங்க டேட்டிங்க்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு சொல்லத்தான் இவ்ளோதூரம் பேசினேன்” என்று பேசிய மது,
“கடைசியா இந்த மதுவையே கருத்து சொல்ல வச்சிட்டாய்ங்களே, டேய் ஹேரி அந்த பெருமை உன்னையே சாரும்” என்று தமிழில் கூறினாள் .
ஹேரி அவளை கவனிக்கவில்லை. யோசித்து கொண்டிருந்தான்.
டீனா வந்ததும் இருவருக்குமான பணத்தை செலுத்தி விட்டு மது கிளம்பினாள். அதற்குள் பார்த்திபனும் அவளிடம் வந்து , “மது நேரமாயிட்டு நீ என்ன இன்னும் கிளம்பாமல் உக்காந்துருக்க” என்று கேட்டான்.
அதில்தான் சுயநினைவுக்கு வந்த ஹேரி பார்த்திபனை பார்த்து என்னவென்று கேட்டான். “இல்ல மிஸ்டர் ஹேரி, இது புறநகர் பகுதிதான . எட்டு மணிக்கு மேல பெருசா ஆள் நடமாட்டம் இருக்காது, இவ வீடு வேற நாலு தெரு தள்ளி இருக்குது. அதனால்தான் அவளை கிளம்ப சொன்னேன்” என்றான்.
“ஒ சாரி மது. நா வேணுனா உன்ன ட்ரோப் பண்ணவா”
“நீயே என்னோட ட்ரைன்ல வந்த என்ன எப்படி ட்ரோப் பண்ணுவ” என்று மது கேட்டாள் .
“என் பிரென்ட் கார் வச்சிட்டு எனக்காக வெளில வெயிட் பண்றான், அதான் ட்ரோப் பண்ணவா” என்று மீண்டும் கேட்டான்.
அதற்கு பார்த்தி “பரவாயில்லை ஹேரி, நானும் வீட்டுக்குத்தான் கிளம்புறேன். மது வீட்டை தாண்டித்தான் என்னோட வீட்டுக்கு போகணும். அதனால நானே அழைச்சிட்டு போய்டுவேன். நானும் அவளோட போறதுனாலதான் இவ்ளோ நேரம் அவ உங்கட்ட பேசிட்டு இருக்கும்போது ஒன்னும் சொல்லல. இல்லனா முன்னாடியே அவளை கிளம்ப சொல்லியிருப்பேன்” என்று அவனிடம் பை சொல்லிவிட்டு மதுவை பார்த்து வர சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
மதுவும் ஹேரியிடம் “பை ஹேரி , உன்ன சந்திச்சதுல எனக்கு சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
ஹேரி சிறிது நேரம் யோசனையில் இருந்துவிட்டு, அவனும் கிளம்பி வெளியில் வந்து, மது எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று பார்த்தான்.
இல்லை என்றதும் சிறிது தூரத்தில் நிறுத்தியிருந்த அவன் பிளாக் பெர்ராரி ரோமாவை நோக்கி வேக நடையில் சென்றான்.
அவன் நண்பன் ஜானை நகர சொல்லிவிட்டு அந்த கருப்பு குதிரையில் ஏறி பறக்க விட்டான். அந்த குதிரையும் ஆஸ்திரேலியா நகரத்தின் போக்குவரத்தில் கலந்து சீறி பாய்ந்தது.
error: Content is protected !!