Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(னை)து சுகமானதே… 25

கற்பனை 25

சாகேத் அவ்வளவு சீக்கிரம் தனது நண்பனை எதிர்பார்க்கவில்லை. குடும்பஸ்தன் அவனை வர சொல்லியிருக்க கூடாதுஎன்றுதான் நினைத்தான். அனால்,தனது துன்ப நேரத்தில் தன்னுடன் இருக்கவும் ,அமைதியாக படிக்கவும், காதலித்த பெண்ணைக் கரம் பிடித்து இன்று மிகவும் சந்தோஷமாக மனைவி-குழந்தை,பெற்றோர் என்று வாழ்வதற்கும் காரணம் சாகேத் தான் என்ற எண்ணம் நரேந்திரனுக்கு எப்போதுமே உண்டு. அதனாலேயே இவ்வளவு சீக்கிரம் நண்பனைக் காண ஓடி வந்திருந்தான். 



Advertisement

நண்பனைக் கண்டதும் சூரியனாய் பிரகாசம் கொண்ட சாகேத்,பிரச்சனைகள் அனைத்தையும் தூர நிறுத்தி வைத்துவிட்டு ,”வாடா ..எதுக்கு இவ்வளவு வேகமா இங்கே வந்தே? சாரு பயந்திருப்பா. உனக்கு போன் பண்ணி பேசணும்னுதான் யோசிச்சேன், பட் உன்னை பாக்கணும் போலவும் இருந்துச்சுஎன்றவாறே வாசலில் வந்திருந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தான்.

சாகேத்துக்கு எங்கே நண்பனை பார்த்தவுடன் அவன் மீது சாய்ந்து அழுதுவிடுவேனோ என்ற பயம் மனதினுள் இருந்தது.அந்த எண்ணத்திலிருந்து விடுபட தான் இத்தனி அவசரமாக சமையல் அரை நோக்கி படையெடுப்பு. எவ்வளவுதூரம் போகிறான் என்று பார்க்க நரேந்திரனுக்கும் எண்ணம் வந்தது.அவனும் ஏதும் பேசாமல் விருந்தினர் அறைக்குள் சென்று தனது பெட்டியை வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.

Advertisement

Advertisement

வீட்டில் ஜான்வி இல்லைஎன்பது நரேனுக்கு புரிந்துவிட்டது. அது சம்மந்தமாகத்தான் சாகேத் தன்னிடம் பேச அழைத்திருப்பான் என்று நம்பினான். மிகவும் ஆபத்தான பேச்சு. தான் எந்தவித காரணம் கொண்டும் நண்பனின் உணர்வுகளுடன் விளையாடுவதுபோலவோ,கிண்டல் செய்வது போலவோ தன்னை மீறியும் செய்துவிடக் கூடாது என்று நினைத்தவாறே குளித்துவிட்டு வந்தான்.

அதன்படிக்கு சாகேத்திடம் அவன் மனைவி குறித்தோ,பிரச்சனை குறித்தோ அவனாக எந்த கேள்வியும் எழுப்பவில்லை.சாகேத்துக்கு நரேனின் எண்ணம் புரிந்தது. அவன் வந்தவுடனேயே தனது நிலை பற்றி எதுவும் சொல்லி அவனது காலை புத்துணர்வை வீழச் செய்ய  விரும்பாதவனாக, நரேந்திரனிடம் காபி கோப்பையை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்து பருகத் தொடங்கினான். இருவருக்குமே காலை நேர காபி சுகமாக தொண்டைக்குள் இறங்கியது.

Advertisement

வெகு மாதங்கள் கழித்து சாகேத்தின் கையால் காபி. அதன் ருசி நரேந்திரனை சாகேத்துடனான பெங்களூரு நாட்களை நோக்கி மீண்டும் அழைத்து சென்றது.  சுகமான நினைவுகள் அவை. சாகேத் நண்பனாகவோ,உடன்பிறந்தவனாகவோ நரேனை நடத்தியது இல்லை.கிட்டத்தட்ட தனது பிள்ளை போல்தான் பார்த்துக்கொண்டான். பெற்றோரிடம் உணராத பாசத்தை சாகேத்திடம் உணர்ந்தான் நரேந்திரன்.அதனாலேயே நண்பன் மீது நரேனுக்கு தனி அக்கறையும் உண்டு.

காலியான காபிக்கோப்பைகளை நரேன் சமையல் அறைக்குள் எடுத்து செல்ல,”நா குளிச்சிட்டு வரேண்டா.ரெண்டுபேரும் போய் காய்கறி வாங்கிட்டு வந்து சமைக்கலாம்என்று குரல் கொடுத்தவாறே சாகேத் தனது அறைக்கு சென்றுவிட்டான். குளித்து வேறு உடை மாற்றிக்கொண்டு வந்த சாகேத்தின் கண்களில் லேசாக சிவந்திருந்தது.அதன் மெல்லிய வீக்கம் அவன் அழுதிருப்பது பற்றி நரேந்திரனுக்கு செய்தி சொன்னது. நரேந்திரனுக்கோ என்ன விஷயம் என்று தெரியாவிட்டாலும்கூட மனம் கனத்தது.

இருவருமாக அருகில் இருக்கும் காய்கறி கடைக்கு சென்று தேவையானவற்றை வாங்கி வந்து சமைக்காத தொடங்கினார்கள். சாகேத் எப்படி ஆரம்பிப்பது என்று  யோசித்துக்கொண்டே வேலை செய்தான். நரேந்திரனுக்கும்  என்ன வெளியே வரப்போகிறதோ என்ற பயம் பிடித்துக்கொண்டது. சமையலை முடித்து இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ஜீவா கார்டன் போகலாமா..என்றான் நரேன்.

ம்ம்ஹும்.. நாம இங்கேயே இருக்கலாம் நரேன்.உன்கிட்ட நிறைய பேசணும்.என்றுவிட்டு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தான்.அவன் பேசும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்க இயலாமல்  சிலை போல் அமர்ந்துவிட்டான் .

முதலில் சாகேத் மூலம் ஜான்வி இன்னொருவரை காதலிக்கிறாள் என்றும் அந்த நபருடன் சென்றுவிட்டாள் என்றும் தெரிந்துகொண்ட நரேனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படி என்றால் அவள் சாகேத்தை காதலிப்பதாக சொன்னது ..அவ்வளவும் பொய்யா!என்று வியந்தான். பிறகு ,சாகேத் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு அயர்ந்து போனவனுக்கு மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது. இது எப்படி சாத்தியம்?சாகேத் ஏனோ ஜான்வி ஏற்கனவே விநீதனுடன் லிவினில் இருந்தது பற்றி எதுவும் சொல்லவில்லை அவன் பேச்சிலிருந்து முழு  தவறும்  அவன் மீதுதான் என்று யோசிக்கும்படிக்கான வார்த்தைகளை கோர்த்திருந்தான் சாகேத் பத்ரி. 

சாகேத் ,கேக்கறேன்னு தப்பா எடுக்காதே.இன்னுமா நீ திருவை மறக்கல ?நீ என்ன முட்டாளா ,அப்போ  நீ உன்னோட மனைவிக்கு செஞ்சது துரோகம்னு உணரல? அப்புறம் அவ செஞ்சது தப்புனு எப்படி  சொல்ல முடியும்.? பேசாம விவாகரத்து கொடுத்து அவளோட லைன் க்ளியர் பண்ணு .அவளாவது சந்தோஷமா வாழட்டும் என்றுவிட்டு ஜன்னல் பக்கம் போய்விட்டான்.

திருமகள் திருமணமாகி தனது வாழ்க்கையை தொடங்கி பல வருஷங்கள் ஆகிவிட்டது.இன்னும் சொல்லப்போனால் அவள் இப்போது எப்படி எங்கே இருக்கிறாள் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. ஏற்கனவே சுயநலமி வேறு. இந்த அழகில் சாகேத் அவளை என்றோ காதலித்த பாவத்துக்காக அந்தக் காதலை மனதில் வைத்து தனது திருமண வாழ்க்கையை சிதைத்துக் கொண்டது அர்த்தமற்றதாகவும் காலத்துக்கு பொருந்தாத ஒன்றாகவும் வடிகட்டிய முட்டாள்தனமாகவும் நரேந்திரனுக்கு தோன்றியது.{ எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது)

அதன்பிறகு இருவரும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அன்று மாலை ஜான்வியை சந்திக்க வேண்டும் என்று  நரேந்திரனுக்குத் தோன்றியது. மூவரும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் தானே! ஜான்விக்கு அழைத்தவன் அவளையும் அவளது வருங்காலத்தையும் சந்திக்க விரும்புவதாக சொன்னதை ஜான்வியால் மறுக்க முடியவில்லை. ஆனால் விநீதன் அவளுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டான்.

தன்னை இந்த விஷயத்தில் இழுப்பதும்,காட்சிப்பொருளாக்குவதும் அவனுக்கு பிடிக்கவில்லை.இனி,இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக சமாளிக்க வேண்டிய விஷயங்களுக்கு அவளுடன் துணை நிற்பது என்றும் ,அவளது தனிப்பட்ட விஷயங்களை அவள்தான் கவனிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அவ்வன் முடிவு செய்தது தான். 

ஜான்வி வினீதனை நிர்பந்தம் செய்யவில்லை.மாலை  வேலை நேரம் முடிந்தவுடன் வினீதனிடம்,” ராத்திரி டின்னெர் முடிச்சிட்டுதான் வருவேன் வினி .வெயிட் பண்ணாதே! நோ ஒர்ரிஸ் . ஐ கேன் ஹாண்டில்என்றுவிட்டு கிளம்பிவிட்டாள். பெங்களூரு ட்ராபிக் அவளை , அவளது காரை அவ்வளவு சீக்கிரம் நகரவிடவில்லை .

ஒருவழியாக ஜெய் நகரில் இருக்கும் அந்த பெரிய உணவகத்துள் அவளது கார் நுழைய , சாகேத்தின் காரில் வந்து சேர்ந்தான் நரேந்திரன்.சாகேத் வரமாட்டேன் என்று மறுத்து விட்டான். ஜான்விக்கு தயக்கமும் குற்ற உணர்ச்சியும் வாயை கட்டிப்போட்டது. இருவரும் இரவு உணவை மெள்ள முடித்தார்கள்.சூடான எந்த விஷயங்களையும் பற்றி பேசவில்லை. பெண்ணின் தயக்கம்  முழுவதுமாக செல்லும்வரை பொறுமையாக கையாண்டான் நரேந்திரன்.

அவனுக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் உண்டு.ஜான்வி -சாகேத் இருவரும் அவனுக்கு நண்பர்கள். இருவரையும் அவனால் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட முடியவில்லை. இதயத்தை ஊடுருவும் பார்வையை அவளுக்குள் செலுத்தியவாறே,”இந்த கல்யாண வாழ்க்கையை விட்டு இவ்வளவு சீக்கிரம் மோவ் ஆன் ஆகிட்ட .தப்புன்னு சொல்லல.பட் , சரிசெய்ய என்ன முயற்சி எடுத்த ஜானு?” என்ற ஒற்றை கேள்விக்கு பதில் சொல்ல தெம்பு இல்லாமல் ஜான்வி தலை குனிந்து கொண்டாள் .சரி செய்ய அவள் எடுத்த முயற்சிகள் போதுமா?என்ற கேள்வி அவளை அரித்தது. 

ஓகே ஜானு. இந்த கேள்விக்கு நீ எனக்கு பதில் சொல்லவேணாம். கல்யாணம் , வாழ்க்கை  ரெண்டும் விளையாட்டு இல்ல. உனக்கும் புரியும்னு நினைக்கிறேன். இனிமேலாவது பிரச்சனைகளை பார்த்து ஓடாமல் சரிசெஞ்சு வாழ ட்ரை பண்ணு .ஆல் தி பெஸ்ட்என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

சாகேத் தன்னை பற்றிய முக்கிய விஷயத்தை நெருங்கிய நண்பனிடம் கூட சொல்லவில்லை என்பது அவன் மீதான மரியாதையை அதிகரித்தது. என்ன இருந்து என்ன?இருவருக்குள்ளும் வேதியியல் மாற்றம் ஏதும் நிகழவில்லையே! நல்லவனை  பாராட்டுவது எளிது.வைத்து வாழ்வது கடினம் என்று நினைத்துக்கொண்டே தானும் கிளம்பினாள்.

இனி,சரி தவறுகளை பற்றி யோசித்து பயன் என்ன? விவாகரத்து கிடைத்தபிறகு அனைவருக்கும் பதில் சொல்லியாகவேண்டும்.நிச்சயம் சாகேத்தை காட்டிக்கொடுப்பதாக தான் யாரிடமும் எதுவும் சொல்லப் போவது இல்லை என்று மனதில் நினைத்தவாறே அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டில் விநீதன் அவளுக்காக தூங்காமல் விழித்திருந்தான் .அவனது உடலும் மனமும் அவளுக்காக தவித்தது.நிச்சயம் இன்று இரவு அவளை விட்டு உறங்க முடியாது என்று ஹாலில் தொலைக்காட்சியை பார்த்தவாறே நேரத்தை ஓட்டினான் .இரவு பத்து மணிக்கு வந்தவள் மிகவும் சோர்ந்திருந்தாள் . அவளை ஆசையாக பார்த்தவன் அவளது முகத்தை படித்து, “சரி,நா ஹீட்டர் போடறேன். குளிச்சிட்டு தூங்கு.வா..என்றுவிட்டு தங்கள் அறைக்குள் அழைத்து சென்றான். 

அவனது உணர்வுகளை அவளுக்காக அடக்கி வைக்கும் அளவுக்கு அவனுக்குள் பக்குவமும் காதலும் இருக்கிறது. கல்யாண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்ய இவை முக்கியமாயிட்டே.

லேசாக புன்னகை செய்தவாறே  குளிக்க சென்றவள் ,உள்ளே நுழையும் பொழுதே வினீதனின் கண்களில் அவனது தேவையை படித்துவிட்டாள் .அவன் தனக்காக தன்னை அடக்கி கொள்வதை அவதானித்தவளுக்கு வினீதனை அவ்வளவு பிடித்தது.இன்று வரை அவளிடம் படுக்கையில் கூட தான் ஆண் என்றும் அவள் பெண் என்றும் ஆளுமையை காட்டியது இல்லை. இப்போதும் அவன் அப்படியேதான் இருக்கிறான்.

இவனை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவாறே குளித்து முடித்து வந்தவள், படுக்கையறையில் படுக்கையை சரிசெய்து கொண்டிருந்த  வினீதனை பின்னிலிருந்து கட்டியணைத்து காது மடலில் முத்தமிட்டாள். சிரித்தவாறே அவளை முன்பக்கமாய் இழுத்தவன்,” இன்னிக்கி ரெண்டுபேரும் சமத்தா தூங்குவோம். மீதியை நாளைக்கு பாக்கலாம்என்றுவிட்டு அவள் கன்னத்தில்   முத்தமிட்டு விட்டு விளக்கை அணைத்தான். இருவரது தூக்கமும் ஒரு நிறைவுடன் இருந்தது. 

வீடு வந்து சேர்ந்த நரேந்திரனுக்கும் மிகவும் கலைப்பாகத்தான் இருந்தது. அவனும் ஜான்வியும் என்ன பேசினார்கள் என்றெல்லாம் சாகேத் துருவி கேட்கவில்லை .சூடாக மசாலா பாலை நரேந்திரனின் கைகளில் கொடுத்துவிட்டு ஒரு குட் நைட்டுடன் தனது அறைக்குள் சென்றுவிட்டான். அவனது மனம் புரிந்த நரேந்திரனும் பாலை குடித்துவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

காலையில் வந்து சேர்ந்தவுடன் சாருவிடம் பேசியது. குழந்தை வேறு அப்பாவை தேடுவானே !எண்டு அவசரமாக மனைவிக்கு அழைத்தான். சாருவும் அவனது அழைப்புக்காகத்தான் காத்திருந்தான்.நரேந்திரன் பேசும்பொழுது அவன் குரலின் தாக்கத்தில் சாகேத்துக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவள்,”சாகேத் அண்ணாவும்,அவங்க வைஃப்  ஜான்வியும் எப்படி இருக்காங்கஎன்று ஆரம்பித்தாள்.

பதிலாக நரேந்திரனிடமிருந்து பெருமூச்சு வந்தது.ம்ஹும்,ரெண்டு பேரும் இருக்காங்க. நிறைய நடந்து போச்சு.எல்லாத்தையும் நேரே சொல்றேன்என்று நரேன் முடித்துவிட்டான். சாகேத்தின் விஷயத்தை எவ்வளவு வடிகட்ட முடியுமோ அவ்வளவு வடிகட்டி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தவன் தூங்க எத்தனித்தான் . அவன் ஞாபகங்கள் திரு பற்றி யோசித்தன . திருமகள் இப்போ எப்படி இருப்பா?ஏன் அவ நம்மகிட்டேவெல்லாம் பேசுறத நிறுத்தினா?இப்போ குழந்தை ஏதாவது பிறந்திருக்குமா? அவகிட்ட பேச முடிஞ்சா நல்லா இருக்குமே!என்று அவன் யோசிக்கும் பொழுதே டைனிங் டேபிளில் அமர்ந்து பழச்சாறு பருகி கொண்டிருந்த திருமகளுக்கு புரை தட்டியது.அருகே அமர்ந்திருந்த அவள் கணவன் நிவாஸ் அவளுக்கு லேசாக தலையை தட்டிவிட்டேன். அவன் கண்களோ அவளிடம் அத்தனை காதலை காட்டியது 

வர்ணஜாலமாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!