மகள் கல்யாணத்தை கண்ணாரப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு அதீத சந்தோசத்தில் ஆனந்தக் கண்ணீர் அது பாட்டுக்கு வழிய நெஞ்சம் நிறைந்து கிடந்தது.
Advertisement
எத்தனை பேச்சுக்களை கேட்டிருப்பார் இந்த திருமணம் நிச்சயம் செய்ததிலிருந்து.
ஒரு சிலர் வேண்டுமென்றே வாசனின் முதல் காதல் தோல்வியை கோடிட்டு காட்டி அவனைப் பற்றி தவறாக சொல்லியதும்,இன்னும் சில சொந்தங்கள் மகள் நிறத்தை குறையாய் பேசியதும் என அந்த தாயுள்ளத்தை கலங்கப் படுத்திருந்தனர்.
Advertisement
Advertisement
இன்று காலையிலுமே இவர் அண்ணனின் மனைவி,
“ஹூக்கும்!வேதவிக்கு வாழ்வு தான். என்னதான் வசதி இல்லன்னாலும் அவன் அழகு பார்த்து தான் கட்டி கொடுத்திருக்காங்க”என வேண்டுமென்றே சொந்தங்களிடம் நையாண்டி பேசியிருந்தார்.
Advertisement
‘தன் பெண்ணுக்கு என்ன குறை’என கேள்வி கேட்க சரஸ்வதிக்கு துறுதுறுத்தாலும் கல்யாணத்தில் கலகம் எதற்கென அப்போதைக்கு அமைதியாய் இருந்தார்.
அவர்கள் பொறாமையை இப்படி காட்டுகிறார்கள்!அதற்காக தன் மகளின் திருமணத்தில் தான் சுணக்கமாக இருக்க முடியுமா? யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளவில்லை அவர்.
இந்த ஒரு திருமணத்திலே சொந்தங்களின் உண்மை முகம் தெரிய வந்து அத்தனையும் வெறுத்திருந்தது.
தேவையில்லாத எண்ணங்களை விரட்டி அடித்து விட்டு மணமேடையை பார்த்தார் சரஸ்வதி.
மணமக்கள் ஜோடி அத்தனை பொருத்தமாய் இருந்தனர்.
“நானே கண்ணு வெச்சுட்டேனே. இரண்டு பேருக்கும் சுத்திப் போடணும்” என தனக்கே சொல்லிக் கொண்டார்.
“அடியே! அவ இப்ப தான் பத்தொன்பதுல நிக்கறா” என்றார் அதிர்ச்சி மாறாத குரலில்.
மனைவி சிரிப்பை அடக்குவது கண்டு முறைத்த சத்யநாதன்,
“கூறு கெட்டவ, என்னை பதட்டப்படுத்தவே இருக்கா” என முணுமுணுத்துக் கொண்டார்.
அமரேசன் இவர்களை கூப்பிடவும், கணவனை அழைத்து கொண்டு வந்தவர் மணமக்கள் அருகில் நெருங்கி ஆசீர்வாதம் செய்தனர்.
அமரேசன் தம்பதிகளுக்கும் மகன் திருமணத்தை கண் குளிர பார்த்ததில் மனம் நிறைந்திருந்தது.
மகனை அணைத்துக் கொண்டார் அமரேசன்.
இங்கோ,தாயை கட்டிப் பிடித்து ஒரே அழுகை வேதவி. தன்னை அத்தனை திடமாய் காட்டிக் கொண்டிருந்தவள் தான் சத்யன் அருகில் வந்து மகள் தலையில் நெகிழ்ச்சியாய் கை வைத்ததும் கண்ணெல்லாம் கலங்கி விட்டது பெண்ணுக்கு.
ஓரடி தள்ளி நின்றே பாசத்தையும் கண்டிப்பாய் காட்டும் தந்தை இப்படி தன்னையே பார்த்து நின்றதில் அவர் கையையும் பற்றிக் கொண்டாள், சத்தமின்றி அழுகையுடன்.
“பக்கத்துல தானே இருக்கீங்க வேதா. நாங்கெல்லாம் வந்து பார்க்க மாட்டோமா!”என அதையும் அதட்டித் தான் சொன்னார் மனிதர்.
சிரிக்க முயன்றபடி கன்னத்தை துடைத்துக் கொண்டவளின் வலது கரத்தை இயல்பாய் பற்றி அவளருகில் நின்று கொண்டான் கீர்த்தி வாசன்.
“வேதவிய நான் பார்த்துக்கறேன் மாமா”என புன்னகையுடன் கூறியவன் மனைவியையும் பார்த்து புன்னகைத்து கண்களால் ஆறுதல் செய்தான்.
இதையெல்லாம் சிறு முறுவலுடன் பார்த்தபடி தன் ஃபோனில் கிளிக்கிக் கொண்டிருந்தான் தமிழ்க் கனியன்.
சிவகுமரன் மாப்பிள்ளைத் தோழனாக வந்திருந்தான். வேதவி வீட்டு ஆண்களுடன் ஏற்கனவே பழக்கமிருந்ததால் கனியன் மட்டுமே புதிதாய் அறிமுகம்.
வாசனும் அதைத் தான் விரும்பிருக்க, மணமக்களுக்கு மண்டபத்திலே சின்னதாய் போட்டோ ஷூட்!
அதன் பின்,திருமண சடங்குகள் முடிந்ததும் மண்டபத்திலிருந்து நேரே வாசன் வீட்டிற்கு வந்திருந்தனர் மணமக்கள்.
மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரவழைத்த மேகலை மருமகளை சாமியறை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார்.
இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து வேதவியை சௌந்தர்யாவின் அறைக்குள் விட்டனர்.
வேதவி வீட்டினராக சங்கரியும் அவரது இரு மருமகள்களும் வந்திருக்க, மணிமேகலையுடன் சங்கரி பேசிக் கொண்டிருக்க, ரதியும், சுஜியும் வேதவியோடு இருந்தனர்.
அட்டேச் பாத்ரூம் அற்ற மூன்று படுக்கையறை, சமையல் அறை, ஓய்வறை, கூடம், சாமியறை என மாடி வீடு அல்லாத அவ்வீட்டை பார்த்த ரதிக்கு, வேதவியை நினைத்து யோசனை தான்.
சங்கரி வீடும் இது போல தான்.. ஆனால் சரஸ்வதியினது மாடி வீடு.
இவ்வீடு அமரேசனுக்கு உரியது என்றாலும் பொறுப்பு அவர் பெரிய மகன் கிருஷ்ணனிடம். அமரேசன் தம்பதிக்கு ஒரு அறையும் மற்றது கீர்த்தி வாசனது.
அதே வளவிற்குள் சற்று தள்ளி பரதனின் வீடிருந்தது. அதே ஏரியாவில் விஜயாவும் குடியிருக்க கௌசல்யா பெருந்துரையில் திருமண முடிந்திருப்பதால் அங்கு தான் அவளின் வாசம்.
“என்னண்ணி பார்க்கறீங்க?” என அங்கு சுற்றிமுற்றி பார்த்திருந்த ரதியிடம் கேட்டாள் வேதவி.
“சின்ன வீடு தான் போல நீ அட்ஜஸ்ட் பண்ணிப்பியா வேதவி?”என்றாள் ரதி.
“அதெல்லாம் பண்ணிப்பேன் ண்ணி!”
“….”
“எங்க வீடு மாடி வீடுன்னாலும் மேல் புளோர் யூஸ் பண்ணிக்கிறது இல்லையே அண்ணி! உங்களுக்கு தெரியாததா?ஆனா,எனக்கு இப்படித்தான் இருக்கனும்னெல்லாம் இல்லைண்ணி”என்ற வேதவி,
“அவங்க வீடு இப்படித்தான் வாசனும் எங்கிட்ட சொல்லிருந்தாங்க. கிருஷ்ணா மாமாவும் தனிக்குடித்தனம் போக ஈரோடுல தான் எங்கையோ பெருசா வீடு கட்டிட்டு இருக்காகங்ன்னு சொன்னாங்க”என்றாள் கூடுதலாய்.
மென்நகையுடன் புரிந்ததாக தலையசைத்த ரதி,
“பாருங்களேன் சுஜிக்கா. கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம பொண்ணுக்கு பொறுப்பு வந்துடிச்சு”என வேதவியைக் கேலி செய்தாள்.
சுஜித்ரா சிரிக்கவும் அண்ணிகளை போலியாக முறைத்த வேதவி, காபி கப்புக்களோடு அங்கு வந்த சௌந்தர்யாவைக் கண்டு எழுந்து நிற்க,
சுஜித்ரா ஒப்பாக தலையசைக்க, வேதவிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. அவர்களை புரிந்து கொள்ள வேண்டியும் இருந்தது.
மாலை மங்கி இரவும் வந்து விட, சற்று நேரம் தூங்கி எழுந்த வேதவியை இரவுக்காக ஆயத்தம் செய்தனர், அவளது அண்ணியர்.
குளித்து வந்தவளுக்கு புது புடவை அணிவித்து தலையில் பூ வைத்து விட்டனர். சுஜி ஒப்பனை செய்ய வர வேண்டாமென மறுத்து விட்டாள்.
அனைவரும் இரவுணவுக்கு கூடம் வர அப்போது தான் கணவனை கண்டு கொண்டாள் வேதவி. அதுவரையிலும் அவனை பார்த்திருக்கவில்லை அவள். எங்கே என மனம் தேடினாலும் இருந்த அலுப்பிலும், தயக்கத்திலும் யாரிடமும் கேட்கத் தெரியவில்லை. ஆனால் இவள் தூங்கிருந்த சமயம் அவளைப் பார்த்து விட்டுத்தான் சென்றிருந்தான் வாசன்.
கீர்த்தி பக்கத்தில் வேதவியை அமர வைத்து ஒன்றாக உணவு பரிமாறினார் மேகலை.
மகனிடம், “சாப்பிடுப்பா கீர்த்தி. வேதாக்கும் என்ன புடிக்கும்னு கேட்டு சொல்லு” என்றார்.
இவனுக்குப் புன்னகை. சொன்னது போலவே திருமணம் முடித்த பின் தான் பேசி இருக்கிறார் அன்னை என.
உணவு முடித்து விட்டவர்களுக்கு திருநீறு பூசி சங்கரியும், அமரேசன் தம்பதியினரும் ஆசிர்வாதம் செய்து அறைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் வாசன் சென்று விட, உள்ளே எழுந்த படபடப்போடு அவன் பின் சென்றாள் வேதவி.
வேதவி குடும்பத்தினரும் உணவு முடித்துக் கிளம்பினர். அதோடு வாசன் குடும்பத்தினரும் மணமக்களுக்கு தனிமை வேண்டி அன்றைய இரவு பரதன் வீட்டில் தங்க ஏற்பாடு.
வாசன்,அண்ணன் தந்தையிடம் போக வேண்டாமென தடுத்திருக்க அவர்கள் கேட்கவில்லை. இப்போது அவர்களும் சென்று விட, வீடு அமைதியானது.
கொஞ்சம் தயக்கம், நாணம்,அதீத படபடப்பு என அவனருகில் அமர்ந்தாள் பெண்.என்ன தான் இத்தனை நாள் பேசி, சண்டையிட்டு, சமாதானம் செய்திருந்தாலும் தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது.
அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்திருந்தவன் அவள் உணர்வுகளை உள்வாங்கிய படி,
“எதுக்கு இத்தனை படபடப்பு? ஃப்ரீயா இருங்க வேதாஜி” என்றான் தானும் உடலை தளர்த்தி.
“புது இடம். கொஞ்சம்.. அதான்..”என இழுத்தாள் பெண்.
“ஹ்ம்ம்ம்”
“உங்களுக்கு இப்படியெல்லாம் பீல் ஆகாதுல்ல. நேர்வஸா?” என கேட்க,
சிரித்தவன்,
“அதெல்லாம் ஆகும்.. ஆனா என்ன ஜென்ஸ் நாங்க காட்டிக்க மாட்டோம்” என்றவனை கண் சுருக்கிப் பெண் பார்க்க,