Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்பனை 14

கற்பனை 14

திருமகளின் எண்ணப்போக்கு அவள் கணவன் நிவாஸுக்கு அப்பட்டமாய் தெரிகிறது.மனிதர்களை சுலபமாக எடைப் போட்டு அதற்குத்தகுந்தவாறு காய்களை நகர்த்தியதால் தான் இவ்வளவு சீக்கிரமாக இளம் வயதிலேயே பெரிய பொறுப்புக்கு அவனால் வர முடிந்தது. 



Advertisement

வேலையிலும் சரி நண்பர்களிடமும் சரி அவ்வளவு ஏன்,தனது குடும்பத்தினரிடமும் கூட அவர்களது ப்ளஸ் – மைனஸ் இரண்டையும் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு தான் அவனது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டிருக்கிறான்.அவனது இந்த குணம் பற்றி சொல்ல வேண்டும் என்றால்அவனுக்கு சரியான விஷயங்களை மட்டும் யோசிப்பவன்பொதுவான சரி தவறுகளை பற்றி யோசித்தது இல்லை.

அவனது பிறவி குணம் என்றும் மாறப்போவதும் இல்லை. பெண்ணைக் கல்யாணம் செய்துக்கொடுப்பவர்கள் மாப்பிள்ளையின் கல்வி, சம்பளம், எந்த நாட்டில் வேலை என்றெல்லாம் தெளிவாக விசாரிக்கிறார்கள். மாப்பிள்ளைக்கு அமெரிக்காவிலோ வேறு ஏதாவது நாட்டிலோ குடியுரிமை இருப்பின் கூடுதல் சிறப்பு. வருஷக் கணக்காக சேமித்து வைத்த சேமிப்பை தண்ணீராக்கி (தண்ணீரா..தங்கத்தைவிட மரியாதை அதிகமாச்சே!)லகரங்களில் ஆரம்பிக்கும் செலவுகளை கோடிகளில் முடித்து ஆடம்பரத் திருமணங்கள். பெண்ணை பெற்றவர்கள் ஆறு மாதங்களும் பிள்ளையை பெற்றவர்கள் ஆறுமாதமுமாக வெளிநாட்டு வாசம். 

Advertisement

Advertisement

முன்பெல்லாம்  பிள்ளையின் குடும்பம்,பின்புலம், குணவிசேஷங்கள்,கல்வித்தகுதி,குடும்பம் செய்யும் அளவுக்கு மணமகனுக்கு வருமானம் வருகிறதா..என்றெல்லாம் பார்த்து பெண் கொடுப்பார்கள். இப்போது வெளிநாட்டில் வேலை செய்யும் வரனின் குண விஷேத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

இதோ,இப்போது திருமகளும்கூட அப்படித்தான் திருமண உறவுக்குள் நுழைந்திருக்கிறாள். சாகேத் பற்றிய எண்ணங்கள் அவளைப் பொறுத்தவரை எப்படியும் இருக்கட்டும். எல்லா பெண்களுக்கும் கல்யாணக் கனவுகளுக்கும்,கன்னிப்பருவ எதிர்பார்ப்புகளுக்கும் உரிமை உண்டுதானே!  

Advertisement

திருமகள் காதல் திருமணம் செய்துக்கொள்ளவில்லை,தவறான தெரிவு என்று நாம் சொல்லிக் கடப்பதற்கு. .அவளது பெற்றோர் தெரிவு செய்த மாப்பிள்ளை.அவளது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவனாக நிவாஸ் அவளுக்குத் தோன்றியிருந்திருக்கலாம். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறதென்றால் திருமணத்தை  மறுத்திருந்திருக்கலாம்.ஆனால்,சரியான காரணம் இல்லாமல் எனக்கு அவனைப் பார்த்தால் பயமாக இருக்கிறது,அதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிட முடியுமா?’ நடைமுறை சிக்கல்கள். 

இவ்வளவினுக்குப் பிறகும் தன் கணவனின் அணுகுமுறைப் பற்றி அவள் தன் அம்மாவிடமாவது சொல்லியிருக்கலாம் என்ற ஆதங்கம்தான் எனக்கு. இருக்கட்டும்.  

அங்கே யு எஸ் போக  இவ்வளவு சீக்கிரம் விசா கிடைச்சிடுமா?” மனைவியின் குரலில் இருந்த தயக்கம் நிவாஸ் உடனே பதில் சொல்லவில்லை.ஹும் ..மாக்ஸிமம் ஒரு மாசம்.நா என்னோட ஆஃபீஸ் மூலமா பேப்பர்ச மூவ் பண்றேன். சீக்கிரமா கிடைச்சுடும்.பொறுமையாக பதில் சொன்னான் நிவாஸ். அவனுக்கே தான் இவ்வளவு பொறுமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமா என்றுத் தோன்றவே அதற்குப் பிறகு தங்களது அறைக்கு சென்று  லேப்டாப்பினுள் தன்னை நுழைத்துக்கொண்டான்.

திரு வெகுநேரம் ஹாலில் உட்கார்ந்திருந்தவள்  ஒன்றும் தோன்றாமல் தங்களது அறைக்குள் தானும் சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள் . வகுப்புகள் எடுத்து இருபது நாட்கள் ஆகிறது.  வகுப்புகளை தொடங்கலாமா என்ற எண்ணம் தோன்றவே ,மீண்டும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்குவதாக தனது டீச்சருக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.

அவள் இனி,இந்தியாவில் தங்கப் போவது குறைந்த நாட்களுக்குத்தான் என்பதால் வேறு ஆசிரிரியைக்கு ஏற்பாடு செய்துவிட்டதாக  பதில் வந்தது. கொஞ்சம் சோர்ந்து போனாள் . இந்த பதிலை அவள் எதிர்பார்த்திருந்தாள் தான்.

இவளது நடவெடிக்கைகளை நிவாஸ் வேலை செய்துக்கொண்டே அவதானித்தான் .அவன் முகத்தில் ஏளனம். ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லஎன்று முணுமுணுத்துக்கொண்டான். அவள் காதுகளில் லேசாக விழுந்தாலும் முகம் கன்றிப் போனது.

திரு தனக்குள்ளேயே யோசனையில் மூழ்கிப் போனாள் .தனது அம்மாவிடமாவது குழப்பங்களை சொல்லிவிடலாமா..ஏதாவது தீர்வு கிடைக்கக் கூடுமா என்றெல்லாம் யோசித்தவளுக்கு தனது புதியதாக திருமணமான அண்ணன் அண்ணியின் ஞாபகம் வந்தது.எவ்வளவு அன்யோன்யமும் காதலும் அவர்களுக்குள். அப்படி இருக்கும் பொழுது நான் திருமணம் முடிந்து இன்னும் பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் என் கணவனின் அணுகுமுறைப் பற்றி சொன்னால் அது எவ்வளவு அசிங்கம்!

அதோடு கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க உறவை  அம்மாவாகவே இருந்தாலும் அவர்களிடம் சொல்வது எவ்வளவு தூரத்திற்கு சரியாக இருக்கும் என்றெல்லாம் யோசித்தவள் , அதற்குமேல் இன்னும் எதையாவது சிந்தித்து குழப்பிக்கொள்ள வேணாம் என்று அப்படியே கட்டிலில் படுத்துவிட்டாள். உறக்கம் அவளை தழுவிச் சென்றது.

தூங்கி கொண்டிருக்கும் மனைவியை கொஞ்ச நேரம் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான் நிவாஸ். அன்றைக்குப் பிறகு நிவாஸ் அவளை பற்றி தாழ்மையாக நினைப்பதைக் குறைத்துக் கொண்டான். அப்படி நினைப்பது தானே நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. 

அதற்குப் பிறகான நாட்களில் நிவாசிடம் நிறைய மாற்றங்கள். மனைவியிடம் மட்டுமில்லை.வீட்டிலும் எல்லோரிடமும் சாதாரணமாக பேசிப் பழகினான். நிவாஸின் வீட்டினருக்கு இது அதிர்ச்சிதான். திருமணம் ஆனால் ஆண்கள் மாறிவிடுவார்கள் என்பது இதுதானா..இது சாத்தியமா ?என்று அவர்களுக்கே சந்தேகம். 

நிவாஸும் புரிந்து கொண்டான்.ஆனால் அதற்காக அவன்  மாற்றிக்கொள்ளவில்லை.

தனக்கான வேலைகளை தனது மனைவிதான் பாக்கவேண்டும் என்றெல்லாம் அவன் ஆர்பாட்டமோ,அதிகாரமோ செய்யவில்லை.  சாப்பிடும் பொழுது மனைவி தான் உணவு பரிமாறவேண்டும் என்று அவன் சொன்னதில்லை. ஆனால்,செய்ய வைத்தான். திருவுக்கு பதிலாக நிவாஸின் அம்மா சாப்பாடு போட்டால் அவன் கண்கள் மனைவியைத் தேடும். 

அவள் வரவில்லை என்றால்,” நா அப்புறமா சாப்பிடுறேன்என்று அவன் எழுந்து விடுவான். முதலில் அவன் நடந்து கொள்வது யாருக்கும் புரியவில்லை. அதற்குப் பிறகு  நிவாஸின் அம்மா , திருமகள் எங்கே , என்ன வேலை செய்துக்கொண்டிருந்தாலும் தன் மகனுக்கு உணவு பரிமாற அனுப்பி விடுவார். அவருக்கே பெரிய ஆச்சர்யம் தான்.எப்படியோ மகன் தனது மனைவியுடன் ஒத்துமையாக இருந்தா சரிஎன்று நினைத்துக் கொண்டார்.

நிவாஸுடனான வாழ்க்கை நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கும் என்று திருமகள் நம்பத் தொடங்கினாள்.

ஆம் ,அவளது மனம் தனது கணவனுடன் வாழ முழுமையாகத் தயாராகிவிட்டது. கணவன் தன்னைத் தேடுவதை அவளும்தான் உணர்ந்துகொண்டாள். அவன் வாழ்வில் தான் எவ்வளவு முக்கியம் என்று அவளுக்கு நிவாஸ் தனது சிறு செய்கைகளாலும் தெரியப் படுத்தினான். அவளை மாலை நேரங்களில் தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்காவது இருவருமாக வெளியே சென்று வந்தார்கள். அவளுடன்  நிறைய நேரத்தை செலவிட்டான் ,அவளிடம் பணக்கணக்குகள் பார்க்கவில்லை. வெளியே செல்லும் பொழுது நிச்சயப் பரிசுடன்தான் வீட்டிக்கு வருவாள் திருமகள்.

சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்தும்கூட விட்டாள் . அதுவும் அழகுதான் என்று இறுக்கி அணைத்துக் கொள்ளும் கணவனின் அணைப்பு அவளுக்கு உலகத்தை வென்ற திருப்தியை கொடுத்தது. இரவுகளில் அவள் வெகுவாக அவனது அந்த நாளால் பயந்திருந்தவள் இப்போது இரவானால் கணவனின் அணைப்புக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.ஆனால் , மாலையில் அவன் காட்டும் நெருக்கம் இரவுகளில் அவன் அவளிடமிருந்து வெகு தூரம் நகர்ந்திருப்பான். இவளது எதிர்பார்ப்பு அவனுக்குத் தெரியும். ஆனால்,வேண்டுமென்றே தவிக்கச் செய்தான். 

கணவன் தன்னருகே கூட வருவதற்குத் தயங்குகிறான் என்று வெகு சுலபமாகப் புரிந்து கொண்டாள் திருமகள்.அவள் மனம் குற்றவுணர்ச்சி கொண்டது.தான் கோபித்துக்கொண்டு மடிப்பாக்கம் சென்று தங்கியது பெரியத் தவறு என்று உணர்ந்து கொண்டாள் . 

ஏதோ அவனுக்கும் முதன்முறை கணவன் மனைவி உறவு எனும் பொழுது எவ்வளவோ தவறுகள் நிகழக் கூடும் தானே!அப்படி இருக்கும் பொழுது தனது அணுகுமுறை கணவனை வெகுவாகக் காயப்படுத்தி விட்டதே என்று மனது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.நல்லவேளையாக இவற்றைப் பற்றி பெற்றவர்களிடம் ஏதும் உளறி வைக்காமல் இருந்தேனே..அதுவே பெரியது என்று தனக்குத்தானே ஆஸ்வாஸப் படுத்திக்கொண்டாள் . 

இப்போது எவ்வளவு நெருக்கம் காண்பித்தாலும் இதைப்பற்றி எப்படிப் பேசமுடியும்என்ற தயக்கத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டவள் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள் .

இதைத் தானே நிவாஸும் எதிர்பார்த்தான். தனது குற்ற உணர்ச்சியாலோ என்னவோ இன்னமும் அதிகமாக கணவனுக்குத் தேவையானவற்றை அவன் கண் பார்வை மொழியிலேயே செய்யப் பழகினாள் . நிவாஸ் திருமகளை நெருங்கவில்லை என்பதை விட அவளை நெருங்கவிடவில்லை என்பதே வெகு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருமகள் ஒரு படித்த முட்டாள்என்றெல்லாம் நான் விமர்சனம் செய்ய மாட்டேன். அந்தந்த சூழ்நிலையில் இருந்தால் தான் அதை புரிந்துகொள்ள முடியும். அவள் வீட்டில் இருக்கும் மனிதர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள். அவளும் கூட நிறைகளும் குறைகளும் நிரம்பிய சாதாரண மனுஷிதான். நரேந்திரன் சாருவிடம் அவள் நடந்து கொள்ளும் முறை தவறாக இருக்கலாம். ஆனால் மொத்தமாக அவள் குணமே மோசம் என்று முத்திரை குத்திவிட முடியாது. 

அதற்கு தண்டனை நிவாஸுடனான திருமண உறவு என்றால் நிச்சயம் இது கடுமையான தண்டனைதான். நிவாஸ் பற்றி திருமகளுக்கு தெரியாமல் இருக்கலாம். முழுமையாகத் தெரிந்து கொள்ளும் பொழுது ..ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

திருவுக்கு விசா கிடைத்துவிட்டது. இன்னமும் பத்து நாட்களில் இந்தியாவிருந்து கிளம்பியாக வேண்டும்.அதிகத் தொகை கொடுத்து இருவருக்கும் விமான பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தான் நிவாஸ். 

எதுக்கு இவ்ளோ அதிகமா செலவு செய்யணும்என்று கேட்ட திருமகளிடம்எனக்கு வேலைக்கு ஜோஇன் பண்ணனும் திரு.இங்கேந்து வேலை செய்யுறது அவ்ளோ சாடிஸ்பாக்க்ஷன் தரல . இங்கேயே இருக்கவும் முடியாது இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டான்.

அப்போ நீங்க முதல்ல கிளம்புங்க. நா  ஒன் மந்த் கழிச்சு வரேன்என்றாள் திரு. அவளை என்னவென வரையறுக்க முடியாத பார்வை பார்த்தவன்என்னால என்னோட வைஃப்பை  விட்டுட்டு ஒரு மாசமெல்லம் இருக்க முடியாது திரு.உனக்கு அது இன்னுமா புரியல?இல்லே,நா புரிய வைக்க எடுத்த முயற்சிகள் சரியா இல்லையா?” 

கணவனது மனதை அவன் வாய் மொழியாலே அறிந்துகொண்ட திருமகள் கர்வம் கொண்டாள் .சரிங்க,அப்போ நாம சேர்ந்தே கிளம்பலாம்என்றுவிட்டாள் .நீ நாளைக்கு உங்கப்பா வீட்டுக்கு கிளம்பு திரு. நானே கொண்டு விடறேன். இந்த வாரம் அங்கே இருந்துட்டு வா. இனிமே எப்ப இங்கே வரமுடியும்னு தெரியாது.என்னோட லீவு பொறுத்தது.என்று முடித்துவிட்டு தனது வேலைகளை பார்க்கவென சென்றவனை பூரிப்புடன் பார்த்திருந்தாள் திருமகள்.

ஒரு வாரத்திற்க்கான துணிகளை தனது சூட்கேசில் எடுத்து வைத்துக் கொண்டவளிடம் இவனை பார்க்காமல் எப்படி ஒரு வாரம் இருப்பது என்ற தயக்கம் திருமாலிடம். நிவாஸும் காலை உணவின் பொழுது அதையே சொன்னான்,”நீ இல்லாம ஒருவாரம் எப்படி தள்ளப் போறேனோ! உன் கையாள சாப்பிட்டு வேற பழகிடுச்சு.திருவுக்கு செல்ல மனதில்லை.ஆனால் ,செல்லாமல் இருக்கவும் பிடிக்கவில்லை. பிறந்த வீட்டினரை பார்க்க வேண்டுமென அவள் மனம் தவித்தது. இன்னும் கிளம்பப் போகும் விஷயங்களை சொல்லவில்லை.நேரேயே சொல்லிக்கோஎன்ற கணவனின் பேச்சில் அமைதியாகி விட்டாள் . இப்போது அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று வேறு அவள் மனதில் தயக்கம் வந்துவிட்டிருந்தது.

மடிப்பாக்கம் வீட்டுக்குள் நிவாஸ் நுழையவில்லை. வாசலிலேயே மனைவியை இறக்கி விட்டவன்,அவள் இறங்கும் முன் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பிவைத்தான்.கணவனது தொடுகையில் சிலிர்த்தவள்,முகச்சிவப்பை மறைக்க முடியாதவளாக வீட்டுக்குள் சென்றாள் .அவள் உள்நுழைவதை பார்த்துக்கொண்டிருந்த நிவாஸின் முகம் சட்டென மாறியது.அவன் தனது காரில் வேகமாகச் சென்றுவிட்டான்.

மாப்பிள்ளை உள்ளே வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சாம்பசிவத்தின் முகம் அவன் கிளம்பிய வேகத்தில் யோசனையானது.

ஆனால் அவர் தனது மகளின் முன்னால் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.நல்லவேளை,அவர் இன்னும் நிவாஸின் முகத்தைப் பார்த்திருக்கவில்லை. 

வாங்கிவந்திருந்த பழங்களையும், இனிப்புகளையும் சமயலறையில் கொண்டு வைத்துவிட்டு வந்திருந்தால் திருமகள். இன்னும் நரேந்திரனும் சாருவும் அலுவலகத்திலிருந்து வந்திருக்கவில்லை. மகள் மருமகன் வருகிறார்கள் என்று சாம்பசிவம் இன்று அலுவலகம் போகவில்லை. மகளைக்  கண்ட கண்மணிக்கு கண்கள் கலங்கியது.

திரு அடிக்கடி அழைத்தெல்லாம் பேசும் பழக்கம் கொண்டவள் இல்லை. சில சமயங்களில் அலைபேசியை எங்காவது வைத்துவிட்டு அதை தேடக்கூட மாட்டாள். மகளை நினைத்து கண்மணி பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!