Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ? ?

கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ ? – 1

கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ ?   – 1

 

 

அது  ஒரு  பிரபலமான  பொறியியல்  கல்லூரி,  இறக்கை  இல்லா பறவைகளான  மாணவர்கள்  கல்லூரி  முழுவதும்  சுற்றி  திரிந்தனர்.



Advertisement

இறுதி ஆண்டு சிவில் பிரிவு வகுப்பறை,

“ஹேய்  குண்டூஸ்,  என்ன  கிளாசுக்கு  சீக்கிரம்  வந்துட்ட? எப்பவும்  சார் வந்து  பாடம்  ஆரமிச்சு  முடியும்  போது  தான்  வருவ ”  என கேட்டான் கவின்.

“ போடா  குரங்கு , இன்னைக்கு  நம்ம  கிளாஸ்கு  பிளேஸ்மென்ட்  கிளாசுக்கு புது  சார்  வராராம். அவர்  செம  ஸ்மார்டா  இருக்காராம்  தெரியுமா? ” என பதில் கூறினாள்  அவனால்  குண்டூஸ்  என்று  அழைக்கபட்ட  அனு.

Advertisement

“அதான  பார்த்தேன்  நீயாவது  கிளாசுக்கு  சீக்கிரம்  வரதாவது.  நீயெல்லாம் எதுக்குடி  காலெஜில்  சேர்ந்து  ஒரு  சீட்  வேஸ்ட்  பன்ற.  நல்லா  சாப்பிட வேண்டியது  நைட்டு  முழுதும்  கொரியன்   சீரிஸ்  பாக்க  வேண்டியது காலைல  லேட்டா  எழுந்து  கிளாசுக்கு  லேட்டா  வர  வேண்டியது” என பொங்கிவிட்டான்  கவின்.

Advertisement

“டேய்  நான்  என்ன  ஆசப்பட்டா  படிக்க  வந்தேன்.  எங்க  ஊர்லயே  நான்  தான்  பெரிய  படிப்பு  படிக்கனும்னு  என்  அப்பா  தான்  என்னை  கதற கதற சேர்த்து   விட்டுட்டு  போனாரு. அப்பறம்  நேத்து  கொரியன் சீரியஸ் இல்ல சைனீஸ்;” என கூறினாள் அனு. இவர்கள்  உரையாடலை  புன்னகையுடன் கேட்டு  கொண்டிருந்தாள்  நம்  நாயகி  ஆதினி.

ஒரு சின்ன அறிமுகம்

ஆதினி, அனு ,கவின் மூவரும் கல்லூாயில் சேர்ந்த முதல் நாள் முதல் இன்று வரை தொடர்கிறது இவர்களின் நட்பு.

Advertisement

கவின்  அப்பா  மிலிட்டடரியில்  பணி  புரிந்தவர்  தற்போது  விருப்ப  ஓய்வு பெற்று  விட்டார். மிலிட்டடரி  பள்ளியில் படித்ததாலோ அல்லது தன் அப்பவை பார்த்து  வளர்ந்ததாலோ  கவின்  எப்பொழுதும்  ஒழுங்கு  கடைபிடிப்பான். அவன்  தான்   அவர்களின்  வகுப்பு  பிரதிநிதி.  முதல்  வருடத்தில்   இருந்து அந்த பொறுப்பை சிறப்பாக செய்து வருகிறான்.

அனு,  பிறந்தது  வளர்ந்தது  அனைத்தும்  கிராமத்தில்  தான்.  அப்பாவின் ஆசைக்காக  பெரிய  நகரத்தில்  உள்ள  இந்த  கல்லூாயில்  சேர்ந்தாள். ஆரம்பத்தில்  அவள்  மிகவும்  சிரமபட்ட  போது  அவளுக்கு  உறுதுணையாக இருந்து  அரியர்  இல்லாமல்  அவளை  கடைசி  வருடம்  வரை கொண்டு சேர்த்தது  அவள்  நண்பர்கள்  தான்.  அதனாலே அனுவின் அப்பாவிற்கு அவர்கின் மீது தனி அன்பு உண்டு.;. அவளுக்கு என்று தனியாக ஆசைகள் கிடையாது. நண்பர்களொடு மகிழ்சியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

ஆதினி,  பிறந்த்து  வளந்தது  அனைத்தும்  அமெரிக்காவில்  தான். ஆனால் தமிழ் பெண்ணாகவே வளர்ந்தாள். தமிழ்நாட்டில் படிக்க விரும்பியே இந்த கல்லூரியில் சேர்ந்தாள். அன்னை  உயிரோடு  இல்லை.தந்தை  அமெரிக்காவில்  தொழில் செய்கிறார். ஆதினியும் அனுவும் சேர்ந்து செய்யும் குறும்புகள். ஏராளம். கவின் தான்  அவர்களை   பிரச்னையின்றி  காப்பாற்றுவான். சில  சம்பவங்கள் அவள் வாழ்வையே  மாற்றி  விட்டது. தன்  இயல்பை  தொலைத்து  நண்பர்களுக்காக சிரிக்கிறாள். அவள்  மாற்றத்திற்கு  காரணம்  தெரியாமல்  தன் நண்பியை பழையபடி  மாற்ற  முயன்று கொண்டிருக்கிறார்கள் கவினும் அனுவும்.

கவின்  அவளை  மண்டையில்  கொட்டிவிட்டு  தன்  இருக்கையில்  அமர்ந்தான்.

“டேய்  குரங்கு  நீ   கொட்டி  கொட்டியே  நான்  குள்ளமாய்ட்டேன்டா, பாரு ஆதி.” என ஆதினியிடம் முறையிட்டாள். அவள் பதில் கூறும் முன் அவர்களின் ஹெச்.ஓ.டி (சிவில் பிரிவு தலைவர்) வந்துவிட்டார்.

“குட் மார்னிங்; சார்;” என அனைவரும் எழுந்து நின்றனர்.

“குட் மார்னிங், சிட் டவுன்”  என கூறியவுடன் அனைவரும் அமர்ந்தனர்.

“இவரு  ஏண்டி  வந்துருக்காரு? நமக்கு  இந்த  ஹவர்  புது  சார்  தான  வரணும்.” என கேட்டாள் அனு.

“நான்  சார்ட்ட  கேட்டு  சொல்லட்டுமா” என கேட்டாள் ஆதினி. “ ஏண்டி  உனக்கு இந்த  கொலவெறி,  இவர்  கிளாசுனு தெரிஞ்சிருந்தா மிச்சம் இருந்த 2 எபிசொட்  பாத்துட்டு  வந்திருப்பேன்” என புலம்பிகொண்டிருந்தாள் அனு.

“அனு  வாட்  இஸ்  யுவர்  ப்ரோப்ளெம் , வொய்  ஆர்  யூ  டிஸ்டர்பிங்க்   தி கிளாஸ் ?”  என கோபமாக கேட்டார் ஹெச்.ஓ.டி.

“சாரி சார் ,பிளேஸ்மென்ட் கிளாசுக்கு புது சார் வரலையானு ஆதி கேட்டா சார்” என ஆதினியை மாட்டி விட்டாள். “அடிப்பாவி” என ஆதினி எழுந்து நின்று பதில் சொல்லும் முன்.

“என்  வரவை  ரொம்ப  ஆர்வமா  எதிர்பார்த்துட்டு  இருந்தீங்களா  ஆதினி” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் அவன்.

அவனை  அங்கு  நிச்சயமாக எதிர்பார்க்க வில்லை ஆதினி   யாரை விட்டு விலகி செல்ல வேண்டும் என நினைத்தாளோ  அவனே  இப்போது கண்முன்னே நிற்கிறான்.

 

சிலையென நின்றவளை கலைத்தது அனுவின் குரல்

 

“ஹே ஹீரோ வந்துட்டாருடி , நான் சொன்ன ப்ளஸ்ட்மென்ட் சார் இவர் தான் .”  என ஆதினிக்கும் மட்டும் கேட்கும் படி கூறினாள்.

அதற்குள்  ஹெச் ஓ டி தன் உரையை தொடங்கினார் “மை டியர் ஸ்டுடென்ட்ஸ் placement   கிளாஸ்  உங்களுக்கு எடுக்க போறது ஒன்  ஆப்  மை  பெஸ்ட்  ஸ்டுடென்ட் மிஸ்டர்  பாரி வேந்தன்.  லெட்   கிவ்   ஹிம்  வார்ம் வெல்கம்” என கூறியவுடன் அனைவரும் கை தட்டி வரவேற்றனர் . “பாரி உங்க எல்லோருக்கும் நிச்சயம் உங்களுக்கு முன்னோடியா இருப்பான். ரொம்ப  நாளா    இல்ல  ரொம்ப வருடமா பாரிய  நான்  கிளாஸ்  அல்லது  ஸ்பீச்  குடுக்க  சொல்லி  கூப்பிட்டேன்  பட் அவனால வர  முடியல. பட்  உங்க பேட்ச் ரொம்ப லக்கி அவனே கால் பண்ணி ஒரு மாசம்  உங்களுக்கு  ட்ரைனினி  தரேன்னு சொல்லி இருக்கான் . இந்த வாய்ப்பை சரியா உபயோக படுத்திக்கோங்க.” பாரி  இப்ப   ஒரு   பெரிய   கன்ஸ்டரக்ஷன்    கம்பெனி வச்சிருக்கான், A .P .CONSTRUCTIONS  நீங்க கேள்வி பட்டு இருப்பிங்க ” என  அவர்  உரையை தொடர்ந்து கொண்டே இருக்க ” சார்   இதுக்குமேல   என்  புகழ்  பாடுன  பசங்க தூங்கிடுவாங்க  சார் ”  என கூறி அவர்  உரையை நிறுத்தி விட்டான் பாரி.  ஹெச் ஓ டி  சிரித்து  விட்டு வகுப்பை அவனிடம்  ஒப்படைத்து   விட்டு  சென்று  விட்டார்.

 

ஹாய் பிரண்ட்ஸ் , சார் என்ன பத்தி கொஞ்சம் அதிகமா சொல்லிட்டாரு , நான்  சிவில்  இன்ஜினியரிங்  படிச்சதுக்கு காரணம்  எனக்கு  சின்ன  வயசுல  இருந்து  கட்டடங்கள் மீது  இருந்த   காதல்  தான் , நீங்க   எதுக்காக  படிச்சீங்கன்னு   தெரிஞ்சுக்கலாமா   என  கேட்டு தொடங்கியவன்தான்  அதன்  பிறகு  அவன்  பேச்சுக்கு மகுடிக்கு அடங்கிய பாம்பு போல மாணவர்கள் மயங்கி கேட்டு  கொண்டிருந்தனர், மாணவிகள்  சொல்லவே தேவை   இல்லை   இமைகள்  கூட  சிமிட்டாமல் வகுப்பை கவனித்து  கொண்டிருந்தனர்,அதில்  நம் அணுவும் அடக்கம்,  ஆதினி  தான்  இன்னும்  அதிர்ச்சியில்  இருந்து மீளாமல் இருந்தாள்.

” சொல்லுங்க ஆதினி நீங்க  உங்க லைப்ல பார்த்த   சிறந்த கட்டிடம்  எது  என்று  நினைக்கிறீங்க?” என பாரி கேட்டவுடன் .  சட்டென்று யோசிக்காமல் ” மை ஹோம் ” என கூறியவுடன் தன்னை மீறி அவள் கண்கள் கலங்கி விட்டது .

அவளின் பதிலில் அவனும் ஒரு நொடி கலங்கிவிட்டான் . உண்மைதானே  அவள் கூறியது போல் அவ்வீட்டை பார்த்தவர்கள் அதன் அழகை வியக்காமல் இருக்க மாட்டார்கள். சட்டென தன்னை சுதாரித்து கொண்டு  ” குட் ,சீட்  டவுன்” என கூறி சென்று விட்டான். பின் வகுப்பு முடியும் வரை அவள் புறம் திரும்பவே இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!