Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 23

அத்தியாயம் 23:

கதவை தட்டிவிட்டு திரும்பவும் உள்ளே வந்த சத்யன் “உங்க விஷயமெல்லாம் பார்த்திக்கு தெரியுமா பாஸ்” என்றான்.

“நல்லா தெரியும் சத்யன்” என்று அவனுக்கும் பார்த்திக்கும் இடையில் நடந்தவற்றை கூறினான். தலையில் கை  வைத்து உட்கார்ந்து விட்டான் சத்யன்.

“அவனே ஒரு டெர்ரர் பீஸ். அவன்கிட்ட இப்படி என்ன அநியாயமா கோத்து விட்ருக்கீங்களே பாஸ். இப்போதைக்கு நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணத பார்த்திட்டயும், அந்த குட்டி பிசாசுட்டயும் சொல்லிடாதீங்க பாஸ்” என்று சொல்லிவிட்டு கிளம்ப போனவனை நிறுத்தி



Advertisement

“மது என்னை பத்தி உங்ககிட்ட சொல்லலைன்னு கோவப்படாதிங்க. உங்கட்ட சொல்ற மாதிரி அவளுக்கு சூழல் அமையல” என்றான்.

அவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு செல்ல போனவனை நிறுத்திய ஜான் “அந்த கோலா உள்ள வந்தப்ப எதோ பிசினஸ் மேன் பத்தி பேசுனாளே. அது என்ன” என்று விசாரித்தான்.

“இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு காமடி கேக்குது. இல்ல ஜான்” என்ற சத்யன், கௌண்டமணி மன்னன் படத்தில் நடித்திருக்கும் காட்சியை யு டியூபில் போட்டு விளக்கி விட்டு சென்றான்.

Advertisement

அதை பார்த்து சிரித்து கொண்டிருந்த ஹேரியை பார்த்த ஜான், “ஏன் மேட். உன்னைத்தான் அவ கலாய்ச்சுட்டு போயிருக்கா. அப்புறம் பத்து நாளுக்கு முன்னாடி, மது பேபி என்ன கேவலமா பேசிட்டானு மூஞ்ச தூக்கி வச்சுட்டு உக்காந்துருந்த நீ, இப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி அவ முன்னாடி என்ட்ரி கொடுத்துட்டு, அவள சைட் அடிச்சிட்டு இருக்க. அவ மேல கோவமே வரலையா உனக்கு. இப்பவும் அவதான் கோவப்பட்டுட்டு இருக்கா”

Advertisement

“என்ன அவ்வளவு கேவலமா பேசிட்டாளேன்னு வருத்தம் தான் ஜே. அவ பேர்ல எனக்கு எப்படி கோவம் வரும்னு சொல்லு. அவ சிச்சுவேஷன் என்ன விட யாருக்கு புரியும். என்ன பேசிட்டு அவதான் அதிகமா வருத்த பட்ருப்பா. இப்பவும் நா யார்ன்ற அடையாளத்தை மறைச்சிட்டேன்னுதான் எம்மேல கோவ பட்டுட்டுருக்கா “

“அப்ப ஏன் இவ்ளோ நாள் பாக்காம பேசாம இருந்த”

“அவட்ட உன் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். வேற எப்படி அவளை அணுகலாம்னு பிளான் போட்டுட்டு இருந்தேன்”

Advertisement

“அடப்பாவி” என்று வாயில் கை வைத்தான் ஜான்.

வெளியில் வந்த மது கோவமாக அமர்ந்திருந்தாள். ஊர்வசிதான் அவளிடம் “பசிக்குதுன்னு வந்துட்டு சாப்பிட போகாம உக்காந்துருக்க. வா சாப்பிட போகலாம்” என்று அவள் டிபன் பாக்சை எடுத்தாள்.

அவளை வினோதமாக பார்த்த மது “இங்க என்ன நடந்துட்டிருக்கு. உனக்கு இப்ப சாப்பாடுதான் முக்கியமா ஊர்”

“நீதான மது பசிக்குதுன்னு சொன்ன”

“சரி. இப்ப பசிக்கல போதுமா”

“என்னதான் மது உன் பிரச்சனை. சொன்னாதான புரியும்”

அப்போது அங்கு வந்த சத்யன் அவளிடம்  “ஏன் குட்டி பிசாசு உள்ள அப்படி நடந்துக்கிட்ட. எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா அவரு. இப்படி மரியாதை இல்லாம நடந்துட்டு வர” என்று கேட்டான்.

“என்னண்ணா பெரிய ஆளு. இந்த ஊர்ல அவன் இந்த கம்பனி ஓனர்னா, நானும் எங்க ஊர்ல ஒரு மில்லு ஓனர்தான் தெரியுமில்ல”

தலையை பிய்த்து கொண்ட சத்யன் “ஏ அரை லூசு. அவருக்கு இந்த கம்பனி மட்டும் தான் இருக்குன்னு நினைச்சியா. ஆஸ்திரேலியாலேயே பெரிய சிட்டிஸ்ல எல்லாம் அவர்க்கு கம்பனி இருக்கு. இன்னும் அமெரிக்கால கூட ஆபீஸ் ஓபன் பண்ண ரெடி பண்ணிட்டு இருக்கார். மல்டி மில்லியனர் தெரியுமா. அதை விடு. உங்க அப்பாட்ட இருக்க முழு சொத்தையும், அவர் அவரோட பதினேழு  வயசுலயே சம்பாதிச்சுட்டார். பணம்லாம் அவருக்கு பெரிய விஷயமே கிடையாது. கம்ப்யூட்டர் பத்தி அவர்க்கு தெரியாத விஷயமே கிடையாது. இன்னும் சொல்ல போனா அவரு பணம் சம்பாதிக்கறதுக்காக இந்த பிசினஸ்லலாம் பண்ணல. கம்ப்யூட்டர் மேல தீரா காதல் அவருக்கு. அத எஸ்டாபிளிஷ் பண்ணத்தான் இதெல்லாம் பண்றாரு” என்று நீளமாக பேசினான்.

ஓ அவன் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று மனதில் நினைத்த மது “இப்ப அதுக்கு என்ன என்னண்ணா பண்ண சொல்றிங்க” என்று  சின்ன குரலில் கேட்டாள்.

“முதல்ல அவர்க்கு மரியாதை கொடு.  நீ ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது. ஆபீஸ்ல வச்சு உன் இஷ்டத்துக்கு நடந்துக்காத. இன்னைக்கு பரவால்ல. ஜான் மட்டும் தான் இருந்தாரு. ஆனா எல்லார் முன்னாடியும் ஒழுங்கா நடந்துக்கணும்.  அதுக்கு முன்ன உனக்கு அவரை எப்படி தெரியும். உனக்கும் அவர்க்கும் என்ன பிரச்சனை” என்று எல்லாம் தெரிந்திருந்தாலும் மது என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக கேட்டான்.

ட்ரைன்லதான் அவனை ஒருநாள் பாத்தேன் என்று அவளுக்கும் ஹேரிக்கும் இடையில் நடந்ததை அவர்கள் பெர்சனலை தவிர்த்து விட்டு மேலோட்டமாக சொன்னாள். இறுதியாக இப்பொழுது காதல் சொல்லிவிட்டு, கல்யாணம் பண்ணி கொள்ள கேட்கிறான், அதுதான் பிரச்சனை என்றும் கூறினாள்.

நடந்தது ஓரளவு தெரிந்திருந்த சத்யன் வேறு ஒன்றும் கேட்காமல் “இவ்வளவு நடந்துருக்கு. என்னட்ட சொல்லணும்னு தோணலையா மது உனக்கு”

“சாரிண்ணா.உங்கட்ட சொல்ற மாதிரி சூழ்நிலை அமையல. நா ரொம்ப கேர்லெஸ்ஸாதான் இருந்தேன் அவன் விஷயத்துல. அவன் இவ்ளோ சீரியசா இருப்பான்னு நா எதிர்பாக்கல”

“உனக்கு எந்த விஷயத்துலதான் சீரியஸ்னெஸ் இருந்துருக்கு. எல்லாத்துலயும் விளையாட்டுதான். இப்ப அவர்க்கு என்னதான் பதில் சொல்லிருக்க”

“என்னண்ணா சொல்ல முடியும். இனிமே என்னட்ட பேசாத. பாக்காதன்னு தான் சொல்லிருக்கேன்”

“சரி அதான் சொல்லிட்ட இல்ல. அதோட விலகி போக வேண்டியது தான. அப்புறம் ஏன் இங்க வச்சு அவர்ட்ட  வம்பு பண்ற மாதிரி நடந்துக்கிற”

“என்ன. நா வம்பு பண்றனா. உங்களுக்கு தெரியுமா. இவ்ளோ நாள் என்னட்ட அவன் யாருன்னு மறைச்சி பழகிருக்கான். எனக்கு கோவம் வருமா, வராதா?”

“அவர்தான் உனக்கு வேண்டாம்னு விலக சொல்லிட்ட இல்ல. இனிமே அவர் யாரா இருந்தா என்ன. உன்னட்ட மறைச்சா என்ன. மறைக்கலன்னா என்ன”

“அது எப்படி விட முடியும். இப்ப வேணா விலகிருக்கலாம். ஆனா இதுவரை பழகுனத்துக்கு, நா யாருமே இல்லையா அவனுக்கு”  நா தழுதழுத்தது மதுவிற்கு

பேச்சை மாற்றுவதற்காக சத்யன், இவர்கள் உரையாடலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஊர்வசியிடம் “நீ என்ன சொல்ற ஊர்வசி” என்று கேட்டான்.

ஊர்வசியும் “பாஸ் பாத்தா நல்லவராதான் தெரியுது. ஆனா இந்த ஊர்க்காரர். இதுக்கு முன்னாடி அவர்க்கு எத்தன கேர்ள் பிரண்டோ” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, இடையில் புகுந்த மது “அதெல்லாம் அவனுக்கு அப்படி யாரும் இதுவரை கிடையாது” என்று முடித்தாள். அதற்கு ஊர்வசி உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டாள்.

“அவனே சொல்லிருக்கான்”

“அவர் சொன்னா எப்படி நம்புற”

“அதெல்லாம் அவன் பொய் சொல்ல மாட்டான். அதும் என்னட்ட சொல்லவே மாட்டான்”

“இப்பதான் தன் அடையாளத்தையே மறைச்சிட்டார்ன்னு பொலம்புன”

“அது வேற. அவன் என்னட்ட சாதாரண ஆளா அறிமுகமானான். அப்படியே என்கூட பழகலாம்னு முடிவு பண்ணிருப்பான்”

“சரி ஓகே. ஆனா இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த நம்ம நாட்டு பொண்ணான  பூஜாவே  சுத்தமா இல்ல. நீ இதுல இந்த ஊர்காரரான அவரை எப்டி இந்த விஷயத்துல நம்புற”

“போயும் போயும் பூஜாவை போய் இவன் கூட கம்பேர் பண்ணாத. இந்த நாட்டு கல்ச்சர்க்கு அவங்க கேர்ள் பிரென்ட் டேட்டிங் லீவின்னு இருந்தா கூட , அதுலயும் பார்ட்னர்க்கு உண்மையாத்தான் இருக்காங்க. ஏன் ஹேரியே பல கேர்ள் பிரண்ட் இருந்து பிரேக்கப் பண்ணிருந்தா அத எப்படி தப்புன்னு சொல்ல முடியும். அவன் கல்ச்சர் அது. அத வந்து மறைக்கணும்னு, அதும் என்கிட்டே மறைக்கணும்னு அவனுக்கு அவசியம் கிடையாது”

“ஏன் அப்படி சொல்ற மது. நம்ம கல்ச்சர் படி உனக்கு பிடிக்காது, நீ அவர லவ் பண்ண மாட்டேன்னு கூட அவர் அப்டி சொல்லிருக்கலாம். ஏன்னா இந்த வயசு வரை இந்த நாட்ல ஒரு கேர்ள் பிரண்ட் கூட இல்லன்னு சொன்னா என்னால நம்ப முடியல”

“ஏன். நீ பூஜாவை விடு. உன் அத்தை பையனும் இங்கவே பிறந்து வளர்ந்தவர். அவர்க்கு எத்தன கேர்ள் பிரண்ட்”

“அவர்க்கு அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. அவர் இங்க பிறந்து வளந்துருக்கலாம். அவர் ரொம்ப நல்லவர். நம்ம கல்ச்சரதான் பாலோவ் பன்றாரு”

“ஓ அப்படி ஓருத்தர் இருக்கும் போது, இந்த ஊர்க்காரன்ல ஏன் அப்படி ஒருத்தன் இருக்க கூடாது. அப்படி விதி விலக்கானவன்தான் ஹேரி”

“சரி மது. ஒத்துக்கிறேன். முன் வாழ்க்கைல ஓகே. இனிமே வர வாழ்க்கைல எத்தனை வருஷம் ஒரே பொண்ணுகூட அவரால வாழ முடியும். எந்த அடிப்படையில அவர் உன்ன கல்யாணம் பண்ணிக்க கேக்கறார்”

“இப்ப என் மேல உள்ள காதல்ல கேக்றான். என் கூடவே கடைசி வரை வாழ்ந்துடலாம்னு எதோ நம்பிக்கை இருக்க போய்தான் கல்யாணம்ற பெரிய முடிவையே அவன் எடுத்திருக்கான். ஆனா அவன்ட்ட போய் என்னோடதான் கடைசி வர வாழணும்னு  நாம நிபந்தனை போட முடியாது ஊர். ரெண்டு பேர் கையிலயும் அந்த பொறுப்பு இருக்கு. ஏன் நம்ம ஊர்க்காரனையே நா கல்யாணம் பண்ணினாலும் நா அவன்கிட்ட கடைசி வரை நீ என்கூடதான் வாழ போறன்னு பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டா கல்யாணம் பண்ணிப்பேன். எல்லாமே நம்பிக்கைதான். அப்படி இருக்கும் போது இந்த ஊர்ல பொறந்துட்டான் அப்படிங்கிற காரணத்துக்காக  நாம  கேள்வி கேக்க கூடாது ஊர்”

“சரி அப்ப ஏன் அவரை வேண்டாம்னு சொன்ன”

“இப்பவும் வேண்டாம்னுதான் சொல்றேன். ஆனா காரணம் அவன் இல்ல. அவன் சைட்லேந்து அவன மறுக்க எனக்கு ஒரு காரணமும் இல்ல . நா, என்னோட ஊர் உறவுகள் சமூகம் இதை சார்ந்து தான் அவனை வேண்டாம்னு சொல்றேன்” என்று சொன்னவள் பேச முடியாமல் எழுந்து லஞ்ச் பாக்ஸை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

சத்யனும், ஊர்வசியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு வாயடைத்து போய் அமர்ந்திருந்தனர்.

சத்யன் தான் முதலில் “உன்ன என்னமோன்னு நினைச்சேன் ஊர்வசி. ஊசி வெடி கூட சமயத்துல சத்தமா வெடிக்கும்னு நிரூபிச்சிட்ட”

“அது அப்படி கிடையாது சத்யன். ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சொல்ற பேசிக் தான். பத்து நாள் முன்னாடி மது எனக்கு பாஸ அறிமுக படுத்துனா. கதை இப்படிதான் போவும்னு எனக்கு அப்பவே தோணுச்சு”

“எல்லாம் சரிதான். இந்த குட்டி பிசாசு எப்ப சின்ன புள்ளையா இருக்கு. எப்ப பெரிய பிள்ளையா பேசுதுன்னே புரிஞ்சுக்க முடியலையே”

“நீங்களும் அப்பப்ப அவ அண்ணனு நிரூபிச்சிடுவிங்க. அவ இவ்ளோ பெரிய விஷயம் பேசிட்டு போயிருக்கா. அவளுக்கு ஹேரி சார ரொம்ப பிடிக்குதுன்னு தெரியுது. அதுக்கு என்ன பண்ணனும்னு யோசிக்காம இப்ப வந்து அவ எப்படின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க”

“என்ன பண்ண சொல்ற. அவ வேணுனா அவளுக்கு பிடிச்சவன பத்தி நெகடிவ் யோசிக்காம இருக்கலாம். முழுசா நம்பலாம். ஆனா ஒரு அண்ணன் பாய்ண்ட் ஆஃப் வியூவ் ல இருந்து பாக்கும்போது முதல்ல நெகட்டிவ் தான் யோசிப்போம். ஏன் ரிஸ்க் எடுக்கணும், கஷ்டபடணும் என் தங்கச்சி. அவளுக்கு பிடிச்சிருந்தாலும் இன்னும் வேண்டாம்னு தான சொல்றா. அது வரை சந்தோஷம். நீ அவ லவ்க்கு சப்போர்ட் பண்றன்னு ஏதும் குழப்பி விடாம இரு”

அட கிராதகா என்று அவனை ஒரு பார்வை பார்த்தாள் ஊர்வசி.

“இன்னும் ஏன் உங்களுக்கு கல்யாணம் , லவ்லாம் செட்டாகலைன்னு இப்பதான் தெரியுது”

“பரவால்ல, பரவால்ல அண்ணன்னா இப்படித்தான். பலபேர் சாபத்தை வாங்கணும்” என்று இடத்தை காலி பண்ணினான் சத்யன்.

டிபன் பாக்ஸை எடுத்து கொண்டு வந்த மது அங்கிருக்கும் குட்டி டைனிங் ஏரியாவிற்கு வந்தாள். அங்கு பிரிட்ஜ், ஓவென், டேபிள் சேர் எல்லாம் இருக்கும். தக்காளி சாதமும், உருளை வறுவலும் எடுத்து வந்திருந்தாள் மது. அதை ஓவனில் வைத்து சூடு செய்தாள். அப்போது பின்னாலிருந்து ஹாய் என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தாள். ஜான் வந்து கொண்டிருந்தான்.

மதுவும் திரும்ப ஹாய் சொல்லிவிட்டு போய் ஒரு டேபிளில் அமர்ந்தாள். அவளுக்கு எதிரில் வந்தமர்ந்த ஜான் “என்ன லன்ச் கோலா நீ இன்னைக்கு. ஸ்மெல் சூப்பரா வருது”

“சாப்பாடு வேணுன்னா கேட்டு வாங்கி சாப்பிடணும் ஜாக்கி. இப்படி சுத்தி வளைச்சு பேச கூடாது” என்று சிறிதளவு சாப்பாடு எடுத்து, அங்கு அவளுக்கென்று ஆஃபீஸிலேயே வைத்திருக்கும் பிளேட்டில் போட்டு ஒரு ஸ்பூனும் கொடுத்தாள்.

பிளேட்டை எடுத்து ஸ்மெல் புண்ணியவன் “நைஸ் அரோமா” என்றான். என் நண்பன் சொல்லிருக்கான் நீ நல்லா குக் பண்ணுவேன்னு. உண்மைதான் போல என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான்.

“சூப்பரா இருக்கு சாப்பாடு. இந்த ரெசிபி பேரென்ன” என்று கேட்டுக்கொண்டே அவள் கொடுத்ததை சாப்பிட்டு முடித்தவன் அவளிடம் இருந்து இன்னும் கேட்டு வாங்கினான். அவன் நன்றாக சாப்பிடுவதை பார்த்தவள், அவள் சாப்பிடாமல் அவனுக்காக உணவை  வைத்து கொண்டிருந்தாள். அவனும் அவள் முழு உணவையும் சாப்பிட்டு விட்டு டிஷுவால் மூக்கை துடைத்து கொண்டிருந்தான்.

“கொஞ்சம் காரம் தான். பட் டெலிசியஸ்” என்றான்.

மது அங்கிருக்கும் பிரிட்ஜில் இருந்து ஒரு யோகர்ட் டப்பாவை எடுத்து வந்து கொடுத்தாள். அதையும் வாங்கி சாப்பிட்டவன் “அப்புறம் உனக்கு பசிக்கலையா கோலா” என்று கேட்டவனை பார்த்து “உன் பிரண்ட் என்ன சாப்பிட்டான்” என்று கேட்டாள்.

“அவன் எங்க சாப்பிட்டான். இன்னைக்கு அவன் ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததால எல்லாரும் அவனை மீட் பண்ண நினைக்கிறாங்க. அதான் மொத்தமா எல்லாரையும் வர சொல்லி மீட்டிங் போடுட்டான். அவன் சாப்பிட மூணாயிடும்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே புட் டெலிவரி பாய் வந்து ஒரு கவரை கொடுத்து விட்டுப் போனான். அதிலிருந்த வெஜ் பர்கரை எடுத்து பிரித்து மதுவிற்கு சாப்பிட கொடுத்தான்.

மதுவும் கேள்வியாக பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடித்தவுடன் “நாந்தான் உன்ன பாத்துட்டு, இந்த ஆபீஸ்ல நீ ஒர்க் பண்றத ஹேரிக்கு சொன்னேன். பாஸ்னு தெரிஞ்சா எங்க உனக்கும் அவனுக்கும் கேப் வந்துருமோன்னு நினைச்சிதான் உன்னட்ட சொல்லாம இருந்தான்” என்றான்.

“புரியுது” என்றாள் சுருக்கமாக மது.

“அப்புறம் உங்க ஊர்ல எல்லாருமே கல்யாணம்ன்னு வரும்போது பாஸ்ட் லைஃப் பத்தி ரொம்ப கேள்வி கேக்கறீங்க. நா அவனோட ஆறு வயசுலேர்ந்து பிரண்ட். ஒரே ஸ்கூல். எனக்கு தெரிஞ்சு, இந்த வயசு வரை அவன் எந்த பெண்ணோடும்” என்று சொல்லி கொண்டிருந்தவனை கை காட்டி நிறுத்திய மது, “தயவு செஞ்சு ஏதும் சொல்லாத. அவன பத்தி நீ சொல்லித்தான் நா தெரிஞ்சுக்கணும்னு இல்ல. எனக்கே நல்லா தெரியும்” என்றாள்.

அதற்கு மேல் ஜான் ஒன்றும் பேசவில்லை. எழுந்து அவளிடம் தலையாட்டிவிட்டு சென்று விட்டான்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!