அரசி(க்கி)யே என் அடிமையே – 17
💐💐💐ஹாய் சகோஸ் என்னோட கதை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையானு தெரியாம ரொம்ப குழப்பமா இருக்கு, லைக் கமெண்ட் எதுவும் வராதானால மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு சகோ😭😭😭 ஏன் இந்த கதையா எழுதணுன்னு தோணுது, ஒரு அஞ்சு லைக் இல்ல அஞ்சு கமெண்ட் வந்தா தான் அடுத்த அத்தியாயம் போஸ்ட் பண்ணுவேன், அஞ்சு பேர் கூட என் கதை புடிக்கலைன்னா நான் எதுக்கு எழுதணும் சகோ சொல்லுங்க, 💐💐💐💐💐💐💐💐💐
அத்தியாயம் – 17
Advertisement
நாட்கள் செல்ல செல்ல விக்ரமிற்கு மித்ராவின் மேல் காதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. எப்பொழுதும் அவளுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
Advertisement
Advertisement
நண்பர்கள் பட்டாளம் விடுமுறை நாட்களை தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். அவர்களுடன் கவி விக்ரம் இருவரும் சென்றனர். நண்பர்களுடன் வெளியே செல்வது அவர்களுடன் பொழுதை கழிப்பது விக்ரமிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Advertisement
ரக்ஷாப்பந்தன் பண்டிகையை தன் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்று தோழிகள் நினைத்தனர். அவர்களது வீட்டிலேயே விழா காண ஏற்பாடு நடந்தது நண்பர்கள் அனைவரும் தனது சகோதரன் சகோதரியுடன் விழாவிற்கு வந்திருந்தனர். அதில் ரிங்கு விக்ரமுக்கு ராக்கி கட்டி தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டாள். அதேபோல் கனி கௌதம் கௌஷிக் இருவருக்கும் ராக்கி கட்டி ஜான்சியின் வளர்ப்பு மகளாக மாறிவிட்டாள்.
“ரிங்கு தேங்க்யூ சோ மச் டா, பேச்சுக்காக அண்ணனா நினைக்காம உரிமையா என் கையில ராக்கி கட்டுனதுக்கு” என்றான் விக்ரம்.
“நீங்க தேங்க்ஸ் சொல்லுறதா இருந்தா மித்ராக்கு தான் சொல்லணும் அவ சொல்லித்தான் நான் காட்டினேன்” என்றாள் ரிங்கு.
ரிங்கு கூறியதைக் கேட்டு விக்ரமுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயம் கௌதம் மித்ராவுடன் பேசுவதை பார்க்க பார்க்க மிகவும் கோவமாக வந்தது. எங்கே மித்ராவை இழந்து விடுவோமோ என்று எண்ணி விரைவில் மித்ராவிடம் தன் காதலை கூற வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
இரண்டு மாதங்கள் கழித்து ஹோலி பண்டிகையை மிகவும் சந்தோஷமாக அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். விக்ரம் இன்று எப்படியாவது மித்ராவிடம் தன் காதலை கூறி விட வேண்டும் என்று நினைத்தான். நண்பர்கள் அனைவரும் ஒருவர் மீது மற்றொருவர் வண்ண வண்ணக் கலர்களை பூசியும், வாட்டர் பலூன் வாட்டர் பைப் போன்றவற்றை வைத்து மாறி மாறி தண்ணிர் அடித்து விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
மற்றொருபுறம் வினித் சஞ்சய் இருவரும் மோரில் பாங் என்னும் போதை தரும் வஸ்துவை கலக்கிக் கொண்டிருந்தனர். சரண் ரகு கெளதம் அர்ஜுன் நிகில் கார்த்திக் என்று நண்பர்கள் அனைவரும் அதை குடித்து விட்டு தள்ளாடிக் கொண்டிருந்தனர்.மித்ரா முகத்தில் இருந்த வண்ணத்தை கழுவுவதற்காக வீட்டிற்குள் சென்றாள். விக்ரம் அவளை பின்தொடர்ந்து சென்று அவளுடன் பேச வேண்டும் என்று கூறி மாடிக்கு வருமாறு அழைத்துச் சென்றான்.
“என்ன விக்ரம் ஏதோ பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி பேசுங்க” மித்ரா.
“எனக்கு இந்த கவிதை எல்லாம் பேசவோ எழுதவோ தெரியாது மித்ரா, உன்ன பார்த்ததிலிருந்து நான் நானாவே இல்ல, எனக்கு எப்பவும் உன்னை பார்த்துட்டே இருக்கணும் உன் கூட பேசிட்டே இருக்கணும் உன் கூடவே இருக்கணும்னு தோணுது நான் உன்ன லவ் பண்றேன் மித்ரா ஐ லவ் யூ” என்றான் நேராக அவள் முகத்தை பார்த்து.
விக்ரமின் நேரடியான பேச்சிற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் மித்ரா பின் “சாரி விக்ரம் நீ சொல்ற மாதிரி பீல் எதுவும் எனக்கு உன் மேல வரல சாரி” என்றாள்.
விக்ரமிற்கு சற்று கவலையாக இருப்பினும் மித்ராவிடம் “உனக்கு வேற யார் மேலயாவது லவ் ஃபீல் வந்திருக்கா” என்றான்.இல்லை என்று தலை அசைத்தால்.
“ஓகே மித்ரா உனக்கு என் மேல பீலிங் வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்றேன், உனக்கு பீலிங் வந்த அப்புறம் நீ என்னை லவ் பண்ணு அது வரைக்கும் நான் உன்ன லவ் பண்றேன் ஓகேவா” என்று கூறிவிட்டு சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பொக்கே ஒன்றை மித்ரா கையில் கொடுத்து விட்டு “ஐ லவ் யு அம்முலு” என்று கூறிவிட்டு சென்றான்.
விக்ரம் சென்றதும் அங்கு வந்த சரண் சிலை போல் நின்று இருந்தா மித்ராவை பார்த்து “லூசு என்னாச்சு டி உனக்கு ஏன் இப்படி இருக்கா, இது என்ன பொக்கே விக்ரம் கொடுத்தானா” என்றான்.
“ம்ம் ஆமா,விக்ரம் எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டு போறான்” மித்ரா.
“அவன் உன்ன பார்க்கும்போதே கண்ணில் காதல் பொங்கி வழியும் எப்போ உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறானோனு நினைச்சுகிட்டு இருந்தேன் பண்ணிட்டான், சரி நீ என்ன பதில் சொன்ன” சரண்.
“நான் எனக்கு அவன் மேல எந்த ஃபீலும் இல்லைன்னு சொல்லிட்டேன்டா” மித்ரா.
“லூசாடி நீ, அவன மாதிரி ஒரு பையன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காத அக்மார்க் நல்ல பையன் டி, அவனுக்கு போய் நோ சொல்லிருக்க” என்றான் சரண்.
“விக்ரம் நல்ல பையன் தான் நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே, இருந்தாலும் எனக்கு அவன் மேல் பீல் வரலையே” என்றால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“நீ நோ சொன்னதுக்கு அவன் ரொம்ப பீல் பண்ணானா” சரண்.
“பில் எல்லாம் எதுவும் பண்ணல டா, உனக்கு என் மேல ஃபீலிங்ஸ் வந்தப் அப்புறம் நீ என்ன லவ் பண்ணு அது வரைக்கும் நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான் டா” மித்ரா.
“அப்படி போடு, இந்த ட்விஸ்ட் விக்ரம் கிட்ட இருந்து நான் சத்தியமா எதிர்பார்க்கல டி, இப்ப ஒன்னும் அவசரம் இல்ல நிதானமா யோசி உனக்கு எப்போ அவன் மேல பீலிங் வருதோ அப்போ அவன்கிட்ட சொல்லு சரியா, இப்போ வா கீழ போலாம்” சரண்.
மாதங்கள் கடந்தன அந்த வருடத்தின் இறுதி செமஸ்டர் எக்ஸாம் நடந்துக் கொண்டிருந்தது. அனைவரும் படிப்பு எக்ஸாம் என்று பிஸியாக இருக்க விக்ரம் மட்டும் மித்ராவின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.
மித்ராவிற்கு விக்ரமுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்திருந்தது அது எதனால் என்பதை தான் அவள் உணரவில்லை.ஒரு நாள் காலை குட்மார்னிங் மெசேஜ் வரவில்லை என்றாலும் அவளுக்கு கோவம் வந்துவிடும் ஏன் மெசேஜ் செய்யவில்லை என்று விக்ரமிடம் சண்டைப் போடுவாள்.
எக்ஸாம் அனைத்தும் முடிந்து பெண்கள் விடுமுறைக்கு மும்பை செல்லலாம் என்று நினைத்தனர். மித்ராவிற்கு மட்டும் மெக்கானிக்கல் பிராக்டிகல் எக்ஸாம் மட்டும் நாள் மாற்றப்பட்டு ஒரு வாரம் கழித்து இருந்தது.
இரண்டு நாள் கழித்து ரிங்குவின் அம்மாவிற்கு ஹார்ட்அட்டாக் வந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக போன் வர ரிங்கு உடனே கிளம்பினால் அவளுக்கு துணையாக இருக்குமாறு ஸ்ரேயாவையும் மித்ரா அனுப்பி வைத்தாள்.
எக்ஸாம் முடித்துவிட்டு மித்ராவும் ரகுவும் அவர்களாது வண்டிகளில் வந்துக் கொண்டிருக்க. “ரகு ரோடு காலியா இருக்குடா வா ஒரு ரேஸ் போலாம்” என்றாள் மித்ரா.
“நான் வரலப்பா எனக்கு பயமா இருக்கு போலீஸ் வந்துட்டா அவ்வளவு தான்” ரகு.
“அதுலாம் எதும் ஆகாதுடா வாடா பயந்தாங்கோலி” என்று கூறி வலுக்கட்டாயமாக ரேஸுக்கு அழைத்தாள்.
இருவரின் வண்டியும் அதிவேகமாக சாலையில் பறந்து சென்றது. ஒருவரை முந்திக் கொண்டு மற்றொருவர் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று மித்ராவின் வண்டிக்கு குறுக்கே நாய் ஓன்று வந்துவிட நிலைத்தாடுமாறி கீழே விழுந்த அவளது வண்டி, சாலையில் சறுக்கிக் கொண்டு சென்றது சற்று தூரத்தில் மித்ரா ரத்தம் வலிய விழுந்து கிடந்தாள்.
மித்ராவிற்கு நடந்த விபத்தை பார்த்ததும் ரகு அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான். பின் அவளது அருகில் ஓடி சென்று அவளை தூக்கினான், “மித்ரா மித்ரா கண்ணத் திறந்து பாருடி” என்று கன்னத்தில் தட்டினான்.
மித்ரா மெதுவாக கண்ணை திறந்து “ரகு பயப்படாதடா எனக்கு ஒன்னும் இல்ல, சின்ன அடித்தான்,என் பிரண்ட்ஸ்க்கும் பேமிலிக்கும் கால் பண்ணி சொல்லிடாத டா ” என்று கூறிவிட்டு மயங்கிவிட்டாள்.ரகு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டு அது வருவதற்குள் விக்ரமிற்கு கால் செய்து நடந்ததை கூறி உடனே வருமாறு கூறினான்.
ஆம்புலன்ஸ் வருவதற்கும் விக்ரம் அங்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.இரத்தம் வழிய மயங்கிக் கிடந்த மித்ராவை பார்த்ததும் விக்ரமின் கண்கள் கலங்கிவிட்டது. மித்ரா தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிக்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை,தலையில் லேசான காயம், வலது கை மட்டும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் மித்ராவாள் இரண்டு மாதங்கள் நடக்கமுடியாது எனவும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று கூறினார்.
சில மணி நேரம் கழித்து கண்விழித்த மித்ரா தான் உடலில் போடப் பட்டிருந்த கட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.ரகு அவள் அருகில் வந்து “மித்ரா எப்படி இருக்குற, வலி அதிகமா இருக்கா, உனக்கு இப்படி ஆனது பாத்து பயந்துட்டேன் டி” என்று கூறி அழுதான். விக்ரமோ எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான் ஆனால் அவன் முகம் மட்டும் கோவத்தில் இறுகிப் போய் இருந்தது.
“மச்சான் நான் நல்லா தான்டா இருக்கேன் ப்ளீஸ் அழாதடா” என்று மித்ரா கூறிவிட்டு விக்ரமின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். “இவன் முகம் ஏன் இப்படி இருக்கு, எதுவும் பேசாம வேற அமைதியா இருக்கான் ஒன்னும் புரியலையே” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
ரகு மித்ராவின் வீட்டிற்கும் தோழிகளுக்கும் போன் செய்து நடந்த விஷயத்தை கூறுவதாக கூறினான். அதற்கு மித்ரா “வீட்டுக்கெல்லாம் போன் பண்ணாதடா ப்ளீஸ் அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க, ரிங்க்டோவோட அம்மாக்கு வேற உடம்பு சரி இல்லை இந்த டைம்ல எனக்கும் அடிபட்டுருச்சுன்னு சொன்னா ரிங்கு ரொம்ப அழ ஆரம்பிச்சிருவா ப்ளீஸ் சொல்லாத” என்றாள்.
“டேய் ரகு,மேடமுக்கு கை கால் பிராக்சர் ஆயிருக்கு இன்னும் ரெண்டு மாசம் பெட்ரஸ்ட்ல தான் இருக்கணும் அப்படி இருக்கும் போது அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லாம எப்படி இருக்க முடியும்” என்றான் விக்ரம் கோவமாக.
“இவன் ஏன் நம்ம கிட்ட பேச மாட்டேங்கிறான் ரொம்ப கோவமா இருக்கனோ, இவன் கோபப்பட அளவுக்கு நம்ம எதுவும் பண்ணலையே” என்று யோசித்தால் பின் விக்ரமிடம் “இல்ல விக்ரம் சொல்ல வேண்டாம், நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிடுறேன் அங்க செல்வி ஆண்ட்டி இருக்காங்க அவங்க என்ன பாத்துப்பாங்க” என்றாள். விக்ரம் எதுவும் கூறாமல் அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.
ரகுவிற்கு சிறுவயதிலிருந்தே மருத்துவமனை அட்மாஸ்பியர் ஒத்துக்கொள்ளாது என்பதால் விக்ரம் ரகுவை வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டான். விக்ரம் வீட்டிற்கு கூட செல்லாமல் இரண்டு நாட்களாக மித்ரா அருகில் இருந்தே அவளை பார்த்துக் கொண்டான். அவளின் முகத்தை வைத்தே அவளது தேவைகளை பூர்த்தி செய்தான்.
மித்ராவிற்கு துணையாக இருந்த நர்ஸ் ஒருவர் விக்ரமை தனியாக அழைத்து “சார் அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா பிரண்ட்ஸ் யாரும் இல்லையா” என்றாள்.
“ஏன் சிஸ்டர் என்ன ஆச்சு ஏன் அப்படி கேக்குறீங்க”
“இல்ல சார் பேஷன் வந்துட்டு பொண்ணா இருக்கனால கூட ஒரு பொண்ணு துணைக்கு இருந்தா அவங்களுக்கு கொஞ்சம் கம்ஃபர்ட்டபிளா இருக்கும் அதுக்காக தான் கேட்டேன், என்னதான் நாங்க பாத்துக்கிட்டாலும் கூட பொண்ணு யாராவது ஒருத்தவங்க இருந்தா உங்களுக்கு கொஞ்சம் தைரியமாக இருக்கும் இல்ல” என்றார் நர்ஸ்.
விக்ரமும் அதே யோசனைதான். நர்சிடம் பேசிவிட்டு உள்ளே வந்த விக்ரமை பார்த்து மித்ரா “ஏன் விக்ரம் என்கிட்ட பேச மாட்டேங்குற நீ பேசாம இருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு விக்ரம் ப்ளீஸ் பேசு” என்றாள்.
“என்ன டி பேச சொல்ற, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா அறிவு கெட்ட முண்டம், உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா இருனு, கொஞ்சமாவது என் பேச்சை கேட்டு இருக்கியா டி, அப்படி என்ன ரேஸ் வேண்டியது இருக்கு உனக்கு”
“உனக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்றது என்ன பத்தி கொஞ்சமாவது நெனச்சு பாத்தியாடி, ஆமால உனக்கு தான் என் மேல எந்த ஃபீலிங் இல்லல நீ ஏன் என்னை பத்தி நினைக்க போற , என்ன விடு உன் குடும்பத்தை பத்தி உன் பிரண்ட்ஸ் பத்தி நினைச்சு பாத்தியா உனக்கு ஒன்னுன்னா அவங்க எவ்வளவு அழுவாங்க வருத்தப்படுவாங்க, யாரை பத்தியுமே உனக்கு கவலை இல்லல உனக்கு உன் சந்தோஷம் மட்டும்தான் முக்கியமா போச்சி”
“ஒரு இடத்துல உன்னால கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதே டி இப்ப ரெண்டு மாசம் நடக்க முடியாம எப்படி இருப்ப” என்று கூறி தன் கோபம் வருத்தம் அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு அழுக ஆரம்பித்தான். விக்ரம் அழுததை பார்த்து மித்ராவின் கண்களும் கலங்கியது.
“சாரி விக்ரம் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் ப்ளீஸ் அழாத” என்றாள்.
“உனக்கு அடிபட்டு இரத்தம் வழிய நீ இருந்தத பார்த்து நான் செத்துடேன் டி, உன் காயத்தையெல்லாம் பார்த்து எனக்கு எவளோ வலிச்சது தெரியுமா, நீ தான் டி என் உயிரே நீ இல்லாம நான் எப்படி டி இருப்பேன்,ப்ளீஸ் அமுலு இனிமேல் இந்த மாதிரியெல்லாம் பண்ணாத டி” என்று கூறி அழுதான். மித்ராவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
விக்ரம் வினீத்துக்கு போன் செய்து மித்ரா வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அவளை மருத்துவமனையில் அனுமதித் திருப்பதாகவும் கூறினான். சில மணி நேரங்களிலேயே மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.மித்ராவின் நிலையை பார்த்து அனைவரும் கண்ணீர் விட்டனர். மித்ராவை தங்களுடன் அழைத்துக் கொண்டு மணிகர்ணிகாபுரிக்கு சென்றுவிட்டனர்.
மித்ராவை அழைத்துச் சென்று ஒரு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தினமும் காலை மாலை என்று விக்ரம் போன் செய்து மித்ராவின் உடல் நிலையை பற்றி அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். தோழிகள் இருவரும் கூட கல்லூரி விடுமுறை நாள் என்பதால் அவளுடனே இருந்தனர். கையில் இருந்த காயம் சற்று ஆறி இருக்க. கால் காயம் மற்றும் ஆறாமலே இருந்தது.
விடுமுறை முடிந்து அனைவரும் கல்லூரிக்கு வந்தனர் மித்ரா கட்டாயப்படுத்தி பெண்கள் இருவரையும் கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மித்ராவை இல்லாததால் நண்பர்கள் பட்டாளம் சற்று வருத்தத்துடனே இருந்தனர். விக்ரம் சொல்லவே வேண்டாம் எப்போதும் சோக கீதமே வாசித்துக் கொண்டிருந்தான்.
மித்ராவிற்கு இந்த ஒரு மாதம் விக்ரமை பார்க்காமல் மிகவும் கஷ்டமாக இருந்தது அது எதனால் என்று யோசிக்கும் போதுதான் மித்ரா விக்ரமை காதலிப்பதை உணர்ந்தாள், உடல்நிலை சரியானதும் விக்ரமை பார்த்து தான் காதலை கூற வேண்டும் என்று நினைத்தால்.
மேலும் ஒரு மாதம் சென்றிருக்க மித்ரா ஓரளவு நடக்க ஆரம்பித்திருந்தால். இன்னும் இரண்டு நாட்களில் மித்ராவிற்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மணிகர்ணிகாபுரிக்கு செல்வதாக முடிவெடுத்தனர். அனைவருக்கும் வேண்டிய விமான டிக்கெட் ஸ்ரேயா எடுப்பதாக கூறியிருந்தால் அனைவரும் விமான நிலையம் வந்தடைந்தனர்.
“ஸ்ரேயா எத்தனை மணிக்கு பிளைட் டிக்கெட் தா போய் போடிங் பர்ஸ் வாங்கலாம்” என்றான் அர்ஜுன்.
“அர்ஜூன் நமக்கு டிக்கெட் போர்டிங் பாஸ் எல்லாம் தேவை இல்லை” என்றால் ரிங்கு.
“நீ என்ன லூசா ரிங்கு டிக்கெட் இல்லாம எப்படி போக முடியும்” என்றான் அர்ஜுன் டென்ஷனாக.
“மச்சான் நம்ம போ போறது நம்ம ஓன் பிளைட்ல டா அதனால டிக்கெட் போடிங் பாஸ் எல்லாம் நமக்கு தேவையில்லை” ஸ்ரே.
“என்னது சொந்த பிலைட்டா உன்னோடதா” அர்ஜுன்.
“என்னோடது இல்ல மித்ரா உடையது, மித்ரா ஓட கிராணிக்கு சொந்தமானது” ஸ்ரே.
“கிராணியா, அவங்க யாரு சொந்தமா பிளைட் வச்சிருக்க அளவுக்கு அவங்க பெரிய பணக்காரங்களா” அர்ஜுன்.
“மச்சான் போதும்டா கேள்வி கேட்டு கொல்லாத, எதுவா இருந்தாலும் அங்க போய் நீ நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றால் ஸ்ரேயா நண்பர்கள் அனைவரும் மித்ராவின் பொருளாதார நிலையை எண்ணி வியந்தனர். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியவனோ மித்ராவை பார்க்க போகிற சந்தோஷத்தில் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தான்.அங்கே சென்றதும் தன்னுடைய கனவுகள் அனைத்தும் மண்ணாகப் போவதை பாவம் விக்ரம் அறியவில்லை.
