நீ எனக்கு தந்த காதல் – 4.
காதலின் முதல்படி மோதல் ஆரம்பம்.
தமிழ் நிலாவை தன் வீட்டிற்கு கூட்டிச் சென்று தன் பெற்றோரிடம் அறிமுகப் படுத்துகிறான்.
இனி,
Advertisement
ஆபீஸில் ஒரு டெண்டர் விசயமாக இரண்டு நாட்களாக ரொம்ப பிசியாக இருந்தான் தமிழ்.
Advertisement
லேன்லைன் போன் அடிக்க நிலா அதை அட்டென்ட் பண்ணுகிறாள்.
Advertisement
‘நிலா தமிழ் எங்க போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறான்’ என தமிழ் அம்மா கேட்க,
Advertisement
‘ஆன்டி அவரு ஒரு டெண்டர் விசயமா ரெடி பண்ணிகிட்டு இருக்காரு. அதான் போன் அட்டெண்ட் பண்ணிருக்க மாட்டாரு’ என்றாள் நிலா.
‘அது சரி காலைலயும் சாப்டல இப்பவாவது நான் குடுத்த லஞ்சை மறக்காம சாப்ட சொல்லு’ என தமிழ் அம்மா கூற,
‘ஓகே ஆன்டி கண்டிப்பா சொல்லிடறேன்’ என சொல்லி போனை வைத்து விட்டு தமிழின் லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு அவன் ரூமுக்கு சென்றாள் நிலா.
‘சார் ஆன்டி போன் பண்ணாங்க. காலைல சாப்டாம வந்திட்டங்களாம். லஞ்ச் ஆவது மறக்காம சாப்ட சொன்னாங்க. இந்தாங்க ‘ என நிலா கூற,
‘ம் அத அங்க வச்சிருங்க. அஞ்சு நிமிஷம் இத முடிச்சிட்டு சாப்டறேன்’ என்று தமிழ் சொல்ல நிலா அங்கிருந்து சென்றாள்.
சில மணி நேரம் கழித்து நிலாவை தன் அறைக்கு வரச் சொன்னான் தமிழ்.
‘வாங்க நிலா. இந்த க்வொட்டேஷன் ப்ரைஸ ஸ்கேன் பண்ணி கான்பிடன்ஷியலா வச்சிட்டு இத ஒரு கவர்ல போட்டு இந்த அட்ரஸ்க்கு கூரியர் பண்ணிருங்க. இன்னிக்கு தான் லாஸ்ட் டேட். மறக்காம பண்ணுருங்க’ என்று சொல்லி தமிழ் கொடுக்க அதை வாங்கி கொண்டு சென்றாள் நிலா.
இரவு ரொம்ப நேரம் அதற்கு தயார் செய்து விட்டு லேட்டாக வீட்டிற்கு சென்றான் தமிழ்.
‘ஏன்டா இவ்ளோ லேட்டு’ என கேட்டுக் கொண்டே தமிழ் அம்மா கவை திறக்க,
‘சாரி ராஜி லேட்டாயிருச்சு’ என்றான் தமிழ்.
‘சரி வா சாப்டு’ என தமிழ் அம்மா கூப்பிட,
‘இல்ல வேணா ராஜி ரொம்ப டயர்டா இருக்கு’ என்று தமிழ் சொல்ல,
‘டேய் கொஞ்சமாவது சாப்டலாம்ல’ என தமிழ் அம்மா கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றான்.
அடுத்த நாள் நேரமே கிளம்பி தன் அம்மாவிடம் திட்டு வாங்க கூடாது என்று பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு டெண்டர் விடும் இடத்திற்கு சென்றான் தமிழ்.
‘இது இடம் சம்பந்தமான டெண்டர். இந்த இடத்துக்கு வந்த க்வெட்டேஷன்ஸ் பத்து. அதுல பர்ஸ்ட் மூனு க்வெட்டேஷன உங்களுக்கு அனவுன்ஸ் பண்றோம் . மூணாவது இடத்துல இருக்கறது மிஸ்டர் தமிழ்’ என்று சொல்ல தமிழுக்கு ஒரு நிமிஷம் உயிரே இல்ல.
‘ இரண்டாவது மிஸ்டர் துரை. தமிழுக்கும் இவருக்கும் வெறும் பத்து ரூபா தான் வித்தியாசம்’ என்று சொல்ல,
அப்போது தான் தமிழுக்கு தனது க்வெட்டேஷன் லீக்கானது தெரிந்தது. இனி அவ்ளோ தான் டெண்டர் நமக்கு இல்ல என ஏமாற்றமாய் உட்கார்ந்திருந்தான்
அதே நேரம் அந்த துரையும் ‘எப்டிடா மிஸ் ஆச்சு. அப்போ பர்ஸ்ட் யாரு’ என குழம்பியவாறு பார்த்து கொண்டிருக்க,
‘முதலாவதாக இந்த இடத்தை பெறப் போகிறவர் மிஸ்டர் பாலசுப்ரமணியன் பாதர் ஆப் மிஸ்டர் தமிழ். வாங்க தமிழ் வந்து வாங்கிங்க’ என கூப்பிட தமிழுக்கு சிறிது நேரம் ஒன்றும் புரிய வில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு அதை வாங்கிக் கொண்டு நேராக ஆபீஸ்க்கு வந்தான்.
வந்ததும் நிலாவை தன் அறைக்கு நிலாவை வரச் சொன்னான்.
தமிழ் டெண்டர் பேப்பரை கையில் வைத்திருப்பதை பார்த்து விட்டு, ‘சார் டெண்டர் கிடைசிடுச்சிருச்சா’ என சந்தோஷமாய் நிலா கேட்க,
‘எப்டிடா கிடைச்சுதுன்னு யோசிக்கறியா. நான் உன் மேல எவ்ளவு நம்பிக்கை வச்சிருந்தேன். இந்த டெண்டர் எவ்ளோ முக்கியம்னு உனக்கு தெரியுமா. இதுக்காக ராபகலா சாப்டாம எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரிஞ்சும் டெண்டர் ப்ரைஸ நீ லீக் பண்ணிருக்க’ என்று தமிழ் ஆவேசமாக கத்த,
‘என்ன சார் சொல்றீங்க நான் யார்கிட்டயும் எதயும் சொல்லல’ என நிலா கூற,
‘உன்னையும் என்னையும் தவிர ப்ரைஸ் அமவுண்ட் வேற யாருக்கும் தெரியாது. நீ சொல்றத இன்னும் என்னை நம்ப சொல்றியா. நீ காசுக்காக கேர்ள் ப்ரெண்டா நடிக்க ஒத்துக்கிட்டவ தான. உனக்கு காசு வேனும்னா எங்கிட்ட கேட்ருக்க வேண்டியதான. தயவு செஞ்சு என் கண்ணு முன்னால நிக்காத’ என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் தமிழ் பேச அங்கிருந்து அழுது கொண்டே வெளியே செல்ல,
‘நிலா என்னாச்சு ஏன் அழற’ என நந்தினி கேட்க,
‘ஒன்னுமில்ல கொஞ்சம் தலவழி நான் வீட்டுக்கு கிளம்பறேன்’ என சொல்லி விட்டு தன் பேக்கை எடுத்துக் கொண்டு அழுதவாறே சென்றாள் நிலா.
நிலாவை திட்டியதை எண்ணி ‘கொஞ்சம் அதிகமா கோபப்பட்டேன்’ என தமிழும் வருத்தப்பட்டான். பிறகு அவனும் கிளம்பி வீட்டிற்கு சென்றான்.
‘ஏய் வாடா தமிழ் கங்கிராட்ஸ்’ என தமிழ் அப்பா அவனை வரவேற்க,
‘ரொம்ப தேங்க்ஸ் டாடி. நீங்க இல்லைனா இது எனக்கு கிடச்சிருக்காது. ஆமா எப்டி நீங்க இதுக்கு க்வோட் பண்ணிங்க’ என தமிழ் கேட்க,
‘நிலா நேத்து போன் பண்ணி அங்கிள் தமிழ் ரெண்டு நாளா சரியா சாப்டாம தாங்காம ஒரு டெண்டர்ல ரொம்ப பிசியா இருக்காரு. இப்ப தான் அதுக்கான க்வட்டேஷன் அமவுண்ட் ரெடி பண்ணி எங்கிட்ட குடுத்தாரு. ரொம்ப முக்கியமான டெண்டர்னு வேற சொன்னாரு. இந்த டெண்டர் கிடக்கலைனா ரொம்ப வருத்தப்படுவாரு. அதனால அந்த க்வட்டேஷன் பார்ம நான் டவுன்லோடு பண்ணி எடுத்துட்டு வரேன். நீங்க உங்க பேர்ல அமவுண்ட் ஃபில் பண்ணி குடுத்தீங்கன்னா நான் அத கொரியர் பண்ணிருவேன்னு சொன்னா. நானும் சரின்னு சொல்லி அத ஃபில் பண்ணி குடுச்தேன். அமவுண்ட் கூட நிலா சொன்னது தான்’ என தமிழ் அப்பா சொல்லி முடிக்க தமிழுக்கு தப்பு செய்து விட்டோம் என மனது குத்தியது.
தமிழ் தன் அறைக்கு வர அவனுக்கு போன்.வந்தது, ‘தமிழ் அந்த இடத்துக்கு போட்டி போட்ட துரை தான் அவன் ஆளுங்க கிட்ட காசு குடுத்து உன்னோட க்வட்டேஷன் பேப்பர்ல உள்ள அமவுண்ட அந்த கவர்மெனட் ஆபீஸ்ல இருக்கறவர் கிட்ட இருந்து வாங்கி பாத்துருக்காங்க’ என்று அவனது நண்பர் கூற அவ்வளவு தான் தமிழ் தான் நிலாவை தப்பாக பேசியதை நினைத்து உடைந்தே போனான்.
‘என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்ட. இப்ப அந்த பொண்ணுனால தான் உனக்கு டெண்டரே கிடைசசிருக்கு. அவ மூஞ்சில எப்டி முழிக்க போற’ என தமிழ் தன்னை தானே திட்டிக் கொண்டு நிலாவுக்கு போன் செய்ய அவள் எடுக்க வில்லை.
உடனே அவளுக்கு ‘ரொம்ப சாரிங்க நிலா. இப்ப தான் அப்பா சொன்னாரு. என்ன இருந்தாலும் நான் உங்கள தப்பா நினைச்சிருக்க கூடாது. கோபமா திட்டியும் இருக்க கூடாது. தப்பே பண்ணாத உங்க மனசு எப்டி வருத்தப்படும்னு எனக்கு புரியுது. இதுக்கு தண்டனையா நீங்க எத செய்ய சொன்னாலும் பண்றேன். ப்ளீஸ் இனிமே இப்டி நடந்துக்க மாட்டேன். இந்த ஒரு தடவ ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க’ என்று தமிழ் மெசேஜ் அனுப்ப,
அதை படித்து விட்டு, ‘சார் உங்க மேல நான் பெரிய மரியாத வச்சிருந்தேன். ஆனா நீங்களும் சராசரி ஆண் தானு நிரூபிச்சிட்டீங்க. உங்க அப்பா சொல்லலைன்னா நீங்க என்னை நம்பிருக்க மாட்டீங்க. ஏனா காசுக்காக எதுவேனா செய்றவளா தான நீங்க என்னை பாக்குறீங்க. நீங்க காசுக்காக நடிக்க சொன்னா ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்கும். அதே நாங்க காசுக்காக நடிச்சா நல்ல பொண்ணு இல்ல. அப்டிதான சார். உங்கள மன்னிக்கற அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல. ஆனா வேலைய விட்டு நிக்கவும் முடியாது. அதான் நீங்க சொன்னீங்களே அந்த காசுக்காக தான் நான் வேலைக்கு வரேன். எனக்கு வேற வழியில்ல’ என தன் மனதில் பட்டதை கொட்டி மெசேஜாக பதில் அனுப்பினாள் நிலா.
அதை தமிழ் படித்து விட்டு ‘சாரிங்க நான் சொன்ன வார்த்தைகள் உங்கள எவ்வளவு கஷ்டபட வச்சிருக்குன்னு புரியுது. கோபத்துல நான் பேசுன வார்த்தைகள நினச்சு எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. இனி கண்டிப்பா உங்ககிட்ட மட்டுமல்ல மத்தவங்க கிட்ட கூட யோசிச்சு நடந்துக்கறேன். ஒன்ஸ் எகேன் சாரி’ என திருப்பி மெசேஜ் அனுப்ப நிலா அதை படித்து விட்டு பதிலேதும் அனுப்பாமல் எப்படியோ தான் தவறு செய்ய வில்லை என்பது தெரிந்ததே என நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அடுத்த நாள் ஆபீஸ்க்கு வந்ததிலிருந்து நிலாவை எதிர்பார்த்து தமிழ் காத்திருக்க அவனை பார்ப்பதை முடிந்த வரை நிலா தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து தமிழ் வெளியே வந்து ,’ நந்தினி டெண்டர் ஜெயிச்சதுக்கு பார்ட்டி இருக்கு. அதுக்கு போயிட்டு ஈவ்னிங் தான் வருவேன்னு நிலா கிட்ட சொல்லிருங்க’ என்று சொல்லி விட்டு கிளம்ப நிலா அங்கு வருகிறாள்.
‘வாங்க மேடம் தமிழ் சார் டெண்டர் வின்னிங் பார்ட்டிக்கு போறாறாம். ஈவ்னிங் வந்துருவேன்னு உங்க கிட்ட சொல்ல சொன்னாரு’ என நந்தினி நிலாவை கிண்டல் செய்ய,
‘நந்தினி நீ வேற. இங்க நடக்கிறது எல்லாம் உனக்கு நல்லாவே தெரியும். அப்டி இருந்தும் கிண்டல் பண்றியே’ என நிலா கேட்க,
‘அது இல்ல நிலா சார் காலைல வந்ததிலிருந்து உன்னை தான் தேடி கிட்டு இருந்தாரு. பாவம்டி அவருக்கு மூஞ்சியே இல்ல. ஏதோ தெரியாமோ கோபத்துல பேசிட்டாரு. தப்பு தான் அவரு மன்னிக்க கூடாதாடி’ என்றாள் நந்தினி.
‘நீ கூட அவருக்கு தான் சப்போர்ட் பண்ற. அவரு பேசுன ஒவ்வொரு வார்த்தை தான் அவர பாக்கும் போதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. அதை மறக்க எனக்கு கொஞ்சம் டைமாகும். இதுல ஒரே ஆறுதலான விசயம் தான் பண்ணது தப்புன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கூட ஆணவம் இல்லாம உடனே மனசாற தப்ப உணர்ந்து கெஞ்சி அதுவும் தனக்கு கீழே வேலை செய்றவங்க கிட்ட மன்னிப்பு கேட்டாரு. அந்த விசயத்துல எனக்கு அவரு மேல குறைஞ்சு போன மரியாத திரும்ப ஏறிருக்கு’ என்றாள் நிலா.
தமிழும் நிலாவும் எப்படி சமாதானம் ஆகப் போகிறார்கள்?
இவர்களுக்கிடையேயான இந்த முதல் மோதல் காதலாக மாறுமா?
தொடரும்…
