Skip to content
Post Views: 1,531
மைவிழி – 3(b)
தப்பு செய்து விட்ட பாவனையுடன், விட்டால் அழுது விடுபவள் போல் தனக்கு முன் நின்றிருந்த சிறு பெண்ணை நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி வாசனிடம் துளியும் கனிவில்லை.
Advertisement
“இதென்ன பவித்ரா?”என்றான் கண்டிப்பாய். அவன் கையில் ஒற்றை ரோஜா பூவும், அதோடு லவ் க்ரீட்டிங் கார்டும் வீற்றிருந்தது.
“சாஆஆஆர்!” கண்ணீர் கன்னத்தை தொட்டது பவித்ராவுக்கு.
Advertisement
Advertisement
இரங்கவில்லை கீர்த்தி வாசன்.
“வா வந்து இப்படி உக்கார்!” முன்னிருந்த இருக்கையை காட்டியவன்,
Advertisement
“இந்தா முதல்ல இந்த தண்ணியை குடி”என நீரை பருகக் கொடுத்தான்.
கைகள் நடுங்க வாங்கிக் குடித்தவள், அவன் அதட்டலில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“நீ செஞ்சது சரியா பவித்ரா?” அவன் அழுத்தமாய் கேட்க,
ஆமென்று தலையசைத்தவள், வாசனின் கண்டிப்பான பார்வையில் பட்டென இல்லையென்று தலையை ஆட்டி வைத்தாள்.
“உன் வயசென்ன?”
“…”
“சொல்லு!”
“ப.. பதினெழு சார்!”
“நான் யார் உனக்கு?”
“எங்க டீச்சர்!” என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.
“டீச்சருக்கு இப்படி ரோஸ் குடுக்கறது சரியா?” இம்முறையும் அவன் குரலில் அதட்டல்.
“ஸா..ஸாரி சார்!ஆனா உங்களை எனக்கு பிடிச்சிருக்கே” மன்னிப்பு வேண்டி விட்டு இப்படி குருட்டு தைரியத்துடன் கூறியவளை பார்த்து ஆயாசமாய் வந்தது அவனுக்கு.
“லிசன் பவி! இட்ஸ் அன் இன்பாக்ட்சுவேஷன். இந்த வயசுல இதெல்லாம் கடந்து தான் வரணும்! இங்க இருக்கிற எல்லா ஸ்டுடென்ட்ஸும் எங்களை போல டீச்சர்ஸ்க்கு குழந்தைங்க. உங்களை குட் ஹியூமன் பீய்ங்கா இந்த சொசைட்டிக்கு கொடுக்க வேண்டியது எங்களோட பொறுப்பு, கடமை. அதே அளவான பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் இருக்கு, இல்லையா? அதுலருந்து நீங்க தவறலாமா? உன் பேரண்ட்ஸ் எவ்ளோ கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைக்கிறாங்கன்னு யோசிச்சிருந்தன்னா உன்னால இப்படி நினைக்க முடிஞ்சிருக்குமா?” கீர்த்தி வாசன் கண்டிப்பான ஆசிரியனாய், சிறு பிள்ளைக்கான தந்தையின் ஸ்தானத்தில் இருந்தவனாய் பெரும் கண்டிப்பும்,சிறு கனிவுமாய் கேட்க,
சிரத்தைக் குனிந்த படி இல்லையென தலையசைத்தாள்.
“சரி சொல்லு! உன் கோல்(Goal) என்ன?” எனக் கேட்டவனின் முகத்திலிருந்த கடுமை விலகிருக்க,
“டாக்டராகனும்!”எனும் போதே செய்து விட்ட தவறு புரிந்து கண்ணீர் கண்களை மறைக்க விசும்பினாள் பவித்ரா.
இம்முறை கண்களைத் துடைக்க சொல்லி அதட்டாமல் அவள் அழட்டுமென விட்டுருந்தான்.
“ஹ்ம்ம்!இந்த இன்பாக்ட்சுவேசனை படிப்புல வை.அதை லவ்வா மாத்து! யூ நீட் டு போகஸ் ஒன் யூர் கோல் கேர்ள்! அண்ட் யூ வில் பிஎ டாக்டர்! எங்க பவியை நாங்க டாக்டரா பார்க்க வேண்டாமா? இந்த கீர்த்தி சாருக்கு நீ தர கூடிய பெரிய கிஃப்ட் அது தான்.இப்ப சார் உனக்கு என்ன அட்வைஸ் பண்ணாலும் அதெல்லாம் வேண்டாத போலவே தெரியும். சியரப் கேர்ள்! கண்ணைத் துடை. ஸ்மைல் செய்” அவன் சிறு புன்னகையுடன் கூற, சொன்னதையெல்லாம் செய்தாள்.
“ஸாரி சார்!” பவித்ரா தவறை உணர்ந்து கேட்டவள் தலை குனிய,
“தலையைக் குனியாத பவித்ரா! நிமிர்ந்து பாரு!”எனச் சொன்னவன்,
“எப்பவுமே தலை குனியக் கூடாது. எதுவா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ணனும்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்த குருட்டு தைரியம் மாதிரி இல்ல. போல்ட்டா இருக்கனும்!மேன்சை விட விமேன் நீங்க தான் மென்டெலி ஸ்ட்ரோங் இல்லையா.? சோ…” அவன் சொல்ல, தலையசைத்து இதழ் விரித்தாள் பவித்ரா.
“குட், யூ ஸ்டே அவுட் பவி” எனவும்,
அவள் வெளியேறி விட இதையனைத்தையும் சற்று தள்ளி பார்த்திருந்த பெண் ஆசிரியரை அழைத்தவன், பவித்ராவை கூட்டிக் கொண்டு போகச் சொன்னான்.
“பவித்ராவ நீங்க எதுவும் திட்டிடாதீங்க டீச்சர்! அது சரியா இருக்காது” கீர்த்தி சொல்ல அவள் கேட்டுக் கொண்டாள்.
அவர்கள் செல்லவே உடனடியாக பவித்ராவின் தந்தைக்கு போனில் அழைத்து பக்குவமாக விடயத்தை பகிர்ந்து கொண்டான்.
“கோபத்துல அவளை எதுவும் சொல்லிடாதீங்க. உக்கார வெச்சு பொறுமையா பேசுங்க” என்றவனிடம் அவர் மன்னிப்பை வேண்ட அதை ஏற்றுக் கொண்டவனாக அலைபேசியை வைத்தான்.
அடுத்த வேளை ஃப்ரீ பிரியடாக இருக்க யோசனையில் ஆழ்ந்தான் கீர்த்தி வாசன்.
இந்த பள்ளிக்கு ஆசிரியனாக வந்த இந்த சில வருடங்களில் பவித்ரா போன்ற எத்தனையோ பேரை பார்த்து விட்டான் இவன்..
அதிலும் படிக்கும் பிள்ளைகளிடம் தோன்றும் ஆசிரியர் மீதான ஈர்ப்பை அறவே வெறுப்பவன் இதை எப்படி தடுப்பது என தீர்வைக் கண்டறிய முயன்று கொண்டிருந்தான்.
அடோலேசெண்டில் இது போன்ற ஈர்ப்பு சாதாரணம் தான் என்றாலும், அதை இயல்பானதாக்க(normalise) அவன் விரும்பியதில்லை. அதிலும் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இவை எல்லாம் நார்மலைஸ்டாக என்னவென்று சொல்வது?ஆனால் ஆசிரியராக அவனுக்கென கடமை இருக்கிறதல்லவா! அதுவும் தனி பெண்கள் பாடசாலையில் ஆசிரியராய் இருக்கையில் அத்தனை கவனமும் கண்ணியமும் அவனிடம்.
இன்று நடந்தது போலான பேச்சு வார்த்தையின் போது எப்போதுமே ஒரு பெண் ஆசிரியரையும் உடன் வைத்துக் கொள்வான். பாடசாலை அதிபரிடம் பேசி இது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பெற்றோருக்கு நடத்தும் படி கேட்டுக் கொண்டான்.
எதிர்கால பிள்ளைகளின் ஆரோக்கிய வளர்ச்சி முதல் முக்கிய கட்டமைப்பான வீட்டிலிருந்தே ஆரம்பிக்கையில் அங்கிருந்து தான் அதற்கான முயற்சி இருக்க வேண்டுமென நினைத்தான்.
அதே போல் மாணவர்களுக்கும் இது போன்றதொரு விழிப்புணர்வு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை விட்டு நேரே சிவா வீட்டிற்குச் சென்றான் வாசன். இரண்டு நாட்களாக அவனுக்கு உடம்பு சரியில்லை. வாசனுக்கும் பள்ளி வேலைகளால் அவனை சந்திக்க முடியாமல் போனது.
தன் கருப்பு நிற ஹீரோ டிஸ்கவர் பைக்கை நிறுத்தி விட்டு, சிவா வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி நின்றவனின் முகத்தில் தானாய்ப் புன்னகை வந்தொட்டிக் கொண்டது.
“கீக்கி மாமா!” எனக் கீச் குரலில் சிவாவின் ஒன்றரை வயதுப் பெண்ணரசி அவனை வரவேற்றாள்.
“வாங்கண்ணா” என சிவாவின் மனைவி அவனை வரவேற்க அவளுக்கொரு தலையசைப்பை கொடுத்து விட்டு,
இவன் காலைக் கட்டிக் கொண்ட பெண் குழந்தையை கொள்ளைப் புன்னகையோடு கைகளில் அள்ளிக் கொண்டான்.
“மை லிட்டில் ஸ்வீட் சுகர் பேன் கேக்!” என்றழைப்போடு குழந்தை நெற்றியில் முட்டியவன்,
“எங்க உங்கப்பன் தடியன்?”எனக் கேட்க, பிள்ளைக்கு புரிந்ததோ இல்லையோ,
“ததியன்”என அவன் சொன்னதை மழலையில் மிழற்ற தோள் குலுங்க அப்படியொரு சிரிப்பு கீர்த்தி வாசனுக்கு.
எழுந்த சிரிப்பை அடக்கி விட்டு,போலியாக “வர்ஷ்!”என பார்கவி அதட்ட, உதட்டைப் பிதுக்கி கீர்த்தியின் கழுத்தில் முகம் புதைத்தது குழந்தை வர்ஷினி.
“ஓஹ் மை காக்கனோட் பிளவேர்ட் ஐஸ் க்ரீம்! அம்மா சும்மா அதட்டறா” என கொஞ்சினான் வாசன்.
சிரித்த பார்கவி, “எம் புள்ளைக்கு இம்புட்டு பெரிய செல்லப் பெயர் வெச்சு கூப்பிடறது நீங்க ஒரு ஆள் தாண்ணா” என்றவள்,
“நாம பேசுறது எல்லாம் இவளுக்கு புரிய ஆரம்பிக்குது. சில வேர்ட்ஸ் தானாவே சொல்லி பார்க்கறா!” மகளை பற்றி சொல்லி விட்டு,
“சிவா உள்ளதான் இருக்காரு. நான் வரச் சொல்றேன்” என்றவளைத் தடுத்து விட்டு சிவாவின் அறைக்குள் குழந்தையோடு நுழைந்தான்.
அவன் படுக்கையில் ஹாயாக காலாட்டியபடி ஃபோன் நோண்டிக் கொண்டிருக்க,
“டேய் தடியா! இது தான் உங்கூர்ல உடம்பு சரியில்லாம இருக்கிறதா” எனக் கேட்டபடி அமர்ந்தான் வாசன்.
“வாடா நல்லவனே! எப்போ வந்த?”என்றவன், மகளை நோக்கி கையை நீட்ட அதுவோ வர மாட்டேன் என்றபடி வாசனை கட்டிக் கொள்ள, நமுட்டு சிரிப்போடு நண்பனை ஏறிட்டான்.
“வர்ஷாச் செல்லம், இந்த பிஸ்கட் மாமா கூடவெல்லாம் சேராதே பாப்பு! உங்க கீக்கீ மாமா ஒரு பேட் பாய்” மூக்கில் புகை விட்டபடி இவன் சொல்ல,
“கீக்கீ மாமா குட் பாய்!” வாசனின் மடியிலிருந்தவாறே குதித்தது குழந்தை.
“சில்வண்டு!” என நொடித்துக் கொண்டவன்,
“வீட்ல என்னடா சொல்றாங்க?” என விசாரித்தான் நண்பனிடம்.
அமரேசனை வீட்டுக்கு அழைத்து வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது. நண்பனின் வீட்டில் நிலமை எப்படியிருக்குமென தெரிந்தே தான் விசாரித்தான் இவன்.
அன்றே கீர்த்தியின் அண்ணன்கள் அவனை அத்தனை பேசியிருந்தார்களே! அதிலும் கூடுதலாய் வாசனின் தாய் மேகலைக்கு, கிருஷ்ணன் விடயத்தை தெரியப்படுத்தியிருக்க அவர் மகன் முகம் பார்க்கவே இல்லை. கீர்த்தி வாசனின் மேல் குடும்பமே கோபமாய் இருந்தது.
“ப்ச் ,நான் உன்னை பார்க்க வந்தா நீ என்னை கேக்கற?! உனக்கு எப்படி இருக்குடா சிவா?கேசஸ் வேற பெண்டிங்கல இருக்குன்னு சொன்ன..?”
“நீயே பார்க்கறல்ல, ஐ’ம் ஆல்ரைட் மச்சா! கேசெல்லாம் என் ஜூனியர் பார்த்துப்பான்.” என்றவன்,
“என் முன்னாடி ஹேப்பியா இருக்கிற மாதிரி நடிக்க முயற்சி பண்ணாத மச்சா! பச்சயா தெரியுதுடா வெண்ணை!” என நண்பனை வறுத்தெடுத்தான்.
“அப்பா,வெண்ணெய்!”என சொன்னாள் வர்ஷினி.
அதுவரையில் நண்பனின் பேச்சால் இறுகிருந்த வாசன் கூட பக்கென சிரித்து விட்டான்.
“எனக்கு எதிரி வேறெங்கயும் இல்ல. என் முன்னாடித் தான் தையா தக்கான்னு குதிக்குது!” அஸ்டகோணலாகிப் போன முகத்துடன் சிவா கூற, வாசனுக்கு சிரிப்பு தான்.
நண்பனை ஆதூரமாய் பார்த்தவன், “பாப்பு அம்மாவ வரச் சொல்லுடா!” என மகளை அனுப்பி விட,தத்தக்கா பித்தக்கா நடையுடன் சென்ற குழந்தையையே ஆண்கள் இருவரும் பார்த்திருந்தனர்.
“இப்போ சொல்லுடா என்னாச்சு?வீட்ல உங்க அண்ணன்ஸ் எல்லாம் என்ன சொல்றாங்க”என்று கேட்டான் சிவா.
வாசனுக்கு நொடியில் முகம் வாடி விட,
“அப்பா மட்டும் தான் பேசறார். அம்மா,அண்ணனுங்க,அக்காங்க யாரும் பேசுறதில்ல” என்றான் நெடுமூச்செறிந்த படி.
“உன்னைக் கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கிட்டா தான் என்ன? தலையாட்டி சலித்துக் கொண்டவன் நண்பனுக்காய் பரிந்து பேச,
லேசாகிவிட்ட இதயம்,அவன் முகத்தில் புன்னகையை அரும்பச் செய்திட,
“ப்ச், நான் இப்படியிருக்க நான் தானே காரணம். அவங்க என்ன செய்வாங்க! விடுடா மச்சி”என்றான் வருத்தத்தை விழுங்கிக் கொண்டு.
“நல்லா தெரியுதுல்ல இதுல உன் தப்பும் இருக்குன்னு.!அப்ப அதுலருந்து வெளிவர முயற்சி செய்” என கண்டிக்க, நண்பனை விசித்திரமாய் பார்த்து வைத்தான் வாசன்.
“இவன் என்னடா அங்குட்டும் பால் போடுறான், எனக்கும் சப்போர்ட்கு நிக்கறான்னு நீ யோசிக்கிறது தெரியுது மச்சி. எப்படி இருந்தாலும் நான் உனக்காக தான் பார்க்கறேன்”
முறைத்தான் வாசன். சிவாவைப் புரியாமல் போகுமா அவனுக்கு.
“சரி, கல்யாணத்தை பத்தி அப்பா என்ன சொன்னாரு?” கண்டு கொள்ளாமல் அடுத்த கேள்விக்கு தாவ, வாசனின் பார்வையில் மாற்றமில்லை.
“சரிடா டேய்!அப்பறமேட்டு முறைப்பியாம், இப்போ கேட்டதுக்கு பதில் சொல்லுடா கீர்த்தி”
பெருமூச்சொன்றை விட்டவன்,
“அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வெச்சு அப்பாக்கு வாக்கு கொடுத்த அப்பறம் இன்ன வரைக்கும் அதைப் பத்தி அவரு எதுவும் பேசல” என்றான் கோர்த்திருந்த கைகளில் பார்வையை பதித்தவனாக.
இப்படியாய் திருமணப் பேச்சின்றிய அமரேசனின் அமைதியில் ஒரு மாதம் கழிந்திருக்க, அன்றொரு நாள் மாலை, வேலை விட்டு வந்த கீர்த்தி வாசனின் கைகளில் வீற்றிருந்தது அவளின் புகைப்படம்.
நிச்சயமாய் புகைப்படம் எடுத்தவன்(ள்) அவளின் முறைப்பில் பஸ்ப்பமாகிருப்பான்(ள்) என்பதில் சந்தேகமில்லை. பல்லைக் கடித்த படி முறைத்தவாறு புகைப்படத்தில் நின்று கொண்டிருந்தது ஷாட்சாத் வேதவியே.
அதைப் பார்க்கையில் தன்னையே அவள் முறைப்பது போல் இருந்தது வாசனுக்கு! இப்படியொரு திருமண வரன் போட்டோ பார்த்தவன் தான் மட்டுமே இருப்போம் என நினைக்கையில் அவனை மீறி அதரங்களில் படர்ந்தது குறுநகை!
error: Content is protected !!