Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 16

அத்தியாயம் – 16

 

விக்ரம் மித்ராவை பார்த்துக் கொண்டே இருக்க, வேலை இருப்பதாக கூறி மித்ரா தன் பாட்டியுடன் வீட்டுக்கு சென்று விட்டாள்.கவி ரகு விக்ரம் மூவரும் நண்பர்கள் பட்டாளத்தை பார்த்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

 



Advertisement

 

“கவி உங்கள இங்க பார்த்தது ரொம்ப ஹேப்பியா இருக்கு,உங்க மூணு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணோம், நல்ல வேளை நீங்களே வந்துடிங்க, ப்ளீஸ் பா எங்களோட டுடேஸ் இங்க ஸ்டே பண்ணுங்க” என்றாள் ரிங்கு.நண்பர்களும் அதையே ஆமோதித்தனர்.

 

Advertisement

விக்ரமிற்கோ மித்ராவை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. நண்பர்கள் தங்குமாறு கூறியதும் அவனுக்கும் ஆசையாக தான் இருந்தது. இருந்தும் அவனது அம்மா அனுமதிக்க மாட்டார் என்பதால் கவலையுடன் நின்று இருந்தான். ரகு நண்பர்களுடன் இருக்கப் போவதாக கூற கவியும் தானும் இருக்கப் போவதாக கூறினாள்.

Advertisement

 

 

 கவி உடனே தனது தாய் தந்தையிடம் சென்று அனுமதி கேட்க அவர்களும் சிறிது நேரம் யோசித்து விட்டு பின் அனுமதி அளித்தனர். வாசுகி தான் கவியை தனியாக அனுப்ப மனமில்லாமல் விக்ரம் ரகு இருவரையும் அவளுடன் இருக்குமாறு கூறினார். வாசுகி கூறியதை கேட்டு விக்ரம் சிறகு இல்லாமல் வானத்தில் பறந்து கொண்டு இருந்தான்.

Advertisement

 

 

 இவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அனைவரும் பாட்டியின் வீட்டுக்கு சென்றனர். மித்ராவின் குடும்பத்தினர் அனைவரும் அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்று இருக்க.வினித் சஞ்சய் கௌதம் கௌஷிக் நால்வரும் பாட்டியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

 

 நண்பர்கள் அனைவரும் வந்ததும் பாட்டி அவர்களை வரவேற்று அமருமாறு கூறினார். பின் “ராஜாத்தி உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க பாரு அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாடா” என்றார்.விக்ரம் மித்ரா எப்பொழுது வருவாள் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மித்ரா கையில் ஜூஸ் டிரைவை வைத்துக் கொண்டு மெதுவாக அன்னநடையிட்டு வந்தாள்.அதை பார்த்த விக்ரம் திருமணத்திற்கு மித்ராவை பெண் பார்க்க வந்திருப்பதைப் போல் கனவு கண்டுக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது “பாட்டி எனக்கு பொண்ண பிடிச்சிருக்கு எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று ஒரு ஆண் குரல் கேட்க அதிர்ச்சியுடன் விக்ரம் திரும்பி பார்த்தான்.

 

 

கெளதம் தான் மித்ராவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். “உன் படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சிக்கலாம் கெளதம் இன்னைக்கே ஜான்சிக் கிட்ட பேசிறேன்” என்றார் பாட்டி. விக்ரமுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது.

 

 

“அய்யோ பாட்டி இந்த அரக்கிய என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் சும்மா தான் சொன்னே” என்றான் கெளதம் வேகமாக.

 

 

“டேய் என்ன பார்த்தா அரக்கின்னு சொன்ன உன்னை” என்று கூறி கெளதமின் தலைமுடியை பிடித்து மாவு ஆட்டி விட்டாள் மித்ரா.

 

 

“ரிங்கு யாரு அந்த பையன்”என்றான் விக்ரம்,அவன் அருகில் அமர்ந்து இருந்த ரிங்குவிடம் மெதுவாக.

 

 

“அவன் கெளதம் மித்ரா ஓட அத்தை பையன்,MBBS நாலாவது வருஷம் படிக்கிறான் ” என்றாள்,ரிங்கு இவர்கள் மூவரையும் மித்ராவின் சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

 

 

“ரகு நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க சாரிபா,நான் உங்களை கவனிக்காம போயிட்டேன்” என்று கூறி மற்றவர்களுக்கும் ஜூசை கொடுத்தாள்.

 

 

 மித்ரா விக்ரமுக்கு ஜூஸை கொடுக்கும்போது மித்ராவை வைத்த கண் வாங்காமல் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் இருந்த வித்தியாசத்தை மித்ரா உணர்ந்து கொண்டாள்.

 

 

“என்ன இது இவன் இப்படி நம்மள திங்கிற மாதிரி பார்க்கிறான், இதுக்கு முன்னாடி எல்லாம் நம்மள இந்த மாதிரி பார்த்ததில்லையே” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே சென்றாள். விக்ரமின் நடவடிக்கையில் இருந்த வித்தியாசத்தை ஸ்ரேயா மற்றும் ரகு பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

 பின் அனைவரும் ஒன்றாக நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டு உணவருந்தி கொண்டிருந்தனர். மித்ரா அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். விக்ரமின் கண்கள் மித்ராவை விட்டு நகலவே இல்லை.

 

 

“மித்ரா நீ எங்களோடவே உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே” என்றான் அர்ஜூன்.

 

 

“இல்லடா நீ சாப்பிடு நான் அம்மா வந்ததும் அவங்களோட சேர்ந்து சாப்பிடுகிறேன்” என்றாள் மித்ரா. சற்று நேரத்தில் மித்ராவின் அம்மா அப்பா சித்தி சித்தப்பா ஜான்சி அனைவரும் வந்துவிட. மித்ரா அவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள். சகுந்தலா தன் மகளுக்கு அவர் கைகளாலே ஊட்டி விட்டார்.

 

“ஆன்ட்டி மித்ரா என்ன இன்னும் சின்ன குழந்தையா அவளுக்கு ஊட்டி விட்டுகிட்டு இருக்கீங்க” சரண்.

 

 

“என் பொண்ணுக்கு எத்தனை வயசு ஆனாலும் அவள் எனக்கு சின்ன குழந்தை தான்” என்று கூறி மகிழ்ச்சியுடன் மகளுக்கு ஊட்டி விட்டார் சகுந்தலா.

 

 

“மச்சான் அம்மா எப்பவுமே இப்படித்தாண்டா,அம்மாவுக்கு மித்து தான் உயிரே. அவள விட்டு ஒரு நிமிஷம் கூட அம்மா இருக்க மாட்டாங்க. அம்மா அவங்க வேலைய கூட பாக்காம மித்து பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பாங்க, இந்த அம்மா பொண்ண தொல்லை தாங்க முடியாம தான் கிராணி மித்துவ ஹைதராபாத்துக்கு படிக்க அனுப்பி வச்சிட்டாங்க” என்றான் வினித் சரணிடம்.

 

 

“அவங்களுக்கு ஒரு பையன் இருக்கிற ஞாபகமே இருக்காது மச்சான், மித்ரா ஊருக்கு வந்துட்டா போதும் அம்மாவ கைல புடிக்க முடியாது” வினித். மித்ராவிற்கு சகுந்தலா உணவு ஊட்டிவதை பார்த்து விக்ரமிற்கு மிகவும் ஏக்கமாக இருந்தது. தனது அன்னை இது போல் ஒரு நாள் கூட ஊட்டிவிட்டது இல்லையே என்று நினைத்து வருந்தினான்.

 

மாலையில் இசை கச்சேரி இருப்பதால் பாட்டி அனைவரையும் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு கூறினார். நண்பர்கள் அனைவரும் மாடிக்கு சென்று அந்த பெரிய அறையில் இருந்த மெத்தைகளில் படுத்து பேசிக்கொண்டே இருந்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கி விட்டனர். விக்ரம் மட்டும் மித்ராவை நினைத்துக் கொண்டிருந்தான்.

 

 

 மாலை அனைவரும் கிளம்பி கச்சேரி நடக்கும் சபைக்கு வந்தனர். மித்ரா அவர்களுடன் வராததால் “அர்ஜுன் மித்ரா எங்க நம்மளோட வரவே இல்லை” என்றான் விக்ரம்.

 

 

“அவ ரூம்ல இருக்க சீனியர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா” அர்ஜுன்.

 

 

“ஆமா இப்ப இங்க என்ன நிகழ்ச்சி நடக்க போகுது நாம் எதுக்கு இங்கே வந்து இருக்கோம்” விக்ரம்.

 

 

“என்ன விஷயம்னே தெரியாமலே இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்களா சீனியர் நீங்க, அப்போ உங்களுக்கு சர்ப்ரைஸ் ஆகவே இருக்கட்டும் நீங்களே வெயிட் பண்ணி பாருங்க” நிகில்.

 

 

 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 வயது மிக மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கர்நாடக சங்கீதத்தில் ஒரு பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து சிவப்பு வண்ண பட்டுப்புடவை அணிந்து வானுலக தேவதை போல் அழகாக வந்தாள் மித்ரா.அவளை பார்த்ததும் கரகோஷம் எழுப்பி அவளை வரவேற்றனர்.சபையில் இருந்த அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு அமர்ந்து வீணையை இசைத்து கொண்டே 

 

“அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே – உன்

திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை

எனக்கு அளித்து மகிழ்த்தவா – ஒரு

தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென

இணையறு கழல் எனக்கு அளித்தவா

கதறி மனமுருக நான் அழைக்கவோ

இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ

இது தருமம் தானோ

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே

மனதில் வேதனை மிகவொடு” 

 

என்று படிக்கொண்டே இருக்க ஏதோ புதுவிதமான உணர்வு ஒன்று மித்ராவிற்கு தோன்ற தலையை நிமிர்த்தி பார்க்க அங்கு விக்ரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவனது பார்வை பெண்ணவளுக்கு முதல்முறையாக வெட்கத்தை வரவழைத்தது. அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

 

 

 மித்ராவின் பாடலைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து அவளை பாராட்டி அவளுக்கு பரிசு பொருட்களை அளித்தனர்.

 

 

 இரவு வீட்டிற்கு வந்து உணவு உண்டு முடித்துவிட்டு நண்பர்கள் அனைவரும் தோட்டத்தில் கேம்பயர் பற்ற வைத்து அதை சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மித்ரா மட்டும் அங்கு இல்லை.

 

 

“என்ன ஸ்ரேயா சென்னையில இருக்கும்போது மூணு பேரும் ஒண்ணாவே இருப்பீங்க, இங்க வந்த அப்புறம் உங்க பிரண்டு உங்க கூட இருக்கவே மாட்டேன்கிற ஏன்” விக்ரம்.

 

 

“அது அப்படி தான் விக்ரம் மித்ரா ஃபேமிலி ரொம்ப பெருசு, அவங்களை எப்பயாது தான் மித்ரா மீட் பண்றா,அப்போ அவங்களோடையும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் இல்ல, எங்களுக்கு பழகிப்போச்சு, இவ்வளவு நேரம் அவ எங்களை விட்டு இருந்ததே பெருசு எப்படியும் வந்துருவா இன்னும் கொஞ்ச நேரத்துல” என்று ஸ்ரேயா சொல்லிக் கொண்டிருக்கும்போதே.

 

 

“ஹாய் பிரண்ட்ஸ் , எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கத்திக் கொண்டே வந்தாள் மித்ரா.

 

 

“நான் தான் சொன்னேன்ல விக்ரம் அவ கொஞ்ச நேரத்துல வந்துருவான்னு” ஸ்ரேயா கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

 

 

“ஏன் பேபி வர இவ்வளவு டைம் ஆகிருச்சு” ரிங்கு.

 

 

“என் அம்மாவ தூங்க வச்சுட்டு வர கொஞ்சம் லேட் ஆச்சு பேபி” என்று கூறிக் கொண்டே கவி அருகில் அமர்ந்தாள். விக்ரமை நேராக பார்ப்பதை தவிர்த்து ஓர கண்ணால் பார்த்தாள். விக்ரமும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன சீனியர் மித்ராவையே வச்ச கண் வாங்காமல் பாத்துட்டு இருக்கீங்க” என்றான் அர்ஜூன்.

 

 

“இது மித்ரா தானா இல்ல வேற பொண்ணானு பாக்குறேன், பாவாட தாவணில பாக்க பொண்ணு மாதிரியே இருக்காள மித்ரா” என்றான் விக்ரம் சமாளிப்பாக.

 

 

 நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மித்ராவிற்கு இது போன்ற உடைகள் தான் அழகாக இருக்கிறது என்று கூற “அதுக்காக டெய்லி காலேஜுக்கு பாவாட தாவணியே வர முடியுமாடா” என்றாள் மித்ரா.

 

 

“லூசு உன்ன பாவாடை தாவணியில வர சொல்லலடி கொஞ்சமாது பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு வா என்று தான் சொல்கிறோம், கவிதா, கனி, சுருதி மாதிரி டிரஸ் பண்ணிட்டுவா அதுதான் உனக்கு அழகா இருக்கும்” என்றான் சரண்.

 

 

“ஓகே டா எருமை, நீங்களாம் சொல்றதுனால இனிமேல் பொண்ணுணுணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு வரேன் சரியா” என்றால் மித்ரா இழுத்துக் கொண்டே.

 

 

 இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அனைவரும் உறங்குவதற்காக மாடிக்கு செல்ல கடைசியாக சென்ற விக்ரம் படி ஏறும் போது மித்ராவின் கையை பிடித்து இழுத்தான். விக்ரமைப் பார்த்து அதிர்ச்சியாக “என்ன” என்றால் இதுவே முதல்முறை விக்ரம் மித்ராவை தொட்டு பேசுவது.

 

 

“பாவாடை தாவணில நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க மித்து” என்றான் விக்ரம் கண்களில் காதல் மின்ன,கிறக்கமான குரலில்.

 

 

 விக்ரம் கூறியதை கேட்டு வெட்கம் கொண்ட மித்ரா அவன் கையை உதறிவிட்டு மாடிக்கு சென்று விட்டாள். மித்ராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து இருந்தது.

 

 

“பேபி என்னாச்சு ஏன் கன்னம் இப்படி சிவந்து இருக்கு” என்றாள் ஸ்ரேயா.

 

 

 மித்ரா விக்ரம் கூறியதை மறைக்காமல் ஸ்ரேயாவிடம் கூறினாள். “நானும் பார்த்தேன் பேபி விக்ரம் உன்ன பாக்கிறதே சரியில்ல, நான் நினைக்கிறேன் விக்ரமுக்கு உன் மேல ஃபீலிங்ஸ் வந்துருச்சினு” என்றாள் ஸ்ரேயா.

 

“அப்படிலாம் ஏதும் இருக்காது ஸ்ரே நீயா ஏதாவது நெனச்சிட்டு பேசாத” என்றாள் மித்ரா.

 

 பின் அனைவரும் அவரவர் இடங்களில் தூங்கி விட விக்ரம் மித்ராவிற்கு எதிரே அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தூங்கினான். 

 

“இரவில் தூங்கும் போது கடைசியாக பார்க்கும் முகம் உன் முகமாகவே இருக்க வேண்டும்,  

 

காலையில் எழுந்ததும் பார்க்கும் முதல் முகம் உன் முகமாகவே இருக்க வேண்டும்

 

 அதற்கு என்றென்றும் என்னோடு நீ வேண்டும் அன்பே” என்று மனதினுள் நினைத்தான்.

 

 விக்ரமுக்கு நண்பர்களுடன் வெளியில் தங்குவது இதுவே முதல் முறை. பள்ளி கல்லூரிகளில் கூட சுற்றுலா செல்வதற்கு வாசுகி அனுமதித்ததில்லை, இரவில் எப்போதும் தனிமையிலேயே உறங்கிப் பழகியவனுக்கு இன்று நண்பர்கள் சூழ உறங்குவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு எதிரே உறங்கிக் கொண்டிருந்த மித்ராவையே உறங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

“என் வாழ்க்கையில நீ வந்த பிறகுதான் மித்ரா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் ஆயுள் முழுக்க என் கூடவே நீ இருக்கணும் அம்மு, இருப்பையாடி நீ” என்று மனதிற்குள்ளேயே அவளுடன் பேசிக்கொண்டு அப்படியே உறங்கி விட்டான்.

 

 

 மறுநாள் காலை எழுந்து நண்பர்கள் அனைவரும் தஞ்சாவூரை சுற்றி இருந்த கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.இரவு அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர். விக்ரமுக்கு வீட்டிற்கு செல்லவே விருப்பமில்லை. இப்படியே மித்ராவுடனும் நண்பர்களுடனும் இருக்கவே விருப்பப்பட்டான் அதை ரகுவிடமும் மறைக்காமல் கூறினான்.

 

 

 சிறு வயதில் இருந்தே விக்ரமை பார்ப்பதாலும் அவன் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் இவனுக்கு தெரியும் என்பதாலும் இனிமேலாவது நண்பனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று விக்ரமிற்காக ரகு கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!