Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்….3

உன் காதல் ஒரு வரமாய்….3

தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் அமிர்தா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.

“ச்சு…க்கா….எதாவது ஐடியா கிடைச்சுதா…..”என்று கேட்க பாரதியோ இல்லை என்னும் விதமாக தலையாட்டினாள்.

“இப்ப என்னக்கா பண்றது….”என்று அம்ரிதா நொந்து கொள்ள,



Advertisement

“அடியே முதல்ல ஒரு இடத்துல நீ உட்காரு….அப்புறம் தான் எனக்கு எதாவது ஐடியா வரும்….”என்று பாரதி கூறியவுடன் அவளின் அருகே ஓடி வந்து அமர்ந்து கொள்ள,பாரதி ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தாள்.

தனது பேசியை பத்திரமாக கொடுத்துவிட்டான் அவனிடம் நன்றி சொல்ல வேண்டும் எங்கே எப்படி சொல்லுவது என்று புரியவில்லை என்று அன்று கோவிலில் வந்ததிலிருந்து படுத்தி எடுத்துவிட்டாள் அமிர்தா.ஊர் பேர் தெரியாதவனை எவ்வாறு தேடி கண்டு பிடிப்பது என்று இரு பெண்களுக்கும் புரியவில்லை.

“ஏய் அமி…..”

Advertisement

“அக்கா….என்னை அம்மி,பம்மினு கூப்பிடாத….”என்று அமிர்தா சிணுங்க,

Advertisement

“அட எவடீ இவ….இப்ப இந்த பேருல என்ன கெட்டு போச்சு….”

“போக்க அம்மி குடக்கல்லுனு…..”என்று முகத்தை சுழிக்க,

“நான் உனக்கு ஒரு பேரு தான் வெச்சேன் நீ உனக்கு பல பேரு வச்சிக்குற….”

Advertisement

“அச்சோ ஆமால்ல…..”என்று அவள் தலையில் தட்டிக் கொள்ள,

“நீ இன்னும் சின்ன பாப்பா மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க….”

“போங்கக்கா….”

“அட சிணுங்காம இருடீ….எனக்கு ஒரு யோசனை தோணுது…..”என்று பாரதி கூறவும்,

“என்னக்கா….என்ன யோசனை…”

“நீ இந்த வாரம் ஞாயிறு கோவிலுக்கு போவல்ல அப்ப அந்த ஆளு வந்தா நன்றி சொல்லிடு….”

“ப்ச்…க்கா….அவரு அந்த கோவிலுக்கு வருவாரானு எனக்கு எப்படி தெரியும்….”

“இல்லடி….அவரு அங்க தான் எங்கயோ தங்கியிருக்காருனு நினைக்கிறேன்…..அதனால….”

“அங்க தங்கியிருந்தா கோவிலுக்கு வருவாருனு எப்படி சொல்லுறது….”என்று அமிர்தா தலையில் முட்டுக் கொடுக்க,

“இவ ஒருத்தி முதல்ல நான் சொல்லுறத முழுசா கேளுடீ…..ஒருவேளை வந்தா….நீ போய் பாரு….”

“ஒருவேளை வரலைனா….”என்று அமிர்தா முந்திக் கொண்டு கேட்க,

“ஓங்கி ஒரு கொட்டு கொட்டிடுவேன் பார்த்துக்க…..முதல்ல நீ போய் பாரு…அப்படி வரலைனா வேற யோசிக்கலாம்…..”என்று பாரதி கூற அன்றிலிருந்து வாராவாரம் கோவிலுக்கு வந்து அவனை தேடிவிட்டு சென்று பாரதியை தான் ஒரு வழியாக்கினாள்.அன்றும் அதே போல் கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு பரிகாரத்தில் அமர்ந்திருக்க,

“என்னடீ அமிர்தா….கொஞ்சா நாளா யாரை தேடுற நீ….”என்று கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தாள் மாமி குருக்களின் மனைவி.

“அது…அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமி….”என்று அமிர்தா மழுப்ப,

“நன்னா அசடு வழியற போ….ஒழுங்கா வேலைக்கு போனமா வந்தமா இரு….அப்பா அம்மா இல்லை தேவையில்லாத விஷயத்துல போய் மாட்டிக்காத….”என்று கூறிவிட்டு செல்ல அமிர்தாவிற்கு திக்கென்றானது.தான் ஏதேனும் தவறு செய்கிறோமோ என்னும் எண்ணம்.அதை பாரதியிடமும் பகிர,

“அட மக்கு புள்ள….அவங்க உன் மேல உள்ள அக்கறையில சொல்லுறாங்க….அதை ஏன் தப்பா எடுத்துக்குற….”

“இல்லக்கா….நான் ஏதாவது தப்பு பண்ணுறேனா….எனக்கு பயமா இருக்கு…..”

“நீ எதை தப்புனு சொல்லுற….”

“அது அது….நான் அவரை தேடுறது தப்பில்லையா….”

“நீ என்ன அவரை விரும்புறியா….”

“அச்சோ இல்லைக்கா….எனக்கு அவர்கிட்ட நன்றி சொல்லனும் அவ்வளவு தான்….”என்று கூற,

“அப்புறம் என்ன….நீ எந்த தப்பு செய்யல….இனி கோவிலுக்கு போனாமா வந்தோமானு இரு…..கடவுள் அவரை உன்கிட்ட காட்டனும் நினைச்சா கண்டிப்பா காட்டுவாரு….அன்னைக்கு உன்னோட நன்றியை அவர்கிட்ட சொல்லிடு….”என்று பாரதி கூற அமிர்தாவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.

சென்னயின் மற்றொரு இடத்தில் உள்ள பெரிய மர ஆலையில்,

“ஏம்பா சிவா….இந்த மிஷின் சரி பண்ணி இரண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ள திரும்பியும் மக்கர் பண்ணுது….”என்று அந்த ஆலையின் உரிமையாளர் சதாசிவம் கூற,

“மிஷின் உள்ள போட்டது எல்லாம் டூப்ளிக்கெட் பார்ட் அப்புறம் அப்படி தான் இருக்கும்…”என்று கூறிக் கொண்டே அந்த ராட்சத இயந்திரத்தின் உள்ளே தலையைவிட்டு பார்த்துக்கொண்டிருந்தான் சிவா.

“எல்லாம் நேரம் உன்கிட்டெல்லாம் பேச்சு வாங்கவேண்டியது இருக்கு….”என்று மிக மெலிதாக தான் முணகினார் சிவம்.ஆனால் எதிரில் இருப்பவனுக்கு கழுகு காது போல அவர் முணகியதை கேட்டவன்.இயந்திரத்தின் உள்ளிருந்து எழுந்து வேகமாக வெளியில் நடக்க,

“அட என்னப்பா நீ அவரு ஏதோ கோபத்துல பேசுறாரு….நீ அதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு….இன்னைக்கு நைட்டுக்குள்ள லோடு ஏத்தி ஆகனும் சிவா….கொஞ்சம் உதவி பண்ணுப்பா….”என்று தழைந்து தான் கேட்டுக் கொண்டார் அந்த மர ஆலையின் மேலாளர் வேலன்.

“எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம்….நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன் அவ்வளவு தான்….உங்களுக்கு தான் தேவை இருக்கு  எனக்கில்லை….அதனால வார்த்தைகளை அளந்து பேசுங்க….அப்புறம் என்ன சொன்னீங்க என்கிட்ட பேச்சு வாங்க வேண்டியதிருக்கா ஏன் வாங்கினா என்ன….ஏன் நான் உழைக்கிறேன் சம்பளம் வாங்குறேன்…..இதுல நான் எங்க குறைஞ்சேன்….என்ன மாதிரி பத்து பேர் வேலை செய்யறாதல தான் நீ முதலாளி…..இல்ல….”என்று முகத்தை எள்ளாக வைத்துக் கொண்டு கூற கேட்டுக் கொண்டிருந்த சிவத்தின் முகம் கோபத்தில் சிவந்தது.

“மாமா…கொஞ்சம் அமைந்தியா இருங்க….நமக்கு வேலை முக்கியம்….இவனை விட்டா நமக்கு வேற ஆளில்லை….” என்று அவரை பேசி சரிகட்டி அவரின் இடத்திற்கு அனுப்பிய வேலன் சிவாவிடம் திரும்பி,

“சரி சரி சிவா நீ வா….வந்து வேலையை முடிச்சுக்கொடு…..”என்று கூற,அவரை ஏற இறங்க பார்த்தவன்,

“எனக்கு பேசினதுக்கு மேல ஐநூறு ரூபா கொடுங்க அப்ப தான் வருவேன்…..”என்று கரகராக கூற,

“அட வாப்பா தரேன் வா….உனக்கிள்ளாததா…..”என்று கூற,அடுத்த மூன்று மணி நேரத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் பழுது பார்க்கப்பட்டிருந்தது.பேசியபடி பணத்தை வாங்கி கொண்டு சிவா சென்றுவிட,

“என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க நீ….ஏதோ சொந்தகார பயனு உன்னை வேலைக்கு வச்சா….எவனோ ஒருத்தன் என்னை பேசிட்டு போறான் நீ அவனுக்கு கால் பிடிச்சிக்கிட்டு இருக்க….”என்று சதாசிவம் திட்ட,

“மாமா….கொஞ்சம் பொறுமையா இருங்க….எல்லா வேலையும் நாம அதிகாரத்ல மட்டும் வாங்கிட முடியாது…..இப்ப வந்துட்டு போறேனே…..அவன் படிச்சவன் பட்டதாரி வேற….அவன்கிட்ட நம்ம அதிகாரம் செல்லாது….”

“அதுக்கு அவன் காலை புடிக்க சொல்லுறியா….”என்று எகிறினார் அவர்.

“முதல்ல நீங்க உட்காருங்க…..”என்று அவரை அமர செய்த வேலன்.அவரின் எதிர் இறுக்கையில் அமர்ந்து,

“மாமா…..சிவா இருக்கானே அவனால நமக்கு லாபம்….நிறையா இருக்கு…அவனை நாம விட்டோம் நமக்கு தான் கஷ்டம்….”

“அப்படி என்னடா அவனால நமக்கு லாபம்….”என்றார் சதாசிவம்.

“அவன்கிட்ட இப்ப வேலை கொடுத்தா கரெட்டா முடிச்சு கொடுத்துட்டு போவான்….சில பேர் மாதிரி பொய் புரட்டு இருக்காது…செஞ்ச வேலைக்கு தான் கூலி வாங்குவான்….”

“எங்க இன்னைக்கு அவன் கேட்டதை தான் நீ கொடுக்குற….”

“மாமா புரிஞ்சிக்காம பேசாதீங்க…வெளில இந்த வேலைக்கு சம்பளமே பத்தாரயத்துக்கு மேல தான் வாங்குறாங்க….ஆனா அவன் அப்படி இல்லை எட்டாயிரம் தான் வாங்கிட்டு போறான்….அதோட அவன் வேலை செஞ்சா கரெட்டா இருக்கும் மாமா….இங்க எப்ப எந்த பிரச்சனைனு போன் பண்ணாலும் வரது அவன் மட்டும் தான்….அதான் அவனை நயந்து வச்சிக்கிட்டேன்….”என்று வேலன் கூற,

“அதுக்கு அவன் பேச்சை எல்லாம் நாம கேட்கனுமா…..”என்று அப்போதும் விடாமல் பேச,

“மாமா நீங்க அவனை இலப்பமா பார்த்தீங்க அதான் அவன் பேசிட்டு போறான்….நமக்கு கீழ வேலை செய்யுறவங்க நமக்கு அடிமை கிடையாது மாமா….அவங்களும் நம்மள போல மனுஷங்க தான்…..”என்று வேலன் விடாமல் பேச,

“என்னடா எனக்கே அறிவுரை சொல்லுறீயா….”

“அச்சோ மாமா நான் உங்களுக்கு அறிவுரை சொல்ல முடியுமா….நான் நியாத்தை சொன்னேன்….”

“என்னமோ போ நீ திறமையா இருந்து பார்த்துக்குறனு தான் உன்கிட்ட உப்படைச்சிருக்கேன்….அந்த நம்பிக்கையை காப்பாத்திக்க…..”என்று சதாசிவம்  அப்போதும் ஒரு கொட்டு வைக்க,

“என்னால முடிஞ்சவரை நான் அதை காப்பாத்திக்கிட்டு தான் மாமா இருக்கேன்….அப்புறம் இந்தாங்க இந்த மாசத்தோட வரவு……”என்று ஆறு லட்சத்தை கட்டாக அவரின் கையில் கொடுக்க சிவாவை தற்காலிகமாக மறந்து போனார் சதாசிவம்.

கணினியின் முன் அமர்ந்திருந்த அமிர்தாவின் முன் ஏதோ நிழலாட நிமிர்ந்தவள் புன்னகைத்து,

“என்ன வேணிக்கா…..”என்று கேட்க,

“அது புள்ள இந்த மாசம் சம்பளம் போட்டவுடனே எனக்கு எப்படி இந்த பேங்குல கட்டுறதுனு சொல்லி தரியா….வூட்டுக்கு எடுத்துட்டு போனா அந்த வீணாபோன மனுஷன் குடிச்சே தீர்த்துடுவான்….”என்று தன் முந்தானையால் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கூற,

“க்கா….அழாதீங்க….நான் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்….”என்று அமிர்தா கூற,

“சரி இன்னைக்கு சாய்ந்தரமே போய் கட்டிவோமா…”என்று வேணி கேட்க,

“இல்லைக்கா……இப்ப நேரம் ஆகிடுச்சு….நாளைக்கு காலையில கட்டலாம்….நீங்க உங்களோட ஆதார் கார்டு,ரேஷன் கார்டு இது எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க….”என்று கூற,

“சரி புள்ள….நாளைக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்…..” என்று கூறிவிட்டு தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார்.இப்போதெல்லாம் பாரதி கூறியதை போல் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் சகஜமாக பேசுகிறாள் அமிர்தா.முதலில் திடீர் என்று பேசும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தவர்கள் பின் சகஜமாக பழகினர்.அதில் வேணி சற்று அதிகபடி நெருக்கம் தான் அவளுக்கு சாவித்ரியை அத்தனை பிடிக்கும்.குடிகார கணவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது அவர் தான் அவளை இந்த வேலையில் சேர்த்துவிட்டார்.தனது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்தவர் அதனாலே அவரின் மகளின் மீது தனி  பாசம் இருந்தது.

அடுத்த நாள் காலையிலேயே வேணியை வங்கிக்கு அழைத்து வந்தவள் அவளுக்கு வங்கி கணக்கு துவங்கி எப்படி உபயோக படுத்த வேண்டும் என்று கற்றும் கொடுத்தாள்.

“உங்களுக்கு நான் சொன்னதுல ஏதாவது சந்தேகம்னா என்னை கேளுங்க…..”என்று அமிர்தா கூற,

“சரி புள்ள….இந்த பணம் பத்திரமா இருக்கும்ல…..”என்று வேணி கேட்க,

“கண்டிப்பா இருக்கும் உங்களை தவிர வேறு யாரும் உங்க பணத்தை எடுக்க முடியாது….”என்று அமிர்தா கூற அப்போது தான் வேணிக்கு நிம்மதியே வந்தது.இரு பிள்ளைகள் இருக்கின்றன அதை கரையேத்த வேண்டுமே அதற்காக தான் அல்லாடுகிறாள்.

அந்த வார இறுதியில் அமிர்தா கோவிலுக்கு சென்றிருந்த போது மீண்டும் அவனைக் கண்டாள் இவள் பரிகாரத்தை சுற்றி வரும் போது குருக்களிடம் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.இவள் நெருங்கும் முன் அவன் சென்றிருக்க,

“சாமி இப்ப உங்கிட்ட பேசிட்டு போனாரே அது யாரு……”என்று கேட்டவளை மேலும் கீழும் பார்த்தார் குருக்கள்.

“தப்பா நினைக்காதீங்க….அவரு என்னோட தொலைஞ்ச போனை எடுத்துக் கொடுத்தாரு அவருக்கு நன்றி சொல்ல தான் கேட்கிறேன்….”என்று இவள் விளக்கம் கொடுக்க,

“ஓ…..சரி…..அவன் பேரு சிவா…இங்க தான் பக்கத்தில இருக்கான்…..சாய்ந்திரம் இங்க தான் இருப்பான் அப்ப வேணா வா…..”என்றுவிட்டு குருக்கள் சென்றுவிட.அமிர்தா அவர் கூறியதை போல் மாலை கோவிலுக்கு வந்து அவனை தேடினாள் பரிகத்தில் ஒரு இடத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தான்.தன் முன்னே ஏதோ நிழல் தெரியவும் நிமிர எதிரே நின்றவளைக் கண்டு கண்களை சுருக்கி பார்த்தவன் மீண்டும் தன் புத்தகத்திற்குள் தலையை விட்டுக் கொண்டு,

“என்ன வேணும்…..”

“என்னை தெரியலை…..”என்று அவள் கேட்க,இல்லை என்னும் தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது.அமிர்தாவிற்கு உள்ளுக்குள் சொத்தென்றானது.தான் இவனை இத்தனை நா நினைத்துக் கொண்டிருந்தால் இவனிற்கு தன் முகம் கூட நினைவில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்க,

“என்ன வேணும் உனக்கு….”என்று சற்று எரிச்சலாக கேட்டான்.

“இல்ல நீங்க அன்னைக்கு போன்…..”என்று அவன் போட்ட அதட்டலில் ஏதேதோ அமிர்தா உளற,அவளை ஏற இறங்க பார்த்தவன்,

“ஓ…..அதுக்கு என்ன….”

“என்னை நியாபகம் வந்துடுச்சா….”என்று அமிர்தா முகம் மலர கேட்க,

“இல்ல….ஆனா கொஞ்சம் இருக்கு….இப்ப என்ன வேணும் உனக்கு…அதான் உன் போனை கொடுத்துட்டேனே…..”என்று புத்தகத்தை விட்டு கண்ணை எடுக்காமலே தான் பேசினான்.

“என் முகத்தை பார்த்து பேசினாதான் என்னவாம்…..”என்று மெல்ல அமிர்தா முணுமுணுக்க,

“ஏன் உன் மூஞ்சியை பார்த்து பேசினா தான் பேசுவியா…..வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு…..”

“அது….ரொம்ப தேங்க்ஸ்…..”என்று அவள் ஒருவாரு கூற,ஒரு தலையாட்டல் மட்டுமே அவனிடம் இருந்து கிடைக்க,

“என்ன இவரு தலையை மட்டும் ஆட்டுறாரு….”என்று யோசித்துக் கொண்டே அவனை பார்த்தபடி நிற்க,வெடுக் கென்று அவன் நிமிர இவள் இரண்டடி பின் சென்றாள்.

“அதான் சொல்லிட்டல்ல கிளம்பு….”என்று ஒரு அதட்டல் போடவும் அரண்டு விழித்தவள் பின் சுதாரித்து அவனையே திரும்பி பார்த்தபடி கிளம்ப,நிமிர்ந்து முறைத்தவன் கண்களில் கோபம் நிறைந்திருந்தது.

“நான் தேங்க்‌ஸ் சொல்ல தான் வந்தேன் வேறு எதுவுமில்ல….இப்படி மிரட்டுறீங்க….”என்று தூரத்திலிருந்தே கத்திவிட்டு ஓடிவிட்டாள்.புத்தகத்தை புட்டிக் கொண்டிருந்தவன் முகத்தில் மென் முறுவல் அதுவும் மெல்லியதாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!