Skip to content
Post Views: 929
ஓம் நமச்சிவாய..
அத்தியாயம் ஒன்று..
Advertisement
Advertisement
Advertisement
புராண காலத்தில் இலங்கையை ராவணன் ஆட்சி செய்த போது லங்கை என்று பெயர்.. அதனால் ராவணனுக்கு லங்கேஸ்வரன் என்னும் பெயரும் வந்தது..
Advertisement
பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்தில் சிலோன்.. என்றும் கூறுவார்கள்..
தற்போது சிங்கள ஆட்சியின் போது ஸ்ரீலங்கா.. மற்றும் இலங்கை.. என்றும் பெயர் உண்டு.. இந்த கடலால் சூழப்பட்ட அழகிய குட்டி தீவிற்கு..
இலங்கையில் தற்போது சிங்கள மக்கள் பெரும்பான்மை விகிப்பதால் சிங்களவர்கள் அரசாட்சி புரிகின்றார்கள்..
பாராளுமன்றத்தில் சில மலையக அமைச்சர்களும் தமிழ், இஸ்லாமிய அமைச்சர்களும்.. இருக்கிறார்கள்..
15 வருடத்திற்கு முன் இலங்கையில் தமிழர்களுக்காக நடந்த இறுதி யுத்த போராட்டத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்தும் இறுதியில் அதற்கு எவ்வித பலன்களும் இல்லை..
இலங்கையில் மூன்று இன மக்கள் சிங்களம், தமிழ், இஸ்லாம் என்று வாழ்கின்றனர்..
நான்கு மதம் பௌத்தம் ஹிந்து கிருஸ்தவம். முஸ்லீம்.. என்றும் மக்கள் இருக்கின்றார்கள்..
ஒன்பது மாகாணங்கள் மற்றும் இருபத்தைந்து மாவட்கள் உள்ளடக்கிய குட்டித் தீவே இலங்கை..
நாம் தற்போது இந்த கதையை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்போகின்றோம்..
இந்த கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை என்று மூன்று மாவட்டங்கள் உள்ளது..
அதில் அம்பாறை மாவட்டத்தை இலங்கையில் வேறு மாவட்டத்தவர் சிங்கள ஊர் என்றும் கூறுவார்கள்..
அம்பாறை மாவடத்தின் அக்கறைப்பற்று என்னும் இந்த ஊரை வெளி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டக்களப்பு அக்கறைபற்று என்று கூறினால் தான் அந்த ஊரை தெரியவரும்..
மேல்மாகாணத்தில் இருந்து வருவோர் பொத்துவில் வழியாகவும் வடக்கு மாகாணத்தில் இருந்து வருவோர் மட்டக்களப்பு வழியாகவும் தான் இந்த அக்கறைப்பற்று எனும் ஊருக்கு வரமுடியும்..
தற்போது நாம் அக்கறைபற்று என்கிற ஊரில் உள்ள சிற்றூர் கிராமம் விநாயகபுரம் என்னும் ஊரில் இருந்து தான் நம் கதை ஆரம்பமாகிறது..
இந்த விநாயகபுரம் என்னும் ஊர் ஹிந்து மதத்தவர் மட்டும் வசிக்கும் ஊர் ஆகும்.. அதை கடத்து திருக்கோவில் என்கிற ஊரில் ஹிந்து மற்றும் கிருஸ்தவ மத மக்களும் வசிக்கிறார்கள்..
அக்கறைபற்றில் ஹிந்து, கிருஸ்தவம், முஸ்லீம் மத மக்கள் மற்றும் சில இடங்களில் பொளத்த மத மக்களும் வசிக்கின்றார்கள்..
வேற்று மதத்தினர் யாரையும் விநாயகபுரத்து ஆண் பெண் பிள்ளைகள் திருமணம் முடித்தால் ஊரில் இருந்து அவர்களை தள்ளி வைத்து விடுவார்கள்.. அவர்கள் இந்த ஊரிற்கு வரமுடியாது ஆனால் அவர்களின் பெற்றோர்கள் சென்று பார்த்து வரலாம்.. இது ஊர் வழக்கம்..
இந்த ஊரை சுற்றி மூன்று திசைகளிலும் ஆற்று நீர் ஓடுகிறது.. அதில் கோரைக்களப்பு . மரணகண்டி ஆறு என்னும் இரண்டு ஆறும் கலந்து ஓடுகின்றது..
கோரைக்களப்பு ஆற்று நீரை விவசாயத்திற்கும் மீன் பிடிக்கும் பயன்படுத்துவார்கள்..
மரணகண்டி ஆற்று நீர் மீன்பிடிக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்..
இந்த மரணகண்டி ஆறு முத்துமாரி அம்மன் கோவிலின் அருகாமையில் இவ் ஊரில் ஓடுகிறது.. இந்த ஆறு வருடத்திற்கு ஒருவராவது பழி எடுத்து விடும்..
இவ் ஊரில் உள்ளவர்களோ அல்லது வெளியூரை சேர்ந்தவர்களோ யாராக இருந்தாலும் ஒருவர் விதிப்பயன் படி இந்த ஆற்றில் பழியாவார்கள்..
இந்த ஊரில் சிவன் கோயில், பிள்ளையார் கோயில்,முத்துமாரி அம்மன் கோயில்,பெரியதம்பிரான் கோயில்.. காளி அம்மன் கோயில்.. என்றும் விசேடமாக மரணகண்டி ஆற்றை கடந்து காட்டிற்குள் மங்கைமாரி அம்மன் கோயிலும் உள்ளது..
இந்த மங்கைமாரி அம்மன் கோயிலுக்கு விநாயபுரம் என்ற ஊர் மக்கள் மரணகண்டி ஆற்றை கடந்தும்.. வெளியூர் மக்கள் சொந்த வாகனங்களிலும் வழிபட வருவார்கள்..
மங்கைமாரி அம்மன் கோயிலில் வருடத்தில் ஒருநாள் விசேட திருவிழா நடைபெறும்.. அதை தொடர்ந்து வரும் எட்டாவது நாள் எட்டாம் சடங்கு என்ற விழா நடைபெறும்.. இது மிகவும் விசேடமானது..
காளி மற்றும் முத்துமாரி அம்மன் கோயில்களில் ஐந்து நாள் திருவிழாவும் எட்டாம் நாள் சடங்கும் நடைபெறும்..
இந்த ஊரில் உள்ள அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் பூரணை அன்றும் வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடைபெறும் போதும் மட்டுமே கர்ப்ப கிரகம் திறக்கப்படும்..
அப்பொழுது மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும்..
திருவிழா முடிந்து எட்டு நாட்கள் அடைத்து வைப்பார்கள்.. அதற்குள் யாரும் ஐயர், ஊர் மக்கள் யாருமே போக முடியாது..
எட்டாவது நாள் அதி காலை தான் விசேட பூஜை வைத்து கோவிலை திறப்பார்கள்..
எட்டாவது நாள் முடிந்து அடுத்த நாள் விடிய சாமம் பூசையும் முடித்து கோயிலை அடைத்தால் இனி அடுத்த மாதம் வரும் பூரணை அன்று மட்டுமே கற்பகிரகம் திறக்கப்படும்..
மற்ற நாள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு தான் கோவில்களில் பூஜை நடக்கும்..
இலங்கையிலேயே இந்த பகுதிகளில் மட்டும்தான் இப்படி ஒரு வழக்கம் உள்ளது..
இங்கே எந்த அளவிற்கு பூஜை புனஸ்காரம் உள்ளதோ.. அந்த அளவிற்கு மாந்திரீகமும்,செய்வினை,சூனியம், இந்த மாவட்டத்தில் பேமஸ் ஆனது..
வேறு ஊர்களில் இருந்தும் அதற்கு இங்கே அதிகம் ஆட்கள் வருவார்கள்..
*******
வருடத்தில் மார்கழி மாதம் தை மாதம் பெய்யும் அதிக மழை காரணமாக ஆற்று நீர் நிறைந்து ஊருக்குள் வெள்ளம் ஏற்பட்டால் ஆற்று கம்மாய் உடைந்து கடலுடன் நீர் கலந்து முகத்துவாரம் ஓடும்..
அப்பொழுது ஆற்று நீரும், கடல் நீரும் கலந்து கடலில் இறால் கடல் வகையான மீன்கள் அனைத்தும் ஆற்று நீருடன் கலந்து மீண்டும் ஆற்றிற்குள் வந்து கடல் மீன்கள் அனைத்தும் ஆற்றிலும் கிடைக்கும்..
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் ஆற்றில் தோனி மூலம் மீன், இறால், நண்டு என்ற சீசன் தொழில்கள் செய்வோரே அதிகம்..
அதனை தவிர்த்து அரசாங்க உத்தியோகம், ஆட்டோ ஓட்டுநர்.. வியாபாரம்.. மேசன். கூலி வேலை. போன்ற தொழில்களும் ஆண்கள் செய்கிறார்கள்..
பெண்களோ வீட்டிலும் சரி வெளியிலும் சரி கச்சான், மரக்கறி வகைகள்.. சோளம். போன்ற தானிய வகைகளையும் சேர்த்து பயிரிட்டு அதை பராமரித்து பருவகாலத்தில் ஆட்கள் வைத்து அதை பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்வார்கள்..
தற்போது ஆனி மாதம்.. இந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் வேறு தொழில்களுக்கு வெளியே செல்லாமல் இடப் போகச் சேனை.. என்று மேற்குறிப்பிட்ட பயிர் வகைகள் செய்வார்கள்.. அதை பராமரிப்பதற்கு அனேகமான வீட்டுப் பெண்கள், ஆண்கள் விடுமுறை நாட்களில் பிள்ளைகள் என அனைவரும் சேனையிலேயே வாடி அமைத்து தங்கி இருந்து புல் புடுங்குதல் தேவைப்படும் நேரங்களில் உரம் இடுதல்,போன்ற பராமரிப்பு வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள்..
கொரோனா பாதிப்பால் நாடு முடக்கப்பட்டு இருந்தது.. அதில் இருந்து மீண்டு வந்தாலும் இன்னும் சரியான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை..
அந்த கால முடக்க நிலை சரி கட்டுவதற்காக தை மாதம் புதிய வகுப்பு ஆரம்பித்து மூன்றாம் மாதம் சோதனையுடன் ஒரு விடுமுறை..
சித்திரை வருடப்பிறப்பு கழித்து பள்ளி ஆரம்பித்து அடுத்து ஏழாம் மாதம் இறுதியில் சோதனை நடந்து எட்டாம் மாதம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு உயர்தர சோதனை நடப்பதற்காக மற்ற வகுப்பு பிள்ளைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைக்கும்..
அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் மாதம் மீண்டும் பள்ளி ஆரம்பித்து 11 மாதம் இறுதியில் சோதனை நடந்து பன்னிரெண்டாம் மாதம் 11-ம் வகுப்பு பிள்ளைகளுக்கு சோதனை நடப்பதற்காக மற்ற பிள்ளைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைக்கும்.
காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பாடசாலை நடைபெறும்.. தரம் 5 10 11 12 13 வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளும் நான்கு மணிவரை பாடசாலையில் நடைபெறும்..
இப்படி சீராக நடந்த பள்ளி காலங்கள் இப்பொழுது மாற்றம் ஏற்பட்டு கல்வி நடவடிக்கை சில குழப்பங்களால் இருக்கிறது..
error: Content is protected !!