Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

உறவாக அல்ல உயிராக 1

வணக்கம்

எனது முதல் கதை வாய்ப்பு அளித்த மல்லிகா மணிவண்ணன் மேம்முக்கு நன்றி.

உறவாக அல்ல உயிராக



Advertisement

அத்தியாயம் 1

பௌர்ணமி நாள். வீட்டின் பூஜை அறையில் கடவுளை வணங்கிக் கொண்டு இருந்தார் கோமதி.

வீட்டின் முன் காரின் சத்தம் கேட்டு. பூஜையை வேகமாக முடித்தவர் . வெளியவர .

Advertisement

அவர் வாசலின் முன் இருவர் நின்று கொண்டு இருந்தனர்.

Advertisement

அவர்களை பார்க்க கணவன் மனைவி போல தெரிந்தது.

அவர்களை வரவேற்ற கோமதி.

வீட்டுக்குள் அழைத்து ஹாலின் உள்ளே இருந்த சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு.

Advertisement

நீங்கள் யாரை பார்க்கணும்? என்றார்.

வந்தவர்கள் கோமதியை பார்த்து திருச்செல்வன் சாரை பார்க்கணும்.
என்று கூறினர்.
ஒரு நிமிசம் என்றவர்.

தனது போனில் இருந்து தன் கணவன் திருச்செல்வனுக்கு அழைக்க.

போனை எடுத்தவர். என்ன கோமு? கொஞ்சம் வேலை இருக்கு. ஆபீஸ் பைல் பாத்துட்டு இருக்கேன். அரைமணி நேரம் ஆகும்.
என்று சொன்னார்.

கோமதி தன் கணவரிடம் உங்களை பார்க்க இரண்டு பேர் வந்து இருக்காங்க.

கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்று கூறினார்.

திருச்செல்வன் பட்டு சேலை உற்பத்தி செய்யும் ஆலை வைத்து இருப்பதால்.

சிலர் வீட்டிற்கே வந்து. அவர்களுக்கு பிடித்தமான பட்டு சேலைகளை. பிடித்த டிசைன். தேவையானதை நெய்ய சொல்லி வாங்கி செல்வதுண்டு. எனவே கோமதி இவர்களை அப்படித் நினைத்தார்.

வந்தவர்களிடம் தன் கணவர் இப்போ வந்து விடுவார் என்று கூறிக்கொண்டு.

தண்ணீர் கொடுத்தவர். காபி சூஸ், தரவா சாப்பிடுங்க என்று கேட்க.

இருவருமே! இப்போ தான் சாப்பிட்டோம் மா வேண்டாம் என்றனர்.

கோமதியிடம் தங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.

நான் ரகுபதி. இவள் என் மனைவி பார்வதி.

பிரபலமான பர்னீச்சர் கடையின் பெயர் சொல்ல.

கோமதிக்கு அந்த கடை தெரிந்து இருக்க. ஓ தெரியுமே என்று கூற .

அது தங்களுடையது என்று சொன்னார்.

திருச்செல்வன் மாடியில் இருந்து வந்துவிட்டார். வந்தவர்களுக்கு கை கூப்பி வரவேற்றவர்.

கோமதியை பார்த்து அவர்களுக்கு என்று கேட்க.

தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

திருச்செல்வன் காபி குடிக்கலாமே என்று சொல்ல.

இல்லை சார் மேடம் கேட்டாங்க வேண்டாம். இப்போ தான். சாப்பிட்டு வந்தோம்.

திருச்செல்வன், ரகுபதியிடம் என்ன விசயம் என்று கேட்க.

ரகுபதி உங்கள் மகள், என் மகன் ஐட்டி கம்பெனில் தான் வேலை செய்வதாகவும். தன் மகனுக்கு உங்கள் மகள் மகிழ்வதனியை பிடித்து இருக்கு. பெண் கேட்டு வந்ததாகச் சொல்ல.

திருச்செல்வன், ரகுபதியிடம். மன்னிக்கனும் என் பெண்ணை நான் என் தங்கை மகனுக்கு கல்யாணம் பண்ணுறதாக. நாங்க முடிவு பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு.

சோ சாரிங்க என்றார்.

ரகுபதியும், பார்வதியும், திருச்செல்வரிடம் சாரிங்க. நீங்க பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணியது தெரியாது? தெரிந்தால் வந்து இருக்க மாட்டோம். என்று சொல்லி கிளப்பிவிட்டனர். தங்கள் மகன் ஜெகன், சொல்லியதும். இவர்களிடம் போனில் கேட்டு வீட்டுக்கு வந்து இருக்கலாம். என்று புலம்பி கொண்டு சென்றனர்.

கோமதியை பார்த்த திருச்செல்வன். பார்த்தியா என்றார் மனைவியை முறைத்து. திருச்செல்வன் மகிழ் படிப்பு முடிச்சவுடனே கேட்டுட்டு இருக்கேன். பாப்பாவுக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு நீ கேட்டியா? இப்போ பாரு.
பெண்ணு கேட்டு வீட்டுக்கு வந்து இருக்காங்க. உன் பொண்ணு வேலைக்கு போக ஆசைப்படுறானு சொன்ன இப்போ. பாத்தியா?
மகிழ்ல கூப்பிடு. என்றார் கோபமாக.

கோமதி பொண்ணுன்னு இருந்த சிலர் பெண் கேட்டு வர தான் செய்வாங்க. இவர் என்னமோ குதிக்கிறார். உன் பொண்ணு உன் பொண்ணு சொல்லுறது. வெளியே போன என் பொண்ணு மகிழ்லுன்னு பெருமையா பேசுறது. என்று மனதில் புலம்பியவர். தன் மகளை கீழே இருந்து சத்தமாக அழைக்க.

மகிழ்வதனி, நேற்று இரவு ஒரு படத்தை நள்ளிரவு 2 மணி வரை பார்த்து விட்டு தூங்கிக்கொண்டு இருக்க. தாயின் சத்தம் கேட்டு.

வரேன்மா. என்று வேகமாக கீழே செல்ல.

தன் அப்பா , அம்மா ஒன்றாக தன்னை கோபமாக பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டவள். தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு. என்ன விசயம் பா என்றாள்.

தன் மகளை பார்தவர் அவளிடம் . நீ வேலை பார்க்கும். கம்பெனி ஓனர் ஜெகனை உனக்கு தெரியுமா என்று கேட்க.

தெரியுமே, இரண்டு மூன்று முறை பார்த்து இருக்கேன். அவர் இந்த கம்பெனியில் ரொம்ப இருக்க மாட்டார் பா. வேற இன்னொரு கம்பெனி இருக்கு அங்கே தான் அதிக நேரம் இருப்பார். ஏன் பா? என்ன ஆச்சு.

அந்த பையனின். அப்பா , அம்மா உன்னை பெண் கேட்டு. வந்தனர் என்று சொன்னார்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவளின் கம்பெனி எம்பி ஜெகன். இதுவரை அவளை பார்த்தது இல்லை. பேசியதும் இல்லை. அப்போது எப்படி பெண் கேட்டு வந்தனர் என்று யோசிக்க.

தனது அப்பா. தன்னை ஆராய்ச்சி செய்தும் பார்வையை பார்த்தவள். திருச்செல்வனை பார்த்து, நீங்க சொல்ல வேண்டியது தானே பா. எனக்கும் , அத்தான் பிரகதீஸ்வரனுக்கும் கல்யாணம் பண்ண பேசி முடிச்சாச்சுனு என்றாள்.

நீங்க எப்பவோ முடிவு பண்ணியது தானே. இப்போ யார் வந்து கேட்டா என்ன? இருக்க போய் கோபமா இருக்கீங்க.

ஏன் பா இவ்வளவு டென்சன்.

மகளிடம் பேசியபின் தான். திருச்செல்வனுக்கு மகளின் மனதில் யார்ரையும் பற்றி எந்த விருப்பம் இல்லை என்று நினைத்தவர்.

நான் ஏன் ? தன் மகள் மீது கோப பட வேண்டும். அவள் மனதில் ஒன்றும் இல்லை. என்று அமைதி படுத்தியவர்.

அடுத்து என்ன செய்யலாம்? என்று நினைக்க…

மகிழ்வதனிடம் உனக்கும் பிரகதீஸ்வரனுக்கும் கல்யாணம் பேசலாம என்றார்.

மகிழ் உடனே ஆனால் ஒன்னு பா கல்யாணத்துக்கு பின். நான் வேலைக்கு போவேன். அத்தான் கிட்ட சொல்லிடுங்க. என்று தன் ருமிற்க்கு சென்று விட்டாள்.

திருச்செல்வன் பொள்ளாச்சி ஊரை சேர்ந்தவர். பக்கத்து ஊரில் தூரத்து உறவினர் பெண்ணான கோமதியை மணந்து கொண்டார்.

திருச்செல்வன் கோமதிக்கும் திருமணமாகி 5 வருடம் குழந்தை பிறப்பு இல்லை.

திருச்செல்வத்தின் தங்கை நிர்மலா ஒரு டாக்டர்.
அவளுக்கும் விமல்ராஜை திருமணம் செய்து வைத்தார்.

நிர்மலா குழந்தை மகபேறு மருத்துவர். விமல்ராஜ் இருதய நிபுணர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் பிரகதீஸ்வரன் பிறந்து விட்டான்.

திருச்செல்வனுக்கு மருமகனின் மீது கொள்ளை பிரியம். குழந்தை இல்லா எங்கள் வீட்டுக்கு முதலில் வந்த குழந்தை அல்லவா! அதனால் பிரகதீஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
பிரகதீஸ்வரன் பிறந்து நான்கு வருடம் கழித்து பிறந்தவள் தான் மகிழ். திருச்செல்வன் கல்யாண விசயத்தை பேசுவோம் என்று முடிவு செய்து.

நிர்மலாவுக்கு போனில் அழைக்க.
நிர்மலா அப்போது தான் ஒரு பேசன்டை பார்த்து முடித்து இருக்க.

அண்ணனின் போன் வர.

அங்கே வேலையில் உள்ள செவிலியிடம்.

கொஞ்சம் நேரம் யாரையும் அனுப்ப வேண்டாம் என்று சொன்னவள். அண்ணனின் போன் எடுக்க. ஹலோ அண்ணா எப்படி இருக்க? திருச்செல்வன் நான் நல்ல இருக்கேன் மா.

நீ ,மாப்புள்ள , மருமகன் எப்படி இருக்கீங்க.

எல்லோரும் நல்ல இருக்கோம்.

அங்கே கோமதி அண்ணி ,மகிழ், இன்பன் எப்படி இருக்காங்க என்று கேட்க.

இங்கே எல்லோரும் ஓகே மா.

திருச்செல்வனிடம் நிர்மலா இன்பனின் படிப்பை பற்றி கேட்க. வெளிநாட்டில் படித்து கொண்டு இருக்கிறான். திருச்செல்வனின் மகன் இன்பன். நல்லா இருக்கான். வாரம் ஒரு முறை போன் போடுவான்.

திருச்செல்வன் மருமகன் பிரகதீஸ்வரனை விசாரிக்க.

நிர்மலா அவன் எங்கே? இங்கேவா இருக்கான். எந்த நாட்டுல யாரு கூட மீட்டிங்கோ, டின்னரோ , என்று புலம்பியவரை.

திருச்செல்வன் தங்கையிடம் நீ ஏன் கவலை படுற?
நாம பிரகதீஸ்வரனை நினைத்து பெருமை படுற மாதிரி தான் அவன் இருக்கான்.

இந்த வயசுல எத்தனை பிரம்பாண்டமான அரண்மனை போல வீடு வில்லா அடுக்குமாடி கட்டிடம் போன்ற அனைத்துக்கும். டிசைன் பண்ணி கொடுத்து இருக்கான். அது மட்டுமா ! வெளிநாட்டில் உள்ள பல மல்டி மிலினியர்க்கு கூட கனவு இல்லம் கட்டி குடுத்து இருக்கான் .

பிரகதீஸ்வரின் திறமைக்கு எல்லையே இல்லை. அவனிடம் எத்தனையோ பேர்? அவனின் அப்பாய்மெண்ட் கேட்டு வைட்டீங்குல இருக்காங்க தெரியுமா?

என்னுடைய நண்பன் சுப்பு தெரியுமா, அவன் கூட பிரகதீஸ்வரனிடம் அப்பாய்மெண்ட் கேட்டு கிடைக்கல.

சுப்பு மகனுக்கு ஒரு பெரிய வீடு கட்டனும் சொல்லி கிட்டு இருந்தான்.

நம்ம பிரகதீஸ்வரனை ரீச் பண்ண முடியல. என் கிட்ட கேட்டான். நான் பிரகதீஸ்வரனின் பீ .ஏ நம்பர் குடுத்தேன்.

சுப்பு பிரகதீஸ்வரனின் பீ.ஏ விடம் அவனின் கனவு இல்லம் பற்றி சொல்ல. நம்ம பிரகதீஸ்வரன் டிசைன் பண்ணி குடுத்த வீட்டை பாத்தீனா அசந்து போவ அப்படி இருக்கு வீடு.

அவன் வீட்டை டிசைன் பண்றது. எவ்வளவு புதுமை, அழக , கஷ்டமர் கேட்ட மாதிரியும். அவனின் திறமையும் ஒவ்வொறு வேலைப்பாடும் அருமையா இருக்கும்.

அண்ணா என்று திருச்செல்வமனின் , பேச்சை நிறுத்திய நிர்மலா. நீ பாட்டுக்கு உன் மருமகனின் திறமை சொல்லி போய்க்கிட்டே இருக்க.

எனக்கு எல்லாம் தெரியும் அண்ணா. நா அவன பார்த்து நாலு மாதமாவது இருக்கும்.

எனக்கு இருக்குறது . ஓரே பையன் அவனை பக்கத்தில் வைத்து பார்க்க வேண்டும். ஆசை இருக்காத. நாங்க அவனை, என்ன வேலை வேணா செய் அது உன் இஷ்டம் . என்று முழு சுதந்திரம் குடுத்து இருக்கோம்.

அவன் மாத கணக்கில் வெளிநாட்டில் தான் இருக்கான்..போன் கூட 10 நாளைக்கு ஒரு முறை இல்ல. மாதத்தில் இரண்டு முறை தான் பேசுறான். என நிர்மலா வருத்தப்பட.

திருச்செல்வன் அதற்கு தான் நான் ஒரு வழி சொல்றேன். என்றவர் நம்ம. மகிழ்லுக்கும், பிரகதீஸ்வரனுக்கும், கல்யாணம் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று கூற.

நிர்மலா தன் அண்ணன் சொன்னதை கேட்டவள் அப்படியா ! அண்ணா நேத்து நானும் விமலும் இதைப்பற்றி தான் பேசி கொண்டு இருந்தோம்.

இன்னைக்கு நீ சொல்லிட்ட. நான் விமல் கிட்ட பேசிட்டு. பிரகதீஸ்வரனிடம் கேட்டு சொல்லுறேன். கல்யாண நாள் குறிக்கலாம்.

கல்யாணம் நல்ல படியா நடக்கனும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தவர்.

தன் அண்ணனிடம் பொள்ளாச்சியில் உள்ள தம் அம்மா மீனாட்சியிடம் இந்த விசயத்தை பற்றி சொல்லி விடு என்று சொன்னாள்.

திருச்செல்வனோ தன் தங்கையிடம். நான் அம்மாவிடம் பேசி 15 வருடம் ஆகுது. உனக்கு தெரியாதா.

நிர்மலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அண்ணாவின் மேல் மீனாட்சிக்கு கோபம் இருப்பது தெரியும். ஆனால் இந்தனை வருடம் பேசாமல் இருப்பது தெரியாது.

நீ கவலை படாத அண்ணா.

அம்மாவுக்கு உன் மீது கோபம் . இனியாவை, அங்கே விட்டு வந்த து ஏன் எனக்கு கூட தான். உன் மேல் கோபம் என்று .

திருச்செல்வமன் அமைதியாக இருப்பதை தெரிந்த நிர்மலா அண்ணா என்று சத்தமாக போனில் கூப்பிட.
சரிமா.போனில் ரொம்ப நேரம் பேசிட்டோம்.
நேரில் பேசுவோம் என்று போனை கட் பண்ணினார்.

திருச்செல்வனுக்கு நினைவு 15 வருடம் முன் சென்றது. அவர் தனது ஆசை மகள் இனியாவை. பொள்ளாச்சி உள்ள தன் அம்மா மீனாட்சியிடம் இனி. இவள் உங்க கூடதான் இருக்க வேண்டும்.

தான் இருக்கும் சென்னை வீட்டுக்கு. இவளை அழைத்து செல்ல மாட்டேன்.

இவள். அங்கே என் கூட இருந்தாள். என்னை விட்டு எல்லாம் போய் விடும் என்று சொல்லி தன் மகள் இனியாவை 8 வயதில் விட்டு சென்றவர்.

பொள்ளாச்சி ஊர் பக்கம் வரவே இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!