Skip to content
Post Views: 845
அத்தியாயம் 7..
நேரம் இரவு 12 மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது மாறனின் வீட்டு கதவு தட்டப்பட்டது..
Advertisement
Advertisement
நாள் முழுவதும் வேலை பார்த்த அழுப்பில் மாறனும், பவானியும் நன்கு உறங்கி கொண்டு இருந்தார்கள்..
Advertisement
Advertisement
கோமதி தான் பலத்த யோசனையின் மத்தியில் அப்பொழுதுதான் கண் அயர்ந்தார்..
அவர்தான் கதவு தட்டும் சத்தத்தில் யார் என்று பார்ப்பதற்காக எழுந்து வந்தார்..
கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கதவை திறந்தார்.. ஆனால் வெளியே யாரும் இல்லை..
இது என்ன இந்த நேரத்துக்கு யார் விளையாடுவது.. இல்லை ஏதாவது பிரம்மையா? என்று நினைத்துக் கொண்டு மீண்டும் கதவை அடைத்து விட்டு அவர்களது அறையில் சென்று படுத்துக்கொண்டார்..
உறங்கி சற்று நேரத்தில் தன்னை ஏதோ அசைக்கவும் இசை எழுந்து அமர்ந்தாள்..
அவளும் சுற்றிலும் பார்க்கவும் தாயும் உறங்குவது தெரிந்தது.. ஆனால் யாரோ அவளை அசைத்து எழுப்பியது போல் இருந்தது ஆனால் ஒருவரும் இல்லை..
மீண்டும் படுக்கையில் படுத்தாள் இசை.. சற்று நேரத்தில் அதே போல் எழுப்பவும் இது என்ன பிரம்மையோ என்று நினைத்து பயந்து எழுந்து நின்றாள்..
எழுந்து நின்றது மட்டும்தான் இசைக்கு தெரியும்..
சற்று நேரத்தில் காற்று போல் ஏதோ அசையவும் அதை உற்றுப் பார்த்து நின்றாள்..
அதன் பின்பு நடந்த செயல்கள் அனைத்தும் அவளுடையது அல்ல..
நடந்து சென்று மாறன் தங்கி இருந்த அறை கதவை திறந்து கட்டிலில் அவன் அருகே படுத்துக் கொண்டாள்..
காலையில் எழுந்த பவானி வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்..
மாறனுக்கு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும்..
இடஞ்சல்களை அவன் விரும்புவதில்லை..
அதனால் அண்ணனுக்கு காபி கொடுக்க செல்லும்போது சற்று பேச வேண்டும் என்று கூற வேண்டும் என நினைத்துக் கொண்டு வேலை செய்தாள்..
நேரம் காலை 6 மணி.. இன்று நடக்கும் பிரச்சனையின் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வரை கோமதியால் நிம்மதியான உறக்கம் கொள்ள முடியவில்லை..
விழிப்பு வந்ததும் பவானி உடன் பேச இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்து எழுந்து வெளியே வந்து விட்டார்..
பின்பக்கம் சென்று முகம் கழுவி விட்டு அவரும் சமையல் அறைக்கு வரவும் பவானி அனைவருக்கும் காபி கலந்து எடுத்து வரவும் சரியாக இருந்தது..
“ பவானி நீ கொஞ்சம் உன் அண்ணன் கூட பேச முன்னாடி நான் உன் கூட பேசணும்.. காபியை கொடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரமா பின்பக்கம் வா…” என்றார் கோமதி..
அவளும் அறை கதவை தட்டவும் மாறனும் உள்ளே சத்தம் போடவும் சரியாக இருந்தது..
அப்படியே வாசல் பக்கம் திருமகள் வந்து பவானியை அழைக்கவும் சரியாக இருந்தது..
“ ஏய் உனக்கு இங்க என்னடி வேலை.. முதல் வெளிய போ.. போடி..” என்று மாறன் ஆக்ரோஷமாக கத்தவும் அந்த சத்தம் வெளியே கேட்டு என்னவோ என்று கோமதி வேகமாக அவர்கள் அறைக்கு வந்து கதவை தட்டினார்கள்..
தன்னோடு அவளையும் வைத்து பார்த்தால் தங்கை என்ன நினைப்பாள் என்று தவிப்போடு கதவை திறந்தான் மாறன்..
உள்ளே வந்த இருவரும் “ என்ன அண்ணா?. ஏன் சத்தம் போட்டிங்க?.. ” என்றாள் பவானி..
“ அக்கா உங்க பொண்ணுக்கு இங்க என்ன வேலை?.. என்னோட ரூம்ல.. என் கட்டிலில் என் கூட வந்து தூங்கி இருக்கா.. இப்ப தான் எழுந்து பார்த்தேன்.. பக்கத்துல படுத்து இருந்தாள்..
ஒரு நாள் உதவி செய்ய இங்க உங்களை அழைச்சிட்டு வந்தேன்.. நீங்களா போவிங்கன்னு பார்த்தா நீங்க போற மாதிரி தெரியல.. வீட்டுக்கு வந்தவங்களை நாங்களே போக சொல்லக் கூடாதுன்னு நானும் அதை பற்றி கண்டுக்காம விட்டுட்டேன்..
நேத்து என்னன்னா ஏதோ தேவையில்லாமல் வாய்க்கு வந்ததை ஆட்களுக்கு மத்தியில் வைத்து உளறிட்டு இருக்கா..
என் பக்கத்துல வந்து படுத்து இருக்கா.. இவளுக்கு என்ன பிரச்சினை ஏன் இப்படி எல்லாம் பண்ணுறா?..
அன்னைக்கு அப்படியே செத்து தொலையட்டும்னு விட்டுட்டு வராம வேண்டாததை தூக்கி சுமக்கிற மாதிரி இங்க அழைச்சிட்டு வந்தது தான் நான் பண்ணின தப்பு போல..
அக்கா உங்க பொண்ணு கிட்ட சொல்லி வைங்க.தேவையில்லாத வேலை எதையும் பார்த்து வைக்காமல் இருக்க சொல்லுங்க..” என்று கத்திவிட்டு குளிக்க வெளியே சென்றான்..
கோமதியும் மகளை அழைத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது திருமகள் நின்று கொண்டிருந்தாள்..
“ என்ன பவானி ஏதோ ரொம்ப சத்தம் அதிகமா இருக்கு?..
காலையிலேயே மாறன் ஏன் இவ்வளவு சத்தம் போடுறார்..” என்றாள்..
“ அதுவா என் பொண்ணு.. ” என்று கோமதி கூற வரவும் அவர் கையை பிடித்து தடுத்த பவானி..
“ அது ஒண்ணும் இல்லை அக்கா.. நேற்று நடந்த விஷயத்தை இவங்க சொல்ல ஆரம்பிக்கும் போது அதைக் கேட்க நேரமில்லை வேலைக்கு போகணும்னு சொல்லி தான் சத்தம் போட்டார் அண்ணா.. நீங்க எப்ப வந்திங்க?.. உள்ள வாங்க. ஏன் அங்கேயே நிக்கிறீங்க.. ” என்றாள் பவானி..
“ அதுவா பவானி இங்க எங்களுக்கு போக்குவரத்துக்கு வண்டி எதுவும் இல்லை.. அதுதான் மாறன் கிட்ட ஏதாவது பழைய வண்டி கிடைக்குமான்னு அவர் வேலைக்கு போக முன்னாடி கேட்டு வச்சால் இன்னைக்கே கிடைச்சாலும் சொல்லுவார்.. போய் வாங்கலாமே.. அதுக்கு தான் வந்தேன்.. சரி நான் வந்த நேரம் பிழை. நீ வேலையை பார்.. நான் அப்புறம் வரேன்..” என்று கூறிவிட்டு சென்று விட்டாள் திருமகள்..
குளித்து தயாராகி மாறன் சாப்பிட வரவும் பவானி சாப்பாடு பரிமாறினாள்..
கீழே பாய் விரித்து அமர்ந்து தங்கை
ருசியாக செய்த உணவை எந்த கவலையும், யோசனையும் இல்லாமல் சாப்பிட்டு கை கழுவி விட்டு எழுந்தான் மாறன்..
அவன் வேலைக்கு போகும் பொழுது எதுவும் இடஞ்சல் இருந்தால் அவன் அன்றைய நாளில் பல பிரச்சனைகள் சந்திப்பான் என்று பவானிக்கு தெரிந்ததால் அவள் கேட்கலாமா?. வேண்டாமா?. என்று யோசனையில் இருந்தாள்..
தங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டது போல
“ பவானிம்மா இப்ப அவசரமா முடிச்சு கொடுக்க வேண்டிய ஒரு வேலை இருக்கு.. நான் போய் அதை முடிச்சு கொடுத்துட்டு சீக்கிரமாகவே வந்து நேற்று நடந்த பிரச்சனைக்குரிய முடிவை பார்க்கிறேன்..
பவானி திருநா வந்தா சாப்பாடு கொடுத்து கொஞ்ச நேரம் இருக்க வைமா.. நான் வந்து ராதாவையும் அழைத்து அவங்களுடைய பிரச்சினை என்னன்னு அந்த பஞ்சாயத்தையும் பார்க்கணும்..
அப்புறம் நான் வரும் வரை இந்த லூச எங்கயும் வெளிய விடாத.. திரும்ப ஏதாவது தற்கொலை முடிவு எடுக்கும்..” என்று கூறிவிட்டு கோமதியிடமும் கூறிக்கொண்டு நட்டுவை அழைத்துக் கொண்டு அவன் மெக்கானிக் ஷாப் சென்று விட்டான்..
அவன் போகும் வண்டி சத்தத்தை வைத்து அவன் போய்விட்டான் என்று தெரிந்து கொண்டு எப்படி அவன் அறைக்கு போனோம் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த இசை “ பவானி உங்க அண்ணா ரொம்ப ஓவரா பேசுறார்.. நானும் ஓரளவுக்கு தான் பொறுமையா இருப்பேன்.. உங்க வீட்ல வந்து இருக்கிறோம் அப்படிங்கறதுக்காக லூசு அது இது ன்னு பேசக்கூடாது.. எனக்கும் இந்த சமூகத்தில் ஒரு மரியாதை இருக்கு.. நான் ஒரு செலிபிரிட்டி பார்த்து பேசுங்க.. இந்த அம்மாகிட்ட எவ்வளவோ சொன்னேன். அன்னைக்கே போவோம்னு கேட்டாங்களா?.. இவங்க தான் இப்ப இவ்வளவு பிரச்சினை எடுக்க காரணமே.. இவங்க இருக்க வச்சதுதான்..” என்று கத்தி தீர்த்து விட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று விட்டாள் இசை..
மாறன் சென்றதும் கோமதியையும் இசையும் சாப்பிட சொல்லி அழைத்தாள் பவானி..
இசை திட்டிய கோபத்தில் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..
தங்கள் வீட்டில் ஒருவர் பசியோடு இருப்பது தாங்காமல் பவானி சென்று இசையை சமாதானப்படுத்தி அண்ணன் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு அழைத்து வந்து
சாப்பிட வைத்தாள்..
கோமதியும் பேருக்கு கொஞ்சம் உண்டு விட்டு பவானியை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் பின்பக்கம் சென்றார்..
“ பவானி சுத்தி வளச்சி நான் பேச விரும்பல.. உங்க அண்ணனோட கண்டிஷன் உன்னோட கண்டிஷன் எல்லாத்துக்குமே எங்க குடும்பம் பொருந்தும் அப்படின்னு நான் நினைக்கிறேன்..
உங்க அண்ணன் விருப்பப்படி இசையை கட்டிக்கிட்டா நீ என் மகனை கட்டிக்க முடியும்..
நீ மனசு வச்சா என் மகனை கட்டிக்க முடியும்..
சின்ன வயசுல என் மகனை பார்த்தது இப்ப அவன் எப்படி இருப்பான் வளர்ந்து இருக்கானா? உடம்பா இருக்கானா?வெள்ளையா இருக்கானா? எதுவுமே எனக்கு தெரியாது..
பல வருஷங்களா நான் என் பிள்ளையை பார்த்தது இல்லை..
நீ ஒரு பொண்ணு மனசு வச்சா எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கும்.. என் மகனையும் என்னால பார்க்க முடியும்..
இசை பார்க்கத்தான் இப்படி பிடிவாதமா இருக்கா ஆனா ரொம்ப குழந்தை மனசு அவளுக்கு..
பயந்த சுபாவம் கொண்டவ. ஆனால் அப்படிப்பட்டவ எப்படி இந்த நடிப்பு துறைக்கு போகணும்னு ஆசைப்பட்டான்றது தான் எனக்கு இன்னும் வரைக்கும் தெரியல..
ஏதோ இந்த ஒரு வருஷம் அவளுக்கு போதாத காலமா இருந்திருக்கு இல்லாத பேர் எல்லாம் எடுத்துட்டா..
என் கணவர் என் மேல சந்தேகப்பட்டு தான் பிரிஞ்சு என் மகனை அழைத்துக்கொண்டு போயிட்டார்..
ஆனா நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று என் மகனுக்கு நான் உணர்த்தணும் அதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு வேணும்..
என் மகனை நான் பாக்கணும் என் கையால அவனுக்கு சமைச்சு போடணும்..
அவனை நான் கட்டி அணைச்சு,தொட்டு தடவி, உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கணும்..
ஒரு தாயா எனக்குள்ள இருக்க ஏக்கமும் ஆசைகளும் உனக்கு புரியும்..
சாயந்திரம் உங்க அண்ணா வரும்போது பிரச்சினையை சுமூகமா பேசி நீ தான் உங்க அண்ணாக்கும் இசைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்..
அது மட்டும் நடந்தா பல பேரோட சந்தோசம் நிலைச்சிருக்கும்..
நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் பவானி.. இனி நீ தான் சரியான முடிவு எடுக்கணும்..” என்று கூறி தன் ஆசை, தன் வேதனை, தன் ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் கொட்டி பேசிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார் கோமதி..
சற்று நேரத்தில் ஹாஸ்பிடலில் இருந்து குணமாகி திருநா மாறன் வீட்டுக்கு வந்தான்..
பவானி அவனுக்கும் காலை உணவை கொடுத்து எங்கும் செல்ல வேண்டாம் அண்ணன் வரும் வரைக்கும் இங்கே இருக்கும்படி கூறிவிட்டு மதிய உணவு சமைக்க உள்ளே சென்றாள்.. அவளுக்கு கோமதியும் உதவி செய்து கொடுத்தார்..
உணவு உண்டதும் திருநா அங்கிருந்த டிவியை ஆன் பண்ணி தாயின் இறப்பை மறப்பதற்கோ இல்லை அவனது கஷ்டத்தை மறப்பதற்கோ தெரியவில்லை மோட்டு பத்துளு பார்க்க ஆரம்பித்தான்..
டிவி சத்தம் கேட்டு அறையில் யோசனையோடு இருந்த இசையும் வந்து அவனுடன் அமர்ந்து இருவரும் கார்ட்டூன் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
எட்டிப் பார்த்த கோமதி மகளை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு எப்போது அவள் வாழ்க்கையில் விடிவு வருமோ என்று யோசித்து விட்டு பவானியிடம் என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்று கேட்டார்?..
“ நான் சொன்னா எங்க அண்ணா கேட்கும் தான்.. அதுக்காக அவருக்கு பிடிக்காத விஷயத்தை நான் திணிக்க விரும்பல..
முதல் அண்ணா சாயந்தரம் வரட்டும் எல்லாத்தையும் பேசுவோம்.. அது எடுக்கிற முடிவு தான்..
இப்ப நான் உங்களுக்கு நம்பிக்கையான பதில் சொல்லிவிட்டு பிறகு அண்ணா அதோட வாழ்க்கைக்கு வேறு முடிவு எடுத்தால் உங்க நம்பிக்கை கெட்ட மாதிரி போயிடும்..
பொறுமையா கொஞ்ச நேரம் காத்திருப்போம்..” என்று அண்ணன் வாழ்க்கை முக்கியம் என்று யோசித்து கோமதிக்கு பதில் கூறிவிட்டு சமையலில் தீவிரமாக இறங்கி விட்டாள் பவானி..
மாறன் சொன்னது போல் சீக்கிரமாக வேலை முடித்துவிட்டு மாலை 5:00 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விட்டான்..
திருமகள் அன்றய நாளுக்கான தன் வேலையை சிறப்பாக செய்துவிட்டாள்..
அதாவது என்னவென்றால் மாறன் அறையில் இருந்து இசை வெளியே வந்ததை ஊர் முழுவதும் பரப்பி விட்டாள்..
மாறன் வந்து இரண்டு மணி நேரம் கடந்து விட்டது இன்னும் ஒரு முடிவும் தெரியவில்லை என்று இதற்கு முடிவு தெரிந்து கொள்வதற்காக ஊர் மக்கள் மீண்டும் அவன் வீட்டிற்கு முன்பு காத்திருந்தார்கள்..
திருமகளும் திருமதியும் மனித உருவம் எடுத்து விட்டார்கள்..
அவர்களுக்கு தேவைப்படும் பொழுது அவர்களது சிறு உருவத்தை எடுத்துக் கொள்வார்கள்..
அப்படி உருவங்கள் மாற்றித்தான் அவர்கள் சதி வேலைகள் ஆரம்பித்து மாறன் மற்றும் இசையின் பிரச்சினை இந்த அளவிற்கு வந்து நிற்கிறது..
கோமதி, பவானி மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் மாறனின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்..
error: Content is protected !!