Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 18

அத்தியாயம் 18:

சனிக்கிழமை காலை அவசரமாக தலைக்கு குளித்து விட்டு காயவைக்க நேரமில்லாததால் தலைக்கு இருபுறமும் இரு டிக் டாக் கிளிப் மட்டும் போட்டு கொண்டவள் முடியை விரித்து விட்டாள். காது கன்னத்தில் எல்லாம் முடி சுருள் சுருளாக தொங்கியது.

ஒரு பேபி பிங்க் கலரில் பிராக் அணிந்து கொண்டாள் . அது முழங்காலுக்கு கொஞ்சம் கீழே  இருந்தது. கழுத்தில் எதுவும் போடாமல் விட்டவள், காதில் மட்டும் பெரிய சைஸ் பியர்ல் இயரிங் போட்டு கொண்டாள். டிரஸ் கலரில் குட்டி பிந்தி வைத்து கொண்டவள் லைட் பிங்க் ஷூ அணிந்து கிளம்பி விட்டாள்.

கோயிலுக்கு சென்று பார்த்தால் ஹேரி வரவில்லை . கால் செய்தாள். ஒரு அவசர வேலை வந்து விட்டதால் ஒரு ஒன் ஹௌர் லேட்டாகும் என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வைத்து விட்டான்.



Advertisement

அடப்பாவி நா எவ்வளவு அவசரமாக கிளம்பி வந்தேன். இவன் என்னன்னா ஒழுங்கா பேசாம கூட கட் பண்ணிட்டான் என்று அவனை திட்டி கொண்டே கோயிலுக்கு உள்ளே சென்று பொறுமையாக சாமியை கும்பிட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது பார்த்தால் ஊர்வசியும், பூஜாவும் இவளுக்கு முன்னே சென்று கொண்டிருந்தார்கள்.

மது வேகமாக போய் ஊர்வசியின் தோளை தட்டினாள். ஊர்வசி திரும்பி பார்த்தவள் “ஹே மது நீயா. இன்னைக்கு கோயிலுக்கு வரேன்னு சொல்லவே  இல்லை நீ” என்றாள்.

“நீ மட்டும் சொன்னியா”

Advertisement

“நா தீடிர்னுதாண்டி கிளம்பி வந்தேன். அதை விடு இந்த டிரஸ் சூப்பர். பெரிய சைஸ் பன்னீர் ரோஜா மாதிரி இருக்கே” என்று ஊர்வசி சொன்னதற்கு “ம்க்கும் பஞ்சு மிட்டாய் விக்கிறவ மாதிரி இருக்கு. இந்த ஊர்ல போய் யாராவது ரோசு, பச்சைன்னு டிரஸ் போடுவாங்களா. உனக்கும் உன் பிரண்டுக்கும் ரசனையே கிடையாது” என்றாள் பூஜா.

Advertisement

ஊர்வசி பிஸ்தா கிரீனில் சல்வார் அணிந்திருந்தாள். மாநிறமாக இருக்கும் அவளுக்கு அழகாக இருந்தது அந்த உடை.

மாநிறத்திற்கும் கீழ் இருக்கும் பூஜா, டைட்டாக ப்ளாக்கில் ஸ்கின்னி ஜீனும், மேலே சாண்டல் கலரில் ஃபுல் ஸ்லீவில் குட்டி பனியனும் அணிந்திருந்தாள். அடிக்கடி அந்த பனியனும் மேலே ஏறி அவள் தொப்புளை காட்டியது. ட்ரெஸ்ஸே படு டைட்டாக கிளாமராக இருந்தது. முடியை வேறு கலர் கலராக கலரிங் செய்து, அவள் முடிதான் பார்ப்பதற்கு பஞ்சு மிட்டாய் மாதிரி இருந்தது.

இந்த லட்சணத்தில் அவள் இவர்கள் உடையை கிண்டல் செய்தாள். ஊர்வசியும் மதுவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு அமைதியாக நடக்க ஆரம்பித்தார்கள். எல்லா சன்னதிக்கும் சென்று சாமியை வணங்கிவிட்டு வெளியில் வந்தார்கள்.

Advertisement

“என்ன மது உன் பிளான்” என்று ஊர்வசி கேட்டாள்.

“என் பிரண்ட் ஒருத்தர் வரேன்னு சொல்லிருக்காரு ஊர். அவருக்காக தான் வெயிட் பண்ணனும்”

“எனக்கு தெரியாம யாரு டி உன் பிரண்ட்”

“மதுவோட பிரெண்டுன்னா கட்டாயமா யாராவது காமடி பீஸாதான் இருக்கும்” என்றாள் பூஜா சிரித்து கொண்டே. அவள் பேச்சை காதில் வாங்கி கொள்ளாமல், “உனக்கு தெரியாது ஊர். இப்ப ரொம்ப கொஞ்ச நாளாத்தான் தெரியும். ட்ரைன்ல மீட் பண்ணேன்”

“சரி வா ரெஸ்டாரண்ட்ல எங்களோட சாப்டுட்டே வெயிட் பண்ணு” என்றாள் ஊர்வசி

மதுவும் காலையில் ராகி கஞ்சி மட்டும் தான் குடித்து வந்ததால் சரி என்று ஹேரிக்கு, ரெஸ்டாரண்டிற்கு வந்து விடுமாறு ஒரு மெஸேஜ் போட்டுவிட்டு, அவர்களோடு சென்றாள். நல்ல கூட்டமாக இருந்தது ரெஸ்டாரண்ட்.

இவர்கள் ஒரு டேபிளில் அமர்ந்து ஆர்டர் பண்ணிவிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது மதுவும் ஊர்வசியும் தான் பேசினார்கள். பூஜா மொபைலை நோண்டி கொண்டே அங்கிருக்கும் பசங்களை நோட் பண்ணி கொண்டிருந்தாள்.

அதிகமாக நார்த் இந்தியன்ஸும், கொஞ்சமாக சவுத் இண்டியன்சும், ஏன் ஓரிரு வெள்ளையர்கள் கூட அங்கு இந்திய உணவை சாப்பிடுவதற்கு வந்திருந்தார்கள்.

மது டேபிளுக்கும் உணவு வந்து விட்டது. சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை  நோக்கி ஒருவன் வந்தான். கண்டிப்பாக நார்த் இந்தியன் தான். வந்தவன் மதுவிடம் “ஹாய் ஐயம்  ஆர்யன்” என்றான். ஆள் அழகாக சாக்லேட் பாய் லுக்கில் இருந்தான்.

மதுவும் “ஹலோ ஐயம் மதுமிதா” என்று விட்டு ஊர்வசியையும் பூஜாவையும் அறிமுக படுத்தினாள்.

ஆர்யன் “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா”  என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

அதற்கு மது “தோடா தோடா மாலும் ஹை ங்க”  என்றாள்

ஹா ஹா என்று சிரித்து கொண்டே ஆர்யன் “சான்சே இல்லங்க நீங்க. உங்களைத்தான் ரொம்ப நேரமா நா வாச் பண்ணிட்டுருந்தேன்”

“ரொம்ப நேரமா என்ன சைட் அடிச்சேன்னு என்கிட்டேயே டீசண்டா சொல்றிங்க ம்”  என்று தலையை சரித்து அவனை பார்த்து விளையாட்டாக முறைத்து கொண்டே கேட்டாள் மது.

அதற்கும் சிரித்து கொண்டவன் “அதுக்கு என்னங்க பண்றது ரோஜா பூ மாதிரி இருக்கீங்க. சுத்தி பாருங்க  நிறைய பேர் உங்கள தான் சைட் அடிச்சிட்ருக்காங்க . நா மட்டும் கிடையாது”

“ஆனா நீங்கதானே என்னட்ட வந்து பேசிட்டுருக்கீங்க”

“ஆமாங்க நா முந்திக்கணும்னு தான் உடனே வந்து பேசிட்டேன்” என்றவன் பக்கத்தில் முறைத்து கொண்டிருந்த பூஜாவையும், சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்த ஊர்வசியையும் பார்த்து விட்டு “சாப்பிட்டு முடிச்சிட்டீங்கன்னா உங்கட்ட கொஞ்சம் தனியா பேசலாமா” என்று கேட்டான்.

மது யோசித்தாள். அவனை பார்த்தால் தப்பாக ஒன்றும் படவில்லை. யார் வேண்டுமானாலும் ஈஸியாக பிரண்ட் ஆகிக்கலாம் என்னிடம் என்பது போல ஒரு தோற்றம்.

பாப்போம். என்ன ப்ரொபோஸ்த்தான பண்ண போறான், என்று அவனுடன் பக்கத்து டேபிளில் சென்று அமர்ந்தாள். அவனே ஆரம்பித்தான். “நா இங்க 3 இயர்சா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். சொந்த ஊர் டெல்லி. வீட்ல அலையன்ஸ் பாக்கிறாங்க. உங்கள கவனிச்சதுல உங்கட்ட கேட்டு பாக்கலாம்னு ஒரு எண்ணம். நீங்க என்ன சொல்றிங்க. என்ன மேரேஜ் பண்ணிக்க உங்களுக்கு ஓகே வா”

மதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் “இன்னைக்கு என்ன பாத்து இன்னைக்கே எப்படி மேரேஜ்ன்னு இவ்ளோ பெரிய முடிவெடுக்கிறிங்க. என்ன பத்தி என்ன தெரியும். நா அழகா இருக்கேன்றத தவிர”

“அது சில பேர் பாத்தா ஒரு நம்பிக்கை வரும். இவங்களோட நம்ம லைப் நல்லா ஹாப்பியா போகும். இவங்களால நமக்கும் நம்ம சேந்தவங்களுக்கும் ஒரு கெடுதலும் வராதுன்னு தோணும்”

“என்ன பாத்தா உங்களுக்கு அப்படி இந்த ஒரே நாள்லயே தோணுச்சா”

அதற்கு அவன் சிரித்து கொண்டே “ம். நீங்க கோயில்ல என்ட்ரி ஆகும்போதே பாத்தேன். பிள்ளையார் கோயில் வாசல்ல சிதறு தேங்காய் உடைச்சது வெளியில சிதறி, ஒரு அம்மா கால்ல குத்திடுச்சி. நீங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, அவங்க போன உடனே சிதறியிருந்த எல்லா தேங்காயும் எடுத்து அதுக்கான பாக்ஸ்ல போட்டிங்க. அப்புறம் சுத்தி பாத்துட்டு ஒரு பள்ளு தேங்காய எடுத்து கடிச்சி ரகசியமா சாப்பிட்டு போனீங்க”

மதுவுக்கு வெட்கமாக போய்விட்டது. அதை மறைத்து கொண்டே அவனிடம் “ஆஸ்திரேலியா வந்தாலும் பட்ட பகல்ல ஒரு  பொண்ணால சுதந்திரமா ஒரு தேங்காய் சில்லு கூட சாப்பிட முடியல பாருங்க. காந்திஜி சொன்னது உண்மைதான் பாருங்க” என்றாள்.

ஆர்யனும் சிரித்து கொண்டே “காந்திஜி என்னங்க சொன்னாரு” என்றான்

அதற்கு மது பொய் கோபமாக “அவர் சொன்னது இருக்கட்டும் . நீங்க இப்ப என்ன சொல்றிங்க”

“அதாங்க. காலைல உங்கள பாத்ததுலேந்தே ஒரு பாசிட்டிவ் வைப் . அதான் கல்யாணத்துக்கு கேட்டேன்”

“சரி என்ன பத்தின இந்த சின்ன விஷயம் தெரிஞ்சா போதுமா. என்னட்ட வேற வேற கெட்ட குணங்கள் நிறைய இருக்கலாம். அது சூழ்நிலையை பொறுத்துதான் வெளில வரும். அப்ப என்ன பண்ணுவீங்க”

“ஏங்க சின்ன நம்பிக்கை கிடைச்சா போதுங்க. அத பிடிச்சுட்டு அப்படியே வாழ்ந்திடலாம். நா நம்பறேன். உங்களால கெட்டது நினைக்க முடியாது, செய்ய முடியாது, உங்கள சுத்தி உள்ளவங்க சந்தோசமா இருப்பாங்க அப்படின்னு. அதான் கேட்டேன். ஆனா எனக்கு ஒரு டவுட். நீங்க கேக்கறது வச்சு பாக்கும்போது நா சொல்றத நீங்க வேற யார்கூடவோ கம்பேர் பண்ணி பாக்கறீங்க. கரெக்டா”

மது சிறு திடுக்கிடலுடன் அவனை பார்த்தாள். அவன் பேசுவதை ஹேரியுடன் தான் பொருத்தி பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்த ஆர்யன் அப்ப நா கேட்டது சரிதான். “நா லேட்தான் இல்லையா. யாரு அந்த லக்கி பெர்சன்?”

“ஹலோ அப்படியெல்லாம் இல்ல. நா ஊர்ல அம்மா, அப்பா பாக்கிற மாப்பிள்ளையைத்தாங்க கல்யாணம் பண்ணிப்பேன்” என்று வலுவில்லாத குரலில் சொன்னாள்.

“ஓகே என்னட்ட இப்ப சொல்ல வேண்டாம். பிறகு பாக்கும்போது சொல்லுங்க. என் பிரண்ட்ஸ் கிளம்பிட்டாங்க. நானும் கிளம்பணும். எனி வே உங்கள பாத்தத்துல ரொம்ப சந்தோசம் மதுமிதா. பை” என்றவனுக்கு இவளும் தலையாட்டிவிட்டு கிளம்பி ஊர்வசியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்ன மது சொன்னான்” என்று ஊர்வசிதான் கேட்டாள்

“கல்யாணம் பண்ணிக்க கேட்டான் ஊர்”

“உங்க கண்ட்ரில எல்லாருக்குமே ரசனை கம்மியாத்தான் இருக்கு” என்று பூஜா சொன்னாள்

“நீயும் அந்த கன்ட்ரிதான் பூஜா” என்றாள் ஊர்வசி

“யார் சொன்னா நான்லாம் இந்த ஊர் சிட்டிசன் தெரியுமில்ல” என்ற பூஜாவின் முகம் திடிரென்று பிரகாசமாகியது

“அங்க பாரேன் ஊர்வசி. ஹாலிவுட் ஹீரோ மாதிரி ஒருத்தன் வரான். என்ன ஹைட். என்ன வெய்ட். ஐயோ ஐயோ இங்க ரெஸ்டாரண்ட்க்குள்ள தான் வரான்” என்ற பூஜாவை பார்த்து விட்டு திரும்பி பார்த்த மது, நமுட்டு சிரிப்புடன் திரும்பி கொண்டாள் . ஏனென்றால் வந்தது ஹேரி.

உள்ளே வந்து மதுவை தேடியவன் அவளை பார்த்து விட்டு அவர்கள் டேபிளை நோக்கி வந்தான்.

“ஏய் இங்கதான் வர்றான்” என்ற பூஜா பதட்டமானாள்

ஹேரி அவர்கள் அருகில் வந்தவன் “ஹாய் ஹனி” என்று சொல்லிக்கொண்டே  மதுவை பார்த்தவன் “யு லுக் பியூட்டிஃபுல்” என்றான்.

பூஜா மட்டுமில்லாமல் ஊர்வசியுமே வாயை பிளந்து கொண்டுதான் அவனை பார்த்து கொண்டிருந்தார்கள்.

“வா ஹேரி உட்கார்” என்று பக்கத்து இருக்கையை காட்டினாள் மது. அதில் அமர்ந்து கொண்டே “சாரி ஹனி திடீர் ஒர்க். நான்தான்  பாத்தாகவேண்டிய வேலை. அதான் லேட்டாய்டுச்சி”

“இட்ஸ் ஓகே ஹேரி” என்றவள் ஊர்வசியையும் பூஜாவையும் அறிமுகப்படுத்தினாள். ஊர்வசியைத்தான் ஹேரிக்கு தெரியமே. சத்யனும் மதுவும் சேர்ந்து அவளை ஆஃபிஸில் படுத்தும் பாட்டை கேமராவில்  அவ்வப்பொழுது பார்ப்பானே. அதனால் சிரித்து கொண்டே ஊர்வசியை பார்த்து ஹலோ சொல்லியவன் பூஜாவையும் பார்த்து தலையாட்டினான்.

“மார்னிங் சாப்டியா. உனக்கு ஏதாவது ஆர்டர் பண்ணவா” என்று கேட்டாள் மது.

அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்த பூஜா “ஹாய் ஹேரி. இதே கண்ட்ரி தானா நீங்க. இங்க எங்க தங்கியிருக்கிங்க. என்ன பண்றீங்க. பிசினஸ் ஆர் ஒர்கிங்”  என்று வரிசையாக கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

ஹேரியும் அவளுக்கு பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் மதுவை பார்த்து  “எனக்கு பசிக்கல ஹனி. நீ சாப்பிட்டினா நாம கிளம்பலாமா” என்றான்.

மதுவும் இந்த கொசு தொல்லை தாங்க முடியலியே . நாம வேற முக்கியமா பேசணுமே என்று யோசித்து கொண்டிருந்தவள் அவன்  கேட்டவுடன் ஊர்வசியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள். ஹேரியும் இருவரிடம் பை சொல்லிவிட்டு  கிளம்ப போகும் போது, ஊர்வசி மது கையை பிடித்து கொண்டாள்.

மது பின்தங்கியவுடன் பூஜா எழுந்து வேகமாக ஹேரியிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் . ஊர்வசி மதுவிடம் “ஏய் யார்டி இவர். உன்ன ஹனினு கூப்புடறார்”

“அதான் சொன்னேனே ட்ரெயின்ல பாத்தேன்னு. அவனுக்கு என் பேர் வராது ஊர். அதான் அது மீனிங் ஹனின்னு  கூப்பிடறான்”

“ம்ஹும் அவர் ஹனி சொல்லும்போதே அவ்ளோ பாசம் பொங்கி வழியுது. பாக்கவே ரிச்சா இருக்கார். எனக்குல்லாம் அவர்ட்ட பேசவே நாக்கு தந்தி அடிக்குது. அசால்ட்டா அவன் இவன்னு சொல்ற. இவர்கிட்ட பழகுறது உன் பாச மலர்களுக்கு தெரியுமா”

“அதெல்லாம் தெரியும். என்ன பெரிய ரிச்சு. அவனும் நம்மள மாதிரிதான். உனக்குத்தான் உன் அத்தை பையன்கிட்ட பேசவே தந்தி அடிக்குமே ஊர். அங்க பாரு உன் அத்தை பெத்த ரத்தினத்த. இன்னும் கொஞ்சம் விட்டா அவன் மேலேயே விழுந்து வைக்கும் போல. நா போயி அவன காப்பாத்தறேன். அவன் வேற என்னத்தான் பாக்குறான். அதனால கொஞ்சமாவது வளரு ஊர். வரட்டா” என்று சென்றாள்.

இவள் அருகில் போனவுடன் பூஜா தொங்கி போன முகத்துடன் ஊர்வசியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு பூஜா” என்று ஊர்வசி கேட்டதுதான் தாமதம். “நீயும்தான் இங்க வந்து ஒரு வருஷம் ஆக போகுது. எதாவது டெவெலப் இருக்கா. எங்க அண்ணன்கிட்டயே இன்னும் பேச மாட்ற. அதே அந்த வெள்ள பூசணிக்காயை பாரு. எவ்ளோ பெரிய ஆளெல்லாம் புடிச்சி வச்சிருக்கா. எவன பாத்தாலும் அவள்ட்டதான் போய் பல்லிளிக்கிறாங்க. அவளோடதான முழு நேரமும் இருக்க. கொஞ்சமாவது அவளை பாத்து கத்துக்க. தத்தி தத்தி” என்று திட்டி கொண்டிருந்தாள்.

ஊர்வசிதான் நொந்து போய்விட்டாள். அந்த சில்வண்டு என்னன்னா என்ன வளர சொல்லுது . இவ என்னென்னா என்ன எதோ கத்துக்க சொல்றா என்று மனதிற்குள் புலம்பியவள் பிறகு பூஜாவிடம் “எத வச்சு அவரை பெரிய ஆள்னு சொல்ற” என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டாள்.

“ஏ லூசு அவன் போய் ஏறுற அந்த கார பாரு” என்றாள் பூஜா

ஊர்வசியும்  பார்த்தவள் “அதுக்கு என்ன, அதுல என்ன இருக்கு” என்றாள்

“ம்ஹும் உன்னட்ட போய் கேட்டேன் பாரு. அந்த கார் ஃபெராரி ரோமா. கிட்ட தட்ட 4 கோடி ரூபாய”

ஓ என்று ஊர்வசியும் எதோ யோசித்தாள்

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!