Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 13

அத்தியாயம் – 13

 

மித்ரா விக்ரமுடன் சண்டை போட்டதை பார்த்து கனிமொழி சற்று பயத்துடன் அவளை பார்த்தாள். “கனி பேபி என் இப்படி முழிக்கிற, பயந்துடைய, என்கிட்ட அன்பா பேசுனா நானும் அன்பா பேசுவேன் திமிரா பேசின நானும் அது மாதிரி தான் பேசுவேன், நீயும் பார்த்தல அவன் எவ்வளவு திமிரா பேசுனானு, அவன விடுடா சரியான திமிரு பிடிச்சவன்”

 



Advertisement

“கனி எங்க ஷாம் பேபி அப்போ அப்போ ரவுடி பேபியா மாறிருவ கண்டுக்காத சரியா, அப்பறம் உன்ன பத்தி சொல்லு உன் வீடு எங்க இருக்கு, வீட்டுல யாருலாம் இருக்காங்கனு சொல்லு” என்றாள் ரிங்கு.

 

“நான் வேளச்சேரில இருக்குற ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். அப்புறம் எனக்கு அம்மா அப்பா யாரும் இல்ல நான் ஒரு அனாதை, காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருக்க அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன் அங்கதான் படிச்சேன், என்னோட பாதர் தான் நம்ம காலேஜ் கரெஸ்பாண்ட பேசி எனக்கு ஸ்காலர்ஷிப் மூலமா இங்க படிக்க வச்சுட்டு இருக்காங்க” என்றாள்.

Advertisement

 

Advertisement

 

 தோழிகள் மூவரும் கனியின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. “ஹே கனி இனிமேல் உனக்கு யாரும் இல்லன்னு எல்லாம் சொல்லாத ஓகேவா, உனக்கு நாங்க இருக்கோம் பேபி, இதுவரைக்கும் நாங்க மூணு பேரா தான் இருந்தோம் இனிமேல் உன்னையும் சேர்த்து நாலு பேரு சரியா” என்றாள் ஸ்ரே.

 

Advertisement

 

“என்ன ஸ்ரேயா இப்படி சொல்லிட்ட என்னால இவளை பிரண்டா ஏத்துக்க முடியாது” என்றாள் மித்ரா.

 

“ஷாம் ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ” என்று ஸ்ரே,ரீங்கு இருவரும் ஒருசேர கேட்டனர். மித்ரா கூறியதை கேட்டு கனி முகம் வாடிவிட்டது.

 

“நான் இன்னும் முழுசாவே பேசி முடிக்கல பேப்ஸ் ஏன் அதுக்குள்ள அவசரப்படுறீங்க, கனிய நான் பிரண்டா ஏத்துக்கணும்னா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு அதுக்கு அவ ஓகே சொன்னா மட்டும் தான் நான் அவள பிரண்டா ஏத்துப்பேன்”

 

“என்ன கண்டிஷன் மித்ரா” என்றால் கனி தயக்கத்துடன்.

 

“இனிமேல் நீ எங்களோட எங்க வீட்ல தான் இருக்கணும் அதுக்கு நீ சரின்னு சொன்னா நாங்க உன்ன பிரண்டா ஏத்துக்கிறோம்” ஸ்ரே ரிங்கு இருவரும் ஓடி சென்று மித்ராவை கட்டிக் கொண்டனர்.

 

“கனி ப்ளீஸ் வா எங்களோட எங்க வீட்டிலேயே இரு, அந்த வீட்ல நாங்க மூணு பேர் மட்டும் தான் இருக்கோம் எங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு ஒரு ஆன்ட்டி இருக்காங்க அவ்வளவுதான் ப்ளீஸ் வா” என்றால் ரிங்கு.

 

“திடீர்னு கூப்பிட்டா எப்படி, நான் கொஞ்சம் யோசிக்கணும், நான் பெசன்ட் நகர்ல இருக்கிற ஒரு வீட்டுக்குல ரெண்டு பசங்களுக்கு டியூஷன் சொல்லித் தரப்போறேன், உங்க கூட வந்துட்டா என்னால அங்க டியூஷன் எடுக்க முடியாதே”

 

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல கனி, எங்க வீடும் பெசன்ட் நகரில் தான் இருக்கு நீ எங்க வீட்டுக்கே வந்துரு கனி அங்க இருந்து நீ டியூஷன் எடுக்க போய்ட்டு வரலாம்”

 

“ஸ்ரேயா என்ன இவக்கிட்ட கெஞ்சிட்டு இருக்க நீ, அவ நம்மல பிரண்டா ஏத்துக்கிட்டானா நம்ம கூட நம்ம வீட்ல இருக்க வருவா” என்று மித்ரா கண்டிப்புடன் கூறிவிட்டாள்.

 

“நான் என்னோட ஆசிரம பாதர் கிட்ட கேட்டுட்டு ரெண்டு நாள் கழிச்சு உங்க வீட்டுக்கு வரேன்” என்றாள் கனி.

 

 தோழிகள் மூவரும் கனியை மகிழ்ச்சியுடன் கட்டிக்கொண்டனர்.கனி மேல் இவர்கள் காட்டும் அன்பை பார்த்து கனிக்கு ஆனந்த கண்ணீர் வந்தது.

 

“நீங்க எப்ப இருந்து பிரண்ட்ஸ் ஆனீங்க, நீங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணா தான் இருப்பீங்களா” என்றால் கனி.

 

“நாங்க பிளே ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து பிரண்ட்ஸ், வருஷத்துல 11 மாசம் ஒரே வீட்ல ஒரே ரூம்ல ஒண்ணா தான் இருப்போம்” என்றால் ஸ்ரேயா பெருமையாக.

 

“அது என்ன பதினோரு மாசம் மட்டும் மிச்ச ஒரு மாசம்” என்றால் கனி கேள்வியாக.

 

“அதுவா அது எங்க பேரன்ட்ஸ் செய்த சதி, அந்த ஒரு மாசம் முழுசா நாங்க எங்க பேரன்ட்ஸ் கூட எங்க வீட்ல தான் இருக்கணும். நாங்க முடியாதுன்னு சொன்னா எங்க மூணு பேரையும் வேற வேற ஊர்ல வேற வேற காலேஜ்ல சேர்த்து விட்டுருவோம்னு சொல்லி மிரட்டுறாங்கப்பா” என்றால் சோகமாக ரிங்கு.

 

 

“இதுல சோகமாக என்ன இருக்கு ரிங்கு உன் அம்மா அப்பா கூட தான நீ இருக்க அப்புறம் என்ன ” -கனி 

 

 

“நாங்க அம்மா அப்பா கூட ஜாலியா தான் இருப்போம், அவங்க கூட சேர்ந்துட்டு ட்ரிப் எங்கயாவது போவோம், ஆனா பாவம் ஷாம் நினைச்சா தான் கவலையா இருக்கும்” என்றால் சிரித்துக் கொண்டே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஸ்ரேயா.

 

 

“நீங்க எதுக்கு ஷாம நினைச்சு பீல் பண்றீங்க, அந்த ஒரு மாசத்துல ஷாம் என்ன பண்ணுவா” – கனி.

 

 

“ஷாம் அந்த ஒரு மாசத்துல முதல் 15 நாள் தஞ்சாவூர்ல அவளோட அன்னபூரணி பாட்டி கூட இருக்கணும், அங்க அன்னபூரணி பாட்டி அவளுக்கு தமிழ் கலாச்சாரத்தை தமிழ் பொண்ணுங்க எப்படிலாம் நடந்துபாங்கனு சொல்லித் தருவாங்க, அடுத்த 15 நாள் மணிக்கர்னிகாபுரில கிராணி அவங்க ஊரு கலாச்சாரத்தை ஷாம்க்கு சொல்லித் தருவாங்க, இதுல ஷாம் அவங்களோட இருக்கிற ஒரு மாசமும் அவ ஃபேமிலி மொத்தமும் தஞ்சாவூருலையும் மணிகர்ணிகாபுரிலையும் தான் இருப்பாங்க” என்றால் ஸ்ரேயா.

 

 

“இதுல என்ன கஷ்டம் இருக்குன்னு எனக்கு தெரியலயே ஸ்ரேயா” கனி.

 

 

“என்ன கனி இப்படி சொல்லிட்ட நாங்க பிரிஞ்சு இருக்க அந்த ஒரு மாசம் மார்கழி மாசம், அன்னபூரணி பாட்டி காலையில் 4:00 மணிக்கு ஷாம் எழுப்பி விட்டு மாட்டுச் சாணியை கரைச்சி வாசல் தெளிச்சி பெரிய கோலமா போட சொல்லுவாங்க, பிள்ளையாருக்கு தண்ணி எடுத்து ஊத்த சொல்லுவாங்க, சமைக்கிறதுக்கு சொல்லித் தருவாங்க, வீடு கூட்டுறது துணி துவைக்கிறது, துணி தைக்கிறது எம்ராய்டிங் போடுறது இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம், அடுத்து கிராணி வீட்டுக்கு போயிட்டா அங்க காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சு கராத்தே ஸ்விம்மிங் வால் பயிற்சி டிரைவிங் ஹார்ஸ் ரைடிங் இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் ரெண்டு பார்ட்டிசும் சேர்ந்து எங்க மித்துவ ஒரு வலி பண்ணிருவாங்க பாவம் எங்க மித்து” என்று கூறி கவலைப்பட்டனர் ஸ்ரேயா மற்றும் ரிங்கு இருவரும்.

 

 

 இவர்கள் கூறியதை கேட்ட கனி அதிர்ச்சியில் சிலையாகி விட்டார் “என்னது இவ்வளவுமா கத்துக் கொடுப்பாங்க, பாவம் தான் மித்ரா”.

 

 

“இப்ப பரவாயில்ல கனி,சின்ன பிள்ளையா இருக்கும் போது அன்னபூரணி பாட்டி தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க, கிராணி ஹிந்தி மராட்டி இன்னும் சில ஃபாரின் லாங்குவேஜும் சொல்லிக் கொடுப்பாங்க” 

 

 

“பேப்ஸ் போதும் போதும் அப்படியே ஏன் புராணத்தை பேசிட்டு இருக்காதீங்க, கிளாஸ்க்கு டைம் ஆச்சு கிளம்புங்க”- மித்ரா.

 

 

பெண்கள் அனைவரும் அவரவர் வகுப்பிற்கு சென்று விட்டனர்,மாலை வீட்டுக்கு சென்றதும் விக்ரம் அன்று கல்லூரியில் நடந்த அனைத்தையும் அவனது அம்மா வாசுகியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஷாமை பற்றியும் அவளுடன் ஏற்பட்ட மோதலை பற்றி அனைத்தையும் கூறி முடித்தான்.

 

“என்ன விக்ரம் சொல்ற ஒரு பொண்ணு இப்படி எல்லாமா நடந்துகிறாஅவ வீட்டுல அவளுக்கு ஒழுக்கத்தை சொல்லி வழக்கல போல, அந்த மாதிரி பொண்ணு கூடலாம் நீ பேசாத விக்ரம் சரியா” என்றாள் வாசுகி.

 

 

“சரிமா இனிமேல் அவ கூட நான் பேசவே மாட்டேன் மா” என்றான் விக்ரம்.வாசுகிக்கு தன் மகனை பார்த்து பெருமையாக இருந்தது.

 

 

ரிங்கு படிப்பு மட்டும் கம்ப்யூட்டரில் நன்கு தேர்ச்சி பெற்றவள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வாள், ஸ்ரேயாவிற்கு கிட்டார் வாசிப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் கல்லூரியில் இருந்த மியூசிக் பேண்டில் இணைந்து கொண்டாள்,மித்ரா இயல்பிலேயே துருதுருவென்று இருப்பவள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால்.

 

 

விக்ரம் படிப்பு மியூசிக் விளையாட்டு என்று அனைத்திலும் திறன் படைத்தவன் என்பதால் கல்லூரியில் இருந்த அனைத்து குழுவிற்கும் தலைவராக விக்ரமே இருந்தான். ஸ்ரேயா ரிங்கு இருவரும் விக்ரமின் அணியில் சேர்ந்து அவனுடன் நட்பை வளர்த்துக் கொண்டனர். விக்ரமுக்கு ரியானாவை பார்த்ததிலிருந்து ஒரு சகோதரத்துவம் அவனுள் எழுந்தது. ரிங்குவை உடன்பிறவா சகோதரியாகவே விக்ரம் நினைத்தான். ஸ்ரேயா கிட்டார் வாசிக்க விக்ரம் பாட அதைக் கேட்பவருக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

 

 

 ஸ்ரேயா ரிங்கு இருவரும் விக்ரமிடம் நெருங்கி பழக, மித்ராவோ விக்ரமுக்கு எதிரியாகவே மாறி இருந்தாள். ஒரு நாள் மித்ரா மெக்கானிக்கல் லேபிள் தன் நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது ரகு அர்ஜுனை சீண்டி விளையாடிக் கொண்டே இருந்தான்.மித்ரா ரகுவிடம் இரண்டு முறை சொல்லிவிட்டால் “லேப்ல இப்படி விளையாடாதே” என்று அதைக் கேட்காமல் தொடர்ந்து ரகு விளையாடிக் கொண்டே இருக்க அங்கிருந்த மிஷின் ஒன்று அர்ஜுனின் மேல் சாய்ந்து விழுந்தது. அந்த மிஷினில் இருந்த கத்தி போன்ற அமைப்பு அர்ஜுனின் கழுத்தில் சரியாக படும்படி விழுந்தது.

 

 

 மிஷின் விழுவதை பார்த்த மித்ரா. உடனே அர்ஜுனை அங்கிருந்து இழுத்து விட்டாள். சில நொடி தாமதித்திருந்தாலும் கத்தி போன்ற அமைப்பு அர்ஜுனின் கழுத்தை அறுத்து இருக்கும்.நடந்த நிகழ்வில் அனைவரும் அதிர்ச்சியுடன் இருக்க மித்ரா கோவத்துடன் ரகுவின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

 

 

 வகுப்பு முடிந்து அனைவரும் கிரவுண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ரகுq தான் செய்த தவறை நினைத்து கவலையாக அமர்ந்திருந்தான். அப்பொழுது அங்கு வந்த விக்ரம் ரகுவை பார்த்து 

“ஏன்டா மச்சான் ஒரு மாதிரி டல்லா இருக்குற, என்னாச்சு ஏதாவது பிரச்சனையா” என்றான்.

 

 

“அது ஒன்னும் இல்ல சீனியர், மித்ரா நம்ப ரகுவ அடிச்சிட்டா அதனால தான் ரொம்ப டல்லா இருக்கான்” என்றான் கார்த்திக். கார்த்திக் முழுவதுமாக கூறி முடிப்பதற்கு முன் விக்ரம் மித்ராவை தேடி சென்று விட்டான்.

 

 

 கேண்டினில் மித்ரா தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்க, மித்ராவின் பின்புறம் வந்து நின்ற விக்ரம் மித்ராவின் தோலை தொட்டு திருப்பி அவள் எதிர்பாராத நேரம் அவளது கன்னத்தில் அறைந்து விட்டான். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்ற மித்ரா. அடுத்த நொடி அனைவர் முன்னிலையிலும் விக்ரமின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். விக்ரமுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

 

 

“ஏய் உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா பர்ஸ்ட் ரகு அடிருப்ப, இப்ப எல்லார் முன்னாடியும் வச்சு என்ன அடிச்சிருப்ப உனக்கு என்னடி அவ்ளோ திமிரு, ஒழுங்கு மரியாதையா எங்க கிட்ட மன்னிப்பு கேளுடி” என்றான் கர்ஜனையாக விக்ரம்.

 

 

“நான் ஏண்டா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் நீ என்ன அடிச்சா நான் திரும்ப உன்னை அடிச்சேன், தப்பு உன் மேல தான் ஃபர்ஸ்ட் நீ என்கிட்ட மன்னிப்பு கேளு” என்றால் மித்ரா.

 

 

 இவர்கள் இருவரும் கேண்டினில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மொத்த கல்லூரியும் அங்கு கூடிவிட்டது. அப்பொழுது அங்கு வந்த பிரின்ஸ்பல் இருவரையும் அழைத்து “இங்க என்ன நடக்குது எதுக்காக இப்படி ரெண்டு பேரும் சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க” என்றார்.

 

 

“சார் இவ பஸ்ட் ரகு அடுச்சா, அதனால நான் இவள அடிச்சேன் சார், திரும்ப இவ என்னை அடிச்சிட்டா சார்” என்றான் விக்ரம்.

 

 

 விக்ரம் கூறியதைக் கேட்ட பிரின்ஸ்பல் மித்ராவிடம் “ஏற்கனவே நீ படிச்ச காலேஜ்ல ப்ராப்ளம் பண்ண போய் தானே உன்ன டிஸ்மிஸ் பண்ணாங்க, இங்க வந்தும் உன்னால ஒழுங்கா இருக்க முடியாதோ, ஏதாவது பிரச்சனை பண்ணிட்டே தான் இருப்பியா நீ” என்றார் கோவத்துடன்.

 

 

  மித்ரா எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தால், விக்ரமோ அவளை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தான்.”சார் இங்க என்ன நடந்ததுன்னே தெரியாம எதுக்கு சார் மித்ராவை திட்றீங்க, ஃபர்ஸ்ட் மித்ராவ அடிச்சது விக்ரம் தான் சார் அவன எதுவும் கேட்காம இவளையே குறை சொல்லிட்டு இருக்கீங்க, முதல்ல என்ன நடந்துச்சு முழுசா கேளுங்க சார் ” என்றான் சூர்யா.

 

 

 அதன்பின் பிரின்ஸ்பல் ரகுவை அழைத்து எதனால் மித்ரா அவனை அடித்தால் என்று கேட்க, மெக்கானிக்கல் லேபிள் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான் ரகு.

 அத்துடன் “சார் தப்பெல்லாம் என் மேல தான் சார் மித்ரா மேல எந்த தப்பும் இல்ல சார்,மித்ரா சொல்லியும் கேட்காம விளையாடிட்டே இருந்தது ஏன் தப்பு தான் , மித்ரா மட்டும் அர்ஜுனா இழுக்காம இருந்திருந்தா இப்ப அர்ஜுனுக்கு என்ன ஆகி இருக்குனு என்னால நினைச்சு கூட பாக்க முடியல சார், நான் பண்ணது தப்பு தான் சார் சாரி சார்” என்றான் ரகு கண் கலங்க.

 

 

 ரகு கூறியதைக் கேட்டு விக்ரமிற்கு கூட கோவம் வந்தது. “விக்ரம் உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, என்ன நடந்ததுன்னு தெரியாம நீ மித்ராவை அடிச்சது தப்பு, முதல்ல நீ அவகிட்ட சாரி சொல்லு” என்றார் பிரின்ஸ்பல்.

 

மித்ராவிடம் மன்னிப்பு கேட்பது விக்ரமுக்கு மிகவும் அவமானமாக இருந்தது இருப்பினும் பிரின்ஸ்பல் கூறுவதால், மித்ராவை பார்த்து “சாரி” என்றான். மித்ராவோ அவனை ஏளனமாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

 

 விக்ரம் மித்ரா இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருக்க, மித்ராவுடன் எப்படியாவது நட்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அஜய் பலமுறை அவளிடம் பேச முயன்றான் ஆனால் மித்ரா அவனது நட்பை ஏற்க மறுத்து விட்டால்.

 

“நீ என்னோட பிரண்டா இருக்கணும்னு நினைச்சு நீ என்கிட்ட பேசி இருந்தா நானும் கண்டிப்பா உன்கிட்ட பேசி இருப்பேன், நீ விக்ரம பழி வாங்குறதுக்காக என் கூட நட்பு வச்சுக்க நினைச்சா அதை என்னால ஏத்துக்க முடியாது” என்று கூறி மறுத்துவிட்டாள்.

 

ஒரு நாள் சாலையில் அடிபட்டு கிடந்த தெரு நாய் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களிடம் லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தான் அஜய், அந்த வழியாக சென்ற மித்ரா அவனை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்க உதவினால், அஜய் இந்த இரக்கக்குணம் மித்ராவிற்கு மிகவும் பிடித்துப் போனது. மித்ரா ஆகவே சென்று அஜயிடம் பேசி அவனுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். 

 

“நீ ஏன் மித்து அஜய் கூட பேசுற, அவன் சரியில்லன்னு எல்லாரும் சொல்றாங்க பேபி இனிமேல் அவன் கூட பேசாதே” என்றால் ஸ்ரேயா.

 

“ஸ்ரேயா எப்ப இருந்து நீ இப்படிலாம் பேச ஆரம்பிச்ச, நான் ஒத்துக்குறேன் அஜய் தண்ணி அடிக்கிறான் தம் அடிக்கிறான் எல்லார் கூடயும் சண்டை போட்டுட்டு இருக்கான் தான் அதுக்காக அவன் கெட்டவன் கிடையாது. நேத்து ரோட்டில் அடிப்பட்டு கிடந்த தெரு நாயே தூக்குவதற்கு அங்க இருந்த எல்லாரும் அவ்வளவு அருவருப்பு பட்டப்போ, அஜய் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம அத தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்ந்து ட்ரீட்மென்ட் பண்ணா, அஜய் இருந்த இடத்துல நம்ம மிஸ்டர்.பர்ஃபெக்ட் விக்ரம் இருந்திருந்தால் கூட அந்த நாய தொட்டு தூக்கி இருக்க மாட்டான்”

 

“மனுஷங்களான நம்ம கிட்ட நல்ல குணமும் இருக்கும் தீய குணமும் இருக்கும், நீங்க அஜய் கிட்ட இருந்து கெட்ட பழக்கத்தை பார்த்தீங்க நான் அவனோட நல்ல குணத்த பார்த்தேன், உனக்கு பிடிக்கலைனா விடு ஸ்ரே எனக்கு அவன புடிச்சிருக்கு நான் அவன் கூட பிரண்டா தான் இருப்பேன்” என்றால் மித்ரா.

 

அஜய் மித்ராவின் நட்பை பார்த்து விக்ரமின் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.மித்ராவை பார்க்கும் இடமெல்லாம் அவளை சீண்டி அவளை டென்ஷனாக்கிக் கொண்டே இருப்பான்.

 

“ரிங்கு நீ நல்லா படிக்குற எல்லா போட்டியிலேயும் கலந்து கிட்டு வின் பண்ற,ஸ்ரேயா ரொம்ப அழகா கிட்டார் வாசிக்கிறா. ஆன உங்க ஃப்ரெண்ட் மித்ராக்கு எந்த திறமையும் இருந்த மாதிரி தெரியலையே, ஒருவேளை எல்லார்கூடயும் சண்டை போடறது தான் அவத் திறமையோ” என்று கூறி கிண்டல் அடித்தான் விக்ரம். ஸ்ரேயா மறுத்து ஏதோ கூற வர மித்ரா அவளை தடுத்து விட்டாள்.

 

 

“என்ன விக்ரம் சார் பண்றது எல்லாரும் உங்கள மாதிரி பிரில்லியண்டா ஆல் ரவுண்டரா இருக்க முடியுமா, யுவர் ஆர் ஜீனியஸ் விக்ரம்” என்றால் மித்ரா.

 

“ஏய் என்ன என்னைய கிண்டல் பண்ணுறியா “

 

“அய்யய்யோ விக்ரம் நீ எவ்வளவு பெரிய ஆளு, உன்ன எல்லாம் போய் யாராவது கிண்டல் பண்ண முடியுமா” என்று மித்ரா கூறிக்கொண்டே இருக்க அப்பொழுது கல்லூரி பியூன் ஒருவர் வந்து மித்ராவை பிரின்ஸ்பல் அழைத்ததாக கூறினார்.

 

“உனக்கு எப்ப பாத்தாலும் ஏதாவது பிரச்சனை பண்ணி பிரின்ஸ்பல் கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்கணுமோ, போ போ போய் நல்லா டோஸ் வாங்கிட்டு வா” என்றால் விக்ரம் சிரித்துக் கொண்டேன்.மித்ரா அவனை ஏளனமாக பார்த்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள். ஸ்ரே ரிங்கு இருவரும் பிரின்ஸ்பல் மித்ரா எதற்காக அழைத்தார் என்று பயத்துடன் இருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!