Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 12.1

சூரியாவும் சந்தியாவும் எலியும் பூனையுமாக முறைத்தே தங்களது கருத்து வேறுபாட்டை வாரக்கணக்கில் இழுத்து அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்காமல் சுற்றிக் கொண்டிருக்க ஆரியா தன்னிடம் சவால் விட்டுச் சென்ற அவனது பிரியத்துக்குரிய ஜெகன்மோகினியைத் தேடிக் கொண்டிருந்தான்.

 

இவ்வாறு இருக்கையில் அன்று வாரவிடுமுறை. வழக்கம் போல சந்தியா இன்ஸ்டிட்டியூட்டுக்குச் செல்லத் தயாராகி நின்றவள் திடீரென்று சூரியாவிடம் இருந்து போன் வரவே எடுத்து “ஹலோ” என்று பேச ஆரம்பித்தாள்…

 



Advertisement

“என்னோட டிஜிட்டல் சிக்னேசர் எக்ஸ்பயர் ஆயிடுச்சு சந்தியா.. இன்னைக்கு மார்க்குக்கு நான் முக்கியமான டாக்குமெண்ட் டிஜிட்டல் சைன் வச்சு அனுப்பியே ஆகணும். வாட் கேன் ஐ டு?”

 

“சார் நான் ரினீவல் டேட் நோட் பண்ணி வச்சிருந்தேன். பட் மறந்துட்டேன்”

Advertisement

 

Advertisement

“வாட்? மறந்துட்டிங்களா? உங்க மறதியோட விலை என்ன தெரியுமா? மார்க் நம்ம எம்.ஓ.ஏவை கேன்சல் பண்ணப் போறான்”

 

“என்னது? ஒரு டி.எஸ்.சிக்காக அக்ரிமெண்டே கேன்சல் ஆகப் போகுதா?”

Advertisement

 

“எக்ஸாட்லி! எல்லாத்துக்கும் உங்களோட இர்ரெஸ்பான்ஸிபிள் பிஹேவியர் தான் காரணம். இன்னைக்கு அவனோட பேப்பர்ஸை நான் சைன் பண்ணி அனுப்பியே ஆகணும். சோ நீங்க டிஜிட்டல் சிக்னேசரை ரினீவ் பண்ணிக் கொண்டு வாங்க”

 

“சார் இன்னைக்கு சண்டே! இன்னைக்கு அப்ளை பண்ணுனாலும் அப்ரூவல் வராது சார்..நான் நாளைக்கு….”

 

“ஆடிட்டர் சார் கிட்ட பேசிட்டேன். அவர் எல்லாத்தையும் பார்த்துக்கிறேனு சொல்லிட்டார்.. சோ நீங்க ப்ரூஃப்ஸோட அங்கே போய் அப்ளை பண்ணி கையோட ரினீவல் பண்ணுன கீயை எங்க வீட்டுக்குக் கொண்டு வந்துடுங்க”

 

“ஆனா எனக்கு இன்னைக்கு ரிவிசன்,…..”

 

“டு வாட் ஐ சே” என்று போனை வைத்துவிட சந்தியா எரிச்சலில் பேக்கை தூக்கியெறிந்தாள்.

 

“நான் மட்டும் எதாவது ஒரு பேப்பர் கிளியர் பண்ணாம இருந்தேனு வை..அதுக்கு நீ தான் காரணம் மார்ஸ்மாலோ…பெருசா ரினீவ் பண்ணிட்டு வானு ஆர்டர் போடுறான்…ஓல்ட் கீயை யாரு அவன் டாடியா கொண்டு வந்து குடுப்பாரு?” என்று பொறிந்துத் தள்ள சுமித்ரா அவளை அமைதிப்படுத்தினாள்.

 

[the_ad id=”6605″]

 

“ரிலாக்ஸ்! ஏன் இவ்ளோ கோவம்?” என்றபடி தங்கையைச் சாந்தப்படுத்தியவள் அறியவில்லை இன்னும் சில நிமிடங்களில் தானும் அவளைப் போல் தான் ஆவேசத்தில் கத்தப் போகிறோம் என்று….

 

சந்தியா புலம்பும் போதே அழைப்புமணி அழுத்தப்பட சுமித்ரா “நீ இரு… நான் யாருனு பார்த்துட்டு வர்றேன்” என்றபடி எழுந்தாள்.

 

கதவைத் திறந்தவளின் முகம் அங்கே அழைப்புமணியின் மீது கைவைத்தபடி நின்றவனைக் கண்டு எரிச்சலில் கடுகடுக்கத் தொடங்கியது. ஒரு கையை அழைப்புமணியிலும் மற்றொரு கையை இடுப்பிலும் ஊன்றி போஸ் கொடுத்தபடி நின்றவன் ஆரியா.

 

அவனும் அங்கே சுமித்ராவை எதிர்பார்க்கவில்லை தான். ஆச்சரியத்துடன் “நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்க? ஒரு நிமிசம் உன் காலை காட்டு…மோகினிபிசாசுக்கு கால் இருக்காதுனு கேள்விப்பட்டிருக்கேன்” என்றபடி அவள் காலைப் பரிசோதிக்கவும்

 

சுமித்ரா அதில் எரிச்சலானவள் “எங்க வீட்டுக்கு வந்து என்னையே கிண்டல் பண்ணுவியா? மரியாதையா ஓடிப் போயிடு” என்று விரலை நீட்டி மிரட்ட

 

ஆரியா “ஏய் விரலை மடக்கு… நான் ஒன்னும் உன்னைத் தேடி வரலை…எங்கே மை டியர் தியா? தியா..” என்று சந்தியாவை அழைத்தவன் சுமித்ராவை ஒரு கையால் ஓரங்கட்டிவிட்டு உள்ளே சென்றான்.

 

சுமித்ரா அவனது ‘மை டியர் தியா’ உண்டாக்கிவிட்ட கடுப்புடன் அவன் பின்னே வரும் போதே சந்தியா அவளது அறையிலிருந்து “பாஸ் நீங்க என்ன காலையிலேயே வந்துருக்கிங்க? இன்னைக்கு உங்களோட டேயாச்சே? பொதுவா இந்த நாள்ல நீங்க சென்னையில இருக்கிற ஆள் இல்லையே” என்று கேலியாகக் கேட்க இருவரும் பேசிக் கொள்வதைக் கண்ட சுமித்ரா அவர்கள் ஏற்கெனவே பழக்கமானவர்கள் போலும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

ஆரியா சந்தியாவிடம் “என்னோட உடன்பிறப்பு பண்ணுன டார்ச்சர் தாங்காம உன்னைப் பார்க்க வந்திருக்கேன் தியா.. இது அண்ணாவோட ஓல்ட் டி.எஸ்.சி கீ… இதை ரினீவ் பண்ணி அண்ணா கிட்ட குடுத்துடு…இப்போ என்னை கடமை அழைக்குது…ஐ ஹேவ் டு கோ” என்று காலில் சுடுதண்ணீர் ஊற்றியதைப் போல படபடத்துவிட்டு வெளியேற முயல

 

சந்தியா “பாஸ் நான் எனக்கு இன்னைக்கு ரிவிசன் எக்சாம் இருக்கு..நான் அங்கே போவேனா? இல்ல இந்த கீயை ரினீவ் பண்ணுவேனா?” என்று அங்கலாய்க்க

 

ஆரியா “பிளீஸ் தியா! சண்டே அன்னைக்கு மட்டும் என்னை எந்த வேலையும் செய்ய சொல்லி கம்பெல் பண்ணாதே…பிளீஸ்” என்று கெஞ்சியவன் சந்தியாவின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவாறே “நீ குட் கேர்ள் தானே? பிளீஸ் நீயே கொண்டு போய் அண்ணா கிட்ட குடுத்துடு தியா…பிளீஸ்” என்று வேண்டிக் கேட்டுக்கொள்ள சந்தியாவும் வேறு வழியின்றி தலையாட்டினாள்.

 

சுமித்ராவின் பார்வையோ தங்கையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவனின் மீது வாள் போல் பாயச் சந்தியாவின் அருகில் சென்றவள் ஆரியாவின் கையைப் பட்டென்று தட்டிவிட்டாள்.

 

“முதல்ல நீ இப்பிடி சந்துவை டச் பண்ணி பேசறதை நிறுத்திக்கோ…பொண்ணுங்க கிட்ட டீசெண்டா பிஹேவ் பண்ணனும்னு உனக்கு யாரும் கத்துக் குடுக்கலையா?” என்று அவள் பொறிந்துத் தள்ள

 

ஆரியா அவளை நக்கலாகப் பார்த்தபடி “அதானே! என்னடா ஜெகன் மோகினி பேசாம அமைதியா வேடிக்கை பார்க்குதேனு நினைச்சேன், உடனே ஆரம்பிச்சிடுச்சு… லிசன் நீ தியாவுக்கு யாரா வேணும்னாலும் இருந்துட்டுப் போ.. பட் நான் அவளோட ஃப்ரெண்ட்… எங்க மனசுல எந்த கல்மிஷமும் இல்லை, அழுக்கும் இல்லை…அதனால என் ஃப்ரெண்ட் கிட்ட நான் எப்பிடி பேசணும்னு நீ எனக்கு லெக்சர் குடுக்காதே ஓகே…” என்று அவள் பேச்சை அலட்சியப்படுத்திவிட்டான்.

 

[the_ad id=”6605″]

 

சந்தியா சுமித்ராவிடம் “சுமிக்கா இது ஆரியா, மார்ஸ்மாலோவோட தம்பி தான்… சோ நீ நினைக்கிற மாதிரி…..” என்று ஆரியாவுக்கு ஆதரவாகப் பேச வர அவளைக் கையமர்த்திய சுமித்ரா

 

“சூரியாண்ணாவோட தம்பிங்கிறதால அவரை மாதிரியே நல்ல மனசோட இருப்பாங்கனு அர்த்தமில்ல சந்து…மத்தவங்களுக்கும் மனசு இருக்கும்னு புரியாதவங்களா கூட இருக்கலாம்” என்று ‘நல்ல மனசு’ என்ற வார்த்தையை அழுத்தத்துடன் கூற

 

ஆரியா “அதே மாதிரியே தியாவோட அக்காங்கிறதால மட்டும் அவளை மாதிரியே ஃப்ரெண்ட்லியா இருப்பாங்கனு அர்த்தமில்ல தியா…திமிரு பிடிச்சவங்களா கூட இருக்கலாம்” என்று அவளது பாணியிலே பதிலளித்துவிட்டு சந்தியாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்;பினான். அவன் கிளம்பியது தான் தாமதம், சுமித்ரா இப்போது கடுகடுக்கத் தொடங்கிவிட்டாள்.

 

“இவன்லாம் ஒரு ஆளுனு நீ அவனோட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்க. அவன் ஆளும், மூஞ்சியும், முகரக்கட்டையும் எதுவுமே சரியில்லை… சூரியாண்ணாவைப் பார்த்தாலே தெரியும் பக்கா ஜெண்டில்மேன்னு… ஆனா இவன் மூஞ்சியைப் பார்த்தாலே சரியான திமிரு பிடிச்சவனு தெரியுது.. இப்படிப்பட்டவன் கூட உனக்கு என்ன ஃப்ரெண்ட்ஷிப் வேண்டியது கிடக்கு?” என்று சந்தியாவைக் காய்ச்சி எடுத்துவிட்டுத் தான் அடங்கினாள்.

 

சந்தியாவோ “உங்க குத்துச்சண்டைக்கு நான் ரெஃபரியா? போங்கய்யா” என்று புலம்பிவிட்டு எழுந்தவள் ஆரியா கொடுத்த கீ அடங்கிய பிளாஷ்டிக்காலான செவ்வக வடிவ கவருடன் ஆடிட்டர் ஆபிஸை நோக்கிச் செல்ல தயாரானாள்.

 

ஸ்கூட்டியில் அங்கே சென்று இறங்கியவள் அன்று ஞாயிறு என்ற போதும் அலுவலகம் திறந்திருப்பதைக் கண்டு அதிசயித்தவளாய் உள்ளே நுழைந்தாள். உள்ளே வழக்கம் போல அலுவலகத்தில் வேலை பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க அவரது உதவியாளரிடம் விஷயத்தைச் சந்தியா கூறவும் அவர் அந்த கீயை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டவர் ஆடிட்டரின் அலுவலக அறைக்குச் செல்லுமாறு கூற சந்தியாவும் அங்கே சென்றார்.

 

அங்கே சென்றவளை இன்முகத்துடன் வரவேற்றவர் “என்னம்மா சண்டே கூட ஆபிஸுக்காக சின்சியரா ஒர்க் பண்ணுறிங்க போல” என்று கேலி செய்ய சந்தியா அதற்கு முறுவலித்தாள்.

“உங்க ஆபிஸுக்கும் சண்டே லீவ் கிடையாதா சார்?”

 

[the_ad id=”6605″]

 

“இந்த டைம்ல ஒர்க் கொஞ்சம் அதிகமா இருக்கும்மா. சோ டிசம்பர் வரைக்கும் இப்பிடி தான் இருக்கும். ஆர்டிக்கிள் கிளர்க் எல்லாரும் வந்துடுவாங்க..” என்று அவர் விளக்க

 

சந்தியா அதைக் கேட்டு அமைதியாகத் தலையாட்டிக் கொண்டாலும் மனதிற்குள் “நீயும் ஆர்டிக்கிள்ஷிப் பண்ணுறப்போ இப்பிடி தான் சண்டே கூட ஒர்க் பண்ணனும் போலயே” என்று சற்று கவலையுடன் சொல்லிக் கொண்டாள்.

 

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேர காத்திருப்புக்குப் பிறகு டிஜிட்டல் சிக்னேசர் சந்தியாவின் கைக்கு வரவே ஆடிட்டரிடம் “சாரி சார்! சண்டே கூட உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்..அப்போ நான் கிளம்புறேன்..தேங்க்யூ சோ மச்” என்றபடி விடைபெற்றவள் ஸ்கூட்டியுடன் அந்த அலுவலக வளாகத்திலிருந்து வெளியேறினாள். நேரே சூரியாவின் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!