Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 10.1

சந்தியா சூரியாவின் கேள்வியில் திகைத்தவளாய் இருக்க அவளின் திகைத்த தோற்றத்தில் திருப்தியானவன் “எது எப்பிடியோ நீ சொல்லுறதை வச்சு பார்த்தா நான் உனக்கு ஒரு ஃப்ரெண்டுக்கும் மேலேனு மட்டும் புரியுது. இது போதும், மனசு நிறைஞ்சிடுச்சு” என்று அவனது மார்பில் கைவைத்துக் கண் மூடி உணர்ச்சி மிகுந்த குரலில் கூற

 

சந்தியா திருதிருவென்று விழித்தபடி “மார்ஸ்மாலோ நான் சொன்ன வந்ததை நீ தப்பா புரிஞ்சுகிட்டனு நினைக்கிறேன். ஆக்ஸுவலி நீ வெறும் ஃப்ரெண்ட் மட்டும் இல்ல, என்னோட பாஸும் கூடனு தான் சொல்ல வந்தேன்” என்று வாய்க்கு வந்ததை உளறி வைக்க சுமித்ரா அதைக் கேட்டு “பொய் சொல்லிச் சமாளிக்க கூடத் தெரியலை இவளுக்கு” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.

 



Advertisement

சூரியா அவளது சமாளிப்பை ஒரு கேலிச்சிரிப்புடன் பார்த்தபடி “ம்ம்..நீ சொன்னதை நான் அப்பிடியே நம்பிட்டேன் பிரவுனி” என்று கூறிவிட்டு சுமித்ராவிடம் “அப்போ நாங்க கிளம்புறோம் சுமி” என்று கூறிவிட்டு சந்தியாவை அழைத்துக் கொண்டு வாயிலை நோக்கிச் செல்ல சந்தியா சுமித்ராவிடம் ஏதோ சொல்ல முயன்றாள்.

 

சுமித்ரா “நீ எதுவும் சொல்ல வேண்டாம் தாயே… அதான் தெளிவா உளறிட்டியே… இனியாச்சும் வார்த்தையில கவனமா இரு” என்ற அறிவுரையுடன் அனுப்பி வைத்தாள்.

Advertisement

 

Advertisement

[the_ad id=”6605″]

 

சந்தியா சூரியாவுடன் காரில் அமர்ந்தவள் அவன் காரை எடுக்கவும் “முதல்ல நம்ம எங்கே போறோம்?” என்று கேட்க

Advertisement

 

அவன் “ஃபர்ஸ்ட் டெம்பிள், அப்புறம் எங்கேயாச்சும் போய் நல்லா சாப்பிடணும்… தென் எதாவது ஷாப்பிங் மாலுக்கு போய் விண்டோ ஷாப்பிங்…. ஃபைனலா பீச்; எப்பிடி என்னோட பிளான்?” என்று அவனது காலர் இல்லாத சட்டையைத் தூக்கிவிட்டபடி கேட்க சந்தியா நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

சிறிது நேரத்தில் கோயில் வந்துவிட காரை ஓரமாக நிறுத்தியவன் அவளையும் இறங்கச் சொல்ல இருவரும் கோயிலுக்குள் நுழைந்தனர். சந்தியாவும் சுமித்ராவும் கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை சென்னை வந்ததிலிருந்து கடைபிடிக்க மறந்து போயிருந்தனர். வேலைநேரம் தான் அதற்கு முக்கியமான காரணம். நீண்டநாள் கழித்து கோயிலுக்கு வந்தவள் கடவுளிடம் எப்படியாவது தான் நவம்பரில் எழுதப் போகிற தேர்வில் தேர்ச்சி பெறவைத்துவிடுமாறு மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

 

அதே நேரம் சூரியாவோ “கடவுளே! அன்னைக்கு ஆரியா கேட்ட டவுட் என்னை கன்பியூஸ் பண்ணுது. இன்னைக்கு பிரவுனியும் ஏதோ சொல்ல வந்துட்டு சடன்னா நிறுத்திட்டா. இது ரெண்டுக்கும் ஒரே விடை தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஆனா அதை பத்தி இப்போதைக்கு நாங்க பேசிக்க போறது இல்லை. பேசிக்கிற மாதிரியான சூழ்நிலையில எங்க ரெண்டு பேரையும் நீங்க நிறுத்திடாதிங்க. இது மட்டும் தான் என்னோட வேண்டுதல்” என்று வேண்டிக் கொண்டு அர்ச்சகர் கொடுத்த விபூதியை கரம் குவித்துப் பெற்றுக் கொண்டான்.

 

சந்தியா விபூதியை நெற்றியில் சிறு கீற்றாக பூசிக் கொண்டவள் “என்ன மார்ஸ்மாலோ வேண்டுதல்லாம் பலமா இருக்கு” என்று கேலி செய்தபடி கோவில் சுற்று பிரகாரத்தின் ஒரு ஓரமாக சென்று தரையில் அமர அவளைத் தொடர்ந்து சூரியாவும் அமர்ந்து கொண்டான்.

 

“வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காது பிரவுனி” என்று அவன் கண்சிமிட்ட சந்தியாவும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. சூரியா உடனே கிளம்ப எத்தனிக்க சந்தியா “சிவன் கோயிலுக்கு வந்துட்டு உடனே கிளம்பக் கூடாது மார்ஸ்மாலோ. கொஞ்சநேரம் உக்காந்துட்டு தான் போகணும்” என்று அவனை அமரவைத்துவிட்டு சிறிதுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தாள்.

 

சூரியா அவள் கதை பேசும் போது கண்களும் கூடவே சேர்ந்து பேசுகிறதோ என்று ரசித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையை உணர்ந்த சந்தியாவுக்கு உள்ளுக்குள் குறுகுறுக்க அவளுள் எழுந்த குறுகுறுப்பு வெட்கமாக மாறுவதைத் தடுப்பதற்குள் அவள் அரும்பாடு பட்டுப் போனாள். சூரியாவுக்கும் அலுவலகத்தில் பரபரப்பாக இருவரும் அருகருகே அமர்ந்து வேலை செய்யும் போது தோணாத எண்ணங்கள், ரசனை எல்லாம் தற்போது ஏன் தன் மனதில் தோன்றுகின்றது என்ற அச்சரியம் தான்.

 

சந்தியா முகத்தைக் கரங்களால் தேய்த்துவிட்டபடி அவனை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு “ரொம்ப நேரம் ஆச்சு மார்ஸ்மாலோ! எங்கேயோ போய்ச் சாப்பிடணும்னு சொல்லிட்டு இங்க உக்காந்திருந்தா என்ன அர்த்தம்? இங்கே பொங்கல், புளியோதரை எல்லாம் காலியாம்” என்று கேலியாகப் பேசியபடி எழுந்தாள். அவள் தன் பார்வையை தவிர்ப்பதை உணர்ந்தவன் அவளுடன் சேர்ந்து எழுந்துக் காரை நோக்கி நடைபோட்டான். அங்கு வந்த பின்னர் வேலையால் உண்டான மனஇறுக்கம் சற்றுக் குறைந்தாற்போன்று அவனுக்குத் தோன்றியது.

 

காரில் அமர்ந்தவர்கள் அடுத்து ஒரு பிரபல ரெஸ்ட்ராண்டில் போய் இறங்க சந்தியா அந்த பெரிய ரெஸ்ட்ராண்டை விசித்திரமாக நோக்கியவள் “ஆஃப்டர் ஆல் பிரன்ஷ் சாப்பிடுறதுக்கு இவ்ளோ காஸ்ட்லி ரெஸ்ட்ராண்டுக்கு வரணுமா?” என்று அங்கலாய்க்க

 

சூரியா காரில் இலகுவாக சாய்ந்தபடி “அப்போ உனக்கு தெரிஞ்ச இடம் எதாவது சொல்லு” என்று கேட்க சந்தியா தனக்கு தெரிந்த ஒரு இடத்தைக் கூறவும் சூரியா அவளைக் காரில் அமரச் சொன்னவன் காரை அந்த இடத்தை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.

 

கார் போய் நின்ற இடம் ஒரு சாட் கார்னர். வழக்கமாக வார இறுதியில் சுமித்ராவுடன் சந்தியா அங்கு வந்துப் போயிருப்பதால் அவளுக்கு நன்கு பழக்கமான இடமே.

 

உள்ளே நுழைந்தவள் சூரியாவுடன் பேசிக் கொண்டே செல்ல அங்கே பானிப்பூரியில் இருந்து பாவ்பாஜி வரை அனைத்து சாட் வகை உணவுகளும் சுடச்சுட தயாராகிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இனிப்புவகைகள் அழகாக கண்ணாடிக்கதவுகள் அடைக்கப்பட்ட அலமாரியில் அணிவகுத்திருந்தன.

 

[the_ad id=”6605″]

 

சந்தியா சூரியாவுடன் சென்று ஒரு டேபிளில் அமர்ந்தாள். மெனு கார்டை பார்த்து அவள் ஆர்டர் செய்ய சூரியாவோ அந்த சாட் கார்னரின் உள் அலங்காரத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான். அங்கே கசிந்து வந்த மெல்லிசை மனதை அமைதிப்படுத்த கோயிலில் இருந்த அதே அமைதியான சூழ்நிலை, இசையை ரசித்தபடி தத்தம் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த நபர்கள் இவை எல்லாம் அவனுக்கு வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபட்ட ஒரு உணர்வை ஏற்படுத்தின.

 

சந்தியா அவனிடம் “இது சுமிக்காவோட ஃபேவரைட் பிளேஸ். இங்கே எல்லாமே ஹைஜீனிக்கா இருக்கும். எனக்கு இங்க ரொம்ப பிடிச்சது பானிபூரியும், ரசமலாயும் தான். செமயா இருக்கும்” என்று அவள் கண்ணை மூடி ரசனையுடன் கூற சூரியாவின் கவனம் அவள் பக்கம் திரும்பியது.

 

தன் எதிரே சிப்பி இமைகளை மூடியவண்ணம் இதழ்களில் சிரிப்பு மின்ன அமர்ந்திருந்தவளைக் கண்டதும் உள்ளுக்குள் ஏதோ வித்தியாசமான உணர்வுகள் உந்த மேஜையில் கைகுவித்து அதில் முகத்தை தாங்கியபடி அவன் வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பிக்க சந்தியா “என்னடா நான் இவ்ளோ டயலாக் பேசுறேன், இவன் பேசாம சைலண்டா இருக்கான்?” என்ற எண்ணம் தோன்ற கண்ணைத் திறக்கவும் அவள் எதிரே அமர்ந்து அவளையே பார்த்தபடி சிலையாய் சமைந்திருந்தவனின் தோற்றத்தில் அதிசயித்துப் போனாள்.

 

இவன் கோயிலில் கூட இதே போலத் தானே பார்த்துக் கொண்டிருந்தான் என்ற எண்ணம் அவளுள் எழாமல் இல்லை. இதயத்தில் அந்த எண்ணம் எழவும் அவளுக்குள் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிக்க சரியான நேரத்தில் விழித்துக் கொண்ட அவளது மனசாட்சி அந்த பட்டாம்பூச்சிகளிடம் “நீங்க பறக்கிறதுக்கான சீன் இன்னும் வரலை. அப்புறமா பறக்கலாம். கொஞ்சம் ஓரமா போய் உக்காருங்க” என்று கூற அவை சிறகை மடித்தபடி கப்சிப் என்று அடங்கவும் சந்தியாவும் சுயநினைவுக்கு வந்தாள்.

 

பின்னர் கையை அவன் முகத்துக்கு எதிரே ஆட்டியபடி “ஹலோ மார்ஸ்மாலோ! இங்கே தான் இருக்கியா? இல்ல மார்ஸுக்கு போயிட்டியா?” என்று கிண்டலாகக் கேட்க அதற்குள் அவள் ஆர்டர் செய்த அனைத்தும் வந்துவிட்டது. சாப்பாட்டைப் பார்த்ததும் அனைத்தையும் மறந்தவள் அதை சரி பார்த்துவிட்டு “அண்ணா ரசமலாய் மிஸ்ஸிங்” என்று உதடு பிதுக்க அவளுக்கு ஆர்டரை எடுத்துவந்தவர் ரசமலாயை எடுத்துவருவதற்காகச் சென்றார்.

 

சந்தியா அவன் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை என்பதை அறிந்து அவன் கையில் கிள்ளி வைக்க “ஆவ்” என்று முணகியபடி அவளை முறைத்தவன் இருவருக்கும் நடுவே இருக்கும் உணவு வகைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

 

“பிரவுனி இது எல்லாமே நீ தனியா சாப்பிட்டிட்டுவியா?” என்று கேட்டவனை வினோதமாகப் பார்த்த சந்தியா “என்ன பார்த்தா இது அவ்ளோவும் ஒத்தையில சாப்பிடறவ மாதிரியா உனக்கு தெரியுது? இது உனக்கும் சேர்த்து தான் மார்ஸ்மாலோ” என்று பொய்க்கோபத்துடன் கூற

 

சூரியா அதிர்ந்தவனாக “ஓ மை காட்! இந்த மாதிரி சாட் ஐட்டம்ஸ்லாம் நான் யூஸ்வலா சாப்பிடறது இல்ல பிரவுனி. ஓவர் ஆயில், அது மட்டுமில்லாம கலோரி அதிகமா இருக்கும்” என்று அவனது உணவுக்கட்டுப்பாடு பற்றிய அறிவை வெளிப்படுத்தவும்

 

சந்தியா கடுப்புடன் “உன்னோட ஃபிட்னெஸ் டிப்ஸை நீயே வச்சுக்கோ மார்ஸ்மாலோ. ஒழுங்கா நான் ஆர்டர் பண்ணிருக்கிறதை சாப்பிடணும். வேணும்னா நாளைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஒர்க் அவுட் பண்ணிக்கோ” என்று அலட்சியமாகக் கூறியபடி தட்டில் இருந்த பானிபூரியை எடுத்து ஒரே வாயில் விழுங்க ஆரம்பித்தாள்.

 

சூரியா அதை சாப்பிடும் முறை அறியாதவனாய் விழிக்க அவள் “இப்பிடி எடுத்து ஒரே வாயில போட்டுரு” என்று கூற அவன் அப்படி சாப்பிடத் தயங்கினான்.

 

[the_ad id=”6605″]

 

சந்தியா கிண்டலாக “ஓ! சார்வாள் டேபிள் மேனர்ஸ் பாக்கிங்களோ?” என்று கேட்க அவனும் ஆமென்று தலையசைக்க சந்தியா டேபிளுக்கு அடியில் இருந்த அவன் காலில் அவளது காலால் சற்று ஓங்கி மிதிக்க அவன் “அம்மாஆஆ!” என்று கத்த வாயைத் திறந்த கணத்தில் அவன் வாயில் பானிபூரியை வைத்துவிட்டு “இவ்ளோ தான்! சாப்பிடு” என்று சாதாரணமாகக் கூறிவிட அவன் காலின் வலியில் பல்லைக் கடித்தபடி வாயில் இருக்கும் பானிபூரியை  விழுங்கிக் கொண்டான்.

 

“பிரவுனி நீ ராட்சசியா பிறக்க வேண்டியவ. தப்பிச்சி மனுசியா பிறந்துட்ட” என்று கடுப்புடன் கூறிவிட்டு அவனே நல்லப்பிள்ளையாக அடுத்த பானிபூரியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். சந்தியா கிளுக்கென்று நகைக்க அவளை முறைத்தபடி ஒரு பானிபூரியை எடுத்து அவள் வாயில் திணித்துவிட்டு “டிட் ஃபார் டேட்” என்று கூற இருவருக்குமே அன்றையை பொழுது ரம்மியமாக கழிவந்தது.

 

அதே நேரம் சந்தியாவும் அவனது அருகாமையில் இருக்கும் இந்தக் கணம் முடியவே கூடாது என்று எண்ணியவளாய் அந்த ஞாயிறின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனதில் பதித்துக் கொண்டாள். இருவரும் கேலி கிண்டல்களுடன் சாப்பிட்டு முடித்துவிட்டு வரும் போது சூரியா “அது எப்பிடி பிரவுனி, மேலகரமோ சென்னையோ சாப்பிடுற ஐட்டம்ஸ் எங்கே நல்லா இருக்கும்ங்கிற டீடெய்ல்ஸ் மட்டும் நீ கரெக்டா தெரிஞ்சு வச்சுக்கிற? நாட் பேட்” என்று பாராட்டியபடி காரில் அமர சந்தியா “சாப்பாடு அதானே எல்லாம்” என்று கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு பாணியில் சொல்லிவிட்டு அவனுடன் புறப்பட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அன்று நாள் முழுவதும் ஷாப்பிங் மால், தியேட்டர் என்று சுற்றியவர்களுக்கு மாலை நேரம் வந்ததே தெரியவில்லை. சந்தியா தியேட்டரின் ரெஸ்ட் ரூமுக்குள் சென்று முகம் கழுவிவிட்டு வர சூரியா “வாவ்! உன் கான்பிடன்ஸ் லெவல் செம பிரவுனி” என்று பாராட்ட அவள் அதன் உள்ளர்த்தம் புரியாமல் விழித்தாள்.

 

அவள் முட்டைக்கண் விரியும் அழகை ரசித்தபடி “பொதுவா கேர்ள்ஸ் பப்ளிக் பிளேஸ்ல முகம் கழுவ மாட்டாங்க பிரவுனி. இது யூனிவர்சல் ட்ரூத். பிகாஸ் கஷ்டப்பட்டுப் போட்ட மேக்கப் கலைஞ்சுப் போயிடும்ல” என்று ஜம்பத்துடன் உரைக்க

 

சந்தியா உதட்டைச் சுழித்தபடி “அதைச் சொன்னவன் உன்னை மாதிரி ஒரு ஹாஃப் பாயிலா தான் இருப்பான்” என்றாள் அலட்சியமாக.

 

சூரியா பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி நடந்தவன் “நோ பிரவுனி. என் ஃப்ரெண்ட் ஒருத்தி யூ.எஸ்.ஏல இருக்கானு சொல்லிருக்கேன்ல, அவ தான் அப்பிடி சொல்லுவா. அவ அப்பிடியே உன்னோட டிட்டோ. உனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். உனக்கு மேக்கப்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. அந்த மேடம் தூங்கிறப்போ கூட ஃபுல் மேக்கப்போட தான் தூங்கும்” என்று தனது இன்னொரு தோழியைப் பற்றி கிண்டல் செய்ய சந்தியாவும் அதைக் கேட்டு புருவம் உயர்த்தி அதிசயித்தபடி அவனுடன் நடந்தாள்.

 

இந்த ஒருத்தியைப் பற்றி அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான் தான். ஆனால் அவள் யார், என்ன பெயர் இது எதுவுமே சந்தியாவுக்கு தெரியாது. சூரியாவின் இளம்பிராயத்தோழி என்பதை மட்டுமே அவள் அறிவாள். அவனது பேச்சிலிருந்து அவளுக்கும் தனக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக அவன் நினைப்பதை சந்தியா புரிந்து கொண்டாள். ஹூஸ்டன் யூனிவர்சிட்டியில் படிக்கும் போது இருவரும் செய்த கலாட்டாக்களை அவ்வபோது அவன் கூறிக் கேட்டிருக்கிறாள். மொத்தத்தில் அந்த முகம் தெரியாத ஒருத்தியை நேரில் பார்க்கும் நாளுக்காகச் சந்தியாவும் காத்திருந்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!