Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 19

அத்தியாயம் 19:

இங்கு காரில் ஏறிய மதுவிடம் ஹேரி  “ஸச் எ இரிட்டேடிங் கேர்ள்” என்றான் பூஜாவை.

“சும்மா சொல்லாத. உன்னட்ட ஈ ஈ ன்னு எல்லா பல்லையும் காட்டி பேசிட்டுருந்தா . என்னட்டையெல்லாம் பேசும்போது அவ முகத்த பாக்கணும். நாங்கதான் சொல்லணும் இரிட்டேடிங்ன்னு”

“எப்படி பேசினாங்கிறதா வச்சு சொல்லல பேபி. என்ன பேசினான்றத வச்சிதான் சொல்றேன்”



Advertisement

“அப்படி என்ன பேசிட்டா பாத்து 5 மினிட்ஸ்க்குள்ள”

“ம் என்னோட டேட்டிங் வர ரெடியாருக்காளாம் . நா இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றேன். அப்படியும் நா எல்லாத்துக்கும் ரெடிதான் இன்னைக்கு நைட்டே உன்கூட தங்கறேன்னு சொல்றா. உனக்காகத்தான் ஏதும் சொல்லாம சமாளிச்சு அனுப்பி வச்சேன்”

ஓ என்று மது வாயை பிளந்து விட்டாள்

Advertisement

காரை கிளப்பி மெதுவாக ஒட்டிய ஹேரி “இப்ப நாம எங்க போலாம் பேபி” என்று கேட்டுக்கொண்டே அவளை பார்த்தவன் அவள் உட்கார்ந்திருப்பதை  பார்த்து சிரித்து கொண்டே அவள் வாயை மூடுவதற்கு கையை கிட்டே கொண்டு போனான்.

Advertisement

டக்கென்று பின்னால் நகர்ந்த மது “நான்தான் என்ன தொடக்கூடாது சொல்லிருக்கேன்ல” என்றவளை பார்த்து “என்னமோ என்னட்ட பேசணும்னு சொன்னியே. என்ன ஹனி பேசணும்” என்றான்.

“அது எங்கயாவது ஃபிரீயா உக்காந்துதான் பேசணும் ஹேரி . சிட்டிக்கே போலாமா. என் பிரண்ட்  ஜனனி ஊருக்கு போனதுல இருந்து தனியா ஷாப்பிங் போக பிடிக்காம ரொம்ப நாளா போகவே இல்ல. எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும். சிட்டில இருக்க டிஎஃப்ஒ க்கு போலாமா. அங்கதான் டிரஸ் சீப்பா கிடைக்கும் . ஷாப்பிங் பண்ணிட்டு அங்கவே லஞ்ச் முடிச்சிட்டு அப்படியே பேச வேண்டியதை தெளிவா பேசிடலாம். உனக்கு ஓகே வா. நேரம் இருக்கா. அப்புறம் பொண்ணுங்களோட ஷாப்பிங் வந்தா இப்படிதானு அழுக கூடாது” என்று நீளமாக பேசினாள்

“எனக்கு ஓகே தான் ஹனி. இன்னைக்கு உனக்காகவே என் டேவ பிரீ பண்ணிக்கிட்டேன். ஆனா ஏன் dfo போகணும். H &M , டேவிட் ஜோன்ஸ் இப்படி போகலாம்ல. என்ன வாங்க போற.”

Advertisement

“ம்ஹும். dfo தான் சீப் அண்ட் பெஸ்ட். டிரஸ் கலக்க்ஷன் தான் பார்க்கணும். இந்த ஊர்ல போட்ற மாதிரி லைட் கலர்ல எடுக்கணும். எப்போதும் இந்த பூஜா என் டிரஸ் டார்க்கா இருக்குன்னு கிண்டல் பண்ணிகிட்டே இருக்கா”

அவளை ஆச்சர்யமாக பார்த்த ஹேரி “உன் டிரஸ் எல்லாம் எப்பவுமே உனக்கு ரொம்ப அழகா இருக்கும் பேபி. அவ சொல்றான்னு கேக்காத. இப்ப போட்டிருக்க ட்ரேஸ்லேயே பெரிய பிளவர் மாதிரி இருக்க தெரியுமா. அவ்வளவு கியூட்டா இருக்கு உனக்கு”

“ம் நிறைய பேர் சொல்லிட்டாங்க ரோஜா மாதிரி இருக்கேன்னு”

“யாரெல்லாம் சொன்னாங்க”

“நீ. ஊர்வசி அப்புறம் ஆர்யன்”

“அது யாரு ஆர்யன்?”

“இன்னைக்குத்தான் ஃபஸ்ட்  டைம் ரெஸ்டாரண்ட்ல பாத்தேன் அவன்தான் சொன்னான். நல்ல பையன்”

“ஓ எதுக்கு அவன் வந்து உன்கிட்ட பேசினான்” என்றவனின் முகத்தை பார்த்து கொண்டே  மது, “என்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டான்” என்றாள்.

“ஓ அதுக்கு நீ என்ன சொன்ன”

“எங்க ஊரு பையன். பாக்க ஆள் சூப்பரா இருந்தான். அதான் எங்க அம்மா அப்பாட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன்” என்றவளுக்கு பதிலே கூறவில்லை ஹேரி

மதுவும் அவன் முகத்தை முகத்தை பார்த்து கொண்டிருந்தாள். ஒன்றும் பேசாமல் இறுக்கமாக காரை ஒட்டி கொண்டிருந்தான்

மதுவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள்

அதற்கு மேல் அவளால் பொறுக்க முடியாமல் “என்ன அமைதியாயிட்ட. என் மேரேஜ்ன்னா நீ இந்தியாவுக்கு வரணும் , உனக்கு நல்ல அழகான ஷெர்வானி எடுத்து தரேன். என் மேரேஜ்ல கலந்து கிட்டு அப்படியே எங்க ஊசுத்தி பாத்துட்டு வரலாம் நீ” என்று விளையாட்டாக அவள் போக்கில் கூறி கொண்டிருந்தவளிடம் “ஸ்டாப் இட் ஹனி” என்று கத்தினான் ஹேரி.

அவன் சத்தத்தில் பயந்து போய் திரும்பி பார்த்தாள். முகமெல்லாம் சிவந்து போய் காரின் வேகத்தை அதிபடுத்தினான் ஹேரி

காரின் வேகத்தை அதிக படுத்தவும் இன்னும் பயந்து போன மது “ஹே என்ன பண்ற. நா சும்மா விளையாட்டாத்தான் பேசிட்ருந்தேன் . நா சொன்னது உண்மையில்ல. நீ கார் ஸ்பீட கம்மி பண்ணு” என்று அவன் கையை பிடித்து உலுக்கினாள் மது.

அதற்கு பிறகு காரின் வேகத்தை குறைத்தாலும் இயல்புக்கு திரும்பவேயில்லை ஹேரி.

ஷாப்பிங் மாலும் வந்துவிட்டது. காரை பார்க்கிங்கில் போட்டுவிட்டு இருவரும் இறங்கி மாலுக்குள் சென்றார்கள். இன்னும் இரு நாட்களில் கிறிஸ்துமஸ் என்பதால் ஜே ஜே என்று ஒரே கூட்டமாக இருந்தது. ஹேரி ஒன்றும் பேசாததால் மதுவும், பேசலைன்னா போ எனக்கென்ன என்று அவளும்  ஒன்றும் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு டிரஸ் ஷாப்பாக உள்ளே சென்று வெளியே வந்து கொண்டிருந்தாள்.

ஹேரிக்கும் பொறுமை போய் கொண்டிருந்தது. பிறகும் ஒரு கடையில் ஒரு ஷார்ட் டாப்ஸை எடுத்து  விலையை பார்த்தாள். எதையோ விரல்களால் கணக்கு பண்ணி கொண்டிருந்தாள். பிறகு வேண்டாம் என்று வெளியே செல்ல போனவளை நிறுத்தி “என்ன பண்ணிட்ருக்க பேபி” என்றான்.

“ம் எங்க ஊர் ரேட்டுக்கு கால்குலேட் பண்ணிட்ருந்தேன். எந்த கடையில பாத்தாலும் ஒரு  டாப்ஸே 4 ஆர் 5 தவுசண்ட் ரூபீஸ் வருது. எங்க ஊர்லயெல்லாம் 700 ரூபீஸ்கே இந்த டிரஸ் எடுக்கலாம். இருந்தாலும் உங்க ஊர்ல ரொம்ப அநியாய விலை தெரியுமா”

ஹேரிக்கு கண்ணை கட்டியது .

மதுவிடம் “நீ இந்த ஊர்ல வாழ்ந்துட்டுருக்க ஹனி. அப்புறம் எதுக்கு உங்க ஊரு மணில பாக்கிற. டாலர்ல பாரு வெறும் 90 ஆர் 100 டாலர்தான் வருது . வேணுனா சொல்லு நா பே பண்றேன்”

அவ்வளவுதான் மது நெற்றிக்கண்ணை திறந்து விட்டாள்

“என்ன. நீ கொடுக்கறியா. நா யாரு தெரியுமா. நா எவ்வளவு சாலரி வாங்குறேன் தெரியுமா. அதை கூட விடு. எங்க அப்பா ஊர்ல எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா. செல்லத்துரை பொண்ணுக்கு டிரஸ் எடுக்க காசு இல்லன்னு, நீ எடுத்து தரேன்னு சொல்றியா. எவ்வளவு ஆணவம்” என்று கோபமாக பேசிவிட்டு மூச்சு வாங்கினாள் மது

நொந்து போய்விட்டான் ஹேரி

“ஓகே ஓகே ரிலாக்ஸ் பேபி” என்றவன் அதற்கு மேல் ஏன் பேச போகிறான்.

ஆனால் மதுவும் என்ன நினைத்தாளோ பிறகு யோசிக்காமல் அவளுக்கு ஜீன்ஸ் டாப்ஸ் டீஷர்ட்ஸ் என்று லைட் கலராக பார்த்து எடுத்து விட்டாள். அக்சஸரீஸ் பார்த்து வாங்கினாள் .

பிறகு ஹேரிக்கும் நாலாயிரம் ரூபாயில் ஆலிவ் கிரீன் கலரில் ஒரு ரவுண்ட்  நெக் டீ ஷர்ட் எடுத்தாள். அவனிடம் ட்ரயல் பார்க்க சொல்லி கொடுத்ததற்கு அவன் மதுவை ஒரு மாதிரியாக பார்த்தான்.

“ஹலோ என்ன லுக்கு. நா கொடுக்கறது கிப்ட். நீ என்ன பண்ண. நா வாங்குற எல்லாத்துக்கும் காசு கொடுக்கிறேன்னு சொன்ன. அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. போய் போட்டு பாத்துட்டு வா” என்று கூறியவளிடம் சிரித்து கொண்டே வாங்கி சென்றான்.

போட்டு பார்த்து விட்டு வந்து கரெக்டாக இருப்பதாக கூற, அதையும் வாங்கி கொண்டாள் மது.

லஞ்ச் டைம் ஆகி விட்டதால் சாப்பிட சென்றார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம், நெரிசல். ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்கள். மழை வேறு வரும் போல இருட்ட ஆரம்பித்திருந்தது.

ஹேரியிடம் மது “இங்கல்லாம் ஒரே சத்தமா இருக்கு. நாம என் ஆபீஸ் பக்கத்துல இருக்க ட்ரெஷர் கார்டனுக்கு போகலாம். கூட்டம் இருக்காது. இந்த வெதர்க்கு பார்க்கும் பாக்க சூப்பரா இருக்கும்” என்றாள்.

சரியென்ற ஹேரியும் சிறிது தூரத்தில் இருந்த பார்க்குக்கு காரை விட்டான். பார்க் வந்ததும் காரிலிருந்து இறங்கி நடந்து வந்தார்கள். நன்றாக மேகம் கருத்து விட்டது. மழை பெய்ய ரெடியாக இருந்தது. மதுவுக்கு ஒரே குஷியாக இருந்தது.

ஹேரியிடம் “உங்க ஊர்ல உள்ள ஒவ்வொரு பார்க்ளையும்  எங்க ரெண்டு ஊர அடைக்கலாம். எவ்ளோ பெருசு” என்றாள்

“ஏன் உங்க ஊர்ல பார்க் பெருசா இருக்காதா”

“ம்க்கும் இவ்ளோ பெரிய இடம் இருந்தா பிளாட் போட்டு வித்துருவாங்க , நா அப்பப்ப இங்க வந்துருவேன். லஞ்ச் முடிச்சுட்டு எங்க ஆபீஸ்ல இருந்து சின்ன வாக் இங்கதான்”

பார்க்கில் யாருமே இல்லை . கண்ணுக்கெட்டாத  தூரத்தில் இருவரோ மூவரோ அமர்ந்திருந்தனர். ஒரு சின்ன குளத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்தார்கள். அந்த இருக்கைக்கு மேலே மரம் அடர்த்தியாக குடை போல கவிழ்ந்திருந்ததை செயற்கையாக வளைத்து கூரை அமைத்திருந்தனர்.

அவர்கள் அமரவும் மழை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. அவர்கள் மேல் மழை விழவில்லை. சிறிது தள்ளி போய் மழை துளியை கையில் வாங்கிய மது ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டாள்

“ஐயோ கண்ணா இங்க வாயேன். பனிக்கட்டி மழை” மதுவின் கைகளில் சிறு உப்பு பரல்களாக விழுந்து உடனே கரைந்தது.

“இது சின்ன பனிக்கட்டிதான் பேபி. இன்னும் பெரிய அளவுல கண்ணாடியே உடைக்கிற அளவுக்கு கூட இங்க பனிக்கட்டி மழை பெய்யும்” என்றான் ஹேரி அவளின் சந்தோசத்தை பார்த்து ரசித்து கொண்டே.

“கேள்விப்பட்டிருக்கேன். பட் எனக்கு இதுதான் முதல் ஆலங்கட்டி மழை என் வாழ்க்கையிலேயே” என்று அவள் கையில் இருந்த பனிக்கட்டியை கரையும் முன்னே அவன் முகத்தில் வீசினாள்.

“ஸ்ஸ் பேபி சும்மா இரு”

“எப்படி சும்மா இருக்கது. எனக்கு ஒரே ஜாலியா இருக்கே” எனும் போதே பனிக்கட்டி நின்று நீர் துளியாக விழ ஆரம்பித்தது. இருந்தும் மதுவின் சந்தோசம் குறையவில்லை. அவள் பேகிலிருந்து மொபைலை எடுத்து நன்னாரே பாடலை ஒலிக்க விட்டு அவன் கையில் கொடுத்தாள் . ஷூவை கழட்டியவளை பார்த்து  “என்ன பேபி பண்ற” என்றான்.

“எங்க ஊர்லயெல்லாம் இந்த சான்ஸ் கிடைக்காது. வெட்ட வெளில மழைல வயசு பொண்ணுங்க ஆடறதெல்லாம், சினிமால மட்டும் தான் நடக்கும். இங்க பாரு யாருமே இல்லை. சோ மதுமிதா ஆட போறா” என்றவள் மரக்குடையிலிருந்து வெளியில் போய் நனைந்து கொண்டே ஆட ஆரம்பித்தாள்.

“ஹே பேபி …” என்று கூப்பிட போனவன்

நாரே நாரே …….நாரே நாரே

நன்னாரே நாரே

நாரே  நாரே …….

நன்னாரே நன்னாரே நன்னாரே நானா….ரே

என்று மது ஆட ஆரம்பித்தவுடன் வார்த்தையை மறந்து நின்று விட்டான்.

மழையின் தாய் மடியில்

சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்

காதல் பெருக்கெடுத்து

இன்று நதியாய் இறங்குகிறேன்

மது கொஞ்சம் கூட களைப்படையாமல் சுழன்று கொண்டிருந்தாள். ஹேரிக்கு மழையில் நனைந்து அவள் உடை அவள் உடல் வடிவுகளை எடுத்து காட்டியதை விட அவள் நடன அசைவுகள் மயக்கம் கொள்ள வைத்தது.

நன்னாரே நன்னாரே நன்னாரே நானா ரே

என்று இறுதி பல்லவி ஆரம்பிக்கும் போது ஹேரி மதுவை நோக்கி தன்னை மறந்து நகர ஆரம்பித்து விட்டான்.  அருகில் சென்றவன் அவள் வளைந்த இடுப்பில்  ஒரு கை  கொடுத்து வேகமாக தூக்கினான். தூக்கிய வேகத்தில் ஆடி கொண்டிருந்ததால் பேலன்ஸ் இல்லாமல் அவன் நெஞ்சில் வந்து மோதி அவன் நெஞ்சிலே கைகளை வைத்து  நின்றாள.

விழிகளை அகல விரித்து அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்த்து  நின்றாள். மழை இன்னும் லேசாக தூறி கொண்டிருந்தது.ஹேரியை அப்பொழுதுதான் மழைத்துளி நனைக்க ஆரம்பித்தது. பாடலும் முடிந்து சுற்று புறம் அமைதி ஆகியது. அவள் இடுப்பின் பின்புறத்தில் கைகோர்த்து அவளை கட்டி அணைத்த வாக்கில் நின்ற ஹேரி அவள் விரிந்த விழிகளில் அவன் நீல விழிகளை நிலைக்க விட்டு “ஐ லவ் யூ மதுமிதா” என்று காதல் சொல்லி மதுமிதாவை அழகாக உச்சரித்தான்.

அவன் காதல் சொன்ன அதிர்ச்சியா இல்லை தன் பெயரை அழகாக தமிழில் கூறிய அதிர்ச்சியா என்று பிரித்தறிய முடியாமல் வாயை லேசாக பிளந்தாள் மது.

மழைத்துளி சிதறியிருந்த அவள் பிளந்த உதடுகளை பார்த்ததும் பனியில் நனைந்த ரோஜா இதழ்கள் நியாபகம் வந்து ஹேரியை பித்தம் கொள்ள வைத்தது. இதழ்களை சுவைத்து பார்க்கும் ஆர்வம் வந்து அவள் கீழ் உதட்டை கவ்விக்கொண்டான்.

மதுவின் கண்கள் ஆட்டோமேட்டிக் நிகழ்வாக மூடிக்கொண்டது. அவள் மூடிய கண்களை பார்த்து கொண்டே மேல் உதட்டையும் சேர்த்து சுவைக்க ஆரம்பித்தான்.

எவ்வளவு நேரம் நீடித்ததோ தெரியவில்லை முத்தம். திடிரென்று இடித்த இடி சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தாள் மது.

வேகமாக ஹேரியை பிடித்து தள்ளினாள். அதில் ஒரு அடி  பின்னால் சென்று திரும்பவும் மதுவை அணைக்க முன்னால் வந்தான் ஹேரி. ஆனால் மது வேகமாக பின்னால் சென்றாள்.

சுய நினைவு இல்லாமல் மதுவை பார்த்து நின்றவன், அவள் உதடு நடுங்கி கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்ததை பார்த்ததும்  தலையை உலுக்கியவன் மை காட் என்று கூறிக்கொண்டே மதுவை நோக்கி வேகமாக போய் அவளை அணைத்து கொண்டான்.

“சாரி பேபி வெரி சாரி பேபி” என்று கூறிக்கொண்டே அணைப்பிலிருந்து விடுபட போராடியவளை முதுகில் தட்டி கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி அவன் மார்பிலே சாய்ந்து அழுதவள், சிறிது நேரத்தில் அவனிடமிருந்து விலகி அவள் பேகை எடுத்து கொண்டு வேகமாக பார்க்கிலிருந்து வெளியேற ஆரம்பித்தாள்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!