Skip to content
Post Views: 7,580
அத்தியாயம் 26:
மறுநாள் பொங்கல் பண்டிகை. ஞாயிற்று கிழமை ஆதலால் விடுமுறையாக போய் விட்டது. அதுவரை மதுவும் ஹேரியும் நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டுமே பேசி கொண்டிருந்தார்கள்.
அதனால் அவனை பொங்கலுக்கு வீட்டுக்கு வர சொல்லி அழைத்தாள். ஜானையும் அழைத்து வருமாறு கூறினாள். ஆனால் ஜானுக்கு வேலையிருப்பதால் இன்னொரு நாள் வருவதாக கூறி விட்டபடியால் , தான் மட்டும் வருவதாக கூறினான் ஹேரி.
சத்யனையும் வீட்டுக்கு வர சொல்லியிருந்தாள். மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் ஹேரி வந்துவிட்டான். வந்தவன் கதவை திறந்த மதுவை பார்த்து வாயை பிளந்து விட்டான்.
Advertisement
சாண்டல் கலர் பாவாடையில் பெரிய சைஸ் கோல்டன் கலர் பார்டர். பிரவுன் கலர் ஜார்ஜெட்டில் தாவணி.அதில் கோல்டன் கலரில் சின்ன பார்டர். அதே பிரௌனில் சிம்பிளான ஆரி ஒர்க் செய்த ப்ளௌஸ்.
காதில் மீடியம் சைஸ் ஆன்ட்டிக் ஜிமிக்கி. கழுத்தில் அவள் எப்பொழுதும் அணியும் எம் பென்டண்ட்டுடன் கூடிய செயின். ரெண்டு கையிலும் பிரவுன் கலரில் கிளாஸ் வளையல்கள். தலைக்கு குளித்து காய்வதற்காக நடுவில் சின்ன கிளிப் குத்தி முடியை விரித்து விட்டிருந்தாள். அவளை பார்த்து மலைத்து போனவன் “என்ன பேபி காஸ்ட்யூம் இது” என்றான்.
ஹேரி ஹாப் ஒயிட்டில் கார்கோ பேண்டும், பிளாக் கலரில் வி நெக் போலோ டீ சர்ட்டும் அணிந்திருந்தான்.
Advertisement
“நீ முதல்ல உள்ள வா. என் காஸ்ட்யூம் இருக்கட்டும். நீ என்ன பிளாக் கலர் போட்ருக்க “
Advertisement
“ஏன் ஹனி. நல்லா இல்லையா”
“அதெல்லாம் சூப்பராத்தான் இருக்கு. ஆனா இன்னைக்கு பொங்கல். நல்ல நாள்ல நாங்க பிளாக் போட மாட்டோம்” என்றவள், அவள் எடுத்து வைத்திருந்த கிரின் கலர் டீ சர்ட்டை எடுத்து வந்து கொடுத்து அவனை மாற்றி கொள்ள சொன்னாள் .
அதை வாங்காமல் கை கட்டி கொண்டு அவளை பார்த்தவன் “அன்னைக்கு நா கேட்டதுக்கு குடுக்க மாட்டேன்னுல்ல ஹனி. இப்ப நா எப்படி வாங்கிக்கறது” என்று கேட்டான்.
Advertisement
ஐயையோ, மறந்துருப்பானு நினைச்சேன். கரெக்ட்டா கேக்குறானே. சமாளிப்போம்… என்று யோசித்தவள் அவளையே பார்த்து கொண்டிருந்தவனிடம் “நான்தான் சாரி சொல்லிட்டேன்ல கண்ணா. ப்ளீஸ். என் செல்லக்குட்டி இல்ல. நல்ல பிள்ளையா இத போட்டுக்குவியாம்” என்று செல்லக்குட்டியை தமிழில் சொல்லி கண்களை சுருக்கி கேட்டவளை பார்த்து உள்ளம் கொள்ளை போனது ஹேரிக்கு.
மிக வேகமாக அவளை கட்டி அணைக்க போனவனை “ஹே ஹே கண்ணா ஸ்டாப். இதோ பாரு கிட்ட வர கூடாது. நா அடுப்புல பொங்கல் வச்சுருக்கேன். அது ரெடியான உடனே சாமி கும்பிடனும் இப்போ. அதுக்கு முன்னாடி என்ன எதும் டர்ட்டி பண்ண, சாமி கண்ண குத்திடும் சொல்லிட்டேன். அதனால நல்ல புள்ளையா சாமி கும்பிடறதுக்கு முன்னாடி இந்த ட்ரெஸ்ஸ மாத்திக்குவியாம்” என்று ட்ரெஸ்ஸை அவன் கையில் கொடுத்து விட்டு, தாவணியை மொத்தமாக அள்ளி இடுப்பில் சொருகி கொண்டு சென்றவளின் பளீர் இடுப்பை பார்த்தவன்
வேகமாக சென்று அவளின் வழியை மறைத்தவாறு நின்றான். பின் நிதானமாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் அவள் இடுப்பில் வந்து பார்வையை நிறுத்தினான்.
அவன் பார்வையை பார்த்து நெஞ்சில் உண்டான படபடப்பை மறைத்தவள் “ஒய் என்ன பாக்கிற. கண்ண நோண்டிடுவேன்” என்று இடுப்பை மறைத்தாள்.
“என்ன பேபி நீ. உன்ன டச் பண்ணாதான சாமி கண்ண குத்தும் சொன்ன. அதான் பாக்கிறேன். ஆமா இந்த டிரஸ் பேர் என்ன பேபி”
“இதுக்கு பேர் ஹாஃப் சாரி. எங்க ஊரு ட்ரடிஷ்னல் டிரஸ். போதுமா. இப்ப தள்ளு. வழிய விடு” என்றவளுக்கு வழியை விடாமல் நின்றவன் “இந்த டிரஸ் செம்ம கியூட்டா இருக்கு . நீயும் ரொம்ப ரொம்ப அழகா இருக்க பேபி” என்றவனிடம் “ஓகே தேங்க் யூ” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.
ஹேரியும் அவளின் பெடரூமிற்க்கு சென்று டீசர்டை மாற்றி கொண்டு வந்து அவளிடம் காட்டினான்.
“நல்லா இருக்கு கண்ணா” என்று சொல்லிக்கொண்டே அடுப்பை கவனித்தாள்.
“நா ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா பேபி”
“வேண்டாம் கண்ணா, அல்மோஸ்ட் பினிஷ்ட்” என்றவள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல், சாம்பார், உளுந்து வடை செய்திருந்தாள். அவள் வீட்டில் எல்லாம் நிறைய காய்கறி போட்டு ஒரு காய் கூட்டு செய்வார்கள் பொங்கலுக்கு. அதெல்லாம் செய்யாமல் ஏதோ மதுவுக்கு தெரிந்த வகையில் சமைத்து வைத்தாள். ஹேரிக்காக வெஜ் சாலட் கொஞ்சம் செய்து வைத்திருந்தாள்.
அவள் தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதியை சேர்ந்தவள். கிராமம் வேறு. அங்கெல்லாம் பொங்கல் பண்டிகையை மிக விமரிசையாக போகி, பொங்கல், மாட்டு பொங்கல் என்று மூன்று நாட்கள் கொண்டாடுவார்கள். மது வீட்டில் மாடும் இருப்பதால் ஜாலியாக இருக்கும். இந்த வருடம் தான் மிஸ் செய்தாள் அவள் ஊரை. அதனால்தான் வீட்டிற்கு சத்யன் ஹேரியை அழைத்தாள். ஊர்வசியையும் அழைத்ததற்கு அவள் அத்தை போக வேண்டாம் என்று சொன்னதால் வரவில்லை.
சமைத்தவற்றை கொண்டு வந்து அவளின் குட்டி சாமி டேபிளில் வைத்தவள், மணியை பார்த்தாள். எட்டே முக்கால். பூ ,பழம், வெற்றிலை பாக்கு எல்லாம் வாங்கி வைத்திருந்தாள். மல்லி பூ கிடைக்காது. வாசனையில்லாத ஒரு குட்டி ரோஸ் கிடைக்கும். அதைத்தான் சாமிக்கு வாங்கி வைத்திருப்பாள்.
ஹேரி அவனின் லேப்டாப்பை கொண்டு வந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். மது சத்யனிற்கு கால் செய்தாள்.
“அண்ணா எங்க இருக்கீங்க. நா எல்லாம் ரெடி பண்ணிட்டேன். சாமி கும்பிட வந்துடுவீங்களா”
“இல்ல மது, தூங்கிட்டேன். நா வர லேட்டாகும். நீ பூஜை பண்ணிட்டு சாப்ட்டுடு”
“சரிண்ணா. ஆனா இங்க வந்துதான் சாப்பிடணும்”
“ஓகே டா.பை” என்று வைத்து விட்டான்.
சரியென்று ஹேரியை கூப்பிட்டு பக்கத்தில் நிற்க வைத்து கொண்டு விளக்கேற்றி, சாமிக்கு நைவேத்யம் செய்து சாமி கும்பிட்டாள். திருநீறு, குங்குமம் இட்டு கொண்டவள், ஹேரிக்கும் “வைத்துவிடவா” என்று கேட்டாள்.
அவன் மதுவின் முன் குனிந்து நெற்றியை காட்டினான். சிரித்து கொண்டே அவனுக்கும் வைத்து விட்டாள்.
வைத்துக்கொண்டவன் “இது என்ன பேபி. எதுக்காக நெத்தியில வச்சுக்கறீங்க” என்று கேட்டான்.
“அது எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன் கண்ணா. திருநீறு வந்து சாம்பல். மனுஷ வாழ்க்கை அநித்யமானது. நிலையில்லாதது. அது தெரிஞ்சுக்கிட்டு ரொம்ப ஆடாம அடக்கமா வாழணும்னு நமக்கு உணர்த்துறதுக்குத்தான் திருநீறு. குங்குமம் ஒரு மங்களகரமான பொருள். முக்கியமா பெண்களுக்கு. அறிவியல் பூர்வமா பார்த்தா மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் இதெல்லாம் போட்டுத்தான் தூய குங்குமம் பண்ணுவாங்க. அத நெத்தி பொட்டுல வச்சா பெண்களுக்கு ஆரோக்கியத்துக்கு நல்லது. எலுமிச்சை, மஞ்சள், படிகாரம் எல்லாமே கிருமி நாசினி. கெட்ட சக்தி , நோய் கிருமி இப்படி எதுவுமே அண்டாது. அதே சமயம் யோகா பண்றவங்களுக்கு தெரியும். பொட்டு வைக்கிற இடத்துல பிட்யூட்டரி க்ளாண்ட் இருக்கு. அங்க ஒரு தீட்சை குடுப்பாங்க. குங்கும பொட்டு வச்சா அந்த இடத்த இயற்கையா ஆக்டிவேட் பண்ண வாய்ப்பு இருக்கு. அப்புறம் ஹிந்துஸ் பண்ற நமஸ்காரம், வணக்கம் இப்படி பலது யோகா போஸ்ட்சர் தான் . இதெல்லாம் உடம்புக்கு நல்லது. நல்ல பழக்கம் வாழ்வியல்லையே வர மாதிரி எங்க முன்னோர்கள் சாமி பேர சொல்லி பண்ணி வச்சாங்க. இப்ப அதைத்தான் மூட பழக்க வழக்கம், கலப்படம்னு நாங்க வீணாடிச்சிட்டோம்” என்று நீளமாக பேசிய மதுவை
இதில் இவ்ளோ விஷயம் இருக்கா என்று ஆச்சரியமாக பார்த்த ஹேரி. “உனக்கு யோகாலாம் தெரியுமா ஹனி” என்றான்.
“ம் தெரியும். டெய்லி மார்னிங் ஒரு 45 மினுட்ஸ் யோகா பண்ணுவேன் நானு. சரி இரு, சாப்பாடெல்லாம் டேபிள்ள அரேன்ஜ் பண்ணுவோம்” என்று கிச்சனுக்கு சென்று ஹாட் பாகில் சக்கரை பொங்கலை மாற்றி கொண்டிருந்தவளின் பின்னால் சத்தமில்லாமல் சென்ற ஹேரி அவளின் வயிற்றை இறுக்கி கட்டி கொண்டான். அவள் முதுகில் விரிந்திருந்த முடியில் முகத்தை புதைத்து, நீளமாக மூச்சை உள்ளிழுத்தான்.
மதுவின் சப்த நாடியும் அடங்கிவிட்டது. இருந்தாலும் சுதாரித்து கொண்டு “ச்சு ஹேரி, என்ன பண்ற. எனக்கு கூசுது” என்று சொல்லி கொண்டே அவள் வயிற்றிலிருந்த அவன் கையை எடுத்து விட முயற்சி பண்ணி கொண்டிருந்தாள்.
“பேபி. இது என்ன வாசம் பேபி” என்று அவள் முடியிருந்த முதுகில் முகத்தை புரட்டினான்.
மதுவால் நிற்க முடியவில்லை. உடம்பு குழைந்தது. கிச்சன் மேடையை இறுக்கி பிடித்து கொண்டாள்.
“இந்த டிரஸ் ஏன் பேபி போட்ட. என் முன்னாடி இன்னுமே இந்த டிரஸ் போடாத பேபி” என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகில் முடியின் மேலே முத்த ஊர்வலம் நடத்தினான். அப்படியே கழுத்திற்கு வந்தவன் காதை மெல்லிதாக கடித்தவாறே தாவணிக்கு அடியில், வெறும் வயிற்றில் கைகளை பதித்தான்.
அதற்கு மேல் பொறுக்காமல் வேகமாக அவன் கைகளை தட்டிவிட்டு மது திரும்பினாள். ஆனால் ஹேரி அவளை தள்ளி போக விடாமல் நடுவில் நிற்க வைத்து அவளுக்கு இருபுறமும் கிச்சன் மேடையில் கை வைத்து அவளை நெருங்கி நின்று கொண்டான்.
சிவந்திருந்த முகத்தால் அவனை முறைத்தவள் “ஒழுங்கா கைய எடு ஹேரி” என்று அவன் கைகளை பிடித்து தள்ளினாள். அசைக்க கூட முடியவில்லை. கைகளை அடித்து பார்த்தாள். தினமும் உடற்பயிற்சி செய்து எலும்பு நரம்பெல்லாம் முறுக்கேறியிருந்த கைகளை அடித்ததால் அவள் கைகள்தான் வலித்தது. இது என்ன கையா இல்ல உலக்கையா என்று அவன் ஆர்ம்ஸில் தட்டி பார்த்தாள். இரும்பு போல் இருந்தது.
அவளை பார்த்து சிரித்தவன் “நா விட்டாதான் உன்னால போக முடியும் பேபி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன. பூஜைக்கு முன்னாடி உன்ன டர்ட்டி பண்ண கூடாதுன்னு சொன்னல்ல. இப்ப பூஜை முடிஞ்சிட்டுல்ல. இப்ப டர்ட்டி பண்ணலாமா” என்று கேட்டான்.
“விளையாடாத ஹேரி. தள்ளு. போய் சாப்பிடலாம்”
“ம்ஹும் . நா டீசர்ட் கேட்டு அன்னைக்கு கொடுக்கலல நீ. அதுக்கு பனிஷ்மென்ட் பண்ணு . நா விட்டுடறேன்”
“என்ன பனிஷ்மென்ட்” என்று அவன் கைகளை தள்ளி கொண்டே கேட்டவளிடம் “நான்தானே உன்ன டர்ட்டி பண்ண கூடாது. நீ என்ன டர்ட்டி பண்ணு. நா உன்ன மாதிரி எச்சி எச்சினு சொல்ல மாட்டேன்”
ஹாங் என்று வாய் பிளந்து பார்த்தவளை பார்த்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் , “ம் குயிக், கிஸ் மீ பேபி” என்றான்.
“போடா” என்றவள் கைகளை கட்டி கொண்டு அவனை முறைத்து பார்த்து திரும்பி கொண்டாள்.
“ஒழுங்கா நீயா கிஸ் பண்ணிட்டா பரவால்ல பேபி. நா கொடுத்தேன்னு வச்சிக்கோ. எங்க கொடுப்பேன்னே தெரியாது. நீ கிஸ் பண்றியா. இல்ல நா பண்ணவா” என்றவனை பார்த்து அதிர்ச்சியானவள் “இப்ப சத்யண்ணா வந்துருவாங்க, அப்ப என்ன பண்ணுவ”
“நா விட்டாத்தான உன்னால டோர் ஓபன் பண்ண முடியும்” என்றவனை பார்த்து சிறிது நேரம் யோசித்தவள் அவனை முறைத்து பார்த்து கொண்டே அவனின் கன்னத்தில் மெதுவாக உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
ஒரு பட்டாம் பூச்சி கன்னத்தில் உட்கார்ந்து எழுந்திரித்தது போல் உணர்ந்தவன் கண்களை மூடி இன்னொரு கன்னத்தையும் காட்டினான்.
அதிலும் ஒரு முத்தத்தை வைத்தவள் கண்ணை மூடி ரசித்து நின்றிருந்தவனை பார்த்து “தள்ளு, அதான் கொடுத்துட்டேன் இல்ல” என்றாள்.
கண்களை மெதுவாக திறந்தவன் “எங்க பேபி. முத்தம் கொடுத்த. ஆனா உன் எச்சில் என் மேல படவே இல்ல. எனக்கு தெரியாது இப்ப உன்னோட எச்சில் என் மேல பட்டு நா டர்ட்டி ஆகணும்”
“முடியாது போடா. நீ ஏமாத்தாத. நா முத்தம் கொடுத்துட்டேன். அவ்ளோதான்”
“ம்ஹும் . உனக்கு கிஸ் பண்ணவே தெரியல பேபி. இப்ப பாரு” என்றவன் அவள் மச்சத்தில் அழுந்த இதழ்களை பதித்தான். கண்களை இறுக்கி மூடி கொண்டவளை பார்த்தவன் அமைதியாக நின்றிருந்தான்.
சிறிது நேரத்தில் மெதுவாக மது கண்களை திறந்த நேரத்தில் சட்டென்று அவளின் உதட்டில் அவன் உதட்டை பொருத்தினான். படபடவென்று அடித்து கொண்ட மதுவின் விழிகள் மெதுவாக மூடி கொண்டது. அவள் கைகள் மெதுவாக அவனை சுற்றி கட்டி கொண்டது. அதை உணர்ந்தார் போல் ஹேரியும் அவளை இறுக்கி கட்டி கொண்டான்.
பின்பு மெதுவாக உதட்டை பிரித்தவன் அவளை பார்த்தான். இன்னும் மது கண்களை திறக்காமல் மயக்கத்திலே இருந்தாள். அதை பார்த்து சிரித்து கொண்டே அவள் மச்சத்தை நாக்கால் எச்சில் பண்ணினான். பட்டென்று கண்ணை திறந்தவள் அந்த இடத்தை துடைக்க போனாள். அது தெரிந்தது போல் அவள் கையை பிடித்து தடுத்தவன், விடாமல் அவள் நெற்றி, கண், கன்னம் , மூக்கு என்று முகம் முழுவதும் முத்தத்தால் எச்சில் பண்ணிவிட்டு, “இப்ப என்ன பண்ணுவ பேபி” என்று கேட்டான்.
கண்களை திறந்து பார்த்து அவனை முறைத்தவள் , பட்டென்று அவன் கன்னத்தில் வலிக்குமாறு கடித்து வைத்தாள். அதை எதிர் பார்க்காதவன் ஆ என்று கன்னத்தை பிடித்தான். அந்த நேரம் அவனிடம் இருந்து தப்பித்து வந்தவள், பெட் ரூமிற்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.
(வருவாள்…)
error: Content is protected !!